• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 31

எண்டா பேசாம இருக்க. என்னோட ஒரே ஃப்ரண்ட் நீதான். உன்னை விட்டா எனக்கு யாரிருக்கா. ஷம்முவையும் கூட்டிடு வந்திரு. பொண்ணை பத்தி எந்த விபரமும் எனக்கு தெரியாது. நாளைக்கு நீங்களே அம்மாகிட்டாகேட்டுக்கங்க.இந்த முறையாவது பொண்ணு பார்க்கறதிலிருந்து அம்மா இஷ்டப்படி நடக்கட்டும்.வந்து சேரு.” நீண்ட சொற்பொழிவை ஆற்றி முடித்தான்…..!!!

செவிகள் உள் வாங்கியவற்றை கிரஹிக்க முடியாமல், சுனிலின் மனது ஸ்தம்பித்தது. வசு….வசு…. என்று ஜெபம் செய்த நண்பன் அந்தர் பல்ட்டி அடித்ததை எண்ணி ஆவேசமுற்று, “அப்ப என் தங்கை வாழ்க்கை?”

“என்னடா தங்கை…! யாருடா அவ என்ன உன் கூடப் பிறந்தவளா? அதை விடு. அவ என்னைத்தான் நம்பல. ஆனா உன்னை…. காயூவின் நட்பை…. மதிச்சாளா? இல்லையே. உங்கிட்ட கூட சொல்லாமதானே ஊரை விட்டு ஓடிப்போனா. திரும்ப வந்ததுமாவது உன்னை கான்டாக்ட் பண்ணினாளா? இல்லையே…அவளுக்காக இன்னும் நீ உருகற. எனக்கு வெறுத்துப் போச்சுடா. போதும் அவ பேச்சு. இன்னேரம் குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருப்பா. சரி…காலையில சீக்கிரம் வந்து சேரு. டிபன் இங்கதான். சீக்கிரம் கிளம்பணும்ன்னு அம்மா சொன்னாங்க. பொண்ணு வீடு வண்டலூர்ல…”

கோபத்தில் சத்தமாகவே, “அதுக்கு பதிலா வண்டலூர் ஜூவில வாலோட நிறைய சுத்திக்கிட்டு இருக்கும். அதில ஒண்ணை கட்டிக்க. சந்தோஷமா இருப்ப.”முணுமுணுத்தான். அது மொத்தமும் அரவிந்தின் காதுகளில் அட்சரம் பிசகாமல் விழ, சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான்.

“ஓ.கே டா. சீக்கிரம் வந்து சேரு. குட் நைட்.” அழைப்பைத் துண்டித்தான்.

’குட் நைட்டா.. பாவி….இடியைத் தூக்கி தலையில் போட்டுட்டு ஜாலியா நீ தூங்கிடுவ. ஆனா நான்…?’தருமி போல புலம்பிக்கொண்டே காயூவை எழுப்பச் சென்றான். அப்போது அதிகாலை மணி மூன்று! கண்விழிக்காமலேயே அவன் காதைத் திருகி, “என்ன்ன மாமா! நடு ராத்திரியில எழுப்பறீங்க. நேத்து எனக்கு ஹஸ்பிடல்ல மூணு சிசேரியன் கேஸ் தெரியுமா? ரொம்ப டயர்டா இருக்கு. நைட்ல என்னை தூங்கவே விடமாட்டேங்கறீங்க….! போங்க மாமா உங்களுக்கு இப்பதான் மூட்…..” அவள் வில்லங்கமாக பேச ஆரம்பிக்குமுன், அவள் வாயைப் பொத்தி,

“அம்மா பரதேவதை! எனக்கு எந்த மூடும் வரலை. வந்த தூக்கத்தையும் ஒரு படுபாவி விரட்டிட்டான். ஷம்மு எழுந்து ஸ்பீக்கரை ஆன் பண்றதுக்குள்ள வெளிய வா. உன் அண்ணாத்தையைப் பத்தி ஒரு பகீர் தகவலை சொல்லத்தான் கூப்பிடறேன்! வேற எந்த கச முசாவும் இல்லை. அரவிந்தின் விஷயம் என்றதும் தூக்கம் கலைய எழுந்து வந்தாள். ஆடை குலைந்து, கேசம் காற்றில் பறக்க அரைத் தூக்கத்தில் நடந்து வந்தவளை சிச்சுவேஷனையும் மீறி ரசிக்கத்தான் செய்தான். ஆனாலும் நிலைமையின் தீவிரம் புரிந்து தன்னை அடக்கிக் கொண்டான்.

அவளைத் தன்னருகே அமர வைத்து அரவிந்தின் வாயிலாக தான் கேட்ட அனைத்தையும் அவளிடம் கொட்டினான். கண்ணீர் வராத குறை சுனிலுக்கு! அதே கலக்கம் காயூவையும் சூழ்ந்தது.

“இப்ப என்ன செய்யறது மாமா?”

“ஷங்கர் கிட்ட பேசலான்னு போன் பண்னிணா…ஸ்விட்ச் ஆஃப்! மார்னிங் ஒன்பது மணிக்கு பொண்ணு பாக்க வரச் சொல்றான். வண்டலூர்ல அவனுக்கேத்த குரங்கை குரங்கை தேடிக்கண்டு பிடிக்க! நேர்ல சிக்கினா கைமா தான்! நாளைக்கு கிளம்பறதுக்குள்ள போய் அம்மாகிட்ட உண்மைய சொல்லிடலாம்.”

“அரவிந்த் அண்ணா என்ன சொல்வாரோன்னு பயமா இருக்கு சுனில். பாவம் வாஸூ… துடிச்சு போயிடுவா.”

ஆமாம் காயூ.புத்தி போகுது பாரு அவனுக்கு! வேலூர் கிளம்பறப்பவே சொல்லதான் நினைச்சேன். விஷயம் தெரிஞ்சா அங்க போறதையே தவிர்த்திடுவாளோன்னு தான் சொல்லாம விட்டேன். ஆனா ஷங்கர் கிட்ட அரவிந்த் பத்தி சொல்லாம விட்டதுதான் தப்பு. அரவிந்த் தான் ஹீரோன்னு அவர் கிட்ட சொல்லாம விட்டது தப்பா போச்சு. சரி விடு. காலையிலே ஏழு மணிக்குள்ள அங்க போகணும்.” சுனிலின் மீசை அவள் காதுகளை உரச, காயூ செல்லம்…! மணி நாலாச்சு. இப்ப தூங்கினா எழுந்துக்க முடியாது. அதனால…..”அவள் தோள்களை பற்றி தன்புறம் திருப்பினான்.

அவனை முரைத்த காயூ “அதனால…ம்ம்ம்…மூச்…. போங்க அந்தப்பக்கம்” பிடித்து தள்ளினாள்.ஆவேசம் வந்தவனாக “எண்டி என்னை தள்ளி விடற…மிட் நைட்ல இருந்து பேசிப் பேசி தொண்டை காஞ்சு போய் கிடக்கு. சூடா ஒரு காபி குடுக்கறயான்னு தான கேக்க வந்தேன். தலை வலி வேற மண்டைய பிளக்குது. சரி போய் தூங்கு. பிரஷ் பண்ணிட்டு நானே போட்டு குடிக்கறேன். நேரண்டா சுனில் உனக்கு.” எழுந்து செல்லப் போனவனைப் பார்த்து பரிதாபப் பட்டு காயூ தன் அருகே இழுத்தாள். “சாரி மாமா!” உணர்ந்து கெஞ்சியவளிடம் தன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொண்டான் அந்தக் கள்ளன்!!

உறங்கும் ஷர்மிதாவை அள்ளிக்கொண்டு அரக்கப் பரக்க, ஏழரை மணிக்கு அரவிந்தன் வீட்டிற்குள் நுழைந்த போது, கௌசல்யா நெற்றியில் திருநீறு துலங்க அப்போதுதான் பூஜையறையிலிருந்து வெளியே வந்தார். அவரின் குரல் கேட்டு விழித்த ஷர்மிதா ... அவரைக் கண்டு,“பாட்டி...” என்று அவரைக் கட்டிக்கொண்டாள். கையில் பூஜை மணியோடு அதே பூஜை அறையிலிருந்து வெளியே வந்த குட்டி உருவத்தைப் பார்த்ததும் சுனில், காயூ இருவரின் விழிகளும் பிதுங்கின. குளித்துவிட்டு பஞ்சகச்சம் கட்டி, நெற்றி நிறைய பட்டையாக திருநீறு அணிந்து ஓடிவந்தது நம் குட்டி இளவரசன் கௌசிக்கேதான்! ஷர்மிதா சுனிலைப் பார்த்து பாட்டியிடமிருந்து நழுவி, ஓடிச்சென்று கௌசிக்கைத் தூக்கிக்கொண்டாள். செல்லக்குட்டியோ ... “ஐ... ஷம்முக்கா என்று கூவ, சுனிலின் மொத்தக் குட்டும் வெளிப்பட்டது. கௌசல்யா திகைத்துப்போய் சுனிலைப் பார்க்க அவன் முகத்தில் டன் டன்னாக அசடு வழிந்தது!!”

ஏழு மணியிலிருந்தே இதற்காக காத்திருந்த அரவிந்த் சுனிலின் பின்னே நின்று, “என்னடா பொண்ணு பார்க்க ரெடியா? முழுப்பூசணிக்காயையும் ஒரு பருக்கையில் மறைக்கப் பார்த்தியேடா.” என்று நகைத்தான். விழி விரிந்து நின்றவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்....

“தேங்க்ஸ் சுனில் ...தேங்க் யூ சோ மச்.... நான் இன்றைக்கு சந்தோஷமாக இருக்கிறதுக்கு அஸ்திவாரம் போட்டதே நீதாண்டா... நேத்து நைட் திடீர்னு உன்கிட்ட ஜாலியா விளையாடிப்பார்க்கணும் னு ஆசை... உன்னைச் சீண்டலான்னு தான் அப்படி பேசினேன். உன்கூடப் பழகிபழகி எனக்கும் கூட ஸ்பான்டேனியசா ... ரீல் சுத்த வந்திருச்சு பாரேன். கதை…வசனம்..டைரக்‌ஷன் எல்லாம் ஐயாதான் எப்பூடி..! ” கண்களில் நீர் வர மனம் விட்டு சிரித்தவனைப் பார்த்து சுனில் நெகிழ்ந்து போனான்.. எட்டு வருடங்களுக்கு முன்பிருந்த அவன் உயிர் நண்பன் அரவிந்தாகவே அவன் கண்ணுக்குத் தெரிந்தான்.

“நான் நண்பேண்டா ...” என்று அவனை கட்டியணைத்த சுனில், ஹீரோயின் எங்கேடா காணோம்...? அரவிந்தின் காதில் கிசுகிசுத்தான்.

உடனே முகம் கடினமுற, “அதை விடு ... உனக்கு ஸ்பெஷல் காபி ரெடி. வா போகலாம்.” என்று இழுத்துச் சென்றான்..அதற்குள் சங்கரும் நிவியும் கூட ரெடியாகி கீழே வர, சுனிலைக் கண்டதும் புன்னகைத்து அரட்டையில் சங்கமித்தனர். எட்டு மணிக்கு மேலாகியும் வாஸந்தி கீழே வராததைக் கண்டு அரவிந்திடம் வினவினார். ...

அவர் கண்களைத் தவிர்த்து, “நைட் தூங்க ரொம்ப லேட். அதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன். வந்துடுவா.” அந்தப் பதிலில் அனைவரின் மனமும் குளிர்ந்தது. சுனிலைத் தவிர.

அவனுக்குத் தான் தெரியுமே... மூன்று மணிவரை அரவிந்தோடு தானே பேசிக்கொண்டிருந்தான். ஆராய்ச்சிப் பார்வையை அவன் மேல் செலுத்தி காயூவிடம் ஏதோ சொல்ல விழைந்தபோது சப்ஜெக்டின் நாயகியே மங்களகரமாக இறங்கி வந்துகொண்டிருந்தாள். யாரும் பார்க்கா வண்ணம் ஒரு எச்சரிக்கைப் பார்வையை அவள் மேல் செலுத்தி விட்டு பேச்சைத் தொடர்ந்தான் அரவிந்த்.

“சுனில் அண்ணா... காயூ ... வாங்க..வாங்க. எப்ப வந்தீங்க.சாரி நான் எழுந்துக்க லேட் ஆயிடுச்சு... நைட் தூங்கும்போது ஏறக்குறைய விடிஞ்சே போச்சு.அதான். எல்லோரும் காபி குடிச்சாச்சா? இதோ கொண்டு வரேன்.”

“வேண்டாம். இன்னும் நீதான் குடிக்கலை.." அரவிந்தை பார்த்து புன்னகைத்த காயத்ரி, “அண்ணா நீ வந்திருக்கிறதா நைட் போன் பண்ணிட்டார். அதான் எழுந்ததும் ஓடி வந்துட்டோம். ஷர்மி இன்னும் குளிக்கக்கூட இல்லை”

நிவியும் அவர்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, அந்தப் பெரிய டைனிங் டேபிளில் பேசிக்கொண்டே டிபனை எடுத்து வைத்தனர். வீடே கலகலவென களை கட்டிப் போனது. ஷர்மிதாவும் கௌசிக்கும் கௌசல்யாவின் கண்காணிப்பின் கீழே தனி உலகில் சஞ்சரித்தனர்.

டிபன் வேலை முடிந்ததும் அரவிந்த், “சங்கர் வாங்க. நாம கொஞ்சம் வெளியே போகணும் ... லஞ்சுக்குள்ள வந்திடலாம். சுனில் நீயும் வாடா...”

சங்கர் உரிமையாக “அரவிந்த் .. நீங்க என்னை மட்டும் மரியாதையா கூப்பிட்டு பேசறது., எனக்கு பிடிக்கலை ... வேலூர்ல உங்களை என் பாஸா மட்டும்தான் பார்த்தேன். ஆனா இங்கு வந்து அம்மாகூட பேசினபிறகு ... எனக்கு சுனில் மாதிரி உங்களோட நெருக்கமா பழகணும் னு ஆசை வந்திடுச்சு. இனி சுனில் கிட்ட எப்படி பழகுறீங்களோ. அதே மாதிரி என்கூடயும் பேசலாம். நானும் நீங்க பர்மிஷன் கொடுத்தா வா போன்னு கூப்பிடுவேன்...”

“டன்... வாடா எதாவது ஜூஸ் குடிக்கலாம்” சந்தோஷமாக ஷங்கரின் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றான்.

அரவிந்த், வேலூர் போலவே சென்னையிலும் மிகப் பிரமாண்டமான மருத்துவமனையை கட்டி முடிக்கும் தருவாயில் இருந்தான். அங்கு தான் கூட்டிச் சென்றான். வந்ததிலிருந்தே அரவிந்தைக் கவனித்துக்கொண்டிருந்த சுனில்,

“ஏண்டா வாஸு இங்க வரும்போது உனக்கு விளக்கெண்ணெய் ஏதாவது குடுத்தாளா..? மூஞ்சியே சரியில்லை. என்னாச்சு..? ”

“வாஸுகிட்ட என்னைப்பத்தி என்னடா சொன்ன..? நீ போய் வாஸுவைப் பார்த்துட்டு வந்து ஆறு மாசமாகுது. மூச்சுகூட விடலை.”குற்றம் சாட்டினான்.

“மூச்செல்லாம் நல்லா விட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஹீரோ சார்கிட்ட விஷயத்தை சொல்லியிருந்தா, இந்த ட்ரிப்பே கேன்சல் ஆகியிருக்கும் .. சரிதான .. ஷர்மி ... கௌசிக் கிட்ட ரொம்ப ஃப்ரண்ட் ஆயிட்டா பார்த்தியா?”

“நீ என்னைப்பத்தி எல்லா விஷயமும் சொல்லிட்ட... அதான் அவ நான் கூப்பிட்டதும் கிளம்பியிருக்கா. அவளுக்கு தானா என்மேல நம்பிக்கை வரலை... நான் உன்கிட்ட இதை எதிர் பார்க்கலை. போடா...”

“பின்ன ....! இப்படியே கதையை சோக கீதமா ஓட்டச் சொல்றியா..? படிக்கிறவங்களுக்கு போரடிக்கும்டா. கதையும் முடிய வேண்டாமா!!நான் இல்லாட்டி கதையில வாஸு கூட நீ சேர சான்சே இல்லை அரவிந்த். கதையே முடியப் போகுதில்ல!” கண்சிமிட்டிய சுனிலைப் பார்த்து தன் வெண் பற்கள் மின்ன அரவிந்த் வாய்விட்டு சிரித்தான். சங்கரும் அவனோடு இணைய சூழ்நிலையே மாறிப்போனது.

சுனில் அவன் காதருகே குனிந்து, “என்னடா...! உங்களுக்குள்ள இன்னும் சரியாகலை போல இருக்கு. பட்சிசொல்லுது. நீ இன்னும் கட்டை பிரமச்சாரியா தான் இருக்க போலிருக்கு.” அரவிந்த் முகம் சிவக்க, அவன் முதுகில் ஒரு போடு போட்டான்.

“போடா...! அவளுக்கு தானாகவே என் மேல நம்பிக்கை வரணும்ன்னு நினைச்சேன் சுனில்... அவ மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். அதைப் புரிஞ்சிக்காம விலகிப் போனா எத்தனை வலிக்கும் ..னு அவளுக்கும் புரியணும். அதுதாண்டா அவகிட்ட கோபமா இருக்கிற மாதிரி நடிக்கறேன். இல்லேன்னா வேற ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில சந்தேகப்பட்டு மறுபடி வீட்டை விட்டு கிளம்பிடுவாளோன்னு பயமா இருக்குடா.இந்த முறை என் மேல் முழு நம்பிக்கை வந்த பிறகு தான் எல்லாமே.... ” என்றவனின் குரலில் உண்மையான வருத்தம்.

“ச்சேச்சே... இனிமே இப்படி பேசாதடா ... அவ இப்ப வைரம்... அவளோட குணமே மாறிடுச்சு ...”உன்னைப்பத்தி சொல்றதுக்கு முன்பே அவ என்கிட்ட கேட்டா... ’அண்ணா அவரைப் பாத்தீங்களா? எப்படி இருக்கார்..? அம்மா எப்படி இருக்காங்கன்னு..’ “பாவம்..டா அவ. சங்கர் இருந்ததால சமாளிச்சா ... இல்லேன்னா தனியா தானே...”

“சும்மா இரு சுனில் ... தனியா போய் கஷ்டப்படுன்னு நானா துரத்திவிட்டேன்? இது பத்தி நிறைய பேசியாச்சு. அவ என்னை நம்பலைங்கற வருத்தம், நான் சாகிற வரை இருக்கும். நான் மட்டும் ஹேப்பியாகவா இருந்தேன். உன்கிட்ட கூட பேசாம வாழ்க்கை வெறுத்துப்போய் தானடா அத்தனை வேதனையையும் வலியையும் நான் மட்டும் தனியா அனுபவிச்சேன். நான் நல்லா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கி எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா...?

சங்கர், ”போதும் அரவிந்த் .. இப்படியே பேசிகிட்டு இருந்தா வருத்தம்தான் மிஞ்சும். இரண்டு பேருமே சந்தோஷமா இருக்க நினைச்சா பாஸ்டையே மறந்துடுங்க. ப்ளீஸ்.. சரி இது யாரோட ஹாஸ்பிட்டல் ..? ரொம்ப ஹை - ஃபையா இருக்கு. ஆர்வம் மேலிட கேட்டதும் பேச்சு திசை திரும்பியது.

“உள்ளே வா ... முழுவதுமாக பார்த்துட்டு அப்புறம் பேசலாம்.”

“எக்ஸலெண்ட் ... எத்தனை அட்வான்ஸ்ட் மெஷின்ஸ், ஆபரேஷன் தியேட்டர், ... வாவ்”... கிரேட்.. எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த..?”

அவனைப்பார்த்து முறுவலித்த அரவிந்த் ‘வா’ என்று “சீஃப் டாக்டர் ”என்று குறிப்பிட்ட அறைக்குள் அழைத்துச் சென்றான். அங்கிருந்த சுழல் நாற்காலியில் அவனை கைபிடித்து அமரச் செய்ததும் சங்கர் அதிர்ச்சியில் திகைத்து விழித்தான்.
தொடரும்...
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
278
So nice epi..
2 perum ippadi muttittu iruntha ennathaan pandrathu. vasu pavam than :)
 

Sujatha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 20, 2022
Messages
43
Very nice update
 
Top