• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரபாகரன் மாரிமுத்து - ரோஸ் நிறக் காயின்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
ரோஸ் நிறக் காயின்

சூரியனின் மஞ்சள் நிற வெளிச்சம் மண்ணில் இதமாகப் பரவிக் கொண்டிருந்தது. வேக வேகமாக வேலைக்குச் செல்லும் மனிதர்கள் மத்தியில் மெதுவாக எழுந்து முகம் கழுவிக்கொண்டே வீதியைப் பார்த்தான் பாலு. முத்து, வேகமாகச் சென்று கொண்டிருந்தான். "தம்பி முத்து. எங்க வேலைக்கா? என கேட்டான்.

"ஆமா. வேலைக்கு போகாமா உங்க கூட கேரம்போடு வெளையாடுனா வீட்ல சோறு போட முடியாதுனு, அம்மா சொல்லிட்டாங்க. சாயங்காலம் விளையாட வர்றேங்ண்ணா" என்று சொல்லி விட்டு அவசரமாகப் போனான்.

'விடுமுறை நாள் கூட வேலைக்கு போறான்' என நினைத்துக் கொண்டு 'விக்கி வேலைக்கு போயிருப்பானா' என யோசித்துக் கொண்டே போன் பண்ணினான்.

"சொல்லு பாலு. கேரம்போடு விளையாடவா?" என்றான் விக்கி.

"ஆமா விக்கி. நானு, ரகு, சீனு, சதாம் எல்லோரும் இருக்கோம் வா" என்றான் பாலு. கேரம் போர்டு இவர்களுக்கு ஒரு புதிய விளையாட்டு. கிராமப் பகுதிகளில் விளையாடும் விளையாட்டுகள் வேறு. இது போன்ற விளையாட்டு சொல்லித் தரவும் ஆள் கிடையாது. விளையாட்டு தெரிந்த நபர்கள் விளையாடும் போது கற்றுக் கொண்டவர்கள் பாலுவும் சீனுவும். கிராமப் பகுதியில் இளைஞர்கள் நல மேம்பாட்டுத் திட்டம் மூலம் வாங்கியது அந்த கேரம் போர்டு. பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கும். விரும்புகிறவர்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விளையாடலாம்.

விளையாட ஆரம்பித்த சிறிது நேரத்தில் அணி அமைத்து விளையாடலாம் என பேசிக் கொண்டு அணி பிரித்தனர். பாலுவும் ரகுவும் ஒரு அணி, சீனுவும் சதாமும் ஒரு அணி என ஆடத் தொடங்கிய நேரம் பிரபு வந்தான். இவர்களை விட ஐந்து வயது மூத்தவன்.

"என்ன தம்பி காலையிலயேவா...?" என கேட்டுக்கொண்டே அவர்களோடு அமர்ந்தான் பிரபு. சதாம் விலகிக் கொண்டு, "அண்ணா நீங்க விளையாடுங்க" என்றான். "விளையாடி ரொம்ப நாள் ஆச்சு தம்பி." என சொல்லி ஸ்ட்ரைக்கரை வாங்கி விளையாட ஆரம்பித்தான். முதல் ஆட்டம் முடிந்தது.

"அண்ணா. பொய் சொல்லாத. ரொம்ப நாள் ஆச்சுனு சொன்ன. இவ்வளவு சூப்பரா விளையாடுற?" என பாலு கேட்டான்.

"என்ன சொன்ன? நல்லா விளையாடுறேனா? கத்துக்கிட்ட இடம் அப்படி தம்பி" எனச் சொல்லிக்கொண்டே அடுத்த ஆட்டத்திற்கு காயின்களை அடுக்கினான் பிரபு.

"இந்த வாட்டி எந்த கலர் காயின்?" என சீனு கேட்டான்.

"வெள்ளை" என ரகு சொன்னான். அப்போது சதாம் கேட்டான்.

"அண்ணே, இந்த விளையாட்டுல ஏன் வெள்ளை, கருப்புனு காய்ன்களும் ஒண்ணு மட்டும் ரோஸ் நிற காய்னுனும் இருக்கு?"

"தம்பி இது விளையாட்டு. இரு பிரிவு இருக்கணும்ல. அதான் தம்பி." எனச் சொல்லிக் கொண்டே சீனுவிடம், "ஏன் இந்தக் காயின போடல?" என கோவமா திட்டினான் பிரபு.

"அண்ணே. ரோஸ் கலர் காயின் போடலனு ஏன் திட்டுற?" எனக் கேட்டான் சதாம்.

"தம்பி விளையாட்டை விளையாட்டா விளையாடக் கூடாது" என்ற பிரபு, ரோஸ் காய்னை பாக்கெட் செய்து விட்டு கருப்பு காய்னையும் பின்னாடியே விரட்டினான்.

நால்வரையும் பார்த்து பிரபு சொன்னான்.

"இந்த விளையாட்டு சொல்ற அரசியல் ரொம்ப பெருசுடா தம்பிகளா. வெள்ளையும் கருப்பும், நிற அரசியல். உலகம் முழுசும் இருக்கிற பாகுபாடு. இங்கு பாகுபாடுங்கிறது மதமும் சாதியுந்தான். நாம வாழ்கையில் ஏதாவது ஒன்ன எதிர்த்து நின்னுதான் போராடனும். ரோஸ் கலர்ங்கிறது அதிகாரம். அது யாரு கையில் இருக்குங்கிறது தான் முக்கியம்."

சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முருகன் அங்கு வந்தார்.

"டேய் யாரக் கேட்டுடா போட எடுத்துட்டு வந்தீங்க? இத எடுத்துட்டு போக உன் வீதிக்கு நாங்க வரனுமா? லீவு நாள்ல நாங்க விளையாடுவோம்னு தெரியாதா?" என திட்டிக் கொண்டு பாதி விளையாட்டில் போர்டை எடுத்துச் சென்றார். பிரபு எவ்வளவு செல்லியும் முருகன் கேட்கவில்லை.

"அண்ணே ரோஸ் காயின் அவங்ககிட்ட இருக்கு. அப்படிதான் பேசுவாங்க. விடுங்க நமக்குனு ஒன்னு சொந்தமா வாங்கி விளையாடுவோம்" என்றான் சதாம்.

அதுதான் சரி என முடிவு செய்து கலைந்தனர். 'அடுத்தவாரம் வாங்கி விளையாடுவோம்' எனச் சொல்லிச் சென்றான் பிரபு.

"அண்ணே கேரம் போடு என்ன விலை வரும்?" என பிரபுவிற்கு போன் பண்ணிக் கேட்டான் ரகு.

"எட்நூறுவா ரூபா வரும் தம்பி. நானூறுவா ரூபா குடு போதும். மீதி நான் பாத்துக்கிறேன்" என்றான் பிரபு.

நானூறு ரூபாய்க்கு என்ன பண்ணலாம் என ரகு, சீனு, பாலு, சதாம் நால்வரும் பேசிக்கொண்டே யோசித்தனர். மாதக் கடைசி வேறு. பாலுவும் சீனுவும் மட்டும் வேலைக்கு போற ஆட்கள். வாங்கும் சம்பளம் முழுவதும் வீட்டில் கொடுத்து விடுவார்கள். சதாம் படிக்கிறான். ரகு படித்துக் கொண்டே வேலை செய்கிறான்.

இவர்களுக்கு நானூறு ரூபாய் பெரிய காசு இல்லை. ஆனால் மாத கடைசியில் நூறு ரூபாய் கூட எல்லோருக்கும் பெருசுதானே. ஆனால் மனசுக்குள் ஒரு வீம்பு வந்து ஒட்டிக்கொண்டது. எந்த இடத்தில் நாம் விளையாடும் போது அவர்களின் அதிகாரத்தை செலுத்தி போர்டை எடுத்தார்களோ, அதே இடத்தில் விளையாட வேண்டும். அதுவும் ஒரே வாரத்தில்.

ஒரு வழியாக கடன், சேமிப்பு என பணம் சேர்த்தனர். 250 ரூபாய் தான் இருந்தது. 150 ரூபாய் பணத்துக்கு முத்துவிடம் கேட்டனர். முத்துவும் ஒருநாள் சம்பளத்தைக் கொடுத்தான். கடைசியில் நானூறு ரூபாய் சேர்ந்து விட்டது. பிரபு மீதி நானூறைப் போட்டு, ஒரு புதிய கேரம் போர்டு வாங்கி வந்தான்.

பெரும் மகிழ்ச்சி. வீட்டில் வைத்து தொட்டுப் பார்த்தனர். மகிழ்ச்சி பிரவாகமெடுத்தது. 'இது நமக்குச் சொந்தமான பொருள். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது' என நான்கு பேரும் மகிழ்ச்சியில் திளைப்பதை பார்த்தான் பிரபு.

"அண்ணே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எப்போ அங்க போய் விளையாட போகலாம்" எனக் கேட்டான் சதாம்.

"நாளைக்கு ஞாயித்துக்கெழம. நாளைக்கு விளையாடலாம்" எனக் கண்ணடித்து சிரித்துக் கொண்டே நகர்ந்தான் பிரபு.

மறுநாள் காலை.

பாலு வீட்டின் வாசல் முன் விளையாடத் தயாராக இருந்தான் சதாம். முதல் ஆட்டம் தொடங்கியது. சீனுவும், சதாமும் இருவரும் விளையாடத் தொடங்கினர். சிறிது நேரத்திலே அங்கிருந்தவர்கள் மூலம் தகவல் பரவ ஆரம்பித்தது.

"முருகன எதுத்து சின்னப்பசங்க சொன்ன மாதிரியே போர்டு வாங்கிட்டானுங்க." என்ற பேச்சு முருகனை எட்ட, அது மானப் பிரச்சனையாகத் தோன்றியது.

"ஒரு வார்டு உறுப்பினர் உன்னை எதிர்த்து கீழ்சாதி சின்னப் பசங்க இப்படிச் செய்றாங்க. இப்போவே இதை அடக்கி வையி" என சிலர் முருகனை ஏத்தி விட கோபத்தில் உழன்றான் முருகன்.

பாலுவுக்கு போன் பண்ணி "வீட்டு வாசல் முன்னாடி விளையாடாத. ரோட்ல போறவங்கள கேலி செய்வது மாதிரி இருக்கு. பொம்பள பிள்ளைக ரோட்ல நடக்க வேணாமா?" என கண்டித்தான். அதை பிரபுவிடம் பாலு சொன்னான்.

"சரி நான் பாத்துக்கிறேன்" என்றான் பிரபு. பிரபுவும் முருகனும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். பங்காளி முறைதான். தேர்தலில் பிரபு நிற்க வேண்டியது. முருகன் நிற்பதால் சரி பங்காளி தானே என விட்டுக் கொடுத்திருந்தான் பிரபு. அத்தேர்தலில் முருகன் வெற்றி பெற்றாலும், பிரபு விட்டுக் கொடுத்ததால் தான் இந்த வெற்றி என எல்லோரும் பேசினார்கள். இது முருகனின் மனதை காயப்படுத்தி பிரபுவை வெறுக்க வைத்தது. அதுவே பகையாகவும் உருவானது.

மாலையில் முத்துவும், சதாமும் சேர்ந்து விளையாடினார்கள். எதிரில் இருந்த இடத்தில் முருகன் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து கேரம் போர்டு விளையாடினான்.

"காக்கி உடுப்புல யாரோ வர்றது மாதிரி தெரியுது" முத்து சொன்னான்.

"யாரா இருந்தா என்ன? நீ காயினப் போடு" என சதாமிடம் சொன்னான் ரகு.

வந்த போலீஸ் நேரே முருகனிடம் சென்றது. ஏதோ பேசியபடி முருகன் எதிரில் இருந்த நால்வர் பக்கம் கையைக் காட்ட போலீஸார் இருவரும் நேராக வந்த வேகத்தில் முத்துவின் கன்னத்தில் அறைந்ததனர்.

சீனு, "ஏன் அடிக்கிறீங்க?" எனக் கேட்க லத்தியால் அவன் கால்களில் அடி விழ, பாலுவும் சதாமும் நடப்பது என்ன என தெரியாமல், "ஏன்" என கேள்வி கேக்க அவர்களுக்கும் அடி இடிபோல் விழுந்தது. ஊர் வேடிக்கை பார்க்க அந்த அவமானம் தாங்க முடியாமல் கீழே குனிந்த சீனுவும் முத்தும் புதுசா வாங்கிய கேரம்போர்டு உடையாமல் இருக்கிறதா எனப் பார்த்தனர். அவமானம் உடலைக் கூசச் செய்ய, சதாம் போர்டில் ஓங்கி ஒரு அடி அடிக்க இரண்டாக உடைந்து போனது கேரம் போர்ட்.

அதில் இருந்த எல்லா காயின்களும் பறக்க ரோஸ் காயின் சதாம் முகத்தில் விழுந்தது. யாரோ சொன்னது என, பிரபு அன்று சொன்னது நினைவுக்கு வந்தது.

"அதிகாரம் வலிமையானது. அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது." அந்த ரோஸ் காயினை கையில் வைத்துக்கொண்டு போலீஸ் உடன் சென்றான்.

தகவல் தெரிந்து காவல் நிலையம் சென்று விளக்கம் கேட்டான் பிரபு. போலீஸார், பிரபுவிடம் "இந்த நாலு பேரும் ரோட்ல நின்னு பொம்பள பிள்ளைகள கேலி செய்யிறதா கம்ப்ளைண்ட் வந்துச்சு. அதை விசாரிக்க வந்தோம். தகவல் உறுதினு உங்க ஏரியா வார்ட் மெம்பரு சொன்னாரு. அதான் இங்க கூட்டிட்டு வந்திருக்கோம்." என்றனர்.

அவர்கள் அப்படிச் செய்கிற ஆட்கள் இல்லை என ஊர் பெரியவர்கள் மூலம் பேசி வெளியே கொண்டு வந்தான் பிரபு.

வெளியே வந்த சதாம், "அண்ணே. எந்த எடத்தில எங்க மரியாதை போச்சோ, அதை அங்கனயே திரும்ப பெறுவோம். இது சத்தியம்." என்றவன் பாக்கெட்டில் இருந்த ரோஸ் நிற காயினை எடுத்து வெறித்துப் பார்த்தவன், அதை பிரபுவிடம் கொடுத்து விட்டு நடந்தான்.

***

நன்றி.
 
Srikrish

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 5, 2021
Messages
1
அருமையான கதைக்களம் திரு பிரபாகரன் அவர்களே,கேரம் போர்டு காயின் வைத்து அரசியலை வெளி கொண்டு வந்த விதம் சிறப்பு👌👌👌
 
Prabhakaran

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
5

மிகுந்த நன்றி
 
Kalpana ganesan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
2
அருமையான எழுத்து நடை! வித்தியாசமான கதை களம்! மேலும் நிறைய எழுதுங்கள்!
 
ebinesaresak

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 7, 2021
Messages
1
அருமையான பார்வை.உலக அரசியலை எழுத்தாளர் படிமப்படுத்தியவிதம் வியக்க வைக்கிறது.இதை போன்ற எழுத்துக்களே அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும்.தொடர்ந்து எழுதுங்கள்.
 
ARUNA KUMARI R

இளைஞர்கள் வாழ்வில் சாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் ஆடும் விளையாட்டை வெளிப்படையாக எழுதியுள்ளார்...,
யாரேனும் ஒரு நல்ல , மனிதாபிமானம் மிக்க தலைவனோ, வழிக்காட்டியோ, அதிகாரியோ வரவேண்டும் என்ற அனைவரின் குரலாக இக்கதை உள்ளது.
வாழ்த்துக்கள் பிரபாகரன்....
 
மதன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 8, 2021

நன்றி
 
மிகவும் அருமையான பதிவு.
 
Dharsini

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
20
வெள்ளை,கருப்பு மதம்,ஜாதி குறித்த பாகுபாடு..ரோஸ் அதிகார வர்க்கம்..அருமை ப்ரோ..பிரபு போன்ற நல்உள்ளங்கள் வாழும் சமூகத்தில் முருகன் போன்ற ஆட்களும் இருக்கின்றனர்.....வாழ்த்துக்கள் ப்ரோ
 
ரொம்ப நன்றி மா மகிழ்ச்சி
 
R_Boomadevi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 9, 2021
Messages
6

இப்படித்தான் கதை சொல்ல வேண்டும் என்ற கதை.ரோஸ் காயின் காத்திருக்கிறது தன் வெஞ்சினத்தைக் காட்ட.சிறப்பு.வாழ்த்துகள்.
 
என் பெயர் பூமாதேவி.என் கதை மூன்றாவது திரியில்.படித்து விமர்சிக்கவும்.நன்றி.
 
Prabhakaran

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
5
கதை தலைப்பு

Top