• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 2

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
நேசம் - 2


"வெளியால போக ஏலாத அளவுக்கு மழை அடிக்குது... வந்திட்டினம் பொம்பள கேட்டு… முதல்ல ரெண்டு பேரையும் வெளிய போச்சொல்லு தாமரை" தங்கைக்கு அந்தளவிற்கு தைரியம் இல்லை என்று தெரிந்தும் உண்டான எரிச்சலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை அவளுக்கு.

"ஹலோ மிஸ்... நீங்கள் இண்டைக்கு பரிமளா கையால பூசை வாங்காம இருக்கிறதுக்கு, அவ தான் காரணம் எண்டத மறந்துட்டீங்கள் பாேல… அவயல் மட்டும் வரேல எண்டா… நாள் பூரா மழேக்க நிண்டிருப்பீங்கள். அதை மறந்திடாதங்கோ..." கேலியாகச் சொன்னாலும் அது தான் உண்மை.

மிருதுளா ஏ எல் இரண்டாம் ஆண்டு மாணவி. அதனால் அவள் பெரிய பாடசாலையில் கற்றாக வேண்டிய கட்டாயம். சின்னவர்கள் பதினோராம் தரத்திற்குக் கீழ் இருக்கும் பாடசாலையில் கற்கின்றார்கள். இன்று கனமழையெனச் செய்திகளில் அறிவித்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, பாடசாலைகள் அனைத்தும் பாதியில் மூடிவிட, இவள் மட்டும் வரவில்லை என்றால் பரிமளா கோபம் காெள்ளாமல் என்ன செய்வார்?

"இதுக்கு அது பரவாயில்ல தாமரை... ஆனா...." மேலே ஏதோ சொல்ல வாயெடுத்த நேரம்.

"மிருதுளா... " பரிமளாவின் குரல் ராகத்தில் ஒலித்தது.

"இவாக்கு இப்ப என்னவாம்...?" தாயிற்கு கேட்காமல் தங்கையிடம் கேட்டு விட்டு.

"ஓமம்மா...." என்றாள் பெரிதாக.

"இஞ்ச ஒருக்கா வந்திட்டு பாே..." என்றிட,

"ங்ஞ..." என அழுவது போல் காலை நிலத்தில் குத்தியவள், "இவாக்கு வேற வேல இல்ல." எனச் சிணுங்கிக் கொண்டே, கயிற்று காெடியில் இருந்த உடுப்பில் ஒன்றை உருவி இழுத்து அதைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

"ஏனம்மா கூப்பிட்டனீங்கள்...?" தெரியாதது போல் கேட்டவள், பார்வையை அவர்கள் பக்கம் திருப்பவே இல்லை. அது பிடிக்கவும் இல்ல…

"உன்னை பாக்காேணும் எண்டீச்சினம். அதான் கூப்பிட்டன். அவைக்கு வணக்கம் சொல்லு." என்றார். இதன் பின்பும் பாரா முகம் காட்டிட முடியுமா...? விருப்பமே இல்லாமல் அவர்களைப் பார்த்தவள், பொய்யானச் சிரிப்பினை வரவழைத்து வணக்கம் வைத்தாள்.

"வணக்கம் வணக்கம்... எங்கள ஆரெண்டு தெரியுதோ…?" என்றார் தம்பதிகளில் ஒருவர்.

"தெரியும் அம்மம்மா... அந்த முடக்கில இருக்கிற மேல் மாடி வீட்டுக்காரர் தானே!" தெரியாதது போல் காட்டிக் கொள்ள தோன்றவில்லை அவளுக்கு.

"பரவாயில்ல... தெரிஞ்சு தான் வைச்சிருக்கிற... நாங்கள் ஏன் இப்ப இஞ்ச வந்திருக்கிறம் எண்டு சொல்லு பாப்பம்?" மறு கேள்வி கேட்டார்.

"தெரியாது அம்மம்மா..." என்றாள் யோசிக்காது. எப்படிச் சொல்வாள் அவள்? ஏற்கனவே வாய் பார்க்காதே உள்ளே போ என்று இதற்குத் தான் தங்கைகளைத் தாய் விரட்டினாள், அதையும் மீறிச் சொன்னாள் என்றால் தங்கையைத் தானே மாட்டி விட்டதாகிடாது?

"தெரியாயாட்டிக்கு என்ன... நான் சொல்றன், இஞ்ச வந்து இரு" எனப் பக்கத்தில் அழைத்தார். அவர் அழைத்ததும் போகப் பிடிக்கவில்லை. அதே சமயம் போகவில்லை என்றால் மரியாதைத் தெரியாதவள் என்ற கெட்ட பெயருக்கு ஆளாக நேரிடும். தாயைப் பாவமாகத் திரும்பிப் பார்த்தாள். அவரும் "போ…" என்பதாகக் கண்களால் கூறிட, வேறு வழியற்று அவர் எதிரில் சென்று முட்டிப் போட்டு அமர்ந்து கொண்டவள் முகத்தினை, இரு கைகளாலும் வருடிப் பார்த்தவர்,

"என்ர பேரனுக்கு எண்டே பிறந்தா மாதிரி அவ்வளவு வடிவா இருக்கிற… என்ர பேரன கலியாணம் கட்டுறியா...?" என்றார் ஆசையாய் தடவலை நிறுத்தாமல்.

அவர் தடவுவது இதமாக இருந்தாலும், ஏனோ அவளுக்கு எரிச்சலாக இருந்தது. எழுந்து உள்ளே ஓடிவிடலாம் போல் இருந்த அவளது மனதுக்கு பரிமளம் தடையாக இருக்க, 'என்னம்மா இது' என்பது போல், மீண்டும் தாயின் பக்கம் திரும்பினாள் பாமாக முகத்தை வைத்து.

"அவளிட்ட கேக்கிறதுக்கு என்ன இருக்கம்மா... அவள் சின்னப் பிள்ளை… நல்லது கெட்டது தெரியாதவள். பெரியவ நாங்கள் எடுக்கிறது தான் முடிவு" என்றார் தன் பேச்சை அவள் தட்ட மாட்டாள் என்ற நம்பிக்கையில்.

"அப்பிடி எண்டா சரி… நானும் பேரனாேட கதைச்சிட்டு, நல்ல நாள் ஒன்டா பார்த்துச் சொல்லி அனுப்புறன். அப்பச் சம்மந்தக் கலப்ப முடிப்பம். வந்த வேல முடிஞ்சுது... அப்ப நாங்கள் வெளிக்கிடுறம்." என எழுந்து கொண்டவர்களுக்குப் புன்னகை மாறாது வணக்கம் வைத்து விடை கொடுத்தார் பரிமளா.

அவர்கள் கண்விட்டு மறைந்ததும் பெரிதாய் மூச்சொன்றை இழுத்து விட்டவரை பார்க்கையில், இதுவரை இருந்த இறுக்கம் ஒன்று தளர்ந்ததைப் போல் இருந்தது. அதை உறுதிப் படுத்துவதைப் போல் மிருதுளாவிடம் திரும்பியவர்,

"இண்டையோட என்ர கஷ்டம் எல்லாம் துலையப் போகுது. இனி நானும் மற்றவ மாதிரி நிம்மதியா இருக்கலாம்." கூறியவர் கண்களில் அத்தனை பிரகாசம். அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

"அம்மா...." என்றாள் வெளிவராத குரலில்.

"ஓம் மிரு... நீ சின்னப் பிள்ள இல்ல, அவயல் வந்தவ காரணம் தெரியாம போக... எப்படி நாலு பேரையும் கரை சேர்க்க பாேறனோண்டு பயந்து கொண்டிருந்தன். ஏதோ கடவுளுக்கு இப்ப தான் என்னில இரக்கம் வந்திருக்கு போல… இனி எந்தக் குறையும் இல்லாம என்ர பிள்ளைகளைக் கரை ஒதுக்கிடுவன்." என்றார்.

அவர் அப்படி கூறியதும், மறுக்க முடியவில்லை. மறுக்க வேண்டும் என்றால் ஏதாவது ஓர் தகுந்த காரணத்தோடு தான் மறுக்க வேண்டும். அவசரமாய் எண்ணிக் கொண்டவள்,

"ஆனா அம்மா... ஊரில அவேன்ர வசதிக்கு ஏத்த மாதிரி நிறைய பேர் இருக்கேக்க, எங்களிட்ட பாெம்பிள கேட்டு வரினமே ஏன்?" என்றாள் அவருக்குச் சந்தேகத்தைத் தூண்டுவது போல்.

அவளுக்கே இப்படியொரு கேள்வி எழும்போது, பெண்ணைக் கொடுக்கப் போகிறவர், அனுபவித்திரி. அவருக்கு எழாதா?

"நானும் கேட்டன் மிரு.... மாப்பிள்ளை இங்க இல்ல… பிரான்ஸ்ல இருக்கிறாராம். வசதி இல்லை எண்டாலும் பரவாயில்லை... நாலு பேருக்கு நடுவில என்ர மனுஷிய கூட்டிக்காெண்டு போகோணும், அதால வடிவான பொட்டையா பாருங்கோ எண்டிருக்கிறார். அவர் அப்பிடி சொன்னோன்ன, உன்னைத் தான் அவங்களுக்கு நினைவு வந்திச்சாம், அதான் சூட்டோட சூடா மழை எண்டும் பாக்காம கதைச்சிட்டு போவம் எண்டு வந்திருக்கினம்" நீண்ட விளக்கம் தந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை அவளுக்கு.

அவளைப் பொறுத்தரைக்கும் படிப்பு முடியும் வரை எந்தத் திருமணமும் வேண்டாம்.

"எனக்குத் தெரிஞ்சு அந்த வீட்டில கன வருசமா இவயல் தனியத் தானேம்மா இருந்தவ, இப்ப பொம்பிள ஆருக்கு கேக்கினம்?"

"நானும் அப்பிடி தான் நினைச்சன்… எனக்கும் அவைக்குப் பிள்ளை இருந்தது தெரியாது. நான் கலியாணம் கட்டி வரேக்க, இவயல் தங்களுக்கு பிள்ளை எண்டு ஆரும் இல்லை எண்டு தான் சொல்லிக் காெண்டு திரிஞ்சவ…"

"அப்ப எப்பிடி திடீர் எண்டு பிள்ளையாம்...?"

"அது கோபத்தில சொல்லிருக்கினம் மிரு... மகன் ஆரோ ஒரு பொட்டைய விரும்பி இருக்கிறான். அவள் சாதியில குறஞ்சவ போல, இவயல் ஏற்கேல… பொடியன் பாெட்டையக் கூட்டிக் கொண்டு வேற ஊருக்குப் போயிட்டான். அல்லாத பிள்ளை இல்ல எண்டு இவயலும் தேடாம விட்டுட்டினம்.

இப்ப என்னண்டா... நாலு வருஷத்துக்கு முன்னம் தான் மாப்பிள்ளேன்ர அப்பாவும் அம்மாவும் ஒரு வித்தில இறந்திட்டினம் போல, மாப்பிள்ளை அந்த விபத்தை நேர பார்த்திருக்கிறார். அதால இரவு பகல் எண்டு இல்லாமா, அதை நினைச்சு நினைச்சுக் கத்துறது. இப்பிடியே இருந்தா அவருக்கு எதுவும் ஆகிடும் எண்டு பயந்த, மாப்பிள்ளையோட அம்மா சைடில இருக்கிற சொந்தங்கள் ஆளுக்கு ஒரு தொகை போட்டு, பிரான்ஸ் அனுப்பி வைச்சிருக்கினம்.

இவைக்கு மகன் செத்த விஷயமே தெரியாது. நிறைய நாள் கழிச்சு ஆரோ எங்கேயோ கண்டு ஆறுதல் சொல்லேக்குள்ள தான், விசயம் தெரிஞ்சிருக்கு.

எங்க தங்களோட சாபம் தான் இதுக்கு காரணமாே எண்ட நெருடல்ல, இவயலே பொம்பிள வீட்டுப் பக்கம் போய்க் கதைச்சிருக்கினம். அப்பத் தான் பேரன்ர நம்பர் குடுத்து கதைக்க சொல்லிருக்கினம். அப்பா வழி உறவு எண்டதும் மாப்பிள்ளைக்குப் பெரிய சந்தோசம். அப்படியே கதைச்சு கதைச்சு, இப்ப இவயலுக்கும் சரி, பேரனுக்கும் சரி அப்பிடி ஒரு பாசம்.

மிரு... நீ வெளிநாட்டுக்குப் போனா, உன்ர தங்கச்சியாக்கள நீ தான் உயர்த்தி விடோணும். அம்மாவால இதுக்குமேல அடியன் அடிக்ககேலாது மிரு… அப்பா செத்ததில இருந்து அடியன் அடிச்சே அம்மான்ர கை ரேக எல்லாம் தேஞ்சிட்டுது. அம்மாக்கு இனியாவது கொஞ்சம் ஓய்வு வேணும்." பாவமாய்க் கேட்டவரைப் பார்க்கையில் எடுத்த முடிவு தவறோ என்று தோன்றியது.

அவளும் தான் தாய் படும் கஷ்டத்தைத் தினம் தினம் பார்க்கிறளே! ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட அளவு பீடி சுற்றினால் தான், அந்த மாதத்துக்கு வீட்டு செலவை நடத்துவதற்கான பணம் கிடைக்கும். வீட்டு வேலைகள் நடுவே பீடி சுற்றுவது என்பது மிகவும் கடினம். அதற்கு பாெறுமையும் மிக அவசியம். அதனால் இரவிலேயே பரிமளா அந்த வேலையினை தொடுவார். எட்டு மணியளவில் விளக்கைக் கொழுத்தி வைத்து விட்டுச் சுற்றுவதில் இறங்கினால், நள்ளிரவு இரண்டு மணியளவில் தான் பீடித் தட்டினையே கீழே வைப்பார். அவர் தூக்கத்தைத் தொலைத்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும்.

"நீங்கச் சொல்லுறது சரியம்மா.... ஆனா கஷ்டம் போகோணும் எண்டா, கலியாணம் தான் செய்யோணுமோ! எனக்குப் படிப்பு முடிய கூடினது மூன்டு வருஷம் தானே கிடக்கு… அது முடிஞ்சதும் அரசாங்கத்தில ஒரு வேலை எடுத்துட்டா, உங்கள இருத்தி வைச்சு ராணி மாதிரி பாப்பன் தானே." என்றவளை உதடு சுழித்து இளக்கமாக நகைத்தவர்,

"அவன் அவன் படிப்ப முடிச்சு போட்டு, வேலை இல்லா பட்டதாரி எண்டு ரோட்டில சாமான் வித்துக் கொண்டு திரியுறான். உனக்கு முடிச்சதும் வேலை தாராங்களோ... நாடு இருக்கிற நிலமேல அரசாங்கத்தில வேல பாக்கிறவன் கூட, சம்பளம் எடுத்துக் கட்டுதில்லை எண்டு, இருக்குற சொத்து பத்தெல்லாம் வித்திட்டு வெளிநாடு போறாங்கள். நீ என்னண்டா அரசாங்கதில வேல செய்யப் போறன் எண்டுற…

இஞ்ச பாரம்மா... அம்மா சொல்லுறத கேள்… அம்மா கெட்டதுக்கு சொல்லமாட்டன். உனக்கும் பதினெட்டு வயசாகுது. கால நேரத்தில கலியாணம் கூடி வாரதே பெருசு. உனக்கு நல்ல இடம் வேற கிடைச்சிருக்கு. வேண்டாம் எண்டுடாத…" என்றார்.

அவர் சொல்வதும் உண்மை தான். அவள் நட்பில் இருக்கும் ஒருவள் குடும்பத்தோடு கனடா சென்றிருக்கிறாள். அத்தனைக்கும் அவளது அம்மா அப்பா இருவரும் அரசாங்க வேலை பார்த்தவர்கள். தாய் சொல்வது சரி என்று தோன்ற, தனக்காக இல்லை என்றாலும், தன் குடும்பத்தின் நலனுக்காக அமைதியாகி விட்டாள்.

பிறகு என்ன? எல்லா திருமணத்திலும் நடைபெறுவது போல், மாப்பிள்ளை ஊருக்கு வந்ததும், சம்மந்தக்கலப்பு, பொன் உருக்கு, மாப்பிள்ளை அழைப்பு என்று இதோ இதோ என்று திருமணமும் முடிந்தது.
 
Last edited:

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
291
114
43
Tanjur
மிருவோட அம்மா சொல்றது சரியா இருந்தாலும் ஏதோ ஒன்னு தப்பா இருக்கே
 
  • Like
Reactions: Gowri Yathavan

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
94
43
18
Tirupur
மிருதுளா படிக்க விரும்புறா ஆனா அம்மா பேச்சையும் மீற முடியாம தவிக்கிறா...😒 அவ அம்மா அவசரப்படுறாங்களோ? 🙄
 
  • Like
Reactions: Gowri Yathavan

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
மிருவோட அம்மா சொல்றது சரியா இருந்தாலும் ஏதோ ஒன்னு தப்பா இருக்கே
தூர நிண்டு பாக்கேக்குள்ள எல்லாம் சரியா தான் தெரியும் சிஸ்.... பார்ப்போம் என்ன நடக்குது எண்டு...
 

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
Miruthula paavam than polaதெரியேலயே யாரு பாவம் எண்டு... சிஸ் நீங்கள் கதை எழுத போறீங்கள் எண்டு சொல்லீச்சினம் எழுலேயா?

Miruthula paavam than pola
தெரியேலயே யாரு பாவம் எண்டு... சிஸ் நீங்கள் கதை எழுத போறீங்கள் எண்டு சொல்லீச்சினம் எழுலேயா?
 

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
மிருதுளா படிக்க விரும்புறா ஆனா அம்மா பேச்சையும் மீற முடியாம தவிக்கிறா...😒 அவ அம்மா அவசரப்படுறாங்களோ? 🙄
அவான்ர சூழல் யோசிக்க விடேல.. நல்லதா நினைப்பம்... நன்றி சிஸ்
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
881
430
93
Tirupur
மிருதுளாவோட அம்மா பயம் நியாயமானது தான். ஆனா அதுக்காக கல்யாணம் ஒரு தீர்வா இருக்குமா? பார்ப்போம்
 
  • Like
Reactions: Gowri Yathavan

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
111
148
43
Salem
எல்லாமே சீக்கிரமா நடக்குறமாதிரி இருக்கே
அவசர கோலம் அலங்கோலம் ந்னு சொல்வாங்க. அப்படி ஆகிடக்கூடாது.
 
  • Like
Reactions: Gowri Yathavan

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
மிருதுளாவோட அம்மா பயம் நியாயமானது தான். ஆனா அதுக்காக கல்யாணம் ஒரு தீர்வா இருக்குமா? பார்ப்போம்
நன்றி சிஸ்
 

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
எல்லாமே சீக்கிரமா நடக்குறமாதிரி இருக்கே
அவசர கோலம் அலங்கோலம் ந்னு சொல்வாங்க. அப்படி ஆகிடக்கூடாது.
நன்றி சிஸ்