• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 12

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் – 12

மலர் கல்லூரிக்கு செல்ல மாதேஷ் அலுவலகம் செல்ல இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தது ...

முதலில் புலம்பிகொண்டே கல்லூரி சென்றவள் பின்னர் அவனிடம் எதுவும் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் மாற்றம் ஏதும் நிகழ போவதில்லை. அன்று வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விட்டான் மாதேஷ்.

மலை டிபனை முடித்துவிட்டு “எங்க உன்னோட நோட் புக்ஸ் எல்லாம் எடுத்திட்டு வா நான் பார்க்கிறேன்” என்றான்.

அவள் எடுத்து வந்து கொடுக்க அதை பார்த்தவன் அவன் வாங்கி கொடுக்கும்போது எப்படி இருந்ததோ அதே போல் புத்தம் புதிதாக இருந்தது.

“ஏண்டி நீ இந்த புக்ஸ் எல்லாம் காலேஜ் எடுத்திட்டு போறியா இல்லையா “என அவன் கேட்கவும்

அவளோ “ ங்கோ என முழித்தவள் என்னங்க நீங்க இப்படி கேட்கிறீங்க” என வேகமாக கேட்கவும்

அவனோ சிறிது தடுமாறி நம்ம ஏதாவது தப்பா கேட்டுட்டமா என நினைத்து “இல்லை மலரு காலேஜ்க்கு போறதான...அப்போ புக்ஸ் எடுத்திட்டு போகணும்ல “ என ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக கேட்டான்..

அவளும் ஆமா காலேஜ்க்கு தான் போறேன்...ஆனா புக்ஸ்.....” என ஏதோ அவன் புரியாத ஒன்றை கேட்டது போல அவனை பார்த்தாள் .

மாதேஷிற்கு கோபம் வர “ஏண்டி நீ காலேஜ் படிக்க தான போற ...அப்புறம் புக்ஸ் எல்லாம் அப்படியே இருக்கு...என்ன படிக்கிற நீ” என கேட்டுகொண்டே நோட் புக்கை திருப்பியவன் அந்த நோட்டின் பின்புறம் எட்டு புள்ளி கோலம், பத்து புள்ளி கோலம்,வாஸ்து கோலம் என வரைந்திருக்க அதை பார்த்ததும் நிமிர்ந்து அவளை முறைக்க

அவளோ “இல்லைங்க நவராத்திரி அன்னைக்கு வாசல்ல இந்த கோலம் போட்டா நல்லதுன்னு பக்கத்து வீட்டுக்கார அம்மா சொன்னாங்க.....அதான் கிளாஸ்ல போட்டு ட்ரைனிங் எடுத்துகிட்டு இருந்தேன்” என மெதுவாக சொன்னாள்.

“ஐயோ கடவுளே உன்னை....” என பல்லை கடிக்கவும் உடனே அவள் முகம் சுண்டி விட சிறிது யோசனைக்கு பின்னர் “ சரி சரி உன்னை சொல்லி தப்பில்லை... உன்னை நம்பி படிக்கா விடறது சொந்த காசுல சூனியம் வச்சுக்கிற மாதிரி.....இது வேலைக்கு ஆகாது.....இனி நானே உனக்கு பாடம் சொல்லி தரேன்” என்றான்.

அவன் வார்த்தை முடிக்கும் முன்பே “ஐயோ நீங்களாஆஆ “ என அலறியவள் ஏற்கனவே வீட்டில் அவனிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறாள். இதில் படிப்பிலும் அவன் நுழைந்தால் அவ்ளோதான் என நினைத்து “வேண்டாம் வேண்டாம் நானே படிச்சுக்கிறேன்...அது என்னோட சப்ஜெக்ட் உங்களுக்கு தெரியாது” என வேகமாக அவன் கையில் இருந்து நோட் புக்ஸை பிடுங்கினாள்.

மாதேஷோ “அதெல்லாம் எனக்கும் தெரியும்.....நாங்களும் யூஜி சயன்ஸ் தான் படிச்சோம்......நீ முதல்ல உன் புக்ஸை கொடு.... பணத்தை கட்டி உனக்கு சீட் வாங்கி கொடுத்திருக்கேன்.....உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா...பொறுப்பு இருக்கா “ என சொல்லிகொண்டே அவன் புத்தகத்தை புரட்ட இங்கு மலருக்கோ அடிவயிற்றில் இருந்து ஒரு பீதி கிளம்பியது.

இரவு உணவு வேலை முடிந்ததும் இருவரும் படிக்க அமருவார். அந்த நேரத்தில் மலரும் பல காரணங்களை சொல்லி தப்பிக்க நினைப்பாள். ஆனால் மாதேஷ் எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டன். அவள் படித்து முடித்த பின்பே அவளை உறங்க விடுவான்.


ஆரம்பத்தில் வெறுப்புடன் அமர்ந்தவள், பின்னர் அந்த நேரத்தை விருப்பத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள். அந்த இரண்டு மணிநேரம் மாதேஷ் மலரிடம் மட்டுமே பேசுவான். அவள் அருகில் அமர்ந்திருப்பான் . தவறு செய்யும்போது கொட்ட்டுவதும் அவள் சரியாக செய்தால் முதுகில் தட்டி பாராட்டுவதும் என அவனது சின்ன சின்ன ஸ்பரிசங்கள் அவளை சந்தோஷ கடலில் மூழ்கடித்து கொண்டிருந்தது.

முதலில் அவன் சொல்வதை மட்டுமே கேட்டு கொண்டிருந்தவள் பின்னர் மெதுமெதுவாக அவனுக்கு இணையாக பேச ஆரம்பித்தாள். அந்த மாற்றம் அந்த படிப்பு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அவர்களுக்கு இடையே ஒரு புரிதல் உணர்வை தோற்றுவித்தது.

மலரோ அவன் மேல் கொண்ட காதலை வெளிப்படையாக சொல்லி ஆனால் அதை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்தாள். மாதேஷ் அவனது நிலையை அவனே உணராமல் ஆனால் ஏதோ ஒன்றை அடையும் பொருட்டு அவன் நடவடிக்கைகள் இருந்தன. இந்த மனநிலையில் இருவரின் வாழ்கை போய்கொண்டு இருந்தது.


திருமணம் முடிந்து இங்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இரண்டுமுறை ஊருக்கு சென்று வந்தவர்கள் அதன் பின் வேலை படிப்பு என செல்லவில்லை. கற்பகமோ போனில் ஜாடைமாடையாக மலரை குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவள் தான் மாதேஷை அங்கு வர தடுக்கிறாள் என்றும் படிப்பு காலேஜ் என தனது மகனின் பணத்தை தண்ணியாக கரைகிறாள் என்றும் புலம்ப ஆரம்பித்துவிட்டார். இதற்கு இடையில் மலரின் பெற்றோர் ஒரு முறை மலரை வந்து பார்த்துவிட்டு சென்றனர். அப்போது மலரின் தந்தை அவளின் படிப்பு செலவை தான் ஏற்றுகொள்கிறேன் என சொல்ல மாதேஷோ மறுத்துவிட்டான்..”என் மனைவிக்கு செலவு செய்யும் அளவு எனக்கு திறன் இருக்கிறது” என அவன் பட்டென சொல்லிவிட அதற்கு பிறகு அவர் ஏதும் பேசவில்லை. 1

ஒரு நாள் இரவு நேரத்தில் “ஏங்க” என அவள் மெல்ல அழைக்க

அவனோ புத்தகத்தை படித்தபடியே “என்ன” என கேட்க

“இந்த வாரம் ஊருக்கு போயிட்டு வரலாமா” என்றாள்..

அவனோ பதில் சொல்லாமல் இருக்க

“என்னங்க சொல்றிங்க போலாமா” என கேட்கவும்

“இந்த வாரம் ப்ராக்டிகல் கட் அடிக்கிறதுக்கு உனக்கு இது ஒரு சாக்கு” என அவளை முறைத்தவன் “முதல்ல எக்ஸாம் வரப்போகுது அதுக்கு தயார் செய்...அப்புறம் ஊருக்கு போய்க்லாம்” என அவன் சொல்லவும்

“ம்ம்ம் இங்க இருந்தா மட்டும் பாஸ் பண்ண போறனா என்ன ?” என வாய்குள்ள முனக

“என்ன முணுமுணுப்பு” என அவன் குரலை உயர்த்தவும்

“இல்லை நீங்க எப்பவுமே இப்படியா இல்லை என்கிட்டதான் இப்படியான்னு கேட்டேன்” என கொஞ்சம் கிண்டல் கலந்து குரலில் சொன்னவள் பின்னரே அதை உணர்ந்து வேகமாக பெட்சீட் இழுத்து தன்னை முழுவதுமாக மூடிகொண்டாள்.

முதலில் அவள் சொன்னதின் பொருள் விளங்காமல் “என்ன சொன்ன “ என சாதாரணமாக கேட்டவன் பின்னர் அவளின் வார்த்தை உரைக்க

“ஏய்யய்ய்யி” என்றபடி கோபமாக அவளை திரும்பி பார்க்க அவளோ முழுவதுமாக போர்வைக்குள் தன்னை அடக்கி இருந்தாள்.

அவனுக்கு சுருசுருவென கோபம் உச்சிக்கு ஏற “உன்னை சொல்லி தப்பில்லைடி......வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிகிட்டே உன்னை கட்டிகிட்டேன்னு பார் என்னை சொல்லணும்......நான் தான் உனக்கிட்ட ஏற்கனவே சொன்னேன் தான...என்னை கல்யாணம் பண்ணா உன்னை நீ நிறையா மாத்திகணும்னு...அப்போ எல்லாம் மண்டைய ஆட்டிட்டு இப்போ என்னை நான் சொல்றது உனக்கு நக்கலா தெரியுது .......எல்லாம் என் நேரம்.......என சொல்லிவிட்டு ச்சே நம்ம நினைச்ச மாதிரி எதுவுமே அமையலை...என்ன வாழ்க்கைடா” என சலித்தபடி புலம்பி கொண்டே அவன் திரும்பி படுத்தான்.

நிமிடங்கள் ஓடின ...ஆனால்போர்வைக்குள் இருந்து வந்த விசும்பல் சத்தம் குறைந்த பாடில்லை. வார்த்தைகளை அனலாக கொட்டிவிட்டு அவன் உறங்கி விட மலருக்கோ அந்த இரவு உறங்கா இரவானது.

.

அவன் சொன்னபடியே அந்த வாரம் நடந்த தேர்வில் மலர் தோல்வி அடைய வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் வந்தவள் அவளது எண்ணத்தை பொய்யாக்காமல் அவள் நாயகன் வார்த்தைகளால் அவளை வறுத்தெடுத்தான். அரைமணி நேரத்திற்கு மேல் அவளை நிற்க வைத்து திட்டி கொண்டிருந்தவன் இரண்டு மணி நேர படிப்பு நான்கு மணிநேரமாக மாறியது.

“மச்சான் நம்ம பாஸ்கர்க்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். இன்னிக்கு எல்லாரும் ஹோட்டல ட்ரீட்......சீக்கிரம் வேலை முடிச்சிட்டு கிளம்பணும்” என்றான் கோபி.

“என்னது இப்பதான் கல்யாணம் ஆச்சு ...அதுக்குள்ள குழந்தையா” என மாதேஷ் கேட்க

கோபியோ அவனை முறைத்தவன் “டேய்ஈஈ எல்லாரும் உன்னை மாதிரியா புள்ளைகுட்டிய படிக்க வைக்கிற வயசில பொண்டாட்டிய படிக்க வைக்கிறேன்..பட்டதாரி ஆக்கிறேனு வசனம் பேசிட்டு இருப்பாங்களா” ....என எரிச்சலுடன் சொல்லவும்

“அட நீ சொன்னதும் தான் நியாபகம் வருது ....நாளைக்கு மலருக்கு ஒரு எக்ஸாம் இருக்குடா....நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்...என்னால ஹோட்டேலுக்கு எல்லாம் வர முடியாது மச்சான்” என்றான் மாதேஷ் .

“அடேய்ஈஈ என்னை கொலைகாரன் ஆக்காத” என கோபி உச்ச ஸ்துதியில் கத்தவும், உடனே மாதேஷ் வேகமாக “சரிடா போலாம்” என சொல்ல அதன் பின்பே சற்று சமாதனம் ஆனான் கோபி.

நண்பர்களுடன் அரட்டையை முடித்து கொண்டு தாமதமாக வீட்டிற்கு வந்தான் மாதேஷ். வீடு திறந்திருக்க உள்ளே வந்தவன் தனது அறைக்குள் நுழைய “ஐயோ என்னடி பண்ற” என்றபடி வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான்.

அதற்குள் “அச்சோ என்னங்க நீங்க......சொல்லிட்டு உள்ள வரமாட்டீங்களா” என அவள் பங்கிற்கு அவளும் அலற

“ஏண்டி வீட்டை திறந்து வச்சுகிட்டு இப்படிதான் பண்ணுவாங்களா” என அவன் சத்தம் போடவும்

அவளோ அறைக்குள் இருந்துகொண்டே “நம்ம வீடுதான ....யார் வரபோறா...அப்படியே வந்தாலும் காலிங் பெல் அடிப்பாங்க” என அவள் சொல்லவும்

“ஆமா எது சொன்னாலும் பதிலுக்கு பதில் சொல்லுவ நீ” என சொல்லி கொண்டே சோபாவில் அமர்ந்தவன் எதிரில் நிழலளாட நிமிர்ந்தவன் சற்று தடுமாறித்தான் போனான்.

ஆம் சிந்தூரி சில்க் புடவையில் அழகு மயிலாக அவன் முன் மலர் நிற்க சிலவினாடிகள் அவளை இமைக்காமல் பார்த்தபடி இருந்தான் மாதேஷ்.

புடவையில் சுடிதாரில் என பல உடைகளில் அவன் அவளை பார்த்திருக்கிறான். ஆனால் இன்று அவனுக்கு அவள் புதிதாக தெரிந்தாள். மண்ணில் புதைந்திருக்கும் வைரம் போல் அவன் மனதில் அவனை அறியாமலே புதைந்து கிடக்கும் உணர்வு மெல்ல எட்டி பார்த்தது.

அவளோ அதை அறியாமல் “எப்படிங்க இருக்கு.....நாளைக்கு காலேஜ்ல ஒரு பங்ஷன்...எல்லாரும் சேலை கட்டிட்டு வர சொல்லிருக்காங்க....அதான் கட்டி பார்த்தேன்....நல்லா இருக்கா” என மாடலிங் செய்பவர்கள் போல் ஒரு சுற்று சுற்றி காட்ட அந்த சுற்றலில் சொக்கி தான் போனான் அவள் கணவன். 2

நண்பர்களுடன் ட்ரீட் என்று ஹோட்டலுக்கு சென்றவன் அங்கு அனைவரும் சந்தோஷமாக பேசிகொண்டிருக்க “இனி அடுத்த மாதேஷ் தான்....என்ன மச்சான் எப்போ எங்களுக்கு இந்த மாதிரி ட்ரீட் கொடுக்க போற” என ஒருவன் கேட்கவும்

அதற்குள் மற்றொருவன் “டேய் மச்சான், மாதேஷ் பற்றி உனக்கு தெரியாதா....எல்லாமே ஒரு கால்குலேஷன்ல தான் செய்வான்......... ஆள் பார்க்க தான் அம்பி மாதிரி...பண்றது எல்லாம் கில்லி மாதிரி என சொல்லிவிட்டு மாதேஷை பார்த்து விஷமமாக சிரித்தவன் இன்னும் பத்து மாசம் வைட் பண்ணு பாரு மச்சானோட திறமையை” என சொல்லவும்

உடனே “அது உண்மைதான்டா...கல்யாணம் தான் சீக்கிரம் நடந்திடுச்சு... மனைவியும் கண்ல காட்டலை........ஆனா குழந்தை பிறக்க பத்து மாசம் வேணும் தான”....என்றான் ஒருவன்.


“டேய் நீங்க வேற கொஞ்சம் சும்மா இருங்க” என மாதேஷ் அவர்களை அடக்கவும்

“இங்க பாருடா பையன் எப்படி வெட்கபட்றான்னு” என நண்பர்கள் கிண்டல் செய்ய

“டேய் இதெல்லாம் ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்” என அவன் முறைக்கவும்

“உண்மைதான் மச்சான் உன்னோட ஸ்பீடுக்கு பத்து மாசம் ரொம்ப அதிகம் தான்”..... என அவனை மேலும் மேலும் கலாயித்து கொண்டு இருந்தனர்.

மாதேஷோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறி போனான். அதன் பின்னர் நண்பர்கள் அனைவரும் ஜாலியாக பேசிகொண்டிருக்க அதற்கு மேல் அவனால் அங்கு இயல்பாக இருக்க முடியவில்லை.

மாதேஷ் ஒன்றும் ஆசைகள் இல்லாத துறவி கிடையாது...... ... பருவ வயதில் பலவற்றை கடந்து வந்தவன்........ பல பெண்கள் அவன் வாழ்க்கையிலும் கடந்து சென்று இருக்கிறார்கள்...... தனது எதிர்பார்ப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி ஆயிரம் கனவுகளோடு தனக்கு வரபோகும் மனைவிக்காக காத்திருந்தவன்....ஆனால் நடந்தது என்னவோ “ம்ம்ம்ம் இனி யோசித்து என்ன பயன்” என்றபடி பெருமூச்சு விட்டவன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பி வீட்டிற்கு வந்தான்.

அறைக்குள் நுழையவும் அப்போது தான் மலர் சேலை கட்டுவதற்காக உடைகளை மாற்றி கொண்டிருக்க முதன் முறையாக அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் சற்று அதிர்ந்து பின்னர் வேகமாக வெளியே வந்து விட்டான்.

இப்போது மலர் அவன் முன்பு அன்று பூத்த மலர் போல மலர்ந்து நிற்க மாதேஷின் ஹார்மோன்கள் அவனை மீறி இசைக்க தொடங்கியது.

அங்கும் இங்கும் நடந்து எப்படி இருக்கிறது என்றபடி அவனை பார்த்தவள் ரசனையுடன் அவன் விழிகள் சென்ற இடத்தை பார்த்ததும் அவளுள் இருக்கும் பெண்மை விழித்து கொள்ள நாணம் மேலிட .முகம் செவ்வானமாய் மாற வெட்கத்துடன் தலை குனிந்தாள். சில வினாடிகள் அங்கு பேச்சுகள் தடைபட்டு இருவரின் இதயத்துடிப்பும் ஒன்றாக துடிக்க இதுவரை அறிந்திடாத ஒரு உணர்வு அவர்களுக்குள் துளிர் விட தொடங்கியது. அந்த உணர்வில் இருவரும் கட்டுண்டு இருக்க முதலில் சுதாரித்தது மலர்தான்.
 
  • Like
Reactions: sumiram