• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 8

"இப்ப எதுக்கு எங்க அண்ணா கூட ஹேமாவை அனுப்பி வச்சீங்க? அத்தைக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?" ஒரு வேகத்தில் சுஜி அர்ஜுனிடம் கோபமாய் கேட்டுவிட,

"பார்ரா! செவத்தம்மாக்கு கோபம் கூட வருது" என கிண்டல் செய்தான் அர்ஜுன்.

"முதல்ல பதில் சொல்லுங்க. ஏன் அனுப்பி வச்சீங்க? நாம எங்கேயோ போகணும்னு சொன்னிங்களே! எங்க போகணும்?" என மீண்டும் கேள்விகளை அடுக்க,

"அடடா! பொண்டாட்டின்னா இப்படித்தான் கேள்வி கேட்பாங்களா? ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் எனக்கு புரியுது பாரேன்" என விளையாட்டைத் தொடர்ந்தான் அர்ஜுன்.

"போங்க! நீங்க கிண்டல் பண்றீங்க. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்" கோபமாய் அவள் செல்ல முயல, அவள் கைகளைப் பிடித்து இழுத்தான் அர்ஜுன்.

அதில் அவன் மேலே அவள் சாய "இப்ப சொல்லுடி என் செல்லக்குட்டி" என்றான் அவன்.

"ஐயோ விடுங்க! என்ன பண்றீங்க நீங்க? அத்தையைகூப்பிடுவேன்" முதன்முதலாய் உரிமையான செல்லச் சண்டை அங்கு நடந்தேற, பேசிக்கொண்டே அவளை தன்னுடன் இறுக்கினான்.

"பதில் சொல்றேன். கேட்டுட்டு போ!" என்றவன்

"நான் ஹேமாவை நம்பி அனுப்பல. என்னோட மாமாவை நம்பி அனுப்பினேன். மத்தபடி நானுமே அவங்க விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரல"

"எனக்கு என்னமோ சரியா படலங்க. எனக்கும் ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை இருக்கு. ஆனாலும் நம்மலே இடம் கொடுக்குற மாதிரி தோணுது"

"இப்ப ஏன் நீ இவ்ளோ ஏமோஷனலா பேசுற? ஒருவேளை ஹேமா உனக்கு அண்ணியா வர்றது உனக்கு பிடிக்கலையா?" வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

"என்ன பேசுறீங்க நீங்க? அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும். எப்போ எங்க அண்ணா ஹேமாவை புடிக்கும்னு சொல்லுச்சோ! அப்ப இருந்து என் மனசுல என்ன ஓடிட்டு இருக்கு தெரியுமா? நான் படிக்கலைன்றதை விட, ஏன் அண்ணா படிக்காமல் போயிடுச்சுனு தான் கவலைபட்டுட்டு இருக்கேன். என் அண்ணா மட்டும் படிச்சிருந்தா, நானே அத்தை மாமா கால்ல விழுந்தாச்சும் அவங்க கல்யாணத்தை நடத்தி இருப்பேன்" உணர்ச்சி வசத்தில் அவள் பேசிக்கொண்டே இருக்க,

"ஹேய் கூல் கூல் சுஜி! நான் சும்மா தான் கேட்டேன் இதுக்கு ஏன் அழுவுற? விடு நடக்க வேண்டியது நடக்கும். இனி என் முன்னாடி இப்படி அழக்கூடாது. அது மட்டும் இல்ல, உனக்கு சொன்னதுதான் ஹேமாக்கும். படிப்பு மட்டுமே ஒரு மனுஷன முழுமைப்படுத்தாது. அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு. எக்ஸாம்பிள் உன் அண்ணா என் படிப்பை பார்த்தா உனக்கு என்ன கட்டிக்கொடுத்தாங்க? கண்டிப்பா சிவா மாமா அதை மட்டும் பார்த்திருக்கமாட்டாங்க. அவங்களுக்குள்ள தோனி இருக்கும்! 'இந்த தங்கத்தை அந்த அர்ஜுன் நல்லா பார்த்துப்பா'ன்னு. அதே மாதிரி தான் ஹேமாவும். இன்னும் ஆறு மாசத்துக்கு அப்புறமும் இதே முடிவுல உறுதியா இருந்தா, சிவா மாமாகிட்ட பேச வேண்டியது என்னோட பொறுப்பு. ஒரு அண்ணனா நான் அப்போ அந்த முடிவை எடுப்பேன்" அழகாய் கூறிவிட்டான்.

"என் அண்ணா மேல உங்களுக்கு கோவம் இல்லையே?"

"நான் இவ்வளவு சொன்ன அப்புறமும் எனக்கு கோவம் இருக்கும்னு நினைக்கிறியா சுஜி?"

"இல்ல, அண்ணாக்கு படிப்பு மட்டும் பிரச்சனை இல்ல. அண்ணாவும் ஹேமாவும்..." என இழுக்க அவள் சொல்ல வருவது புரிந்தது அர்ஜுனுக்கு.

"கலர சொல்றியா?"என்கவும் அவள் தலையை "ஆமாம்" என ஆட்ட, "என் அம்மா அப்பாவை பார்த்த அப்புறமும் உனக்கு இந்த டவுட் வருதா?" என்றான் சிரிப்புடன்.

"எனக்கு புரியுது ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்கு"

"சுஜி இன்னும் ஆறு மாசத்துக்கு அப்புறம் உள்ளதையே நினைச்சிட்டு இருக்கியே! ஒரு வாரமா ஒரு பையன் ரொம்ப கஷ்டப்படுறான். அது உனக்கு தெரியுதா?" என்றவனின் கொஞ்சல் பேச்சு புரிந்தாலும், என்ன சொல்ல என தெரியாமல் குனிந்தவளின் மண்டையில் அப்போதுதான் பொறி தட்டியது தான் இன்னும் அவன் அணைப்பில் இருப்பது.

"அய்யோ விடுங்க! விடுங்க! என்னை விடுங்க!" என அவள் கத்த, முதன் முதலில் அவளை வாயடைக்கச் செய்தான் தன் இதழ்களால்.

அதிர்ச்சியில் உறைந்தவளுக்கு அவன் என்ன செய்கிறான் எனப் புரிந்து தடுக்கும் முன்பே அவளை மூச்சுவாங்க விடுவித்தான்.

"சாரி சாரி டி! பேசிட்டே இருந்த அந்த வாய் என்னை ரொம்ப டிஸ்டர்ப்பண்ணிடுச்சு. ப்ச் பட் சாரி சுஜிமா" என்றவன் உடனே வெளியேற, சுஜி அதே இடத்தில் நின்றாள் அசையாமல்.

ஹேமா "பாஸ் என்னை வேணா இங்க இறக்கி விடுங்களேன் நான் நடந்தே போய்க்கிறேன்"

சிவா "ஏன்? அத்த என்னைய நிக்க வச்சு கேள்வி கேட்கவா?"

"அது பரவால்ல. நீங்க போற ஸ்பீடுக்கு ஷாப்பிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள விடிஞ்சிடும். அதுக்கு அம்மா வேற கதை கட்டிடுவாங்க"

"ஏய் என்ன பேச்சு இது. பொம்பளபுள்ள மாதிரி பேசு"

"ப்ச் பிளாக்கி! இப்ப நான் என்ன தப்பாசொல்லிட்டேன். சரி விடு! இப்ப ஸ்பீடா போக முடியுமா முடியாதா?"

"என்னோட வண்டி இவ்வளவு வேகமாத்தான் போகும். வேகமா போனும்னா அத்தைகிட்ட சொல்லிட்டு பஸ்ல ஏத்தி விடுறேன்"

"நீ செஞ்சாலும் செய்வ யா! என்ன பண்றது லவ் பண்ணி தொலைச்சிட்டேன் ஹ்ம்ம்.. ஆனா இதுகூட நல்லா தான் இருக்கு யா.. ஸ்லோமோஷன்ல பச்சைபசேல்னு வயலுக்கு நடுவுல.. ப்ச் வேற லெவல் பீல்.. அப்படியே இளைய ராஜா சாங் போட்டா எங்கேயோ போய்டுவேன்"

"போவ போவ! ஆமா இப்ப என்ன வாங்கனும் உனக்கு?"

"அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நீ பார்த்துட்டே இரு. நான் உன்னை பார்த்துட்டே சீக்கிரம் பர்ச்சஸ் முடிச்சிடுறேன்"

"அதெல்லாம் எனக்கு நேரம் இல்ல. நான் போய் உரமூட்ட வாங்கி அனுப்பிட்டு வாரேன் அதுக்குள்ள நீ உன் வேலையை முடி"

"ரொம்ப முக்கியம்! சரி போ.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம சேர்ந்து ஷாப்பிங் போலாம்"

"அடங்கவே மாட்டியா நீ? எப்பப்பாரு இதே பேச்சு. படிப்ப ஒழுங்கா முடிக்குற வழியை பாரு"

"அதெல்லாம் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிடுவேன்"

"ஏதோ சொல்ற! ஆமா இந்த சமையக்கட்டு பக்கம் எல்லாம் போயிருக்கியா?"

"ஹெல்லோ நீங்கள் வேணா பெரிய செஃப் தாமுவா இருக்கலாம். உங்க அளவுக்கு இல்லைனாலும் நானும் சமைப்பேன்"

"பொய்"

"என்ன பொய்? நான் நூடுல்ஸ் பண்ணினா எட்டூருக்கு எச்சில் ஊரும். சுடுதண்ணி நான் வைக்குற மாதிரி யாராலும் வைக்க முடியாது. இவ்வளவு ஏன்! இதுநாள் வரைக்கும் நான் யாருக்கும் காபி போட்டதே இல்ல. அம்மா தான் காபி போட்டு வச்சிருப்பாங்க.. நான் சூடு பண்ணிப்பேன். இன்னைக்கு உங்களுக்குன்னதும் முதல் முறையா போட்டு வச்ச காபிய வச்சிட்டு உங்களுக்காக ஸ்பெஷல்லா நானே பண்ணினேன் தெரியுமா?"

"அதை சொல்லு! அப்போ வேணும்னு தான் பண்ணின?"

"ஆமா! காபி எப்படி இருந்திச்சு?"

"உப்பு கொஞ்சம் தூக்கலா இருந்துச்சு! இவ்வளவு உப்பு உடம்புக்கு ஆகாது.கொஞ்சம் குறைச்சிக்கோ. கடவுள் இதுக்காகவே உன்கிட்ட இருந்து என்னை காப்பாத்தனும்"

"வாட் உப்பா? அப்ப நான் போட்டது சர்க்கரை இல்லையா?"

"சரியா போச்சு போ! நல்லவேளைக்கு சாப்பாடு எடுத்திட்டுவர்றதோட நிறுத்தின. ஆர்வக்கோளாறு அதிகமாகி சமைச்சி எடுத்துட்டு வராத வரை ரொம்ப சந்தோசம்"

"கிண்டலா! என்னை சீண்டி பார்த்தால் உங்களுக்கு தான் கஷ்டம்"

"அம்மா தாயே! ஆளை விடு! இந்தா வந்துட்டு நீ சொன்ன கடை.. வாங்கிட்டு முடிச்சாச்சுன்னா போன் பண்ணு"

"அய்யோ! இது பேரு மால் பாஸ்"

"பேரை மாத்திட்டாங்களா? நம்ம பஜார்ல இல்லாதது என்ன தான் இங்க இருக்கோ! சரி போன் பண்ணு" என்றவன் செல்ல, அவளோ உள்ளே செல்லாமல் தூரத்தில் செல்பவனை கண் மறையும் வரை பார்த்தாள்.

"சுஜி! என்ன படிக்க போற?" ரேகா ஆர்வமாய் கேட்டார்.

"அக்கௌன்ட்ஸ் படிக்க சொல்லி அவங்க சொன்னாங்க அத்தை"

"அவன் சொல்றது இருக்கட்டும். உனக்கு என்ன படிக்கணும்னு தோணுது?"

"இல்ல அத்தை, நான் இதுவரை எதுவும் யோசிச்சது இல்ல. அக்கௌன்ட்ஸ் மார்க் நல்லாஇருக்குன்னு தான் அதுலயே சேர சொன்னாங்க"

"ஹ்ம்ம்! அப்ப சரி. உனக்கு சரினு தோணுறதா எடுத்து படி. ஆனால் ஒன்னு!.." என சொல்லிக்கொண்டு இருக்க, அர்ஜுனும் வந்தான்.

"என்னம்மா! மருமககிட்ட என்ன கண்டிஷன் போட்டுட்டு இருக்கீங்க?"

"வாடா! ரெண்டு பேர்கிட்டயும் தான் சொல்லணும்னு நினைச்சேன். இங்க பாரு உன் பொண்டாட்டி படிக்கறது எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா அதே மாதிரி குழந்தை விஷயத்துலயும் நீங்க அப்படி இருக்க கூடாது. படிக்குறேன்னு அவளோ இல்ல படிக்க வைக்குறேன்னு நீயோ குழந்தைய தள்ளி போட்டா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது"

"ம்மா! இப்ப எதுக்கு இந்த பேச்சு"

"இப்ப தான்டா பேசணும். நான் சொல்றதை செய்வேன் பாத்துக்கோ" என சொல்ல, சுஜி முழிக்கும் விதத்தில் சிரிப்பை அடக்க பெரும்பாடாய் போனது அர்ஜுனுக்கு.

"சரிம்மா! இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் உங்களுக்கு. ரொம்ப டென்ஷன் ஆகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. நீங்க சொல்ற மாதிரி எனக்கும் சுஜிக்கும் பிளான் இல்ல போதுமா"

"ஆங் அதுதான் எனக்கும் வேணும். நீ டாக்டர்னா நான் உனக்கு அம்மா. உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன். புரிஞ்சிகிட்டா சரி" என்று சொல்லி செல்ல, சிரிப்புடன்சுஜி அருகே சென்றான் அர்ஜுன்.

"என்னங்க! அத்தை இப்படி சொல்லிட்டுபோறாங்க.. நீங்களும் சரினு சொல்றிங்க? ஆனா என்கிட்ட அன்னைக்கு...." எப்படி சொல்வாள் அதை?

"ம்ம் சொல்லு அன்னைக்கு.."

"அய்யோ விளையாடாதீங்க அஜூ" மிரட்டலா? கொஞ்சலா? அவளுக்கே தெரியாத போதும் அர்ஜுன் தெரிந்து கொண்டதோடு அவளை அறைக்குள் கூட்டி சென்றவன்,

"சொல்லு என்ன சொன்ன?" என கேட்க,

"நிஜமாவே தான் சொன்னிங்களா அத்தைகிட்ட?"

"ப்ச் நான் இதை கேட்கல டா சுஜி குட்டி. நீ கூப்பிட்டல்ல அது ஒன்ஸ்மோர் ப்ளீஸ்!" இப்போதுதான் அவளுக்கும் ஞாபகம் வந்தது.

"அது... அது... அய்யோ இப்ப அதுவா முக்கியம்? அத்தைகிட்ட ஏன் அப்படி சொன்னிங்க?"

"பின்ன அம்மாகிட்ட நாங்க குழந்தை வேண்டாம்னு இருக்கோம்னு சொல்லவா? நான் அப்படி ஒரு பிளான்லயே இல்லையே சுஜிமா" அவள் தோளைப் பின்னிருந்து அணைத்து சொல்ல, மொத்தமாய் குழம்பினாள் சுஜி.

"அப்ப எப்படி ப..டி..க்..க.."

"நீ ஒவ்வொரு எழுத்தா சொல்லி முடிக்குறதுக்குள்ள, நான் கிழவனாய்டுவேன் சுஜி" சொன்னவனை அவள் முறைக்க,

"சரி சரி! நானே சொல்லிடுறேன். நீ படி மா. உனக்கு எவ்ளோ படிக்கணும் தோணுதோ அவ்ளோ படி. கண்டிப்பா உன்னை நான் கண்ட்ரோல் பண்ண மாட்டேன். அம்மாக்கு இதெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. அதான் அப்படி சொன்னேன். அதுக்காக ஜாலியா ஹாப்பியா இருக்க கூடாதுன்னு இருக்கா என்ன? நாம அடுத்த வாரம் ஹனிமூன் போறோம் என்ஜோய் பண்றோம் ஓகே. அண்ட் இதுனால அம்மாக்கும் டவுட் வராது. எல்லாம் ஒரு கணக்கு தான். நீ எதையும் மைன்ட்ல போட்டுக்காம படி அப்படியே என்னையும் அப்பப்போ நினைச்சுக்கோ ம்ம்ம்" கண்ணடித்து சொல்பவனை அவள் கண்ணெடுக்காமல் பார்க்க, நெற்றியோடு முட்டிக் கொண்டவன் அதற்குமேல் அவளிடம் செல்லவில்லை.

இது என்ன வகையான பாசமோ!

நேசம் தொடரும்..
 
  • Like
Reactions: LAmmu