• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 30

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
அஜித்தா மற்றும் அஜயின் திருமண வேலைகள் ஆரம்பமாக துவங்கின. ரித்விகாவிற்கு அவர்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்தி மட்டுமே சென்றது ஒருவர் கூட தன்னை அழைக்க வில்லையே என்று எண்ணி மிகவும் கலங்கிப் போனாள். அவருடைய எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்ட சரண்யா "நீதான எல்லாரையும் விட்டு விலகி இருக்கணும் அப்படின்னு நினைக்கிற இப்போ யாரும் கூப்பிடல அப்படின்னு பீல் பண்ற மாதிரி இருக்கு" என்று கேட்டாள்.


அதுக்கு ரித்விகா "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அண்ணி நான் வேறு ஏதோ ஒரு நினைப்பில் இருந்தேன் நான் எதையும் நினைத்து வருத்தப் படாதே நீங்க உங்களோட உடம்பு பத்திரமா பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.


அவள் அவசரமாக செல்வதை பார்த்த சரண்யா "கூடிய விரைவில் நாங்கள் நினைத்தது வெற்றியடைய போகிறது" என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.


இங்கே ஆதி முழுவதுமாக குணமாகும்வரை ரிஷி மற்றும் கதிர் கதையை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிதம்பரம் தன்னிடம் ஏதாவது கேட்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க அங்கே வீட்டில் ஒருவர் கூட அவரிடம் கலந்து ஆலோசிக்கவில்லை ஆதி கூறியபடியே அனைத்து வேலைகளும் நடைபெற ஆரம்பித்தன. இதனால் இன்னும் கோபம் அடைந்தார் ஆனால் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து கொண்டார்.


அஜித்தாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று எண்ணி அவளைத் தொடர்பு கொள்ள நினைத்த போது தான் அவள் ஆதி வீட்டில் தங்கியுள்ளார் என்ற விஷயம் ஞாபகம் வர ஒன்றும் செய்ய இயலாமல் கோபமாக அமர்ந்து இருந்தார். தாத்தாவிற்கு இந்த ஒழுக்கம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஏனென்றால் இதுவரை எந்த ஒரு காரியம் செய்தாலும் அவரிடம் கேட்காமல் அந்த குடும்பத்தில் யாரும் செய்ததில்லை. ஆனால் இன்று தான் செய்த ஒரு தவறால் மொத்த குடும்பமும் தன்னை எதிர்த்து நிற்பதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை அதை வெளிப்படுத்தவும் செய்யாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.


ஆதி மற்றும் அவனது குடும்பம் அனைவரும் அனிதா வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்டனர். அவர்களும் தங்களுக்கு சம்மதம் என்று கூறி பூ வைத்து விட்டு வந்தனர். அன்று அஜய் அனிதாவை முதல்முறையாக பார்த்தான். ஏனோ தன்னுடைய மனைவியாகப் போகிறவள் என்ற எண்ணம் வரவே அவளுடன் சில விஷயங்கள் பேச ஆசைப்பட்டான். அதை புரிந்து கொண்ட ஜோதி அனிதா வீட்டினரிடம் "பொண்ணும் பையனும் அவங்க விருப்பப்பட்ட விஷயங்களை பேசிக் கொள்ளட்டும் நாம் மற்றதை பேசுவோம்" என்று கூறினார்.


அனிதா அஜய்யை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றாள். அஜய் பேசட்டும் என்று அமைதியாக அவளுடைய முகத்தை பார்த்தபடி அவன் எதிரில் நின்று கொண்டிருந்தாள். அனிதா தன்னுடைய முகத்தை பார்ப்பதை பார்த்து தன் மனதில் இருக்கும் எண்ணங்களை கூற ஆரம்பித்தான்.


அஜய் "எனக்கு கல்யாணத்துக்கு அப்புறமா காதலிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அதனால் திருமணம் முடிந்து நாம் சில காலம் காதலித்து விட்டு நம்முடைய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் அதுமட்டுமல்லாமல் என்னால் என்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க இயலாது அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நான் அனைவரும் என்று கூறுவது எங்களுடைய குடும்பம் மட்டுமல்ல எங்கள் நண்பர்கள் பட்டாளம் இதில் வருவர். எங்கள் வீட்டிற்கு நீ வாழ வரும்போது கண்டிப்பாக என்னுடைய அப்பா ஏதாவது பேசி உன்னை கஷ்டப் பட செய்வார் அதையெல்லாம் எதிர்த்து நீ அந்த வீட்டில் வாழ வேண்டியிருக்கும். உனக்கு இதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் இப்போதே கூறிவிடு" என்று கூறி முடித்தான்.


அவர் கூறிய அனைத்தையும் கேட்ட அனிதா "எனக்கும் உங்களை காதலிக்கணும் னு ரொம்ப ஆசை எனக்கு தெரிஞ்சு நான் உங்கள ரொம்ப நாளா காதலித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காதலிப்பேன். அதனால் எனக்கு அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை அதேபோல் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அஜித்தாவும் நிறைய விஷயங்கள் கூறியிருக்கிறாள் அதனால் நான் வரமாட்டேன் கடைசியாக உங்கள் அப்பாவை என்னுடைய வழியில் நான் டீல் செய்து கொள்கிறேன்" என்று அவனுக்கு பதில் கூறினாள்.


அவன் கூறிய பதிலில் மிகவும் மகிழ்ந்து போன அஜய் அந்த மகிழ்ச்சியை அவருடைய முகத்திலேயே காட்டினான். பின்பு அவளிடம் "சரி கிளம்பலாம் எல்லாம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா சேர்த்து வச்சி காதலிக்கலாம்" என்று கூறி வெளியே வந்தான். அவருடன் அனிதாவும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்.


இவர்கள் வெளியே வரும்போது அனைவரும் மற்ற விஷயங்களை பேசி முடித்து இருந்தார்கள். அதனால் அனைவரும் விடைபெற்று கிளம்பி தங்கள் இல்லம் வந்து சேர்ந்தனர். அஜிதா மற்றும் ரூபன் விஷயத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை அனைத்தும் சுமுகமாக முடிந்தது. இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க ஆதியும் நன்றாக குணமடைந்து இருந்தான்.


அன்று ஆதி ராகவன் அஜய் ரூபன் மற்றும் லக்ஷ்மணன் அனைவரும் ரிஷி மற்றும் கதிர் அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு சென்றனர். அவர்கள் இருவரும் ஆதியை பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் சிரிப்பு மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் ஆதிக்கு மட்டும் சிரிப்புதான் வந்தது.


அவர்களின் சிரிப்பை பார்த்து கடுப்பான லக்ஷ்மணன் "எதுக்கு இப்ப ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டு இருக்கிங்க இங்கே என்ன காமெடி ஷோ நடக்குது" என்று கேட்டான்.


அதற்கு கதிர் "எங்களை நீங்க கொன்று போட்டா கூட நாங்க கவலைப்பட மாட்டோம் சந்தோஷமாத்தான் இருப்போம். ஏன்னா இந்த ஆதியும் அவனோட பொண்டாட்டியும் பிரிஞ்சு போயிட்டாங்க அதுமட்டுமில்லாம அவ எங்கேயோ இவனை விட்டுப் போயிட்டா அந்த சந்தோஷத்திலேயே நாங்க நிம்மதியா போய் சேருவோம்" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்டவுடன் இவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர் அதை புரியாமல் ரிஷி மற்றும் கதிர் பார்த்துக்கொண்டிருந்தனர். லட்சுமணன் அவர்களை பார்த்து "ஏன்டா எதுக்கு சிரிக்கிறோம் என்று தெரியலையா" என்று கேட்டான்.


அவர்கள் இருவரும் ஆமா என்பது போல் அமர்ந்து இருந்தனர் அதை புரிந்து கொண்ட லக்ஷ்மணன் "உங்களை மாதிரி ஒரு அரைவேக்காடு பசங்களை நான் பார்த்தது இல்லை. அது எப்படிடா அவ்வளவு சீக்கிரம் நாங்கள்லாம் என்னோட பேபியை விட்டுவிடுவோம் என்று நினைத்தீர்கள். ஆனால் அப்படி நாங்கள் என்ன தான் செய்தோம் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே நீ உன்னுடைய தண்டனையை அனுபவி" என்று கூறினான்.


அவ்வளவு நேரம் சிரிப்புடன் இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஆதி தன்னுடைய ஆட்களை அழைத்து "இவர்கள் இருவரையும் எவ்வளவு சித்திரவதை செய்ய முடியுமோ அவ்வளவு சித்திரவதை செய் பெண்களை இனி இவர்கள் தவறாக நினைக்க கூட கூடாது. அதுமட்டுமல்லாமல் பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த இவர்களுக்கு சாப்பாடு இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பதை புரிய வை தினமும் ஒருவேளை மட்டும் சாப்பாடு கொடுத்து இவர்களை அடைத்து வை. இன்னும் மூன்று வாரங்களில் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது அதன்பிறகு நாங்கள் வந்து இவர்கள் நிலைமையை பார்க்கிறோம் அதுவரை அவர்கள் உயிருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொள்" என்று கூறினான்.


அவன் கூறியதைக் கேட்ட ரிஷி மற்றும் கதிருக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அதை வெளியே காட்டி கொள்ளாமல் "எங்களை விட்டுவிடு ஆதி இல்லை என்றால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்" என்று கூறினார்கள். ஆனால் இதை மற்றவர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் வெளியே வந்தனர்.


அங்கே அவர்களுக்கு அவர்கள் செய்த தவறுக்காக தண்டனை ஆதிமூலம் ஆரம்பமானது இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்து கல்யாண வேலைகளில் மூழ்க ஆரம்பித்தனர்.


அனைவரும் திருமண வேலைகளில் மூழ்கி இருந்தாலும் ரித்விகா நினைவு வரும்போதெல்லாம் அனைவரும் சோகமாக தான் இருந்தனர் ஆனால் அனைத்தும் சிறிது காலம் தான் என்று எண்ணி அமைதி காத்தனர்.


இங்கோ ரித்விகா வீட்டில் ராகவன் மற்றும் சரண்யா திருமண வேலைகளை பற்றி பேசும்போது நானும் அதில் கலந்து கொள்ளலாமா என்று கேட்க ஆர்வமாக இருப்பாள். ஆனால் அனைத்தும் ஞாபகம் வர அதை தனக்குள்ளேயே புதைத்து கொள்வாள். இவ்வளவு நாளில் அவள் வெளியே செல்லக்கூட முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் வெளியே செல்லும்பொழுது ஆதி அல்லது யாரேனும் பார்க்க நேர்ந்தால் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விடுவாள் என்பதை அவள் அறிந்திருந்தாள்.


இப்படியே 15 நாட்கள் சென்றிருக்க அதற்குள் ரித்விகா தன்னால் ஆதி இல்லாமல் இருக்க முடியாது என்பதை நன்றாக புரிந்து கொண்டாள் அதற்காக அவனுடைய தாத்தாவிடம் சென்று பேச முடிவு செய்தாள்.


அன்று அனைவரும் திருமணம் மற்றும் நிச்சயத்திற்கு உடைகள் எடுக்க கடைக்கு சென்றிருந்தனர். அனைவரும் தங்களுக்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க இங்கே வீட்டில் ராகவன் சரண்யா மற்றும் ரித்விகா இருவரையும் "கொஞ்சம் வெளியே செல்லவேண்டும் கிளம்பி ரெடியாக இருங்கள்" என்று கூறினான்.


இருவரும் தயாராகி இருக்க ஏற்கனவே அனைவரும் துணி எடுத்துக் கொண்டிருந்த கடைக்கு அழைத்து சென்றான் ராகவன். உள்ளே நுழைந்தவுடன் எதேர்ச்சையாக அனைவரையும் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு சரண்யா மற்றும் ரித்விகாவிடம் "அங்கே பாருங்கள் அனைவரும் மொத்தமாக இங்கேதான் கூடியிருக்கிறார்கள் திருமணத்திற்காக உடை எடுக்கிறார்கள் போல" என்று கூறினான்.


ராகவன் கூறியதைக் கேட்ட ரித்விகா அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த கூட்டத்தில் ஆதி மற்றும் இலட்சுமணனை தேட ஆரம்பித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் இவளுடைய கண்களுக்கு சிக்கவில்லை இதனால் ஏமாற்றமடைந்த அவள் ராகவனிடம் "அண்ணா நீங்க போய் உங்களுக்கு தேவையானதை வாங்குங்கள் நான் அங்கே சென்று எனக்கு ஏதாவது வேண்டுமென்றால் வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.


அவள் அங்கே இருந்து அகன்றவுடன் ராகவன் அருகில் ஆதி மற்றும் லட்சுமணன் வந்து சேர்ந்திருந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்த சரண்யா மகிழ்ச்சியாக கட்டிக்கொண்டாள். பின்பு இருவரிடமும் "என்ன உங்களோட அருமை பேபி அந்தப் பக்கம் போன உடனே இந்த பக்கம் வந்து இருக்கீங்க" என்று கேட்டாள்.


ஆதி "இப்பதான் ரூபன் அஜய் அஜிதா மூணு பேரையும் அவ கிட்ட அனுப்பி வச்சிட்டு வரேன் இனி அவங்க மூணு பேரும் மற்றதை பார்த்துக்குவாங்க" என்று கூறினான்.


அப்போது இவர்கள் அருகில் அனிதா வந்தாள். அவளைப் பார்த்த லட்சுமணன் ராகவன் மற்றும் சரண்யாவிற்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் மூவரும் சகஜமாக உரையாட ஆரம்பித்திருந்தனர்.


ரித்விகா இவர்கள் அனைவரிடமிருந்தும் தள்ளி சென்று ஒரு இடத்தில் துணிகளை பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னே வந்து நின்ற அஜித்தா அஜய் மற்றும் ரூபன் அவளை அழைத்தனர். துணியை பார்ப்பது போல் வேறு எங்கோ சிந்தனையை விட்டிருந்ததால் இவர்கள் அழைத்தது அவள் காதுகளுக்கு எட்டவில்லை அதை புரிந்து கொண்ட அஜய் அவள் தோளில் கை வைத்தான். யாரோ தன்னுடைய தோளில் கையை வைப்பதை உணர்ந்த ரித்விகா திரும்பி பார்த்தாள்.


அங்கே அஜிதா அஜய் மற்றும் ரூபனை எதிர்பார்க்காத ரித்விகா ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள். அவளுடைய அதிர்ந்த முகத்தை பார்த்த மூவரும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே அமைதியான முகத்துடன் நின்று கொண்டிருந்தனர்.


அஜித்தா அவளைப் பார்த்து "நாங்கள் மூவரும் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா இல்லை மறந்துவிட்டீர்களா" என்று கேட்டாள்.


அஜித்தா அவ்வாறு கேட்கவே அவர்கள் மூவரையும் பார்க்கமுடியாமல் தலைகுனிந்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் ரித்விகா. அதை பார்த்து மூவருக்கும் கஷ்டமாக இருந்தாலும் இப்படியே விட்டால் இவள் நம்மிடம் வந்து சேர மாட்டாள் என்பதை புரிந்து கொண்டவர்கள் பேச ஆரம்பித்தனர்.


அஜய் அங்கே நின்று கொண்டிருந்த அனிதாவை பக்கத்தில் அழைத்தான் அவளும் அவன் அழைத்தவுடன் ராகவன் மற்றும் சரண்யாவிடம் கூறிவிட்டு இவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள். பின்பு அவன் ரித்விகாவை பார்த்து "எனக்கும் அனிதாவிற்கும் திருமணம் நடக்க இருக்கிறது அன்றுதான் அஜிதா மற்றும் ரூபனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்னுடைய மனைவிக்கு நாத்தனார் முடிச்சு போட நீ வருவாய் என்று நினைக்கிறேன். நான் உன்னை என்னுடைய தங்கையாக தான் முதலில் இருந்தே பார்க்கிறேன்.


ஆனால் நீ என்னை ஒரு அண்ணனாக பார்க்கவில்லை என்பதை இந்த பிரிவை எனக்கு உணர்த்தி விட்டது. ஆனால் நீ செய்ய வேண்டிய கடமை ஆவது தவறாமல் செய்வாய் என்று எண்ணுகிறேன். இது எங்களுடைய திருமண பத்திரிக்கை திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயம் அன்று காலை உன்னை நான் எதிர் பார்ப்பேன். நீ ஆதிக்கு மனைவியாக என்னுடைய திருமணத்திற்கு வரவேண்டாம் ஆனால் என்னுடைய தங்கையாக வருவாய் என்று நம்புகிறேன் இதற்குமேல் நீ தான் கூற வேண்டும்" என்று இருவருமாக சேர்ந்து பத்திரிகை கொடுத்தனர்.


அஜய் இவ்வளவு பேசியும் குனிந்த தலை நிமிராமல் கைகளை மட்டும் கொண்டு பத்திரிக்கை வாங்கிக்கொண்டாள் ரித்விகா. பின்பு அஜிதா "என்னுடைய அண்ணன் சொன்னது தான் நானும் சொல்கிறேன். என்னுடைய தங்கையாக நீ நிச்சயமாக என் பேர் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்னுடைய கணவருக்கு தங்கை முறையில் நீதான் ஆரத்தி எடுக்க வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள் எங்களுடைய திருமணத்திற்கு நீ வரவில்லை என்றால் அன்றோடு உனக்கும் எனக்கும் இருக்கும் அக்கா தங்கை பாசம் முடிந்துவிடும். உனக்கு ஆதியின் மனைவியாக எங்கள் திருமணத்திற்கு வர விருப்பம் இல்லை என்றால் அவனுக்கு விவாகரத்து கொடுத்து விட்டு அதன் பிறகு எங்களுடைய தங்கையாக இந்த திருமணத்தில் வந்து சேரு" என்று கூறினாள்.


ஆதியுடன் விவாகரத்து என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவ்வளவு நேரம் குனிந்து இருந்தவள் படாரென்று நிமிர்ந்து பார்த்தாள் அதை அனைவரும் பார்த்து சிரித்துக் கொண்டனர் ரூபன் அஜிதா உடன் சேர்ந்து தங்களுடைய திருமண பத்திரிக்கையை கொடுத்தான். அதையும் எதுவும் கூறாமல் வாங்கிக்கொண்டாள் ரித்விகா. பின்பு நால்வரும் ஆக சேர்ந்து ஆதி அவளுக்கென்று திருமணம் மற்றும் நிச்சயத்திற்கு எடுத்து வைத்திருந்த புடவை மற்றும் நகைகளை 3 பைகளில் அவள் கையில் கொடுத்தனர் இதைத்தான் நீ திருமணம் மற்றும் நிச்சயத்திற்கு ஓட்டு வரவேண்டும் முதலில் உள்ளது நிச்சயத்திற்கு நீ அணிய வேண்டியது மற்றது திருமணத்திற்கு அணிய வேண்டியது என்று கொடுத்தனர். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் ரித்விகா.


இவை அனைத்தையும் தூரத்திலிருந்து ஆதி மற்றும் லட்சுமணன் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் நால்வரும் கலைந்து சென்ற உடன் அந்த இடத்திலேயே கீழே அமர்ந்து வாயை பொத்தி அழுக ஆரம்பித்தாள் ரித்விகா. அதை பார்த்த அனைவருக்கும் கஷ்டமாக இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத ஆதி அவனை அழைத்து அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான். ராகவனும் அதை புரிந்துகொண்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான்.


ராகவன் அவள் அருகில் வந்து "ரித்விகா கிளம்புவோமா" என்று கேட்டான். அவளும் ராகவன் சத்தம் கேட்டவுடன் கண்களை துடைத்துக்கொண்டு அவர்கள் கொடுத்த அனைத்தையும் தவறாமல் எடுத்துக்கொண்டு ஆதி மற்றும் லக்ஷ்மணனை கண்களால் துழாவிக் கொண்டே ஒருவருடன் சென்றாள்.


வீட்டிற்கு வந்த ரித்விகா அமைதியாக அவள் தங்கியிருந்த அறைக்கு சென்று விட்டாள். உள்ளே சென்று பலவாறு யோசிக்க ஆரம்பித்தாள் அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் நன்றாக உரைக்க ஆரம்பித்தது. ஆதியை அவளால் விவாகரத்து செய்ய இயலாது ஆனால் அவள் அப்படி செய்தால் மட்டுமே அவள் பிரிந்து இருப்பதற்கு அர்த்தம் வரும் யாரோ ஒருவர் கூறியதற்காக தன் மேல் பாசம் வைத்திருக்கும் அனைவரையும் ஒதுக்கி வைத்துவிட்டோமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. ஆனால் ஆதி மற்றும் லட்சுமணனை இன்று பார்க்காததால் அவ்வாறு தோன்றுகிறதோ என்று எண்ணி தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள்.


அதேபோல் திருமணத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமா இல்லை தான் சென்றால் ஏதாவது பிரச்சனைகள் வருமா என்று எண்ணி சோர்ந்துபோய் தலைவலியில் படுத்து தூங்கி விட்டாள்.


இங்கே கடையில் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டு அனிதா மற்றும் ரூபன் வீட்டில் ரித்விகாவிற்கு சம்பிரதாயமாக செய்ய வேண்டிய அனைத்தையும் வாங்கி முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். அவள் இன்று அழுத அழுகைஇலையே கண்டிப்பாக தங்களுடன் சேர்ந்து விடுவாள் என்று எண்ணி மகிழ்ச்சியாக இருந்தனர்.


ஆனால் ஆதி மற்றும் லட்சுமணன் வேறு ஏதேனும் தேவையில்லாமல் யோசித்து அவள் தன்னை இன்னும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று சரியாக சிந்திக்க ஆரம்பித்து இருந்தனர். அனைத்தும் சரியாக நடக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு நிற்க நேரமில்லாமல் கல்யாண வேலைகள் அவர்களை இழுத்துக் கொள்ள அவர்களும் வேலைகளில் மூழ்கிப் போனார்கள்.


இதோ இதோ என்று நிச்சயதார்த்த நாளும் வந்தது அன்று காலை ராகவன் மற்றும் சரண்யா வீட்டுக்கு வந்துவிட ரித்விகா காலையிலேயே ராகவனிடம் "நீங்கள் இருவரும் கிளம்புங்கள் எனக்கு வரவேண்டும் என்று தோன்றினால் நான் வருகிறேன் அதனால் எதற்காகவும் என்னை வற்புறுத்தாதீர்கள்" என்று கூறிவிட்டாள். அதனால் அவர்களும் எதுவும் கூறாமல் கிளம்பி வந்து இருந்தனர்.


ராகவன் மற்றும் சரண்யா இருவர் மட்டும் வரவே அனைவரும் ஏமாற்றமடைந்தனர். ஆனால் ஏதோ ஒரு மூலையில் அவள் வந்து விடமாட்டாளா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. அனைவரும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது வாசலையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். மாலை நிச்சயதார்த்தம் என்ற நிலையில் மதிய நேரம் இரண்டு மணி கடந்து விட்டது ஆனால் இன்னும் ரித்விகா தான் வந்தபாடில்லை. மாலை நிச்சயதார்த்தமும் ஆரம்பித்தது அவள் வரவில்லை என்பது அனைவருக்கும் சோகமாக இருந்தாலும் ஒரு பக்கம் அது அவள் மேல் கோபமாகவும் மாறிக் கொண்டிருந்தது.


தாத்தா மற்றும் சிதம்பரம் கடமைக்கு வந்து நின்று சென்றனர் பெரிதாக எந்த வித ஈடுபாடும் காட்டவில்லை தாத்தாவிற்கு உள்ளுக்குள் வருத்தங்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் திரிந்தார். இதை அனைவரும் கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரித்விகா வராதது தான் அனைவருக்கும் கவலையாக இருந்தது இப்படி அனைவரும் அவள் இல்லாததை எண்ணி சோகமாக இருந்தனர்.


ஆனால் ஆதி மற்றும் லட்சுமணன் சிரித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் இருவரின் சிரிப்பை பார்த்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் அமைதி காத்தனர். நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிய அனைவரும் ஆதி இடம் "ரித்விகா ஏன் வரவில்லை அனைவரும் இவ்வளவு தூரம் சொன்ன பிறகும் அவள் ஏன் இவ்வாறு செய்து விட்டாள்" என்று ஆதங்கமாக கேட்டனர்.


அதற்கு ஆதி ஒரு சிரிப்பையே பதிலாக கொடுக்க லட்சுமணன் "நாம் நினைத்தது அத்தனையும் நாளை தான் நடக்கும் இது ஏற்கனவே எனக்கும் அண்ணனுக்கும் தெரியும் நிச்சயமாக அவள் இன்று வர மாட்டாள் அதனால் யாரும் கவலைப்படாமல் நாளை திருமணத்திற்கு ரெடி ஆகுங்கள்" என்று கூறி சென்றான்.


காலம் யாருக்கும் காத்திராமல் மறுநாள் காலையும் மணப்பெண்கள் இருவரையும் அழகு கலை நிபுணர்கள் தயார் படுத்த ஆரம்பித்தனர் என்னதான் அனைவரும் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தாலும் ரித்விகாவை நினைத்து அனைவருக்கும் கவலையாகத்தான் இருந்தது.
 
Top