• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 50

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 50

தனதறையில் வந்து தனித்து அமர்ந்திருந்தான் ரகு. மத்தியானமாய் வந்த ஆராத்யாவால் நடந்த கலவரத்தில் இருந்து ஓரளவு மற்ற அனைவரும் மீண்டிருக்க, இரவு எட்டு மணி வரையுமே ஆராத்யாவை அவள் வீட்டிற்கு செல்ல விடவில்லை மகேஸ்வரியோடு மற்றவர்களும்.

ரகுவிடம் பேச வேண்டும் என அவள் அவனை பார்த்தபடியே இருக்க, ரகு அவர்கள் அருகில் இருந்தாலும் மனமும் சிந்தனையும் என அவர்களோடு இருக்கவில்லை.

இரவு உணவிற்கும் அனைவரும் உடன் இருந்ததால் சாப்பிட்டோம் என்றளவிற்கு தான் இருவருமே சாப்பிட்டு இருந்தனர்.

ஆராத்யா சொல்லிக் கொண்டு கிளம்பி சென்ற சில நிமிடங்களில் ரகுவும் தன்னறைக்கு வந்துவிட்டான்.

இரவு பத்து மணியை தொடவிருந்த நேரம் நந்தாவிடம் இருந்து அழைப்பு. ஆசுவாசமாய் ரகு உணர்ந்ததும் அப்பொழுது தான்.

என்னவோ நெஞ்சில் பாரம் ஏறிய உணர்வில் இருந்தவன் அழைப்பை கண்டு காதில் பொருத்தினான்.

"சொல்லுங்க மாமா!"

"என்ன டா பண்ற?"

"சும்மா தான் மாமா. நீங்க டிரைவிங்ல இருக்கீங்களா?"

"ஆமா ரகு. இப்ப தான் ஆபீஸ் போய்ட்டு இருக்கேன். அப்புறம் மேரேஜ் சீக்கிரமே வைக்குற பிளான் போலயே!" என்று கேட்க, ரகுவிடம் அமைதி.

"சரி விடு! இதெல்லாம் கிராஸ் பண்ணி தான் வரணும். இதுக்கெல்லாமா அப்செட்?" நந்தாவே அவன் சொல்ல போவதில்லை என உணர்ந்து தானே சொல்ல,

"மாமா! ரொம்ப டவுனா பீல் பண்றேன் மாமா. நிஜமா மிஸ் யூ!" என்று சொல்ல,

"சரி தான் டா. உங்கக்கா சொன்னா அவன் உங்களை தான் தேடுவான் பேசுங்கனு. எப்படி... சொல்லி வச்சு என்னை அடிக்குறிங்களா இல்ல உன் அக்கா பேமண்ட் எதுவும் தர்ராளா உனக்கு?" என்று சாதாரணமாய் பேச,

"கிண்டலா உங்களுக்கு. அதான் தர்ஷி சொல்லிட்டா இல்ல. நானே மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். நீங்க வேற!" என்றான் ரகுவும் நேரடியாய்.

"அதான் தெரியுதே! பயங்கர கோபம் போல ஆராத்யா மேல!"

"ம்ம் ஆமா. ரொம்ப ரொம்ப! ஆனா அவகிட்ட காட்டவும் முடில.."

"ஓஹ்! அப்ப நீ உன் கோவத்தை அங்க காட்டல?" அழுத்தமாய் நந்தா கேட்க,

"மாமா!" என்றவனுக்கு அவன் சொல்ல வந்ததும் புரிந்தது.

"அதையும் சொல்லிட்டாளா இந்த தர்ஷி?" என்று முறைக்க,

"சொல்லலை. திட்டினா. உன்னை பயங்கரமா திட்டின ஃபோர்ஸ்ல அந்த உண்மையும் வெளி வந்துடுச்சு." என்றான் நந்தா.

"வேணும்னு அடிக்கல மாமா. அந்த டைம் என்னால... என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. எவ்ளோ பெரிய விஷயத்தை எவ்ளோ அசால்ட்டா பண்ணிட்டு என் முன்னாடி ஒண்ணுமே நடக்காத மாதிரி வந்து நிக்குறா. இதுல தர்ஷிக்கு அம்மாக்கு அண்ணிக்கு எல்லாம் கிப்ட் வேற" என்றான் இன்னும் கோபம் குறையாமல்.

"சரி தான். தப்பு ஓகே. அதுக்காக பொண்ணை அடிப்பியா? அந்த நேரம் அம்மா உன் கண்ணு முன்னாடி வரல?" என்றான் பொறுமையாய்.

"சாரி மாமா!"

"ஆராத்யாக்கு எப்படியோ. உன்னால இனி நிம்மதியா இருக்க முடியுமா? காலத்துக்கும் இது உன்னை துரத்தாது?"

"ம்ம்!"

"ஓகே விடு. ரொம்ப டீப்பா நான் உனக்கு சொல்ல வேண்டாம்னு பாக்குறேன். உனக்கே சில விஷயங்கள் தெரியணும். இன்னும் நீ சின்ன பையன் இல்லையே. ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணி வையுங்கனு கேட்குற அளவுக்கு பெரிய பையன் ஆகிட்டியே!"

"மாமா! அது..."

"புரியுது டா. தப்புன்னு சொல்லல. எனக்கும் எந்த ப்ரோப்லேமும் இல்ல.. நாளைக்கே மேரேஜ்னாலும் நான் வந்து நிக்க தான் போறேன்!"

"தோணுச்சு கேட்டுட்டேன். இன்னும் எனக்கு அவளை தனியா விட பயமா இருக்கு மாமா. ரொம்ப யோசிக்குறா. நான் அப்பவே சொன்னேன். என்னை கவனிக்குறேன்னு அவ சரியா சாப்பிடுறது இல்ல. தூங்குறாளானு தெரியல. ஆபீஸ் போ கொஞ்சம் பீஸ்ஃபுல்லா இருக்கும் சொன்னேன். கேட்காம நல்லா டெப்ரெஸ் ஆகி இங்க கொண்டு வந்து விட்ருக்கா!"

"ம்ம்! ஆனா இதுவும் உனக்காக தானே?"

"அதுக்காக போய்ட்டு வானு அனுப்பி வைக்கவா?"

"ஆனா போய்டுன்னு கத்துனியாமே!" கிண்டலாய் நந்தா சொல்ல,

"இந்த தர்ஷியை நான் என்ன பண்றது?" என்றான் கோப மூச்சுக்களுடன் ரகு.

"சரி சரி! அதெல்லாம் இருக்கட்டும். முடிஞ்சது முடிஞ்சது தான். மாத்திட முடியாது. சும்மா அந்த பொண்ணை இன்னும் பயப்பட வைக்காத."

"யாரு அவ பயபடுறாளா? அட போங்க மாமா!"

"ஆமா டா. உனக்கு பயந்து தான் குடுத்த கிப்ட் எல்லாம் ரிட்டர்ன் வாங்கிட்டு போயிருக்கா."

"ஆமா ஆமா! எதுக்கும் உஷாரா இருக்கனும். இனி அவ கிப்ட்னு சொன்னாலே எனக்கு தான் பீபி செக் பண்ண வேண்டி இருக்கும்!" என்று சொல்ல, நந்தா சிரித்தவன்,

"நாளைக்கு அத்தை நல்ல நாள் பாக்குறதா சொன்னாங்களாமே! பார்க்கட்டும். நீ இதை விட்டு வெளில வா. நீ சரியா பேசலைனா பாவம் ஆராத்யா இன்னும் எதாவது யோசிச்சு ஸ்ட்ரெஸ் எடுத்துக்க போறா. லவ்னு வந்துட்டா இதெல்லாம் நடக்குறது தான டா. ஃப்யூச்சர்ல இதை நினச்சு பார்த்தா சிரிச்சிக்குவோம் அவ்வளவு தான். எல்லாமே மெமரிஸ் தான். ஸ்வீட்டா தான் இருக்கனும்னு இல்ல மெமரிஸ் அப்பப்ப காரமாவும் வேணுமே லைஃப்க்கு"

"ம்ம்! தேங்க்ஸ் மாமா!"

"ஏன் டா? அட்வைஸ் பண்ணினதுக்கா?"

"ம்ம்ஹும்! யார்கிட்ட ஷேர் பண்ணணு தெரியாம ஒரு மாதிரி கன்ஃபியூஸ்டா கோலப்ஸ் ஆகி இருந்தேன். நீங்க கால் பண்ணீங்க. இப்ப கொஞ்சம் பெட்டர்னு தோணுது."

"தட்ஸ் குட்! எதுவும்னா எனக்கு கூப்பிடு. சும்மா ஸ்ட்ரைன் பண்ணிக்காத. தனியா நடக்குறியா? தலைவலி எதுவும் இல்லை தானே?" என்று பேசிவிட்டு நந்தா வைத்திருக்க,

"தேங்க்ஸ் தர்ஷ்!" என சகோதரிக்கும் செய்தி அனுப்பிவிட்டு ஆசுவசமாய் ரகு அமர்ந்த நேரம் மீண்டுமாய் அழைப்பு.

ஆராவின் அழைப்பை பார்த்தவன் அவளாய் அழைக்கும் முதல் அழைப்பை கண்டு மணியைப் பார்த்தபடி எடுத்தான்.

"மணி என்னாச்சு ஆரா? தூங்கலையா?" என்று எடுத்ததும் கேட்க,

"ம்ம்ஹும் இல்ல. நீங்க கால் பண்ணுவீங்கனு பார்த்துட்டு இருந்தேன்." என்றாள் தன் எதிர்பார்ப்பை மறையாமல்.

"நந்தா மாமாகிட்ட பேசிட்டு இருந்தேன் ஆரா." என்றவன் அவள் தேடல் புரிந்து இதமாய் சொல்ல,

"ம்ம் சரி!" என்றவள் அமைதியாகினாள்.

"என்ன பண்ற?"

"ஊஞ்சல்ல இருக்கேன்."

"ஓஹ்!"

"ஓஹ் தானா?"

"என்ன சொல்ற?" என்றவன் மெல்ல சிரிக்க,

"பால்கனி வாங்களேன்!" என்றாள்.

"ம்ம்... " என யோசிப்பது போல குரல் கொடுத்தவன்,

"கண்டிப்பா வரணுமா?" என்றான் சிறிது இலகுவான குரலில். நந்தாவிடம் பேசியதில் மனம் கொஞ்சம் தணிந்திருக்கவே அதுவும் உதவியது.

"ம்ம் பாக்கணும் போல இருக்கு!" என்றவள் குரல் வேறு அவனை வாட்ட,

"கால் வேற லைட்டா வலிக்குது!" என்றான் அப்பொழுதும்.

"பரவால்ல. ஒரு ரெண்டு நிமிஷம்!" என்று சொல்லி முடிக்கும் முன் அவனும் பால்கனி கதவை திறந்து கொண்டு அங்கே சென்று நின்றிருந்தான். சிறிய வெளிச்சத்தில் அவள் உருவம் தெரிய,

"பதினோரு மணிக்கு லைட் கூட இல்லாம என்ன பண்ற நீ?" ரகு கேட்க,

"எனக்கு தூக்கம் வர்ல ராம். என்னவோ இங்கெல்லாம் ரொம்ப வலிக்குது" என்றாள் இதயம் தொட்டு.

"உனக்கு ஏன் வலிக்குது?" முறைப்புடன் கேட்டவன் கேள்வி புரிய,

"உங்களுக்கு குடுத்தேன்ல. அதான் இங்கேயும் வலிக்குது!" என்றாள்.

"ஹே! அதான் பேசியாச்சு இல்ல. இப்ப என்ன திரும்பவும். விடு. போய் தூங்கு!" ரகு சொல்ல,

"இல்ல. எனக்கு தூக்கம் வரல. உங்களுக்கு தெரியுதா எனக்கு தெரியுது" என்று சொல்ல,

"என்ன தெரியுதா?" என்றான்.

"ப்ச்! நீங்க இப்படி என்கிட்ட பேசினதே இல்ல. என்னவோ... என்னவோ என்ன என்னவோ. உங்க குரல்ல எல்லாமே மிஸ் ஆகுது. எப்படி பேசுவிங்க என்கிட்ட! நானே கெடுத்துகிட்டேன். அது தான் பயமா இருக்கு. இனி இப்படிலாம் நீங்க கோபப்படுற அளவுக்கு பண்ணமாட்டேன் தான். ஆனாலும் இப்ப எப்படி இதுலருந்து உங்களை நான் வெளில வர வைக்கனு எனக்கு தெரியல. எனக்கு என்ன பண்ணனே தெரியல. யோசிச்சாலும் ஒன்னும் வர மாட்டுது!"

"இப்பவும் அளவுக்கு அதிகமா யோசிக்குற ஆரா. நீ யோசிக்கவே வேண்டாம். எல்லாம் நார்மல் ஆகிடும்." என்றான்.

இப்பொழுதுமே தன்னை விட அதிகமா மை வருந்தி அதற்கான முடிவை தேடி என அவள் படும் பாடு புரிய, மீண்டும் எதையாவது யோசித்து வைத்து என அவளை நினைத்தே இன்னும் இன்னுமாய் இறங்கி வந்தான் அவளிடம்.

"எப்போ?" ஆராத்யா கேட்க,

"எல்லாம் தானா சரி ஆகிடும். சின்ன வருத்தம் அவ்வளவு தான். அதுவும் ஒருவேளை நீ போயிருந்தா... அது தான்."

"நீங்க என்னை மன்னிக்கலை தான?"

"ப்ச்! இல்ல டா. ஆனா மறக்க முடியல." என்றவன், "சரி ஆகிடும்." என்றான் தனக்கும் சேர்த்து சொல்லி.

"என்ன டி!" அவள் தொடர்ந்த அமைதியில் இவன் கேட்க,

"சாரி தான் சொல்லணும். வேற என்ன சொல்ல?" என்றாள்.

"ஐ லவ் யூ சொல்லலாம்ல?" ரகு சின்ன புன்னகையோடு சொல்ல,

"ஐ லவ் யூ ராம். எப்பவும்." என்றாள் உடனே.

"அதான் தெரிஞ்சதே நீ பண்ணினதுலேயே!" என்றான் மீண்டும் தொடக்கமாய். மீண்டும் அமைதி அவளிடம்.

"ப்ச்! சரி ஓகே விடு விடு. நானும் ஐ லவ் யூ. உன்னை மாதிரியே எப்பவும்!"

"ம்ம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்."

"ம்ம் பண்ணிக்கலாம்!"

"ஆபீஸ் கூட ஒன்னாவே போலாம்"

"ம்ம் ஒன்னா போலாம்!"

"அங்க மட்டும் இல்ல. இனி எங்க போனாலும் ஒன்னாவே போலாம்!" ஆராத்யா நிறுத்தாமல் உளற,

"ஹே! போதும் ஆரா!. திரும்ப திரும்ப பேசுற!" என்றான் சிரித்தபடி.

"நிஜமா தான். இனி தனியா நான் எதுவுமே பண்ண மாட்டேன்."

"விட்டா தானே பண்ணுவ! அதுக்கும் ஒரு வழி வச்சிருக்கேன். கல்யாணம் நடக்கட்டுமேனு பாக்கறேன்."

"என்னை வெறுத்துட மாட்டிங்க தானே?" என்று கேட்ட போது அவள் குரல் கரகரத்து வர, தலைசாய்த்து பார்த்த அவள் பார்வையில் கலந்திடவே அவனும் ஏங்கினான்.

"காதலியா பார்த்தா வெறுக்க தோணுமோ என்னவோ! எனக்கு கல்யாணம் நடந்தாலும் இல்லைனாலும் மனைவின்னா அது ஆராத்யா மட்டும் தான்னு சொல்லிருக்கேன்ல. பின்ன என்ன ஆரா கேள்வி இது?" என்றவன்,

"பொண்டாட்டிகிட்ட கோவப்பட தான் முடியும்.. வெறுக்க முடியுமா?" என்று கேட்டவன் சொல்லோடு அன்பிலுமாய் உருகி நின்றாள் அவனவள்.
 
Top