• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
பகுதி_ 4

அன்று அதிகாலையில் கண்விழித்த சுபாங்கிக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. அந்த பெரியபடுக்கையில் நிதானமாக ஒரு முறை திரும்பிபடுத்தவள் எதிர்ச் சுவரில் மாட்டப்பட்டிருந்த தனஞ்சயனின் ஆளுயர புகைப்படத்தைப் பார்த்ததும் பதறி விழித்தாள்.

முந்தைய நாள் நிகழ்வுகள் யாவும் அதி வேகமாக நினைவுக்கு வர அவள் முகத்தில் பல்வேறு உணர்வுக் கலவைகள் வந்து போயின. இறுதியில் தலையை இரு கைகளிலும் தாங்கியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தவள் மீண்டும் நிமிர்ந்த போது அவள் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு வந்துவிட்டிருந்தது. மெல்ல எழுந்து அந்த அறையை நோட்டம் விட்டாள். பிரபாவதியின் அறை அது. விசாலமாக சுத்தமாக இருந்தது.

அவள் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையுடன் கட்டிலில் இருந்து எழும்போதே பிரபாவதி உள்ளே வந்தார். எழுந்துட்டியா கண்ணம்மா.. போடா போய் குளித்து விட்டு வா.சாப்பிடலாம்..


அத்தை....

என்னம்மா??

வேறு ட்ரெஸ்... அவள் சங்கடத்துடன் இழுக்கவும்...


அச்சோ..அதை சொல்ல மறந்துட்டேன் பாரேன்.இதோடா.. நேற்று இரவு வரும் போதே தனா வாங்கி வந்தான்மா. இதில் எல்லாம் இருக்கிறது. புது பிரெஷ் பாத்ரூமில் வைத்திருக்கிறேன். சீக்கிரம் குளித்துவிட்டு வாம்மா...


ம்ம் சரியத்தை..என்று அவரை அனுப்பியவள் அந்த கவர்களைப் பிரித்து நோட்டம் விட்டாள். அவளுக்கு தேவையான ஆடைகள் எல்லாம் இருந்தன. எல்லாம்...


இதையெல்லாம் இவனை யார் வாங்கிட்டு வர சொன்னா. முணுமுணுத்தபடியே கைக்கு அகப்பட்ட ஒரு சல்வாரை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

குளித்து முடித்து வெளியே வரும் போதே செம பசி பசித்தது.முந்தைய இரவும் சரியாக எதுவும் உண்ணவில்லை. மெல்ல கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள்.

முன்னே டைனிங் டேபிளில் பேச்சு சத்தம் கேட்டது. அவள் என்ன செய்வது என தயங்கி நிற்கும் போதே அவளைத் தேடி வந்துவிட்ட பிரபாவதி


அடடே குளித்து தயாராகி விட்டாயா?? வாம்மா சாப்பிடலாம்.நேற்று வேறு சரியாகச் சாப்பிடவில்லை ..... என்று அழைத்துச் சென்றார். அவருடன் செல்வதில் அவளுக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை.


அங்கே டைனிங் டேபிளில் தனஞ்சயனும் முகிலனும் அமர்ந்திருந்தனர்.தனஞ்சயனைக் கண்ட இவள் நடையில் ஒரு தயக்கம் வர சற்று நின்று ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் பின் இயல்பான நிமிர்ந்த நடையுடன் பிரபாவதியை பின் தொடர்ந்தாள்


டைனிங் டேபிளில் தனா ,முகில் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க இவள் இயல்பாக சென்று முகிலனின் அருகில் அமர்ந்தாள். அதோடு முகிலனைப் பார்த்து அழகாக முறுவலித்து குட் மார்னிங் அண்ணா...என்றாள்.

முகிலன் ஒரு கணம் திணறி விட்டு பதிலுக்கு குட் மார்னிங் சொல்ல தனா ஒரு முறை விழியுயர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் உணவில் கவனமானான்.

முன்தினம் இரவு எப்போது அவன் வீடு வந்தானோ அவள் அறியாள். பிரபாவதி கொடுத்த பால் பழத்தை உண்டவள் ரொம்ப களைப்பா இருக்குத்தை. நா தூங்கணுமே என்று கூறி அவரின் அறையில் அவருடனே படுத்து தூங்கி விட்டாள். மயக்க மருந்தின் தாக்கமோ என்னவோ அப்படி ஒரு தூக்கம்.

முன்தினத்துக்கு பின் இப்போது தான் அவனைப் பார்க்கிறாள்.ஆளைப்பார் ஆளை ...கொரில்லா போல..உர்ர்ர்ர் ....

அத்தை எனக்கு பசிக்குது. என்ன இருக்கு சாப்பிட??

எல்லாமே இருக்குடா.உனக்கு என்ன வேணும் சொல்லு..

ஹ்ம்ம்.. கண்டிப்பா இட்லி வேணும். அப்புறம் ரெண்டு செட் பூரி ஓகேவா??

ஹ ஹ...உனக்கு இல்லாததா.. இதோ....பிரபாவதி அருகில் நின்று பார்த்து பார்த்து பரிமாற சுபி வெளுத்து வாங்கினாள்.
அத்தை இன்னும் ஒரு பூரி. அப்புறம் கொஞ்சம் கிழங்கு..முகிலண்ணா பூரி சூப்பரா இருக்கு.மொறுமொறுன்னு ரெண்டு போட்டுக்கோங்க...என்று முகிலனையும் உபசரித்தாள்.


தனஞ்சயனுக்கும் முகிலனுக்கும் அங்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.ஏதோ அவள் அந்த வீட்டரசி போன்றும் தாங்கள் விருந்தினர் போன்றும் உணர்ந்தனர்.

முகிலன் வியப்புடன் தனாவைப் பார்க்க தனஞ்சயன் எதுவும் பேசாமல் உணவிலே கவனமாக இருக்க முகிலன் பொறுக்க முடியாமல் கேட்டான்..
ஏம்மா???
என்னண்ணா??
இல்ல....அது...வந்து....
சும்மா கேளுங்கண்ணா..என்ன தயக்கம்
என் மேல கோவம் இல்லையாம்மா?? இவ்ளோ காஷுவல்லா இருக்கே??
உங்க மேல கோவப்பட எனக்கு காரணம் இல்லைண்ணா.ஒரு பழமொழி இருக்கில்ல ‘எய்தவன் இருக்க அம்பை நோவானேன்னு’ நீங்க அம்பு தானே..


அதோடு இப்போ நான் மூலைல இருந்து அழுதுட்டு இருக்கிறதால நடந்த எதுவும் மாறப்போவதும் இல்லையே!!! வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு தான் எனக்கு பழக்கம்.அப்பா என்னை அப்படித்தான் வளர்த்திருக்கார். எது நடந்தாலும் கலங்காம அடுத்து என்ன என்று சிந்திக்கிற தெளிவைக் கொடுத்திருக்கிறார். எண்ணைல போட்ட கடுகு போல பொரியுற கோபம் வாழ்க்கைக்கு உதவாதுன்னு சொல்லி கொடுத்திருக்கார். தனஞ்சயனை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டபடியே அழுத்தமாக பேசினாள்.

அவன் முகம் கறுத்து இறுக ஒரு கட்டத்தில் முகிலா அவளை வாயை மூடிட்டு சாப்பிட சொல்லு.அவ அப்பன் புராணத்த இங்கே யாரும் கேக்கல..... என்று உறுமினான்.

வாயை மூடிட்டு யாராலேயும் சாப்பிட முடியாதுன்னு சொல்லுங்க முகிலண்ணா....சுபியின் பதில் அசால்ட்டாக வந்தது.

டேய் முகில் இது அறுதப்பழைய ஜோக்குன்னு சொல்லுடா....அவன் குரலில் எள்ளல் துள்ளி ஓடியது.

அட இது ஜோக் என்ற அளவுக்கு புரியுதே!! அந்தளவில் புண்ணியம்.என்று அலட்சியமாக உரைத்தவள் தட்டை எடுத்துக்கொண்டு கை கழுவ சென்றாள்.

தனஞ்சயன் அவள் முதுகை சொல்வதறியா கோபத்துடன் முறைத்துவிட்டு தானும் மறுபுறம் எழுந்து சென்றான்.

பிரபாவதி நடப்பதை சிறு சிரிப்புடன் கண்டும் காணாமலும் இருக்க முகிலன் *வியப்புடன் அவரைப் பார்த்து என்னம்மா நடக்குது இங்கே?? இருந்தாலும் உங்க அண்ணன் பொண்ணுக்கு ஓவர் துணிச்சல் தான் மா....’’ என்றான்.

 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அவனை பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தவர் ரொம்ப சந்தோசமா இருக்குடா முகில்.சுபி ரொம்ப நல்ல பொண்ணுடா.அப்படியே என் அண்ணனின் வாரிசு.எதையும் அசால்ட்டாக எடுத்துக்கொள்ளும் துணிச்சல். ஹ்ம்ம்.. ஆனால் கோபமும் அப்பா போலவே இருந்துடக் கூடாதேன்னு பயமா இருக்கு…..


ஹ்ம்ம் ரொம்ப தைரியம்மா.இதே நிலைல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா ரொம்ப அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கும்.இந்தப் பொண்ணு இத எவ்ளோ இயல்பா எடுத்து நடந்துக்கிறத பார்க்கும் போது ரொம்ப வியப்பா இருக்கும்மா.

ஹ்ம்ம் அவளுக்கு நிச்சயம் மனசில கஷ்டம் இருக்கும் முகிலா.ஆனா அந்த கஷ்டத்த தனா கிட்ட காட்டிக்க அவ விரும்பல.அப்படி தன கஷ்டத்த அவன்கிட்ட காட்டி அவன ஜெயிக்க விடக்கூடாதுன்னு உறுதியா இருக்கான்னு நினைக்கிறேன்.நீ என்ன கடத்திக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணா நா அழுதுக்கிட்டே உன் காலடியில் கிடப்பேன்னு நினைச்சியா?? அதுக்கு நான் ஆளில்ல என்று அவனுக்கு புரிய வைக்க நினைக்கிறா.

ஒஹ்.. ரொம்ப துணிச்சல் மா.கடத்திக்கிட்டு வரும்போது கூட அழுது எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணல.தனா கூட சரிக்கு சரி வாயடிசுட்டு வந்தா.

ஹ்ம்ம்..என் அண்ணன் தன் பொண்ண நல்லா தான் வளர்த்திருக்கார்.தனாவை கட்டுக்குள் கொண்டுவர இவளால் தான் முடியும். பிரபாவதி பெருமையுடன் சொல்லி சிரிக்க

அதே நேரம் எதிரும் புதிருமாய் ஹாலில் நின்றபடி இந்த பேச்சைக்கேட்ட தனாவின் பார்வையும் சுபாங்கியின் பார்வையும் வாட்களின் வேக வீச்சுடன் ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டது.

என்னை கட்டுப்படுத்த உன்னால் முடியாது.... என்ற திமிருடன் அவன் பார்வை அவளை நோக்க அந்த அவசியம் எனக்கில்லை..... என்ற அலட்சியத்துடன் அவள் பார்வை திரும்பிக்கொண்டது.

எல்லாம் உன் அப்பனின் திமிர்டி...... என்று பற்களைக் கடித்தவன் வேகமாக அங்கிருந்து வெளியேற சுபி ஒரு குறுநகையுடன் உள்ளே சென்றாள்.














 
Top