• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
இதழ்:- 8



இவர்களின் கெட்ட நேரம் போலும்.மாடியில் காய வைத்த வத்தலை எடுபதற்காக மேலே வந்த கண்மணி அவர்களின் முழுப்பேச்சையுமே கேட்டுவிட்டார். அவர் உள்ளம் உலைக்களமாக கொதித்தது. அந்தக்கணமே அவர் மூளை அவர்கள் பிரிவுக்கான திட்டத்தை தீட்டத்தொடங்கி விட்டது.



இதை எதையுமே அறியாத பூவினியோ மனம் முழுதும் நிலவன் மீதான காதலை நிறைத்துக் கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.









அந்த விடயம் காதில் விழுந்ததில் இருந்து கண்மணியின் மனம் உலைக்களமாக கொதித்துக்கொண்டு இருந்தது. எது நடக்ககூடாது என்று அவர் பயந்தாரோ எது நடந்து விடக்கூடாது என்று அவர் நிலவனைக் கண்டாலே திட்டி அந்த வீட்டுப் பக்கமே வரவிடாமல் தடுக்க நினைத்தாரோ எது நடந்துவிடக்கூடாது என்று பூவினியை தாய்வழிச் சொந்தங்களுடன் அதிக ஒட்டுதலுடன் பழக விடாமல் தடுக்க முயன்றாரோ அது நடந்தே விட்டது.அவர் எவ்வளவோ முயன்றும் அது நிகழ்ந்து விட்டது. கண்மணியின் மனம் குமுறிக்கொண்டே இருந்தது.





இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்ட கண்மணிக்கு தனது இரண்டு பிள்ளைகளே வாழ்க்கை என்று ஆகிவிட்டது.மிகவும் சிரமப்பட்டு வீட்டுவேலை தையல் என செய்து உழைத்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். அதை உணர்ந்த பிள்ளைகளும் தாயின் கஷ்டம் உணர்ந்து தாய்க்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ததுடன் நன்றாக படிக்கவும் செய்தனர்.அதிலும் பத்மன் ஓரளவு விவரம் புரியத்தொடங்கியதுமே குடும்ப நிலையை உணர்ந்து படிக்கும் வயதிலேயே சிறு சிறு வேலைகள் செய்து வருமானம் ஈட்டியதுடன்.படித்து முடித்ததுமே தன் தகுதிக்குரிய வேலை தான் பார்ப்பேன் என சும்மா இருக்காமல் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு குடும்ப பாரத்தை தன் தோள்களிலே ஏற்று கொண்டார்.அதன் பின் அவரின் கடின உழைப்பாலும் நண்பர்களின் உதவியாலும் முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்ததுடன் தன் தங்கையையும் சிறப்பாக சீர்செய்து படித்து நல்ல வேலையில் இருந்த வெற்றிவேலுக்கு மணம் முடித்து வைத்து தன் கடமையை சிறப்பாகவே நிறைவேற்றினார்.



அந்த வகையில் கண்மணிக்கு மிக்க மகிழ்ச்சி தான். மணவாழ்க்கையை தான் அவருக்கு நல்லபடியாக அமைத்துக் கொடுக்காத இறைவன் அதற்கும் சேர்த்து பிள்ளைகளை நல்லவர்களாக தந்திருக்கிறாரே என்று.



அவர் ஆசை தனது இரண்டு பிள்ளைகளும் காலம் முழுதும் ஒற்றுமையாக அன்பாக இருக்க வேண்டும் என்பது. பத்மன் மேகலாவை திருமணம் செய்ததில் அவருக்கு உடன்பாடு இல்லைத்தான். ஏனெனில் எங்கே மேகலா தன் மகனைத் தன்னிடம் இருந்து பிரித்து விடுவாரோ பணத்திலும் அந்தஸ்திலும் தங்களை விட பலபடி உயர்ந்த குமாரசாமி குடும்பத்தில் தன் மகன் வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுவானோ தங்களை விட்டுப் பிரிந்து விடுவானோ என்று பயந்தார்.அதனால் மேகலாவைத் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார்.





ஆனால் பத்மன் உறுதியாய் இருக்கவே அதற்கு மேலும் அவரால் மறுக்க முடியாது போயிற்று.என்ன இருந்தாலும் வளர்ந்த ஆண்பிள்ளை அது மட்டும் இல்லாமல் படிக்கும் வயதிலேயே குடும்பச் சுமையை தோளில் ஏற்றி குடும்பத்தை தூக்கி நிறுத்தியவர்.அவரின் ஆசையை ஒரேயடியாக கண்மணியினால் மறுக்க முடியவில்லை.எனவே அந்த குடும்பத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாக போக கூடாது என்று மகனிடம் வாக்கு பெற்றுக்கொண்டு அவர் திருமணத்திற்கு சம்மதித்தார்.



பத்மன் தாய்க்கு வாக்கு கொடுத்தது போலவே அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக போகவில்லை.அவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை.மேகலாவும் நல்ல மருமகளாகவே நடந்து கொண்டார்.அந்த வகையில் கண்மணிக்கு திருப்தி தான்.மற்ற பணக்கார பெண்கள் போல் இல்லாமல் அடக்கமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளும் மருமகள் கிடைத்ததில்.பத்மனின் தங்கை கங்காவின் கணவரும் அதே ஊர் என்பதால் தனது இரு பிள்ளைகளும் அருகருகே ஒற்றுமையாக சிறப்பான வாழ்க்கை வாழ்வதைக் கண்டு கண்மணியின் மனமும் மகிழ்ந்தது.அந்த மகிழ்ச்சியில் மேகலாவின் மீதும் அன்பாகத்தான் இருந்தார்.அந்த மகிழ்ச்சி அவருக்கு சிலகாலம் தான் நீடித்தது.





திடீரென ஒருநாள் கங்காவின் கணவருக்கு அவர் வேலை செய்த தொழிற்சாலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தை வழங்கினார்கள்.அவர் அவுஸ்திரேலியா செல்ல வேண்டும் என்றார்கள்.அது அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்பதால் வெற்றிவேலும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார். கங்கா குடும்பம் அவுஸ்திரேலியா சென்றது.அவர்கள் செல்லும் போது கண்மணியின் பேரன் மித்திரனுக்கு கிட்டத்தட்ட ஒரு வயது இருக்கும்.



அதன் பின் சிறிது காலத்தில் ஜெகநாதனும் பத்மனும் இணைந்து ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தார்கள்.அது நகரத்தில் இருந்ததால் அடிக்கடி வந்து போவது சிரமம் என பத்மன் அங்கேயே குடியேற முடிவெடுத்தார்.அப்போது குமாரசாமி மேகலாவுக்கென இருந்த நிலத்தை அவர் பெயரில் மாற்றம் செய்து கொடுத்தார்.பத்மன் முதலில் அதை மறுத்தாலும் அவர்களின் வற்புறுத்தலாலும் மற்றும் எப்படியும் இங்கேயே இருப்பதென்று முடிவான பின் எதற்கு உறவுகளை விட்டு விலகி இருக்க வேண்டும்.அருகிலேயே இருந்தால் எல்லா விதத்திலும் உபயோகமாய் இருப்பதுடன் அது தன் மனைவிக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்ற நினைப்பாலும் ஒத்துக்கொண்டார்.





கண்மணியையும் தங்களுடன் வந்து இருக்கும்படி கேட்டார்.மேகலாவும் இது உங்கள் மகன் கட்டிய வீடுதான் அத்தை இங்கே தங்க உங்களுக்கு முழு உரிமை உண்டு என்று கூறி அன்பாக அழைத்தார்.ஆனால் கண்மணி மறுத்துவிட்டார்.எனக்கு தோன்றும் போது வந்து தங்கிச் செல்கிறேன் என கூறியதுடன் அந்த கிராம வீட்டிலேயே தனியே வசித்தார்.கேட்போருக்கெல்லாம் ஆள் இல்லாவிடில் வீடு பாழடைந்து விடும்.அதனால் தான் முடியும் வரை இங்கே இருந்து பார்த்துக்கொள்வதாக கூறி விட்டார்.



தாயின் பிடிவாதத்தை உணர்ந்த பத்மனும் வேறுவழியின்றி அவருக்கு வேண்டிய வசிதிகளைச் செய்து உதவிக்கு ஒரு ஆளையும் ஏற்பாடு செய்து கொடுத்து தனியே வசிக்க சம்மதித்தார்.



கண்மணியைப் பொறுத்தவரையில் அந்த கிராம வீடு தான் அவரின் சொர்க்கம். அவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்தது அந்த வீட்டில் தான்.இரண்டு பிள்ளைகளும் மணம் முடித்தும் சிறிது காலம் என்றாலும் ஒன்றாக தாயுடன் அமர்ந்து பேசி கலகலத்ததும் அந்த வீட்டில் தான்.அந்த வீட்டில் இருந்தால் அந்த பசுமையான நினைவுகள் தோன்றி அவரை மகிழ்விக்கும். அந்த வீட்டில் இருந்தால் தன் பிள்ளைகள் அருகில் இருப்பது போன்ற உணர்வு கண்மணிக்கு இருக்கும்.அவரால் வேறு எங்கும் தங்க முடியாது என்னதான் தன் மகன் வீடு என்ற உரிமையை நிலைநாட்ட பத்மன் வீட்டுக்கு சென்றாலும் அவரால் அங்கு ஒரு வாரத்துக்கு மேல் தங்க முடியாது.உடனே கிளம்பி விடுவார்.அந்தக் கிராம வீட்டு திண்ணையில் அமர்ந்தால் தான் அவர் மனது அமைதியாய் இருக்கும்.



அவரின் பிள்ளைகள் இரண்டும் இப்படி திசைக்கொன்றாய் இருப்பதில் அவருக்கு எல்லையில்லாத வேதனை உண்டு.அவரின் ஆசை முழுதும் தன் இரு பிள்ளைகளும் எப்போதும் ஒற்றுமையாக அன்பாக இருக்க வேண்டும் என்பதே.இப்போதும் அன்பாகத்தான் இருக்கிறார்கள்.ஆனால் அந்த அன்பை பரிமாறும் தருணங்கள் அவர்களின் குடும்பச் சுமைகளால் பெரிதும் குறைந்து விட்டது. அப்படி அவர்கள் இருவரும் தொலைபேசியில் சந்தித்துப் பேசும் தருணங்கள் குறைவு.அது குறித்து கண்மணிக்கு கவலை தான்.இப்படியே போனால் ஒரு காலத்தில் அவர்கள் பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டால்.அவர்கள் உறவுகள் வேறு வேறு என்று ஆகிவிடுமோ. தன் இரு குழந்தைகளுக்கும் இடையில் தொடர்பே அற்றுப் போகுமோ என கவலைப்பட்டார்.



இரத்த பந்தம் எப்போதும் எது நடந்தாலும் விட்டுப் போகாது என்பதை கண்மணி உணரவில்லை...............



அப்படி நடக்காமல் இருக்க தன் இரு பிள்ளைகளும் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க அவர் கண்ட வழிதான் தன் மகன் வயிற்றுப் பேத்தி பூவினியை மகள் வயிற்றுப் பேரன் மித்திரனுக்கு மணம் முடித்து வைப்பது.அப்படி நடந்தால் தன் இரு பிள்ளைகளும் காலம் முழுதும் ஒற்றுமையாய் இருப்பார்கள்.வழிவழியாய் அந்த பந்தம் தொடரும் என்று எண்ணினார்.



.



அவரின் அந்த நோக்கத்திற்கு நிலவனால் ஏதாவது தடை வருமோ என்று பயந்தார்.ஏனெனில் பூவினி அத்தான் அத்தான் என்று அதிக ஒட்டுதலுடன் பழகுவது அவனிடம் தான்.அவனும் சிறுவயதில் இருந்தே அவள் மேல் அதிக உரிமை எடுத்து பழகுவதைக் கண்டார்.அதனால் அவர் நிலவனை வெறுத்தார்.ஒரு வேளை இருவரும் காதலித்து விடுவார்களோ என்று பயந்தார்.அப்படி மட்டும் நடந்தால் அவரின் கனவு கனவாகவே போய் விடும் என்று அஞ்சினார்.ஏனெனில் அவருக்கு தெரியும் அப்படி நிலவனும் பூவினியும் காதலித்தால் தன் மகன் ஒரு போதும் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டான் என்று.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அதனால் அப்படி ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.நிலவனைக் காணும் போதெல்லாம் வார்த்தையால் வாட்டி அவன் பூவினி வீட்டுக்கு வருவதையே குறைத்தார்.பூவினி அங்கு செல்வதையும் தடுக்க முயன்றார். என்ன செய்து என்ன அவர் எது நடந்துவிடக்கூடாது என்று இவ்வளவும் செய்தாரோ அது நடந்தே விட்டது.எல்லாம் கைமீறிப்போய் விட்டது.கண்மணியின் மனம் புலம்பியது.



இல்லை.............. ஒரு ஆவேசத்துடன் கண்ணீரைத் துடைத்தார் கண்மணி.எதுவும் கைமீறிப்போகவில்லை என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கெட்டதிலும் ஒரு நல்லதாக நல்லவேளை இப்போதே இந்த விடயம் அவர்காதுக்கு தெரியவந்தது.அவர்கள் இருவரின் பேச்சில் இருந்தே இன்னும் இருவரும் காதலை பகிர்ந்து கொள்ளவே இல்லையென்று தெரிகிறதே.பூவினி தான் காதலிக்கிறாள்.அவன் அந்தப்பயல் காதலிக்கிறானா இல்லையா என்று இவளுக்கு இன்னும் தெரியாது.இது போதுமே. இனி அவன் அவளைக் காதலித்தால் கூட காதலிக்கவில்லை என்று தான் சொல்லுவான் சொல்லவைப்பேன்.மனதுக்குள் சபதம் போட்டார் கண்மணி.



அந்த சபதத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அவரிடம் ஒரு மாபெரும் அஸ்திரம் இருந்தது.அதை சரியாக குறி பார்த்து எய்தார்.அது வீழ்த்த வேண்டிய இலக்கை மிக இலகுவாகவே வீழ்த்தியது.அவர் போட்ட சபதத்தில் வெல்லவும் வைத்தது.அவர் நினைத்த காரியம் இனிதாகவே நடந்தது.
 
Top