• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 31

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
திருமண நாளும் அழகாக விடிந்தது மணப்பெண்கள் இருவரையும் அதிகாலையிலேயே எழுப்பி அவர்களை தயார் செய்ய ஆரம்பித்து இருந்தனர் அழகுகலை பெண்கள். என்னதான் பொன் நகைகள் அவர்களை அலங்கரித்தால் அவர்கள் இருவரின் முகத்திலும் ஒரு கவலை இருந்தது அனைவரும் கண்டு கொண்டனர்.


அந்தக் கவலை அவர்களுக்கு மட்டுமல்ல அந்த குடும்பத்தில் இருந்த அனைவருக்குமே இருக்கதான் செய்தது ஆனால் ஆதி மற்றும் லக்ஷ்மணன் இருவரும் எந்தவித கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


இதைப் பார்த்து கோபமடைந்த ஜோதி அவர்கள் இருவரையும் பார்த்து "என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க நம்ம வீட்டு ஓட மருமகள் வருவாளா மாட்டாளா என்று நாங்கள் அனைவரும் கலக்கமாக இருந்தால் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டார்.


அதற்கு லட்சுமணன் "நீ ரொம்ப கவலை படாதே இன்னும் அரை மணி நேரத்தில் அவள் இங்கு வந்து விடுவாள் இந்த விஷயத்தை யாரிடமெல்லாம் கூற வேண்டுமோ அனைவரிடமும் கூறி விடு அது மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்கச் சொல் அவள் வீட்டிலிருந்து கிளம்பி விட்டாள்" என்று கூறினான்.


லட்சுமணன் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே அனைவரும் அந்த இடத்திற்கு வந்து இருந்தனர். மணமகன் மணமகள் உட்பட அனைவருமே அங்கு இருந்தனர் அதைப் பார்த்து சிரித்த ஆதி "எல்லாரும் ஆசைப்படுற மாதிரி என்னோட பொண்டாட்டி இங்கே கண்டிப்பா வருவா அதே மாதிரி அவளுடைய உரிமையை இங்கு நிலைநாட்டுவா அதனால் கவலைப்படாமல் அனைவரின் வேலைகளை பாரு" என்று கூறினான்.


அவனுடைய பேச்சில் பெரியவர்கள் சமாதானமாகி சென்றுவிட சிறியவர்கள் மற்றும் லக்ஷ்மணனை பிடித்துக்கொண்டனர். அஜித்தா அவர்கள் இருவரையும் பார்த்து "அப்படி என்னதான் செய்தீர்கள்" என்று கேட்டாள்.


லக்ஷ்மணன் தன் கையிலிருந்த அலைபேசியை அவர்களுக்கு காண்பித்தான் அதைப்பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் வாய் பிளந்தார்கள். ஏனெனில் ஆதி ஆர்த்தியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான். ஆனால் லட்சுமணன் அதை தூரத்தில் இருந்து எடுத்ததால் அந்தப் பெண் யார் என்று யாருக்கும் அடையாளம் தெரியவில்லை ஆனால் பார்த்தால் மிகவும் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது. ஆதியும் அவள் தோளில் கை போட்டு பேசிக் கொண்டிருந்தான். அந்த போட்டோவின் கீழே கூடிய விரைவில் என் அண்ணனுக்கு திருமணம் இவர்தான் என்னுடைய புது பேபி என்று குறிப்பிட்டு இருந்தான்.


முதலில் அதில் இருந்து வெளியே வந்த அஜய் லக்ஷ்மணனை பார்த்து "யாருடா அந்த பொண்ணு எதுக்காக இப்படி ஸ்டேட்டஸ் போட்டு இருக்க" என்று கேட்டான்
.

அதைக்கேட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்த ஆதி "டேய் லூசு அதை ஒழுங்கா பாரு அது வேற யாரும் இல்ல என் தங்கச்சி ஆர்த்தி தான் அதே மாதிரி அவன் போட்டிருக்கிற ஸ்டேட்டஸ் அவனோட செல்ல பேபிக்கு மட்டும்தான் தெரியும்" என்று கூறினான்.


அவன் கூறிய விளக்கத்தைக் கேட்ட பிறகு தான் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஏனென்றால் அந்த போட்டோவை பார்த்து ரித்விகா இனி ஆதியின் வாழ்வில் பிரச்சனை வராது என்று தவறாக நினைத்துக் கொண்டு இன்னும் விலகி சென்று விடக்கூடாது என்றுதான் அனைவரும் பயந்தனர்.


லக்ஷ்மணன் அனைவரையும் பார்த்து " நீங்க யாரு கவலை படாதே ஒழுங்கா சந்தோஷமா கல்யாணத்துக்கு எல்லாரும் ரெடி ஆகு அவள் வந்து கொண்டிருக்கிறாள் ஏற்கனவே அவள் கிளம்பிய தகவல் வந்து சேர்ந்து விட்டது அதனால் கவலைப்படாமல் நிம்மதியாக ரெடியாகுங்க" என்று கூறினான்.


அதன் பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


அதே நேரம் திருமண மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்த ரித்விகா முகத்தில் கோபம் அப்பட்டமாக இருந்தது ஏனென்றால் நேற்று நிச்சயதார்த்தம் என்று தெரிந்தவுடன் போவதா வேண்டாமா என்று அவர்கள் கொடுத்த உடைகளை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒரு மனம் அனைவரும் உன்னை அங்கு தேடிக் கொண்டிருப்பார்கள் அதனால் விரைவாக கிளம்பி செல் என்று கூறியது.


ஆனால் மற்றொரு மனமோ இன்று நீ சென்றால் நிச்சயமாக அவர்கள் உன்னை இனி வெளிவர விடமாட்டார்கள் அவர்களை விட்டு பிரிய நீ எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போய்விடும் அதனால் செல்லாமல் அமைதியாகி விடு அதுதான் அவர்கள் அனைவருக்கும் நல்லது என்று கூறியது.


இதில் மிகவும் குழம்பி போன ரித்விகா இறுதியில் அங்கு செல்லாமல் இருப்பதே நல்லது என்று எண்ணி அமைதியாகி விட்டாள். ஆனால் அங்கு நடந்த நிகழ்ச்சிகளை அனைவரின் ஸ்டேட்டஸ் வாயிலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


இன்றும் அதேபோல் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் அமைதியாக போனை எடுத்து பார்த்தாள் அப்போதுதான் லக்ஷ்மணன் ஸ்டேட்டஸை பார்த்தவள் கொதிநிலைக்கு சென்றாள். "எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை தவிர வேறு ஒருத்தியை என்னுடைய ஆதிக்கு மனைவியாக வரப் போகிறாள் என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் என்றுமே அவனுடைய பேபி நான் தான் வேறு யாரும் இருக்க போவது இல்லை" என்று கோபம் கொண்டாள் அந்த நேரத்தில் அவருடைய உரிமை மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தது வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் விரைவாக அவர்கள் கொடுத்த உடை மட்டும் நகைகளை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டாள்.


செல்லும் போது அவளுடைய மனம் இப்போது நீ சென்றால் ஆதி உன்னை அங்கேயே பிடித்து வைத்துக் கொள்வான் அதன்பிறகு நீ பிரிந்து வர முடியாது அதனால் செல்லாதே என்று கூறியது. ஆனால் அதற்கு ரித்விகா "ஏன் எதற்காக நான் ஆதியை பிரிந்து இருக்க வேண்டும் அவன் தானே என்னுடைய கணவன் என்னால் அவனையும் எனக்கு ஒரு தந்தையாக இருந்த லட்சுமணனையும் விட்டுக்கொடுக்க முடியாது யார் என்ன கூறினாலும் நான் இனி வெளியே வரப்போவதில்லை இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன்" என்று கூறிவிட்டு கோபமாக வந்து கொண்டிருந்தாள்.


ஆதி மற்றும் லட்சுமணன் கூறியது போல் அரை மணி நேரத்திற்குள் மண்டபத்தின் வாயிலில் இருந்தாள் ரித்விகா. வாசலில் இறங்கியவள் வேகமாக ஆதி மற்றும் லட்சுமணன் நின்றிருந்த இடத்திற்கு சென்றாள். ரித்விகா வந்துவிட்டாள் என்ற செய்தி அனைவருக்கும் தெரிய வர அனைவரும் ஆர்வமாக அவளை காண வந்தனர். ஆதி எடுத்துக் கொடுத்த புடவை மற்றும் நகை தேவலோக பெண்ணாக வந்த ரித்விகாவை பார்த்த ஆதி தன்னிலை மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான். மற்றவர்கள் அவளுடைய அழகை பார்த்து தூரத்திலிருந்தே திருஷ்டி கழிக்க ஆரம்பித்தனர்.


ஆனால் அதையெல்லாம் கவனிக்காத ரித்விகா லட்சுமணன் மற்றும் ஆதி அருகில் சென்று இருவருக்கும் கன்னத்தில் இரண்டு அரை வைத்தாள். அதையும் வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் இருவரும் அதைப் பார்த்து இன்னும் கோபம் அடைந்த ரித்திவிகா ஆதியை பார்த்து "எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொள்வாயா நான் உன்னை விட்டு பிரிந்து செல்ல நினைத்தாள் என்னை 4 அடியாவது அடித்து உன்னுடன் அழைத்து வந்திருக்க வேண்டுமல்லவா அதை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை திருமணம் செய்வாயா நன்றாக கேட்டுக்கொள் இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாமல் அனைத்து ஜென்மத்திலும் நான் தான் உன்னுடைய மனைவி என்னைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட மனைவியாக நினைக்கக்கூடாது" என்று கூறினாள்.


அவள் கூறியதை கேட்டு பாலகிருஷ்ணன் மற்றும் சிதம்பரம் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது ஆனால் மற்ற அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அடுத்து லக்ஷ்மணனை பார்த்தவள் "என்னைக்குமே நான் தான் உன்னுடைய முதல் பேபி நீ கல்யாணம் முடிந்து பிள்ளை பெற்றாலும் என்னை தான் உன்னுடைய முதல் பேபியாக நினைக்க வேண்டும் நீ என்றைக்குமே என்னுடைய இன்னொரு தந்தை நண்பன் அதை மறந்து விடாதே இனி எவளையாவது பேபி என்று கூறினாய் என்றால் உன்னுடைய வாயில் சூடு போட்டு விடுவேன்" என்று கத்தினாள்.


அதன் பிறகு இருவரையும் பொதுவாக பார்த்தவள் "என்னுடன் இருந்து உங்கள் இருவருக்கும் ஏதாவது நேர்ந்தால் நானும் உங்களுடனே வந்து விடுகிறேன் .உங்கள் அனைவரையும் பிரிந்து நானும் கஷ்டப்பட்டு அனைவரையும் கஷ்டப்படுத்தி வாழ்வதைவிட நான் உங்களுடன் இருக்கும்போது ஏதாவது ஆகிவிட்டால் நானும் உங்களுடனே வந்துவிடுகிறேன்" என்று கண்களில் கண்ணீருடன் கூறினாள்.


சுற்றியிருந்த யாரையும் கவனிக்காமல் அவளுடைய ஆதங்கம் அனைத்தையும் கொட்டி தீர்த்தாள். அவள் பேசி முடித்தவுடன் ஆதி மற்றும் லக்ஷ்மணன் ஒன்றாக அவளை அணைத்துக் கொண்டனர். அவளும் அவர்கள் இருவரின் அணைப்பில் நன்றாக அடங்கிப்போனாள்.


ஏலத்திற்கு வந்திருந்த மொத்த கூட்டமும் இவர்களின் அன்பைப் பார்த்து மெய்சிலிர்த்தனர். இன்று அவள் கூறிய விளக்கம் அவர்களை தவறாக நினைத்து இருந்த அனைவருக்கும் செருப்பால் அடித்தது போல் இருந்தது ஏனென்றால் ரித்திகா தெளிவாக ஒரு விஷயத்தை உணர்த்தி விட்டாள். ஆதி அவளுடைய கணவன் அதேபோல் லக்ஷ்மணன் அவருடைய தந்தைக்கு சமமானவன். இதைக் கேட்ட அனைவருக்கும் இந்த காலத்து சிறியவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம்தான் தவறான கண்ணோட்டத்தில் ஒரு சில விஷயங்களைப் பார்த்து தவறாகவே முடிவெடுத்து விடுகிறோம் என்று புரிந்து கொண்டனர்.


நிலமையை சகஜம் ஆகும் பொருட்டு ரித்விகா மற்றும் லக்ஷ்மணனின் நண்பர்களின் அவர்கள் மூவரின் மேலே ஸ்பிரே அடித்து "உங்களின் பாசமான சொற்பொழிவுகளை அனைவரும் கேட்டு விட்டார்கள் இனியாவது திருமணத்தை பார்ப்போமா" என்று கேட்டார்கள்.


அதைக்கேட்ட லட்சுமணன் ரித்விகாவை பார்த்து "பேபி நீ போட்டோல பார்த்தது வேற யாரும் இல்ல ஆர்த்திதான் அதனால அதை நினைத்து கவலைப்படாமல் வந்து நீ செய்ய வேண்டிய கடமைகளை முன்நின்று செய் பார்ப்போம் அதற்கு முன் நீ அழுததால் முகம் காஞ்சனா மாதிரி மாறிவிட்டது அதையும் கொஞ்சம் சரி செய்து விடு" என்று கூறி அவளை அழைத்தான்.


ஆதி தன்னுடைய கைக்குட்டையை எடுத்து ரித்விகாவின் முகத்தை சரி செய்து விட்டு அவளை லட்சுமணனுடன் அனுப்பி வைத்தான். அதன் பிறகு அவளிடம் கோபத்தில் முகம் திருப்பி இருந்த அனைவரிடமும் கெஞ்சி கொஞ்சி சமாதானப் படுத்திவிட்டு இனிமேல் இதுபோன்ற தவறை என்றுமே செய்யமாட்டேன் என்ற வாக்குறுதியையும் அளித்துவிட்டு மணப்பெண்கள் மற்றும் மணமகன்களை காணச் சென்றாள்.


அவர்கள் நால்வரும் இவள் நிச்சயத்திற்கு வராததால் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டனர். அவர்களிடம் கெஞ்சி பார்த்தாள் ஆனால் அது வேலைக்கு ஆகாமல் போகவே அவர்களிடம் "நான் என்ன செய்தால் உங்கள் அனைவருக்கும் கோபம் போகும்" என்று சரணடைந்தாள்.


இதற்குத்தான் ஆசைப்பட்டோம் என்பது போல் பார்த்த நால்வரும் "நீ மணமேடையில் அனைத்து வேலைகளிலும் முன்னின்று செய்ய வேண்டும் அதேபோல் உன்னுடைய தந்தை மற்றும் நாத்தனார் கடமைகளை எந்தவித குறையும் இல்லாமல் செய்ய வேண்டும்" என்று கூறினார்கள். அவளும் அவர்களுடைய கோபத்தை குறைக்க இதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்து மகிழ்ச்சியாக அவர்கள் கூறியவற்றை செய்ய ஆரம்பித்தாள்.


திருமணத்திற்கு நேரமாகவே மணமகன் இருவரையும் அழைத்து சென்று மணமேடையில் அமர வைத்தனர் அவர்களும் ஐயர் கூறியவற்றை அமைதியாக கூறிக் கொண்டிருந்தனர். நேரம் ஆகவே மக்களை அழைத்து வரச்சொல்லி ஐயர் கூறினார். இருவரையும் இரண்டு கைகளில் அவளுடைய தோழிகளுடன் சேர்ந்து அழைத்து வந்து தன்னுடைய மாமன் மற்றும் அண்ணன் அருகில் அமர வைத்தாள். பின்பு அஜய் பின்பு சென்று நின்று கொண்டாள்.


கெட்டிமேளம் என்று ஐயர் கூறவே ரூபன் கழுத்தில் முதல் இரண்டு முடிச்சுகளை போட்டான் மூன்றுமுடிச்சி சரண்யா போட்டுவிட்டாள். அதேபோல் அஜய் அனிதா கழுத்தில் 2 முடிச்சு போட மூன்றாம் முடிச்சை ரித்விகா போட்டு விட்டாள். திருமணம் நல்ல முறையில் முடிய அனிதா வீட்டிலுள்ளவர்கள் நாத்தனார் கடமைக்கு செய்யவேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் செய்தனர். அதேபோல் ரூபன் வீட்டிலுள்ளவர்கள் கொழுந்தியா முறைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தனர்.


அதை பார்த்த போது தான் ரித்விகா தான் செய்த தப்பை நன்றாக உணர்ந்தாள். இவ்வளவு பாசம் வைத்திருக்கும் குடும்பத்தை நம்முடைய தேவையில்லாத எண்ணத்தால் இவ்வளவு நாள் பிரிந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து கலங்க ஆரம்பித்தாள் அவளுடைய எண்ண ஓட்டத்தை சரியாக புரிந்து கொண்ட ஆதி மற்றும் லட்சுமணன் அவளுக்கு இருபுறம் வந்து நின்றுகொண்டனர் அவர்கள் இருவரையும் பார்த்தவள் மனதில் இருந்த கலக்கம் பறந்து போனது.


அதன்பிறகு எந்தவித தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக மற்ற சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்தனர். இளவட்டங்கள் அனைவரும் தங்களுடைய ஆட்டம் பாட்டம்களை ஆரம்பித்து அந்த இடத்தை மிகவும் கலகலப்பாக மாற்றினார்கள்.


மணமக்கள் தங்களுடைய கண்களாலேயே காதல் பேசிக்கொண்டிருந்தனர். அஜயின் கண்களில் முதல் முறையாக தெரிந்த காதலில் சிக்கிக்கொண்டு அதில் மூழ்க ஆரம்பித்திருந்தாள் அனிதா. வந்தவர்களை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அறிமுகப்படுத்தி நன்றாகவே கழித்தனர்.


வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மனமார வாழ்த்திவிட்டு வயிறார சாப்பிட்டுவிட்டு கிளம்பி சென்றனர். அதன் பிறகு அனைத்து விதமான சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இனி பெண்களை அவரவர் வீட்டுக்கு வாழ விட வேண்டும் என்ற விஷயத்திற்காக நல்லநேரம் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.


இளையவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இருக்க ரித்விகா அவளுடைய நண்பர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால் அவர்கள் யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை ஏனென்றால் இவ்வளவு பிரச்சினையும் இவள் முதலிலேயே நம்மிடம் கூறியிருந்தால் அன்றே தெளியவைத்து இருக்கலாம் என்ற ஆதங்கம் அவர்களுக்கு அதை அவளும் புரிந்ததால் தான் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.


ஆனால் ஒரு அளவுக்கு மேல் பொருக்க முடியாத லட்சுமணன் "அடச்சீ எல்லாரும் அமைதியாக இரு இப்பதான் எல்லா பிரச்சனையும் சரியாகிவிட்டது அல்லவா எல்லாரும் அவ கூட பேசு" என்று கூறினான்.


அதன் பிறகு அனைவரும் தங்களுடைய ஆதங்கத்தை விட்டுவிட்டு அவனுடன் சகஜமாக பேச ஆரம்பித்தனர். ஆனால் மொத்தமாக அங்கே கலகலப்பான சூழ்நிலை உருவானது. ரித்விகா ஏதோ எடுப்பதற்கு தனியாக செல்ல அதைப்பார்த்த பாலகிருஷ்ணன் அவளிடம் பேச சென்றார். அவர் ரித்திகா பின்னே செல்வதை பார்த்து அனைவரும் அவருக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்தனர்.


வீட்டில் உள்ள அனைவரின் ஒதுக்கத்தால் பாலகிருஷ்ணன் தான் செய்வது தவறு என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் இன்று திருமணத்தில் ரித்திகாவை பார்த்தவுடன் சிதம்பரம் "பார்த்தீங்களா மாமா அன்னைக்கு நீங்க இவ்வளவு சொன்ன பிறகும் எதையும் மதிக்காமல் கல்யாணத்துல வந்து முன்னணி எல்லாத்தையும் செய்கிறாள் இவளால் என்னுடைய மகன் மற்றும் மகளின் வாழ்க்கை கால் ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது ஏற்கனவே இவளுடைய ராசிக்கு அவருடைய குடும்பத்தில் யாருமே நிலைத்ததில்லை நம் வீட்டிற்கு வந்த நேரத்தில் நமக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் என்றுதான் இந்த பெண் இதை புரிந்து கொள்ளப் போகிறாளோ" என்று நன்றாக அவரை ஏத்தி விட்டார் இதனால் பழையபடி பாலகிருஷ்ணன் தவறாக சிந்திக்க ஆரம்பித்தார்.


அவருடைய மனதில் தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் சிதம்பரம் உருவாக்கிவிட்டார். அதனால் அவளிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.


இப்போது அதற்கான வாய்ப்பு அமையவே அவரும் அவள் பின்னாடி சென்று கொண்டிருந்தார் வேண்டியவற்றை எடுத்து விட்டு திரும்பி வரும்போது எதிரே வந்த பாலகிருஷ்ணன் அவளை தடுத்தார். ஏனென்று அவள் அவரை கேலியாக பார்க்க தன்னுடைய நாக்கு இன்னும் கொடுக்கால் கொட்ட ஆரம்பித்தார் பாலகிருஷ்ணன்.


பாலகிருஷ்ணன் "உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவு என்பதே வராதா நான் அன்று அவ்வளவு தூரம் புரியும்படியாக சொல்லிச் சென்ற போதும் இன்று திருமணத்திற்கு கிளம்பி வந்து அணைத்து வேலையையும் செய்கிறாய். அதுமட்டுமல்லாமல் நீ முன்னே நின்று செய்ததால் என்னுடைய பெயர் அல்லது பேத்தி வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வாய். ஏற்கனவே ஒரு நாள் எங்கள் குடும்பம் சீரழிந்து கிடக்கிறது மகிழ்ச்சியாக ஆரம்பிக்க வேண்டிய எங்கள் வீட்டு பிள்ளைகளின் திருமண வாழ்க்கையை கெடுப்பதற்காகவே இங்கு வந்து இருக்கிறாயா" என்று கேட்டார்.


அவர் கேட்கும் கேள்விகளைக் கேட்ட அனைவருக்கும் அவர் மேல் கோபமாக வந்தது ஆனால் ஆதி மற்றும் லட்சுமணன் "இதற்கான பதிலை ரித்விகா மட்டுமே கூற வேண்டும் இல்லையென்றால் என்றாவது ஒருநாள் இவள் மறுபடியும் பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை வரலாம்" என்று கூறினார்கள் அவர்கள் இருவரும் கூறுவது சரி எனவே அனைவரும் அமைதி காத்தனர்.


இவர்கள் அனைவரும் இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பது பிரித்விகா மற்றும் பாலகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. அவர் பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்ட ரித்விகா நிதானமாக யோசித்து ஒரு தெளிவான முடிவுடன் அவருடைய முகத்தைப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் இருந்த தெளிவே அவள் ஒரு முடிவெடுத்து விட்டால் என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்தியது. அவள் என்ன கூற போகிறாள் என்பதை கேட்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர். அவளும் அவர் கேள்விக்கான பதிலை கூற ஆரம்பித்தாள்.
 
Top