• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 14

கால்கள் பின்ன, தயக்கத்தோடு அவன் பின்னே மாடியேறினாள். “டேய் மாப்பிள்ளை... நாட்டில என்ன என்னமோ நடக்குதேடா... உன் கூடவே ஒட்டுப் புல்லா சுத்தறேன்... எனக்குத் தெரியாம எப்படா தனியா போய் டிரஸ் வாங்கின? படா கில்லாடி டா நீ. உனக்கு சீனியர் நான். இன்னும் எல்.கே.ஜி. லெவலே தாண்ட முடியலை. ஆனா நீ டாக்டரேட்டே வாங்கிட்டயேடா...” என ஓரக்கண்ணால் காயூவைப் பார்த்தான்.


காயத்ரி நெகிழ்ந்து போய் விழியகலாது சுனிலைத் தான் பார்த்துக் கொண்டாள்.. அவர் பார்வையில் வேறுபாட்டை உணர்ந்து “என்ன” என்று புருவம் உயர்த்தியவனின் அருகே… மிக அருகே வந்து அமர்ந்தாள்.

சுனிலின் பேச்சு நின்று போனது. அவளின் செய்கை அவனுள் அபாய மணியை ஒலிக்க விட்டது. ‘ஏதோ வில்லங்கம் காத்திருக்கிறது அதுவும் அவளாகவே வாய் திறந்து சொல்லட்டும்’ என்பதாக அவனும் மௌனமாகவே அவளைப் பார்த்தான்..

“மாமா...!. சுனில் மாமா...!”

“ம்ம்....”

“ஒரு சீக்ரெட் சொல்லட்டா....”

“ம்ம்....?!”

“நம்ம மேரேஜை இரண்டு மாதத்துக்குள்ள முடிக்கறதா இன்னிக்கு நம்ம வீட்ல பேசி முடிவெடுத்திட்டாங்க..!”

வியப்பில் வாய் பிளக்க, ‘முதல் லட்டு’ அவன் வாயில் விழுந்தது.!

“என்ன மாமா. இன்னொரு சீக்ரெட்..கூட இருக்கு.”

“........ என்ன இன்னொரு லட்டா...?”

மந்தகாசமாகப் புன்னகைத்து தலையை ஆட்டிய வாஸந்தி , “மேரேஜ் முடிஞ்சதும், இங்க கோயமுத்தூர்லயே தனிக்குடித்தனம் வைக்கப் போறாங்க தெரியுமா”

“ஆஹா... நெஜமாவே ரெண்டாவது லட்டு தான்.. மனம் கனவில் மிதக்க, அதில் இவன் காயூவோடு, கைகோர்த்து தனி வீட்டில் டூயட் பாடினான்.

அதை காயூவின் குரல், இனிமையாகக் கலைத்தது..

“மா... மா... கூப்பிட்டுகிட்டே இருக்கேனில்ல!” சிணுங்கினாள்..

“சொல்லுடா செல்லம்...!”

“இன்னுமொரு சீக்ரெட்...!”

“இத்தனை இனிப்பை அள்ளி அள்ளி விடறியே செல்லம்... சொல்லு... டா..” குரலில் ஆர்வம் கொப்பளித்தது...

“தனிக்குடித்தனம் னு சொன்னதும் தப்பா நினைச்சுகிட்டு ட்ரீமுக்கு போயிட்டீங்களா? அரவிந்த் அண்ணா இனி ஊருக்கு போயிருவாரில்ல, இந்த வீடு காலியாத்தான இருக்கும். அதனால நீங்க இங்க இருந்தே (தனியா..!!) ஆபிஸ் போகப் போறீங்க. நான் கோர்ஸ் முடிக்கற வரை நம்ம வீட்லயிருந்து தினமும் காலேஜ் வரப் போறேன். அத்தை மாமா கண்டிஷனா சொல்லிட்டாங்க. இல்லேன்னா நீங்க என்னை படிக்க விட மாட்டீங்களாம்” அப்பாவியாக விழி விரித்து பேசியவளை கொலை வெறியோடு பார்த்தான்..

“ஏண்டி அவங்களுக்கு இத்தனை நல்ல்ல...ல எண்ணம்.. லட்டு லட்டுன்னு அதில அணுகுண்டை வெச்சு என் வாயில போட்டுட்டயே...! தாங்க முடியலைடி” என்று மார்பின் மீது கை வைத்தான்..

கலகல வென சிரித்த காயூ, அவள் முகவாயைப் பற்றி, நேசம் பொங்க அழுத்தமாக கன்னத்தில் தன் மொத்தக் காதலையும் பதித்து விலகினாள்.

“என்ன மாமா..?! கண்டிப்பா இது நிஜ லட்டு தானே.! ச்சும்மா உங்களை கலாய்ச்சேன்.. இப்ப ஒ.கே தானே..” அவனைப் பார்த்து கண் சிமிட்டியவளையே நம்ப முடியாமல் திகைத்து விழித்தான்..

அரவிந்த், வாஸந்தியை தன் அறைக்குள் கை பிடித்து அழைத்துச் சென்றான்..

“ஹாய் பொண்டாட்டி” என்றதும் நாணத்தில் தலைகுனிந்தவளை உரிமையாக தன்னோடு சேர்த்தணைத்தான்

“என் வசு... மை லவ்” அவள் சங்குக் கழுத்தில் முகம் புதைத்தான்.. அவளும் தன் வசமிழந்தவளாய், அவன் இடையைச் சுற்றி தன் கைகளை படர விட்டாள். அதற்கு மேல் தாள முடியாதவனாக, அவளின் சிவந்த அதரங்களைத் தனதாக்கிக் கொண்டான். கடிகாரத்தின் ஒலி இவர்களின் தவத்தைக் கலைக்க, வாஸந்தி பதறி விலகினாள்.

“வசும்மா... கூல்... எதுக்கு பயப்படற? இப்ப நீ சட்டபூர்வமா என் மனைவி. எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாது. ஆனா உன் கழுத்தில் எல்லோருடைய ஆசிர்வாதத்தோட நான் மாங்கல்யம் அணிவிக்கிற வரை, அம்மா அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கற வரை இரண்டு பேரும் பொறுமையா காத்திருக்கலாம். ன்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு சம்மதம் தானே கண்ணம்மா..” தன் கழுத்தில் கிடந்த செயினைக் கழற்றி அவளுக்கு அணிவித்தான். நெகிழ்ந்து போன வசு அவன் தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டாள்.

அரவிந்த் தான் வாங்கி வைத்த உடைகளை அவளிடம் காண்பித்ததும், வாஸந்தி மலைத்தாள்.

“அரவிந்த்! எதுக்கு இத்தனை டிரஸ். இரண்டு மட்டும் எடுத்திருந்தா போதுமே... எவ்வளவு காஸ்ட்லியா வேற வாங்கியிருக்கீங்க.வீண் செலவு....”

அவள் வாயில் விரல் வைத்து, “ஷ்... எதுவும் பேசக் கூடாது. என் வொய்ஃபுக்கு முதல் முறையா எனக்கு பிடிச்சதை வாங்கியிருக்கேன். நோ ஆர்க்யூமெண்ட்ஸ் ப்ளீஸ். சைஸ் சரியா இருக்கான்னு மட்டும் பாரு”

மிகச் சரியாக வாங்கியிருப்பதைப் பார்த்ததும் அவனை ஏறிட்டுப் பார்க்கவும் கூச்சம் தடுக்க, அவன் மார்பில் குத்தி, அதிலேயே தன் முகம் புதைத்துக் கொண்டாள். அரவிந்த் வாய் விட்டு சிரித்தான். ஏனெனில் உடைகளை அத்தனை கச்சிதமாக தேர்வு செய்திருந்தான்! அவளை தன் கையணைப்பிலேயே வைத்துக் கொண்டு, முகம் மலர தன் பெற்றோரைப் பற்றி மனம் விட்டு பகிர்ந்து கொண்டான்.

“வசு டியர்..! இனி நம்ம மேரேஜை அப்பா கிராண்டா அரேஞ்ச் பண்ணுவாங்க. ரெடியா இரு. அத்தையை வி.ஆர்.எஸ் வாங்கச் சொல்லிட்டு நம்ம கூடவே கூட்டிட்டு போயிடலாம். உனக்கு ஸ்டடீஸ் சென்னையிலேயே கன்டின்யூ ஆகற மாதிரி பார்த்துக்கலாம். என்ன சரியா..? ஒ.கே கண்ணம்மா டைம் ஆச்சு.. அத்தை காத்துகிட்டு இருப்பாங்க.. லேட்டாப் போனா அந்தாளுக்கு சந்தேகம் வரும். நாளை கிளம்பறதுக்குள்ள எந்தப் பிரச்னையும் வரக் கூடாதில்ல.. சரி கிளம்பு...

காலையில சீக்கிரம் வர்றியா? டிபன் இங்கேயே ரெடி பண்ணச் சொல்றேன்..”

“வேண்டாம் அர்வி.. அம்மா அங்க சாப்பிடச் சொல்வாங்க.. எப்பவும் காலேஜ் போகிற மாதிரி கிளம்பி பத்து மணிக்குள்ள வந்திடறேன்..”

“ம்.. சரி.. கீழே போகலாம்.. வா..” தன் அத்தனை காதலையும் குவித்து அவள் நெற்றியில் முத்திரையிட்டான்.

மறுநாள் காலை சொன்னபடியே பத்துமணிக்கு வசு தன் தோழியோடு வந்து சேர்ந்தாள். அன்று பகல் முழுவதும் சுனிலின் காமெடி தர்பாரோடு இனிமையாகக் கழிந்தது. மதியம் திருமண பதிவு சான்றிதழை லேமினேட் செய்து இரண்டு காப்பியை காயூவிடம் கொடுத்தாள்.

“காயூ..! இதை பத்திரமா அத்தை கிட்ட கொடுத்திடு. ஒரிஜினல் என்கிட்டயே இருக்கட்டும். யோகேஷால எதாவது பிரச்னை வந்தா யூஸ்புல்லா இருக்கும். நான் அங்க போனதும் பேசறேன். அம்மாவும் பேசுவாங்க. அத்தை தனியா இருக்காங்க. அதனால அடிக்கடி உங்க அம்மாவை வந்து பார்த்துக்க சொல்லு. வசுவை இதுவரை விட்டுட்டு இருந்திருக்க மாட்டாங்க. அதனால கொஞ்சம் டிப்ரஸ்டா இருப்பாங்க. இவ இல்லேன்னா செக்யூரிட்டி நோட் பண்ணி உடனே யோகேஷீக்கு சொல்லுவான். அதனால கூட பிரச்னை வரலாம்.. ஒரு இரண்டு நாள் சமாளிச்சா நாங்க வந்திடுவோம். சுனிலும் என் கூட வர்றதால தான் கொஞ்சம் கவலையா இருக்கு.மறுநாள் தன் டிரஸ்ஸை வசுவின் உதவியோடு பேக் செய்தான். கிளம்ப ஆயத்தமான போது, செல்போன் அவன் கவனத்தைக் கலைக்க, எடுத்துப் பார்த்து விட்டு வசுவிடம்

“அம்மா தான்.நான் கிளம்பியாச்சான்னு கேட்டாங்க” போனை உயிப்பித்து..

“அம்மா...” என்றவனின் முகம் பலத்த அதிர்ச்சிக்குள்ளானது. செல்போளைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்க,

“அம்மா... என்னாச்சும்மா. அழாதீங்கம்மா. நீங்க பேசறதே எனக்கு புரியலை.. பக்கத்தில டாக்டர் அங்கிள் இருக்காரா. அவரை பேசச் சொல்லுங்க.” பதறினான். வசு வெளிறிப் போய் அவனருகே வந்து நின்றாள். சுனிலும் காயூவும் கூட அவனின் உரத்த குரல் கேட்டு மேலே ஓடி வந்தனர்..

சுனில் அவன் தோளைப் பற்றி, “என்னடா.” என்றதும் உடைந்து போனாள்.

“தெரியலைடா.. அம்மா அழுதுகிட்டே பேசறாங்க ஒண்ணுமே புரியலை. இரு. அங்கிள் பேசறார்.”

அவர் பேசப் பேச... அதைக் காதில் வாங்கியவனின் முகம் இருண்டது.

“என்ன சொல்றீங்க அங்கிள்.? எப்ப..? ஏன்…ஏன்.. என் கிட்ட முன்னமே சொல்லலை...” என்றவனின் கண்களில் முதன் முதலாக கண்ணீரை பார்த்ததும் வசு துடித்துப் போனாள்.. அவனின் நிலை பார்த்து சுனில் போனை வாங்கிப் பேசினான்.

“அங்கிள் நான் சுனில், அரவிந்த் ஃப்ரண்ட். அவனால பேச முடியலை. அப்பாக்கு என்னாச்சு.?”

டாக்டர் பேசுவதைக் கேட்ட சுனிலின் முகமும் கலவரத்தையே காட்டியது. பேசி முடித்ததும்,

“காயூ... ஒரு நிமிஷம் இங்க வா...”

“என்னாச்சு மாமா... ஏன் இந்த பதட்டம். டாக்டர் என்ன சொன்னார்?”

“காயூ... அங்கிளுக்கு இப்ப மூணாவது தடவையா ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. ரொம்ப சிவியர்னு டாக்டர் சொல்றார். கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தானாம். இரண்டு நாள் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியுமாம். அரவிந்தை உடனடியா கிளம்பி வரச் சொல்றார். அம்மா மயக்கமாயிருக்காங்க. அவங்களுக்கும் ட்ரீட்மெண்ட் நடக்குது. உடனே கிளம்பணும்.

இந்த சூழ்நிலையில வாஸந்தியை கூட்டிட்டு போனா சரி வராது. அவன் முதல்ல அப்பாவை போய் பார்க்கட்டும். அரவிந்த் ரொம்ப இடிஞ்சு போயிருக்கான். ஏற்கனவே டிக்கட்ஸ் எடுத்ததால நான் அவன் கூட போறேன். அங்க நிலைமை கொஞ்சம் சரியானதும் நானே வந்து கூட்டிட்டு போறேன். ஒ.கே.வா?

வாசு கிட்ட இதை பக்குவமா எடுத்துச் சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு. ஆண்ட்டி கிட்டயும் நிலைமையை சொல்லிடலாம். எனக்கு ஜாப் ல சேர கால் லெட்டர் வரணும். அதுக்கு அட்லீஸ்ட் இன்னும் ஆறு மாசமாவது ஆகும். இப்ப தானே எக்ஸாம் முடிஞ்சிருக்கு. அது பத்தியெல்லாம் இப்ப யோசிக்கவே வேண்டாம்.. நீ வாஸுவை கூட்டிட்டு கிளம்பு... நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்.சுனில் விரைவாக எல்லாப் பொறுப்பையும் தன் கையில் எடுத்துக் கொண்டான். தன் தந்தையிடம் சொல்லி கையில் இருக்கும்படி கொஞ்சம் அதிகமாக பணம் ஏற்பாடு செய்து கொண்டான். கணேஷீக்கு சில உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, கிளம்பத் தயாரானான்.

பிரம்மை பிடித்துப் போய் சிலையென இருந்தவனின் அருகில் சென்ற வாஸந்தி,

“அர்வி... இங்க பாருங்க.. மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது.”

“ம்...” என்றானே தவிர எதுவுமே அவன் மூளையில் பதியவில்லை..

“அர்வி... என்னைப் பாருடா... நீயே இப்படி இருந்தா எப்படி? அத்தைக்கு ஆறுதலா நீ தானே இருக்கணும். ப்ளீஸ்... ரிலாக்ஸ்...”

அவள் இரு கைகளையும் இறுகப் பற்றிய அரவிந்த். “வசு... நேத்து நீ போனதும் நைட் அப்பா கிட்ட ரொம்ப நேரம் பேசினேன் தெரியுமா? சந்தோஷமா இருந்தார்.. நான் அங்க வர்றேன்னு சொன்னதும், ‘சீக்கிரமா வந்து பிசினஸ் பொறுப்பை ஏத்துக்கப்பா.’ ன்னு சொன்னார்.. அ..வருக்..கு இப்ப கான்ஷியசே இல்லையாம் ரொம்ப சிவியரா அட்டாக் வந்திருக்குன்னு அங்கிள் சொன்னார். இது மூணாவது அட்டாக். பயமா இருக்கு வசு.. அப்பாவுக்கு சரியாயிடுமில்ல. அம்மா தேம்பி தேம்பி அழறாங்க. அவங்களால பேசவே முடியலை. வசு. தனியா ரொம்ப பயந்து போயிருப்பாங்க. நா..ன் நா..ன் உடனே கிளம்பணும்... ஆனா...”

“எனக்கு புரியுது.நான் வரலை அர்வி. நீங்க மொதல்ல அங்க போய் அவங்களுக்கு ஹெல்ப்பா இருங்க. சுனில் அண்ணாவும் வரட்டும். அங்கிள் சரியானதும் நான் காயூவோட கிளம்பி வந்திடறேன். அம்மாவும் வருவாங்க. முதல்ல அங்கிள் குணமாகட்டும். நீங்க பத்திரமா பார்த்துக்கங்க. நானும் காயூவும் ஏர்போர்ட் வந்திட்டு அப்படியே வீட்டுக்கு போயிடறோம். கணேஷ் அண்ணாவுக்கு கார் ஓட்டத் தெரியும்னு சொல்லியிருக்கீங்களே.” கனிவாகப் பேசியவளை கண் கலங்க பார்த்தவன்,

“வசும்மா.! அப்பாவுக்கு சரியாயிடுமில்ல!” ஏக்கத்துடன் குழந்தையாக வினவியவனின் கரம் பற்றி அதில் இதழ் பதித்தாள்.

“கண்டிப்பா... ஆல் இஸ் வெல். ஃபிளைட்டுக்கு டைம் ஆச்சு கிளம்புங்க.. அவனை முகம் கழுவச் சொல்லி, தானே தலைவாரி விட்டாள்.

அவளை இழுத்து வயிற்றில் முகம் புதைத்தவனின் மன வேதனையை ஆற்றும் வழி தெரியாமல், அவள் தலையைக் கோதி,

“என் அர்வி ரொம்ப தைரியமானவர் ஆச்சே..! ப்ளீஸ் எழுந்திருங்க.. போகலாம்...” அவன் முகம் பற்றி மென்மையாக தன் இதழ்களை நெற்றியில் பதித்து.. அவனை கிளப்பினாள்..

அவளுக்கும் தெரியவில்லை இன்று தான் அவனைத் தான் கடைசியாகப் பார்க்கும் தருணம் என்று..! இருவரையும் ஏர்போர்ட்டில் வழியனுப்பிவிட்டு வெளியே வந்த காயூ, வசு இருவரின் மனமும் கனத்துக் கிடந்தது.. பிளைட்டில் ஏறி அமர்ந்த அரவிந்தின் மனதில் முழுக்க முழுக்க பெற்றோரைப் பற்றிய எண்ணமே நிறைந்திருந்தது.

நல்லதொரு எதிர்காலம் தங்களுக்கு வசப்படும் என்ற நம்பிக்கையோடு அவனை வாஸந்தி வழியனுப்பினாள். ஆனால் விதி அவளைப் பார்த்து சிரித்து, எமன் வடிவில் வந்து அவள் நம்பிக்கையை சிதறடித்தது, நிரந்தரமாக இருவரையும் பிரிக்க சூழ்ச்சி செய்தது..

-13-

கௌசல்யாவை உறங்கச் செய்து விட்டு, தன் அறையில் வந்து படுத்த அரவிந்த் கடந்த கால எண்ண அலைகளால் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டான். காயத்ரியோடு வாஸந்தியை வழியனுப்பி விட்டு சென்னை சென்ற அரவிந்த் அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழத்து, சக பயணியாக டிரெய்னில் தான் அவளைச் சந்திக்க நேர்ந்தது.

இடையில் அவன் பட்ட சொல்லொணாத் துயரங்கள், ஓய்வில்லாத வேலைப் பளு, சிக்கலான சூழ்நிலைகள், அதனை சவாலான முறையில் வெற்றி கண்டது... என அடுக்கடுக்காய் வேதனைகளை மட்டுமே அனுபவித்து வந்தான்..

அதன் பிறகு முழுதான ஐந்து வருடங்களுக்குப் பிறகு தன்னவளைக் கண்டதும் நிலைதடுமாறித் தான் போனான். அவள் எதற்காகப் பிரிந்து சென்றாள் இன்று வரை அவள் நிலை என்ன என்று எதையும் சிந்திக்க விடாமல் ‘என் வசு வந்துவிட்டாள்’ என மனம் கும்மாளமிட்டது... அதன் பிறகும் அவள் தன்னை இன்று வரை உதாசீனப்படுத்திய பிறகும் கூட, அவன் மனம் முழுக்க நிரம்பியிருந்த காதலும்... அவள் மீது வைத்த நேசமும். எதையும் பொருட்படுத்தவில்லை.

மெல்ல மெல்ல இது நாள் வரை தான் சந்தித்த துயரங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டு, இரும்பு குண்டாய் கனத்த இதயத்தை... அவளிடம் இறக்கி வைக்க வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தான்.. ஐந்து வருடங்களுக்கு முன்பு செய்த அதே தவறை மறுபடியும் செய்து, அதே போல அவசர முடிவெடுத்து, இரண்டாவது முறையாகவும்...என்ன…. முறைப்படி தாலி கட்டிய மனைவியாக அவனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அந்த நினைவுகள் பலமாக அவனைத் தாக்க உள்ளத்தோடு உடலும் கொதிக்கத் துவங்க தன்னையறியாமல் அரற்றினான். “வசு ... என்னை நீ புரிந்துகொள்ளவே இல்லையா? ஒரு சதவீத நம்பிக்கைகூடவா என் மேலே வரவில்லை. அது போலவா நான் நடந்துகொண்டேன். அம்மா என்னை மன்னிச்சுடுங்க. நான் அவளை மறுபடி சந்தித்தே இருக்கக் கூடாது...” காய்ச்சலால் உடலில் அனல் பறக்க .... பிதற்றிக்கொண்டே இருக்க , மெ...ல மெல்..ல மயக்கம் அவனைத் தழுவியது.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️
அர்வி க்கு தெரியாமலே ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் வாஸந்தி பார்க்க வந்திருக்கனும் அதை அறியாத அர்வி முகம் பார்க்காமல் வெளிய போக சொல்லிருப்பான் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top