அத்தியாயம் 8
"ஆரா! இங்க வா!" என்று தர்ஷி அழைக்க,
"யாரு தர்ஷி?" என்றான் நந்தா.
"என்னோட பிரண்ட்! பேரு ஆராத்யா.." என்று கூற,
"ஆமா நேத்து தான் மீட் பண்ணினாங்க!" என்றார் சிரித்து மகேஸ்வரியும்.
அதில் புன்னகையோடு ரகுவும் உள்ளே செல்ல, மீண்டுமாய் ஒரு மாதிரியான எண்ணம் ஆராத்யாவிற்கு.
மீண்டும் மீண்டும் அவர்களுக்குள் தான் தேவை இல்லாமல் நுழைகிறோமோ என்று. அந்த எண்ணத்திற்கு வலுவாய் ரகு சென்றதையும் மீண்டும் அவனுக்கு தன்னை தர்ஷினி அழைத்ததில் உடன்பாடில்லை போல என நினைத்துக் கொண்டாள்.
அப்படி இல்லை என்றாலும் தனக்கே தன்னை நினைத்து தலையில் அடித்துக் கொள்ளலாம் போல வந்தது.
'ஒரு குடும்பம் ஒன்னா இருந்துட கூடாதே ஆ'னு வாய் பாக்குறது' தனக்கு தானே திட்டிக் கொண்டவள் கை அசைக்க,
"வா! வா!" என்று அழைத்தாள் தர்ஷினி.
"இல்ல பரவால்ல.. நான் சும்மா.. நான் நாளைக்கு வர்றேன்!" ஆராத்யா அங்கிருந்தே சொல்ல,
"தர்ஷி!" என்று அழைத்த நந்தா 'அந்த பொண்ணா?' என்பதை போல கண்களால் கேட்க, ஆம் என்று கண்ணசைத்தவளும்,
"ப்ச்! வா ஆரா!" என்றாள்.
"நாளைக்கு வர்றேன் தர்ஷ்! அஜய் கூப்பிடுறான்" என்று கூற, முறைத்த தர்ஷினி,
"கண்டிப்பா நாளைக்கு வரனும்!" என்றாள் கட்டளையாய்.
"கண்டிப்பா!" என்ற ஆராத்யாவும் உடனே இறங்கி சென்றுவிட்டாள்.
"நீ யார்கிட்டயும் இவ்வளவு இறங்கி பேச மாட்டியே! நேத்து பார்த்து இன்னைக்கு பழகின மாதிரி தெரியல நீ பேசுறது!" என்றான் அகிலன்.
"ம்ம்! உங்களுக்கு என்ன பா.. விடிஞ்சா நீ பேங்க் ரகு ஆபீஸ்னு போயிடுவான்.. தோ! இவரும் ரெண்டு நாள்ல கிளம்பி போய்டுவாரு.. எனக்குன்னு பிரண்ட்ஸ் சர்க்கிள் வேணும்ல?" என்று தர்ஷினி சொல்லிக் கொண்டு இருக்க, ரகுவும் வந்திருந்தான்.
"என்னை பார்த்தா எல்லாம் பிரண்ட்டா தெரியல போல உங்க தங்கச்சிக்கு!" கல்பனா சொல்லியபடி சப்பாத்தியை எடுத்து வைக்க,
"எவ்வளவு நாள் தான் உங்களோட மட்டும் அரட்டை அடிக்குறது அண்ணி.. இன்னொரு ஆள் வேணும்ல" என்றாள் ரகுவைப் பார்த்து.
"மாமா!" என்று நந்தாவை ரகு முறைப்பாய் பார்க்க,
நந்தா சிரித்தவன், "அதுக்கு ஏன் வெளில ஆள் தேடுற தர்ஷி.. உன் தம்பிக்கு மேரேஜ் பண்ணி வச்சுட்டா கூடவே வந்து இருப்பாங்களே!" என்று தன் பங்கிற்கு ஆரம்பித்து வைத்தான்.
"சுத்தம்!" என தலையில் கைவைத்துவிட்டான் ரகு.
"அதை இவன்கிட்ட கேளுங்க மாப்பிள்ள.. ஒரு வார்த்தை கூட பேச முடியல இவனோட.. இதுல வேற ஒவ்வொருத்தரும் பொண்ணு போட்டோ ஜாதகம்னு தர்றாங்க.. வாங்கி முடியல.. போதா குறைக்கு வெளில போனா ஏன் இன்னும் உங்க சின்ன மகனுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கீங்கனு அத்தனை கேள்வி.. பதில் சொல்லியும் முடியல என்னால.." என்று தன் புலம்பலை ஆரம்பித்தார் மகேஸ்வரி.
"ஏன் ரகு? கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன பிரச்சனை?" கிண்டலாய் சிரித்து நந்தா கேட்க,
"மாமா! எனக்கென்னவோ அவன்கூட சேர்ந்து நீங்களும் நடிக்குற மாதிரி தோணுது.. உங்ககிட்ட தானே கிளோஸ்ஸா இருக்கான்.. நீங்க கேட்டதே இல்லையா?" அகிலன் கேட்க,
"இல்லையே பா.. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? ரகுக்கு என்ன இனிமேல் தான் பொண்ணு வானத்துல இருந்து குதிக்க போகுதா?" என்று நந்தா கூறவும்,
"மாடில இருந்து வேணா குதிக்கலாம் இல்ல டா ரகு!" என்று ரகசியம் பேசி ரகுவை திணற வைத்தாள் தர்ஷினி.
"இதுக்காக தான் நான் வரணும்னு சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருந்திங்களா?" கோபமாய் ரகு.
"கேட்டா கோவம் மட்டும் வந்து ஒட்டிக்குமே!" என்ற மகேஸ்வரி குருமாவை மகனுக்கு வைக்க,
"இப்பவே கல்யாணம் பண்ணி என்னம்மா பண்ண போறான்.. ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ அவனாவது நிம்மதியா இருக்கட்டுமே!" என்ற அகிலனுக்கு,
"அவ்ளோ சலிப்பா போச்சா சார் உங்களுக்கு? வேணும்னா நீங்களும் தான் ஜாலியா இருங்களேன்.. நான் போயிடுறேன்!" என்றாள் கல்பனா.
"அதெல்லாம் பொறாமை கல்பனா.. எங்க, வீட்டுக்கு இன்னொரு மருமகள் வந்து உன்னை டாமினேட் பண்ணிடுவாங்களோனு மச்சான் இப்பவே உங்களுக்கு கொடி பிடிக்குறார்.. அவர் கண்ணை பாருங்க காதல் தெரியல?" என்று நந்தா சொல்லி சிரிக்க,
"காதல் எல்லாம் தெரியல காலரா வந்த மாதிரி தான் தெரியுது.. நீங்களும் அவரோட சேர்ந்து கலாய்க்குறிங்க இல்ல ண்ணே!" என்று கல்பனா பேச, மற்றவர்கள் சிரிக்க என பேச்சுக்கள் மாறி இருக்க, அனைவரும் சாப்பிட்டு முடித்து ஓய்வாய் அமர்ந்திருந்தனர்.
கல்பனாவும் மகேஸ்வரியும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிட்சேனுக்கு சென்றிருக்க,
சிறிது நேரம் பேசிவிட்டு "மார்னிங் பாக்கலாம் மாமா.. தூக்கமா வருது!" என்று எழுந்து சென்றிருந்தான் அகிலனும்.
"சரி நானும் தூங்க போறேன்!" ரகுவும் தப்பிக்க பார்க்க,
"சரி போ! நான் ஆரா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன்!" என்று நிற்க வைத்தாள் தர்ஷினி அவனை.
"அச்சோ தர்ஷி! அவளைப் போட்டு படுத்துற நீ! மாமா! நீங்களே என்னனு கேளுங்க.. நேத்து வந்ததுல இருந்து ஆராகிட்ட வம்பு பண்றா.. இவளால இன்னைக்கு ஆரா அழுதா தெரியுமா?" என்று கூற,
"அடப்பாவி! டேய் நீ இவ்ளோ பேசுவியா?" என்று வாயில் கைவைத்து கேட்டது தர்ஷினி.
தானுமே அதிகமாய் பேசிவிட்டதை உணர்ந்த ரகு, "ப்ச் என்னவோ பண்ணு!" என்று திரும்ப,
"டேய்! நில்லு! ஆரா ஏன் அழுதா? உங்கிட்ட அழுதாளா? என்னால எதுக்கு?" என்று தர்ஷினி நிற்க வைக்க, அவளை முறைத்தவன் காலையில் நடந்ததை கூறினான்.
"ம்ம் கேட்டீங்க இல்ல? இப்ப சொல்லுங்க! நானா அழ வச்சேன்?" என கணவனிடம் தர்ஷினி கேட்க,
"இப்ப நான் என்ன சொல்லணும் உங்களுக்கு?" என்று எழுந்த நந்தா,
"நீங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க இல்ல.. ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்க வேண்டாம்.. ரகு ரொம்ப சீரியஸா இருக்கான் ஆராத்யா விஷயத்துலனு எனக்கு தெரியும்.. சோ வயசுக்கேத்த மாதிரி அடுத்த ஸ்டெப்க்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க!" என்று சொல்ல, ரகு அமைதியாய் நின்றான்.
தான் மூத்தவன் என்ற இடத்தில் நின்று நல்ல வழிகாட்டியாய் தனக்கு தோன்றியதையும் நிஜத்தையும் கூறினான் நந்தா.
"இப்ப நான் ஆராகிட்ட பேசுறது சரியா தப்பா?" என்றாள் தர்ஷினி கணவனின் பேச்சில் குழப்பமாய்.
"தப்பில்ல தர்ஷி! ஆனா நீ பேசுறது அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு கேப் கொண்டு வர கூடாது அவ்வளவு தான்.. ரகுக்கு என்ன வேணுமோ அதை அவன் தான் கேட்கணும்.. கொஞ்சம் கஷ்டப்பட்டா தான் கடைசி வரைக்கும் தன்னோட விருப்பம் என்ன வாழ்க்கை என்னனு அவனுக்கு புரியும்.. சேம் டைம் நீ பிரண்ட்டா பழகுறது உன்னோட விருப்பம் ஆரா விருப்பத்தோட!"
"என்ன ரகு புரியுது தானே?" என்று கேட்க,
"தெளிவா புரியுது.." என்றான் புன்னகைத்து.
"புரிஞ்சா மட்டும் போதாது தம்பி.. அடுத்த வேலை என்னனும் பாக்கணும்.. அவ அழுதாளாம் இவரு பீல் பண்ணி விளக்கவுரை குடுத்தாராம்.. லவ்வை சொல்லு டான்னா அதை மட்டும் செய்ய முடியலை!" என்று ஏகத்திற்கும் பேச,
அவளுக்கு பதில் சொல்ல முடியாதவன் "மாமா!" என நந்தாவை துணைக்கு அழைத்தான்.
"விடு தர்ஷி! நம்ம பேபி வர்ற வரைக்கும் தான் ரகுக்கு டைம்.. சரிப்பட்டு வரலைனா என் பொறுப்புல விட்ரு.." என்று கூற,
"அதுக்கு அக்காவே மேல்! போங்க மாமா!" என்று கூறி சென்றுவிட்டான் ரகு.
"இவன் டெரர் பீஸ்னு நினைச்சுட்டு இருகாங்க எல்லாரும்.. சரியான குழந்தைங்க!" தர்ஷினி கணவனிடம் சொல்ல,
"இருக்கலாம்.. எல்லார்கிட்டயும் அந்த முகத்தை காட்டிட முடியாதே! புடிச்சவங்க.. புரிஞ்சவங்கன்னு எவ்வளவோ இருக்கு!" என்றான் நந்தா.
"சோ ஸ்வீட் நந்து! கிளீயரா சொல்றிங்க!" என்று கணவனை கொஞ்ச,
"ஐஸ் எல்லாம் போதும்.. மார்னிங் நடக்கவே இல்லைனு கேள்விபட்டேன்.. ஹால்ப் அன் ஹவர் நடக்கணும்.. இல்லைனா சரியா தூங்க மாட்ட.. ம்ம் எழுந்துக்கோ!" என்று எழுப்பி அடம் செய்தவளை நடக்க வைத்து தான் உறங்கவே அழைத்து சென்றான்.
காலையில் காலிங் பெல்லை அழுத்திவிட்டு வெளியே ஆராத்யா காத்து நிற்க, கதவை திறந்தது கல்பனா.
"ஹாய்! உள்ள வாங்க!" என்று கல்பனா அழைக்க,
"தர்ஷினி..." என்று கேள்வியாய் இழுத்தாள் ஆராத்யா.
"யாரு கல்பனா?" என்று மகேஸ்வரி வந்தவர்,
"வா டா ம்மா!" என்று வரவேற்று அமர சொல்ல,
"இல்ல.. பரவால்ல ஆண்ட்டி.. ஆபீஸ்க்கு டைம் ஆச்சு.. தர்ஷினிக்காக இது கொண்டு வந்தேன்!" என்றாள் கையில் இருந்த டப்பாவை காட்டி.
"அவ எழுந்துட்டாளா தெரியலையே!" என்று கல்பனா கூறும் நேரம் நந்தா வெளியில் வர,
"தர்ஷினி எழுந்தாச்சா ண்ணா?" என்றாள் கல்பனா.
"எழுந்துட்டாளே! கூப்பிடவா?" என்று கேட்க,
"இது அவங்க பிரண்ட்.. நேத்து பேசிட்டு இருந்தோமே.." என்று கல்பனா கூறவும்,
"ஆராத்யா?" என்று கேள்வியாய் பார்த்தான் நந்தா அவளை.
"ஆமா!" என்று அவள் தலையசைக்க,
"ஓஹ்! ஒரு நிமிஷம் ம்மா!" என்று மீண்டும் அறைக்குள் செல்ல,
"நான் கூட பேரை மறந்துட்டேன்.. நல்ல பேரு! உட்காரு காபி எடுத்துட்டு வர்றேன்!" என்றார் மகேஸ்வரி.
"இல்ல ம்மா.. ஆபிஸ் போகனும்" என்று தயங்கிய ஆராத்யா எங்கே ரகு வந்துவிடுவானோ பார்த்தால் என்ன நினைப்பானோ என சுற்றிலும் பார்க்க,
"ஆபீஸ் தானே? மெதுவா போகலாம்.. உங்க பாஸ்கிட்ட நானே சொல்லிடுறேன் போதுமா?" என்ற மகேஸ்வரி,
"கல்பனா! பேசிட்டு இரு.. வர்றேன்!" என்று கூறி உள்ளே சென்றார்.
தர்ஷினியை நிஜமாய் அதிகமாய் பிடித்திருந்தது ஆராத்யாவிற்கு.. அவள் பேசும் விதமும் முகம் நிறைந்த சிரிப்பும் என ஆராத்யாவை அவளிடம் பேச சொல்ல, நேற்று அழைத்தும் வர முடியாமல் போனதை தவறாய் நினைத்துக் கொள்ள கூடாதே என்று நினைத்து காலையிலேயே தனக்கு தெரிந்ததை சமைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
"காபி குடி டா!" என்று மகேஸ்வரி சொல்லிவிட்டு அவளருகில் அமர,
"ம்மா! டைம் ஆச்சு.. டிபன் எடுத்து வைங்க!" என்று மேலிருந்து நடந்து வந்தவன் பேசிய சத்தத்தில் உள்ளே சென்ற காபி புரையேற திரும்பிப் பார்த்தாள் ஆராத்யா.
மகேஸ்வரிக்கும் கல்பனாவிற்கும் நடுவில் ஆராத்யா அமர்ந்திருக்க, திரும்பி தன்னைப் பார்த்தவளை சுத்தமாய் எதிர்பார்க்காமல் ஒருபடி வழுக்கி இருந்தான் ரகுராம்.
தொடரும்..