• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேர்மறை, நெறிமுறை, நல்லின்பம் (02/08/21)

V

Viba visha

Guest
நேர்மறை.. இந்த வார்த்தையை இப்பொழுதெல்லாம் சல்லடையிட்டு சலித்து தேடவேண்டியதாகிறது. உதாரணத்திற்கு.. நம்மில் எத்தனை பேர், "நலமா?" என்ற ஒற்றைக் கேள்விக்கு தன்னம்பிக்கையுடன்.. "நன்றாக இருக்கிறேன்.. நலமாய் இருக்கிறேன்" என்று பதிலளித்திருப்போம்?

சிறு வயதில் நான் கேள்விப்பட்ட ஒரு குட்டி ஸ்டோரி.. "படித்த பட்டதாரி இளைஞன் ஒருவன், முதன் முதலாக இன்டர்வியூவில் தேர்வாகி, முதல் நாள் வேலைக்கு மிகவும் புத்துணர்ச்சியுடன் கிளம்பிக் கொண்டிருக்கிறான்.

வழியில் செல்லும் அனைவருக்கும் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறான் அவன். ஆனால் அந்த இளைஞனுக்கு வேண்டிய ஒருவர் அவனைப் பார்த்ததும் போகிற போக்கில்.. "என்னப்பா.. உடம்பு சரியில்லையா?" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவன் "இல்லையே நான் நலமாய் தானே இருக்கிறேன்.." என்று தன்னம்பிக்கையுடன் கூறிவிட்டு தன் வழியே நடந்திருக்கிறான்.

அடுத்து அவனை சந்தித்த மற்றொருவரும், அவனது உடல் நலத்தை பற்றியே விசாரிக்க.. இப்பொழுது நம் பையனுக்கு சற்று சந்தேகம் வந்துவிட்டது. இருந்தாலும் அவரிடம் சமாளித்துவிட்டு தன் பாதையில் சென்றவனை மூன்றாவதாய் ஒரு நபரும் "உன் உடல்நிலை எப்படியிருக்கு?" என்று கேட்க.. அவ்வளவு தான் கதை முடிந்தது.

ஆம்.. இப்படி மற்றவர்கள் விசாரித்ததிலேயே அவனுக்கு உண்மையாக உடல் சிசுகவீனம் அடைந்தது.

ஏனென்றால்.. நமது எண்ணங்களுக்கு அத்தனை சக்தி இருக்கிறது.

நேர்மறையான எண்ணம் இருந்தால் தானே வாழ்வை நெறிமுறையாய் வாழ முடியும்?

நெறிமுறையான வாழ்வில் தானே நல்லின்பம் கிடைக்கும்?

நம்மை சுற்றியிருக்கும் அத்தனை தடைகளையும் நமது நேர்மறை எண்ணமே உடைத்தெறியும். எனவே, நேர்மறை எண்ணம் கொண்டு, நெறியுடன் வாழ்ந்து, நல்லின்பம் கொள்வோம்.