அத்தியாயம் 10
"ஹெல்லோ வீட்ல யார் இருக்கீங்க?" வெளியில் நின்று ஹேமா கத்தினாள். கோபமா இருக்காங்களாம்.
"என்ன கேள்வி இது? இங்க என்னை தவிர யார் இருப்பான்னு நினச்ச?" என்றான் வெளிவந்த சிவா.
"அம்மா சாப்பாடு குடுத்தாங்க" வெளியில் நின்றே அவள் சாப்பாட்டை நீட்ட, வேறு நேரமாய் இருந்தால் வாங்கிக்கொண்டு அவளை அனுப்பியிருப்பான்.
மாலை ஊருக்கு செல்பவளை அப்படி அனுப்ப மனமில்லை. "இன்னும் கோபமா தான் இருக்கியா? நான் தான் அப்படி நினைக்கவே இல்லைனு சொல்றேன்ல" வாசலில் நின்றே அவன் கேட்க, நீட்டிய கைகளை பேசாமல் எடுத்துக் கொண்டாள்.
உள்ளே செல்ல போனவள் பின் திரும்பி வாசலில் இருந்த மரநிழலில் அமர, அவளின் முதிர்ந்த எண்ணத்தில் சிரித்துக் கொண்டு அவனும் அமர்ந்தான்.
"சாய்ந்திரம் ஊருக்கு போனுமே! எல்லாம் எடுத்து வச்சுட்டியா? நீ அந்த வேலையை பார்க்க வேண்டியது தானே? இன்னைக்கும் ஏன் அலையுற?" அவள்மேல் உள்ள அக்கறையில் மட்டுமே அவன் கேட்க, இப்போது அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது.
"பார்த்தியா! ஊருக்கு போறதுக்கு முன்ன சொல்லிட்டு போகலாம்னு வந்தா ஏன் வந்தனு கேட்குற! நான் ஊருக்கு போய்ட்டா நாளைக்கே நீ என்னை மறந்திடுவ. நான் தான் லூசு மாதிரி உன்னை நினைச்சிட்டு இருக்க போறேன்" குழந்தை போல அவள் சொல்லிக்கொண்டே அழ,
"ஹேமா! நான் அந்த அர்த்தத்துல கேட்கல மா. எனக்கும் கஷ்டமா தான் இருக்கும்" ஏதோ ஒரு வேகத்தில் அவன் சொல்லிவிட, விருட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
"தினமும் நான் போற இடமெல்லாம் வந்து நின்னுட்டு இருந்த… இப்படி திடிர்னு ஊருக்கு போனா! அதான் சொன்னேன்" அவன் ஏதோ நினைத்து எதையோ உளற,
"ஆமா! ஆமா! நான் தான சுத்தினேன். அதைதான சொல்லி காட்டுற?"
"நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற? சரி விடு! போய் ஒழுங்கா வேலையை பாரு. வெளில எங்கேயும் சுத்தாத. இந்த ஊர் மாதிரி இல்ல அது" அவள் ஏற்கனவே சென்னைவாசி என்பதை மறந்து அவன் பேச, இப்போது அவளுக்கு சிரிப்பு வந்தது.
"சரி பிளாக்மேன் அப்படியே ஆகட்டும்! இப்ப சாப்பிடுங்க" தெளிவான ஹேமா சாப்பாட்டை நீட்ட, அவனும் வாங்கிக் கொண்டான்.
"எனக்காக காத்திருப்பல்ல? நான் அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் எதையாவது பண்ணி வச்சுடாத" ஹேமா கேட்க,
"ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல. அதுக்கு அப்புறம் கூட நான் இன்னும் யோசிக்கல. உனக்கு இன்னும் நேரம் இருக்கு. அங்க போய்ட்டு தெளிவா யோசிச்சு பாரு. உனக்கே புரியும்" பதிலுக்கு அவளை சீண்டிவிட, பிரிவு துயரில் இருந்தவள் அவன் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவளின் கோபமும் இந்த அமைதியும் அவனுக்கு புதிது தான். ஆனால் அவளின் எண்ணம் எப்போதும் போல சொல்லாமலே புரிந்தது.
"ஹேமா ஒருநேரம் ரொம்ப பெரிய பொண்ணு மாதிரி பேசுற.. அடுத்த நேரம் குழந்தை மாதிரி முகத்தை தூக்கி வச்சுக்குற! அங்க போய் தனியா என்னதான் பண்ண போறியோ?"
"நீ ஓவரா பேசி ஸ்கோர் பண்ணாத. நான் பாத்துப்பேன். நீ இங்க என்ன பண்ணுவியோன்னு தான் கவலையா இருக்கு"
"ம்ம் ஆமா ஆமா நான் பச்ச புள்ள. நீ இல்லாம எனக்கு வேலை ஓடாது பாரு" சாப்பிட்டு கொண்டே அவன் சொல்ல, மீண்டும் அமைதியானாள்.
சிவா "சரி சரி! ரொம்ப யோசிக்காம நல்லபடியா போய்ட்டு வா. அடுத்து எப்போ வருவ?"
"அதை ஏன் பிளாக்கி கேட்குற? ரெண்டு மாசத்துக்கு கண்டிப்பா வரக் கூடாதாம் அம்மா ஆர்டர். கரெக்ட்டா அறுபத்தி ஒன்னாவது நாள் வந்துடுறேன். நீ கவலைபடாத!"
"நான் ஏன் கவலைபட போறேன்? நீ கண்டதையும் நினச்சு சாப்பிடாம இருக்க கூடாது. வேளைக்கு சாப்பிட்ரு. ஆமா எங்க தங்குவ? ஹாஸ்டலா? சாப்பாடு நல்லா இருக்குமா?"
தன்னையும் அறியாமல் அவளின்மேல் உள்ள அக்கறையை அவன் காட்ட, பெண்ணிற்கு புரிந்தாலும் இதை கிண்டல் செய்தால் மறுபடியும் அவன் ஒதுங்கிக் கொள்வான் என நினைத்து சிரித்த முகமாய் பேசினாள்.
"பிளாக்மேன் அப்பவே சொல்லணும் நினச்சேன்! நான் ஒன்னும் சென்னைக்கு புதுசு இல்ல. மறந்துடுச்சா?"
"அட ஆமால்ல! நான் பாட்டுக்கு உளறுறேன். அப்ப அங்க உங்க வீட்ல தனியாவா இருக்க போற?"
"ஆமா ஆமா! அதுலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் கிளம்புறேன். நீ என்னை மறந்துடாத" என்றவள் எழ, அவனும் எழுந்து தலையை மட்டும் ஆட்டினான்.
அவள் தலை மறையும் வரை அவன் அதே இடத்தில் நிற்க, அவளும் திரும்பி திரும்பி பார்த்தே சென்றாள்.
சுஜி அர்ஜுன் இருவரும் ஹேமாவை வழியனுப்பி வைக்க, இவ்வளவு நாள் இல்லாத பாரம் ஒன்று ஹேமாவுடன் ஒட்டிக் கொள்ள சென்னை நோக்கிய பயணம் ஆரம்பமானது.
அடுத்த நாள் காலை வீட்டிற்கு பேசிய ஹேமா, சிவாவிடம் ஏனோ பேச முடியும் என்று தோன்றாததால் காலை வணக்கம் மட்டும் குறுஞ்செய்தியாய் அனுப்ப, அவளின் அழைப்பை எதிர்பார்த்த சிவாவிற்கு ஏமாற்றம் தான்.
அர்ஜுனும் திருமணத்திற்கு எடுத்த விடுப்பு முடிந்து இன்று ஹாஸ்பிடல் செல்கிறான்.
அர்ஜுன் "சுஜி! உனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆக டூ வீக்ஸ் டைம் இருக்கு. நெக்ஸ்ட் வீக் நாம கேரளா போய்ட்டு வரலாம். வந்து நீ காலேஜ் போக சரியா இருக்கும்"
"இப்பவா?"
"ஆமா! ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன்ல?"
அவன் மீண்டும் சொல்ல, தயக்கத்துடன் நிற்கவும் "ஹேய் செவத்தம்மா! இது ஜஸ்ட் பிக்னிக் மாதிரி தான். ஜாலியா போய்ட்டு வரலாம்"
"ச்ச! ச்ச! நான் எதுவும் நினைக்கல அஜூ"
"அப்படியா? உன் முகத்தை பார்த்தால் அப்படி தெரிலேயே?"
"ப்ச்! உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான். கிளம்பியாச்சுல்ல.. வாங்க நான் போய் சாப்பாடு எடுத்து வைக்குறேன்"
"ஹ்ம்ம் சரிங்க மேடம்"
"அஜு! ஹேமாக்கு அந்த வீட்ல சமைக்கிறதுக்கு செல்வி அக்கா பொண்ண வர சொல்லி இருந்தேன். அவங்க வரலையாம். இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்குவா...!” என அர்ஜுன் அம்மா சொல்லிக் கொண்டிருக்க,
"அம்மா, காலையிலேயே ஹேமா எனக்கு போன் பண்ணினா. செல்வி அக்கா பொண்ணுக்கு உடம்பு சரி இல்லையாம். அதனால ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்க சொல்லிட்டேன். அவங்களுக்கு பதில் வேற ஆளையும் ஏற்பாடு பண்ணிட்டேன். சோ நோ ப்ராப்ளம் மா" பொறுப்பான அண்ணனாய் அர்ஜுன் பதில் சொல்ல,
சுஜிக்கு கூட ஆச்சரியம் தான். தனக்கு தெரியாமல் எப்போது பேசினான் என்று அவளுக்கு தெரியவில்லை. அவனின் பொறுப்புணர்வை இப்போதுதான் புரிந்து கொண்டு வருகிறாள்.
ஹேமாவிற்கு வந்த முதல்நாள் என்பதால் வேலை அதிகமாக இருந்தது. பள்ளியில் கையெழுத்து இட்டு தலைமையாசிரியரை பார்த்த பின்பே வகுப்பு செல்ல வேண்டும் என்பதால் அன்று காலை பொழுது பரபரப்பாகவே இருந்தது.
மதிய உணவு கூட பயிற்சியுடன் வேகமாக சென்றுவிட, ஐந்து மணிக்கு பின் வீட்டிற்கு வந்த பின்பே நிதானமாக உணர்ந்தாள்.
"ஹப்பா என்ன வேலை குடுக்குறாங்க! கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்ல. பிளாக்மேன்கிட்ட பேசாததும் ஏதோ மாதிரி இருக்கு" என நினைத்தவள், இரவு உணவை பிரட் ஜாம் உடன் முடித்துக் கொண்டு எட்டு மணிக்கு சிவாவிற்கு அழைத்தாள்.
"டீச்சரம்மா! நான் சொன்ன மாதிரியே அங்க போனதும் மாறிட்டீங்க போல. பிஸி ஆயிட்டிங்களா?" கிண்டல் செய்ய தான் நினைத்தான் ஆனால் குரலில் வருத்தமும் இருந்ததோ?.
"சாரி பாஸ்! ஃபர்ஸ்ட் டே இல்லையா! கொஞ்சம் பயம் பதட்டம்னு ஓடிட்டு இருந்தேன். அதான் பேசல. ஆனா உன்கிட்ட பேசினா தான் அந்த டே ஃபுல்ஃபில் ஆகுது பா. இவ்வளவு நேரம் இருந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் எங்க போச்சுன்னே தெரில"
"இப்படி உளறிட்டே இரு! சாப்டியா?"
"நீ இப்படி அக்கறையா ஒரேஒரு வார்த்தை கேட்கும் போது என் கண்ணெல்லாம் வேர்க்குது பிளாக்மேன்"
"கேட்டது குத்தமா! சாப்டியா இல்லையா?"
"ஆச்சு பிளாக்கி. மூணு பிரட் வித் ஜாம்"
"பிரட்டா? அதுதான் புடிக்குமா உனக்கு?"
"புடிக்கும்னு எல்லாம் இல்ல. புடிக்காதுன்னும் இல்ல. வேலை செய்யுற பொண்ணு வர்ல. எனக்கு தெரிஞ்சது இதுதான் அதான் அதையே சாப்பிட்டேன்"
"ஹ்ம்ம், ஏன் ஆறு மாசம் அங்க தான இருக்க போற? பழகிக்கோ. உனக்கு மட்டும் சமைக்குறதுக்கு எல்லாம் ஆள் வைக்கணுமா?"
"பிளாக்கி! ஐம் சோ டையர்டு பா. கொஞ்ச நாள் நல்லா சாப்டு சாப்டு தூங்கி எழுந்து பழகிட்டேனா! இப்ப நானே ஸ்கூல் போய்ட்டு நானே சமைக்குறது எல்லாம்... நான் பாவம் இல்லையா? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ சொல்லிக்குடு. நான் கத்துக்குறேன். டீல் ஓகே?"
"எங்க சுத்தினாலும் சரியா அங்க வந்துடுவியே! சரி உன் விருப்பம் எதுவோ அதையே பண்ணு"
"தேங்க் யூ! பிளாக்கி இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு தெரியுமா?.." என சொல்ல ஆரம்பித்தவள், கதைகதையாய் காலை முதல் மாலை வரை நடந்த அனைத்தயும் கூற, கொஞ்சமும் சளைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான் சிவா.
அவள் தனியாக இருப்பது இவனுக்கு பிடிக்கவில்லை. அதோடு தினமும் அருகில் இருந்து பேசியே இம்சை செய்பவளை அவனுமே தேட ஆரம்பித்து விட்டான்.
வயலில் வேலை செய்துவிட்டு ஆறு மணிக்கு வீட்டுக்கு வரும் சிவாவின் ஒரே பொழுதுபோக்கு சமையல் தான். தனக்கு மட்டும் தானே ஏன் சமைக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே மாட்டான்.
அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சமைத்து சாப்பிட்டு விடுவான். எட்டரை முதல் ஒன்பது வரை தான் அவனுக்கான நேரம், அதன்பின் அசதியில் தூங்கினால் காலையில் தான் எழுவான்.
இதோ முதல்முறை தூக்கத்தின் நேரம் மாறுபட்டு எட்டு மணியில் இருந்து ஒன்பதை தாண்டி பேசிக் கொண்டிருக்கிறான். தூக்கம் கண்களை சூழற்ற, பேசுபவளை நிறுத்த சொல்ல முடியவில்லை. அதை அவளே புரிந்து கொண்டாளோ?
"அச்சோ சாரி சாரி பா! நீ தான் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிடுவியே? நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். ஓகே பிளாக்கி நாம நாளைக்கு பேசலாம். நீ போய் தூங்கு. ஆமா நீ சாப்டியா?"
"இப்பவாச்சும் கேட்கணும்னு தோணிச்சே! செஞ்சு வச்சதெல்லாம் ஆறி போச்சு"
"அய்யயோ! சாரி.. லேட்டா கால் பண்ணினா நீ தூங்கிடுவியேன்னு தான் சீக்கிரம் கால் பண்ணினேன். நாளைக்கு நீயே பிரீ பண்ணிட்டு என்னை கூப்பிடு. இப்ப போய் சாப்பிடு"
"எப்படி தான் இப்படி பேசுறியோ! நீ பேசுறது எனக்கு மூச்சு வாங்குது"
"கிண்டலா? உன்னை நாளைக்கு பாத்துக்கிறேன். போ போ! பை குட் நைட்"
போனை வைத்தவன் மனமும் மூளையும் எப்போதும் போல அடித்துக் கொண்டது.
மூளை "உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா டா முட்டாள்"
மனம் "நீ சொல்லி நான் என்னடா கேட்பது என் வென்று"
நீங்க அடிச்சிக்கோங்க எனக்கு பசிக்குது. நான் சாப்ட்டு தூங்குறேன் என அவன் வேலையை தொடர்ந்தான் சிவா.
தொடரும்..