• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அத்தியாயம் – 11


“இங்க பாருங்க ...நீங்க எதபத்தியும் கவலைபடாதீங்க...நான் மலர்கிட்ட பேசிக்கிறேன் ...நான் சொன்னத மட்டும் நீங்க செஞ்சு கொடுங்க” என்றான் மாதேஷ் .

“மாப்பிள்ளை எனக்கு என்னமோ மலர் இதுக்கு ஒத்துக்க மாட்டனுதான் நினைக்கிறேன்...எதுக்கும் நீங்க மறுபடியும் இன்னொருமுறை யோசிச்சு முடிவு எடுங்க” என தயங்கி தயங்கி மருமகனிடம் சொல்லிகொண்டிருந்தார் தர்மலிங்கம்.

“ஆமாம் மாப்பிள்ளை கல்யாணத்திற்கு முன்னாடியே எவ்வளவோ எடுத்து சொன்னோம்...அவ கேட்கலை இப்போ மட்டும் அவ எப்படி ஒத்துக்குவா ...நீங்களும் சம்மதிச்சு தான இந்த கல்யாணம் நடந்தது.....அப்போ எல்லாம் ஒத்துகிட்டு இப்போ வந்து எனென்னமோ சொல்றிங்க” என குணவதியும் கேட்க

“இங்க பாருங்க நான் என்னோட முடிவ சொல்லிட்டேன்....நீங்க ஆகவேண்டிய வேலையை பாருங்க...அதுவரைக்கும் இத பத்தின எந்த விபரமும் மலருக்கு தெரிய வேண்டாம்.....நான் அவளுக்கு புரிய வைக்கிறேன் “ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வரும் வழியில் கோபியை அலைபேசியில் அழைத்தவன் தான் எடுத்திருக்கும் முடிவை சொல்ல எதிர்புறத்தில் இருந்து “ஏண்டா உனக்கு கிறுக்கு ஏதாவது பிடிச்சிருக்கா.....இப்படி உளறிட்டு இருக்க” என சத்தம் போட ஆனால் மாதேஷோ “நான் சொன்னத நீ செய்...முடிச்சதும் எனக்கு போன் பண்ணு” என சொல்லிவிட்டு போனை வைத்தான்.

பின்னர் அவனுக்கு பிடித்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றவன் அங்கு இறைவன் முன் தனது எண்ணத்தை சொன்னவன் “இது சரியா தவறான்னு எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை அதான் இந்த முடிவு...எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என வேண்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

காலையில் சென்றவன் மதிய உணவிற்கு வீடு திரும்பாமல் இருக்க மலரும் அலைபேசியில் அழைத்தபோது “கொஞ்சம் பிசியா இருக்கேன்....அப்புறம் பேசறேன்” என சொல்லி போனை கட் செய்தான்.. மாலை தான் வீடு வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் “எங்க போனீங்க.....எத்தன முறை போன் பண்றது” என மலர் வேகமாக கேட்க

“வீட்டுக்கு வர ஆம்பிளைகிட்ட முதல்ல அனுசரனையா பேசி பழகு....அதிகாரம் எல்லாம் உங்க அறைக்குள்ள வச்சுக்க...... ஒரு மட்டுமரியாதை தெரியாது”.... என வாசலில் அமர்ந்திருந்த கற்பகம் ஒரு அதட்டல் போட மலரின் முகம் சுண்டிவிட்டது.

அதற்குள் அவன் அறைக்குள் சென்றுவிட முணுமுணுத்து கொண்டே அவன் பின்னால் சென்றாள். உள்ளே நுழைந்ததும் “ஏங்க அவங்க” என பேச ஆரம்பித்தவள் அதற்குள் அவன் பெட்டிக்குள் துணிகளை எடுத்து வைப்பதை பார்த்ததும் “ஊருக்கு இப்போ கிளம்பறமா...சொல்லவே இல்லை “ என கேட்டுகொண்டே அவன் அருகில் வந்தாள்.

அவனோ “கிளம்பறோம் இல்லை...நான் கிளம்பறேன்.....சென்னையில ஆபிஸ் மீட்டிங் இருக்கு...இரண்டு நாள் அங்க இருக்கணும் ...இன்னைக்கு நைட் ட்ரைனுகு போகணும்” என சொல்லிகொண்டே பெட்டியை மூடினான்..

“என்னது சென்னை போறீங்களாஆஅ” என அதிர்ந்தவள்

“என்னை விட்டுட்டு நீங்க எங்க போறீங்க....ஏன் என்கிட்ட இத முதல்ல சொல்லலை.....அதெல்லாம் நீங்க போக கூடாது.....வேண்டாம்....இல்லை நானும் உங்க கூட வரேன்” என அவள் பேசிகொண்டே செல்ல

குனிந்து பொருளை எடுத்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்க்க

அவன் முறைத்ததும் அவளின் பேச்சு நின்றுவிட ஆனால் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

அவனோ வெளியில் சென்று வீட்டினரிடம் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தவன் அதற்குள் அழுது அழுது கண்கள் சிவந்திருக்க கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் மலர்.

“இப்போ எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க” என அவன் எரிச்சலுடன் கேட்க

கோபமாக அவனை முறைத்தவள் “ நீங்க ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லலை” என்றாள். .

“ஓ அப்படியா இனி மகாராணிகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு அப்புறம் ஆபீஸ்க்கு பதில் சொல்றேன்” என கிண்டலாக சொன்னான்.

அவள் முகம் வாடிவிட பாவமாக அவன் முகத்தை பார்க்க

உடனே அவள் அருகில் அமர்ந்தவன் “இங்க பாரு மலரு எனக்கே மதியம் தான் போன் வந்திச்சு...மீட்டிங் இருக்கு...உடனே கிளம்பி வாங்கன்னு சொன்னாங்க....அதான் ட்ரைனுகு புக் பண்ணிட்டு நான் வர நேரமாகிடுச்சு” என பொறுமையாக சொல்ல அதுவரை கலங்கி இருந்த அவள் முகம் சற்று தெளிவடைந்தது.

“அப்போ நீங்க சாப்பிட்டிங்களா.. இல்லையா” என கேட்க

அவனோ சிரித்தபடி “அதெல்லாம் மாமியார் வீட்டு விருந்து ஒரு கட்டு கட்டிட்டு தான் வந்தேன்” என்றான்.

“என்னது மாமியார் வீட்டு விருந்தா” என அவள் கேட்கவும்

அப்போது தான் தான் உளறியதை அறிந்தவன் “இல்லை இல்லை மாமியார் வீட்டு சாப்பாடு மாதிரி அந்த ஹோட்டல் சாப்பாடு இருந்திச்சு...அதான் என்றவன் சரி சரி போய் இரவுக்கு ஏதாவது டிபன் செய்...சாப்பிட்டு கிளம்பனும்” என பேச்சை மாற்றினான்.

அவளோ “ஏங்க நான் ஒண்ணு கேட்டா திட்ட மாட்டீங்களே” என கெஞ்சலாக கேட்க

“சென்னைக்கு வரேன்னு சொல்லாம வேற எது சொன்னாலும் திட்ட மாட்டேன்” என்றான்.

“இல்லைங்க அம்மாவீட்டுக்கு போய்ட்டு வரலாமா.......அம்மா அப்பாவ பார்க்கணும் போல இருக்கு” என்றாள்.

“ஏண்டி நாளு தெரு தள்ளி இருக்கிற உங்க அம்மாவீட்டுக்கு என்னை கேட்டுத் தான் போகனுமா......நீ கிளம்பி போக வேண்டியோது தான” என அவன் சொல்லவும்

“இல்லைங்க தனியா எப்படி போறது...இரண்டு பேரும் சேர்ந்து போலாம்”...என சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க

மாதேஷோ அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டவன் அவளையே இமைக்காமல் பார்த்தபடி இருந்தான். அவன் மனதில் சிறுவலி வந்து போனது.

அவன் பதில் சொல்லாமல் தன்னையே பார்ப்பதை பார்த்தவள் “ நீங்க வேண்டாம்னு சொன்னா நான் போகலை” என சொல்ல

“இல்லை இல்லை...அப்படி எல்லாம் இல்லை” என வேகமாக மறுத்தபடி எழுந்தவன் “எனக்கு இப்பவே நேரமாகிடுச்சு மலரு .....நான் உங்க அப்பாகிட்ட போன்ல பேசிடறேன்...நீ அவர் வந்து கூப்பிடும்போது மறுக்கம போய்டு...நான் வரலைன்னு போகாம இருக்காத...அப்புறம்” என நிறுத்திவிட்டு அவள் முகத்தை சில வினாடி பார்க்க

அவளோ “என்னங்க” என கேட்க


“இல்லை ...இல்லை உங்க அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வார்...அதனால அவர் சொல்றத கேளு......அவர்கூடா சண்டை போடாத” என்றான்.

அவளோ “ம்ம்ம் சரிங்க...ஆனா உங்ககிட்ட கேட்காம நான் சரின்னு சொல்ல மாட்டேன்” என அவள் சொல்லவும் அந்த நொடி அவன் எடுத்த முடிவை நினைத்து பார்த்து பெருமூச்சு விட்டான்.

பின்னர் இரவு உணவு முடித்ததும் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பியவன் மலரிடம் வந்து “இங்க பாரு மறுபடியும் உங்க வீட்ல எதும் பிரச்சனை பண்ணிட்டு இருக்காத.....நான் இரண்டு நாளைக்கு போன் எடுக்க மாட்டேன்....எனக்கு போன் செஞ்சு உன் நேரத்தை வீணடிக்காத....நம்ம இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்....அதுக்காக தான் நான் எல்லாமே பண்றேன் புரிஞ்சுக்கோ” என மனதில் இருப்பதை வேகவேகமாக சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.

அவன் சொன்னது போல் மலர் அவனை அலைபேசியில் அழைத்த போது அவன் எடுக்கவில்லை.

“உங்க மனசில நீங்க என்ன நினச்சிட்டு இருக்கீங்க.....ஆமாம் நான் தான் உங்க மேல விருப்பபட்டு உங்களை கட்டிகிட்டேன்..... அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்னு நினைச்சீங்களா...யாரகேட்டு இந்த முடிவு எடுத்தீங்க”..... என அவள் கத்திகொண்டிருக்க

“யாரகேட்டு எடுக்கணும்...எனக்கு சரின்னு பட்டுச்சு...நான் எடுத்தேன்.....என் முடிவுல எந்த மாற்றமும் கிடையாது......நான் நினைச்சது நடக்கணும்” என அவன் அழுத்தமாக சொல்லவும்

“நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.....எங்க வீட்டு ஆளுங்களையும் எனக்கு எதிரா திருப்பி விட்டு இருக்கீங்க.....நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”.....என அவளும் பிடிவாதமாக பேச

“சரி ஒத்துக்காத...உங்கிட்ட கல்யாணத்திற்கு முன்னாடி நான் என்ன சொன்னேன்.....என்னோட” என ஆரம்பிக்கும் முன்

“ஆமா ஆமா சொன்னீங்க என்னோட கேரக்டர் எல்லாம் உனக்கு ஒத்துவராது.... நீ வளர்ந்த விதம் வேற...என்னோட ஆசை கனவு வேற.....சொன்னா புரிஞ்சுக்கோ மலரு” அதான சொல்லவறீங்க ...இத கேட்டு கேட்டு என் காதில ரத்தமே வந்திடுச்சு......மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க” என அவன் பேசுவது போல பேசி அவள் முடிக்கவும்

அவன் இதழில் மெல்லிய புன்னகை வந்து போனது.

“ஆனாலும் இந்த வாய் பேச்சு மட்டும் உனக்கு இல்லைனா அப்புறம்” என சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்தத்தவன்

“ம்ம்ம் சொல்லு ..நீதான் நான் பேசறதை அப்படியே பேசறியே” என கிண்டலாக கேட்கவும்

“பச் பேச்சை மாத்தாதீங்க ...எதுக்கு இப்படி ஒரு காரியம் பண்ணீங்க.....பிளீஸ் என்னை புரிஞ்சுக்குங்க.....நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்...இது வேண்டாம்” என அவள் கெஞ்சிகொண்டிருந்தாள்.

“நான் முடிவு எடுத்தா எடுத்தது தான்.....இங்கபாரு மலரு இரண்டு நாள் மீட்டிங்க ...ஒரே களைப்பா இருக்கு...கொஞ்ச நேரம் தூங்கனும்.....ப்ளீஸ்” என அவன் சொல்லவும்

அதுவரை அவனிடம் சண்டைக்கு நின்று கொண்டிருந்தவள் உடனே அவன் அருகில் வந்து “அச்சோ என்னாச்சுங்க...தலைவலிக்குதா...டீ போட்டு தரட்டுமா ...... பால் இல்லையே.......ஊர்ல இருந்து எடுத்திட்டு வந்திருக்கலாம்...நீங்க தான் வந்த உடனே கிளம்புன்னு கூட்டிட்டு வந்திட்டீங்க..... சரி சரி டிபன் ரெடி பண்ணிடறேன் ...நீங்க ரெஸ்ட் எடுங்க” என அவனுக்கு படுக்கையை சரி செய்து கொடுத்து அவன் தூங்க ஏற்பாடு செய்தாள்.

அவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் படுத்தவன் அயர்வில் நன்றாக உறங்கிவிட்டான்.

பின்னர் தூங்கி எழுந்தும் அவனிடம் அழுது, புரண்டு, கதறி என அவளின் எந்த முயற்சியும் , எடுத்த முடிவில் இருந்து அவனை மாற்ற முடியவில்லை.

மறுநாள் அவன் கண்விழித்ததும் அவனிடம் தன் மனநிலையை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்ற முடிவோடு அவள் காத்திருக்க ஆனால் அவள் கணவனோ அவளை பேசவிடாமல் மிரட்டியே அவளை கிளப்பி அழைத்து சென்றான்.

காலை ஒன்பதுமணிக்கு எல்லாம் சேலத்தின் ஒரு பிரபலமான கல்லூரியில் அது திறப்பதற்கு முன்பே அதன் வாசலில் நின்று இருந்தனர் மலரும் மாதேஷும். ஆம் திருமணத்தால் தடைபட்ட மலரின் படிப்பை மீண்டும் தொடர விரும்பினான் மாதேஷ். .... அதற்கு தான் இத்தனை போராட்டம். அதற்காக தான் அவள் தந்தையிடம் சென்று டிசி,மார்க்சீட் எல்லாம் அவள் முன்பு படித்த கல்லூரியில் இருந்து வாங்கி தர சொன்னான்.

“மாப்பிள்ளை அவளுக்கு படிப்புல பெருசா ஏதும் விருப்பம் இல்லை...வீட்ல இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்கனு தான் அவ காலேஜ் போனாள்.....நீங்க செலவு பண்றது வீண் என அவர் எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை. குணவதியோ தன் மகளை பற்றி நன்கு தெரிந்தவர் அதனால் ஏற்கனவே மகளின் மீது மருமகனுக்கு பெரிதாக விருப்பம் இல்லை.இதில் அவள் நன்றாக படிக்கவில்லை என்றால் அந்த வெறுப்பு மேலும் அதிகமாகிடுமோ என நினைத்தவர் அவரும் இதற்கு மறுப்பு சொல்ல ஆனால் மாதேஷோ தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

“இல்லை மாமா ...அவ படிக்கணும்.....படிச்சு நல்ல வேலைக்கு போகணும்...அவ சுயமா சம்பாதிக்கணும்...என் மனைவி எந்த சூழ்நிலையிலும் தைரியமா துணிச்சலா ,செயல்படணும். இதை படிப்புதான் அவளுக்கு சொல்லி கொடுக்கும். நீங்க நான் சொன்னத மட்டும் செய்ங்க....மற்றத நான் பார்த்துகிறேன்” என சொல்லிவிட்டு ஊருக்கு சென்றுவிட்டான்.

அதன் பின்னர் தர்மலிங்கம் கல்லூரியில் இருந்து டிசி வாங்குவதற்கு மலரின் கையெழுத்து தேவைபட அதற்காக மகளிடம் விபரம் சொல்ல அவளோ வானத்துக்கும் பூமிக்கும்மாக குதித்தாள் . “யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க...நான் படிக்கிறேன்னு உங்களை கேட்டனா” என அவர்களிடம் சண்டைக்கு செல்ல இது மாதேஷின் முடிவு என அவர்கள் சொன்ன பிறகே அமைதியானாள்.

இவளை பற்றி மாதேஷும் கொஞ்சம் அறிவான். அதனால் தான் அவன் அவளிடம் அந்த இரண்டு நாட்கள் பேசவில்லை. கோபியிடம் சொல்லும்போது அவனும் இதைதான் சொன்னான். “ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலை.....கல்யாணத்தை முடிச்சாமா...குழந்தையை பெத்தோமா ...அதை ஸ்கூல்ல சேர்த்தோமான்னு இல்லாம பொண்டாட்டிய படிக்க வைக்கிறேன்...பண்டிதர் ஆக்கிறேனுட்டு உளறிட்டு இருக்க”......என அவனும் திட்ட ஆனால் மாதேஷோ அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.,

இப்படி பல போராட்டங்களுக்கு நடுவில் அவள் பாதியில் விட்ட MCA படிப்பை மீண்டும் தொடர இதோ கல்லூரி வாசல் வரை அவளை அழைத்து வந்துவிட்டான் அவள் கணவன்..

மலரோ கல்லூரி வாசலின் கதவை இரு கைகளால் பிடித்தபடி கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நிற்க அழுவது போல் முகத்தை வைத்தபடி நின்று இருந்தாள்.

அதற்குள் அங்கு வந்த கோபி “மச்சான் பிரின்சிபால் நமக்கு தெரிஞ்சவரு...எல்லாம் பேசியாச்சு.....ஈவினிங் காலேஜ்கு தான் சீட் இருக்காம்.....நீ என்ன சொல்ற” என கேட்டான்.

“எப்போ இருந்தாலும் சரி கோபி..... இவ படிக்கணும்...எனக்கு ஓகே தான்...இன்னைக்கே மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிடலாம்...நாளைல இருந்து அவ காலேஜ் வந்திடுவா” என அவன் சொல்லிகொண்டிருக்க பலி ஆடுபோல் தாலையை கீழே போட்டபடி நின்று இருந்தாள் மலர்.

பின்னர் கல்லூரியில் அட்மிஷன் முடித்து வெளியே வந்தவன் கடிகாரத்தை பார்த்ததும் “மணி பண்ணிரண்டு ஆகிடுச்சா.....அச்சோ இன்னைக்கு ஆபிஸ் போன மாதிரி தான்” என்றவன் அவள் பக்கம் திரும்பி “எல்லாம் உன்னாலதான்...... மார்க்சீட் ,சர்டிபிகேட் எல்லாம் ஜெராக்ஸ் எடுத்து வைக்க மாட்ட......அதுக்கு அரைமணி நேரம் ஆகிடுச்சு .....ஆள் தான் வளர்ந்திருக்க...ஒரு பொறுப்பு கிடையாது” என அவளை திட்ட அவளோ அமைதியாக தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
அதை பார்த்ததும் எரிச்சலுடன் இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சுகிட்டு இருக்க......எல்லாம் உன் நல்லதுக்குதான் என அவன் திட்டி கொண்டிருக்க

அருகில் இருந்த கோபி வேகமாக மாதேஷ் தனியாக இழுத்து சென்றவன் “மச்சான் எனக்கு என்னமோ மலர பார்த்தா எல்கேஜி குழந்தை முதல் நாள் எப்படி ஸ்கூல் போகும்போது அழுகுமோ அப்படி இருக்குது.....பாவம்டா அதை விட்டுடு” என மலரின் நிலை பார்த்து மனசு பொறுக்காமல் நண்பனிடம் சொல்ல

ஆனால் “மாதேஷோ அதெல்லாம் முடியாது...அவ படிச்சே ஆகணும்.....MCA முடிச்சு PHD பண்றதா இருந்தாலும் எனக்கு ஓகே தான்....அவ படிக்கணும்” என சொல்லவும் அவனை ஒரு மாதிரி பார்த்தவன் “உனக்கு ரொம்ப முத்திடுச்சுனு நினைக்கிறேன்...... எனக்கு என்னமோ நீ இவ்ளோ டொனேஷன் கொடுத்து சீட் வாங்கினது வேஸ்ட்னு தோணுது” என சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவனை அனுப்பிவிட்டு அவளருகில் வந்தவன் “இங்க பாரு மலரு படிக்கிறத பத்தி நீ ஏதும் கவலை படாத......உனக்கு நான் உதவி பண்றேன்.....நீ நல்லா படிச்சா போதும்” என அவளுக்கு அறிவுரைகலை வீடு வரை சொல்லிகொண்டே வந்தான். . வீட்டில் இருந்து கிளம்பிய மலர் மீண்டும் வீட்டிற்கு வரும்வரை வாய் திறக்கவில்லை. அவளின் சார்பாக பேசியது அனைத்தும் மாதேஷ் தான்.

அன்று இரவு அவள் கல்லூரிக்கு தேவையான புத்தகம் மற்றும் அவளுக்கு என்று தனியாக அலைபேசி ஒன்றையும் வாங்கி வந்திருந்தான். பின்னர் மலரை அழைத்து பொறுமையாக சிலபல அறிவுரைகளை மீண்டும் சொன்னான்.. “பெண்கள் எப்போதும் சுயமா தைரியமா தங்கள் சொந்த காலில் நிற்கணும் ....... எந்த பிரச்சனை வந்தாலும் துணிச்சலோடு சமாளிக்கணும்....இதெல்லாம் நடக்கணும்னா நீ படிக்கணும் மலர்....படிச்சு வேலைக்கு போனா தான் உனக்கு உலகம் புரியும்” என தன் மனதில் இருப்பதை அவன் சொல்லி கொண்டிருக்க அவளோ மேலும் கீழும் தலை ஆட்டியபடியே அமர்ந்திருந்தாள்.

அவன் பேசி முடித்ததும்” என்ன மலரு நான் சொல்றது உனக்கு புரியுது இல்லை” என கேட்டவன் அவள் என்ன சொல்கிறாள் என் ஆவலுடன் அவள் முகத்தை பார்க்க அவளோ “ம்ம்ம் எல்லாம் புரிஞ்சுடுச்சுங்க” என்றாள்.

“இன்னும் உனக்கு வேற என்ன வேணும் சொல்லு மலரு” என அவன் கேட்க

அவளோ அவன் முகத்தை பார்த்தவள் ஆனால் சொல்ல தயங்க

“சொல்லு மலரு...என்கிட்ட என்ன பயம்.....உன் மனசில என்ன இருக்குதோ அதை தைரியமா சொல்லு” என அவன் ஊக்குவிக்க

“இல்லைங்க அது வந்து நம்ம வீட்டு ஜன்னல்க்கு எல்லாம் ஸ்க்ரீன் துணி மாட்டனும்..... நீங்க காலில தூங்கி எழும்போது வெயில் உங்க முகத்துக்கு நேரா அடிக்குது ....உங்க ஸ்கின் எல்லாம் சுருங்கிடும்.........அதான் உங்ககிட்ட சொல்லாலம்னு” என அவன் மேல அக்கறையுடன் அவள் சொல்ல

அவள் படிப்பை பற்றி ஏதாவது பேசுவாள் என நினைத்த மாதேஷ் அவள் இதை சொன்னது கோபம் சுசுருவென தலைக்கு ஏற பற்களை நறநறவென கடித்தவன் “போடிஈஈ உன்னை எல்லாம்” ...என வார்தைகளை கடித்து துப்பிவிட்டு வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியே சென்றான்.

அவளோ “ஏங்க எதுக்கு இப்படி கோப படறிங்க.....நீங்க தான் கேட்டீங்க .....சரிங்க நீங்க ஸ்க்ரீன் வாங்கி தரவேணாம் நான் பார்த்துகிறேன்” என பேசிகொண்டே அவன் பின்னே சென்றால்.

அவளை திரும்பி முறைத்தவன் “போடி போ ..போய் படு....நாளைக்கு காலேஜ் போகணும் போ” என சொல்ல அவள் அமைதியாக வந்து படுத்து கொண்டாள்.

மறுநாள் அவன் அலுவலகம் கிளம்புவதற்கு முன் மலரை அழைத்து “இங்க பாரு மலர் உனக்கு மதியம் இரண்டு மணிக்கு காலேஜ்.......ஒரு மணிக்கு எல்லாம் உனக்கு ஆட்டோ இங்க வந்திடும்.....அதே போல காலேஜ் முடிச்சதும் அந்த ஆட்டோவுல நீ திரும்ப வீட்டுக்கு வந்திடலாம்” என சொல்ல அவளும் பூம்பூம் மாடு போல தலை ஆட்டி கொண்டிருந்தாள்.

“ஏண்டி நேத்துல இருந்து நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்.....நீ எத சொன்னாலும் தலையை மட்டும் ஆட்ற.....நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா?” என கேட்க

அவளோ “ஹப்பா இப்பவாவது அத கேட்கனும்னு தோணுதே” என மனதிற்குள் சொல்லிகொண்டிருக்க

“என்னடி அமைதியாவே நிற்கிற” என கேட்க

“இல்லைங்க அது வந்து நான் என்ன சொல்றேன்னா” என அவள் சொல்ல ஆரம்பிக்க

அதற்குள் “சரி சரி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.....ஆட்டோ நம்ம பக்கத்து வீட்டு அண்ணாச்சியோடது...அவரே வந்து உன்னை கூட்டிட்டு போவார்” என அவளை பேசவிடாமல் இவனாக மீண்டும் பேசவும் அதற்கு பிறகு அவள் வாய் திறக்க வில்லை.

அவன் சென்ற பிறகு வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு கடிகாரத்தை பார்த்தவள் மணி பதினொன்று என காட்ட ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு பின்னர் கிளம்பலாம் என எண்ணி படுத்தவள் அண்ணாச்சி வந்து காலிங் பெல் அடிக்க அந்த சத்தம் கேட்டு தான் கண் முழித்தாள்.

அவரை பார்த்ததும் “ஐயோ அண்ணாச்சி அதுக்குள்ள வந்திட்டிங்களா ...இதோ சீக்கிரம் கிளம்பிடறேன்” என சொல்லிவிட்டு வேகவேகமாக கிளம்ப அப்போது மாதேஷிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது.

“அடகடவுளே இந்த மனுஷன் இப்போ எதுக்கு கூப்பிடறார்” என மனதில் திட்டி கொண்டே போனை எடுத்தவள் “என்ன கிளம்பியாச்சா...... இன்னைக்கு முதல் நாள்.....சீக்கிரம் காலேஜ் போகணும் ...எல்லாமே மறக்காம எடுத்திட்டு போ என்றவன் இன்னும் வீட்லையா இருக்க” என கேட்க

அவளோ “அது வந்து வந்து என இழுத்தவள் நான் கிளம்பிட்டேன்...இன்னும் அண்ணாச்சி தான் வரலை” என வேகமாக சொன்னாள். எதிரில் அமர்ந்திருந்த அண்ணாச்சி திடுக்கிட்டு அவளை பார்க்க அவளோ பார்வையாலே இறைஞ்சியபடி “சரிங்க..சரிங்க நான் இப்போ கிளம்பிடறேன்” என சொல்லி அலைபேசியை வைத்தாள்.

“என்னை மன்னிச்சுடுங்க அண்ணாச்சி...... நான் தான் லேட்னு சொன்னா உடனே திட்ட ஆரம்பிச்சிடுவாறு அதான்...தெரியாம இன்னைக்கு தூங்கிட்டேன்...நாளைக்கு நேரமே கிளம்பி இருக்கேன் “என சிறுபிள்ளை போல அவள் தகுமானம் சொல்ல அண்ணாச்சியோ சிரித்து கொண்டே “பரவாயில்லை பாப்பா...நான் மாதேஷ் தம்பிகிட்ட சொல்லிகிறேன்...நீ கிளம்பி வா” என்றார்.

“நீங்க ரொம்ப நல்லவங்க அண்ணாச்சி” என்றவள் வேகமாக கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.

கல்லூரியின் முதல் நாள் அதுவும் தாமதமாக போறமே என புலம்பி கொண்டே சென்றவள் அவள் வகுப்பின் முன் கும்பலாக இருக்க அங்கு சென்றவள் “எக்ஸ்கியூஸ்மீ MCA பர்ஸ்ட் இயர் கிளாஸ் இதான” என கேட்க

அங்கு நின்று இருந்த மூன்று மாணவிகள் திரும்பி அவளை மேலும் கீழுமாக பார்த்தவர்கள் “அப்படிதான் நினைக்கிறோம்” என ஒரு மாணவி சொல்ல

“அப்போ நான் உள்ளபோகனும் கொஞ்சம் வழி விடறீங்க்லா” என அவள் கேட்கவும்

“உனக்கு முன்னாடி வந்த நாங்களே இங்க நின்னுகிட்டு இருக்கோம்....... நீ உள்ள போக போறீயா” என மற்றொரு மாணவி கேட்கவும்

“அச்சோ கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா.” என உள்ளே எட்டி பார்த்தவள் அங்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது.

“இன்னைக்கு நீ செத்த மலரு...... இது மட்டும் அவருக்கு தெரிஞ்சுது...அவ்ளோதான்” என புலம்பியபடி நிற்க

“ஹெலோ என்ன இன்னைக்குதான் காலேஜ்க்கு முதல் நாளா” என அவர்கள் கேட்கவும்

“ம்ம் ஆமா ....முதல் நாளே லேட்டா வந்திட்டேன்” என அவள் அழுவது போல சொல்ல

அப்போது அவர்களுள் ஒரு மாணவி “இங்கபாரு தல படத்துக்கு விசில் அடிக்கிறதும், காலேஜ்க்கு முதல் நாள் லேட்டா வரதிலும் இருக்க கிக்கு வேற எதிலும் இருக்காது.....அதெல்லாம் அனுபவிக்கனும்....இப்படி ஆராய கூடாது......ம்ம்ம் நீ இன்னும் வளரனும் போலவே” என்றவள் ஏன் உமா பேசாமநம்ம சங்கத்துல இவளையும் மெம்பர் ஆக்கிடலாமா” என கேட்

அதற்குள் அருகில் இருந்த மீனா “பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம் போல” என சொல்லவும்

“நம்ம கூட சேர்ந்திடுச்சு இல்லை.....இனி மாத்திடுவோம் என்றவர்கள் அதன் பின்னர் அவளிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். என் பெயர் கார்த்திகா, இவள் பெயர் உமா, இவள் பெயர் மீனா ,என அறிமுகபடுத்தியவள் இன்னும் ஒரு ஆள் இருக்கு...ஊருக்கு போயிருக்கா சீக்கிரம் வந்திடுவா” என்றவர்கள் மலரை பற்றி விசாரிக்க அவளும் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள்.

அங்கு கல்லூரியின் முதல் நாள் முதல் வகுப்பு ஓடிகொண்டிருக்க வகுப்பின் வெளியே இங்கு ஒரு கூட்டணி மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அவர்களிடம் பேசியதில் மலரின் பயம் சற்று குறைய தெளிவுடன் அடுத்த வகுப்பை அட்டென்ட் செய்தாள்.

பின்னர் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்தவள் வீட்டு வேலையை முடிக்கவும் மாதேஷ் வரவும் சரியாக இருந்தது.

உள்ளே வந்தவன் “எப்படி இருக்கு முதல் நாள் அனுபவம்” என கேட்க தாமதமாக சென்றதை தவிர்த்து மற்றதை எல்லாம் சொல்லி முடித்தாள்..

அவள் சொன்னதை கேட்டதும் மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்பட அந்த மனநிறைவில் அவன் உறங்க சென்றான். ஆனால் இந்த நிம்மதி சில மாதங்கள் தான் என்பதை அவன் முன்பே அறிந்திருந்தால் வர போகும் பிரச்சனயை சமாளிக்க தயாரக இருந்திருப்பான்.விதியை வெல்ல மதியால் முடியுமா என்ன ???
 
Top