• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 27

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
775
562
93
Chennai
அத்தியாயம் 27


காலையிலே ஏனோதானோ என்றே வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மகிமா.

நேற்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன் இந்த நிமிடம் வரை இன்னும் அழைக்கவில்லை. அழைக்கிறேன் என்று சொல்லி தானே சென்றான்.

அதனை அத்தனை நம்பினாள் மகிமா. பேச்சுக்கு கூறுவதாய் எல்லாம் அவள் நினைக்கவே இல்லை.

அவன் நிச்சயம் அழைப்பான் என்று ஒரு நம்பிக்கை. இரவு பத்து மணி வரையிலும் எதிர்பார்த்தவளுக்கு வெறுத்து போனது.

காலை எழுந்ததும் அதே எதிர்பார்ப்பு. ம்ம்ஹும் இல்லையே! இப்படி தவிக்க வைக்கிறானே என்று கோபம் கூட வந்துவிட்டது.

'நேரில் பார்த்தால் மட்டும் தான் அந்த பார்வையும் பேச்சுமா?' என்ற கோபத்தோடு,

"உன் மாமா தானே? அன்னைக்கெல்லாம் காலங்காத்தால மாமாக்கு கால் பண்ணி கோவிலுக்கு கூப்பிட்டது நீ தானே? இப்பவும் பேசணும்னா கூப்பிட வேண்டியது தானே?' என்று மனம் கேட்க,

'பேச தான் கால் பண்ணனும்னு இல்ல பேச தோணினாலும் கால் பண்ணு!' என்ற அன்றைய அவனின் வார்த்தைகளின் அர்த்தமே இப்பொழுது தான் தெளிவாய் புரிந்தது.

"அய்யோ! என்ன மாமா இது?" என தலையை பிடித்துக் கொண்டவளுக்கு, அழைக்கவா வேண்டாமா என்று ஒரு போட்டி மனதுக்குள்.

மணி ஒன்பதை தாண்டிவிட்டது. 'எனக்கு மட்டும் தான் இப்படிலாம் தோணுதா? அவங்க என்னை நினைக்கவே இல்லை தானே? வேண்டாம் நீயா கால் பண்ணி அவங்க எதுவும் நினைச்சுக்க போறாங்க!' என்று ஒரு முடிவிற்கு வரும் முன் உடலோடு மனமும் சோர்ந்து போக,

"இந்தா லஞ்ச் கட்டிட்டேன்! சாப்பிட இட்லி வச்சாச்சு! எடுத்துட்டு கிளம்பு!" என்று மாலா சொல்லி அடுத்த வேலையை பார்க்க சமையலறை செல்ல,

"ம்மா!" என்று பின் சென்றாள் மகிமா.

"ம்ம் காசு வேணுமா? உன் அப்பா அங்க வைக்கலையா?"

"ப்ச் நான் இன்னும் பாக்கல! ஆமா அத்தை வீட்டுல இருந்து கால் பண்ணினாங்களா? எதுவும் நியூஸ்?" என்று கேட்க,

"அதான் நேத்து வந்துட்டு போனாங்கல்ல டி? அதோட உன் அப்பாவும் கல்யாண நாளை குறிக்க நாளைக்கு புதன் கிழமை நல்லா நாள்னு சொல்லிருக்காங்க. அங்க வாழவந்தான் அண்ணே மட்டும் வருவாங்களா இருக்கும். இங்க வனிதா மாப்பிள்ளையும் உன் அப்பாவும் போவாங்க. கருப்பையா மாமா முடிஞ்சா வாரேன் சொன்னாங்க!" என இருந்த செய்திகளை எல்லாம் கூற,

"ஹ்ம்!" என கேட்டுக் கொண்டாள்.

"உனக்கு நேரமாகலையா? ஒரு நிமிஷம் லேட் ரெண்டு நிமிஷம் லேட்னு குதிச்சுட்டு நிப்பியே!"

"ம்ம் போலாம் ம்மா! ஆமா மாமா இன்னைக்கு ஊருக்கு போறாங்க. உங்களுக்கு தெரியும்ல? மாமா பேசினாங்களா உங்ககிட்ட?"

"சொல்லாம போவானா என்ன? நேத்து சாயந்திரமா கால் பண்ணினான். போய்ட்டு வந்து வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான்!".

"ஓஹ்!"

"என்ன எதுவும் சண்டை போட்டியா? ஏன் ஒரு மாதிரி இருக்குற?"

"ப்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல ம்மா! நான் வர்றேன்" என்றவள் கிளம்பிவிட்டாள்.

அலுவலகம் செல்லவே பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதோடு அவனில்லை என்பதே அத்தனை சோர்வுக்கும் முக்கிய காரணம்.

"ம்ம்ஹும்ம்! அவங்களை தேடாத மகி! ரொம்பத்தான் பன்றாங்க. உன்னை அவங்க தேடவே இல்ல. சும்மா என்னவோ ஒரு மாயாஜால பேச்சு கேட்டு, அதுக்கு போய் இப்படி ஆகிட்டியே" என தனக்கு தானே அத்தனை புத்திமதி சொல்லிக் கொண்டாள்.

மனதெல்லாம் சொல்ல தெரியாத கணம். அதை சுமக்க முடியவில்லை என்பதே அவளை கோபமடைய வைத்தது.

'என்ன இந்த மனம்!' என எவ்வளவோ விரட்டிப் பார்த்தும் கொஞ்சமும் அசையாமல் அந்த கொஞ்சல் புன்னகையோடு தன்னை ஈர்க்கும் விழிகள் சேர்ந்த சிவாவின் முகம் தவிர எதற்கும் தாவ மாட்டேன் என்றது மனம்.

அதே எரிச்சலில் தன்னிடம் வந்து அமர்ந்து கொண்டு கணினியை உம்மென்ற முகத்தோடே உயிர்ப்பித்தவள் அலைபேசி சத்தத்தில் அசட்டையாய் அதை கையில் எடுக்க அவனே தான்.

மொபைலை முறைத்துக் கொண்டே அழைப்பை ஏற்காமல் அவள் இருக்க, தன் இடத்தில் அமர்ந்திருந்தவன் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் சுருங்கியப் புருவங்களோடு வித்தியாசமாய் பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தான்.

"என்னவாகிற்று இவளுக்கு?" என்றது அவன் பார்வை.

அழைப்பு நிற்கவிருக்கும் சமயம் அதை ஏற்றவள் "சொல்லுங்க மாமா!" என்று சோர்வாய் சொல்லிவிட்டு, எதேர்ச்சையாய் மட்டும் கண்கள் அவன் இருப்பிடம் நோக்கி திரும்ப, விழிகள் அவனில் விரிந்து நின்றுவிட்டது.

அவள் வரவுக்கு ஐந்தே நிமிடங்கள் முன்பு தான் வந்து சேர்ந்திருந்தான் சிவபிரகாஷ்.

வந்ததும் அவள் இன்னும் வரவில்லை என்பதையும் பார்த்துவிட்டு தனது கணினியை ஆன் செய்தவன் அவள் வரவுக்காகவும் தன்னை அவள் பார்ப்பதற்காகவும் என தயாராய் இருக்க, வந்தவள் கொஞ்சமும் தன் பக்கம் திரும்பாமல் சென்றதோடு தன் அழைப்பைப் பார்த்தும் உடனே ஏற்காமல் களைப்பாய் வந்த அவள் குரல் வரை என குழம்பிப் போய் பார்த்திருந்தவனை மேலும் குழப்பி தான் போனது அவளது அந்த விரிந்த விழிகள்.

"உடம்பு எதுவும் சரி இல்லையா மகி? டல்லா இருக்குற மாதிரி இருக்கு!" அவன் பார்வை அவளிடம் வைத்து அலைபேசியில் கேள்வியை கேட்க, கண்கள் கலங்கி விட்டது மகிமாவிற்கு.

"மாமா!" என்றதற்கு மேல் வார்த்தையும் வரவில்லை.

"ஹே என்னாச்சு மகி?" என்றவனுக்கு புரியவே இல்லை அவளின் அந்த பரிதவிப்பு. இத்தனை தன்னை தேடுவாள் என எதிர்பார்க்கவில்லையே.

தன் வரவை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். தன்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தோடு மகிழ்ந்து விரியும் முகத்தினை மட்டுமே அவன் எதிர்பார்த்து காத்திருக்க, இந்த கலங்கிய கண்களும் நடுங்கிய வார்த்தைகளும் முற்றிலும் எதிர்பாராதது.

"அம்மு!" என்று சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.

இப்பொழுது தான் கார்த்திக் எழுந்து சென்றிருந்தான். அவளருகே யாழினி, சுஜாதா என்ற சீனியர் பெண்கள். அவளின் தோழிகள் தான் என்றாலும் அவர்கள் முன் அவள் இப்படி இருக்க, எழுந்து சென்று கேட்கவும் முடியவில்லை.

அவன் தன்னைக் கேட்டதும் உடனே சுற்றிலும் பார்த்ததும் என கண்டவள் "டூ மினிட்ஸ் மாமா!" என்று சொல்லி போனை வைத்துவிட்டு வாஷ் ரூம் எழுந்து சென்றுவிட, கார்த்திக் வந்துவிட்டான்.

"கார்த்தி! எனக்கு காபி கொண்டு வர்றியா?" என்றான் சிவா.

"இங்கேயா? அதுவும் இப்பவா? இப்ப தான டா வந்த? என்னை திட்டிட்டு இருப்பியே! இப்ப நீயே வந்ததும் காபி கேட்குற?" என்று கார்த்திக் பேச,

"ப்ச்! வாங்கிட்டு வர்றியா இல்லையா?" என்றான் சிவா.

"வர மாட்டேன் சொல்லி ரெகுலர் ஷிப்ட் வந்திருக்க. வந்ததும் காபி வேற கேட்குற? என்னங்கடா?" என்று புலம்பி தான் கிளம்பினான் கார்த்திக்.

நேற்றே அவனிடம் கூறி இருந்தான் தனது ப்ரோமோஷன் பற்றியும் தான் ஊருக்கு செல்வது பற்றியும்.

"சூப்பர் டா. வாழ்த்துக்கள்! சந்தோசமா போய்ட்டு வா! நீ ட்ரைனிங் முடிச்சு வந்ததும் தான் சார் ஆபீஸ்ல எல்லாருக்கும் இன்ஃபோர்ம் பண்ணுவாங்கல்ல! ஓகேஓகே! கீப் ராக் மேன்!" என்று வாழ்த்தி தான் கார்த்திக் நேற்று விடைகொடுத்திருக்க, இன்று சிவா வந்ததும்,

"என்ன டா வர மாட்டேன் சொன்ன?" என்றான் கார்த்திக்.

"ப்ச்! சுரேஷ் சார் தான் வர சொன்னாங்க!" என ஒன்றை கூறி அவன் வாயை அடைத்திருந்தான்.

இவனாய் தான் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாய் பெர்மிஸ்ஸன் வாங்கிக் கொண்டு சென்றிருந்தான். இப்பொழுது அவனே நேரில் வந்திருக்க, யாரும் அவனை ஏன் என்றெல்லாம் கேட்க போவதில்லையே!

முகம் கழுவி வரும் பொழுதே சிவாவை மகிமா காண, 'இங்க வா' என கைகாட்டி அவன் அழைக்க, சிறுபுன்னகையோடு வந்தவளை அருகில் அமர கூறினான்.

"இன்னைக்கு லீவ் இல்லையா மாமா?" என்று கேட்டாலும் அவள் குரலில் நேற்றைய அதற்கு முந்தைய என அதையும் விட சிறு மாற்றம் காண முடிந்தது.

"பேக்கிங் எல்லாம் மோஸ்ட்லி நேத்து நைட் முடிஞ்சது மகி! சார் நைட் கால் பண்ணினாங்க. இன்னைக்கு நைட் நைன்க்கு தான் பஸ் புக் பண்ணிருக்காங்க. சோ இன்னைக்கு மார்னிங் பிரீ தானே! அதான் எல்லாம் செட் பண்ணி வச்சுட்டு இப்ப தான் வந்தேன்!" என்றவன்,

"என்னாச்சு மகி! வீட்டுல எதுவும் பிரச்சனையா?" என்றான் அவளைப் பார்த்தபடி.

இல்லை என்ற தலையசைப்பு மட்டுமே அவளிடம்.

"உடம்பு சரி இல்லையா?" என்று கேட்க அதற்கும் தலையசைப்பு தான்.

"ரொம்ப டல்லா இருக்குற! ஆனா ஏன்னு கெஸ் பண்ண முடியல! எதாவது ப்ரோப்லேமா?"

"இல்ல மாமா!"

"வேறென்ன?"

"வேறென்ன? எதுவுமே இல்ல! என்னவோ பைத்தியம் ஆன மாதிரி இருக்கு. ரொம்ப அன்கான்ஃபிடன்ட்டா பீல் பண்றேன்!" என்றதும் அவன் புரியாமல் பார்த்திருக்க,

"நேத்து நீங்க சொல்லிட்டு போனதுல இருந்து மனசே சரி இல்ல மாமா! கால் பண்றேன் சொல்லிட்டு தானே கிளம்புனிங்க? ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணினேன் நீங்க கால் பண்ணுவீங்கனு. இன்னைக்கு மார்னிங் வரை! ம்ம்ஹும்! நீங்க கூப்பிடவே இல்ல!" என்றவள்,

"நீங்க சொல்லலைனா நான் நினைச்சிருக்கவே மாட்டேன் போல! நீங்க பேசினது தான் காதுல கேட்டுட்டே இருக்கு. வேறெதுவும் மைண்ட்ல ஏற மாட்டுது. ரொம்ப டவுனா பீல் பன்றேன்! இதெல்லாம் சொன்னா நீங்க என்ன நினைப்பிங்கனு இருக்கு!" என்று இடைவெளி விட்டவள்,

"ஆனா உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியல. இங்க சொல்லலாமா ம்ம்ஹும் கூடாது. இது ஆபீஸ். தெரியுது. ஆனாலும் முடியல. பேசாம லீவ்னு மெயில் போட்ருக்கலாம்! வராமலே இருந்திருக்கலாம்னு நினைக்கும் போது நீங்க கால் பண்றீங்க. நான் நினைக்கவே இல்ல நீங்க வந்திருப்பிங்கனு. என்கிட்ட சொல்லவே இல்லைல நீங்க வர்றேன்னு? ஆனா நான் தான் ரொம்ப எதிர்பார்த்துட்டேன் போல. இப்படிலாம் இருந்ததில்ல. ஆனா இப்ப தான்...." என்றவள் கண்கள் மீண்டும் கலங்கும் போல இருந்தது.

இத்தனைக்கும் உன்னால் தான் என்றோ ஏன் இப்படி பண்ணீங்க என்றோ கேட்காமல் அவளையே அவள் வருத்திப் பேச, அவளின் தன் மீதான உணர்வுகளில் இவன் தான் மெய் சிலிர்த்து போயிருந்தான்.

"ஹே அம்மு!... ப்ச்!" என்றவனுக்கு என்ன சொல்லிவிட என்று தெரியவில்லை. இவன் அவளிடம் எதிர்பார்த்ததற்கு எல்லாம் மேலாய் அவன் மீதான அவள் தேடலில் உள்ளம் சுருண்டு கொண்டது அவளிடம்.

"உங்களை ரொம்ப டார்ச்சர் பண்றேன் இல்ல? அதுவும் ஆபீஸ்ல!" அவளே சொல்ல, அலுவலகம் என்பதாலேயே அவன் பேச முடியாமல் தவித்தான்.

"சரி ஓகே! சாரி! வேறென்ன சொல்ல! அஃப்டர்நூன் பேசுவோமா? ப்ளீஸ்!" மொத்தமே இவ்வளவு தான் சிவா கூற, உடனே சம்மதம் கூறி எழுந்து செல்பவளை நேசம் பொங்கப் பார்த்திருந்தான்.

தொடரும்..
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,120
598
113
Tirupur
அடேய் புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்துர நீ
 
  • Haha
Reactions: Rithi

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
137
101
43
Dindigul
ஏன் ஆஃபிஸ்ன்னா இவன் சமாதானப்படுத்த மாட்டானா? மியூசியத்துலயா இருக்கான்
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
775
562
93
Chennai
ஏன் ஆஃபிஸ்ன்னா இவன் சமாதானப்படுத்த மாட்டானா? மியூசியத்துலயா இருக்கான்
ரொம்ப டிஜிபிளின் பாய் போல😷🤣🤣
 

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
775
562
93
Chennai
அடேய் புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்துர நீ
இத்தோட நிறுத்திக்குவோம்.. அடுத்து கொஞ்ச நாள் இப்படி நடக்காதுன்னு வாக்கு கொடுப்போம் 😊😊😷