• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 9

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 9

உரமூட்டை வாங்க சென்றவன் எண்ணம் முழுதும் ஹேமா மட்டுமே! இரண்டு நாட்களில் படிக்க வெளியூர் செல்கிறாள். இவனின் நியாயம் என்றோ காற்றாகி போனபின் அவனால் ஒருமனதாய் அனுப்பி வைக்கவும் மனமில்லை. அதே நேரம் தன் மனம் செல்லும் திசையை அவளிடமும் சொல்ல முடியாது. இதன் மற்றொரு முனையில் சுஜி அர்ஜுன்.

அர்ஜுனிடம் ஹேமா அவளை பற்றி சொல்லிவிட்டாள் என்பதை அவன் என்னவென்று எடுத்து கொள்வது என்றே அவனுக்கு தெரியவில்லை. அதை தனக்கு சாதகமாக எடுத்து கொள்ள எந்த காலமும் அவனுக்கு மனம் வராது.

இதை எல்லாம் மறைத்து பார்த்தால் காதல் என்பது அனைத்தையும் கடந்தது அல்லவா? காதலை கண்ணால் காண்பது சாத்தியமா? அது உணர வேண்டியது. கடவுளை நாம் உணர்கிறோமே அதுபோல தான். உண்மை காதலை மறைப்பது என்பது கடவுள் நம்பிக்கை கொண்டவன் கடவுள் இல்லை என்பதை போல ஆகாதா?

இந்த நிலையில் தான் சிவாவும். தன்னந்தனியாய் இத்தனை காலம் பெற்றோரை இழந்து வாழ்ந்த போதிலும் தங்கைக்காக வாழ்ந்தவன், முதன்முறையாய் ஒரு சிறுபெண்ணிற்காக தவித்து நிற்கிறான்.

அதற்கு மேல் வியாபாரம் பேசவோ, அங்கு நிற்கவோ முடியாமல் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை அழைத்து அந்த வேலையை கொடுத்தவன் அந்த கடையை நோக்கி வண்டியை விட்டான். அதாங்க மால்க்கு..

உள்ளே இருந்த பிரம்மாண்டம் இவனை நகர விடவில்லை. எங்கு எப்படி செல்வது என தெரியாமல் திருதிருவென முழித்தவன் சில நிமிடங்கள் கழித்து அவளுக்கே மொபைலில் அழைத்தான்.

"என்ன பிளாக்மேன், உன் வேலை முடிஞ்சுதா? ஆனா எனக்கு இன்னும் ஒன் ஹவர் ஆகும்" எடுத்ததும் அவள் பேச ஆரம்பிக்க,

"எதிர்ல இருக்குறவங்களை எப்பவுமே பேச விடமாட்டியா?"

"இதை கேட்க தான் போன் பண்ணிங்களா? நான் முடிச்சிட்டு வரேன் அப்புறம் பொறுமையா பேசிட்டுஅப்புறமா வீட்டுக்கு போலாம். டீல் ஓகே?"

"இந்த வாயி இருக்கே! ரொம்ப கஷ்டம். சரி சரி உன் கடைக்கு வெளில தான் நிக்குறேன். எப்படி வரட்டும்?"

"நிஜமாவா பிளாக்மேன்? பார்த்தியா பார்த்தியா! உன்னால என்னை விட்டுட்டு போக முடியல! எனக்கு தெரியும் பிளாக்கி நீ வருவன்னு" பேசிக்கொண்டே அவள் ஓடிவர, தூரத்திலேயே அவளை கண்டுகொண்டவன்,

"ஏய்! ஏய்! மெதுவா வா!" என சொல்லிக்கொண்டே அவளை நோக்கி சென்றான். மூச்சிறைக்க அவளும்.. முறைத்துக் கொண்டே அவனும்..

"முடிஞ்சுதா?"

"ஓஹ்! பாதி"

"ம்ம் சீக்கிரம்" என்றவன் அவள் வந்த வழியில் செல்ல, அவனை தொடர்ந்து அவளும் குதித்து ஓடினாள்.

"நடந்து பழகு ஹேமா. எப்பப்பாரு ஓடிகிட்டு திரியுற"

"அது உன்ன பார்த்தாலே தானா ஒரு எனர்ஜி வந்திடும் பாஸ்"

அவள் செல்லும் கடைக்குள் எல்லாம் இவனும் சென்றான். ஒரு துணி கடைக்குள் சென்றவள் ஜீன்ஸ் உடன் ஒரு டாப் செலக்ட் செய்து, அந்த டாப்பை தனக்கு வைத்து பார்த்து கண்ணாடி பக்கம் திரும்ப, அங்கே சிவாவின் முகம் போன போக்கை வைத்து அவனுக்கு இது பிடிக்கவில்லையோ என நினைத்தவள், பின் குர்தி பக்கம் சென்று ஒன்றை எடுத்து அப்போது செய்தது போலவே மீண்டும் திரும்ப, இப்போது சிவாவும் நன்றாக அந்த குர்தியை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் திரும்பவும் அதுவே சம்மதம் போல அதேபோல சிலவற்றை எடுத்துவிட்டே வெளி வந்தாள்.

அவள் சென்ற கடைகள், தேர்ந்தெடுத்த விதம், அந்த பொருட்களின் விலை என ஒவ்வொன்றயும் கவனித்து கொண்டுதான் இருந்தான்.

அவள் பிசினஸ்மேன் மகள், டாக்டரின் தங்கை என்பதை எல்லாம் அவை தெளிவாய் எடுத்து சொல்ல மெலிதாய் அவன் சிரித்த நேரம் அவளும் அவனை பார்த்தாள்.

கண்களை சுருக்கி என்ன என அவள் தலையை மட்டும் அசைக்க, அவனும் வலதும் இடதுமாக தலையை ஆட்டினான்.

ஒரு மணி நேரத்தில் முடிக்க நினைத்தவள் அவனை சைட் அடிக்கவே அந்த நேரத்தை எடுத்து கொள்ள அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பின்பே அவனுடன் வெளியே வந்தாள்.

"ஏன் பிளாக்கி பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடக் கூடாதுனு தான் நீயும் நினைக்குறியா?"

"அதென்ன நீயும்? அப்ப வேற யாராவது உன்கிட்ட அப்படி சொல்லியிருக்காங்களா?"

"ம்ம் அதுக்கு வெளில எல்லாம் ஆள் தேட வேண்டாம். அதான் உன் மாப்பிள்ளை இருக்கானே அவன் தான். ஒரு ஜீன்ஸ் கூட அவன் இருக்கும் போது போட முடியாது. சரி சென்னைல போய் போடலாம்னு பார்த்தால் உன் லுக்கே சொல்லிடுச்சு உனக்கும் புடிக்காதுனு"

"புடிக்காதுனு எல்லாம் இல்ல. எனக்கு தெரிஞ்ச யாரும் இதுவரை இந்த மாதிரி துணி போட்டது இல்ல. அதனால தான் அதை பார்த்ததும் அப்படி பண்ணிட்டேன். மத்தபடி நீ போடுறது எனக்கு என்ன?"

"இந்த மாதிரி நீ எனக்கு யாரோனு பேசினனு வை அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. என் அண்ணா திட்டினா கூட எனக்கு புடிச்ச டிரஸ் தான் போடுவேன்னு அடம் பண்ணி போடுவேன். சரி உனக்காக மாத்திக்கலாம்னு பார்த்தா நான் யாரோனு சொல்லிட்ட இல்ல?"

"நான் எப்ப அப்படி சொன்னேன்?"

"இல்ல நீ பேசுறது புரியாம போக நான் ஒன்னும் குழந்தை இல்ல. பாரு கல்யாணத்துக்கு அப்புறம் டெய்லி ஜீன்ஸ் டாப்புமா போட்டு உன்னை வெறுப்பேத்தல!"

"கோபத்துல கூட சீரியஸ்சா பேச மாட்டியா நீ?"

"யோவ்! நான் சீரியசா தான் யா பேசிட்டு வர்றேன். என்னை யாரோன்னு சொல்லிட்ட இல்ல?"

"ப்ச் ஏய்! நான் அப்படிலாம் ஒன்னும் சொல்லல. உனக்கு எது பிடிக்குமோ அதையே பண்ணு போதுமா?"

"போயா! இப்ப யாரு உனக்கு புடிச்சத பண்ணுறாங்க. ஆனால் என்னை யாரோனு சொல்லிட்ட இல்ல?"

"அய்யோ தெரியாம சொல்லிட்டேன் போதுமா! பேசாமல் வா" முகத்தை தூக்கி கொண்டு வந்தவள் அதன் பின் எதுவும் பேசவில்லை.

வீட்டு வாசலில் இறக்கியவன் "இப்படி கோபமா உள்ள போனா எல்லாரும் என்னனு கேட்பாங்க. எப்பவும் போல சிரிச்சிட்டே ஓடு" அவனின் விருப்பத்தை அவளுக்கு தெரியாமல் சொல்ல,

"அப்படியெல்லாம் யாருக்காகவும் நடிக்க முடியாது. தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டும்" அவன் அவளை யாரோவாக பேசியதை தாங்க முடியாமல் அவள் நிஜக் கோபத்துடனே போக, சமாதானம் எதுவும் செய்யாமல் அவன் சிரிப்புடனே உள்ளே சென்று எல்லோரிடமும் விடைபெற்று வீடு கிளம்பினான்.

அடுத்த நாள் காலையும் முகத்தை தொங்க போட்டுக் கொண்டே ஹேமா சுற்றிவர என்ன என கேட்டவர்களை எல்லாம் கண் பார்வையாலே எரித்தாள்.

மதியம் 12 மணிக்கு துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டே "என்ன நினச்சுட்டு இருக்கு இந்த மங்கி? நான் யாரோவா? முடியாது.. நான் இன்னைக்கு சாப்பாடு கொண்டு போகமாட்டேன். உன்னை பார்க்காமலே ஊருக்கு போறேன். நீ கஷ்டப்படுவன்னு எனக்கு தெரியும். அதான் எனக்கு வேணும். என்னை யாரோனு சொல்லிட்ட இல்ல? உனக்கு இருக்கு" தனக்கு தானே பேசிக்கொண்டே அவள் வேலையை தொடர, வாசலில் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பினாள்.

அர்ஜுன் சுஜி இருவரும் நின்றனர். அர்ஜுன் வாய்விட்டு சிரிக்க, சிரித்தால் கோபப்படுவாளோ என சிரிப்பை அடக்கி நின்றாள் சுஜி.

"என்ன? என்ன என் ரூம் வாசல்ல நின்னு பல்ல காட்டுற?" அண்ணனிடம் அவள் எகிற,

"ஏய் வாலு! என்ன பிரச்சனை உனக்கு? ஊருக்கு ஈவினிங் கிளம்பனும் நீ இப்ப போய் எல்லாரோடவும் சண்டை போட்டுட்டு இருக்க?"

"ஆமா எனக்கு வேண்டுதல் பாரு! எல்லாம் உன்னோட இல்லயில்ல உங்களோட அண்ணனால தான்" என அர்ஜுனிடம் இருந்து சுஜிக்கு தாவ, 'பே' என முழித்தாள் சுஜி.

"சிவா மாமாவா? ஏன் என்ன பண்ணினாங்க?" அர்ஜுன் சுஜி கையை பிடித்து கண்களால் அவளை நார்மலாக்கி ஹேமாவிடம் கேள்வி கேட்க,

"என்ன பண்ணனும்? நான் யாரோவாம். நீ என்ன வேணா பண்ணு எனக்கென்னனு சொல்லிட்டு போய்ட்டான்" ஹேமாவின் பேச்சில் இப்போது மீண்டும் அர்ஜுனுக்கு சிரிப்பு வர, பயந்த சுஜியும் இணைந்து கொண்டாள்.

அர்ஜுன் "ஹேமா! கொஞ்சம் மரியாதையா பேசு!"

"அண்ணா பேசாம போய்டு! செம்ம கோவத்துல இருக்கேன்"

"உனக்கே இது ஓவரா தெரில? உன் அண்ணன்கிட்டயே இப்படி சொல்றதுக்கு?"

"உன்கிட்ட அன்னைக்கு சொல்லும் போதே பயமில்ல. இப்ப மட்டும் ஏன் பயப்படனும்? ஆனால் உனக்கு தான் அண்ணா என்னை பார்த்தால் பாவமா இல்ல. என்னை அவன் யாரோன்னு சொல்லிட்டான்னு சொல்றேன் ரெண்டு பேரும் சிரிக்குறீங்க?"

"ஹேமு! நீ தான் எதாவது பேசியிருப்ப. அண்ணா வேற எதாவது சொன்னதை நீ தப்பா புரிஞ்சிருப்ப" சுஜி இப்போதுதான் வாயை திறக்க,

"என்ன அண்ணனுக்கு சப்போர்ட்டா? போங்க! யாரும் எதுவும் கேட்காதீங்க. நான் ஊருக்கு போகணும். ரெடியாகனும் வெளில போங்க" கோபத்துடன் அவள் சொல்ல,

"அப்போ சிவா மாமாக்கு சாப்பாடு?" என்றான் அர்ஜுன்.

"ஆமா பெரிய சாப்பாடு! ஏன் கொண்டு போக ஆள் இல்லையா? என்னால எல்லாம் கொண்டு போக முடியாது. நான் கிளம்பனும். இன்னைக்கு அந்த ஆளுகிட்ட சொல்லாம நான் சென்னைக்கு போறேன். அப்போ தான் என்னை பத்தி தெரியும். அய்யோ நம்மகிட்ட சொல்லாம போய்ட்டாளேனு தேடும்" கோபத்தில் பேச, சிரிப்புடன் அர்ஜுன் ஒன்றை சொல்லவும் யோசிக்க ஆரம்பித்தாள் ஹேமா.

"ஹேமா அவரை விடு! நீ அடுத்த லீவுக்கு ஊர்க்கு வர எப்படியும் ரெண்டு மாசம் ஆகுமே! அதுவரை நீ மாமாவை பார்க்காமல் கோவத்துல இருந்துப்பியா?"

மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்துட்டேனே எனும் ரேஞ்சில் ஹேமா முழிக்க, சுஜி அவள் தலையிலே கொட்டினாள்.

"உனக்கு அண்ணா பத்தி தெரியும்ல? அதுவே நீ எப்ப ஒதுங்கி போவணு பார்த்திட்டு இருக்கு. நீ இப்ப சொல்லாம போனா சந்தோசப்படுமா இல்ல கவலைபடுமா?" நன்றாக இருவரும் ஏத்திவிட அது சரியாகவே ஹேமாவிடம் வேலை செய்தது.

"ஆமால்ல! இதை மறந்துட்டேன் பாரு. பிளாக்மேனை பார்க்காம நான் எப்படி ரெண்டு மாசம் இருக்க போறேனோ? சரி நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்.." என்றவள் நிற்காமல் அவள் அறை வாசல்வரை சென்று திரும்பி

"ஆமா, நீங்க எனக்கு ஹெல்ப் பண்றீங்க? அப்ப நீங்களும் எனக்கு சப்போர்ட்டா?" ஹேமா குழப்பத்துடன் மட்டுமே கேட்க, அர்ஜுன் சொல்லும் முன் இல்லை என்றாள் சுஜி.

அதே குழப்பத்துடன் ஹேமா நிற்க, "நீ கோபமா இருந்தாலும் அண்ணாவை பார்க்காம போனா அங்க போய்ட்டு, பார்க்காம போனதுக்கு கவலைபட்டு சரியாவே வேலையை பார்க்க மாட்ட. அதனால தான் சொன்னோம்" அர்ஜுன் நினைத்ததை சுஜி அப்படியே சொல்லிவிட, அவளை அர்ஜுன் புன்னகையுடன் பார்க்கவும், “ஓஹ்” என்றவாரே சென்றாள் ஹேமா.

"ஹேமா சாப்பாடு வாங்கிட்டு போ. அம்மா கிட்சேன்ல" சென்றவள் பின்னால் சென்று அர்ஜுன் சொல்ல, புன்னகையுடன் சரியென தலையாட்டி கிட்சேன் சென்று சிலபல பிட்டுகளை அம்மாவிடம் போட்டு சாப்பாட்டுடன் சென்றாள் சிவா வீட்டிற்கு.

நேசம் தொடரும்..
 
Top