• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் -3



தன் மனையாளின் கைகளை பற்றியபடி வீட்டிற்குள் மாதேஷ் நுழைய அப்போது “ஏய் ஷர்மி இங்க பாரு பொண்ணு மாப்பிள்ளை வந்திட்டாங்க...சீக்கிரம் வாடி ” என கத்தியபடியே ஒரு சிறுமி வேகமாக உள்ளே ஓட அப்போது உள்ளே இருந்து “போடி நான் ஒன்னும் வரலை... அந்த மாமா மேல எனக்கு கோபம்.....மலைக்கு கூட்டிட்டு போய் எதுமே வாங்கி கொடுக்கலை..என்கூட பேசவும் இல்லை ...எனக்கு இப்போ அந்த மாமாவ பிடிக்கலை” என செல்ல கோபத்துடன் அந்த மழலையின் குரல் கேட்க சட்டென அவன் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைய தன் மனைவியை திரும்பி பார்த்தவன் அந்த விழிகளை பார்த்ததும் அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றன.

மலர்விழியை அழைத்து கொண்டு அவன் வீட்டிற்குள் நுழைகையில் “டேய் மாதேஸ் நான் மட்டும் அம்மா கூட கடைக்கு போறனே.. ..உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்கலே” . என மோகன் போகும்போது கேலியாக சொல்லிவிட்டு செல்ல

“இந்த அம்மா எப்போ பார்த்தாலும் என்னை விட்டுட்டு அவனை மட்டும் கூட்டிட்டு போறாங்க ....கேட்டா அவன் பெரிய பையனு சொல்றது.....இருடா நானும் சீக்கிரம் பெரிய பையன் ஆகிட்றேன்” என பொருமலுடன் அவன் தமக்கையின் அறையில் நுழைந்தான்.

“ஏண்டா வரும்போதே முணுமுணுத்துகிட்டு வர” என அவர் கேட்கவும்

“ம்ம் எல்லாம் இதுனால தான்”.... என தன் அருகில் இருக்கும் மலர்விழியை கைகாட்டியவன் இந்தா இதை பிடிச்சுக்கோ......நானும் அண்ணா கூட கடைக்கு போறேன்” என சொல்லிவிட்டு நொடிக்குள் அங்கிருந்து பறந்து விட்டான். அந்த சிறுமியோ அதை கண்டு கொள்ளாமல் முழு அலங்காரத்துடன் இருக்கும் அவனின் தமக்கையின் அழகை பார்த்துகொண்டு இருந்தாள்.

பெண்பார்க்கும் படலம் எல்லாம் முடிந்து பெண்ணை பிடித்து இருக்கிறது என மாப்பிள்ளை வீட்டார் சொல்ல அனைவருக்கும் சந்தோசம். பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க அங்கு இருக்கும் இனிப்புகளை அண்ணன் தம்பி இருவரும் பங்கு போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

“டேய் அண்ணா எல்லாமே நீயே சாப்பிடாத.....எனக்கும் வேணும்”....எனபேசிகொண்டே குலாப் ஜாமுனை வாய்க்குள் அமுத்தியவன் வேகமாக தனது டிரவுசர் பாக்கெட்டில் நான்கு துண்டுகளை எடுத்து போட்டு கொண்டான் மாதேஷ்.

மோகனோ “டேய் கரை பிடிச்சுக்கும்...அப்புறம் அம்மா கண்டு பிடிச்சுடுவாங்க” என்ற படி அவனது பக்கெட்டில் இருந்து வெளியே எடுக்க முயற்சிக்க

“போடா நான் கொடுக்க மாட்டேன் ...... இத கொண்டு போய் நம்ம சின்ராசு முன்னாடி கொக்காணி காமிச்சு சாப்பிடனும்” என மாதேஷ் கொடுக்க மறுக்கவும்

“ஆமாண்டா அன்னைக்கு நமக்கு கொடுக்காப்பள்ளி தராம அவனே சாபிட்டான்ல ...இப்போ நம்மளும் சாப்பிடலாம்” என தமையனுக்கு ஒத்து ஊதிய படி மோகனும் பக்கெட்டில் அடைக்க



“டேய் நான் நாலு தான் எடுத்தேன்...நீ ஏன் இவ்ளோ எடுக்கிற” என மாதேஷ் அவனை தடுக்க

மோகனோ “நீ சின்ன பையன் ...நாலு போதும் ..நான் பெரிய பையன் எனக்கு நிறைய வேண்டும்” என சொல்லவும் இருவருக்குள்ளும் அடிதடி ஆரம்பித்து கட்டி புரண்டு கொண்டிருந்தனர்.

அதற்குள் மாதேஷ் குடும்பத்தை பற்றிய ஓர் அறிமுகம். அவனின் தந்தை சாமிநாதன். குமாரபாளையத்தில் வாகனத்திற்கான தளவாட சாமான்கள் விற்கும் கடை நடத்தி வருகின்றனர். மூன்று பெண்கள் மூன்று ஆண்கள் என ஆறு குழந்தைகள் அவருக்கு.....ஊரின் பெரியமனிதர்களில் இவரும் ஒருவர். மிகுந்த கண்டிப்பு ..பிள்ளைகள் அனைவருமே இவரை கண்டால் பயபடுவார்கள். முதல் பெண் திருமணம் முடிந்து இரண்டாவது பெண்ணிற்கு தான் இப்போது திருமணம் பேசி முடிக்க பட்டிருக்கிறது. மோகன் மாதேஷ் இருவருக்கும் நான்கு வயது தான் வித்தியசம் என்பதால் இருவருக்குள்ளும் சகோதர பாசத்தை மீறிய ஒரு நட்புணர்வு இருக்கும்.கடைக்குட்டி என்பதாலும் மற்றவர்களை விட படிப்பிலும் புத்திசாலிதனத்திலும் மாதேஷ் கெட்டிகாரனாக இருந்ததால் எல்லாருக்கும் அவன் மீது பாசம் அதிகம்.

“சரிங்க சம்பந்தி....அடுத்த மாசம் கல்யாணத்தை முடிச்சுடலாம்...நீங்க சொன்ன மாதிரி அந்த மண்டபத்தை பேசி முடிச்சிடறேன். மற்ற தகவல்களை அப்புறம் கலந்து பேசிக்லாம் அப்போ நாங்க கிளம்பறோம்” என அவர்கள் செல்ல வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார் கற்பகம் ...அங்கு தனது புத்திரர்கள் அடித்துபிடித்து உருண்டு கொண்டிருக்க..... மலர்விழியோ அமைதியாக அருகில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

“டேய் என்ன பண்றீங்க இரண்டு பேரும்” என அவர் கோபமாக அவர்களை முறைக்க அவரை கண்டதும் சகோதரர்கள் இருவரும் வாயை துடைத்து கொண்டு அமைதியாக நின்றனர்.

“அறிவிருக்கா உங்களுக்கு........ ...உண்மையா சொல்லுங்க...யாரு இதெல்லாம் கொட்டினது” என அவர் கேட்க

இருவருமே தாங்கள் இல்லை என சொல்லவும்

அவர் மலர்விழியை கேட்க அவளோ மாதேஷை கை காட்டினாள். 1

அவனை முறைத்தவர் “ஏண்டா இப்படி பண்ற...இனி உனக்கு ஜாமுன் கிடையாது போ ......முதல்ல இந்த இடத்தை சுத்தம் பண்ணுங்க” என சொல்லி விட்டு ஜாமூன் பாத்திரத்தை எடுத்து சென்றார்.

.தன்னை அம்மாவிடம் மாட்டிவிட்டு தனக்கு பிடித்த பலகாரத்தையும் சாப்பிடமுடியாமல் செய்த மலரின் மேல அவனின் முழு கோபமும் திரும்ப “போடி முட்டைகண்ணி ...நீ எதுக்குடி எங்க வீட்டுக்கு வந்த.....உன்னாலதான் எங்க அம்மா என்னை திட்னாங்க ..... ஜாமுனையும் எடுத்திட்டு போய்ட்டாங்க...உன்னை எனக்கு பிடிக்கலை ...நீ போ” என ஒற்றை கையால் அருகில் அமர்ந்திருந்தவளை அவன் தள்ளி விட அவள் தடுமாரி அருகில் இருக்கும் சுவற்றில் முட்டி கொண்டாள். வலி தாங்க முடியாமல் ஓ.......ஒ..... என அழ ஆரம்பிக்க அங்கு பெரியவர்கள் அனைவரும் வந்து விட்டனர். மலரை தன் அருகில் இழுத்து கொண்ட மாதேஷின் தந்தை “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா மாதேஷ்..... சின்ன பொண்ண இப்படி தான் தள்ளிவிடுவியா” என கோபத்தில் அவன் முதுகில் ஒரு அடி வைத்தார்.. எல்லாரும் சுற்றி நிற்க தன்னை தன் தந்தை அடித்ததும் அவனின் கோபம் மேலும் அதிகமாக அவளை முறைத்து கொண்டே நின்றான்.

அதற்குள் அங்கு வந்த கற்பகம் “ என்னாச்சு மறுபடியும் ஏதாவது பண்ணிட்டனா என்றவர் இவன் திருந்த மாட்டான் என திட்டி கொண்டே “டேய் மோகன் நீ இந்த பொண்ண அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வா.......அப்படியே இந்த பலகாரத்தையும் அவங்களுக்கு கொடுத்திடு.... என ஜாமுனையும் கொடுத்து அனுப்பினர்.

மாதேஷோ அவளை முறைத்தபடியே நின்று இருந்தான்.பலமுறை அவன் பெற்றோரிடம் திட்டு வாங்கி இருக்கிறான்........ ஏன் அடிகூட வாங்கி இருக்கிறான்...ஆனா ஏனோ இன்று அவன் தாய் திட்டியதும் , தந்தை அடித்ததும் அந்த பண்ணிரண்டு சிறுவனுக்கு அது தன்மான பிரச்சனையாக போய்விட்டது. எல்லாம் அந்த முட்டைகன்னியாள வந்தது என மனதிற்குள் கருவியபடி அவளை எரித்துவிடும் பார்வை பார்த்துகொண்டு நின்றான்.

ஆனால் அதை எல்லாம் உணராமல் அங்கு நடக்கும் நிகழ்வுகளை அப்பாவியாக வேடிக்கை பார்த்துகொண்டு நின்று கொண்டிருந்தாள் மலர்..

பழைய நினைவுகளின் சுழலில் மூழ்கி அவன் கண் மூடி இருக்க கரம் பற்றியவளோ அவன் தன் முகத்தை பார்க்க மாட்டனா என ஆவலுடன் அவனையே பார்த்துகொண்டிருந்தாள். அப்போது அவள் அருகில் வந்த தீபா “ஏண்டி மலரு அது என்ன உன் ஆளு நின்னுகிட்டே தூங்கிறார் .....ஒருவேளை இன்னைக்கு நைட் தூங்க முடியாதுன்னு இப்பவே தூங்கிறார் போல ” என அவள் காதில் கிசுகிசுக்க

மலரோ அதிர்ந்து அவள் புறம் திரும்பியவள் “நீ வேற கொஞ்சம் சும்மா இரு தீபா.....ஏற்கனவே எப்போ என்ன வெடிக்குமோன்னு நான் பயந்துகிட்டு இருக்கேன்...இதில நீ வேற எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்துற” என அவளை அடக்கினாள்.

தீபாவோ அலட்சியமாக “யாரு நீ பயபட்ரவ ....வேண்டாம் வேண்டாம்னு சொன்னவன பேசி பேசியே மயக்கி சொக்குபொடி போட்டு கடைசியா அவன் வாயாலே எனக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்ல வைச்சுட்டியே.....ஆத்தாடி உன் சாமர்த்தியம் யாருக்கும் வராதுமா” என அந்த நேரத்திலும் தன் மனதில் இருக்கும் கொதிப்பை வார்த்தைகளால் அவள் சொல்ல அது மலருக்கு புரிந்தாலும் அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

ஏனெனில் அதுதான் உண்மை..... அந்த ஊரில் படித்து நல்ல வேலையில் இருக்கும் சில இளைஞர்களில் மாதேஷும் ஒருவன். மேலும் குடும்பமும் கொஞ்சம் செல்வாக்கான குடும்பம்.....எனவே படிப்பு செல்வாக்கு இரண்டும் ஒரே இடத்தில இருக்கும் மாதேஷின் மீது ஊரில் தனி மதிப்புஇருந்தது.. .....இவள் மட்டும் அல்ல...ஊரில் உள்ள பெரும்பாலோர் இதைதான் தங்கள் மனதிற்குள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்..இவள் வெளிப்படையாக சொல்கிறாள் அவ்ளோதான்.இதை மலரும் நன்கு அறிவாள்.

பட்ட மரம் பூ பூக்குமா ?கத்தாழையில் தேன் வடியுமா ? இது சாத்தியமா ????? நேற்றுவரை இல்லை என்று சொன்னவர்கள் எப்போது மாதேஷ் மலர்விழி திருமணம் உறுதி செய்யபட்டுதோ அப்போதே இந்த உலகில் எதுவும் மாறலாம் என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

அன்று இரவு மாதேஷின் அறையில் அவனுக்காக மலர் காத்திருக்க அவனோ மொட்டை மாடியில் நிலவின் மடியில் தன் மனதின் நினைவுகளோடு மல்லுகட்டிகொண்டிருந்தான். மாதேஷ் என்பவன் பாசக்காரன் உறவுகளுக்காக உயிரையும் கொடுப்பவன்..... அதே நேரத்தில் ரோஷக்காரன்,எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காதவன்.....எதிர்காலத்தை பற்றிய கனவுகள் மனதில் கடலளவு நிறைந்திருக்க...... ஆனால் காலமும் நேரமமும் அவற்றை கடுகளவாக குறைக்க ஏமாற்றத்தின் வலியை வாழ்வின் ஏற்றத்திற்கான உரமாக மாற்றி ஆசைப்பட்ட படிப்பை துறந்து கிடைத்த படிப்பை படித்து அதிலும் வெற்றி பெற்றான். பல போராட்டங்களுக்கு இடையில் சாதரண பணியில் வங்கியில் நுழைந்து இப்போது வங்கியின் மேலாளராக பதவி உயர்வு பெற்று இன்றும் அந்த குடும்பம் மதிப்பும் மரியாதையோடு இருப்பதற்கு அவனும் ஒரு காரணம்.

குடும்பத்திற்காக, ஊருக்காக என பல நேரங்களில் நாணல் போல வளைந்து கொடுத்தவன் தனக்கான வாழ்க்கை என வரும்போது எந்த சமரசமும் வைத்துகொள்ளகூடாது. தன் தனிப்பட்ட வாழக்கை தன் விருப்பம் போல தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். ஒவ்வொரு முறையும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும்போது அவனுடைய வேண்டுதலில் இதுவும் ஒன்று....என் மனதிற்கு பிடித்தவள் தான் என் மனைவியாக வரவேண்டும் என சொல்லிகொண்டே இருப்பான்.

ஆனால் இன்று நடந்ததோ அதற்கு நேர்மாறாக...அவனின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக எல்லா விதத்திலும் என அவன் நினைக்கும்போதே அவன் மனம் வேதனையில் வெம்பி ததும்ப அப்போது “டேய் உன்னை எல்லாரும் கீழ காணோம்னு தேடிட்டு இருக்காங்க...நீ இங்க என்னடா பண்ற ” என்றபடி அவனது சகோதரன் மோகன் மாடிக்கு வந்தான்.

அவனது சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்டவன் “ம்ம்ம் என்னடா அண்ணா “ என கேட்க ஆம் மாதேஷ் அவனை அப்படிதான் அழைப்பான்.... மோகன் சகோதரன் மட்டும் அல்ல ..ஒரு நல்ல நண்பனும் கூட... 2

அவனின் வாடிய முகத்தை பார்த்ததும் காலையில் திருமணம் முடிந்து புது மாப்பிள்ளை ஜொலிப்பில் இருக்க வேண்டியவன் இப்படி இருண்ட முகத்துடன் நிற்கிறானே என மனம் கனக்க “என்ன மாதேஷ் இது.....இங்கபாரு எல்லாம் முடிஞ்சிடுச்சு... நீ இப்படி தனியா உட்கார்ந்து எவ்ளோதான் யோசிச்சாலும் இனி ஏதும் மாற போறது கிடையாது ...எது நடந்ததோ அது நன்றாக நடந்தது...எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது...எது நடக்குமோ அதுவும் நன்றாக நடக்கும் இது கீதா சாரம்.....உன் வாழ்க்கையும் அப்படிதான்......நல்லதே நினை.....கண்டிப்பா நல்லது தான் நடக்கும்” என சகோதரனின் மனநிலை அறிந்து அவன் அறிவுரை சொன்னான்.

“என்னால முடியலைடா .......நான் தோத்துபோய்ட்டனோ” என சொல்லும்போதே அவன் குரலில் ஒரு நடுக்கம் வர

“ச்சீ வாய் மூடு...... என்னடா பேசற நீ..... இது கல்யாணம்டா.....யாருக்கு யாருன்னு நம்ம பிறக்கும்போதே ஆண்டவன் எழுதி வச்சிருப்பான்..... அது தன் நடக்கும். இதில வெற்றி தோல்வின்னு ஏதும் கிடையாதுடா” என தன் மனதோடு போராடி கொண்டிருப்பவனை தன்னோடு அணைத்து மோகன் ஆறுதல் சொன்னான்.

அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் அழுகையாய் வெடிக்க “என்னால முடியலைடா அண்ணா ..... என்னோட மொத்த வாழ்கையும் மத்தவங்களுக்காகவே முடிஞ்சிடுச்சோன்னு தோணுது...........இனி எனக்குன்னு என்ன இருக்கு” என கம்பை தேடும் கொடிபோல ஆதரவற்று இருந்தவன் அவனை பார்த்ததும் கட்டிபிடித்து கதறி மனதில் உள்ள பாரங்களை கொட்டி தீர்த்துவிட்டான்.

“டேய் டேய் மாதேஷ் என்னடா இது...ஏண்டா இப்படி எல்லாம் பேசற” என பதறிய மோகன் “இப்போ எதுவும் மோசம் போகலடா...இங்க பாரு...என்னை பாருடா” என தன்னிடம் இருந்து அவனை பிரித்து தன் முன் நிறுத்தியவன் “இங்க பாரு என்னை பாரு” என கண்ணை மூடியபடி அரற்றி கொண்டிருந்தவனை உலுக்கி அவனை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

மனதில் சூறாவளியாக சுழன்று கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் கண்ணீரும் கதறலுமாக கொட்டி விட்டதால் மனம் சற்று லேசாக மோகனை நிமிர்ந்து பார்த்தான் மாதேஷ்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ பின்னர் பின்னர் “சரி வா கீழ போகலாம்” என சொல்லிவிட்டு மாதேஷ் முன்னே நடக்க அவனை கை பிடித்து தடுத்தான் மோகன் .

“ஏண்டா” என கேள்வியாய் மாதேஷ் திரும்பி பார்க்க

அவனை தன் அருகில் அழைத்து அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன் “உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலையா” என ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து கேட்டான்.

மாதேஷ் பதில் சொல்லாமல் தலை குனிய

“உன்கிட்ட சம்மதம் கேட்டு தான் ஏன் கடைசியா நாங்க வேண்டாம்னு சொன்ன போதும் நீ தான் நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதால தான் இப்போ இந்த கல்யாணம் நடந்தது” என மீண்டும் அவன் அழுத்தமாக சொல்லவும்

ஆமாம் என்பது போல் மாதேஷ் தலை ஆட்ட

“அப்போ உனக்கு நல்லா புரியுதுல.....அப்புறம் எதுக்கு இந்த குழப்பம்” என அவன் அழுத்தமாக அதே நேரத்தில் மிரட்டலாக கேட்டான்.

சட்டேன்று தமையனை நிமிர்ந்து பார்த்தவன் அவன் கண்களில் தெரிந்த அந்த வலி எல்லாம் தெரிஞ்ச நீயுமா ? என்பது போல் இருக்க அதை புரிந்து கொண்ட சகோதரனோ “இங்க பாரு மாதேஷ் நான் உனக்கு அண்ணன் தான்....ஆனா அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா.....உனக்காக அந்த பொண்ணு பட்ட கஷ்டம் இருக்கே கொஞ்சம் நஞ்சம் இல்லடா.....நீயாவது கோபத்தை எரிச்சலை வார்த்தையால கொட்டிட்டு போன...ஆனா இந்த கல்யாணம் முடியற வரை அந்த பொண்ணு மனசு துடிச்ச துடிப்பு அது கண்ணுல தெரிஞ்சுதுடா.....உன் மேல உசிரே வைச்சிருக்கு.....நம்ம விரும்பிற பொண்ண விட நம்மல விரும்பிற பொண்ணோட வாழ்றது தான் எப்பவும் நல்லது. வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்.....அதனால நீ கிடைச்ச வாழக்கையை சிறப்பா அமைச்சுக்க பாரு...வீணா மனச போட்டு குழப்பிக்காத” என வாழ்வின் நிதர்சனத்தை எடுத்து சொன்னான்.

அதுவரை தன் நினைவுகளுக்குள் மட்டுமே மூழ்கி இருந்தவன் மலரின் பெயரை கேட்டதும் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் “சரி நான் கீழே போறேன்” என்றபடி வேகமாக படி இறங்கினான்.

மாதேஷின் மனநிலை மோகன் நன்கு அறிவான். ஆனாலும் அதையும் தாண்டி மலரின் பெயரை கேட்டதும் அவனது இறுகிய முகம் சற்று இளகியதை கண்டுகொண்டவன் அவன் மனதில் இருக்கும் திரையை அவனாக விலக்கினால் தான் உண்டு என நினைத்தவாறே அவனும் கீழே வந்தான். .

“ஏங்க நீங்க எங்க போனீங்க? உங்க அப்பா உங்களை தேடிட்டு இருந்தாரு” என்றபடி மோகனின் காதல் மனைவி மீனாட்சி என்கிற மீனா அங்கு வந்தாள்.

“நான் இங்கதான் இருந்தேன்.....ஆமா நீ இன்னும் தூங்காம என்ன பண்ற....எங்க என் வாரிசு கயல் குட்டிம்மா தூங்கிட்டாளா? நீயும் போய் தூங்கவேண்டியது தான மீனு செல்லம் என காதல் மனைவியை பார்த்ததும் மனம் மையல் கொள்ள மீனாவை தன் தோளோடு சேர்த்து அணைக்கவும்

“அச்சோ என்னங்க இது....சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்க...இப்போ போய் என்ன பண்றீங்க....யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என அவனிடம் இருந்து வெட்கப்பட்டு விலகி நின்றாள் அவன் மனைவி.

“என்னடி இது கொடுமையா இருக்கு.....பரிசம் போட்டு ஆயிரம் போருக்கு சோறு போட்டு முறைப்படி உன்னை கல்யணம் பண்ணிருக்கேன்டி.....உன்னை தொட என்னைவிட வேற யாருக்கு உரிமை இருக்குனு கேட்கிறேன்” என சரசமாக பேசிகொண்டே அவளின் அருகில் மேலும் நெருங்கினான்.

“ஆமா ஆமா இந்த வெட்டி சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என முகத்தில் இடித்தபடி அவள் சொல்லவும்

“வேற எதுக்குடி குறைச்சல் ம்ம்ம்” என்றபடி அவளின் இடுப்பில் கைகொடுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன் “என்னடி காதலிக்கும்போது எப்படி இருந்தனோ இப்போ வரைக்கும் அப்படித்தான இருக்கேன் என காதல் மொழியில் சொன்னவன் காலையில கல்யாணத்தில பச்சை கலர் பட்டு புடவையில உன்னை பார்த்தும் கிறங்கி போயிட்டேன்டி ...அப்படியே அள்ளி அணைச்சு இச்சு இச்சுனு” என அவன் பேச்சு எல்லை மீற

“கடவுளே முதல் விடுங்க என்னை என அவனை தள்ளி விட்டவள் ஆறுவயசு புள்ளைக்கு அப்பா மாதிரியா பேசறிங்க......வயசு ஆக ஆக பேச்சும் புத்தியும் போகுது பாரு” என அவனிடம் இருந்து விலகவும் மோகனின் தாயார் அங்கு வரவும் சரியாக இருந்தது. 3

“மீனாட்சி உன் தங்கச்சிக்கு அலங்காரம் எல்லாம் முடிச்சு அனுப்பிட்டியா” என அவர் கேட்க

அதுவரை இருந்த சந்தோசம் எல்லாம் மறைந்து முகத்தில் பயத்தின் ரேகை ஓட இன்று யார் கண்ணில் பட்டுவிட கூடாது என்று நினைத்தாளோ அவரே அவள் முன் நிற்கவும் வெலவெலத்து போனாள் அவள்.

“அது வந்து போய்...வந்து” என அவள் தடுமாற

“என்னாச்சு...அனுப்பினியா இல்லையா” என கற்பகம் மீண்டும் கேட்கவும்

“ம்ம்ம் அப்பவே எல்லாம் முடிச்சு அனுப்பியாச்சு அத்தை” என்றவள் பின்னர் மெதுவாக “அத்தை அது வந்து” என தயங்க

“என்ன மீனாட்சி சொல்லு” என கற்பகம் கேட்கவும்

“என் தங்கச்சி மேல அப்புறம் என் மேல உங்களுக்கு வருத்தம் ஒன்னும் இல்லையே” என தன் மனதில் நினைத்ததை ஒருவாறு திக்கி திணறி கேட்டுவிட்டாள் மீனாட்சி.

அவரோ அவளை ஆழ்ந்து பார்த்தவர் “இங்க பாரு மீனாட்சி எனக்கு என் பசங்க சந்தோசம் தான் முக்கியம்.....உன்னை பிடிச்சிருக்குனு என் பையன் வந்து சொன்னப்ப நான் ஏதும் மறுப்பு சொல்லலை.ஏன்னா உனக்கும் அவனை பிடிச்சு இருந்தது.....ஆனா மாதேஷ் விஷியத்தில அப்படி இல்லை...ஏதோ ஏதோ குழப்பம் நடந்திடுச்சு...ஆனாலும் மாதேஷ் வந்து நான் மலரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதால தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்....என் பையனுக்கு பிடிச்சிருந்தா எனக்கு அது போதும் .....சரி சரி இனி நடந்து முடிஞ்சத பத்தி பேசவேண்டாம்....போய் மத்த வேலைகளை கவனி” என கடைசியில் மாமியாரின் அதிகாரத்தோடு அவர் பேசிவிட்டு செல்ல

திருமணத்தின் ஆரம்பித்தில் இருந்தே குழப்பத்தோடு இருந்த மீனாட்சிக்கு இப்போது சற்று நிம்மதியாக இருந்தது.ஏனெனில் மீனாட்சி சித்தி பெண் தான் மலர்விழி அவள் திருமணத்தில் இருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது..... அதனால் தான் இந்த திருமணத்தில் அவள் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை.... எங்கே தனது மாமியார் இதை வைத்து தன்னை ஏசி விடுவாரோ என பயந்து திருமணத்தின் போதுகூட அவள் முன்னே செல்லவில்லை.இப்போது தான் அவள் மனம் சற்று தெளிவானது.

இங்கு மாதேஷின் அறையில் படபடக்கும் இதயத்தோடு மணாளனின் வரவுக்காக மணமகள் காத்திருக்க அவனோ வெகுநேரம் கழித்து அறைக்குள் வந்தான். உள்ளே வந்தவன் இன்று முதல் இரவு, தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் உடை மாற்றி விட்டு கட்டிலில் சென்று உறங்க ஆரம்பித்தான்.

மனதில் கலக்கமும் , மருண்ட விழிகளுடன் ஒரு பெரிய போராட்டத்தை சந்திக்கும் மனநிலையில் அவள் எதிர்பார்த்திருக்க அவனோ எதுவும் பேசாமல் சாதாரணமாக உடை மாற்றிவிட்டு உறங்க ஆரம்பிக்கவும் சில வினாடிகள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இது கனவா என தன்னை தானே ஒருமுறை கில்லி பார்த்தவள் நிஜம் தான் என தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பக்கம் இன்று தப்பிவிட்டோம் என நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாலும் அவன் மேல் கொண்ட காதல் சற்று வருத்தம் கொடுக்க அவனை வெறித்தபடி பார்த்துகொண்டு நின்றாள். எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.....

அப்போது “அதான் நீ நினைச்ச மாதிரி கல்யாணம் முடிஞ்சிடுச்சே . இன்னும் ஏன் இந்த லுக்கு .....உனக்கும் களைப்பா இருக்கும் வந்து படுத்து தூங்கு” என உறங்கும் நிலையிலே திரும்பி பார்க்காமல் சொன்னான் அவன்.

ஏதோ அசரீரி போல என அவள் சுற்றும் முற்றும் பார்த்தவாறு அங்கே நிற்க

“இன்னும் நீ தூங்கலையா” என மீண்டும் அவன் கேட்கவும்

அப்போது தான் அவன் சொல்கிறான் என உணர்ந்தவள் “இல்லைங்க அது வந்து வந்துஊஊ எங்க... எங்க படுக்க” என அவள் தடுமாற

படுத்திருந்தவன் வேகமாக அவள் பக்கம் திரும்பி “ஏன் மகராணிக்கு தேக்கு மரகட்டிலும் இலவம்பஞ்சு மெத்தையும் சாமரம் வீச நாளு சேடிகளும் இருந்தா தான் தூங்குவிங்களோ” என நக்கலாக கேட்க

“இல்லை அப்படி எல்லாம் இல்லைங்க” என வேகமாக மறுத்தவள் “கட்டில்ல நீங்க படுத்திருக்கீங்க ...அதான் நான் எங்க படுக்கிறது” என கேட்கவும்

ஒரு நிமிடம் அவளை மேலும் கீழும் கண்களால் அளவெடுக்க

“இல்லைங்க அது வந்து” என ஏற்கனவே பயத்தில் முகம் வேர்த்திருக்க இப்போது அவனது குறுகுறு பார்வை உடம்புக்குள் ஊடுருகவும் ஒருவிதமான உணர்வு அவளை ஆட்டுவிக்க நிற்க முடியாமல் அவள் தடுமாறினாள்.

“ஹே ஹே என்னாச்சு’” என கேட்டுகொண்டே அவன் எழுவதற்குள் அவள் மயங்கிவிழுந்தாள்.

வேகமாக எழுந்து வந்து அவளை தன் மடியில் அள்ளி போட்டவன் “மலர்..மலர் இங்க பாரு இங்க பாரு” என அவள் முகத்தை பிடித்து உலுக்கினான். அவள் கண் திறக்காமல் இருக்கவும் அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து முகத்தில் அடிக்க லேசாக அசைந்தவளின் வாய் தானாக “ பயமா இருக்கு ...பயமா இருக்கு” என முணுமுணுக்கவும் அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தவன் “இங்க பாரு மலரு ஒன்னுமில்லை ... பயபடாத நீ நல்லா தூங்கு” என அவன் அவள் நெற்றியை நீவியவாறு சொல்ல அப்படியே கண்களை மூடினாள்.

உறங்கி கொண்டிருந்தவளின் முகத்தை விழி அசையாமல் பார்த்து கொண்டிருந்தவன் குழந்தை தனம் போன்ற அவள் முகமும் அதற்கு நேர் எதிரான அவளது பிடிவாத குணமும் அவனை அடைவதற்கு அவள் எடுத்த பகீர முயற்சியும் அவன் நினைவுகளில் வந்து செல்ல ஒரு நிமிடம் தன் மீது அவள் வைத்திருந்த காதலை எண்ணி மனதில் ஒரு கர்வம் வந்து போக அதே நேரத்தில் அவள் நினைத்ததை சாதித்து விட்டால் நம்மால் முடியவில்லையே என்ற ஒரு கோபமும் அவனுக்குள் தோன்றியது.

அப்போது அவள் நன்றாக உறங்கியதும் அவள் தலையை தன் மடியில் இருந்து நகர்த்தி தலையணையில் வைக்க அவன் முற்பட ஆனால் அவளோ அவனது மேலாடையை இருக்க பிடித்திருந்தவள் விட மறுக்க அவள் உறக்கத்தை கலைக்க மனமின்றி அவளுடனே இணைந்து படுக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது.

“ கடவுளே உலகத்திலே எவனுக்கும் இப்படி ஒரு முதலிரவு அமஞ்சிருக்காது..... பொண்டாட்டி பக்கத்தில படுத்து இருந்தும் இருக்குது ஆனால் இல்லை அப்படிங்கிற நிலமையாகிடுச்சே...இப்படி SJ சூரியா மாதிரி என்னை புலம்ப வச்சுட்டாளே” என்றவாறே அவளை அணைக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்து போனான் மாதேஷ்.