• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 19

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் -19


தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக போயின........மாதேஷ் மலர் இருவருமே அவரவர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர்.

அன்று காலை மாதேஷிற்கு உணவு பரிமாறிவிட்டு அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் மலர்..

“ஏண்டி சாப்பாட்ட தட்ல போட்டுட்டு என் வாயையே பார்த்துகிட்டு இருக்க...ஆனாலும் உன் பதிபக்திக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.... என் வயிற்றுக்கு நான் தான் சாப்பிடனும்..... நீயா சாப்பிட முடியும்.... இந்த பார்வை பார்க்கிற......உன் கொடுமை என்னால தாங்க முடியலை மலரு” என அவன் சலிப்பும் கிண்டலுமாக சொல்லவும்


ஒரு வித எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தவள் அவனது பேச்சில் முகம் சுண்டிவிட “இல்லைங்க இன்னைக்கு என் காலேஜ் ப்ரிண்ட்ஸ் சொன்ன ஒரு வித்தியாசமான இட்லி செய்திருக்கேன்......அதான் நீங்க ஏதாவது சொல்வீங்க்லானு பார்த்துகிட்டு இருக்கேன்...நீங்க என்னடானா மாடு புல்லை மேயரமாதிரி எந்த சொரனையும் இல்லாம” என சொல்லிவிட்டு சட்டென நாக்கை கடித்தவள் “இல்லைங்க எதுவுமே சொல்லாம சாப்பிட்ரிங்களே அத சொல்ல வந்தேன்...நல்ல இருக்கா ஹிஹி” என வழிந்தபடி அவனது கிண்டலுக்கு அவளது பாணியில் பதில் சொல்லிவிட்டு மீண்டும் முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டாள்..


அவனோ நிமிர்ந்து அவளை முறைத்தவன் “நீ வர வர ரொம்ப வாய் பேசற......இது எல்லாம் அந்த வானர கூட்டங்கள் சொல்லி கொடுத்ததா......அவங்களோட சேராதன்னு எத்தனை முறை சொல்லிட்டேன்.....நீ கேட்கவே மாட்டியா”....என அவளது தோழிகளையும் சேர்த்து திட்டியவன் “காலேஜ்க்கு உன்னை படிக்கத்தான் அனுப்பினேன் ....ஆனா நீ அதை தவிர மத்த எல்லா வேலையும் கத்துகிட்டு வர.....உன்னை நெட் வொர்கிங் அனலிசிஸ் படிக்க சொன்னா நீ நெல்லிக்காய் சூப் வைக்கிறத பத்தி படிச்சிட்டு வர ... எவ்ளோ சொன்னாலும் நீ திருந்தபோறதில்லை.....உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு” என பல்லை கடித்தவன் “எல்லாம் என் தலைவிதி” என அவளின் பேச்சிற்கு இவனது பாணியில் பதிலடி கொடுத்தான்.


“எப்போ பார்த்தாலும் இத ஒன்ன சொல்லிடறான்” என வாய்க்குள் முனகியவள் “இன்னிக்கு இது போதும் மலரு....நிறுத்திக்கோ” என அவள் உள்மனம் எச்சரிக்க “ஹிஹிஹி என்னங்க பண்றது ...நான் உங்களை மாதிரி புத்திசாலி இல்லையே” என அவனிடம் சரணடைய

அவளது பம்மலை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு “ நீ எல்லாம் எப்படி மலரு டிகிரி முடிச்ச....அதும் செகண்ட் கிளாஸ் பாஸ் பண்ணிருக்க” என ஆச்சிரியமாக கேட்டான் அவள் கணவன்.

உடனே வாய் எல்லாம் பல்லாக சிரித்து கொண்டே “அதுக்கு காரணம் ஜெயலட்சுமிதாங்க” என பெருமையுடன் சொன்னாள்.

“அது யாரு ஜெயலட்சுமி ...உன் கிளாஸ் டீச்சரா இல்லை டுயூஷன் டீச்சரா” என கேட்டான்..

“சே சே அவங்க எல்லாம் இல்லை இவ அதுக்கும் மேல” என அவள் பில்டப் கொடுக்க

அவளது பேச்சில் கடுப்பானவன் “அதுக்கு மேலயா யார் அது ?” என சிடுசிடுக்க

உடனே அவள் வேகமாக “எனக்கு முன்னாடி உட்கார்திருக்க பொண்ணுங்க... எனக்கு அவளை பிடிக்கவே பிடிக்காதுதான் .....எப்போ பார்த்தாலும் படிப்பு இலட்சியம்னு பேசிட்டு இருப்பா...... ஆள் மொக்கையா இருந்தாலும் படிப்புல கில்லி....அவளை கரெக்ட் பண்றதுகுள்ள நான் பட்டபாடு இருக்கே.......எங்க கடையில இருந்து கிளிப், பொட்டு, பவுடர்னு கொடுத்து ஹப்பாஆஅ ஒருவழியா அவளை ஒத்துக்க வச்சேன்”....என அதை பெரிய சாதனை போல் சொன்னவள் .....பரீட்சை ஹால்ல போய் உட்கார வர டென்சன் தான்” என அவள் எதார்த்தமாக சொல்ல மாதேஷ் முகம் மாறி போனது.


அவளோ அதை கவனிக்காமல் “அவளை பார்த்து நான் எழுதினேன்..... ஆனா அவ 3% தான்...நான் 5%” என சிரித்து கொண்டே பெருமையாக சொல்லவும் அவளது முகபாவனை மற்றும் பேச்சில் கோபம் கொஞ்சம் குறைந்தாலும் “கடவுளே யுனிவெர்சிட்டி பர்ஸ்ட் வந்த எனக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா” என தலையில் அடித்து கொண்டான் மாதேஷ்..

“சரி சரி விடுங்க..... யார் வாங்கினா என்ன ........உங்களோட பாதி நானு...அப்போ இந்த பர்ஸ்ட் மார்க்ல பாதி உரிமை எனக்கும் உண்டுல.....ஆனாலும் எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. இதை எல்லாம் வெளியே சொல்லி விளம்பரம் தேடிக்க மாட்டேன் ...நீங்க பயப்படாதீங்க” என அவன் பெருமையாக சொன்னதை இவள் தனக்கு சாதகமாக திருப்பி பேசவும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் மாதேஷ்.


அவளின் பேச்சில் சற்று திகைத்து போனவன் “உனக்கு மட்டும் எப்படி மூளை இப்படி கிளை கிளையா பிரியுது.... காலையில உங்கிட்ட பேச்சு கொடுத்தேன் பாரு ...என்ன சொல்லணும்.....நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன்” என்றபடி வேகமாக வெளியே செல்ல மலரோ தனக்குள் சிரித்தபடி “நாங்க எல்லாம் ஒசாமாவுக்கே ஓமபொடி விக்கிற ஆளுங்க.........எங்ககிட்ட வா” என சொல்லிகொண்டே தனது வேலையை தொடர்ந்தாள். ஆனலும் அடக்கி வாசி மலரு என அவளது உள்மனம் சொல்வதை அவளும் உணர்ந்திருந்தாள்.


மாதேஷ் முன்பு போல் இப்போது அதிகம் அவளை திட்டுவது இல்லை. அதற்கான நேரமும் அவனுக்கு இல்லை. இரவு முழுவது அரசு தேர்வுக்கு படித்துவிட்டு காலையில் அவசரமாக கிளம்பி அலுவலகம் செல்வதால் அவளிடம் பேச நேரம் இல்லை. அவளுக்கு அவனிடம் உள்ள பயமும் குறைந்தது .அதனால் கொஞ்சநாளாக மறந்திருந்த அவளது வால்தனம் இப்போது மெல்ல தலை காட்ட ஆரம்பித்தது. கிடைக்கும் நேரத்தில் இது போல் அவனை வாரிவிடுவாள் மலர். 1


இப்படி மலருக்கு சந்தோஷமாகவும் மாதேஷிற்கு பரபரப்பாகவும் நாட்கள் ஓடி கொண்டிருந்த வேலையில் அன்று இரவு வெகுநேரம் விழித்து படித்ததால் கண்கள் எல்லாம் தீயாக எரிய விழிகளை பிரிக்கமுடியாமல் பிரித்து எழுந்தான் மாதேஷ்.


அப்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடல் காதில் ஒலிக்க அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது. காலையில் வீடு எப்போதும் அமைதியாக இருக்கும். எப் எம் கூட போடமாட்டாள் மலர். . ஆனால் இன்றோ இப்படி ஒரு பாடல்பாட அதிர்ந்தவன் “மலரு மலரு” என அழைத்தான்.

“இதோ வரேன்” என கையில் காபியோடு அவன் முன் வந்து நின்றாள் அவனின் பாதி. தூக்கத்தில் இருந்தவன் அரண்டு போய் எழுந்தான். அவளை மேலும் கீளுமொரு முறை பார்த்தவன் “என்னடி இந்த கோலம்” என கேட்க


அவளோ அதற்கு பதில் சொல்லாமல் “நீங்க காபி எடுத்துக்குங்க” என நீட்டவும்


அதை பார்த்தவன் மேலும் அதிர்ந்து “ப்ளக் டி கேள்விபட்டிரற்க்கேன்.......இது என்ன ப்ளக் காப்பி இப்பதான் பார்க்கிறேன்” என்றவன் “இப்போ என்ன நடந்திடுச்சுனு நீ இப்படி சோககீதம் வாசிக்கிற “ என கடுப்புடன் கேட்டான். காலையில் அவள் இப்படி வந்து நின்றது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது..


அவளோ அதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் சோகமாக தலைகுனிந்து நின்றாள்.


“வாயை திறந்து சொன்னாதான் தெரியும்.......நைட் வரைக்கும் நல்லாத்தான இருந்த.....எக்ஸாம் இருக்குனு படிச்சுட்டு தான இருந்த” என்றவன் சட்டென நிருத்தி “எக்ஸாம்ம்ம்ம்ம் “ என இழுத்தவன்


பின்னர் நிமிர்ந்து அவளை கேலியாக ஒரு லுக்கு விட்டவன் “இன்னிக்கு எக்ஸாம் இருக்கு......சோ அதுக்குதான் இந்த சோதனை மேல் சோதனை பாட்டு , கருப்பு டிரஸ் , காபி எல்லாம் என்றவன் இதில் இருந்து தாங்கள் சொல்ல வருவது என்னவோ” என கிண்டலாக கேட்க

அவளோ “எனக்கு இன்னைக்கு எனக்கு தலைவலிக்குது ரொம்ப முடியலை” என அவள் வயிற்றை பிடித்து கொண்டு அழுவது போல் சொல்லவும்

அவனோ “உலகத்தில உனக்குதாண்டி தலை வயித்துல இருக்கு” என சொல்லவும்

அப்போது தான் தலைவலி என் சொல்லிவிட்டு வயிற்றை பிடித்து கொண்டு நிற்பதை உணர்ந்தவள் உடனே “அது வந்து வந்து நைட் வந்த தலைவலி அப்படியே கீழே இறங்கி காலையில வயிற்றுக்கு வந்திடுச்சு” என்றாள்.



அவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் அவளது இந்த சிறுபிள்ளை தனத்தை நினைத்து கோபமும் வர “இங்க பாரு இதுக்கு எல்லாம் நான் அசர மாட்டேன்......இன்னிக்கு நீ எக்ஸாம் எழுதியே ஆகணும்......உன்னை காலேஜ்க்கு நான் தான் கூட்டிகிட்டு போறேன்.இதில் எந்த மாற்றமும் இல்லை ...அதனால இந்த மாதிரி கேனைத்தனமா எந்த டிராமாவும் போடாம ஒழுங்கா கிளம்பிற வழிய பாரு” என சொல்லி விட்டு அவன் குளிக்க சென்றான்.


ஆம் இன்று முதல் தேர்வு எழுத போகிறாள் மலர். அதை நினைத்து நினைத்து இரண்டு நாட்களாக அவளுக்கு காய்ச்சலே வந்து விட்டது. ஆனாலும் மாதேஷ் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும் என சொல்லிவிட்டான்.அதற்காக இன்று அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு அவளைகல்லூரிக்கு அழைத்து செல்ல அவனே தயாரானான்.

மலர் சோக கீதம் வாசித்து கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்திருக்க தேர்விற்கு தேவையானதை பார்த்து பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தான் மாதேஷ்.

“இங்க பாரு மலரு ஏதும் டென்சன் ஆகிடாத...முதல்ல கேள்வித்தாளை நல்லா படி...அப்புறம் உனக்கு தெரிஞ்ச பதிலை எழுத்து...அப்புறம் தலைப்புக்கு எல்லாம் ஸ்கெட்ச் பென்ல அன்டர்லைன் பண்ணு” என சிறு குழந்தைக்கு சொல்வது போல வீட்டில் ஆரம்பித்து கல்லூரி வரை அவன் சொல்லி கொண்டு வர அவளோ தலையை மட்டும் ஆட்டிகொண்டிருந்தாள்.

ஒருவழியாக தட்டுதடுமாறி தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்தவளின் வாடிய முகத்தை பார்த்து அருகில் வந்த ராஜி “ஏன் மலரு பரீட்சை சரியா எழுதலியா......கவலைபடாத கண்டிப்பா பாஸ் பண்ணிடுவ” என ஆறுதல் சொல்ல

அவளோ எதுவும் பேசாமல் தலை குனிந்து நிற்க

அப்போது அங்கு வந்த தோழிகள் அவளை பார்த்ததும் அதிர்ந்து “என்னாச்சு மலர் ...எதுக்கு இம்புட்டு பீலிங்கா இருக்க ...எக்ஸாம் ஒழுங்க எழுதலையா” என அவர்களும் அதே வருத்தத்துடன் கேட்டனர்.

“நம்ம எல்லாம் என்னைக்கு ஒழுங்கா எழுதிருக்கோம்.....இன்னைக்கு எழுதலைனு பீல் பண்ண” என்றபடி நிமிர்ந்தவளின் முகத்தில் குறும்பு தனம் கொப்பளிக்க சட்டென முகத்தை பழைய நிலைக்கு மாற்றியவள் “உங்களுக்கு தான் தெரியும்ல ......எங்க வீடு ஹிட்லர் பத்தி...... ...... பரிட்சையில கேட்ட கேள்விகளை விட இவரு கேட்க போற கேள்வியை நினச்சாத்தான் பயமா இருக்கு.......அதான் இந்த கெட்டபுல அவர் முன்னாடி நின்னா அவர்க்கும் என்னை பார்த்து ஒரு பரிதாபம் வரும்ல” என சொல்லிவிட்டு தோழிகள் முகத்தை பார்க்க

“யாரு அந்த கைலாசம் (தோழிகள் மாதேஷிற்கு வைத்திருக்கும் பெயர் ) உன்னை பார்த்து பரிதாப படபோறாரா ...இந்த வருஷத்தோட பெஸ்ட் ஜோக் இதான்” என்றார்கள்..

“அச்சோ என்னப்பா சொல்றீங்க......ஏற்கனவே எக்ஸாம் ஒழுங்கா எழுதலைன்னு பயத்தில இருக்கேன்......நீங்க வேற பீதிய கிளப்பி விடறீங்க..... இந்த செட்டப் ஒத்து வரலையா “என அவள் அழுதுவிடுபவள் போல் இருக்க


அதற்குள் இன்னொருத்தி ........... “ஏண்டி அவளை பயமுறுத்திரீங்க...மலரு நீ பயப்படாத ....... நம்ம எல்லாம் சுனாமில சுக்கு காபி போட்டு குடிக்கிற ஆளுங்க....... இதெல்லாம் நமக்கு சாதரணம் மலரு..... நீ இப்படியே போ....கண்டிப்பா அவரு உன்னை திட்டமாட்டார்”.... என அவளுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்தனர் 2 .


வீட்டிற்கு சென்றால் மாதேஷ் என்ன சொல்வானோ என்று நினைக்கும்போதே அவள் உள்ளங்கை சில்லிட்டது. இப்போதே முகத்தை சோகமாக வைத்துகொள்ள வேண்டும் என அவள் முயற்சித்தபடி நடந்து வர “ஹே மலரு நான் இங்க இருக்கேன்” என்றபடி அவளுக்காக வாசலில் காத்திருந்தான் அவளது காதல் கணவன்.


அவளை கண்டது வேகமாக அருகில் வந்தவன் முதலில் கையில் இருக்கும் பழசாரை அவளுக்கு கொடுத்து குடிக்க சொன்னான். “ஏன் மலர் எக்ஸாம் ஹால்ல பேன் இல்லையா...முகம் எல்லாம் வாடி கிடக்குது” என அவன் அக்கறையாக பாசமாக விசாரிக்கவும் மலரோ அதிர்ந்து போய் நின்றாள்.


ஒரு முறை தன்னை கில்லி பார்த்து கொண்டாள். அவள் நினைத்தது என்ன ? இப்போது நடப்பது என்ன ?. தேர்வு முடித்து வந்ததும் “எப்படி எழுதி இருக்க.....ஒழுங்கா எழுதினியா...எதையும் உறுப்படியா செஞ்சிடாத” என அதட்டலோடு தான் கேட்பான். இவனை எப்படி சமாளிப்பது என பரிட்சை எழுதுவதைவிட இதை தான் அவள் அதிகம் யோசித்தால். ஆனால் இப்போதோ அவன் இவ்வளவு அக்கறையாக கேட்டதும் அவளே பேச்சற்று நின்றாள்.


மனதின் படபடப்பு கொஞ்சம் குறைய பரவாயில்லை நம்ம ஹீரோவுக்கு கொஞ்சம் லவ்ஸ் இருக்கும் போல என நினைத்தபடி பழசாரை வாங்கி கொண்டாள்.

அவள் பழசாரை குடித்து முடித்ததும் “அப்புறம் 93% வருமா” என அவன் கேட்க

குடித்த பழசாறு தொண்டையில் நிற்க “அதான பார்த்தேன்.....என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு...... கடவுளே எந்த நேரத்தில எப்படி இருப்பான்னு புரிஞ்சுக்கவே முடியலியே......அந்நியன் மாதிரி அடிக்கடி கெட்டப் மாத்தினா நான் என்னதான் பண்ணட்டும்”.....என மனதிற்குள் புலம்பியவள் “இவனை நம்பி நம்ம கொஞ்சம் ஏமாந்திட்டோம்” என யோசித்து கொண்டிருக்க அவனோ தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து புரிந்து கொண்டவன் “ என்ன ஒழுங்கா எழுதலியா........உன்னை எல்லாம் திருத்தவே முடியாது......சரி கிளம்பு போலாம்” என தனது அர்ச்சனையை தொடர்ந்தபடி அவளை அழைத்து சென்றான்.


அடுத்த இரண்டு நாட்கள் தேர்விற்கு அவன் இரவு பகலாக படித்து கொண்டிருந்தான்.

மலர்கூட “எதற்கு இவ்ளோ கஷ்ட்படறீங்க” என கேட்க

“இது என்னோட கனவு மலர்...எப்படியும் இந்த பரீட்சையில பாஸ் பண்ணிட்டா நான் நினைச்ச வேலை எனக்கு கிடைச்சிடும்......எல்லாமே படிச்சுட்டேன்......ஒரு மூனுவருஷத்து கேள்வித்தாள் கிடைச்சுதுன்னா இன்னும் ஈசியா இருக்கும்...நானும் கடையில எல்லா பக்கமும் கேட்டேன்.....இன்னைக்கு நாளைக்குனு இழுத்தடிக்கிறாங்க......இன்னும் பரிட்சைக்கு ஒரு வாரம் தான் இருக்கு...கொஞ்சம் பயமா இருக்கு” என சொல்லவும்

“நீங்க கவலைபடாதீங்க.....கண்டிப்பா பாஸ் பண்ணிடுவீங்க.....நம்பிக்கையோட இருங்க” என அவனை ஊக்கபடுத்தினாள் அவனின் மனைவி .

.

அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலிக்க எடுத்து பேசியவன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான். உண்மைதான என மீண்டும் மீண்டும் கேட்டு அதை உறுதி செய்து கொண்டவன் “கண்டிப்பாக வந்துவிடுகிறேன்” என அவர்களுக்கு வாக்கு கொடுத்தான்.

“ஹே குள்ள கத்திரிக்கா என்னடி பண்ற.......உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லபோறேன்” என்றபடி அவன் நுழைய


அன்றைய தேர்வை சொதப்பலாக எழுதியதால் அவனிடம் திட்டு நிச்சியம் என முடிவு செய்தவள் அவன் வரும்போது அடுத்த தேர்விற்கான புத்தகத்தை தன் முன் பரப்பிவைத்து அதற்குள் தன்னை மறைத்திருந்தால் மலர்..உள்ளே நுழைந்தவன் புத்தக குவியலுக்கு நடுவே மனைவியை பார்த்ததும் வேகமாக அவள் கைகளை பிடித்து தூக்கி தன்னோடு அணைத்தபடி அவளை ஒரு சுற்று சுற்றினான்..

சில வினாடிகள் எதுவும் புரியாமல் முழித்தவள் “அச்சோ என்னங்க இது...உங்களுக்கு என்ன ஆச்சு....... எனக்கு தலை சுத்துது இறக்கி விடுங்க” என அவள் கத்தவும்

“எனக்கும் அப்படிதாண்டி இருக்கும்......இப்படி வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ...கிடைச்சிடுச்சு...கிடைச்சிடுச்சு” என அவளை இறக்கிவிடாமல் சுற்றியபடியே அவன் உற்சாகமாக கூக்குரலிட

அவளுக்கு புரியாவிட்டாலும் அவனது சந்தோஷத்தில் அவளும் இணைத்து கொண்டவள் அதை அவளும் அனுபவித்தாள்.

பின்னர் அவளை இறக்கி விட்டவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் “மலர் நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்......ஆனா இந்த சந்தோசம் நிலைக்கணும்னா உன்னோட சப்போர்ட் வேணும் ...நீ செய்வியா” என கேட்க

அவளோ அதற்காகவே காத்திருந்தார் போல “நீங்க என்ன சொன்னாலும் செய்வேங்க.....அதுக்காக உன் உசிரை கொடுன்னு கேட்றாதீங்க ...நான் உங்களோட நூறு வருஷம் வாழனும்......அதை தவிர வேற என்ன பண்ணனும் சொல்லுங்க”...என்றாள்.

“என்ன மலர் உசிரு அது இதுன்னு அபசகுணமா பேசிட்டு இருக்க......நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்” என்றவன் அதன் அடையாளமாக தனது அச்சாரத்தை முத்தமாக கன்னத்தில் பதித்தான். அதில் அவள் கிறங்கி நிற்க அப்போது அவன் சொல்ல வந்ததை சொல்லவும் அதை கேட்டுதும் அவளது மகிழ்ச்சி யாவும் நொடியில் மறைந்து போக நிஜமாகவே தலை சுற்றி கீழே விழுந்தாள் அந்த மான்விழியாள். 3




மறுநாள் மாதேஷ் கிளம்பி அலுவலகம் சென்றுவிட அன்றைய தேர்விற்கு அண்ணாச்சியுடன் சென்றாள் மலர். அப்போது கல்லூரி வாசலில் அவளது தோழிகள் நின்று ஏதோ விவாதித்து கொண்டிருக்க தேர்வு அறைக்குள் செல்லாமல் அவர்களை நோக்கி சென்றாள் மலர்.


இங்கு அலுவலகத்தில் அலைபேசியில் பேசி முடித்தவன் சந்தோஷத்தில் மனதின் படபடப்பு குறைய வில்லை. பின்னர் அண்ணாச்சியை அழைத்தவன் அவரிடம் விபரம் சொல்லிவிட்டு அதிகாரியிடம் விடுப்பு கேட்டான்.அவரோ முதலில் மறுக்க அவரிடம் சண்டைபோட்டு விடுப்பு எடுத்து கொண்டு நேராக கல்லூரிக்கு சென்றான். தேர்வு முடிந்து மாணவிகள் வந்து கொண்டிருக்க கண்களோ அவனது மனைவியை தேடியது. அனைவரும் சென்ற பின்பும் மலர் கல்லூரியில் இருந்து வெளிவராமலிருக்க அலுவலகம் சென்று கேட்டான்.


அவள் தேர்வை முடித்துவிட்டு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பி விட்டதாக சொல்லவும் வேகமாக வீட்டிற்கு வந்தவன் அங்கு அவள் இல்லை. அலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அழைப்புமணி முடிந்தும் யாரும் எடுக்கவில்லை.வானமிருண்டு மழை வருவது போல் இருக்க அவனுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை. யாருக்கும் எளிதில் கிடைக்காத வாய்ப்பு....... அவனுக்கு கிடைத்து இருக்கிறது.....அதைவிடவும் மனமில்லை. ஆனால் இன்னும் ஒருமணி நேரம்தான் கால அவகாசம் இருக்கிறது. நினைக்க நினைக்க தலை வெடிப்பது போல இருந்தது.


“எங்க போனா இவ......அதும் இந்த மாதிரி நேரத்தில ........ சே கூத்துல கோமாளி விடறதே இவளுக்கு பொழப்பா போச்சு” என் சொல்லி கொண்டு இருக்கும்போதே பெரும் இடியுடன் கூடிய மழை பொழிய ஆரம்பித்தது.
ஒருபக்கம் மலர் மேல் கோபம் இருந்தாலும் இந்த மழையில் எங்கு இருக்கிறாளோ ...பாதுகாப்பிற்கு குடை, ரெயின் கோட் எதுவும் எடுத்து செல்லவில்லை என புலம்பிகொண்டே அவளது தோழிகள் எண்ணிற்கு அழைத்தவன் அதுவும் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. சிறிது நேரத்திற்கு மேல் வீட்டில் இருக்க மனமில்லாமல் ரெயின் கோட்டுடன் கிளம்பியவன் அவள் செல்லும் இடங்களெல்லாம் சென்று பார்க்க எங்கும் அவள் இல்லை.


அவன் மனதில் லேசான பயம் ஆரம்பித்தது. அப்போது என்று மீண்டும் அவனுக்கு அலைபேசி அழைப்பு வர எடுத்து பேசியவன் “சாரி மழை அதிகமா இருக்கு....... என் மனைவி இன்னும் கல்லூரியில் இருந்து வரலை.........அதற்காக தான் காத்துகிட்டு இருக்கேன்....... .......இன்னும்கொஞ்ச நேரத்தில வந்திடறேன்” எனசொல்ல


எதிர்புறத்திலிருந்து வந்த பதிலில் “ சார் எனக்குமிந்த வாய்ப்பின் முக்கியத்துவம் தெரியும். ஆனாலும் என் நிலைமையும் கொஞ்சம் புரிஞ்சுகுங்க......இப்படி நடக்கும்னு நானும் எதிர்பார்க்கலை ........கொஞ்சம் பொருத்திருங்க” என எரிச்சலுடன் சொல்லிவவிட்டு அலைபேசியை வைத்தான்..

ஒரு பக்கம் அவள் மேல ஆத்திரமும் கோபமும் வந்தாலும் இந்த மழையில் எங்கு மாட்டி கொண்டாளோ...என்ன பண்ணுகிறாளோ என்ற தவிப்புமாய் அவளை தேடி அழைந்தான்.

எல்லா இடங்களிலும் தேடிவிட்டு வந்து கொண்டிருந்தவன் அங்கு ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் கொட்டும் மழையில் தோழிகளுடன் மலர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு நின்று இருப்பதை பார்த்தவனின் கண்கள் அந்த மழையிலும் நெருப்பை கக்க முகம் ஆத்திரத்தில் துடிக்க அவளை நோக்கி நடந்தான் மாதேஷ்.
 
  • Like
Reactions: sumiram