• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.

அவரோ ஆத்திரத்தில் உடல் நடுங்க யாருக்கு யாருடா மாமா.உன் அம்மாவே எனக்கு உறவில்லை என்று ஆனபின் நான் எப்படிடா உனக்கு மாமா ஆவேன் பொறுக்கி ..என்றார்.


ஹ ஹ...நீங்கள் என் அம்மாவின் அண்ணன் என்பதால் நான் உங்களை மாமா என்று அழைக்கவில்லை தர்மராஜ். இதற்கு முன் உங்களை அப்படி அழைத்ததாக எனக்கு நினைவும் இல்லை. நான் இப்போது அழைத்தது என் மனைவியின் தந்தை என்ற உறவில்.


ஏற்கனவே நான் உயிராய் பாசம் வைத்த ஒருத்தி என் கழுத்தை அறுத்தாள் டா. அன்றே அவள் செத்துவிட்டாள் என்று முடிவு செய்துவிட்டேன்.அவள் மூலம் வந்த நீயும் எனக்கு தேவை இல்லை என்று உன்னையும் வெறுத்து விலக்கினேன்.


இன்று அதே அளவு பாசத்தை நான் வைத்த என் மகள் அவளும் என் கழுத்தை அறுத்துவிட்டாள். இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள் என் மகளும் இன்று செத்துவிட்டாள். என் மகளே இல்லை என்று ஆன பின் உனக்கும் எனக்கும் எங்கிருந்துடா உறவு வரும்..


அப்பா....



ச்சீ..வாயை மூடு..பாவி பாவி உன்னை எவ்வளவு நம்பினேன்.உன்னை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.என் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாயே. இவன் எப்படிப்பட்ட பொறுக்கி என்று தெரியுமா உனக்கு? இவன் கண்ணில் நீ படவே கூடாது என்று தானே உன்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தேன். ஆனால் நீ இப்படி கண்ணைத் திறந்து கொண்டே படுகுழியில் விழுந்துவிட்டாயே..உன்னை அடித்து கொன்றால் கூட என் ஆத்திரம் அடங்காது...


அப்பா நான்..... சுபாங்கியின் தழுதழுத்த குரல் ஏதோ பேச முயலும் போதே தனஞ்சயனின் குரல் குறுக்கிட்டது.


போதும்... தர்மராஜ் என் மனைவியைத் திட்ட உங்களுக்கு இப்போது எந்த உரிமையும் இல்லை. என்ன பார்க்கிறீர்கள் நீங்கள் தானே கூறினீர்கள் உறவுமுறை எதுவும் இல்லை என்று.அப்புறம் உங்கள் பெயரைச் சொல்லித்தானே அழைக்க முடியும்.



தனஞ்சயன் அலட்சியமாக பேசி முடித்த மறுநொடி அவன் கன்னத்தில் பளீரென ஒரு அறை விழுந்தது. அறைந்தது அவன் அன்னை..

நானும் பொறுத்து பொறுத்து பார்க்கிறேன் நீ ரொம்பவும் தான் அதிகமாக போகிறாய்.அவர் உன் மாமாடா.அவர் எவ்வளவு பெரியவர் தெரியுமா??? அவரைப்போய் மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி பேசுகிறாய்.

போதும் இந்த நாடகம்..பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் விதமாய் யாரும் இங்கு நடந்து கொள்ள வேண்டாம்.உங்கள் நடிப்பு எப்படிப்பட்டது என்று எனக்கு தெரியும் ஒருவருக்கு இருவராய் அதை உணர்த்தி விட்டீர்கள்.என் தங்கையுடன் சேர்ந்து என் பெண்ணும் இன்று செத்துவிட்டாள்.அவ்வளவு தான் என்று வெறுப்புடன் மொழிந்தவர் அதற்கு மேல் அங்கு ஒரு கணமும் நிற்காமல் விரைந்துவிட்டார்.

பெண்கள் இருவரும் விக்கித்து நிற்க ஓர் நக்கல் சிரிப்புடன் தாயைப் பார்த்தவன் இதென்ன புதுசா உங்களுக்கு என்றான்.அவர் வேதனையுடன் விழி மூடிக்கொள்ளவும்

சரி சரி கிளம்புங்கள் வீட்டுக்கு போகலாம் என்றபடி முன்னால் விரைய பெண்கள் இருவரும் கண்ணீருடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு அவன் பின்னால் நடந்தனர்.


இராவணன் இராமனாவானா .............??





 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
பகுதி __ 3

கார் தனஞ்சயனின் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தது. காரை முகிலன் ஓட்டிக்கொண்டிருக்க அவன் அருகில் தனஞ்சயன் அமர்ந்திருந்தான்.பின்னால் பிரபாவதியும் சுபாங்கியும் அமர்ந்திருந்தனர்.

சுபாங்கியின் விழிகள் முன்னால் இருந்தவன் மீது படிந்தது. ஒருநாளில் அவள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி விட்டான்.அவள் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவில்லை இப்படி எல்லாம் நடக்கும் என்று.அவள் அவனைப் பார்த்துகொண்டிருக்கும் போதே அவன் தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து தன்னுடைய கைக்குள் அடங்காதா கையடக்க தொலைபேசியை எடுத்தான்.

அதைப் பார்த்த சுபாங்கியின் முகம் அச்சத்தில் வெளிறி அவமானத்தில் சிவந்தது.ச்சே...இவன் தான் நினைத்ததை சாதிக்க இவ்வளவு தூரம் இறங்குவான் என அவள் எதிர்பார்க்கவே இல்லையே!!!!!!! அவள் மனம் கோவிலில் தந்தை வரும் முன்பு நடந்ததை எண்ணிபார்த்தது.

அந்த சிறிய அறைக்குள் அவளை இழுத்துச் சென்று கதவை அடைத்தவன்.நிதானமாக திரும்பி

ம்ம்..உன் அப்பா மீது அவ்வளவு நம்பிக்கையா?? உன்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுவார் என்று என்றான் கிண்டலாக.

கண்டிப்பாய் என் அப்பா எப்படியும் வந்துவிடுவார்.

ம்ம் கண்டிப்பாய் வருவார் தான்.அதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் நீ நினைப்பது போல உன்னை அழைத்துச் செல்ல மாட்டார்.

ஹா..சும்மா மிரட்டாதீர்கள்.என் அப்பா போலீஸ் உடன் வந்ததும் நீங்கள் நடுநடுங்கி நிற்கத்தான் போகிறீர்கள்.நான் அப்பாவுடன் போகத்தான் போகிறேன்.

ஓ..நடுநடுங்கி???

எஸ்

நான்??

கண்டிப்பாய்

அதுவும் உன் அப்பாவைப் பார்த்து??

அப்பாவுடன் போலீஸ்சையும் பார்த்து.


ஓஹோ ...அவளைப் பார்த்து வில்லங்கமாய் சிரித்தவன் போலீஸ் உன்னிடம் உன்னைக் கடத்தினார்களா என்று கேட்டால் என்ன சொல்வாய் சுகி?? என்றான்.


அவள் முகத்தில் சிறு மலர்ச்சி வந்து போனது. நீங்கள் இப்போதே என்னை விட்டுவிட்டால் நிச்சயம் உங்களை மாட்டி விடமாட்டேன்.


ஒ..இல்லாவிடில் என்னை போலீஸ்சில் மாட்டிவிடுவாய்??

கண்டிப்பாய்.வேறுவழி.



ம்ம் ரொம்பவும் துணிச்சல் தான்.நான் உன்னை முன்பு ரொம்ப அப்பாவி என நினைத்திருந்தேன்.

உங்கள் நினைப்பு தவறு .

அது இப்போது புரிகிறது.

நான் ரொம்ப துணிச்சல்காரியாக்கும்.

ஓஹோ!!!!

so சும்மா என்னை மிரட்டிப்பார்க்காமல் என் அப்பா வந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டு என்னை அவரிடம் விட்டுவிடுங்கள்.போலீஸ் கேஸ் ஆக்க வேண்டாம் என்று அப்பாவிடம் நான் சிபாரிசு செய்கிறேன்.உதட்டிலும் கண்ணிலும் குறும்பு புன்னகை தவள பேசினாள் சுபாங்கி.


அவள் பேச்சைக்கேட்டு ஒரு கணம் தனஞ்சயனின் முகம் இறுகியது.மறுகணம் கண்ணில் ஒரு விபரீதஒளி மின்னி மறைய உதடுகளில் ஒரு நக்கல் சிரிப்புடன் உங்கள் இஷ்டப்படியே மேடம்!!!!!!! என்றவன் தொடர்ந்து ஆனால் அதற்கு முன் துணிச்சல்கார மேடம் இதை ஒரு தடவை பாருங்கள் என்றபடி தன்னுடைய கையடக்க தொலைபேசியை அவளிடம் நீட்டினான்.


அவனது செல்போன் திரையில் விரிந்த காட்சியில் அவள் உடல் விதிர்த்து முகம் வெளுத்தது.அடுத்தடுத்த புகைப்படங்களை நகர்த்திப் பார்த்தவள் அதிர்ந்து நிற்கும் போதே அவன் கேட்டான்.என்ன துணிச்சல்க்கார மேடம் இதற்கு மேலும் உண்மையை போலீஸ் இடமும் உங்கள் அப்பாவிடமும் கூறுவீர்களா?


அப்படி கூறினால் நான் இதை யாரிடம் வேண்டுமானாலும் காட்டுவேன்.காட்டி நீ விரும்பி என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு என்னைத் திருமணம் செய்யவும் சம்மதித்துவிட்டு உன் தந்தையைக் கண்டதும் பயந்து போய் பொய் சொல்கிறாய் என்று அனைவரிடமும் கூறுவேன் என்பதை நான் சொல்லி நீ புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இன்றி உனக்காகவே புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.நீ தான் புத்திசாலி ஆயிற்றே!!! என்றான் தனஞ்சயன் நக்கல் தோய்ந்த குரலில்.


ஆனால் ..ஆனால்...இதெல்லாம் நான் மயக்கத்தில் இருக்கும் போது எடுக்கப்பட்டது. சுபாங்கியின் உதடுகள் தந்தியடித்தது.


நிச்சயமாய். ஆனால் அது நம் இருவருக்கு தானே தெரியும்.


ஆனால் அதில் என் முக பாவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு புரிந்து போகும்.அதில் நான் சுயவுணர்வில் இல்லை என்று.


ம்ம் புரியலாம். அல்லது அது வேறுவித மயக்கம் என்றும் நினைக்கலாம்.அது வேறு விடயம். ஆனால் நீ இந்த புகைப்படங்களை அப்படி அடுத்தவரிடம் காட்ட விரும்புவாயா என்ன?? தனா புருவம் உயர்த்தி கேலியாக வினவ சுபாங்கியின் முகம் அவமானத்திலும் கூச்சத்திலும் சிவந்தது.


ச்சே..நான் உங்களிடம் இருந்து இப்படி ஒரு செயலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அத்தான்.


என்னது அத்தானா??..வாஹ்ரே வா!!!!! இப்போ மட்டும் உறவுமுறை எல்லாம் நிஜாபகம் வருது போல.


நான் ஒருபோதும் அதை மறந்ததில்லை.




ஓஹோ இதை நான் நம்பணுமாக்கும்.....


நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதனால் எனக்கு ஒன்றும் இல்லை.

ஆனால் இப்படி ஒரு பெண் மயக்கத்தில் தன் நினைவில்லாமல் இருக்கும் போது அவளை..அவளுடன்... ச்சே ....இவ்வளவு மோசமானவரா நீங்கள்..



ஏய் ... ஏய்..நிறுத்து..நான் மோசமானவன் தான் ரொம்பவும் மோசமானவன் தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீ கற்பனை பண்ணும் அளவிற்கு காரில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நீ ஆர்ப்பாட்டம் பண்ணினால் அடக்க இப்படி ஓர் ஆயுதம் தேவைப்பட்டது.அதனால் தான்..வெறும் புகைப்படத்திற்காக தான் உன்னுடன் அப்படி நெருக்கமாக இருந்தேன்.அதோடு உன்னை தனியே கண்டவுடன் உன் மேல் பாயும் அளவிற்கு எனக்கொன்றும் உன் மேல் ஆசை கிடையாது.நான் உன்னை இப்படி திருமணம் செய்ய நினைத்ததற்கு காரணம் உன் அப்பனின் பேச்சு தான்.வேறு எதுவும் இல்லை. என்றான் எரிச்சலும் கோபமுமாக.


அவன் பேச்சைக் கேட்ட சுபாங்கியின் முகம் அதுவரை இருந்த மலர்ச்சி தொலைத்து வாடியது
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்ததில் இருந்து இதோ இப்போது தனாவுடன் பேச ஆரம்பித்த அந்த நொடிவரை சுபாங்கியின் அடிமனதில் எந்த கவலையும் ஏற்படவில்லை.மாறாக ஏதோ ஓர் சிறு உற்சாகமும் இதமும் தான் இருந்தன.அவள் தனாவைக் கண்டு அஞ்சவில்லை.மாறாக அவனின் மிரட்டல்களைக் கண்டு உள்ளூர சிரித்துக்கொண்டாள்.அவனுடன் வாயடித்தாள்.ஆனால் கோபமும் எரிச்சலுமாக தனஞ்சயன் தன் பேச்சை முடித்த அந்த நொடி அவள் இதயத்தில் ஏதோ ஒரு மிகப்பெரிய பாரம் ஏறியமர அவள் விழிகளில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது.அதன் காரணத்தை சுபாங்கி மட்டுமே அறிவாள்.


அழும் அவளைப் பார்த்து வியப்புடன் புருவத்தை உயர்த்திய தனஞ்சயன் ஹேய்.. உனக்கு அழக்கூடத் தெரியுமா?? இவ்வளவு நேரமும் அவ்வளவு திமிராக பேசினாய்?? ஓஹோ..இப்போது தான் எந்த வழியிலும் என்னிடம் இருந்து தப்ப முடியாதென்று உன் நிலை புரிந்தது போல.என்றான் நக்கலாக தொடர்ந்து


ம்ம் ..நீ எவ்வளவு தான் அழுதாலும் நம் திருமணம் நடந்தே தீரும்.முட்டாள்த் தனமாய் உன் தந்தையிடமோ போலீஸ்சிடமோ எதையாவது உளறி நான் இந்த புகைப்படத்தை அடுத்தவரிடம் காட்டும் படி வைக்க மாட்டாய் என நம்புகிறேன்.உன் கெளரவம் உனக்கு முக்கியம் தானே?? புத்திசாலித்தனமாய் நடந்துகொள் என்று மிரட்டிவிட்டுப் போனான்.


நீ எவ்வளவு தான் அழுதாலும் நம் திருமணம் நடந்தே தீரும் என்று அவன் உறுதியாய் கூறிவிட்ட பின்பு அவள் அழவில்லை. அதன் பின் ஓர் இயந்திரகதியில் எல்லாம் அவன் இஷ்டப்படியே நடந்துமுடிந்து இதோ அவனுடன் அவன் வீட்டிற்கும் சென்று கொண்டிருக்கிறாள்.


சுபாங்கியின் பார்வை ரொம்ப நேரம் அவன் மேல் பதிந்திருந்ததோ எதுவோ உறுத்த அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் விழிகளில் தெரிந்த ஓர் வலி அவன் முகத்தை இறுகச் செய்தது.


ஹ்ம்ம்..அவள் அப்பன் வந்து அவளைக் காப்பாற்றி அழைத்துப் போவான் என ரொம்பவும் நம்பியிருந்தாள் போல.இப்போது கழுத்தில் தாலியேறி என்னுடன் வரும் போது தான் தன்னுடைய நிலை புரிகிறது போல.இனி தப்பிக்கவே முடியாதென்று!!!



கார் தனாவின் வீட்டினுள் நுழைந்து காரோடும் பாதையில் விரைந்து வீட்டு முற்றத்தில் நின்றது.

அந்த வீடு ஒரு குட்டி அரண்மனை போன்ற தோற்றத்துடன் மெல்லிய சந்தன நிறத்தில் கம்பீரமாக அழகாக இருந்தது.வீட்டைச் சுற்றி பரந்து விரிந்த தோட்டம். ஒரு புறம் பழத்தோட்டமும் மறு புறம் மலர்த்தோட்டமும் என பார்க்கவே பசுமையாக கண்ணுக்கு விருந்தாக இருந்தது. ஆனால் அவை எதுவும் சுபாங்கியின் கவனத்தை கவரவில்லை. அவள் சிந்தை முழுதும் வேறு எதிலோ இருந்தது.இவ்வளவிற்கும் ஒரு காலத்தில் சுபாங்கி இந்த வீட்டின் ரசிகை.தூரத்தில் தெரியும் இந்த வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தையே மணிக்கணக்கில் ரசிப்பவள் என்றாவது ஒருநாள் உள்ளே சென்று இந்த வீட்டை அதன் தோட்டத்தை பார்த்து ரசிக்க முடியுமா என பல தடவை ஏங்கி இருக்கிறாள். ஆனால்................

என்ன மகாராணி இரத்தினக் கம்பளம் விரிப்பார்கள் என்று காத்திருக்கிறார்களோ!!!!! தனஞ்சயனின் குத்தல் குரலில் சட்டென சுயவுணர்வு பெற்ற சுபாங்கி மெல்ல காரை விட்டிறங்கினாள்.

அவள் இறங்கவும் சற்று இரும்மா என்ற பிரபாவதி தனா அவள் அருகில் போய் நில்லு என்று மகனிடம் கூறியவர் உள்ளே திரும்பி பாக்கியம் என்று குரல் கொடுத்தார்.

சிறு சலிப்புடன் முகம் சுழித்த தனஞ்சயன் இதெல்லாம் அவசியமாம்மா என்றான்.

பிரபாவதி அவனை ஓர் பார்வை பார்க்கவும் தாயின் கோபத்தை உணர்ந்தவன் சிறு தோள் குலுக்கலுடன் சுபாங்கியின் அருகில் சென்று நின்றான்.
வீட்டு வேலை செய்யும் பாக்கியம் கரைத்து எடுத்து வந்த ஆரத்தியை அவரைக் கொண்டே சுற்ற சொன்னார் பிரபாவதி.

நானாம்மா என்று அந்த பெண் தயங்கவும் இதில் எதுவும் இல்லை பாக்கியம் நீ சுமங்கலி. நீ சுற்றுவது தான் சரி ம்ம் சுற்று எனவும் அந்த பெண் தயக்கத்துடன் மணமக்களுக்கு ஆரத்தி சுற்றினாள்.

கண்ணீருடன் சுபாங்கியின் முகத்தை வருடிய பிரபாவதி வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா என்று அன்புடன் அழைத்தார்.

அந்த பிரமாண்ட வாசல்ப்படியை தனது வலது காலை எடுத்து வைத்து கடந்த சுபாங்கியின் உடலில் ஓர் சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

அவர்கள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற பிரபாவதி சுபாங்கியை விளக்கேற்ற சொன்னார். மறுப்பு கூறாமல் விளக்கை ஏற்றினாள். அங்கு சாமிப்படங்களுக்கு கீழே விஜயேந்திரனின் அதாவது தனஞ்சயனின் தந்தையின் படமும் இருக்க தனஞ்சயன் அதை வெறித்தபடி அமைதியாக நின்றிருந்தான்.

சாமி படங்களுக்கு விளக்கேற்றிய சுபாங்கி கைகூப்பி கடவுளை வணங்கினாள்.அவள் மூடிய விழிகளில் இருந்து நீர் வழிந்தது. அதைக் கண்ட பிரபாவதியின் விழிகளிலும் நீர் அரும்ப அந்த காட்சியை கண்ட தனஞ்சயன் கோபத்துடன் முகம் இறுக அங்கிருந்து வெளியேறினான்.

ஹாலில் இருந்த சோபாவில் அயர்வுடன் சாய்ந்திருந்த முகிலன் நண்பன் கோபத்துடன் வெளியே வரவும் டேய் ...இன்னும் என்னடா ?? அது தான் நீ நினைத்ததை எல்லாம் முடித்துவிட்டாயே அப்புறமும் எதற்கு முகத்தை இப்படி வைத்திருக்கிறாய் என்றான் ஆதங்கத்துடன்.

முகிலனின் அருகில் வந்து தொப்பென்று அமர்ந்தவன் தலையை அழுத்திக் கோதினான்.பின் சிறு பெருமூச்சுடன் மாமியாரும் மருமகளும் ஒன்றாக அமர்ந்து அழுகிறார்கள் டா. அவள் அழுவதில் ஒரு நிஜாயம் இருக்கிறது.அது எதிர்பார்த்ததும் தான்.ஆனால் அம்மா ஏண்டா அழனும்?? சொல்லப்போனால் அவங்க சந்தோஷம் தான் படணும் என்றான் வீம்புடன்.

ஏதேது விட்டால் நீ செய்த செயலுக்கு அம்மா பாராட்டு விழாவே நடத்த வேண்டும் என்று சொல்லுவாய் போல!! எந்த அம்மாடா தன் மகன் இப்படி ஒரு செயலைச் செய்ததை தாங்கிக் கொள்வார்கள். சும்மாவே அவர்களுக்கு உன்னால் நிறைய மனக்கஷ்டம். அதோடு இதில் பாதிக்கப்பட்டது அவர் அண்ணன் மகளும் கூட... மற்றவர்கள் மனநிலையையும் கொஞ்சம் புரிந்துகொள் தனா. என்றான் தன்மையாக.

சற்று நேரம் மௌனமாகவே அமர்ந்திருந்த தனஞ்சயன் பின் சிறு பெருமூச்சுடன் எழுந்து நான் சற்று வெளியில் சென்று விட்டு வருகிறேன் டா.அம்மா கேட்டால் சொல்லிவிடு என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

டேய் இன்றுமா....என்ற முகிலனின் குரல் காற்றோடு தேய்ந்து மறைந்தது.



பூஜை அறையில் கண்ணீர் வடித்தபடி நின்ற மருமகளை நெருங்கிய பிரபாவதி அவளது கண்ணீரைத் துடைத்து அவளை மெல்லத் தன் தோளில் சாய்த்துக்கொண்டார். அத்தை என்று அவரின் தோளில் முகத்தைப் புதைத்தவள் விசும்ப அவள் முதுகை கன்னத்தை ஆசையுடன் வருடியவர் செல்லம்மா.. கண்ணம்மா நா..நான் உன் அத்தை என்று உனக்கு தெரியுமாடா என்றார் தவிப்புடன்.

அவள் ஆம் என்பது போல் தலையை அசைக்கவும் அவள் நெற்றியில் மகிழ்ச்சியுடன் முத்தமிட்டவர் உன் சிறு வயதில் இருந்து உன்னை இப்படி அணைத்து கொஞ்ச வேண்டு என்று எவ்வளவு ஆசைபடுவேன் தெரியுமா?? உன்னை மட்டுமில்லை உன் தம்பி தங்கை எல்லோரையும் தான்.ஆனால் எனக்கு தான் என் அண்ணன் பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சி மகிழும் பாக்கியம் கிடைக்கவே இல்லை.என்று கண்ணீர் சிந்தியவரை பரிதாபத்துடன் பார்த்தாள் சுபாங்கி.

சற்று நேரத்தில் தன்னை சமனப்படுத்திக் கொண்டவர் போகட்டும் விடு இப்போது என் அண்ணன் மகள் எனக்கே மருமகளாக வந்துவிட்டாளே இனி ஆசை தீரக் கூடவே வைத்து கொஞ்சுவேன் என்றார் சிரிப்புடன் அவள் கன்னம் வருடி.. இவ்வளவு பாசம் காட்டும் இந்த அத்தையை அவள் அறிந்து கொண்டதே அவள் பதின்னான்காவது வயதில் தான். அதுவரை எங்கேயாவது கண்டால் கண்ணில் பாசத்துடன் நோக்கும் கனிவுடன் புன்னகைக்கும் அவரை அந்த கிராமத்து பெரியதனக்காரரின் மனைவி என்ற அளவிலேயே அவளுக்கு தெரிந்திருந்தது.

அவரின் பாசத்தில் அவள் உள்ளம் நெகிழ்ந்தது.அவளுக்கு தெரியும் இந்த பாசம் அவர் அண்ணனின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தன் மேல் ஏற்பட்டது தான் என்று.இவ்வளவு பாசத்தை அண்ணன் மேல் வைத்தவர் ஏன் அவர் அண்ணனுக்கு அப்படி ஒரு தலைகுனிவை ஏற்படுத்தினார்.அதனால் தானே இவ்வளவு பிரச்சினைகளும் ........... ஆனால் மனதில் நினைத்ததை அவரிடம் கேட்க முடியவில்லை..சுபாங்கியால். கேட்டால் அவர்கள் மனசு நோகும்..எதற்கு வயசானவர்கள் மனதை காயப்படுத்த வேண்டும்...

சுபிம்மா என்னடா முகமே வாடிப்போயிற்று...நடந்ததை நினைத்து கலங்குகிறாயா?? ஹ்ம்ம் ..என்னை மன்னித்து விடும்மா என்னாலும் நடந்த எதையும் தடுக்க முடியவில்லை. சிறுவயதில் இருந்து அனைத்து பொறுப்புக்களையும் அவன் தன் தோளில் ஏற்றி பழகி விட்டதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து அவனை விட்டு விலகி அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டேன்.

அவன் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் அவனைக் கண்காணிக்கவும் தோன்றவில்லை.ஆனால் அது தவறென்று இப்போது தோன்றுகிறதுமா. அவன் வீடு தொழில் என்று அனைத்திலும் பொறுப்பாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் தவறி விட்டானோ என்று தோன்றுகிறது மா. பரவலாக என் காதில் விழும் விடயங்கள் எனக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.ஆனால் தோளுக்கு மேல் வளர்ந்த ஆண்பிள்ளையை கூப்பிட்டு கண்டிக்கவும் முடியவில்லை. ஏதோ தெய்வம் விட்ட வழி என்று மனதுக்குள் மறுகிக் கொண்டு இருந்தேன்.

திடீரென்று பார்த்தால் முகில் இப்படியொரு செய்தியை வந்து சொல்கிறான்.உனக்கு ஒன்று தெரியுமா சுபிம்மா அவன் உன்னை இப்படிக் கடத்தி வந்திருக்கிறான் திருமணம் செய்யப்போகிறான் என்ற செய்தியை முகில் வந்து சொன்ன போது என் மனதின் ஒரு பாதி உனக்காகவும் என் அண்ணனுக்காகவும் துடித்தாலும் மறுபாதி சந்தோஷப்பட்டது நிஜம்.

என்னம்மா பார்க்கிறாய் சுயநலமாய் இருக்கிறேன் என்றா?? ஹ்ம்ம் என்ன செய்வதுடா பெற்றவள் ஆயிற்றே!!!!! எந்த பெற்றவளும் தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டுமென்று தானே நினைப்பாள்.எனக்கு எப்போதும் நீ இந்த வீட்டு மருமகளாய் வரணும் என்று மனசுக்குள்ள ரொம்ப ஆசைடா. அது நிறைவேறிடுச்சு. ரொம்ப சந்தோசமா இருக்கு டா.

சுபிம்மா நீ நினைச்சா அவனை மாத்த முடியும் மா.என் பிள்ளை ஒன்றும் அவ்வளவு கெட்டவன் இல்லை.அவன் மனசிலையும் பாசம் இரக்கம் அன்பு என்று எல்லா உணர்வும் இருக்கு ஆனா அதை வெளிப்படுத்திக்க மாட்டான்.வழிகாட்ட யாருமின்றி தன் போக்கில் வளர்ந்தவன் மா அவன். ஒரு வயசுக்கு மேல் ஆண் பிள்ளைகளை அம்மாவால் கட்டுப்படுத்த முடியாதம்மா.ஆனால் மனைவியால் முடியும்..நீ நினைச்சால் அவனை மாற்றலாம்.எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..இந்த அத்தைக்காக அதை செய்வியா சுபிம்மா??

சுபாங்கிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.தன மன ஆதங்கத்தை எல்லாம் கொட்ட ஆளின்றி தவித்தவர் தன்னைக் கண்டதும் தன்னிடம் அனைத்தையும் இறக்கி வைப்பது புரிந்தது.அவருக்கு ஆறுதல் சொல்ல அவளுக்கும் ஆசை தான்.ஆனால் என்னவென்று சொல்வது..அதோடு இப்போ அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லும் நிலையிலும் அவள் இல்லையே. அவளுக்கே அல்லவா ஆறுதல் தேவை.

என..எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு அத்தை.குடிக்க தண்ணீர் வேண்டுமே!!!!!!

அச்சோ மன்னிச்சுக்கோடா குட்டிம்மா.இந்த அத்தைக்கும் வயசாகி விட்டது இல்லையா.அது தான் நீ காலையில் இருந்து எதுவும் சாப்பிட்டே இருக்க மாட்டாய் என்பதையும் மறந்து உன்னை நிற்க வைத்தே பேசிக்கொண்டிருக்கிறேன். உனக்கு எவ்வளவு களைப்பாய் இருந்ததோ... வாடா முதலில் வந்து பால் பழம் சாப்பிடு வா.

டேய் முகில் தனா எங்கேடா?? மாடிக்கு போய்விட்டானா?? பால் பழம் சாப்பிட வேண்டும் அழைத்துவா..
அம்மா...
என்னப்பா??
அது வந்து.....
என்ன முகில் சொல்லு???
அவன் வெளியே போய்விட்டான் மா.
என்னது வெளியே போய்விட்டானா?? அவன் மனதில் அவன் என்ன தான் டா நினைத்துக்கொண்டு இருக்கிறான்?? அவன் எது செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்றா?? நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது முகில்.அடுத்த ஒரு மணி நேரத்தில் உன் நண்பன் இங்கு இருக்க வேண்டும் சொல்லிவிட்டேன்.

நீ வாம்மா வந்து ஒரு கப் பால் குடி. ரொம்ப சோர்ந்து தெரிகிறாய்.அதற்குள் அவனும் வந்துவிடுவான்.

ஏதோ இருவரும் ஆசைப்பட்டு மணந்தவர்கள் போல அவன் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவான் என்று தனக்கு சமாதானம் சொல்லியபடி தன்னை அழைத்துச் சென்ற பிரபாவதியை இரக்கமும் சிறு பரிவுமாக நோக்கினாள் சுபாங்கி.


இராவணன் இராமனாவானா.....???
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
வெரி இம்ப்ரெசிவ் சிஸ்..
அடுத்து எபி எப்போ
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
வெரி இம்ப்ரெசிவ் சிஸ்..
அடுத்து எபி எப்போ
Thanks da.... itho poduren.. hv a read and let me know ur cmnts dr.
 
Top