• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 3

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 3

"சுஜி! சுஜி!... "

ரேகா "ஏன்டா வந்ததும் வராததுமா அவளை ஏலம் போடுற?"

அர்ஜுன் "ம்மா! நாங்க படத்துக்கு போய்ட்டு வரட்டுமா?"

"நீ கூப்பிட்டதயும் இப்ப கேக்கிறதையும் வச்சு பார்த்தால் டிக்கெட்டோட தான் வந்திருப்ப.. சரியா? ஆமா நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு. அவளோட இருக்காம எங்கடா போய்ட்டு வர்ற?"

"ப்ச் ம்மா! சீரியஸ் கேஸ்னு கால் பண்ணினாங்க அப்புறம் எப்படி போகாம இருக்குறது? அதான் வந்துட்டேன்ல! சுஜி எங்க?"

"உன் ரூம்ல தான் இருக்கா. சரி டிக்கெட் போட்டியா? போடலைனா நாளைக்கு போடு. கல்யாணம் ஆகி மூணு நாளுக்கு முன்ன வெளில சேர்ந்து போக வேண்டாம்".

"இன்னுமா இதெல்லாம் பாக்குறீங்க? ஹ்ம்ம் எனிவே இன்னும் டிக்கெட் புக் பண்ல மா. சுஜிகிட்ட கேட்டுட்டு புக் பண்லாம்னு இருந்தேன். ஓகே நாளைக்கே போறோம்" என்றவன் இரண்டிரண்டு படிகளாக தாவி மேலே தன் அறைக்கு சென்றான்.

"சுஜி என்ன பண்ற?" என்றவாறே கதவை திறக்க, அவள் துணிகளை பெட்டியிலிருந்து கபோர்டிற்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.

சுஜி "சும்மா தானே இருக்கேன். அதான் எல்லாத்தையும் எடுத்து வைக்குறேன்"

"ஹ்ம்ம். சுஜி தியேட்டர் போலாமா? உனக்கு புடிக்குமா? வீட்லயே இருந்தா போரடிக்கும்"

"நிஜமா வா’ங்க?" கண்களை விரித்து ஆச்சர்யத்தோடும் ஆசையோடும் அவள் கேட்க,

"ஏன்? நிஜமா தா'ங்க கேக்குறேன்" என்றான் அவளை போலவே.

"ம்ம் போலாம்'ங்க. நான் இதுவரை போனதே இல்ல" முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

"தியேட்டர் போனதே இல்லையா? உனக்கு பிடிக்கும்னா போய் பாத்திருக்கலாம்ல?"

"அண்ணாக்கு படம் பாக்குறதுல பெருசா இன்ட்ரெஸ்ட் கிடையாது. அதனால கூட்டிட்டு போகவும் மாட்டாங்க. நானும் கேட்டது இல்ல. ஆனா டிவில எல்லா படமும் பார்ப்பேன்" குழந்தை போல மகிழ்ச்சியுடன் கூறினாள் சுஜி.

"சரி இனிமேல் எந்த படம் பாக்கணும்னாலும் என்கிட்ட சொல்லு. நாம போலாம் ஓகே" என்று அவன் கேட்க உடனே சரி என தலையாட்டினாள்.

"அப்றம் சுஜி.. இந்த நீங்க வாங்க போங்கன்றத எல்லாம் விட்டுட்டு என்னை பேர் சொல்லியே கூப்பிடேன். ஏன் யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற?"

"உங்கள பேர் சொல்லி கூப்புட்றதா?" ஏதோ தப்பு பண்ண சொல்லியது போல அவள் வேகமாக கேட்க, சிரித்து விட்டான் அர்ஜுன்.

"ஏன் பேர் சொல்லி கூப்பிட்டா என்னவாம்?"

"வேணாம் வேணாம் அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டும்"

"ஏன் அதெல்லாம் நான் பாத்துக்குறேன். சரி அப்ப நாம ரெண்டு பேர் மட்டும் இருக்கும் போதாவது என்னை பேர் சொல்லி கூப்பிடு ப்ளீஸ்"

"என்னங்க நீங்க! ஏன் இப்படி என்கிட்ட கெஞ்சுறிங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு"

"ரொம்ப தள்ளி வச்ச மாதிரி பீல் ஆகுது டி. சும்மா கூப்பிடு"

அவனின் டி என்ற முதல் அழைப்பு அவளுள் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண சரி என தலையாட்டினாள்.

"ஹ்ம்ம் தட்ஸ் குட்” என அவள் கன்னம் தட்டியவன், “சரி ஈவ்னிங் ஷோ போலாமா? நைட் ஷோ போலாமா? இன்னைக்கு போக கூடாதாம் நாளைக்கு போலாம்" என அவன் பிளான் செய்ய,

"எதுனாலும் எனக்கு ஓகே" என்று அவள் சொல்ல, சிரிப்புடன் மொபைலை கையில் எடுத்தான்.

"என்னங்க.." என்றதும் அவன் முறைக்க, ஸ்ஸ் என நாக்கை கடித்தவள் "அ..ர்..ஜீ..ன்.." திக்கி திணறி சொல்லி முடிக்க புன்னகை மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இல்ல ஹேமாவையும் கூட்டிட்டு போலாமா?" என்றாள்.

"வாவ் குட் ஐடியா ஸ்வீட்டி" என்றவன் அவள் கன்னத்தில் முதல் முத்தம் பதிக்க விரித்த கண்களை மூடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதில் அழகாய் வெட்கி சிரித்தவன் "ஓவர் ஹாப்பில... இதெல்லாம் அப்பப்போ பழகிக்கோ" முதலில் திணறினாலும் அடுத்து சமாளித்துவிட்டு

"அப்ப ஒன்னு பண்லாம். அம்மா அப்பா எப்படியும் வர மாட்டாங்க. மாம்ஸ் நைட் வீட்ல சும்மா தானே இருப்பாங்க? அவங்களையும் கூட்டிட்டு போகலாம்"

பேச்சை மாற்றியதில் கொஞ்சம் சுயம் வந்தவள் "இல்ல அண்ணாக்கு அதெல்லாம் புடிக்காது. அண்ணா டிவி கூட பார்க்க மாட்டாங்க"

"சோ வாட்? இனிமேல் பழகட்டும். சும்மா பேமிலியா போறது ஜாலி தானே சுஜி! அதெல்லாம் மாம்ஸ் நான் கூப்பிட்டா வருவாங்க. நாளைக்கு ஆறு மணிக்கு புக் பண்றேன் ரெடியா இரு ஓகே" என்றவன் சிவாவை மொபைலில் அழைத்து கொண்டே வெளியே வந்தான்.

சிவாவையும் இந்த குடும்பத்தில் ஒருவனாய் அர்ஜுன் நினைப்பது சுஜிக்கு சந்தோசமாக இருந்தாலும் இதுபோல சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாம் அண்ணனும் சரி இவளும் சரி அனுபவித்தது இல்லை என்பதால் அண்ணன் வராது என்று எண்ணி கவலையாக தான் இருந்தாள்.

சொன்னது போல சிவாவும் வரவில்லை என சொல்ல, அர்ஜுன் பேசிப் பேசியே சம்மதம் வாங்கினான்.

"சரி மாம்ஸ் நாளைக்கு விருந்துக்கு வரோம் இல்ல. அங்கிருந்தே ஈவ்னிங் கிளம்பலாம்" என பேசிக் கொண்டே ஹேமா அறைக்கு சென்றான்.

"என்னண்ணா உன் மாம்ஸ் கூட அப்படி எங்க போக பிளான்?"

"சும்மா வீட்ல தானே இருக்கோம் அதான் தியேட்டர் போலாம்னு கேட்டேன். நீ வர்றியா?"

"அது எப்படி? நான் இல்லாமல் நீங்க போய்டுவீங்களா?" என கேட்க, அவள் தலையில் கை வைத்து ஆட்டியவன் "வாண்டு!" என சிரித்து விட்டு

"நாளைக்கு மதியம் சுஜி அண்ணா வீட்ல விருந்து. நீயும் வா சாப்பிட்டு அப்படியே ஈவ்னிங் போய்ட்டு வந்திடலாம்" என அவன் சொல்ல, கரும்பு தின்ன கூலியா என்பது போல நாளை முழுதும் சிவாவுடன் என சந்தோசத்தில் தலையை எல்லா பக்கமும் வேகமாக ஆட்டினாள்.

"ஹெல்லோ யாரு?" புது நம்பரில் இருந்து அழைப்பு வர கொஞ்சம் சத்தமாகவே கேட்டான் சிவா.

"ஸ்ஸ்ஸ் ப்ப்ப்பா! என் காது போச்சி. பேசாமல் போன கீழ வச்சுட்டு எங்கவீட்ட பார்த்து கத்துங்க. எனக்கே கேட்டிடும்" ஹேமா

"ஆரம்பிச்சுட்டியா? ஆமா உனக்கு யாரு என் நம்பர் தந்தது?"

"ஹான் தர்ராங்க, தர்ராங்க! உங்க நம்பரை நான் யார்கிட்ட கேட்கணும் நானே எடுத்துகிட்டேன்"

"திருடுனேன்னு சொல்லு. நீ உன் வீட்ல மாட்டி, நல்லா செமத்தியா அடி வாங்கினா தான் சரிபட்டுவருவ. ஆமா டீச்சர்க்கு படிக்குற உனக்கு எதுக்கு இவ்வளவு நாள் லீவு குடுத்தான்? நீலாம் டீச்சர் ஆகி என்ன தான் சொல்லி குடுக்கபோறியோ?"

தன்னையே சுற்றி வருபவளை தன்னைவிட்டு தள்ளி வைக்க மனமில்லை. விலகி போ என்றாலும் அவள் கேட்கவில்லை. அவளுடன் பேசுவது தவறு என புரிந்தாலும் மனம் கேட்க வேண்டுமே?

"அதுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணி உனக்கு பாடம் எடுக்கலாம்னு சொல்றேன். நீங்க ஓகேனு க்ரீன்ன் சிக்னல் மட்டும் குடுங்க. அப்புறம் பாருங்க நான் எப்படி தீயா வேலை செய்யுறேன்னு"

"அது சரி! என்ன இன்னும் கேட்கலையேனு பார்த்தேன். ஆமா எதுக்கு தமிழை கொல பண்ற மாதிரி ஒரு நேரம் மரியாதையா கூப்புட்ற ஒரு நேரம் மானவாரியா கூப்பிடுற?"

"அதான் சொன்னேனே என்னோட பிளாக்மேனை நான் எப்படி வேணா கூப்பிடுவேன்னு. அதை யாரும் ஏன் நீயும் கூட கேட்க கூடாது. புரியுதா?"

"ஓஹ் நல்லா புரிஞ்சுது. ரேகா அத்த கையால நாலு விளக்குமாத்து அடி வாங்காம நீ மாற மாட்டனு நல்லா புரிஞ்சுது"

"உங்க அத்தய எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும். ஆனாலும் ஓவரா தான் சீன் போடுற பிளாக்மேன். நீ இப்படிலாம் என்னை கெஞ்ச வைக்குறதுக்கு பதிலா நீயும் ஒருநாள் என்னை கெஞ்சிட்டு இருக்க போற பாரு. ஆனால் அப்ப நான் உன்ன மாதிரி சீன் போட மாட்டேன். கப்புனு உன்னை புடிச்சுக்குவேன்" அலட்டலே இல்லாமல் அவள் சொல்ல, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான் சிவா.

"நடந்தா தான? நீ பேசினது போதும். எதுக்கு போன் போட்ட? அதை சொல்லிட்டு வை. எனக்கு வேலை இருக்கு"

"ஆமா ஆமா எனக்கும் வேலை இருக்கு. நான் ஏன் போன் பண்ணேன் தெரியுமா? நாளைக்கு படத்துக்கு போறோம்ல.. அண்ணனும் அண்ணியும் மேட்சிங்கா டிரஸ் போடுறதா பேசிட்டு இருந்தாங்க. நீ என்ன கலர் போடுறனு சொல்லு நானும் அதை பால்லொவ் பண்ணிக்கிறேன்"

"ப்ச்! ஏய் நீ ரொம்ப ஓவரா போற! அவங்களும் நாமளும் ஒன்னா? நீ வர்றன்னா நான் வரல. பேசாம போய் வேலைய பாரு!" என்றவன் அவள் பதிலை கேட்காமல் வைத்து விட்டான்.

"ஹலோ… ஹெலோ… பிளாக்கி.. கட்பண்ணிட்டியா! ரொம்ப அசிங்கப்படுத்துறானே! சரி நம்ம ஆளு தானே" என அசால்ட்டாய் துடைத்து விட்டு தனது வேலையை தொடர்ந்தாள்.

"டேய் அஜூ! இந்த சிவா பையனை பாரேன். மதிய சாப்பாடு குடுத்து விட்டா.. இனி குடுத்து எல்லாம் விட வேண்டாம் அப்பப்போ நான் வரும்போது சாப்பிட்டுக்குறேன்னு அப்பாகிட்ட சொல்லிருக்கான். தனியா ஏன் கஷ்டப்படனும் இங்க வந்து இருன்னு சொன்னாலும் கேட்க மாட்டுறான்" ரேகா இரவு உணவில் சிவாவை பற்றி குற்றப் பத்திரிக்கையை ஆரம்பித்தார்.

சுஜி "அத்த! அண்ணா பாத்துக்கும். இதுவரை எங்கேயும் வெளில சாப்பிட்டது இல்ல. சொந்தக்காரங்க வீட்டுக்கு போனாலும் சாப்பிட வீட்டுக்கு வந்துடும். சின்ன வயசுல அம்மா அப்பா இறந்தப்போ அவங்க எல்லாம் எங்களை கண்டுக்கலையாம் அதனால யாரோடயும் ரொம்ப சேர மாட்டாங்க அத்த"

"ஏண்டி இது உன் வீடு. சொந்தக்காரங்க வீடும் உன் வீடும் ஒன்னா? நீ தான் சிவாக்கிட்ட பேசணும். ஒரு நேரமாச்சும் நிம்மதியா சாப்பிடட்டும்னு குடுக்கலாம்னா தோ இவ தான் மதியம் கொண்டு போனா.. அந்த புள்ளைட்ட என்ன சொன்னாளோ வேண்டாம்னு சொல்லுது" சுஜியிடம் ஆரம்பித்து ஹேமாவிடம் முடித்தார்.

ராஜ்குமார், அர்ஜுன், சுஜி மூவரும் கேள்வியாய் ஹேமா முகத்தை பார்க்க,

'அடப்பாவி பத்த வச்சுட்டியா? மவனே உனக்கு இருக்கு' என நினைத்து கொண்டவள்,

"என்ன எல்லாரும் என்னை சந்தேகமாப் பாக்குறீங்க? நான்லாம் எதுவும் சொல்லல. சும்மா இருக்கோமேன்னு கொண்டு போனேன். வேணும்னா நாளைக்கும் நானே குடுத்துட்டு சாரி கேட்டுட்டு வர்றேன்" இதை தனக்கு சாதகமாக கொண்டு அடுத்த சந்திப்பை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

"நாளைக்கு அங்க தான் விருந்து. நான் மாம்ஸ்கிட்ட கேட்டுக்குறேன். ஆனால் உன்மேல தப்பு இருந்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஹேமா" என கோபமாக சொன்ன அர்ஜுன் எழுந்து கொள்ள,

"தெரியாட்டி போ டா" என நினைத்தவள் 'கொஞ்சம் ஓவரா தான் பிளாக்மேனை படுத்துறோமோ?' என்ற சிந்தனையில்ஆழ்ந்தாள்.

நேசம் தொடரும்..
 
Top