• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
இதுவரை சொல்லவில்லைத் தான்..ஆனா சொல்லுவ. சொல்ல வைப்பேன்.
சும்மா ..உளறாதீங்க.
அது நடக்கும் போது பாரு. என் பேச்சு உளறலா இல்லையான்னு..
டேய் முகில் வண்டியை ஊருக்குள்ள விடுடா.
தனஞ்செயன் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்ள முகில் காரை ஊருக்குள் செலுத்தினான்.

சுபாங்கியோ நடந்துகொண்டிருக்கும் நிகழ்வினால் சற்றும் தாக்கமடையாதவளாக சற்றும் பயமோ கலவரமோ இன்றி ஏதோ நீண்ட நாள் கழித்து அந்த ஊருக்கு வருபவள் போல சுவாரஸ்யமாய் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

முகிலன் அதைக் கண்டு வியப்புடன் கண்ணாடி வழியே நண்பனைப் பார்க்க அவனோ அலட்சியமாய் உதடு சுழித்து விட்டு எல்லாம் அப்பனின் திமிர் என்றான் சத்தமாக.

அவன் பேச்சில் தலையைத் திருப்பி அவனைப் பார்த்த சுபாங்கியின் இதழ்களில் சிறு புன்னகை தவழ நிச்சயமாய் என்றாள். எப்படியோ என்னை அழைத்துச் செல்ல என் அப்பா வந்துவிடுவார் என்று தெரியும்.பின்னும் நான் எதற்கு வீணாக கவலைப்பட வேண்டும்.

அவள் பேச்சைக் கேட்டு வாய்விட்டு சிரித்த தனஞ்செயன் அதீத நம்பிக்கை தான் போ!! என்றான் உதட்டை வளைத்து.

ஏன் என் அப்பா வரமாட்டார் என்கிறீர்களா?? அவரைப்பற்றி உங்களுக்கு தெரியாது.இந்நேரம் போலீஸ் உடன் வந்து கொண்டிருப்பார்.அவள் குரலில் ரோஷம் பொங்கியது.

ஹ்ம்ம்..உன் அப்பனைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாகத் தெரியும்.வருவான் கண்டிப்பாய் வருவான்.ஆனால் நீ நினைப்பது போல் வந்து உன்னை அழைத்துப் போக மாட்டான். நான் உன் கழுத்தில் மூன்று முடிச்சு போடுவதை தடுக்க முடியாத கையாலாகாத்தனத்துடன் பார்த்துவிட்டுப் போவான்.அப்போது அவன் முகத்தில் வரும் பார் செய்வதறியா தவிப்பும் கோபமும் அது அது தான் எனக்கு வேணும்....தனஞ்சயனின் முகம் பயங்கரமாக மாறியது. அதுவரை இயல்பாக இருந்த சுபாங்கியின் இதயத்துடிப்பும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

கார் ஊருக்குள் நுழைந்து கோவில் வாசலில் போய் நின்றது.அங்கு வாசலில் மாலை தாலி புடவை போன்றவற்றுடன் தனாவின் நண்பர்கள் சிலரும் ஊர்ப் பெரியவர்கள் சிலரும் நின்றனர்.ஒரு ஓரத்தில் திருமணப் பதிவாளரும் நின்றார்.

ஆக இவன் எல்லாவற்றையும் நன்றாக திட்டமிட்டே செய்திருக்கிறான்.



ஏய்..என்ன முழிச்சுட்டே தூங்குகிறாயா??? போ..போய் அந்த வீட்டில் புடவை மாற்றி அலங்காரம் செய்துகொண்டு வா.

என்னது அலங்காரமா??? நீங்கள் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்??? இது எவ்வளவு பெரிய விடயம்?? இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா?? சும்மாவே இரண்டு குடும்..

ஷ்ஷ்ஷ்..... தன் வாயின் மேல் ஒற்றை விரலை வைத்து பேச்சை நிறுத்தினான் தனஞ்சயன்.நான் என்ன நினைக்கிறேன் என்ன செய்கிறேன் எதற்கு செய்கிறேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும்.அதைபற்றி நீ எனக்கு எதுவும் கூற வேண்டிய அவசியம் இல்லை. போ.... போய் தயாராகு.


உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த நம்பிக்கையில் நீங்கள் கூறுவதை எல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்?? நீங்கள் கடத்தி வந்திருப்பதால் மட்டுமே நான் மிரண்டு போய் நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவேன் என்று நினைத்தீர்களோ?? அவ்வளவு தூரம் முதுகெலும்பில்லாத ஒருத்தி என்றா என்னை நினைத்திருக்கிறீர்கள்??

ஓஹோ நீங்கள் ரொம்ப துணிச்சல்காரியாக்கும்!!!!

கண்டிப்பாய். இன்னும் சற்று நேரத்தில் என் அப்பா இங்கு வந்துவிடுவார் என்று நீங்களே கூறிவிட்டீர்கள். அப்புறமும் என் துணிச்சலுக்கு என்ன குறை.
சிறு யோசனையுடன் அவளைப் பார்த்த தனஞ்செஜன் சட்டென அவள் கரத்தைப் பற்றி இழுத்தபடி அந்த கோவிலில் நடக்கும் திருமணங்களுக்கு அலங்காரம் செய்யும் மணப்பெண் அலங்கார அறையினுள் நுழைந்தான்.

ப்ச்..கையை விடுங்கள்.விடுங்கள் என்கிறேனில்லையா.

ஏய் பொறு.என்று அதட்டியவன் அந்த சிறிய அறைக்கதவை சாத்தி தாழிட்டான்............




பகுதி _ 2


டேய் தனா..எல்லாம் சரியாய் நடக்குமாடா.அந்தப் பெண் வேறு போலீஸ் அது இதுவென்கிறாள்.ரொம்ப துணிச்சலாய்ப் பேசுகிறாள். போலீஸ் வந்தால் நாங்கள் தான் கடத்தினோம் என்று கண்டிப்பாய் மாட்டி விடுவாள் டா.அப்புறம் களி தான்.


ஹ ஹ....பயப்படாதே மச்சி.இவ்வளவு தூரம் திட்டம் போட்டு செய்பவன் இதை ஜோசிக்க மாட்டேனா?? அவள் அப்பனுக்கு முன்னாலேயே என்னை விரும்பி தான் திருமணம் செய்கிறேன் என்று அவள் வாயாலேயே கூறுவாள் பாருடா.


டேய் எப்படிடா???

சற்று நேரம் முகம் கறுக்க மௌனம் காத்த தனஞ்சயன் .கூறுவாள் அவ்வளவு தான்.என்று அழுத்தமாய் முடித்துவிட்டு டேய் முகில் நீ தான்டா போய் அம்மாவை அழைத்து வர வேண்டும் என்றான்.

டேய் நானாடா??

ம்ம் நீ தான்.

அம்மா இதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு ஜோசிச்சியா??

அவங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் எனக்கு கவலை இல்லை முகில்.

தனா..

முகில் இது என் தன்மானப் பிரச்சினை.என் நெஞ்சில் கோபத்தீ கனன்று கொண்டே இருக்குடா.இப்படி எல்லாம் செய்ய வேண்டுமென்று எண்ணியே பார்க்காத..... ஏன் இந்த பெண்ணை கனவிலும் கூட நினைத்துப் பார்க்காத என்னை இப்படி எல்லாம் செய்ய வைத்தது இவள் அப்பனின் பேச்சு தான்டா. இவள் அந்தாள் கண்ணு முன்னாடியே என் மனைவியாகணும்.அப்போ அவன் கண்ணில தெரியும் பார் கையாலாகாத கோபமும் வலியும் அது...அது தான்டா என் நெஞ்சில் கனலும் கோபத்தீயை அணைக்கும்.


சும்மா இருந்த என்னை சீண்டிவிட்டது இவள் அப்பன்.அதற்கான தண்டனையை நிச்சயம் அவன் அனுபவிக்கணும் டா. என்னை அவமதித்ததற்கு அவன் பட்டே ஆகணும்.இந்த விடயத்தில் நான் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.அது அம்மாவிற்காக என்றாலும் சரி தான். அவங்க பையனின் திருமணத்தை பார்க்கும் ஆசை இருந்தால் கிளம்பி வர சொல்லு.இல்லை வீட்டிலேயே இருக்க சொல்லு.நான் அங்கு சென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறேன்.

நண்பனைப் பற்றி முகிலனுக்கு தெரியும்.அவனை

யாராவது சீண்டினால் அவ்வளவு தான். அந்த தர்மராஜிற்கு அன்று வாயில் சனி போலும்.பின்னே அத்தனை பேர் மத்தியில் வைத்து அப்படி பேசினால் எந்த ஆண்மகனாய் இருந்தாலும் கோபம் வரும்தானே!! அதுவும் தனஞ்செயன் போன்றவனுக்கு..இவ்வளவு கோபம் வந்ததில் வியப்பேதும் இல்லை. அவன் அவர் பேச்சை தன்னுடைய தன்மானத்துக்கு விழுந்த அடியாய் எடுத்துக்கொண்டு விட்டான்.இனி அவனை யாராலும் தடுக்க முடியாது.


சிறு பெருமூச்சுடன் தலையாட்டிவிட்டு தனஞ்செயனின் அம்மா பிரபாவதி அம்மாவை அழைத்துவரக் கிளம்பினான் முகிலன்.



என்னடா முகிலா சொல்கிறாய்?? இவனுக்கு ஏண்டா புத்தி இப்படி போகிறது??

அவன் இந்த விடயத்தில உறுதியா இருக்கான்மா. எதற்காகவும் தன்னோட முடிவில இருந்து மாறமாட்டேன்னு சொல்றான்.


ஏண்டா நீ அவனின் நண்பன் தானே!!! நீ அவனுக்கு எடுத்து சொல்லக் கூடாதா??

எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்மா..அவன் கேட்பதாக இல்லை.

தாயே பராசக்தி!!!!!!!! சின்ன வயசில இருந்தே குடும்ப பாரத்த தோளில சுமக்கிறவன்னு நான் அவன் போக்கில் அவனை விட்டது தப்பாக போய்விட்டதோ?? இல்லை என்றால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இப்படி ஒரு செயலைச் செய்வானா??


முழுக்க அவன் மேலும் தப்பு சொல்ல முடியாதும்மா.அவன் மனதில் ஒருபோதும் அந்த பெண்ணைக் குறித்து எந்த எண்ணமும் எழுந்ததே இல்லைமா.அவன் இப்படி செய்ய வேண்டும் என்று கனவிலும் எண்ணிப் பார்த்தது இல்லை..அவர் தான் அனாவசியமாய் பேசி அவனை சீண்டி விட்டார்.அவரின் பேச்சின் விளைவு தான் இது.


டேய் ..சும்மா இருடா நீ வேற..அவன் செய்வதற்கு எல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு.சரி அவர் பேசியது தப்பு தான் என்றாலும் அவர் யாருடா...இவனின் மாமன் தானே. தாய்மாமன் டா. அவர் பேச்சை இவனால் பொறுத்துக்கொள்ள முடியாதா?? அல்லது இவனைப் பேச அவருக்கு உரிமை தான் இல்லையா???


ம்ம் தாய்மாமன் தான்மா.ஆனால் அவர் தனாவிடம் ஒருபோதும் அப்படி மாமன் போல் நடந்துகொண்டதே இல்லையே..ஏதோ ஜென்ம சத்துரு போலல்லவா நடந்து கொண்டார். தனா பிறந்ததில் இருந்து என்றாவது ஒருநாள் அவனை ஆசையாய் அன்பாய் நடத்தியிருக்கிறாரா?? அல்லது தனா தான் அவரை மாமா என்று அழைத்துப் பேசியிருக்கிறானா??


அது...அது.. பிரபாவதியால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

விடுங்கள் மா.சிரமப்படாதீர்கள்.உங்களுக்கே தெரியும் தனா ஒரு முடிவெடுத்தால் அதை மாற்ற யாராலும் முடியாதென்று.வந்து அவனை மனதார ஆசீர்வதியுங்கள் மா. அவன் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும்.

ஹ்ம்ம்....இனி நான் என்ன சொல்லி என்ன பண்ண முகிலா..ஏதோ நீ சொல்வது போல அவன் நன்றாக வாழ்ந்தால் சரி..


அம்மா..உங்கள் அண்ணன் பெண் உங்களுக்கு மருமகளாவதில் உங்களுக்கும் இஷ்டம் இல்லையா???


ஹ்ம்ம்..உனக்கும் என் மனம் புரியவில்லையா முகிலா?? எனக்கு இந்த கல்யாணத்தில் ரொம்ப ரொம்பவே மகிழ்ச்சி தான்.இது நடக்குமா என்று நான் ரொம்ப ஏங்கி இருக்கேன்.ஆனா அது அண்ணனோட சம்மதத்தோட இரண்டு குடும்பமும் ஒண்ணா மகிழ்ச்சியா நின்னு நடக்கனும்னு ஆசைப்பட்டேன் பா இப்படி அந்தப் பெண்ணை கடத்திட்டு வந்து வற்புறுத்தி இவன் கல்யாணம் பண்ணுவான்னு நான் கொஞ்சமும் எதிர்பாக்கல.அது தான் வருத்தமா இருக்கு.ரெண்டு குடும்பத்துக்கும் இடைல உள்ள விரிசல் இதனால இன்னும் அதிகம் ஆய்டாதா.அதோட அந்தப் பெண்ணோட மனநிலை எப்படி இருக்கும்னு சற்று சிந்தித்துப் பாருடா.

ம்ம் ..உங்கள் ஆதங்கம் புரிகிறதும்மா.ஆனா நீங்கள் நினைச்சது போல ரெண்டு குடும்பமும் ஒண்ணா சந்தோசமா நின்னு இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையேம்மா. உங்களுக்கு புரியாததா??

பிரபாவதியின் விழிகளில் நீர் அரும்பியது.எல்லாவற்றுக்கும் இந்தப் பாவி தான்பா காரணம்..

ஷ்ஷ்..என்னம்மா இதெல்லாம். முடிந்ததைப் பேசி பயன் இல்லை. இப்போது கிளம்பி வாருங்கள் நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.

கவலை மகிழ்ச்சி கலவரம் என பல்வேறு உணர்சிக்கலவைகள் உள்ளத்தில் கொந்தளிக்க பிரபாவதி ஊர் மத்தியில் உள்ள கோவிலை நோக்கி பயணமானார்.

பிரபாவதியும் முகிலனும் சென்ற கார் கோவிலை அடையவும் அவர்களுக்கு எதிரில் ஒரு போலீஸ் ஜீப்பும் ஒரு காரும் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

தன் காரில் இருந்து பிரபாவதி இறங்கிய அதேகணம் எதிரே நின்ற காரில் இருந்து தர்மராஜும் இறங்கினார்.பிரபாவதியின் கண்கள் அவரை கண்ணீருடன் மன்னிப்பும் இறைஞ்சலுமாக நோக்க அவரின் கண்களோ பிரபாவதியை குரோதத்துடன் முறைத்தது.




என்ன நீ என்னை அசிங்கப்படுத்தியது போதாதென்று உன் பையனை வேறு தூண்டிவிட்டு என்னை அசிங்கப்படுத்துகிறாயா??


அண்ணா ..நான் ஒன்றும்..

ச்சே..வாயை மூடு. இந்த அண்ணன் தங்கை உறவுமுறை செத்து பலவருடங்கள் ஆகிவிட்டது.உன்னுடன் எனக்கென்ன பேச்சு.. எங்கே உன் பையன் அந்த பொறுக்கி ராஸ்கல்...

ஓய்......மாமோய் நான் இங்க இருக்கேன்.

குரல் வந்த திசையில் திரும்பியவரின் கண்கள் கோபத்தில் சிவந்து துடித்தன.ஏனெனில் அங்கு தனஞ்சயன் சுபாங்கியின் கரத்தை தன் கரத்துடன் சேர்த்து இறுகப் பிணைத்தபடி நின்றிருந்தான்.


டேய்...பொறுக்கி முதல்ல என் பொண்ணு கைய விடுடா.சுபிம்மா இங்க வாடாம்மா.அப்பா வந்துவிட்டேன் டா செல்லம்.நீ பயப்படாதே!!!!!!!!


ஹ ஹ .என்ன மாமா டயலாக்கையே மாத்தி பேசுறீங்களே வழக்கமா பொண்ணு கல்யாணத்தில பெத்தவரு என் பொண்ணு கைய விட்டுடாதீங்க மாப்பிள்ளைன்னு தானே சொல்வாரு.


யாருக்கு யாருடா மாப்பிள்ளை?? ஊரறிஞ்ச பொறுக்கி நீ!!!!! நீ எனக்கு மாப்பிள்ளையா??
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அத நீங்க சொல்லக்கூடாது மாமோய்!!!

வேற யாருடா சொல்லணும்??

உங்க பொண்ணு சொல்லணும்..

அவளை கடத்திட்டு வந்து வைச்சுகிட்டு பேச்சா பேசுற நீ!!!!!!!!!..என்ன இன்ஸ்பெக்டர் பார்த்துட்டு நிக்கிறீங்க இவனை அடிச்சு இழுத்துட்டு போங்க..என்று ஆத்திர மிகுதியில் குரல் நடுங்க கத்தினார் தர்மா. அதை ஒரு கேலிப் புன்னகையுடன் பாத்திருந்தவனிடம்

என்ன மிஸ்டர் தனஞ்சயன்.இந்த ஊருக்குள்ள நீங்க பெரிய வீட்டுக்காரர் செல்வாக்கானவர் என்றதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாமா?? இதெல்லாம் என்ன சார்?? என்று போலீஸ் கேட்கவும்

வணக்கம் இன்ஸ்பெக்டர். நீங்க இவ்ளோ தூரம் பேசுற அளவுக்கு அப்படி நான் என்ன தப்பு பண்ணினேன் என்று கொஞ்சம் சொல்றீங்களா?? என்றான் நிதானமான குரலில் தெளிவாக.

என்ன தனஞ்செயன் விளையாடுறீங்களா? ஒரு பெண்ணைக் கடத்திட்டு வாறது உங்களுக்கு தப்பா தெரியலையா??

என்ன சார் சொல்றீங்க? கடத்திட்டு வந்தேனா?? யாரை இவளையா?? உச்சபட்ச வியப்பு விரவியது அவன் குரலில்.

பின்னே இல்லை என்கிறீர்களா??

ஆமா சார். யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்திருக்காங்க.நானும் இவளும் ஒருத்தரை ஒருத்தர் உயிராய் காதலிச்சோம்.இவ வீட்ல ஒத்துக்கல.அதனால இவ என் கூட வந்துட்டா.இன்னைக்கு இந்த கோவில்ல எங்களுக்கு கல்யாணம்.


சார் இவன் சொல்றத நம்பாதீங்க.ஏண்டா பொறுக்கி பொய்யா சொல்ற?? என் பொண்ணைப் பத்தி எனக்கு தெரியும் டா.அவளாவது உன்னைப் போய் காதலிப்பதாவது ஹா...


தனஞ்சயனின் முகம் கருத்து இறுகியது.சார் நான் அனாவசியமாக யாருடனும் பேச விரும்பவில்லை.நீங்கள் இதோ இவளிடமே எல்லோர் முன்பும் கேளுங்கள்.அவள் நான் கூறுவது பொய் என்று கூறினால் தாராளமாய் நீங்கள் என்னை அர்ரெஸ்ட் செய்யலாம்.

அவனை ஓர் பார்வை பார்த்த இன்ஸ்பெக்டர் சுபாங்கியிடம் திரும்பினார்.

சொல்லும்மா இவன் உன்னை கடத்தி வந்திருக்கிறான் தானே??


சுபாங்கி உதட்டைக் கடித்தபடி தலை குனிந்து நின்றிருந்தாள்.தர்மராஜ் தவிப்புடன் கூறினார்..சுபா சுபிம்மா ..சொல்லுடா.இந்த பொறுக்கி உன்னை கடத்திக் கொண்டுதான் வந்தான் என்று சொல்லும்மா.யாருக்கும் பயப்படாதே.இதோ அப்பா உன் முன்னாலேயே நிற்கிறேன்.இன்ஸ்பெக்டர் இருக்கிறார்.எதற்கும் பயப்படாதே டா.


இதோ பாருங்கள் மிஸ் சுபாங்கி.நீங்கள் உண்மையை தைரியமாகக் கூறலாம்.எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையே இல்லை.


எதற்கு தயங்குகிறாய் சுகி. உண்மையை அனைவரிடமும் கூறுவது தானே .தனாவின் குரல் அழுத்தமாக கூற கூடவே அவன் கரம் அவள் மென்கரத்தை பற்றி அழுத்தியது.அந்த அழுத்தத்தில் சுபாங்கியின் உடலில் ஓர் அதிர்வு ஓடியது..

எதையாவது பேசு சுபிம்மா.அப்பாவிடம் பேசும்மா.எதற்கு மௌனமாக இருக்கிறாய். தர்மாவின் குரல் தவிப்புடன் ஒலித்தது..

அதற்கு மேலும் மௌனம் காக்க முடியாமல் அடைத்த தொண்டையை லேசாக செருமியபடி நிமிர்ந்த சுபாங்கி கவனத்துடன் தந்தையின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து அந்த இன்ஸ்பெக்டரின் முகத்தைப் பார்த்து இவர் கூறியது உ...உண்மைதான் சார்.நான் வி..விருப்பப்பட்டுத் தான் இவருடன் வந்தேன் என்றாள்.


சற்று தள்ளி நின்று இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முகிலனின் விழிகள் வியப்பில் விரிய தனஞ்செயனின் விழிகளிலும் உதடுகளிலும் ஒரு வெற்றிப்புன்னகை கர்வத்துடன் ஒருங்கே மலர்ந்தது.


சுபா..என்ன சொல்கிறாய்?? சுபா ..சுபிம்மா இவன் இவன் உன்னை என்ன சொல்லி மிரட்டி இப்படி கூறச் சொன்னான்.எதுவாய் இருந்தாலும் பயப்படாமல் தெளிவாய் சொல்லுடா.அப்பா இருக்கிறேன் உனக்கு.


இன்ஸ்பெக்டர் ...என் தரப்பு நியாயத்தை நான் நிரூபித்துவிட்டேன்.அவளே தன் சம்மதத்தை அவள் வாயால் கூறிவிட்டாள்.இதற்கு மேலும் இவர் இப்படி என்னை ஏதோ வில்லன் போல் சித்தரித்துப் பேசுவது கொஞ்சமும் சரி இல்லை சொல்லிவிட்டேன்.


சுபாங்கி சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.நீ வில்லன் தானே என்று குற்றம் கூறியது அவள் பார்வை.அவள் பார்வையைத் தவிர்த்த தனஞ்செயன் முகிலனுக்கு கண்ணால் ஏதோ சமிக்ஞை செய்ய அவன் அங்கிருந்த சிலருக்கு ஏதோ உத்தரவுகளைக் கொடுக்க அடுத்த நிமிடம் சுபாங்கியின் கரத்தைப் பற்றிய தனஞ்செயன் இன்ஸ்பெக்டரிடம் திரும்பி இவள் அப்பா எங்கள் திருமணத்தை நிறுத்த முயற்சிக்க கூடும். தயவு செய்து எங்கள் திருமணம் நடக்கும் வரையிலும் நீங்கள் எங்கள் உடன் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் சார்.அதோடு எங்கள் திருமணம் உங்கள் கண் முன்பு நடந்தால் தான் உங்கள் சந்தேகமும் நீங்கும் என்றவன் வாருங்கள் என்றபடி அந்த ஆலயத்தின் சன்னதி நோக்கி நடந்தான்.அங்கு ஐயர் தாலி மாலை என்பவற்றை வைத்து பூஜை செய்து கொடுக்க மாலையை எடுத்து அனைவர் முன்பும் சுபாங்கியின் கழுத்தில் அணிவித்தான்.






கண் முன்பு நடப்பதை நம்பவே முடியாமல் திகைத்துப்போய் நின்றிருந்தார் தர்மராஜ்.தொடர்ந்து அவனின் கண்ணசைவில் சுபாங்கி மாலையை எடுத்து கரம் நடுங்க அவனின் கழுத்தில் போட்டாள்.


தர்மராஜின் உடல் அதிர்ந்தது.அவர் பெண்ணா இப்படி.... பொத்திப் பொத்தி வளர்த்த அவர் பெண்ணா இப்படி ஒரு காரியத்தைச் செய்தாள். அவர் ஒரு கோடு போட்டால் அதைத்தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைக்காத அவர் பெண்ணா இன்று அவர் அறவே வெறுக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தனை காதலித்து கல்யாணமும் செய்து கொள்கிறாள்.அதுவும் அவர் கண் முன்பே....


தர்மராஜின் கண்களில் தெரிந்த வலியையும் அடிபட்ட தோற்றத்தையும் கையாலாகாத அவரின் கோபத்தையும் அணுஅணுவாய் ரசித்தபடியே சுபாங்கியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு முடித்தான் தனஞ்செயன்.

அதுவரை எந்த உணர்வை யாருக்காக வெளிப்படுத்துவது என தெரியாமல் அழுகையும் சிரிப்பும் மாறி மாறி முகத்தில் வந்து போக மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய பிரபாவதியின் காலில் சற்று முன் மனைவியாகி இருந்தவளின் கை பற்றி இழுத்தபடி விழப்போனான் தனஞ்செயன்.

அவர்களைத் தடுத்து நிறுத்திய பிரபாவதி தர்மராஜை கண்ணசைவால் காண்பித்து அவரிடம் ஆசி வாங்குமாறு கூற சுபாங்கியின் உடல் நடுங்கியது.முகம் வெளிறியது.ஆனால் தனஞ்சயனோ ஒரு விஷமச் சிரிப்புடன் அவள் கரத்தைப் பற்றியபடி அவர் அருகில் அழைத்துச் சென்றான்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
அப்படின்னா தனா பையன் சுபாங்கி மனசு மாறுற மாதிரி என்னமோ ஏதோ சொல்லி மாத்திட்டான் 🤔🤔🤔🤔🤔🤔இருக்கும் இருக்கும், சுபாங்கியோட ஆட்டம் next நடக்குமா இல்ல தனா அடக்குவானா பாப்போம்
 
Top