அத்தியாயம் – 7
வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து சகோதர சகோதரிகள் எல்லாம் அனுபவித்து இறுதியில் வாய்ப்பு கிடைக்க அதனால் ஏற்பட்ட எரிச்சல், அதற்கு ஏற்றார் போல் சிறிய பெண்ணான மலரின் செயல்கள் இவனுக்கு எதிராகவே அமைய இவை எல்லாம் சேர்ந்து அவன் மனதில் மலர் என்ற பெயரை கேட்டாளே அங்கிருந்து நகர்ந்துவிடும் அளவிற்கு பாதிக்க பட்டிருந்தான். பின்னர் பள்ளி வாழ்க்கை முடியவும் அவன் குடும்பத்தில் ஒரு பெரிய சூறாவளி வீச சில வருடங்கள் அந்த குடும்பம் அதில் சிக்கி சிதலடைந்து பின்னர் மெதுவாக மீண்டு இந்த நிலைக்கு வந்ததுள்ளது. அந்த நினைவுகளை நினைத்து பார்க்கும்போதே அவனது இதய துடிப்பு எகிற ,உடல் விறைக்க அந்த நேரத்தில் அவனது அலைபேசி ஒலிக்கவும் அதில் இருந்து மீண்டு வந்தான்.
“ஹலோ” என அவன் குரல் மெல்லியதாக கேட்க
எதிர்புறத்தில் பேசிய மோகன் “டேய் மாதேஷ் எங்கடா போய்கிட்டு இருக்கீங்க? உன்னோட ஆபிஸ் பைல் இங்கே விட்டுட்டு போய்ட்டடா” என சொல்லவும்
எந்த பைல் என யோசித்தவன் “அடக்கடவுளே எல்லாமே எடுத்து வச்சேன்....அத மறந்திட்டேன் ..... இப்போ என்ன பண்றது” என பதற
“நீ கவலைபடாத ...அதை எடுத்துகிட்டு நானும் மீனாவும் சேலம் வரோம்....பெரியவங்க யாரும் இல்லாம நீங்க மட்டும் போறது சரியா இருக்காதுன்னு அப்பாவும் சொல்லிக்கிட்டு இருந்தாரு....அதனால எங்களை போக சொன்னாங்க ...நாங்க வரோம்” என்றான் மோகன்.
“என்னது நீ வரீயா....அதெல்லாம் வேண்டாம் “ என மாதேஷ் சற்று வேகமாக சொல்லவும்
அதுவரை எந்த கவனமும் இல்லாமல் இருந்த மலர் அவனது வேகமான பேச்சில் திரும்பி அவனை பார்த்தாள்.
அதற்குள் மோகன் “டேய் ஏண்டா அலற......எனக்கும் இங்கிதம் தெரியும்டா.....நைட் இருக்க மாட்டோம் வந்திடுவோம்” என நமுட்டு சிரிப்புடன் சொல்ல
“டேய் அண்ணா” என அவன் பல்லை கடிக்க
அதற்குள் “யாருங்க”? என அருகில் இருந்த மலர் கேட்கவும் “சரி நீ வந்து சேரு...வீட்டுக்கு வருவில உன்னை கவனிச்சுக்கிறேன்” என்றபடி போனை வைத்து விட்டு திரும்பியவன் அவளிடம் விபரத்தை சொல்லி “மோகனும் மீனாவும் வராங்களாம்” என்றான்.
“ஹப்பா அக்கா வராங்களா ....எனக்கும் எங்கடா தனியா போறாம்னு மனசுக்குள்ள பயமா தான் இருந்தது...நல்லவேளை அக்கா வராங்க” என சொல்லியபடி நிம்மதி பெருமூச்சு விட
அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்த்தான்.
அவன் முகத்தை பார்த்து துனுகுற்றவள் “ஏங்க அப்படி பார்க்கிறீங்க? ” என கேட்கவும்
“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை...ஏண்டி அன்னைக்கு மண்டபத்தில அத்தனை பேர் இருக்கிறப்பவே “நான் உங்களை விரும்பறேன்.....உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்றேனு சொன்ன ஆள் நீ..... ஆனா இப்போ நீ என்கூட தனியா வரதுக்கு பயபட்றேனு சொல்ற...என்ன கொடுமைடா இது” என அவன் கிண்டலாக அதே நேரத்தில் கோபமும் கலந்திருந்தது.
அவன் சொன்னதும் சட்டென அவள் முகம் வாடிவிட சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின்னர் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “நான் எந்த தப்பும் செய்யலை..... மனசில இருக்கிறத சொல்றதுக்கு எதுக்கு பயப்படனும்.....ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் இருந்தாலும் என்னோட வாழக்கை நீங்க தான்னு கண்டிப்பா நான் சொல்லுவேன்” என அவள் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தத்துடன் சொல்ல அந்த உறுதியில் சற்று மிரண்டுதான் போனான் அவள் காதல் கணவன்.
காரில் செல்லும் இரண்டு மணிநேர பயணத்தில் அதற்கு பின்பு இருவரும் எதுவும் பேசவில்லை. வார்த்தைகள் தொலைந்து போக மன எண்ணங்களின் ஓட்டமோ அவர்களின் கட்டுபாடின்றி சுற்றிகொண்டிருந்தது.மனதில் மணாளனாக அவனை நினைத்தப் பின் தனக்கு கணவனாக வேறு ஒருவனின் பெயரைகூட அவள் கேட்க விரும்பவில்லை. அதனால் தான் அத்தனை பேர் நிறைந்திருந்த சபையில் அவளால் அவனிடம் அப்படி பேச முடிந்தது.
அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் அவள் உடல் சிலிர்த்து போகும்.அதிர்ந்து கூட பேச தெரியாத அழகு பதுமையாய், வீட்டிற்குள்ளே அன்னை தந்தையின் சிறகுக்குள் அடைகாத்து செல்லமாக வளர்க்க பட்டவள் இந்த மான்விழியால். அவள் கேட்பதற்கு முன்பே அவள் மனம் அறிந்து அவள் தந்தை செய்து விடுவதால் அவளின் பிடிவாதமும் அழுத்தமும் வெளிவராமல் இருந்தது. சில நேரங்களில் “நான் தான் இப்படி பேசினேன்னா” என அவளே ஆச்சரியப்பட்டு போவாள். அந்த நேரத்தில் அவளின் உடல் பொருள் ஆவி எல்லாம் மாதேஷ் மட்டுமே நிரம்பி இருந்தான்.அவனின்றி அவள் அணுவும் அசையாது என்ற சூழ்நிலையில் தான் அவள் இருந்தாள்.
அப்போது “ஹே என்ன முழிச்சுகிட்டே தூங்கிற...வீடு வந்திடுச்சு” என மாதேஷ் அவளை உலுக்க” ஓ வந்திடுச்சா “என்றபடி வேகமாக அவள் கீழே இறங்கினாள்.
அது ஒரு இரண்டு அடுக்குமாடி கட்டிடம். இவர்களின் கார் சத்தம் கேட்டதும் வெளியில் ஒருசிலர் தலையை நீட்ட, அதற்குள் கீழ் இருக்கும் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தார்.
“அடடா மாதேஷ் வந்தாச்சா ...ஏய் மங்களம் சீக்கிரம் வெளியே வா ..மாதேஷ் அவன் பொண்டாட்டியோட வந்திருக்கான்” என சத்தம் போடவும், அதற்குள் பெரிய உருவத்துடன் ஒரு பெண்மணி ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார்.
“வாப்பா மாதேஷ்” என அன்புடன் அழைத்தவர் இருவருக்கும் ஆரத்தி சுற்றி பின்னர் இப்போ நீங்க உள்ள போங்க என அனுப்பிவைத்தார்.ஏனோ மலரின் மனம் இந்த நிகழ்வில் சற்று குளிர்ந்து போனது. முதல் நாள் இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை. மாதேஷ் பற்றிய அனைத்து விபரங்களும் அவளுக்கு தெரியும். ஆனால் அவன் வசிக்கும் இடம் அதை சுற்றி இருப்பவர்கள் எப்படி ,மேலும் தாய் தந்தை இல்லாமல் முதல் முறையாக அவள் ஊரைவிட்டு செல்கிறாள்.இப்போது அந்த பயம் சற்று தெளிய மனநிறைவுடன் அவள் நிமிர்ந்து பார்க்க அதற்குள் அவளை விட்டு அவன் முதல் மாடி ஏறி இருந்தான். உடனே வேகமாக அவன் பின்னால் இவளும் ஓட
அவள் வருவதற்குள் மாதேஷ் வீட்டை திறந்து உள்ளே சென்றுவிட இவளோ இரண்டாவது மாடியில் எந்த வீடு என தெரியாமல் தனியாக நின்று சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தாள். இவர்கள் வருவதற்கு முன்பாகவே பொருட்கள் கொண்டு வரப்பட்டு எல்லாம் அந்த அந்த இடத்தில் வைக்க பட்டிருந்தது.அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மாதேஷ் செய்து இருந்தான். பெரியவர்கள் யாரும் வரவேண்டாம்....உங்கள் வேலையை பாருங்கள் , நான் பார்த்துகொள்கிறேன் என மாதேஷ் சொல்லிவிட்டதால் யாரும் உடன் வரவில்லை . உள்ளே வரும்போது இருந்த தைரியம் இப்போது காணமல் போக அதற்கு ஏற்றார் போல் மாதேஷும் அவளை கண்டுகொள்ளாமல் சென்றுவிட அவள் மனதில் முதல் முறை பயம் சூழ்ந்தது.
கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நிற்க, எங்கு செல்வது, அனைத்து வீடுகளும் ஒன்று போல் இருப்பதால் அவளுக்கு புரியவில்லை. அவள் தடுமாறிக்கொண்டு நிற்க சில நிமிடங்கள் யாரும் வெளியே வரவில்லை. மலரின் உடல் லேசாக நடுங்க மாடிபடியின் கம்பிகளை இறுக்க பிடித்தபடி அவள் நின்று இருக்க கண்களில் இருந்து கண்ணீர் முத்துகள் கீழே விழும் அந்த நேரத்தில் அவள் தோள்களை சுற்றி ஒரு கை வளைக்க வேகமாக கண்களை திறந்தவள் மாதேஷ் அவளை தன்னோடு சேர்த்தபடி “இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...மூணாவது வீடு தான் நம்மளுடையது வா” என அழைத்து சென்றான்.
நடுகாட்டில் நிற்பது போல தவித்து இருந்தவள், திடீரென அவன் தோளோடு சேர்த்து வளைக்கவும் மறுபேச்சின்றி அப்படியே அவன் மேல் சாய்ந்தபடி நடந்தவள் வீட்டிற்குள் நுழைந்தாள். ஆம் அவர்கள் வாழபோகும் அந்த வீட்டில் அவள் கணவனின் கைபிடியில் அவனது அரவணைப்பில் நுழைந்தாள்.உள்ளே நுழைந்த பின்னும் அவள் அந்த மோனநிலையிலே இருக்க “வீட்டுக்குள்ள வந்தாச்சு ..கண்ணை திறந்து பாரு” என மாதேஷ் அவள் காதில் சொல்ல அப்போது தான் கண்விழித்தாள்...
மனமும் உடலும் சிலிர்க்க நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள் இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்றாக கலக்க சில வினாடிகள் பார்வைகளின் பரிபாஷை ஓடிக்கொண்டு இருந்தது.காதலித்து திருமணம் செய்தவள் தான் என்றாலும் முதன் முறையாக மாதேஷின் அருகாமை ,நெருக்கம் இரண்டும் இப்பொழுது தான் அவள் உணர்கிறாள்.அந்த மயக்கத்தில் அவள் கிறங்கி நிற்க
அப்போது “டேய் தம்பிஈஈ” என்றபடி மோகனும் மீனாவும் உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டதும் இருவரும் வேகமாக விலகியவர்கள் “டேய் அண்ணா அதுக்குள்ள வந்திட்டீங்களா” என்றபடி அவனை நோக்கி செல்ல
“ஏண்டா தம்பி சிவா பூஜையில கரடி மாதிரி நுளைஞ்சுட்டோமோ” என நக்கலாக சிரித்தபடி அவன் கேட்கவும்
மாதேஷோ ஹிஹிஹி என வழிந்தவன் “இல்லண்ணா ..இடம் புதுசுல்ல ...அதான் அவளுக்கு சொல்லிட்டு இருந்தேன் என்றான்.
“யாரு நீ அவளுக்கு சொல்லி கொடுத்த” என கேலியாக கேட்டபடி மாதேஷையும் மலரையும் ஒரு பார்வை பார்த்தவன் “நீ சொல்லி கொடுத்து மலர் கேட்டுச்சு” என மீண்டும் கேட்கவும்
“ஏண்டா அண்ணா என் மானத்தை வாங்கிற “என அவன் அருகில் வந்து மாதேஷ் அவன் காதை கடிக்க
“விட்ரா விட்ரா இதுக்கு ஏன் டென்சன் ஆகிற....நீ படிச்சா ஸ்கூல் நான் டிகிரி வாங்கி இருக்கேண்டா......புருஷன்கிற போஸ்ட் வந்திட்டாலே இதெல்லாம் சாதரணமாடா” என கிண்டலாக சொல்லவும்.... மலர் மீனாட்சி இருவரும் அவர்களை முறைக்க.... மாதேஷும் மோகனும் பயபடுவது போல் நடிக்கவும்... மோகனின் முக சேஷ்டையை பார்த்து மலர் சிரித்துவிட உடனே அனைவரும் சேர்ந்து சிரிக்க அந்த வீட்டில் சந்தோசம் நிறைந்து இருந்தது.
ஆரத்தி எடுத்து முடிந்ததும் “வா” என சொல்லிவிட்டு எப்போதும் போல வேகமாக இவன் மாடி ஏறி வந்துவிட்டான்......,கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தவனின் கையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே வைத்துவிட்டு “ இதை எல்லாம் அந்த அறையில் கொண்டு போய் வை” என சொல்லிகொண்டே திரும்பியவன் அப்போதுதான் மலர் அங்கு இல்லாததை உணர்ந்தான்.
“மலர்..மலர்” என அவன் இரண்டு முறை அழைக்க பதில் இல்லாமல் போக
“அச்சோ எங்க போய்ட்டா இந்த லூசு ....நம்ம சொல்றத கேட்க கூடாதுன்னு முடிவோட இருப்பா போல” என திட்டிகொண்டே வெளியே வந்தவன் அதிர்ந்து நின்றான்.
அங்கு மாடிப்படியில் கம்பிகளை இறுக்க பற்றியபடி லேசான நடுக்கத்துடன் கண் மூடி அவள் நின்று கொண்டிருக்க அவள் முகத்தில் தெரிந்த தவிப்பு அவன் மனதை குத்தி கிழிக்க அவன் தவறு புரிந்து வேகமாக அவள் அருகில் சென்றான். அவள் கைகளை பற்றவும் அது சிலிர்த்து சில்லிடவும்...... அவளின் நிலை புரிய வேகமாக அவளை தன் தோளோடு அணைத்துகொண்டவன் “இங்க என்ன பண்ற ..நம்ம வீடு அங்க இருக்கு” என்றபடி அவளை உள்ளே அழைத்து வந்தான்.
என்னதான் அவள் மேல கோபமும் வெறுப்பும் இருந்தாலும் அவள் கலங்கி நின்றால் இவன் உருகி விடுவான். அதன் காரணம் என்ன என பலமுறை யோசித்தும் அவனுக்கு பதில் இல்லை.இப்போது அதே நிலைதான் அவனுக்கு.
சில நிகழ்வுகள் காலத்தால் நிர்ணயிக்கபட்டவை......அவற்றை அனுபவிக்க முடியமே தவிர ஆராய முற்பட்டால் முடிவு மீண்டும் ஆரம்பத்திலே வந்து நிற்கும்.
இங்கு மீனாவோ “ஹே வீடு சூப்பரா இருக்கு” என்றபடி அங்கும் இங்கும் சென்று பார்த்தவள் “ஆனாலும் மாதேஷ்குள்ள இப்படி ஒரு கலாரசிகன் இருக்கான்னு நான் நினைச்சே பார்க்கலை” என்றபடி அங்கு சுவற்றில் மாட்டி இருந்த பெயிண்ட்டிங்ஸ் எல்லாம் வியந்து பார்த்தபடி சொன்னாள் .மலரோ சிரித்துக் கொண்டே அமைதியாக நின்றாள் ஆனால் முகத்தில் “என் கணவன் இவன்” என்ற கர்வம் நிறைந்து இருந்தது.ஆனால் அது இப்போது வந்தது அல்ல....பல வருடங்களுக்கு முன்பே அவள் மனதில் பதிந்த நினைவு அல்லவா அது.
அதற்குள் “இன்னும் நீ இந்த புத்தகம் படிக்கிற பழக்கத்தை விடலையா மாதேஷ்.......ஊர்ல ஒரு வண்டி புத்தகத்தை இப்பதான் ஒதுக்கி வச்சிருக்கோம்...இங்கும் இவ்ளோ புத்தகம் வச்சிருக்க” என கேட்டபடி அந்த புத்தக அலமாரியில் உள்ள புத்தகத்தை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள் மீனா.
“எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்ப பிடிக்கும் மீனா...இங்க என்னோட பொழுதுபோக்கே அதான” ஆம் அண்ணன் மனைவி என்றாலும் மீனா என்றுதான் அழைப்பான்.மற்றவர்கள் முன்பு ஏங்க வாங்க என்று சொல்வான். “புத்தகம் இருந்தா போதும்...எனக்கு வேற எதுவும் வேண்டாம்” என சொல்ல மீனா மலரை திரும்பி பார்க்க அவளோ தமக்கையின் முகம் பார்த்தே அவள் சொல்ல வந்தது விளங்க அமைதியாக தலை குனிந்து நின்றாள்.
“ஏய் மலரு புத்தகம் எல்லாம் இப்படி வெளியே வாசல்ல கிடக்குது.....நீ எங்கடி போன” என குணவதி கத்தி கொண்டிருக்க
“பெரியம்மா அவ எங்க வீட்டுக்குள்ள இருக்கா மீனா வீட்டுக்கு போய்ட்டா” என்றபடி வீடில் இருந்து வெளியே வந்தான் பாஸ்கர்.
“‘இப்[பத்தாண்டா பள்ளிகூடம் விட்டு வந்தா ...அதுக்குள்ள அங்க எதுக்கு போனா...நாளைக்கு பரீட்சை இருக்கு படிக்கனும்னு சொன்னா..அப்புறம் அங்க எதுக்கு போனா “.... என அவர் கேள்வி கேட்க
“ஏதோ அவளுக்கு பிடிச்ச தல அஜித் படம் டிவியில போடறாங்களாம்.....அத பார்க்க போய்ட்டா” என்றான் அவன்.
“என்னது சினிமா பார்க்க போயிட்டாளா.....நாளைக்கு பத்தாவது பரீட்சை.....கொஞ்சம் கூட பயம் இல்லாம இந்த பொண்ணு இப்படி பண்ணுது.....ஏதோ நம்ம ஊரு ஸ்கூல்லா இருக்கிறதால இவளவ்வு வருஷம் பாசாக்கி விட்டுடாங்க...இப்போ கவர்ன்மென்ட் பரீட்சையில யார் வந்து பாஸ் பண்ணிவிட போறா...இந்த புள்ளைக்கு கொஞ்சாமாவது பொறுப்பு இருக்கா...படிக்கிறதுனாலே பத்தடி தூரம் தள்ளி ஓட்ரா...இவளை வச்சு நான் என்ன பண்றது” ....என புலம்பியபடி அவளை தேடி சென்றார் குணவதி.
ஆம் மலரும் படிப்பில் சுமார் தான். பார்டர் மதிபெண்ணில் பாசாகி விடுவாள்.பாடப்புத்தகம் மட்டும் அல்ல வேறு எந்த புத்தகமும் அவளுக்கு படிக்க பிடிக்காது. அவளுக்கு பிடித்தது டிவி, பாஸ்கர் ,மீனாவோடு விளையாடுவது இது மட்டும் தான்.
மீனா மலரை பார்க்க அவளோ தரையை பார்க்க அதற்குள் அங்கு வந்த மோகன் “சரி சரி சீக்கிரம் சமையலை ஆரம்பிங்க...சாப்பிட்டு நம்ம கிளம்பலாம்.....இங்க வேற ஒரு பாசகார பயபுள்ள என்னை கொலவெறியோட பார்த்துகிட்டு இருக்கான்” என மாதேஷை பார்த்தபடி கேலி பேச .
“இருங்க மாமா கொஞ்ச நேரத்தில சமையல் தயாராகிடும்” என்றபடி வேகமாக சமையல் அறைக்குள் சென்ற மீனாவும் மலரும் அங்கு இருக்கும் பொருட்களை தேடி சமையலை முடித்தார்கள்...
பின்னர் உணவு வேலை முடிந்ததும் மீனாவும் மோகனும் சில பல அறிவுரைகளை சொல்லிவிட்டு தங்கள் ஊருக்கு கிளம்ப அவர்கள் செல்லும் வரை துருதுருவென அங்கும் இங்கும் வீட்டிற்குள் ஓடி கொண்டிருந்தவள் இப்போது மாதேஷும் உறங்க செல்ல இவள் தனித்து விடபட்டாள்.
முதன் முறையாக தாய் தந்தை இன்றி தனித்து இருக்கிறாள். அவளை தனியாக விட மாட்டார் குணவதி...சிறுபெண் பயபடுவாள் என சொல்லி பாஸ்கர் அல்லது மீனா இவர்களின் துணையோடுதான் மலர் எங்கும் செல்வாள். ஆனால் இப்போது வீட்டிற்குள் வரும்போது மாதேஷ் தனித்து விட்டு வந்ததும், இவளை கண்டு கொள்ளாமல் அவன் உறங்கிவிடவும் ஏனோ அவளுக்கு தனித்து விடப்பட்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்போது அவளது அன்னையின் நியாபகம் வர அந்த வார்த்தைகளும் உடன் வந்தது.
“இங்கபாரு மலரு கண்ட சினிமா ,மத்தவங்க சொல்றது இதை எல்லாம் கேட்டுகிட்டு ஆடாத.....கல்யாணம் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் சாதாரண விஷயம் அல்லடி....மனசு இரண்டும் ஒத்து போனா மட்டுமே அந்த வாழ்க்கை சுகப்படும்.இல்லை ரணம் தான் மிச்சமாகும். அவன் வேண்டாம்னு சொல்லும்போது நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிறது சரியா.....வேண்டாம் மலரு ..அம்மா சொல்றத கேளு கண்ணு .....உனக்கு நல்ல மாப்பிள்ளையை நாங்க பார்த்து தர்றோம்....உன் மனச மாத்திக்க மலர்” என குணவதி கெஞ்ச
“இங்க பாரும்மா நான் என் மனசில இவர் தான் எனக்கு புருஷன் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்.....என்னால் மாத்திக்க முடியாது.....எனக்கு அவர் வேணும்”..... என்றால் அவள்.
“ஆனா அவன் உன்னை வேண்டாம்னு சொல்றான் மலரு அதை புரிஞ்சுக்கோடி” என அவள் தாய் கோபமாக சொல்ல
“இங்க பாருங்க......அவங்க என்ன சொன்னாலும் பரவாயில்லை........ எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணி வைங்க.......வாழபோறது நான்.....அவர் என் கூட வாழ்வார்” ....என உறுதியாக சொன்னாள் அவள்.
“அப்படி என்னடி அவன்கிட்ட இருக்கு....அந்த வீட்ல யாருக்குமே இதில விருப்பம் இல்லை...நீ அங்க போய் தனியா கஷ்டபடுவ மலரு சொன்னா கேளு மலரு” என அவர் மீண்டும் மகளுக்கு உண்மையை புரியவைக்க முயற்சித்தார்.
ஆனால் அவளோ சிறிதும் இறக்கம் இல்லாமல் “இங்க பாருங்க நீங்க எவ்ளோதான் அழுது கெஞ்சினாலும் என் மனசு மாறாது. என்னோட முடிவு இது தான்” என சொல்லிவிட்டு எழுந்து செல்ல கண்களில் கண்ணீரோடு அவளையே பார்த்து கொண்டிருந்தார் குணவதி.
இந்த போராட்டம் இன்று தொடங்கியது அல்ல.....மீனாவின் திருமணம் நடத்தில் இருந்தே இதே போல் தான் நடக்கிறது.....மகளின் சுடும் வார்த்தைகளின் வெப்பத்தை குணவதி தன் கண்ணீர் கொண்டு தனித்து கொண்டிருந்தார்.
மாலை நேரம் மாதேஷ் தூங்கி எழுந்து வெளியே வந்தவன் வீடு திறந்தபடி இருக்க மலரை முன் அறையில் தேடியவன்,அங்கு அவளை காணாமல் உள்ளே வந்தவன் நினைவுகளின் அலையில் கண்கள் மூடி சமையல் அறையின் சுவற்றில் சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்தாள்.
விழி அசையாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் காலையில் இருந்து அவள் நடந்து கொண்டவிதங்கள் எல்லாம் நியாபகம் வர இதழில் மெல்லிய புன்னகை தோன்ற அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் அவன் வைத்துகொள்ள ஏதோ வெதுவெதுப்பாக உணர்ந்தவள் திடுக்கென விழித்து வேகமாக எழுந்தாள்.

Last edited: