• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 11

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 11


ஹேமாவிற்கு வேலையில் சேர்ந்த நாள்முதல் வேலைப்பளு அதிகமாகவே இருந்தாலும் முதல் நாள் போல அவள் என்றுமே சிவாவிற்கு அழைக்க மறந்ததும் இல்லை, அழைக்காமல் இருந்ததுமில்லை.

காலை எழுந்ததுமே முதலில் அவனுக்கு அழைப்பு. சில மொக்கைகளைப் போட்டு, மொக்கை வாங்கிவிட்டு தான் பள்ளிக்கு கிளம்புவாள்.

எப்பொழுதும் இரவு சிவா சீக்கிரமே உறங்கி விடுவது தெரிந்த ஹேமா, சாப்பிட்டுவிட்டு அழைக்க சொன்னாலும் அவன் அழைக்க மறுத்து விடுவான்.

இதுநாள் வரை அவள் சென்னை சென்றபின் இவனாக ஒருநாள்கூட அழைப்பது கிடையாது. 'உனக்கு தான் வேற வேலை இல்லை, எனக்குமா இல்ல' என்று அவன் கிண்டலாகக் கூறினாலும் அவள் அழைப்பாள் என்பது அவனுக்கு உறுதி.

அந்த நம்பிக்கையிலோ என்னவோ இவன் இதுவரை அழைத்ததே இல்லை. அவளின் மனதையும் குழப்பவில்லை.

அர்ஜுன் ஹாஸ்பிடல் சென்றுவிட, சுஜிக்கும் நேரம் போகவே இல்லை. காலை 10 மணி 11 மணி வரை அத்தையுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு, டிவி பார்ப்பது பேசிக் கொண்டே பொழுதை கழிப்பது என இருப்பவள், பதினோரு மணிக்கு அவர் உறங்க சென்றுவிட சுஜி மேலே தனது அறைக்கு வந்து விடுவாள்

அவ்வபோது அர்ஜுன் போன் செய்து அவளிடம் பேசுவான். மதியம் வருவதற்கும் அவனுக்கு நேரம் இருக்காது அதனால் அங்கேயே சாப்பிட்டு விடுவான். இரவும் 9 மணிக்கு தான் வந்து சேர்வான். முதலில் இருந்த நெருக்கம் குறைந்தது போலவே சுஜி கவலை கொண்டாள்.

அவனின் வேலைப்பளு பற்றி தெரிந்தாலும் காலை 8 மணிக்கு செல்பவன் இரவு 9 மணிக்கு வந்து, தூங்கி எழுந்து மறுபடியும் செல்வது அவளுக்கு கவலையாகவே இருந்தது

ஆனால் உண்மையில் அர்ஜுன் அவ்வளவு நேரம் ஹாஸ்பிடலில் இருப்பதற்கான முக்கிய காரணம், அடுத்த வாரத்தில் இரண்டு நாள் எடுக்க இருந்த விடுமுறையை நான்கு நாட்களாக அவன் மாற்றி இருப்பதுதான்.

ஹாஸ்பிடல் நிர்வாகம் அனைத்தையும் அவன் பார்த்துவிட்டு, நான்கு நாட்கள் வெளியூர் செல்வதாக கூறி மற்ற மருத்துவர்களையும் அதற்குத் தயார் செய்து அதற்கேற்றார்போல நேரத்தையும் மாற்றிக் கொடுத்து, அதை சரிவர தொடர்வதற்கான கால அவகாசத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கவே காலையில் செல்பவன் வருவதற்கு இரவு அதிக நேரம் ஆகிவிடுகிறது.

சுஜியுடன் அதிக நேரத்தை செலவிடவே அவன் இந்த ஒரு வாரமும் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றுவர, சுஜியோ அர்ஜுன் நினைவிலேயே கவலை கொண்டாள்.

ரேகா "சுஜி! நாளைக்கு அமெரிக்காலேர்ந்து என்னோட அண்ணன் பையன் கார்த்திக் வர்றான்"

"கார்த்திக்கா? அவங்க தான் அமெரிக்கால செட்டில் ஆகி பல வருஷம் ஆச்சே மா? இப்ப என்ன திடிர்னு?" அர்ஜுன் கேட்க,

"காரணம் இல்லாமலா எங்க அண்ணி அவனை இங்க அனுப்பி வைக்குறாங்க? அமெரிக்கா கல்ச்சுர் எங்க அண்ணிக்கு புடிக்கல. கார்த்திக்கும் இந்தியா பொண்ணு தான் வேணும்னு சொல்லியிருக்கான். எங்க அண்ணிக்கு ஹேமா ஞாபகம் வந்து இருக்கு. இதுவும் நல்லது தான். இது நல்லபடியா முடிஞ்சா ஹேமாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும். நல்லபடியா அமெரிக்கால செட்டில் ஆயிடுவா. அதான் கொஞ்சநாள் கார்த்தி இங்க வந்து தங்கியிருக்கப் போறானாம்".

கேட்டதும் ஏனோ திக்கென்றது அர்ஜுனுக்கு. சுஜிக்கு சொல்லவே வேண்டாம். ஹேமா மட்டும் அண்ணனை விரும்பியிருந்தால் சுஜிக்கு இப்படி தோன்றியிருக்காதோ என்னவோ! சிவாவுக்கும் ஹேமாவின் மேல் ஒரு ஈர்ப்பு வந்திருப்பதை அறிந்த பின்பு இந்த செய்தி நிச்சயமாய் அவளுக்கு அதிர்ச்சி தான்.

"ஹேமா தான் சென்னைக்கு படிக்க போயிருக்கா இல்லம்மா! இப்ப வந்து என்ன செய்ய போறாராம்?" அர்ஜுன் கேட்க,

"கார்த்திக் ஒன்னும் ஹேமாவை பத்தி தெரிஞ்சுக்க வரல. நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்க வர்றான். என் அண்ணி நம்ம குடும்பம்னா எப்பவுமே சீப்பா தான் பார்ப்பாங்க. கார்த்திக் குழந்தையா இருக்கும்போது நம்ம வீட்ல கொஞ்சம் கஷ்டம். அவங்க வீட்ல நல்ல வசதி. இப்பவும் நாம அதே நிலைமையில இருக்கோமா இல்ல அவங்க அளவுக்கு உசந்து இருக்கோமானு தெரிஞ்சிக்க தான் கார்த்திக்கை அனுப்பி வைக்கிறாங்க"

"மா என்ன சொல்றீங்க நீங்க? நீங்க சொல்றபடி பார்த்தா அவங்க கேரக்டரே சரி இல்ல. எனக்கும் அவங்க எல்லாரையும் ஞாபகமே இல்லை. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் கார்த்திக் கூட விளையாடின ஞாபகம் வருது. ஆனா நம்மள சந்தேகப்பட்டு குடும்பத்தை பாக்க வர்றவங்களுக்கு எப்படிம்மா நம்ம ஹேமாவை கட்டிக்கொடுக்க முடியும்?"

"ஆமா அத்த! எதுக்கும் கொஞ்சநாள் இதைப்பற்றி பேச வேண்டாம்னு தோணுது"

அர்ஜுன் சுஜியும் மாறி மாறி சொல்ல, "சும்மா இருங்க ரெண்டு பேரும்! கார்த்திக் அமெரிக்காவுல தனியா பிசினஸ் பண்றான். வெளிநாட்டுல போய் தனியா பிசினஸ் பண்றது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா? நம்ம ஹேமாவுக்கு இதைவிட நல்ல இடம் கிடைக்காது. இப்ப நமக்கு என்ன குற? நீ டாக்டரு! அவ இதோ டீச்சர் டிரைனிங் முடிக்க போறா! கார்த்திக் வந்து பார்த்துட்டு, கண்டிப்பா ஹேமாவ பிடிச்சிருக்கு நம்ம குடும்பத்தை புடிச்சிருக்குன்னு தான் போய் சொல்லுவான். நீங்க தேவையில்லாம எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் சொல்றேன். புரியுதா?" என்று அதட்டி அவர் எழுந்து செல்லவும், சுஜி சோகமாக அர்ஜுன் முகத்தை பார்க்க, ஆறுதலாய் அவளைப் பார்த்தான் அவன்.

"ப்ச்! ஒரு வாரத்துல நிறைய மாறிடுச்சு அஜூ. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

அர்ஜுன் "என்ன சுஜி! இப்ப என்ன பண்லாம்? கார்த்திக்கு போன் பண்ணி வர வேண்டாம்னு சொல்லவா?"

"எங்க அண்ணா தான் ஹேமா வேண்டாம்னு உறுதியா இருக்கே"

"சுஜிமா! ஹேமா ட்ரெயினிங் முடியுற வரை அவளை யாரும் கட்டாயப்படுத்த போறது இல்ல டா. நீ ஏன் இவ்வளவு பயப்படுற? விடு பார்த்துக்கலாம். நாம எதுக்கு இருக்கோம். சிவா மாமா உனக்கு எவ்வளவு முக்கியமோ ஹேமா அவ்வளவு முக்கியம் எனக்கு. ஹேமா விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும்".

"ம்ம்ம்"

"என்ன ம்ம்ம்ம்?"

"ஏன் அஜூ, இப்பலாம் ரொம்ப பிஸியா இருக்கீங்க. என்கிட்ட பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை இல்ல?"

"ஹேய் செவத்தம்மா! என்ன என்னவெல்லாமோ பேசுற? உன்கிட்ட பேசக்கூட நேரம் இல்லாம நான் என்ன வேலை பார்க்க போறேன்? ஏன்டா இப்படி பேசுற?"

"எனக்கு ரொம்ப தனியா இருக்குற மாதிரி தோணுது அஜூ" அவன்மேல் சாய்ந்து கொண்டு அவள் சொல்ல,

"சுஜி அப்படியெல்லாம் பேசாத. உனக்கு ஸர்ப்ரைஸ் தரலாம்னு தான் உன்கிட்ட சொல்லல. சாரி டா. ரெண்டு நாள் கேரளா போலாம்னு சொன்னேனே அது வேண்டாம் ஊட்டிக்கு போங்கனு அப்பா சொன்னாங்க. சரி அப்ப 4 டேஸ் போய்ட்டு வரலாம்னு தான் ஹாஸ்பிடல் ஒர்க்க கொஞ்சம் அர்ஜென்ட் பண்ணினேன். பட் நீ இப்படி நினைப்பனு நான் எதிர்பார்க்கல டா. ஐம் சோ சாரி. நாளைக்கே ஊட்டிக்கு போலாம். ஓகேவா?"

"அப்போ கார்த்திக்?"

"அவன் என்ன என்னை பொண்ணு பார்க்கவா வர்றான்? இங்க தான இருக்க போறான். மெதுவா பேசிக்கலாம். நான் அப்பாகிட்டு சொல்லிட்டேன். அப்பா அம்மாவை சமாளிச்சுப்பாங்க. நாம நாளைக்கு கிளம்புறோம். மார்னிங் சிவா மாமா வீட்டுக்கு போய் சொல்லிட்டு வந்துடலாம்"

"ம்ம் சரிங்க"

"இப்பவாச்சும் சிரிச்சியே! குட் கேர்ள். லவ் யூ" ஸ்வீட் நத்திங்ஸ் அவர்களுக்குள் தொடர பேச்சு பேச்சாகவே நீண்டு கொண்டது.

ஹேமா சிவாவிடம் பள்ளியில் ஒரு மாணவியின் சேட்டை பற்றி சொல்லிக்கொண்டு இருக்க,

"ஹேமா! இப்ப எதுக்கு தெரியாத பொண்ணை பத்தி இவ்வளவு மொக்க போடுற?"
என்றான் சிவா.

'எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா? எதாவது ரொமான்சா பேசினா மட்டும் அப்டியே சாரு பேசி தள்ளிடுவாரு!' மனதுக்குள் நினைத்து கொண்டவள்,

"நான் பேசுறது மொக்க போடுற மாதிரி இருக்குல்ல உனக்கு?"

"உடனே அழுவுற மாதிரி நடிக்காத! பச்சையா தெரியுது"

"தெரிஞ்சிடுச்சா! ஹ்ம்ம் பரவால்ல. எவ்வளவு நாள் நானும் சமாளிக்குறது? பிளாக்கி எனக்கு உன்கிட்ட பேசிட்டே இருக்கணும்னு தோணுது.. ஆனால் நான் பாட்டுக்கு எதாவது சொன்னா.. உனக்கு வேற பேச்சே இல்லையானு கேட்ப! சரி இன்னைக்கு பொழுது எப்படி போச்சுன்னு சொல்லலாம்னு நினச்சா அதுவும் உனக்கு மொக்கயா இருக்கு. வேற என்ன தான் நான் பேச?"

"பசங்க அடங்கலைனா டீச்சர்கிட்ட சொல்லலாம், டீச்சரம்மாவே அடங்கலைனா யார்கிட்ட சொல்றது?"

"என்னையவே கலாய்க்கிற பிளாக்கி! ஆனால் பாரு! நீ என்னை கெஞ்ச விடுறதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை பழி வாங்கல..."

"யாரு கல்யாணத்துக்கு அப்புறம்? உன் கல்யாணத்துக்கு அப்புறமா? என் கல்யாணத்துக்கு அப்புறமா?"

"ம்ம்ம்ம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்?"

"அதுசரி! உன்ன மாத்த என்னால முடியாது. வேணும்னா பாரு. நீ படிச்சு முடிச்சு வரவும் உனக்கு ஒரு மாப்பிள்ளையை அத்தை ரெடியா வைக்க போறாங்க"

"பிளாக்கிஈஈஈ.." பல்லை கடித்துக் கொண்டு கோபத்தில் அவள் கத்த, வாய் திறக்காமல் சிரித்துக் கொண்டிருந்தான் சிவா.

"நீ ஆசையா பேசலைனாலும் பரவால்ல. இந்த மாதிரி அபத்தமா பேசாத. உயிருக்குள்ள குறுகுறுன்னு ஆகுது" குரலில் லேசாய் மாற்றம் தெரியவும், அவள் அழ தயாராய் இருப்பதை கண்டுகொண்ட சிவாவும் பேச்சை மாற்றினான்.

அவளின் ஒவ்வொரு செயலையும் எளிதாய் கண்டுகொள்ளும் அளவுக்கு அவளின் மீதான நேசம் வளர்ந்த பின்னும் எங்கே யாருக்காக மறைக்கிறான் எனவெல்லாம் ஹேமா யோசிக்கவில்லை. அவளின் எண்ணம் முழுதும் சிவ மந்திரமே..

ஹேமாவை தவிர ஹேமா திருமண விஷயத்தில் அனைவரும் இருவேறாய் நிற்க, எதையும் அறியாமல் அவள் மட்டும் தனியுலகில் இருந்தாள்.

நான் பிறக்குமுன்னே..
அட நீ பிறந்ததேன்?
நான் பிறக்கும்போது,
நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தானா!

உன்னைப் போலே ஆண்ணில்லையே!
நீயும் போனால் நான்னில்லையே!
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையே,
ஆம் நமக்குள் ஊடலில்லை.

கார்த்திக்! தெளிந்த நீரோடையாக இல்லாவிட்டாலும் சேரும் சகதியுமாய் இல்லாமல் ஹேமா வாழ்க்கை நடுநிலையாய் செல்லும் போது இவன் வருவதன் நோக்கம் தான் ஹேமா வாழ்வில் மாற்றம் கொண்டு வருமா?

ரேகாவின் எண்ணமும் அதுதானே! ஹேமா மனதை அறியாமல் ரேகாவே அவள் வாழ்வை மாற்றுவாரா?

விதி! நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்குமாமே? தெய்வம் வழியில் விதிதான் ஹேமா வாழ்வில் விளையாட இருக்கிறதோ???

நேசம் தொடரும்..
 
Top