• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 1

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 1

இரண்டு மாடி வீட்டின் மேல்புறம்முதல் வீடு முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, இரவில் கண்களுக்கு விருந்தாய் ஜொலித்தது அந்த வீடு.

காலையில் தான் திருமணம் முடிந்ததற்கு சாட்சியாய் ஆங்காங்கே ஆட்கள் வேலை செய்த களைப்பில் ஓய்வெடுக்க, வீடு முழுதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சலசலப்பு.

'அடியே ராணி மங்கம்மா! உன்னை இந்த வீட்டுக்கு மருமகளா வரவைக்க எத்தனை வேலை பார்க்க வச்சுட்டான் இந்த பக்கி. எப்படியோ என் ரூட்டு க்ளியர் ஆனா சரி தான்' நினைத்தபடியே மங்கம்மாவான சுஜிதாவை திருமணமான முதல்நாள் இரவுக்கான சடங்கு ஏற்பாடு செய்திருந்த அறைக்குள் தள்ளிவிட்டு ஓடினாள் அவள் ஹேமா. மணமகன் அர்ஜுனின் ஒரே தங்கை.. கொஞ்சம் வாண்டு கூட.

அர்ஜுன் சுஜிதா திருமணம் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் நடந்தேறியிருக்க ஒருவித பயத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தாள் சுஜிதா.

"வாங்க மேடம்! வெட்கத்தோட வருவீங்கனு பார்த்தால் பயத்தோட வர்ற மாதிரி இருக்கு. நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன்?"

கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண் அவள். யாரும் குறை சொல்லிவிட முடியாத உருவம் தான். பலபேர் மனதில் வருங்கால கணவன் எப்படி இருக்க வேண்டும் என நினைப்பதற்கு கொஞ்சமும் குறைவின்றி ஆறடியில் அம்சமான முகம் தான். ஆனாலும் சுஜிதா இதை எல்லாம் எதிர்பார்த்ததில்லையே!

"என்ன! கொஞ்சமாச்சும் பார்க்குற மாதிரி இருக்கேனா? பாஸ் மார்க் தானே!" அர்ஜுனின் கேள்வியில் தன் முகத்தை அவனிடம் இருந்து பிரித்தவள் பாலை டேபிளில் வைத்துவிட்டு அவனருகில் வந்து அவன் காலில் விழுந்தாள்.

"ஹேய்! சுஜி என்ன பண்ற? கெட்அப்! கெட்அப் சுஜி!" கட்டிலில் ஏறி முழங்காலிட்டு பதறி அவன் கத்த, சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவள்

"ரேகா அத்தை தான் ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க" என சொல்ல,

'ஓஹ்காட்! அம்மா இதெல்லாம் உங்க வேலையா?' என தன் அன்னையை மனதில் திட்டியவன்,

"சுஜி! எதுவா இருந்தாலும் என்கிட்ட முதல்ல சொல்லு. அது வேணுமா வேணாமான்னு நான் சொல்றேன் சரியா? அம்மா சொன்னா அப்படியே செய்யணும்னு இல்ல" என சொல்ல தலையாட்டிக் கொண்டாள் சுஜி.

"சரி அதைவிடு, வந்து இப்படி உட்காரு" மெத்தையில் அவனும் நேராய் அமர்ந்து கொண்டு சொல்ல, அவளும் அவன் சொன்னதை அப்படியே செய்தாள்.

"இப்ப சொல்லு என்ன பயம்? ஆல்ரெடி உனக்கு என்னை தெரியும். எனக்கும் உன்னை தெரியும். வேறென்ன?" அர்ஜுன் கேட்க, தயக்கத்தை கொஞ்சம் தள்ளி அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை வரிசைப்படுத்திக் கேட்க ஆரம்பித்தாள்.

"இல்ல.. ஹேமா சொன்னா.. நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம்புடிச்சதா.. அது.. அது உண்மையா?"

அர்ஜுன் "ம்ம்ம்… அப்டியா சொன்னா? அப்படி எதுவும் நான் சொல்லலையே!"

"ஒஹ்” என கேட்டுக் கொண்டவள் மனதின் ஓரத்தில் எழுந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு

“அப்புறம் ஏன் படிக்காத என்னை கல்யாணம் பண்ணீங்க? நீங்க டாக்டர்.. ஒரு டாக்டர் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல? அத்தைக்காக கட்டிக்கிட்டிங்களோ?" இப்போது தயக்கம் போய் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பேச ஆரம்பித்தாள்.

"ஹ்ம்ம்! அப்போ இன்னொரு முறை டாக்டர் பொண்ணா பார்த்துக் கட்டிக்கவா?" அவன் கேள்வியில் சுஜி முகத்தை பார்க்க அவனுக்கே பாவமாய் போனது. ஆனாலும் காதலை சொல்லி புரிய வைக்கமனமில்லை அந்த மருத்துவனுக்கு.

"நீ படிக்கலயா? பிளஸ் டூ படிச்சிருக்க தானே?" அர்ஜுன் கேள்விக்கு ஆமாம் என தலையாட்டினாள்.

"வெல்! ஹேமா சொன்ன மாதிரி அடம் எல்லாம் புடிக்கல. இந்த செவத்தம்மாவை கட்டி வைங்க இல்லைனா எனக்கு கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னேன். இப்ப சொல்லு நான் அடமா புடிச்சேன்?"

அர்ஜுன் சாதாரணமாக சொல்லிவிட்டான். சுஜிக்கு தான் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது ரெண்டும் ஒன்று தானே என்று.

"என்னோட அம்மா அப்பா..." சுஜி

"இனி உனக்கு எல்லாமே நான் தான். வேற எதையும் நீ யோசிக்க வேண்டாம்"

இதற்கு மேல் என்ன கேட்க, அவள் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருக்க, அந்த கைகளை மெதுவாக தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன்

"சுஜி ரொம்ப திங்க் பண்ணாத. எல்லாமே சின்ன சின்ன விஷயம் தான். எனக்கு உன்னை புடிக்கும் அவ்வளவு தான். உனக்கு படிப்பு பிரச்சனைனா நீ டிகிரி பண்ணு நான் அப்ஜெக்ட் பண்ண மாட்டேன். பட் படிப்பும் நம்ம வாழ்க்கையும் வேற வேற ஓகே" நிதானமாய் ஒவ்வொரு வார்த்தையாய் அழகாய் அவன் பேச, கொஞ்சம் மயங்கி தான் கேட்டுக் கொண்டாள் சுஜி.

"சரி தூங்கி ரெஸ்ட் எடு" என்றதும் இதுதான் வேண்டும் என்பது போல அவள் சோஃபாவிற்கு ஓட, வாய்விட்டு சிரித்தவன்

"ஏய் செவத்தம்மா! அவ்வளவு தூரம் எல்லாம் வேண்டாம். இங்க வா" என படுக்கையின் மறுபக்கம் காட்ட, மீண்டும் தயக்கம் வந்தாலும் பேசாமல் சென்று திரும்பி படுத்துக்கொண்டாள்

"டெய்லி எல்லாம் இப்படி தூங்க முடியாது. இன்னைக்கு முதல் நாள்ன்றதால விடறேன்" அர்ஜுனின் குறும்பு வார்த்தைகளில் சிரிப்புடன் கண்களை மூடிக்கொண்டாள் சுஜி.

அர்ஜுன், ரேகா ராஜ்குமாரின் மகன். டாக்டர் படிப்பு முடித்து தனியாக மருத்துவமனை நடத்தி வருபவன். ஹேமா அவனின் ஒரே செல்ல தங்கை.

சென்னையில் அவன் மருத்துவமனை நல்ல பெயர் பெற்றிருக்க, திருச்சியிலும் நிறுவி அங்கேயே குடும்பத்துடன் சில மாதமாக வசித்து வந்த நிலையில் சுஜியினை ஹேமா மூலம் அறிந்து காதல் கொண்டு இதோ கல்யாணமும் முடித்துவிட்டான். ஆனால் காதலை சொன்னபாடு தான் இல்லை.

சொல்லுக்கும் தெரியாமல்....
சொல்லத்தான் வந்தேனே!
சொல்லுக்குள் அர்த்தம் போல...
சொல்லாமல் நின்றேனே!

சொல்லுக்கும்அர்த்ததுக்கும்
தூரங்கள் கிடையாது!
சொல்லாத காதல் எல்லாம்

சொர்க்கத்தில் சேராது!

ஹேமா மூலம் சுஜியை அறிந்து கொண்ட அர்ஜுன் அறியாத ஒன்று சுஜியை விட சுஜி அண்ணன் தான் ஹேமாவிற்கு பிடித்த ஒருவன் என்பது.

அம்மா அப்பா சிறுவயதிலேயே இறந்த நிலையில் அண்ணன் சிவா தான் சுஜிக்கு எல்லாமே. இருந்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்து சுஜியை படிக்கவும் வைத்தான். ஆனாலும் பிடிவாதமாக கல்லூரி செல்ல மறுத்து விட்டாள் தங்கை.

விவசாயத்தில் லாபம் நட்டம் என மாறிமாறி வருவது இயல்பு தான். திருமணம் என வந்தால் சிவா அனைத்தையும் தங்கைக்கு தந்துவிடுவான் என்பது அந்த ஊர் முழுக்க அறிந்த ஒன்று.

இதில் அதிகம் படித்தால் அதற்கு ஏற்றவாறு தான் மாப்பிள்ளை பார்க்கவும் செய்வார்கள் என நண்பர்கள் சொல்ல, அப்போதே கல்லூரி செல்லும் ஆசையை விட்டுவிட்டாள் சுஜி.

பள்ளி முடித்து ஒரு வருடம் தையல் கற்று பொழுதைபோக்கி வந்த நிலையில் தான் அர்ஜுன் குடும்பத்துடன் அங்கு வந்து சேர்ந்தான்.

ஹேமா அங்கேயே ஒரு கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி சேர்ந்து படித்தாள். மாலை நேரம் தையல் வகுப்பு சென்றவளுக்கு அதில் ஈடுபாடு இல்லமல் போக, வந்த கொஞ்ச நாளிலேயே தனது வாய் ஜாலம் மூலம் சுஜியுடன் பழகி தன் வீட்டிற்கும் இயல்பாய் அழைத்து செல்வாள் அவள்.

அப்போது தான் சுஜி அர்ஜுனிற்கு குழந்தை முகமாய் கன்னி அறிமுகமானாள். அதே நாட்களில் தான் சிவாவும் ஹேமாவிற்கு நட்புடன் அறிமுகமானான்.

அண்ணன் விரும்புவதை தெரிந்து அம்மா அப்பாவுடன் சிவாவையும் சமாளித்தவள் தான் 'தி கிரேட் ஹேமா'.

தங்கையின் தோழி என்ற முறையிலேயே ஹேமாவுடன் சிவா பழக, சில நாட்கள் கடந்து அண்ணனை போல அல்லாமல் ஹேமா தன் காதலை சிவாவிடமும் சொல்லிவிட்டாள்.

ஆனால் அவளுக்கு பதில்தான் இன்று வரை வரவில்லை. அதில் ஹேமாவிற்கு கவலையுமில்லை. அண்ணனை போலவே சிவாவை தவிர யாரையும் மணக்க போவதில்லை என்பதில் தெளிவாய் இருக்கிறாள்.

சுஜியை அறைக்குள் தள்ளிவிட்டு ஓடிய ஹேமா மொட்டைமாடி கதவு திறந்திருக்க, அங்கே விளக்கு வெளிச்சம் இருப்பதால் யார் என எட்டிப் பார்த்தாள்.

"வாவ் பிளாக்மேன்! இங்க என்ன பண்ற?" சிவாவை அங்கே அந்த நேரம் எதிர்பார்க்காமல் ஹேமா ஆனந்த மகிழ்ச்சியாய் கேட்க,

"இங்கேயும் வந்துட்டியா? என்னை தனியா விடவே மாட்டியா?" கேட்ட கேள்வி என்னவோ சலிப்புடன் கேட்பது போலத்தான் இருந்தது. ஆனால் அதில் ரசனையும் இருந்ததோ அது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

"ஹல்லோ! ரொம்ப சீன் போடாத. இப்ப உங்க சிஸ்டர்க்கு நான் நாத்தனார். என்ன வேணா பண்ணலாம் தெரியும்ல"

"அவ்வளவு தைரியம் இருந்தா பண்ணி பாரேன்" கொஞ்சமும் சளைக்காத பதில் சிவாவுடையது.

"ப்ச்! அட போயா! நீ வேற" பேசிக்கொண்டே அந்த மொட்டைமாடி கட்டை சுவற்றில் ஏறி அமர, அவள் அழைத்த விதத்தில் சிரிப்புடன் நின்றான் சிவா.

"சிரி! சிரி! அதான் உன் கடமை முடிஞ்சுதே" என பெருமூச்சுடன் சொன்னவள்,

"ஆமா! அடுத்து என்ன நம்ம கல்யாணம் தானே?" என ஹஸ்கிவாய்ஸில் கேட்க,

"உனக்கு வேற வேலையே இல்லையா? உங்க அம்மா தேடுவாங்க போ" என்றவன் நழுவ பார்க்க, விடாமல் கைகளை பிடித்துக்கொண்டாள் அவள்.

"ஹேமா! என்ன இது? யாராச்சும் பார்த்தால் என்ன நினைப்பாங்க? விடு" அவன் பதற,

"என்னை பார்த்தால் பாவமா இல்லையா பிளாக்மேன்? கொஞ்சம் கருணை காட்டி என்னோட காதலுக்கு பச்சை கொடி காட்டுங்களேன்!" என்றால் அவள் பாவம் போல.

"ஹேமா நான் யாரு உனக்கு? ஒரு ஆறு மாசமா என்னை தெரியுமா? எனக்கு விவசாயத்தை தவிர வேற எதுவுமே தெரியாது. நீ போய் என்னை... நீ ஒரு அற்புதம் ஹேமா. எப்பவும் ஜாலியா துருதுருனு இருக்குற ஹேமாவை புடிக்கும் தான். ஆனால் என்கூடவே வச்சு பாத்துக்க என்னால முடியாது மா" என்றவன் மனம் ‘நான் அதற்கு கொடுத்து வைக்கவில்லையடி பெண்ணே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.

இவ்வளவு மென்மையாய் அவன் பேசுவது தனது தங்கை சுஜிக்கு அடுத்து ஹேமாவிடம் தான்.

அதை சிவா அறிந்தானோ இல்லையோ அவனின் அக்கறை முழுக்க அவள் மேல் இருப்பதையும் சேர்த்து ஹேமா அறிந்தாள்.

"ஹேமா நீ இன்னும் ஆறு மாசத்துல டீச்சர். சின்னபுள்ள மாதிரி பேசிட்டு இருக்காத புரியுதா? என் வழி வேற. உங்கஅம்மாகிட்ட கேளு. உனக்காக நிறைய ஆசை வச்சிருப்பாங்க. உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். இனி இப்படி என்கிட்டபேசிட்டு இருக்காத"

எப்படியாவது புரிய வைத்திடவேண்டுமென சிவா பேச, அவன் முடித்ததும் "ஒரு டவுட்" என்றாள் ஹேமா.

என்ன என பார்வையால் கேட்க, "உங்க வழி என்ன தனி வழியா?" என்றாளே பார்க்கலாம்..

இவளை மாற்றுவது கொஞ்சம் அல்ல ரொம்பவே கடினம் தான் என நினைத்து கீழிறங்கினான் சிவா.

நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா...
அதை நீ காணக் கண்ணில்லையா???
உன் கனவுகளில் நானில்லையா???

தினம் ஊசலாடுதென் மனசு...
அட ஊமையல்ல என் கொலுசு...
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே!
என்னுயிர் துடிக்காமலே...
காப்பது உன் தீண்டலே!

உயிர் தர வா....

நேசம் தொடரும்..
 
Top