• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பன்னீர் பட்டர் மசாலா தோசை

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
875
பன்னீர் பட்டர் மசாலா தோசை



தேவையான பொருட்கள்

தோசை மாவு- ஒரு கப்
சிறு சதுரங்களாக வெட்டி பன்னீர்- ஒரு கப்
பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -ஒரு கப்
குடைமிளகாய் பொடிப் பொடியாக நறுக்கியது சிறிதளவு
இஞ்சி பூண்டு துருவல் சிறிதளவு
கறிவேப்பிலை மல்லி சிறிதளவு
கரம் மசாலா அல்லது சென்னா மசாலா சிறிதளவு
வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்று
வறுத்த முந்திரி சிறிதளவு
பொடியாக நறுக்கிய ஆப்பிள் தக்காளி ஒன்று
எண்ணெய் தாளிக்க
உப்பு சுவைக்கேறப
பட்டை தாளிக்க

செய்முறை

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றவும்
பிறகு இஞ்சி பூண்டு துருவலை மற்றும் பட்டை போட்டு வதக்கவும்
ஓரளவு பச்சை வாசனை போன பின் வெங்காயம் குடைமிளகாய் தக்காளி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும் தக்காளி வதங்க துவங்கும்போது கரம் மசாலா அல்லது சென்னா மசாலா போட்டு கிளறவும் இந்தக் கலவை ஓரளவு கெட்டியாக தூங்கும்போது பன்னீரை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும் பன்னீர் கொதித்த ஐந்தாவது நிமிடம் நன்கு மசித்த உருளைக்கிழங்கை மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கெட்டியாக ஆனபின் இறக்கி வைக்கும்
இப்போது மெலிசாக தோசைகளை வார்த்தை அதன் நடுவே இந்த மசாலாவை சேர்த்து சுவைக்கலாம்
 
Last edited by a moderator:
Top