• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 13

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 13

கார்த்திக் வழி கேட்க, அதற்கு மட்டும் வாயை திறந்தவள் வேறு எதுவும் பேசாததால் கார்த்திக் கூட அவளிடம் எதுவும் பேசவில்லை.

நேராக சிவா வீட்டு வாசலில் காரை நிறுத்த, அவனை உள்ளே அழைக்காமள் இறங்கி உள்ளே ஓடினாள் ஹேமா.

சுஜி சிவாவிற்கு கஞ்சி மட்டும் செய்து வைத்துவிட்டு சென்றிருந்ததால் அதை பருகிவிட்டு மாத்திரையுடன் அமர்ந்திருந்தான் சிவா.

ஹேமா இன்று வருவதாக சுஜி சொல்லிவிட்டு செல்ல, சிவா மனம் காய்ச்சலையும் தாண்டி ஹேமா வருகையை நினைத்துக் கொண்டிருந்தது.

அன்று ஏதோ கோபத்தில் அவளிடம் பேசாமல் வைத்த பின்னும், அதன் பின் அவளிடம் பேச தோன்றினாலும், சுஜியை பார்க்க ஹேமா வீட்டிற்கு சிவா சென்ற போது, ஹேமா திருமணம் செய்ய போவதாக சொல்லியே கார்த்திக்கை ரேகா அறிமுகப்படுத்த உள்ளுக்குள் நொறுங்கியவன் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

ஹேமாவிற்கு இது தெரியுமா தெரியாதா என்பதை எல்லாம் தாண்டி, ரேகா அவர்கள் முடிவில் உறுதியாய் இருப்பது போலவே இவனுக்கு தோன்றியதால் எப்போதும் போல ஒதுங்கி செல்வதாக நினைத்து ஒரு மாதமும் ஓடி ஒளிவதை போல போனை அணைத்து வைத்துவிட்டான்.

இப்போது காய்ச்சல் வந்தது கூட நல்லது தான். வீணாக அங்கு சென்று ஹேமா முகத்தில் விழிக்க வேண்டாம் என அவன் ஹேமாவை மட்டுமே இவ்வளவு நேரமும் நினைத்து மாத்திரையை போடாமல் அமர்ந்திருக்க, அவன் நினைவில் நின்றவள் எதிரில் வந்து நின்றாள்.

சிவா ஹேமா வீட்டிற்கு செல்லக் கூடாது என நினைத்தானே தவிர, அவளே இங்கு வருவாள் என்பதை மறந்திருந்தான். அதுவும் இவ்வளவு சீக்கிரமாய்.

"ஹேமா! வா எப்ப வந்த?" சாதாரணமாக கேட்பது போல அவன் பேசினாலும் அவன் பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.

ஹேமா வந்து சில நிமிடங்கள் ஆன பின்னும் சிவா எதோ யோசனையில் அமர்ந்திருக்க, அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

மேலும் சில நிமிடங்களுக்கு பின்னேயே அவன் சுயநிலை வர எதிரில் ஹேமா. ஹேமாவை சிவா வரவேற்ற நேரம் கார்த்திக்கும் உள்ளே நுழைந்தான்.

முன்பே இருவருக்கும் அறிமுகம் இருந்ததால் சிநேகமாய் சிவாவும் கார்த்திக்கும் புன்னகைக்க, அதில் இன்னும் கடுப்பான ஹேமா தான் வந்த கடுப்பில்,

"சிவா மாமா! இவரு தான் கார்த்திக் நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு" என்றாள்.

"ஹேமா?" ஒரே பெயரை ஒரே நேரத்தில் இருவரும் அழைக்க, சிவா முகத்தில் அதிர்ச்சி என்றால் கார்த்திக் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.

சிவா மாமா என்ற ஹேமாவின் அழைப்பே அவளின் கோபத்தின் அளவை சொன்னாலும் அடுத்த செய்தி அவள் கோபத்தின் உச்சம்.

நேரில் பார்த்தால் சண்டை போடுவாளா இல்லை அழுவாளா இல்லை திட்டுவாளா என அவன் நினைத்திருக்க, இதோ அவள் வாயால் கேட்டுவிட்டான் கேட்க கூடாத, கேட்க முடியாத செய்தியை.

முயன்று தன்னை சரிசெய்தவன், "உட்காருங்க, ஒரு நிமிஷம்!" என்றுவிட்டு காபி எடுக்க உள்ளே செல்ல, கார்த்திக் எதோ ஹேமாவிடம் பேச முயல,

"எனக்கு தலைவலியா இருக்கு. ஒரு டேப்லெட் வாங்கிட்டு வர முடியுமா?" என கேட்டதும் சரி வந்து பேசிக் கொள்ளலாம் என கார்த்திக்கும் வெளியில் சென்றான்.

"என்ன மாமா இப்ப சந்தோசமா?" காபியுடன் வந்தவனிடம் கேட்க,

மாமானு எல்லாம் கூப்பிட மாட்டேன், அது சுஜி அண்ணனை குறிக்கும் என்றவள் இன்று வார்த்தைக்கு வார்த்தை மாமா என்றாள்.

"கார்த்திக் எங்க ஹேமா?"

"ஏன்? என்னை கட்டிக்க போறவன்கிட்ட பேச அவ்வளவு ஆசையா?"

"ஹேமா! நீ கோவத்துல சொல்றியா இல்ல நிஜமாவே...."

கேட்பது சரியா தவறா தெரியவில்லை. ஆனால் கேட்காமல் விடக்கூடிய விஷயமில்லையே!

"முட்டாள் முட்டாள்! உன்ன போய் சுத்தி சுத்தி வந்தேன் பாரு என்ன சொல்லணும். அமெரிக்கால இருந்து ஒருத்தன் வந்தா பல்ல காட்டிட்டு அவன் பின்னாடி போயிடுவேன்னு நினைச்சுட்ட இல்ல?"

"இல்ல இல்ல ஹேமா! அத்தை உன் நல்லதுக்கு.."

"பேசாத! அதான் இவ்வளவு நாள் பேசாம அவாய்ட் பண்ணியே! போதும் இனி பேசுன..."

அவள் கோபத்தில் பேசிக்கொண்டே செல்ல, கார்த்திக் எங்கே சென்றான் எப்போது வருவான் என தெரியாததால் சிவாவும் பேசாமல் நின்றவன் தெளிவாக பேசுகிறேன் என எண்ணி ஹேமாவின் முழு கோபத்தையும் பார்த்தான்.

"சும்மா சும்மா கோபப்படாத ஹேமா! நான் எப்பாவது உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னேனா? கார்த்திக் தான் உனக்கு சரி! எல்லாருக்கும் நல்லதும் அதுதான்"

இதுதான் கடைசியாக அவன் ஹேமாவிடம் பேசியது.

பேசிவிட்டு திரும்பி அவளை பார்க்க, இவ்வளவு தானா நீ என்ற பார்வையுடன் அவனை பார்த்தவள், "உனக்கு என்னை புடிக்குமா இல்லையானு எனக்கும் தெரியும் உன் மனசுக்கும் தெரியும். நீ சொல்லி எவனையும் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இல்ல. நீயா வந்து என்கிட்ட கெஞ்சுற வர நான் உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன். அதுக்காக எவன் கூடனாலும் போய்டுவேன்னு நினைக்காத" என்றவளை, அவளின் கடைசி வார்த்தைகளில்

"ஏய் என்ன பேசுற?" என்று சொல்ல வந்தவனை பேச விடாமல் கைநீட்டி தடுத்துவிட்டு எரிக்கும் பார்வையுடன் வெளியேறினாள். உடல் சோர்வுடன் மனதும் சோர்ந்து விட அப்படியே அமர்ந்து விட்டான் சிவா.

கார்த்திக் வாசலில் நிற்பவளை கேள்வியாய் பார்க்க, போலாம் என சொல்லி காரில் எறவும், அவனும் சிறு தோள் குலுக்கலோடு காரை கிளப்பினான்.

"ம்மா நான் ஈவ்னிங் சென்னை போறேன்" ஹேமா சொல்லவும் மீண்டும் வீட்டில் பூகம்பம் தயாராக, "அத்தை! கார்ல வரும்போது ஹேமாக்கு போன் வந்துச்சு. இமிடிய்யேட்டா வர சொல்றாங்கலாம்" கார்த்திக் ஹேமாவிற்கு பரிந்துரைக்க, அதன்பின் ஹேமா முடிவு எளிதானது.

அன்று மாலையே யார் சொல்லியும் கேட்காமல் சென்னை கிளம்பி சென்று விட்டாள்.

"சுஜி! நீ மாம்ஸ்கிட்ட பேசி பாரு" அர்ஜுன், ஹேமா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாள் என தெரியாமல் சுஜியிடம் சொல்ல, அவளும் அடுத்த நாள் அண்ணனை பார்க்க சென்றாள்.

சுஜி "அண்ணா! ஹேமா என்ன சொன்னா?"

சிவா "எப்பவும் சொல்றது தான் டா. ஏன் கேட்குற?"

"இல்ல! ஹேமா பிடிவாதம் தெரியும். ஆனால் இவ்வளவு கோபப்படுவானு எதிர்பார்க்கல"

"ஏன்? என்ன பண்ணினா?" கலக்கத்துடன் அவன் கேட்க,

"எவ்வளவு சொல்லியும் கேட்காம நேத்தே கிளம்பி சென்னை போய்ட்டா" சுஜி சொல்ல, தலையில் கைவைத்து கொண்டான் சிவா.

"என்ன தான் ண்ணா ஆச்சு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் நினைச்சாலே பயமா இருக்கு"

"என்ன சொல்றதுன்னே தெரில சுஜி! இதுக்கு தான் நான் முதல்லயே வேணாம்னு சொன்னேன். இப்ப எனக்கும் தான் குற்ற உணர்ச்சியா இருக்கு" என்றவன் கண்மூடி அமர்ந்துவிட, சுஜிக்கு அதற்குமேல் எப்படி கேட்பது என தெரியவில்லை.

அர்ஜுன் வீடு வந்ததும் சுஜி அண்ணன் கூறியதை சொல்ல, இப்போது அர்ஜுனுக்குமே என்ன செய்வது என்ற யோசனை தான்.

"கார்த்திக்கு எதாவது தெரிஞ்சிருக்குமா அஜூ?"

"இல்ல சுஜிமா! அப்படி இருக்க வாய்ப்பில்ல. கார்த்திக் எப்பவும் போல தான் சுத்தி வர்றான். ஹேமா அவன்கிட்ட எதுவும் சொல்லியிருக்க மாட்டா. ஆனா ஹேமாக்கும் சிவா மாமாக்கும் பிரச்சனைனா அது கார்த்திக் வச்சு தான் இருக்கும். மேபீ மாமா கார்த்திக்கை கட்டிக்க சொல்லி ஹேமாகிட்ட சொல்லியிருக்கலாம். அதனால அவளுக்கு கோபம் வந்திருக்கலாம்" கேள்வியே தெரியாமல் அர்ஜுன் பாதி பதிலை கண்டுபிடித்து சொல்ல, இன்னும் முகம் வாடி தான் இருந்தாள் சுஜி.

"என்னடா, உனக்கு என்ன ஆச்சு?" கட்டிலில் வாகாய் அமர்ந்து கொண்டு அவளை தன்மேல் சாய்த்து அவன் கேட்க,

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அஜூ. நான் காலேஜ் சேராமலே இருந்திருக்கலாம். இப்ப அத்தை கூட என்மேல அப்பப்ப கோபப்படுறாங்க"

"அம்மா கோபம் எல்லாம் ரொம்ப நேரம் இருக்காது சுஜி. அதுக்காக காலேஜ்ஜ எல்லாம் இழுக்க வேண்டாம். புரியுதா"

"உங்களுக்கு தான் புரியல அஜூ! நான் படிக்கணும் அவ்வளவு தானே? நான் இந்த வருஷம் மட்டும் காலேஜ் போறேன். அடுத்து நான் கர்ரஸ்லேயே கோர்ஸ் பண்றேன். ப்ளீஸ் அஜூ. அத்தை சொல்றதும் சரிதானே? எல்லாருக்கும் இருக்கிற ஆசை தானே?"

"ஹேய் எனக்கு மட்டும் என்ன ஆசையா? இப்படி நீ கையில இருந்தும் சும்மா இருக்க? உனக்கு படிக்க விருப்பம்னு தான் நானும் வெயிட் பன்னினேன். இப்ப என்ன நீ சொல்ற மாதிரியே பண்ணிடலாம். இந்த ஒரு வருஷம் எங்கள விட்டுடுங்கமா அடுத்த வருஷம் உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன்னு நானே அம்மாகிட்ட சொல்லிடுறேன். ஓகேவா?" கிண்டலும் சந்தோசமுமாய் அர்ஜுன் சொல்ல, வெட்கத்துடன் தலையசைத்தாள் சுஜி.

"அப்ப ஹேமா? எனக்கு என்னவோ ஹேமா அண்ணாவை தவிர யாரையும் கட்டிக்கும்னு தோணல"

"ஹ்ம்ம் எனக்கும் புரியுது. அதுவும் இப்படி மாமாக்காக கோச்சிட்டு ஒரே நாள்ல சென்னை போயிருக்கான்னா இதுக்கு மேல நாம யோசிக்க வேண்டியதே இல்ல. இந்த கார்த்திக்கை மட்டும் சரி கட்டணும். அம்மாவை அப்புறமா பேசி புரிய வச்சிடலாம்"

"ஹ்ம்ம்.. ஆனால் இன்னும் நீங்க ஹேமா ட்ரைனிங் முடியட்டும்னு வெயிட் பண்ணாம எதாவது செய்யுங்க. இல்லைனா ஹேமா எதாவது பண்ணிட போறா. உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே"

"யாரு அவளா! ம்ம் அதுவும் சரிதான். இப்ப அவங்க பிரச்சனையை சால்வ் பண்ணினா தான் நமக்கு அப்புறம் ஸ்பேஸ் இருக்கும். அதுவும் மாமா மாதிரி ஒருத்தர் என் தங்கைக்கு ஹஸ்பண்ட்னா எனக்கும் ஹாப்பி தான். இவங்க ப்ரோப்லேம் சீக்ரம் சால்வ் பண்ணினா தான் நாம ஜாலியா இருக்கலாம்"

"அஜூ! உங்களை...." அவன் கைக்குள் இருந்தே அவன் நெஞ்சில் குத்த, லாவகமாக தடுத்து தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

"அர்ஜுன்! ஹேமாவோட போன் நம்பர் சொல்லு" இரவு உணவிற்கு பின் உரிமையாய் கேட்டான் கார்த்திக்.

"ஹேமா நம்பரா?" கொடுக்கவா என அர்ஜுன் யோசிக்கும் முன் ரேகா அவருடைய மொபைலில் இருந்து எடுத்து கொடுத்தார்.

நேரமும் காலமும் காத்திருப்பது இல்லை. அதன் போக்கில் செல்ல நான்கு மாதம் ஆகியும் ஹேமா வீட்டிற்கு வந்த பாடில்லை. ஏற்கனவே தான்தான் அவள் மனதை கலைத்தது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த சிவாவிற்கு இப்போது ஹேமா தன்னை மட்டும் அல்லாது குடும்பத்தை விட்டு பிரியவும் தானே காரணம் என்று வேறு தோன்றிட அவன் அவனாகவே இல்லை.

கார்த்திக் மட்டும்தான் எதற்கு வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் எப்பொழுதும் போல ஊரை சுற்றி வந்தான்.

முழுதாய் ஆறு மாத முடிவில் குற்றுயிரும் கொலை உயிருமாய் கையில் கிடைத்த ஹேமாவை பார்த்து பாதி இறந்து தான் போனான் சிவா.

நேசம் தொடரும்..
 
Top