• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
சுற்றி இருக்கும் அனைவரும், தன்னையும், உபேந்திரனையும் கண்டு சிரித்துப் பேசிக்கொள்வதைக் கண்ட மிர்லா இது இன்பாவின் வேலை என்று அறிந்து கொண்டாள். இருந்தும் இதற்கு இந்தர் என்ன விளக்கம் சொல்லப் போகிறான் என்று அவனது வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.

"இந்தர் ப்ரோ... செட் ஆகிடுச்சா?" என்று ஒருவன் கேட்க,

"டேய் அவரு ரோமியோ டா... அவருக்கு மடங்காம போகுமா!!! வந்த முதல் நாளே ட்ரை பண்ணினவர் ஆச்சே!!!. கங்கிராட்ஸ் ப்ரோ" என்று மற்றொருவன் கூறினான்.

இருவரும் கபடமற்ற நல்ல மனதோடு தான் கூறினர். இந்தர் அனைவரிடமும் மேனேஜர் என்ற திமிர் இல்லாமல் இயல்பாகப் பழகுவதால் பணியையும் தாண்டி சகோதரன் என்ற உணர்வை அனைவர் மனதிலும் விதைத்திருந்தான். அதுவே அவர்கள் மனதில் பட்டதை சட்டென உரைக்கக் காரணமாகியது. மற்றொரு பெண் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து கைதட்டிட, அதனை அடுத்து சிலர் விசிலடிக்க, அப்போது வரையும் மிர்லா அமைதியாகத் தான் நின்றிருந்தாள்.

ஆனால் இந்தர், "டேய் அடங்குங்கடா... நேரங்கெட்ட நேரத்துல வம்பு பண்ணிகிட்டு" என்று.... சற்று குரலை உயர்த்தினால் தான் மற்றவர்கள் அமைதியாவார்கள் என்று நினைத்து சத்தமிட,

அவன் எதிர்பார்த்தது போலவே மற்றவர்கள் அமைதியாகிவிட, மிர்லா அவன் காலரைப் பிடித்து இழுத்து,

"ஏன்டா? உன்னை என்னோட சேத்துவெச்சி பேசினாதான் என்ன தப்பு.. பக்கத்துல வந்தா தப்பா நெனப்பாங்க தள்ளி நில்லுனு சொல்றே... சுரேஷ் உன்னை விஷ் பண்ண தானே செய்தான்... அதுக்கு அவனை அடக்கி வைக்கிற... ஏன் டா?... ஏன்?... நான் உன் பொண்டாட்டி தானே... என்னே தப்பா நெனச்சா அவ என் பொண்டாட்டி என் கையை அப்படித் தான் பிடிப்பானு உனக்கு சொல்லத் தெரியாதா?" என்று கோபமாக அவனை அடிப்பது போல் இரண்டு தோள்பட்டையையும் மாற்றி மாற்றி தட்டி அவனை பின்னால் தள்ளிக் கொண்டே செல்ல... அங்கே ஒரு சிலரின் முகத்தில் இருந்த சந்தோஷம் மறைந்து அமைதியடைந்தனர்.

மிர்லாவின் செய்கையில் ஒரு பெண் மட்டும் முன்னே வந்து, "மிரு... நாங்க எல்லாரையும் கிண்டல் பண்ற மாதிரி தான் பண்ணினோம்... உங்களுக்குள்ள ஏதோ ட்ராக் இருக்குனு தெரியும்... ஆனால் இவ்ளோ சீரியசா இருக்கும்னு நெனைக்கல... ஃபீல் ஃப்ரீ மா..."

"எது டீ கிண்டல்? என் புருஷனை என் கூட சேர்த்து வெச்சு சுத்தி நின்னு நீங்க கிண்டல் பண்ணி பேசுவிங்க... இவன் எனக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமே இல்லேனு சொல்லுவான்... அது மாதிரி நடந்துக்கவும் செய்வான்... இது எல்லாத்துக்கும் நான் எதுவும் ரியாக்ட் பண்ணாம ஜாலியா எடுத்துக்கனுமோ!!!" என்று அந்த பெண்ணிடமும் கத்தினாள்.

"ஓகே... ஓகே... ரிலாக்ஸ் மிரு... நாங்க இனிமே உன்னையும், இந்தரையும் கிண்டல் பண்ணலே.." என்று சமாதானம் செய்திட, மிர்லா இந்தரை முறைத்துக் கொண்டு நின்றாள்.

தாரணிக்கோ கணவன்-மனைவி என்று நினைத்துக் கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் நெருக்கம் வந்துவிட்டதா!!! என்று யோசித்தாள். சொல்லப் போனால் சுற்றியிருந்த அனைவரும் அப்படித் தான் நினைத்தனர்...

தாரா மிருவின் அருகே வந்து, "சரி விடு... இப்போ மத்தவங்க முன்னாடி சண்டை போட வேண்டாம்... வா நாம போகலாம்..." என்று அவளை கைபிடித்து இழுக்க, மிர்லாவிற்கோ இன்னும் அசையாமல் நிற்கும் இந்தரின் மேல் கோபம் அதிகமாகியது.

தாராவுடன் இணைந்து நான்கைந்து எட்டுகள் எடுத்து வைத்த மிர்லா, அவளின் கையை உதறிவிட்டு இந்தரின் அருகே சென்றவள், அவன் சட்டையைப் பிடித்து

"இப்பவும் நான் தான் உன் பொண்டாட்டினு சொல்லமாட்டேல!!! என்னைக்காவது நீ என்னைத் தேடி வருவனு நெனச்சு, நீ கட்டின தாலியை கழுத்துல சொமந்துட்டு இருக்குற நான் முட்டாள் தான்" என்று கூறி இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த திருமாங்கல்யத்தை அவன் முன்னே நீட்டியவள்,

"கட்டினவனே அதை வெளிய சொல்ல விரும்பாத போது இனி இது எனக்குத் தேவையில்லை" என்று கூறியபடி அதனை கழட்ட முயற்சிக்க, அவள் கையைப் பிடித்து தடுத்து அவளை இறுக்கமாக அணைத்திருந்தான் இந்தர்.

"விடு என்னை... தள்ளிப் போ..." என்று கோபத்தில் அவன் முதுகில் குத்திய படி கத்திக் கொண்டிருந்தாள் மிர்லா...

தாராவோடு சேர்த்து அனைவருக்குமே பல மடங்கு அதிர்ச்சியாக இருந்தது.

"சாரி... சாரி ம்மா... ஐ ம் சோ சாரி..." என்று அவளின் ஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு வேண்டினான் அவள் கணவன்.

அப்போது மிர்லாவை அழைக்க வந்திருந்த கபியும் இதனைக் கண்டிட, தாராவின் அருகே வந்து நின்று,

"ஏய்... இது என்ன ஸ்டுப்பிட் மாதிரி இத்தனை பேர் முன்னாடி அவன் தான் அறிவில்லாம கட்டிப்பிடிச்சு நிக்கிறான்னா நீங்க எல்லாம் ஏதோ ஷோ பாக்குற மாதிரி பாத்துட்டு நிக்கிறிங்க!!!" என்று கோபமாக கத்தினான்.

"கபி.... மிருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்று அதிசமாக வினவினால் தாரா...

"வாட்!!??" என்று அவன் பேரதிர்ச்சியாக கேட்டதிலேயே, அவனுக்கும் இந்த சேதி புதிது என்று அறிந்து கொண்டாள் தாரா...

"இந்தர் மிருவோட ஹஸ்பண்ட்... ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம் ஆச்சுனு தெரியலே... மிரு கழுத்துல தாலி இருக்கு..." என்று கபி இதனை எப்படி எடுத்துக் கொள்வான் என்று யோசித்தபடி அவன் முகம் பார்த்தபடி உரைத்தாள்.

தாராவின் மனதிலோ கபி மிருவை விரும்பியிருந்தால் நிச்சயம் அவனுக்கு இது பெரிய வலியை ஏற்படுத்தும் என்று நினைத்து கண்கள் கலங்கியபடி கூறினாள்.

தோழி தன்னிடம் மறைத்துவிட்டாளே என்ற வலியை உணர்ந்தவன், அதே மனவலியோடு தான் தாராவும் அழுவதாக நினைத்துக் கொண்டான். இருவரும் தங்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அனுதாபமாக பார்த்துக்கொள்ள, அங்கே அணைத்து நின்றிருந்த போதும் மிருவும், இந்தரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

"இப்போ மட்டும் ஏன் டா என்னை கட்டிபிடிச்சிட்டு நிக்கிறே!!! எல்லாரும் என்னைத் தான் தப்பா நெனப்பாங்க... தள்ளிப் போடா" என்று கோபமாகக் கூறிட,

"என் பொண்டாட்டி... நான் அப்படித் தான் கட்டிப்பிடிப்பேன்... உனக்கென்னடி!!?"

"உன் பொண்டாட்டினா அதை வீட்டோட வெச்சுக்கோ... இது பப்ளிக் ப்ளேஸ்... தள்ளிப் போடா."

இவர்கள் இருவரும் இப்போதைக்கு பிரியப்போவதில்லை என்று உணர்ந்த நண்பர்கள் கூட்டம் தங்களுக்குள் பேசியபடி திரும்பிச் சென்று அவரவர் டேபிளில் அமர்ந்து கொண்டனர். கடைசியாக சென்ற கூட்டத்தில் இருந்து,

"மிரு... நாங்க யாரும் பாக்கலே..." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க, இந்தரோ

"அவங்க யாரும் பாக்கலேயாம்... இப்போ ஓகே தானே..." என்றிட அடுத்த நொடி அவன் தலையில் கொட்டி அவனை விலக்கி நிறுத்தினாள் மிர்லா.

அழுது வடிந்த கண்களை துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள் மிர்லா. ஏற்கனவே அவளின் அழகில் கிரங்கித் தவித்தவன், இப்போது தான் அணிவித்த திருமாங்கல்யத்தோடு தன் மனைவி என்ற ஸ்தானத்தில் தன் அருகே நிற்பவளை சிரித்த முகமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்த இந்தர், அவள் தோளில் கை போட்டு,

"ஹே... பொண்டாட்டி... ஐ லவ் யூ டி..." என்று காதல் சொட்ட சொட்ட தேன் குரலில் மொழிந்தான்.

"இப்போ தான் இந்த பொண்டாட்டி கண்ணுக்கு தெரிஞ்சாளா?" என்று மீண்டும் ஆரம்பிக்க, அவனது பார்வை அவளது திருமாங்கல்யத்தில் பதிந்திட, 'இப்போது தானே இது என் கண்களுக்குத் தெரிந்தது' என்று அவன் கூறாமல் விட்டதன் பொருளும் அவளுக்குப் புரிந்தது.

கண்களால் விடையளித்தவன், இப்போது வாய்மொழியாகவும் விடை கூறினான்.

"நீ மட்டும் என்னவாம்... ஃபர்ஸ்ட் டே பைக் பார்க்கிங்ல பார்க்கும் போது யாரையோ பாக்குற மாதிரி பாத்ததோட மட்டும் இல்லாம, ஏதோ வேண்டாத பொருளைத் தொடுற மாதிரி ஒதுங்கி நின்ன... அதுக்கப்பறமும் என்கிட்ட யாரோ மாதிரி தானே நடந்துகிட்டே..."

"பின்னே உங்களை பாத்தோனே, இரண்டு வர்ஷ கோபத்தை நொடில மறந்துட்டு ஓடி வந்து கட்டிப்பிடிச்சுப்பேனு நெனச்சிங்களோ!!!" என்றிட, அவனது சிரிப்பு அப்படித் தான் எதிர்பார்த்து வந்திருக்கிறான் என்று கூறியது.

மீண்டும் அவளே தொடர்ந்தாள், "நீங்க மட்டும் என்னவாம்!?? எல்லாரும் ஏன் ஆஸ்ட்ரேலியா போகாம இங்கே வந்திங்கனு கேட்டதுக்கு, என் பொண்டாட்டிய பாக்க வந்தேனா சொன்னிங்க!!! ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒவ்வொரு காரணம் சொன்னிங்கல்ல?..." என்று நொடித்துக் கொண்டாள்.

இருவரையும் அவமானப்படுத்த நினைத்த இன்பாவிற்கு இங்கே நடப்பவை அனைத்தும் அதிர்ச்சியாக இருக்க, தன்னையே நொந்து கொண்டு "ச்சை..." என்று கூறி கால்களைத் தரையில் உதைத்து அவ்விடம்விட்டு நகர்ந்தான்.

"மிரு" என்று கபியின் அழைப்பில் இருவருமே திரும்பிப் பார்க்க, அங்கே கபி தாராவுடன் நின்றிருந்தான். மிர்லா கபியிடம் எப்படி சொல்வது என்று தயங்கினாள் என்றால், இந்தர்ருக்கோ கபி வருந்திடுவானோ என்று அவன் முகம் பார்த்திருக்க, அதில் குழப்பம் மட்டுமே இருந்தது, கவலை துளியும் இல்லை. அதில் கொஞ்சம் இதமாக உணர்ந்தான் இந்தர்.

"கபி... இவர்..." என்று என்ன கூறுவது? எப்படிக் கூறுவது? என்று தெரியாமல் இழுத்தாள். மேலும் இந்தர் தன் சார்பாக ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்து அவன் முகத்தைப் பார்க்க, அவனோ

"உன் ஃப்ரெண்டு தானே நீயே சொல்லி சமாதானப்படுத்து... என்னை ஏன் பாக்குற?" என்று திமிராகக் கூறிட,

கபியும் இந்தருக்கு கை கொடுத்து "அப்படி சொல்லுங்க இந்தர்... எங்கே நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசிடுவிங்களோனு நெனச்சேன். நீங்க பேசியிருந்தா வேறவழியே இல்லாம இவளை மன்னிச்சிருப்பேன்... இப்போ வசமா மாட்டினா!!!" என்று இந்தரிடம் பதில் கூறிவிட்டு,

"உனக்கு தெரியாம உன் அப்பாகிட்ட பேசிட்டேனு என்கிட்ட ஆறுமாசமா பேசாம இருந்தியே... இப்போ நீ எனக்குத் தெரியாம செஞ்ச வேலைக்கு நான் உன்கிட்ட இந்த ஜென்மம் முழுக்க பேசவே கூடாது... என்ன பேசாம இருக்கட்டுமா?" என்று மிரட்டினான். கபியும், தாராவும் இந்தர் இங்கே வந்த பின்தான் இருவருக்கும் பழக்கம் என்றும் அதன்பின் தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் நினைத்திருந்தனர்.

"கபி... நான் மறச்சது தப்பு தான் கபி... சாரிடா..."

"பேசாதே டி..." மிரு மன்னிப்புக் கேட்க, கபி அதனை மறுக்க என இருவருக்கும் நடந்த உரையாடலை அருகில் இருந்த இருவரும் வேடிக்கை பார்ப்பது போல், கபியைத் தான் கவனித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் ராசியாகிக் கொள்ள, அடுத்த கட்டமாக தன்னை முறைத்துக் கொண்டிருந்த தாராவை சமாதானம் செய்தாள் மிர்லா. நால்வரும் சகஜமாகப் பேசிக்கொண்டாலும் இன்னும் தங்கள் திருமணம் எந்த சூழ்நிலையில் நிகழ்ந்தது என்று மிர்லாவும், இந்தரும் கூறிவில்லை. மற்ற இருவரும் அதனைக் கேட்டு மீண்டும் வாக்குவாதத்தை ஆரம்பிக்க விரும்பவில்லை.

இதற்கிடையே மற்ற நண்பர்களும் ட்ரீட் என்று கேட்க, இன்று தாமதமாகிவிட்டதால் மற்றொருநாள் பார்க்கலாம் என்று அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டான் இந்தர். நால்வரும் புறப்பட இந்தர், மிருவை தன்னோடு வருமாறு அழைத்தான்.

"சுண்டு என்கூட இன்னைக்கே வந்துடேன்..." என்று ஏக்கமும் காதலுமாக வினவினான்.

"ஆன்டிகிட்ட சொல்ல வேண்டாமா!!! எங்கே போயிட போறேன்... பொறுமையா வரேன்..." என்று அவனைக் கடுப்பேற்ற வேண்டியே மறுத்தாள் மிர்லா...

"ஹலோ மாப்பிள்ளை சார்... என் ஃப்ரெண்டை இப்படி நட்டநடு ராத்திரி தனியாலாம் அனுப்ப முடியாது. அம்மாகிட்ட சொல்லி நல்ல நாள் பாத்து தான் அனுப்புவோம்... ரெம்ப அவசரப்படாதிங்க... இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுங்க..." என்றான் கபி.

"ஏன்டா மச்சான் உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்!!! உனக்கும் உன் ஃப்ரெண்டுக்கும் நடுல வராமா எவ்ளோ பெரிய மனுஷத் தனமா ஓரமா நின்னேன்!?? நீ என்னடானா எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல சீனச்சுவரே எழுப்பிடுவ போல!!!" என்று இந்தர் தன் வயிற்றெரிச்சலை புலம்பிட, கபி அதற்கு சிரித்தாலும், மிர்லாவை அனுப்பி வைக்கத் தயாராக இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டான்.

டாக்ஸி வரும்வரை ரெஸார்ட் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த நபர் "சுந்தரி" என்று அழைக்க, திரும்பிப் பார்த்த மிர்லாவும், இந்தரும் அதிர்ந்தனர்.

இந்தர் இரண்டு எட்டுகள் முன்னே வைத்து "நீ எங்கே டா இங்கே வந்த?" என்றிட, எதிரில் நிற்பவன் பதில் கூறாமல் மிர்லாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மீண்டும் கோபமுற்றவள், இந்தரை முறைத்துவிட்டு டாக்ஸிக்கு கூட காத்திறாமல், அவ்வழியே வந்த ஆட்டோவை கை மறித்து ஏறிக் கொண்டாள். அவள் பின்னாலேயே சென்ற இந்தரும், "சுண்டு ப்ளீஸ் சொன்னா கேளு டி... நான் அவனை வர சொல்லலே டி..." என்று கூறிக் கொண்டே வந்தவன் அவளுடன் ஆட்டோவில் ஏறிக் கொண்டான்.

இங்கே கபியோ வந்திருந்த நபரைப் பார்த்து, "நீங்க மிரு அப்பாகிட்ட வேலை பார்த்தவர் தானே?... உங்க கூட தானே மிருவுக்கு கல்யாண ஏற்பாடு செய்தாங்க!!?" என்றிட, அவரும் ஆம் என தலையசைத்தார்.



-தொடரும்​
 
Top