• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 2

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 2

"அத்தை, நான் கிளம்புறேன். சுஜியைப் பாத்துக்கோங்க"
சிவா காலையில் எழுந்ததும் ரேகாவிடம் வந்து நின்றான் பையுடன்.

அர்ஜுன், சுஜி இன்னும் எழுந்திருக்கவில்லை. ஹேமா டைனிங் டேபிள் அருகே அமர்ந்து காபி அருந்த, ராஜ் குமார் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

"என்ன சிவா நீ? நேத்து அவ்வளவு சொல்லியும் காலையில பெட்டியை ரெடி பண்ணிட்டியா? பக்கத்து தெருல இருக்க வீட்டுக்கு போறதுக்கு இங்க இருந்தா என்னவாம் உனக்கு? எனக்கு நீயும் அர்ஜுனும் ஒன்னு தான்" என்றபடி அவன் கையில் காபியை திணித்தார் ரேகா.

"அதெல்லாம் இல்ல அத்தை! வயல்ல பூச்சி மருந்து அடிக்கணும். கல்யாண வேலையில ஒரு வாரமா தோட்டத்து பக்கமே போகல. இங்க தான இருக்க போறோம் வந்து போய்க்கிறேன்" அவன் சொல்ல,

'ஆமா ஆமா! இங்கயே இருந்தா பிளாக்மேன் கூட என்னால அடிக்கடி பேச முடியாது. அவங்க இடத்துக்கே போய் பேசினா தான் கிக்கா இருக்கும்' ஹேமா வாய்க்குள் முணுமுணுக்க, அது கேட்டதுபோல அவளை முறைத்தான் சிவா.

"ரேகா அவன் என்ன சின்ன புள்ளையா? தனி ஆளா தன் தங்கச்சிய வளத்துருக்கான். நாளபின்ன அவனை நம்பி வர்ற பொண்ணுக்கு அவனும் சம்பாதிக்கனும் இல்ல? உனக்கு பாக்கணும்னா அவனை கூப்பிட்டா வந்திட போறான். இனி மதியம் சாப்பாடு நம்ம வீட்ல இருந்து குடுத்து அனுப்பு" எளிதாய் சிவாவிற்கும் ரேகாவிற்கும் ஒரு வழியை கூறினார் ராஜ்குமார்.

சம்மதமாக சிரிப்புடன் சிவாவும் தலையசைக்க, அர்ஜுன் சுஜியுடன் மாடியிலிருந்து இறங்கினான்.

"என்ன மாம்ஸ்! காலையிலே பெட்டியோட எங்க கிளம்பிட்டீங்க?" அர்ஜுன்கேட்க,

"மாப்பிள்ளை வீட்ல உன் மாமா தங்கமாட்டாராம். அதான் விடிஞ்சதும் ரெடியா வந்து நிக்குறாரு" ரேகா குறையாய் சொல்ல, சிவாவும் சுஜியும் சிரித்தனர்.

ரேகா "ஏண்டி நீயாவது உன் அண்ணனை இருக்க சொல்லுவனு பார்த்தால் சிரிக்குற?"

சுஜி "அதில்ல அத்தை, அண்ணாக்கு எங்களோட அந்த வீட்டை தவிர எங்க படுத்தாலும் தூக்கமே வராது. அந்த வீடுதான் அம்மா மடினு சொல்லும். நேத்து நைட் கூட தூங்கியிருக்க மாட்டாங்க. இல்லண்ணா?" என சொல்லி சிரிக்க, சிவாவும் ஆமாம் எனும் விதமாய் தலையை சொறிந்தான்.

“அடிப்பாவி நானும் தான் தூங்கல. கும்பகர்ணனுக்கு தங்கச்சி மாதிரி நீ தூங்கிட்டு அண்ணனுக்கு சப்போர்ட்டா? இரு இன்னிக்கு நைட் உன்னை பாத்துக்குறேன்" அர்ஜுன் சுஜி காதுக்குள் சொல்ல, அவள் திருட்டு முழியை ஓரக் கண்ணால் ரசித்தான் அர்ஜுன்.

அதைக் கண்டும் காணாதது போல சிவா "சரி மாப்ள! நாளைக்கு நம்ம வீட்ல தான் விருந்து. காலையில வந்துடுங்க" என சொல்ல,

"ஹெல்லோ பாஸ்! அண்ணி இங்க வந்துட்டாங்க இல்ல! அப்புறம் அங்க யாரு சமைக்குறது?" எனக் கேட்டாள் ஹேமா.

"அண்ணியா?" அர்ஜுன் ஆச்சர்யமாய் கேட்க,

"ஆமாஆமா! நான் ஒரு வயசு பெரிய பொண்ணுனாலும் அண்ணனோட பொண்டாட்டிய அண்ணினு தான் சொல்லணுமாம். அம்மாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்" என்றதும்

‘நேற்று நாத்தனார் கொடுமை பற்றி பேசியவள் நீ தானே' என நக்கல் பார்வை பார்த்தான் சிவா. அது புரிந்தது போல முகத்தை கோணி திருப்பி கொண்டாள் ஹேமா.

"ஏண்டி அது மட்டும் தான் ஞாபகம் இருக்கா? சிவாவை மாமானு தான் கூப்பிடனும்னு சொன்னேனே அது மறந்து போச்சா? அஜூ மாதிரி மரியாதையா நடந்துக்கோ" என ரேகா அதட்ட,

'அய்யயோ! அத்தை அவளுக்கு சலங்கை கட்டி விடுறாங்களே' என நினைத்தது சிவாவே தான்.

"ம்மா! அதெல்லாம் முடியாது. நீங்க ஓல்ட்லேடீ எப்படினாலும் பேச சொல்லுவீங்க.. சும்மா எல்லாரையும் மாமா மச்சான்னு எல்லாம் என்னால பேச முடியாது" என ஹேமா சொல்ல, அவள் வீட்டினர் அனைவரும் அவளை அதிர்ச்சியாய் பார்க்க, சிவா மட்டும் ஆராயும் பார்வை பார்த்தான்.

"நேத்து நம்மளோட பேச்சை கேட்டு மனச மாத்திகிட்டா போலயே" என நினைத்துக் கொண்டான்.

"ஹேமா! என்ன பேச்சு பேசுற? அவங்க சுஜியோட அண்ணா! மரியாதை குடுத்துதான் ஆகணும். எப்ப இருந்து இப்படி பேசி பழகின? ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட் திஸ் பிரம் யூ" அர்ஜுன் காச்மூச் என கத்த,

"ப்ச் அண்ணா! நான் என்ன மரியாதை குறைவா பேசினேன். சுஜி அண்ணனுக்கு எப்பவுமே மரியாதை உண்டு. பாஸ் நான் சொன்னதுல உங்களுக்கு ஏதாவது வருத்தமா?" அண்ணனிடம் ஆரம்பித்து சிவாவிடம் முடிக்க,

தன்னால் பிரச்சனை வருவதை விரும்பாமல் "அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்ள. விடுங்க சின்ன பொண்ணு தானே!" என அர்ஜுனிடம் சொல்லி விட்டு அனைவரிடமும் விடைபெற்றான். ஆனாலும் அவள் மனதை மாற்றிக் கொண்டிருப்பாள் என்று மட்டும் அவனால் நம்ப முடியவில்லை.

சுஜிக்கு ஏற்கனவே ஹேமாவின் மேல் சந்தேகம் உண்டு. அவள் சிவாவிடம் பேசும்போது பலமுறை அண்ணனை ஹேமா விரும்புகிறாளோ என தோன்றும். ஆனாலும் அண்ணனை பற்றியும் ஹேமாவின் வசதி பற்றியும் அறிந்த சுஜி இதெல்லாம் சரி வராது என்றபோது ஊக்குவிக்க கூடாது என கண்டும் காணாமல் விட்டுவிடுவாள்.

இன்று ஹேமா பேசியது அவளுக்கும் அதிர்ச்சி தான். ஆனால் ஹேமா எப்போதுமே விளையாட்டு தனமாய் இருப்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"ஹேமு! அண்ணாக்கு சமைக்க தெரியும். இன்னொரு விஷயம் தெரியுமா? நான் ஸ்கூல் முடிச்சு ஒரு வருஷம் சும்மா இருந்தாலும் அண்ணா என்னை சமைக்கவிட்டதே இல்ல. காலையிலே சமைச்சு வச்சுட்டு தான் தோட்டத்துக்கு போகும்" என சுஜி சொல்ல,

"ஹப்பா! அப்ப நமக்கும் நல்லது தான்" என நினைத்துக் கொண்டாள் நம் நல்லவள் ஹேமா.

வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் சிவா மனதில் காலையில் ஹேமா பேசியதுதான் ஓடிக் கொண்டிருந்தது.

அவன் மனதின் ஒரு மூலையில் அவளின் வார்த்தை காயத்தை ஏற்படுத்தி இருந்ததை அவன் உணரவில்லை. ஏன் அவ்வாறு கூறினாள் என்று மட்டுமே யோசித்து கொண்டிருந்தான்.

"ஹாய் பிளாக்மேன்!" தனக்கு பின்னால் கேட்ட குரலில் உடனே அவன் திரும்பி பார்க்க, அவன் எண்ணத்தின் நாயகி கையில் சாப்பாடுடன் நின்றாள்.

அவளிடம் கோபம் கொள்ள உரிமை இல்லாத போதும் அவனுக்கு கோபம் வந்ததை மறைத்து "என்ன?" என சாதாரணமாக கேட்க, சாப்பாட்டை தூக்கிக் காட்டினாள்.

"அத்தை வேலைக்காரம்மாகிட்ட குடுத்து விடுறதா தான சொன்னாங்க?"

"இப்ப நான் கொண்டு வந்ததுல நீங்க என்ன குறைஞ்சு போயிட்டீங்க? இன்னும் ஒருவாரம் தான் அப்புறம் நான் ட்ரெயினிங்க்கு சென்னை போய்டுவேன். நானே அம்மாவை தாஜா பண்ணி சாப்பாட்டை பிடுங்கிட்டு வந்துருக்கேன்.. இதுல கேள்வி வேற" என சொல்ல, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டான்.

"நான் சாப்பிட்டுக்குறேன் நீ போ!" சொல்லிவிட்டு அதை வாங்க கை நீட்ட, கொடுக்காமல் அவளே அங்கிருந்த நிழலில் அமர்ந்து அனைத்தயும் பிரித்தாள்.

"ஏகப்பட்ட கேள்வி கேட்குறாங்க பாஸ் அம்மா. சாப்பாட்டை நான் கொண்டு போறேன்னு சொன்னதுக்கு காலையில அந்த பேச்சு பேசின! இப்ப ஏன் நீ கொண்டு போனும்? அந்த பையன் உன்னை பார்த்தால் சாப்பிடாது போனு சொல்றாங்க. லவ் பண்ற பையனை பார்க்க ஃபிரீயா வர முடியுதா இந்த நாட்டுல? ச்ச! என்ன உலகமோ பாஸ். பேசாமல் நாம கல்யாணத்துக்கு அப்புறமா கைலாசா போய்டலாம்" அவள்பாட்டுக்கு பேசிக் கொண்டே தட்டில் சாதம் போட்டு அவனுக்கு நீட்ட, இப்படி சின்ன பிள்ளை போல பேசுபவளை என்னதான் செய்வது என தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

'பிளாக்மேன் சைட் மட்டும் அடிங்க ஆனால் க்ரீன் சிக்னல் கொடுக்க மாட்டீங்க? ஹ்ம்ம் எத்தனை நாள்னு நானும் பாக்குறேன்' என நினைத்தவள் அவன் வலது கையில் கிள்ளி விட "ஆ" என்ற அலறலுடன் உணர்வுக்கு வந்தான்.

"என்ன லுக்கு? எப்படி இவளை கழட்டி விடுறதுன்னா? அதெல்லாம் அப்புறமா யோசிச்சிக்கலாம். சாப்பிடு" என தட்டை நீட்ட, சிரிப்புடனும் முறைப்புடனும் வாங்கிக் கொண்டான்.

கேட்க வேண்டாம் என நினைத்தாலும் அவளாக சொல்வது போல இல்லை என்பது தெரிந்ததால் சாப்பிட்டு கொண்டே கேட்டுவிட்டான்.

"காலையில ஏன் அப்படி சொன்ன?"

"எப்படி சொன்னேன்?"

"ஏய் நடிக்காத! மாமானு கூப்பிட சொன்னா ரொம்ப ஓவரா பேசுனியே?"

"அய்யயோ பிளாக்மேன்! அது உங்களுக்கு நிஜமாவே கோபமா?"

"நான் ஏன் கோவப்படனும்? ஏன் அப்படி சொன்னன்னு கேட்டேன்" கோபத்தை மறைத்து தான் கேட்டான்.

"அது ஒன்னும் இல்லை பா! உன்னை நான் சுஜியோட அண்ணனா பார்த்தா அவங்க சொல்ற மாதிரி கூப்பிடலாம். நான் தான் எப்பவோ உன்னை ப்ரோமோட் பண்ணி எனக்கான ஒருத்தர் நீ தான்னு முடிவு பண்ணிட்டேனே! அப்புறம் அவங்க சொல்ற மாதிரி கூப்டு அதுவே பின்னால பிரச்சனை ஆச்சுன்னா? அதான் அப்படி சொன்னேன். நான் என்னோட பிளாக்மேன எப்படி வேணா கூப்பிடுவேன். அதை யாரும் முடிவு பண்ணக் கூடாது" தீவிரமாய் அவள் சொல்ல, உள்ளுக்குள் உருகிப் போனாலும் சாதாரண முகத்துடன் தான் இருந்தான் சிவா.

ஹேமாவும் அவனிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை என்பது போல, பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அவள் காதலுக்கு பதிலை விளையாட்டாய் அடிக்கடி கேட்பாளே தவிர, அவனை வற்புறுத்தியதில்லை. எந்த விதத்திலும் அவனை ஈர்க்க எதுவும் செய்ததில்லை. மாநிறத்தில் அவளிருக்க, இவன் கருப்பு என்பதாலே அவள் பிளாக்மேன் என அழைப்பாள். அதுவும் கிண்டல் இல்லாமல் அன்பாய் தான்.

அதன்பின் அமைதியாய் அவன் சாப்பிட்டு எழுந்து கொள்ள அவளும் பாத்திரங்களுடன் எழுந்து கொண்டாள்.

"ஹேமா.. நீ ஏன் இப்படி பண்ற?"

திடிர் கேள்வியில் என்ன என புரியாமல் அவள் விழிக்க, "இல்ல! அதான் என்கிட்ட பதில் கேட்பியே. அது தான் ஏன் உனக்கு என்னை புடிச்சுது? எந்த விதத்துலயும் நமக்கு பொருத்தம் இல்ல. உன் கலர், அந்தஸ்து, படிப்பு. வேண்டாம் ஹேமா.. நான் இப்படியே இருந்துடுறேன். இனி என்னை பார்க்க வராதயேன்" மனம் கொஞ்சம் கொஞ்சமாய் சாய்வதை உணர்ந்தவனுக்கு அதை மாற்ற பிடிக்காமல், அவளை சந்திப்பதை தடுக்க நினைத்தான்.

"இது போதி மரமா பாஸ்?" வழக்கமான அவளின் புரியாத கேள்வியில் அவன் முறைக்க,

"இந்த மரத்தடில உங்க ஞானோதயம் நல்லாத் தான் இருக்கு.. பட் விதி சரியில்ல பாஸ்.. இன்னும் ஒரு வாரத்துக்கு நான் தான் சாப்பாடு கொண்டு வருவேன். அப்புறம் ஒரு ஆறு மாசம் நீங்க பிரீ தான். நான் ட்ரெயினிங் போய்டுவேன். பேசாமல் அந்த கேப்ல எவளையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோங்க" போய்க் கொண்டே அவள் சொல்ல,

உன்னிடம் போய் அறிவுரை சொன்னேனே என்பது போல முக பாவனையோடு நின்றான் சிவா.

ஆறு மாதத்தில் நடக்க போவது முன்பே அறிய முடிந்தால் எல்லாவற்றையும் தவிர்த்து சிவா காதலை உணர்ந்து அவளிடம் சொல்லியிருப்பானோ?

நேசம் தொடரும்..
 
Top