• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேர்மறை, நெறிமுறை, நல்வாழ்வு (05/08/21)

V

Viba visha

Guest
நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது எப்படி? என்னும் கேள்வி பலரது மனதில் எழுந்திருக்கலாம்.. எத்தனை செய்தும், எவ்வளவாய் முயன்றும் எனக்கு மட்டும் எந்த நன்மையும் நடப்பதில்லையே என்று நம்மில் சிலர்.. அல்லது பலர் சலித்திருக்கலாம்..

ஆனால் அதற்கு, வாழ்வின் முதல் படியை தைரியமாக எடுத்து வைத்துவிட்டாலே போதுமானது. அதன் பிறகு இன்னும் எத்தனை படிகள் இருக்கின்றன என்று கணக்கிட வேண்டிய அவசியமில்லை. நம் கண் முன் இருக்கும் முதல் படியை மட்டும் கடக்கவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டு, பயணித்தால் உலகமே நம் காலின் கீழ் தான்.