• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 10

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் – 10

“என்னடி சொல்லாம திடுதிப்புன்னு வந்து நிற்கிற.....அடுத்த வாரம் தான வரேன்னு சொன்ன ...அதுக்குள்ள வந்திட்டீங்க......ஏதாவது முக்கியமான சமாச்சாரமா” என சமையல் அறையில் காய்கறி நறுக்கி கொண்டிருந்தவளை கேள்விகனைகளால் துளைத்து கொண்டிருந்தாள் மீனா.

“இல்லக்கா அவருதான் போலாம்னு சொன்னாரு அதான் கிளம்பி வந்திட்டோம்” என பதில் சொல்லிகொண்டே தனது வேலையில் கவனமாக இருந்தாள் மலர்.

“அதாண்டி கேட்கிறேன்...... இடியே விழுந்தாலும் இடிதாங்கி மாதிரி அந்த ஆபீஸ தாங்கி நிப்பாரு உன் வீட்டுகாறாரு ....... இதுவரைக்கு வேலை நாள்ல லீவு போட்டு ஒரு நாளும் ஊருக்கு வந்ததில்லை....இன்னைக்கு ஏன் வந்தாரு?...என்ன விஷயம்?.....ஒருவேளை நாமக்கல்ல புது கடை ஆரம்பிக்கிறேன்னு சொன்னாங்களே...அதுக்கா இருக்குமோ......இல்லியே அது அடுத்த மாசம் தான அப்புறம் என்ன?” என இல்லாத மூளையை கசக்கி காரணத்தை அவள் தேடிகொண்டிருக்க

மலரோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள்.

பின்னர் தனது வேலையை விட்டு விட்டு வேகமாக மலர் அருகில் வந்து அமர்ந்த மீனா “ஏண்டி ஒருவேளை உனக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனையா ...... நீ அவரை அடிச்சுட்டியா.......அதனால...” என அவள் முடிக்கும் முன்

மலரோ வேகமாக நிமிர்ந்து அவளை முறைக்கவும்

உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து அடுப்பின் அருகில் சென்று நின்று கொண்ட மீனா “இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ இந்த முறைப்பு முறைக்கிறா.... இவளை பத்தி தெரிஞ்சதுனால தான கேட்கிறேன்.......எப்படி கேட்டாலும் வாய் திறக்கிறாளான்னு பாரு.....அழுத்தக்காரி” என முணுமுணுத்துக் கொண்டே குழம்பு தாளித்து கொண்டிருந்தவள் மலரிடம் திரும்பி “அந்த நறுக்கின காய்கறியை பருப்புகுள்ள போடு மலரு..... நான் ரசத்துக்கு செலவு சாமானம் அரைச்சுட்டு வந்திடறேன்” என்றாள்.

“சரிக்கா” என்றபடி அவள் காய்கறி தட்டை எடுத்து கொண்டு அடுப்படிக்கு வந்தவள் அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் பருப்பு பாத்திரத்தில் கொட்ட

அருகில் சீரகம் எடுத்துகொண்டிருந்த மீனா “கொஞ்சம் கிட்ட நின்னு போடுடி ......பருப்பு தண்ணி மேல தெறிக்குது பாரு” என சொல்லவும்

‘ம்ம்ம் சரிக்கா” என்றபடி மீண்டும் அதே போல மலர் செய்ய

உடனே அவள் கையை பிடித்து ஏண்டி இப்படி போடா மாட்டியா என மீனா சொல்லவும்

“ஐயோ வலிக்குதுக்கா...” என கத்தியபடி வெடுக்கென அவள் பிடியில் இருந்து தனது கையை உருவினாள் மலர் .

“எங்கடி வலிக்குது” என உள்ளங்கைகளை விரித்து பார்த்த மீனா அதிர்ந்து நின்றாள்.

“என்னடி இதெல்லாம் ...ஐயோ கடவுளே.......இப்படி சாரை சாரையா பழுத்திருக்கு.....ஹே என்னாச்சுடி....என்னடி நடந்தது” என அவள் கோபமாக கேட்கவும்

“ஐயோ அக்கா கத்தாத....யாராவது வந்திட போறாங்க” என பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் அருகில் இல்லை என தெரிந்த பின்பே நிம்மதி பெருமூச்சு விட்டவள் “அது ஒண்ணுமில்லைக்கா...மருந்து போட்டிருக்கேன்....இரண்டு நாள்ல சரியாகிடும்” என சாதாரணமாக சொன்னாள்.

“ஏண்டி நீ என்ன முட்டாளா ...கை இப்படி பழுத்திருக்கு......அப்படி என்ன வேலை பார்த்த நீ......இல்லை இதில ஏதோ இருக்கு.....உண்மைய சொல்லு....என்ன நடந்திச்சு” என அவள் மிரட்டவும்

“இல்லக்கா நேத்து அவரு.... நான்...” என அவள் ஆரம்பிக்க

அதற்குள் “நினைச்சேன்.....அப்பவும் நினைச்சேன்.....ஏதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு......இது தேவையாடி உனக்கு.......இவன் தான் வேணும் வேணும்னு சொன்ன தான...இப்போ பாரு .....” என மீனா பேசிகொண்டே செல்ல

“ஐயோ அக்கா கொஞ்சம் என்னை பேசவிடறியா... நீ சொல்ற மாதிரி எதுவுமே நடக்கலை”...... என மீனாவை அடக்க மலர் கோபமாக கத்த அந்த சத்தத்தில் வெளியில் இருந்த மோகன் , மாதேஷ், கற்பகம் மூவரும் சமையல் அறைக்குள் வந்தனர்.

அவர்களை பார்த்தும் உடனே மலர் அங்கிருந்து வெளியே சென்றுவிட மீனாவோ திரு திருவென முழித்தபடி நின்று இருந்தாள்.

வீட்டினரை பார்த்ததும் மலர் எதுவும் நடக்காதது போல சென்றுவிட மீனாவோ என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறி கொண்டிருந்தாள்..

மலரோ அறையை விட்டு வெளியே வந்ததும் உள்ளங்கைகளை விரித்து உஷ் உஷ் என ஊதியவள் உயிர் போகும் வலி இருந்தாலும் இந்த ரணத்தில் அவனது மனதை அறிந்துகொண்டதை நினைத்து அவள் மனம் நிறைந்திருந்தது..

நேராக தங்கள் அறைக்கு சென்றவள் நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் படம் போல ஓட மனதின் வேதனையை மீறின புன்னகை அவள் இதழில் தோன்றியது.

மாதேஷ் காலையில் சாப்பிடாமல் சென்றது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. மதியம் முழுவதும் யோசித்து ஒரு வழி பிறக்க அதை செயல்படுத்தினாள் அவள்.

படிகளில் தாவி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வீட்டின் உள்ளே வந்த மாதேஷ் அவள் சாவகாசமாக டிவி பார்த்து கொண்டிருப்பதை பார்த்தான்.

முதலில் மேலிருந்து கீழாக அவள் உடல் முழுவதும் பார்வையால் அளந்தவன் “ஹப்பா...” என நிம்மதி பெருமூச்சுவிட

அப்போது டிவி பார்த்துகொண்டிருந்த மலர் அரவம் கேட்டு திரும்பியவள் அவன் வாசலிலே நிற்பதை பார்த்து “என்னங்க இவ்ளோ நேரம் கழிச்சு வரீங்க... .... என் மேல அன்புதான் இல்லை ...... அக்கறையாவது கொஞ்சம் வைக்கலாம்ல......ம்ம்ம் உங்ககிட்ட போய் இதெல்லாம் எதிர்பார்க்கிறது என் தப்புதான்” ...... என அவன் மனநிலை அறியாமல் பேசிகொண்டிருந்தவள் “சரி சரி சாப்பிட வாங்க....காலையிலும் சாப்பிடாம போய்ட்டிங்க” .. என சலிப்புடன் சொல்லி கொண்டே சமையலறை நோக்கி நடந்தாள் மலர் . 1 .....

அதுவரை அவளை முழுவதுமாக பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டிருந்தவன் மனம்..... அவளது கேள்வியில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப

அதை உணராமல் “சீக்கிரம் சாப்பிட வாங்க நேரமாச்சு” என சற்று வேகமாக பேசிகொண்டே திரும்பியவள் அப்படியே வெலவெலத்து போனாள்.

அங்கு வாயிற்படியின் இரு பக்கமும் கைகளை விரித்து பிடித்தபடி நின்று இருந்தவன் முகம் கோபத்தில் தீயாய் ஜொலிக்க, பார்வையாலே அவளை பஸ்பமாகுவது போல அவன் முறைத்து கொண்டு நிற்க

. “ ஐயோ கடவுளே என்னாச்சு...... சண்டியரு மாதிரி இப்படி விறைச்சுகிட்டு நிற்கிறாரு .......செத்தடி மலரு......என மனதிற்குள் புலம்பியவாறு கண்களில் பீதியுடன் அவனை பார்க்க .

சில நொடிகள் பார்வையாலே அவளை நடுங்க வைத்தவன் பின்னர் அவலை நோக்கி வர மலரின் கால்கள் தானாக பின்னோக்கி நகர்ந்தது..சுவற்றில் முட்டி நிற்கவும் அவளின் கைகளை அவன் பிடிக்கவும் சரியாக இருந்தது.

அவளது தோல்களை இறுக்க பற்றி அவளது முகத்தை நிமிர்த்தி கோபத்துடன் அழுத்தமான பார்வை பார்க்க

பயத்தில் அவளது இதழ்கள் துடிக்க,உடல் சிலிர்க்க “என்னங்க” என அவள் கேட்கும் முன்

“ஏண்டி ஏண்டி இப்படி பண்ற .......என்னை சாகடிக்கனும்னு முடிவோட கிளம்பி வந்திருக்கியா.....உனக்கு என்னடி நான் பாவம் பண்ணேன்......இப்படி அணுஅணுவா என்னை சித்தரவதை பண்ற” .......என அவளை பிடித்து வேகமாக உலுக்கியபடி அவன் கத்தவும்

அவன் எதற்காக இப்படி செய்கிறான் என புரியாமல் “ என்னாச்சுங்க...ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க” என அவள் கேட்க .

“ம்ம்ம் என்னாச்சா......கொஞ்ச நேரத்துல என்னை கதற வச்சுட்டடி...எங்கடி போய் தொலஞ்ச..... உன்னை தேடி ஒரு மணிநேரமா நாய் மாதிரி ரோடு ரோடா சுத்திட்டு இருக்கேன் ”....என்றவன்

“நான் எங்கும் போகலைங்க இங்கதான்” என மீண்டும் அவள் சொல்லி முடிப்பதற்குள்

“பொய் சொல்லாதடி....நான் வந்து பார்த்தப்ப வீடு பூட்டி இருந்தது....பக்கத்துக்கு வீட்ல கேட்டா தெரியலைன்னு சொல்றாங்க......போனும் உன்கிட்ட இல்லை...இடமும் புதுசு.......எங்க போனியோ ..என்னாச்சுன்னு தெரியாம உன்னை காணாம துடிச்சு போயிட்டேன்டி......இந்த ஒரு மணி நேரம் என் உசிரு என்கிட்டே இல்லை......ஏண்டி இப்படி பண்ண......” என ஆத்திரமும் கோபமுமாய் அவன் கேட்க அவளோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு நின்றாள்.

இந்த பரிதவிப்பும். உரிமையும் அவனது இந்த முகம் அவளுக்கு புதிது. மாதேஷின் அலட்சியமும், குத்தல் பேச்சுமே அவளுக்கு பரிச்சியம். ஆனால் இந்த பதட்டம், அவள் மீது அவன் கொண்டிருந்த இந்த பாசம், உன்னை காணோம்னு துடிச்சு போயிட்டேன்டி என அவன் சொன்ன அந்த வார்த்தை இவை யாவும் அவள் காதில் அசரீரி போல ஒலிக்க அவன் முகத்தை வைத்த கண் மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

அவனோ கோபத்தில் கத்திகொண்டிருக்க அவளோ அருகில் தெரியும் அவனது முக பாவனைகளை ரசித்து கொண்டிருந்தாள். “நீ என்னவன்......உன்னுள் நான் இருக்கிறேன்” என்ற பெருமிதத்தோடு அவள் பார்த்துகொண்டிருந்தாள்..

ஆம் மலர் காணவில்லை என்றதும் அவன் மனதில் இருந்த இரும்புத்திரை சற்று இலக்கம் கொடுக்க அவனை அறியாமல் மலரை பற்றி மனதில் இருந்த எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிவந்தன என்பதை அவன் அறியவில்லை.

ஆனால் அவள் உணர்ந்து இருந்தாள். அதன் சுகத்தில் அவள் திளைத்திருந்தாள். அவளை காணாமல் துடித்து, தேடி களைத்து, கிடைத்ததும் மகிழ்ந்து, பின்னர் ஆத்திரமும் கோபமும் என அனைத்து உணர்வுகளின் கலவையாய் அவன் குமறிகொண்டிருக்க அவளோ அந்த உணர்வை ரசித்து கொண்டிருந்தாள்.

ஆற்றாமையில் பொரிந்து தள்ளி கொண்டிருந்தவன் அவளது மௌனம் அவனை மேலும் உசுபேத்த கோபம் தலைக்கு ஏற “ஏண்டி நான் உசிரு போற வலியில பேசிகிட்டு இருக்கேன்............உனக்கு கிண்டலா தெரியுதா” என்றவனின் கைகள் கன்னத்தை பதம் பார்க்க அடுத்த நொடி சுருண்டு கீழே விழுந்திருந்தாள் மலர் .

“பிச்சிருவேன் ஜாக்கிரதை...... பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு........எல்லா விஷயத்துக்கும் அடங்கி போவேன்னு நினைக்காத” என கர்ஜித்துவிட்டு அவன் செல்ல

அவள் அறிந்தாளா இப்படி எல்லாம் நடக்கும் என்று...... அவள் ஒன்று நினைத்து செய்ய, அது அவளுக்கு எதிராக அமைய, அவள் சொல்ல வருவதையும் அவன் காது கொடுத்து கேட்க மறுக்க, இப்போது அவளை அடித்தும் விட்டான். அவளோ பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்


சில மணி நேரங்கள் கழித்து தங்களது அறைக்குள் வந்த மலர் அலுவலக உடை கூட மாற்றாமல் அவன் அப்படியே கட்டிலில் சரிந்து கிடப்பதை பார்த்தாள்.அவன் அருகில் வந்து நின்றவள் “ஏங்க...ஏங்க” என மெதுவாக அழைக்க

அவனிடம் இருந்து பதில வராமல் போக

அவன் கைகளை பிடித்து “என்னெங்க” என மீண்டும் அழைக்கவும்

கண்களை திறந்தவன் அவளை பார்த்ததும் முகத்தை சுளித்தவாறு திரும்பி கொண்டான்.

“இங்க பாருங்க நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் இன்னும் இரண்டு அடி சேர்த்து அடிச்சுடுங்க...ஆனா வந்து சாப்பிடுங்க......காலையில நீங்க சாப்பிடாம போனதே என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு...இப்பவும் பட்டினியா படுக்காதீங்க.....ப்ளீஸ் எழுந்து வாங்க” என அவள் கெஞ்சவும்

அந்த குரல் அவனை அசைக்க அவளை சிறிது நேரம் உற்று நோக்கியவன் “சரி போய் எடுத்து வை ..நான் வரேன்” என்றான்.

அதுவரை சோர்ந்திருந்த அவள் முகம் சட்டென பிரகாசம் அடைய “சரிங்க உங்களுக்கு பிடிச்ச டிபன் தான் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ” என சிறுகுழந்தை போல் சொல்லி குதூகளிக்க சில மணி நேரத்திற்கு முன்பு அவனிடம் அடிவாங்கியவள் என யார் சொன்னாலும் நம்பமாட்டார்கள்.

மாதேஷுக்கோ அப்படியே தலையே சுற்றுவது போல் இருந்தது.”இவள் தெரிஞ்சு செய்யறாளா ...இல்ல தெரியாம செய்யறாளா ... இவள எந்த கணக்குல சேர்க்கிறதுனே தெரியலையே” ...... என புலம்பிகொண்டே எழுந்தவன் உடை மாற்றிவிட்டு உணவு உண்ண வந்தமர்ந்தான். 2

அவன் முன் அவனுக்கு பிடித்த அடையும் வடகறியும் அவள் பரிமாற அதை பார்த்ததும் கண்ணில் ஒரு மின்னல் தோன்ற நிமிர்ந்து அவளை பார்த்தவன் அந்த பார்வையில் ஒரு மெச்சுதல் தெரிய அவளோ சந்தோஷமாக அவனுக்கு பரிமாறினாள்.

இரண்டு அடை உண்டபிறகு வேகமாக நிமர்ந்து கிரைண்டர் பார்த்தவன் அது மாட்டபடாமல் இருக்க கேள்வியோடு அவளை பார்க்க

அதை புரிந்து கொண்ட மலரும் “ நம்ம கிரைண்டர்ல இந்த மாவு அரைகலை” என்றாள்.

“அப்புறம் இந்த அடை “ என அவன் கேட்கவும்

உடனே “இல்லைங்க நீங்க சாப்பிடாம போனதும் மனசே சரியில்லை.....இங்க எலக்ட்ரிசன் யாரும் கிடைக்களை.....மொட்டை மாடிக்கு துணி காய போட போனேன்னா...அப்போ நம்ம வீட்ல இருந்து மூணாவது வீட்டு மாடியில ஆட்டுகல்லு இருந்திச்சு...... அதை பார்த்ததும் கையிலே அரைசிடலாம்னு தோனுச்சு.....சரி வெறும் அரிசி மாவு அரைக்காம உங்களுக்கு பிடிச்ச அடை செய்யலாம்னு நினைச்சேன்.....நீங்க ஆபிஸ்ல இருந்து வரதுக்குள்ள அரைச்சிட்டு வந்திடலாம்னு போனேன் .....ஆனாஆஆஆஅ” என நிறுத்திவிட்டு பயத்துடன் அவன் முகத்தை பார்க்க

அவள் முகத்தை பார்த்ததும் அவனுக்கு ஏதோ போல இருக்க “சரி சரி இனி எங்க போறதா இருந்தாலும் சொல்லிட்டு போ......இத நான் கேட்கும்போதே சொல்லி இருக்கலாம்ல” என்றான்.

“நீங்கதான் என்னை பேசவே விடலையே” என அவள் வருத்தமாக சொல்ல

அவள் முகத்தை பார்த்தவன் “ம்ம்ம் உன்னை காணோம்னு தேடி நான் பட்ட பாடு எனக்கு தான தெரியும்” என நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னான்.

“என்னது வீட்டுக்கு போன் பண்ணிங்களா” என அவள் பதற

“சரி அதெல்லாம் விடு......ஆமா நீயே இங்க புதுசு... உனக்கு என்ன தெரியும் ....இப்படிதான் அறிமுகமே இல்லாத வீட்டுக்கு போவாங்களா” என பேச்சை மாற்றினான்.

“நானும் முதல்ல அப்படிதான் பயந்தேன்...அப்புறம் உங்களுக்கு பிடிச்சத செஞ்சு கொடுக்கணும்னு நினைச்சேன்...அதான் தைரியாமா போய் அவங்ககிட்ட உங்க ஆட்டுகல்ல நான் கொஞ்சம் பயன்படுத்துக்கிட்டுமானு கேட்டேன்....அந்த அக்கா உடனே சரின்னு சொல்லிட்டாங்க....ரொம்ப நல்லவங்களா இருக்காங்க அந்த சுகன்யா அக்கா” என அவள் சிலாகித்து சொன்னாள்.

“எல்லாரையும் இப்படி நம்பாத மலரு......பழகி பார்த்தா தான் தெரியும் ஒருத்தரோட உண்மையான முகம்” என அவன் எச்சரிக்க

“இல்லைங்க அவங்க கூட பாரதி அக்கா, சங்கவி அக்கா, கீதாக்கா , வைஸ்ரீக்கா, ஷாசராக்கா, துஷாக்கா, துர்கா அக்கா எல்லாரும் நல்லா பேசினாங்க.....நீ எதுக்கும் பயப்படாத....எதா இருந்தாலும் உனக்கு உதவ நாங்க இருக்கோம் அப்படின்னு சொன்னாங்க பது பொண்ணுன்னு பார்க்காம அன்பா ஜாலியா பேசுனாங்க ” என பெருமையாக சொன்னாள்.

“ஏண்டி மாவு அரைக்க போனியா...இல்லை மக்கள் தொகை கணக்கு எடுக்க போனியா.....இத்தனை பேர் சொல்ற............பாவம் அவங்களுக்கு உன்னை பத்தின முழு விபரம் தெரியாதுல்ல...அதான் அப்படி பேசி இருக்காங்க...தெரிஞ்சுது உன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டங்க” என அவன் நக்கலாக சொல்ல

உடனே மலரின் முகம் வாடிவிட்டது.

அவள் முகத்தை பார்த்த பின்பே தான் சொன்னதின் அர்த்தம் அவனுக்கு புரிய அதற்கு பிறகு வாய் திறக்கவில்லை.

பின்னர் அவனுக்கு பால் எடுத்து வந்தவள் “ஏங்க பால் இங்க வச்சிருக்கேன் எடுத்துக்குங்க” என சொல்லிவிட்டு தனது படுக்கையை விரித்தாள்.

“அதை கொஞ்சம் எடுத்து கொடு” என அவன் படுத்தபடியே கேட்கவும்

அவள் எடுத்து கொடுக்கும்போது கை நடுங்க


“இப்போ எதுக்குடி ரொம்ப பயந்தவ மாதிரி நடிக்கிற ..... பால் தான் எடுத்து கொடுக்க சொன்னேன்” என எரிந்து விழுந்தான்.

“இல்லைங்க அது வந்து வந்து” என இழுக்க

அதற்குள் அவன் அவள் கையில் இருந்து பால் டம்ளாரை வேகமாக பிடுங்க

பால் கையில் பட்டதும் “ஐயோ அம்மா” என அலரியபடி கைகளை உதறினாள் மலர்,.

“என்னாச்சுடி இந்த சூடு தாங்க மாட்டியா” என கேட்டுகொண்டே அவள் உள்ளைங்ககைகளை பார்த்தவன் திடுகிட்டான்.

வேகமாக படுக்கையில் இருந்து எழுந்தவன் “என்ன ஆச்சு மலரு...அச்சோ கை என்ன இப்படி பழுத்திருக்கு” என கேட்கவும்

“அது ஒன்னுமில்லைங்க...ரொம்ப நாளைக்கு பிறகு ஆட்டுகல்லுல மாவு ஆட்டினேன்.....அதான் கை பளுத்திடுச்சு...மருந்து போட்டா சரியாகிடும்” என அவள் சாதரனமாக சொன்னாள்.

ஏற்கனவே கோபபடாமல் பொறுமையாக விசாரித்து இருந்தால் அவள் மேல் தப்பில்லை என்பதை தெரிந்து கொண்டிருக்கலாம் அவசரப்பட்டு அடித்திருக்க வேண்டாம்...உன் மேல் தான் தப்பு என அவன் மனம் அவனை சாட அந்த மன உளைச்சலில் இருந்தவன் இதை பார்த்ததும் பேச முடியாமல் அமைதியாக அவள் கைகளையே பார்த்து கொண்டிருந்தான்.


அங்கு நிலவிய மௌனம் அவளுக்கு ஏதோ போல் இருக்க அவன் கோபத்தில் இருக்கிறான் என நினைத்து கொண்டு “சரியாகிடுங்க......தேங்காய் எண்ணெய் வச்சிருக்கேன்.......நாளைக்கு சரியாகிடும்....” என்றாள்.

அப்போதும் மாதேஷிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“ஏங்க” என மீண்டும் அவள் ஆரம்பிக்க

வேகமாக எழுந்து முதல் உதவி பெட்டியில் இருந்து மருந்து எடுத்து அவள் கைகளில் போட்டு விட்டடான்.

அவள் கைகளை விரித்து மெதுவாக பார்த்து பார்த்து...... “ரொம்ப வலிக்குதா” என கேட்டுகொண்டே....... “சரியாகிடும் “ என பேசிகொண்டே அவன் மருந்து போட இப்போது அவனையே பார்த்து கொண்டிருப்பது அவள் முறையானது. நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் உடனே முகத்தை கடுகடுவென வைத்தபடி “உன்னை எல்லாம் எந்த ஜென்மத்திலும் திருத்த முடியாது...இப்படிதான் பண்ணுவியா” என கோபமாக பேசினாலும் அதில் இருந்த அக்கறை அவளுக்கு புரிந்தது.

பின்னர் இரவு உறங்கும்பொழுது அவள் கைகளை மடக்க வலியால் அனத்தவும் அவளை தனது அருகில் படுக்க வைத்து கைகளை பிடித்த படியே இருந்தான் மாதேஷ்.

அதிகாலை கண் விழித்ததும் “ இன்னைக்கு ஊருக்கு போலாம்...சீக்கிரம் கிளம்பு....நான் ஆபீஸ்க்கு லீவு சொல்லிடறேன்” என்றான்.

அவள் காரணம் கேட்டும் சொல்லவில்லை.......வர மறுத்தும் அவன் விடவில்லை....... அவளை கிளப்பி காலை உணவிற்கே குமாரபாளையம் வந்து விட்டனர்.

இங்கு “டேய் மாதேஷ் கடைக்கு வர்றீயா” என மோகன் கேட்கவும்

“இல்லடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..நான் வரலை” என்றான் அவன்.

அவனை மேலும் கீழுமாக சந்தேகமாக பார்த்தபடி டேய் எது செஞ்சாலும் யோசனை பண்ணி செய்...அவசரபடாத என சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் மோகன்.

பின்னர் நேற்று இரவு முழுவதும் யோசித்து தங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என அவன் எடுத்திருந்த முடிவை நிறைவேற்றும் முடிவோடு கிளம்பி சென்றான்..
 
  • Like
Reactions: sumiram