• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"10 மணிக்கு ரெடியா இரு. நான் கூப்பிட வரேன். நீ என்னோட ஷாப்பிங் வர்ற" என்று உத்தரவிட்டிருந்தான் தாராவின் மனம் கவர்ந்த காந்தனவன்.

கபி அனுப்பிய குறுந்தகவலைப் படித்தவள், உண்மையாவே ரொம்ப தைரியம் தான்!!! வந்து என் அம்மா, அப்பாகிட்ட எப்படி பெர்மிஷன் கேட்குறான்னு பாப்போம் என்று நினைத்து சிரித்தபடி எதுவும் பதில் அனுப்பாமல் திறன்பேசியை மின்னூட்டினாள்.

அவள் பதில் அனுப்பவில்லை என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகக் கூட தெரியவில்லை போல. சொன்னது போல் சரியான நேரத்திற்கு வாசலில் வந்து நின்றவனைப் பார்த்து பிரமித்து நின்றாள். கருப்பு நிற முழுக்கை v நெக் டி-ஷர்ட்டும், புளூ ஜீன்னும், கூல்லர்ஸுமாக வந்து நின்றவனை ஒருநொடி இமைக்க மறந்து பார்த்தாள்.

முதல் நாள் தாராவை ட்ராப் செய்ய வந்த போது அவள் அன்னை, தந்தையிடம் பேசிச் சென்றதில் அவர்களுக்கு கபியின் மீது நல்ல அபிப்ராயம் வந்திருந்தது. அதனால் இப்போது அவனைப் பார்த்தவுடன்,

"வாங்க தம்பி... தாரா நேத்து வந்த தம்பி வந்திருக்கார் பார்..." என்றபின் தான் அவனைப் பார்ப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு, "வாங்க கபி" என்றாள்.

அவளின் அழைப்பிற்கு செவி மடுக்காமல், "ஆன்டி, தாரா அப்பா வீட்ல இருக்காங்களா?"

"சன்டே தானே... இப்போ தான் குளிக்கப் போயிருக்காங்க... எதுவும் முக்கியமா பேசனுமா தம்பி?"

"அவ்ளோ முக்கியமான விஷயம்லா இல்லே ஆன்டி. உங்களுக்கு மிர்லாவைத் தான் நல்லாவே தெரியுமே. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இன்னேல இருந்து புது லைஃப் ஸ்டார்ட் பண்ணப் போறாங்க... அம்மா வீட்ல இருக்காங்க தான்... எல்லாம் பார்த்துப்பாங்க... இருந்தாலும் நீங்களும் அங்கிலும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும்... அதான் அங்கில் கிட்ட முறையா சொல்லி உங்க ரெண்டுபேரையும் கூட்டிட்டுப் போக வந்தேன்..." என்று பவ்வியமாக உரைத்திட,

இதனை அடுக்களையில் நின்று கேட்டுக்கொண்டிருந்தவளோ 'அடப்பாவி அந்தர் பல்டி அடிச்சிட்டானே!!!' என்று நினைத்து அவன் விட்ட பொய்களுக்கு தன் வாயில் அடித்துக் கொண்டாள்.

பேச்சு சத்தம் கேட்டு தலை துவட்டியபடி வெளியே வந்த தாராவின் தந்தை, கபியைப் பார்த்ததும், "வாங்க Mr.கபிலன், எப்படி இருக்கிங்க?'

"ஒருநாள் நைட்ல என்ன சார் பெரிய மாற்றம் நிகழப் போகுது!!! அப்படியே தான் இருக்கேன்."

"ஏன் மாறாது.... நேத்தைவிட இன்னைக்கு தயக்கம் இல்லாம இயல்பா பேசுறிச்களே!!! நல்ல மாற்றம் தான்."

அங்கே அடுக்களையில் 'அதானே நேத்து நைட்டு வெட்கபட்டு நின்ன கபி, இன்னைக்கு அதிகாரமா வா னு சொல்றளவு மாறிட்டாரே!!!'

"தாரா தம்பிக்கு காஃபி எடுத்துட்டு வா" என்றார் அவள் அன்னை. "இதோ வர்றேன் ம்மா" என்றவள் ஐந்து நிமிடத்தில் வந்து நின்றாள். அதற்குள் தாராவின் அன்னையிடம் உரைத்ததை தந்தையிடமும் கூறிட, "கண்டிப்பா வர்றோம் கபிலன். மதியமா வந்தா ஓகே வா?"

"டபுள் ஓகே சார். இப்போ மிர்லாவுக்கு ட்ரெஸ் எடுக்க தாரணி அழச்சிட்டு வர சொல்லிருந்தா!!! நீங்க அனுப்பதிப்பிங்களா சார்?"

அவர் சில நிமிடங்கள் யோசித்து பின் தன் சம்மதத்தைத் தெரிவித்தார். தாராவின் அன்னை, தந்தையிடம் அனுமதி பெற்று அவளை அவளது வாகனத்தில் வரும்படி கூறி தன் இருசக்கர வாகனத்தில் ஏறிப் புறப்பட்டான்.

அவன் பின்னாலேயே விரைந்தவள் செல்லும் வழி எங்கும் இப்படி தனித்தனி வண்டில போறதுக்கு பேர்தான் பிக்-அப் பண்றதா!!! என்று நினைத்து முடிந்தமட்டும் மனதிற்குள் அர்ச்சதை செய்து கொண்டே வந்தாள்.

இடையில் ஓர் இடத்தில் நிறுத்தியவன், அவளையும் இறங்கச் சொல்லி, அவளது வண்டியை அருகில் இருந்த இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைக்கு உருட்டிச் செல்ல, அவளோ திருதிருவென முழித்தபடி 'என்ன பண்றான்!!!' என்பது போல் பார்த்தாள். அதையெல்லாம் கண்டுகொள்ளாது

"சர்வீஸ் பண்ணி வைங்க... ஈவ்னிங் எடுத்துக்கிறேன்" என்று கூறியவனிடம், "என் வண்டி நல்ல கன்டிஷன்ல தான் இருக்கு" என்று கூறினாள்.

அதனையும் கண்டு கொள்ளாது, அவன் வண்டியில் ஏறி அமர்ந்து "வா வந்து உக்கார்..." என்றிட, கண்களை விரித்து 'அடேய் ஃப்ராடு' என்பது போல் அப்பாவியாய் அவனை உறுத்து விழித்திட, "பாத்து முழி டீ... கண்ணு ரெண்டும் வெளியே வந்து விழுந்துட போகுது!" என்றவனை வாய்பிளந்து பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள்.

வண்டியில் அமர்ந்திருந்த கபியோ அவள் கண்களைப் பார்த்தபடி அவளது கையைப் பிடித்து இழுத்து, தன் பின்னால் நிறுத்திட தாரணி எனும் சிலைக்கு உயிர் வந்தது. வெட்கத்தில் சிவந்தவள், அடக்க முயன்றும் தன்னை மீறி வெளியே வந்த சிரிப்பை தலைகுனிந்து மறைத்து அவன் பின்னால் அமர்ந்தாள்.

வழியெங்கும் அவ்வபோது அவனை பிரம்மிப்பாகப் பார்ப்பதும், தனக்குத் தானே சிரிப்பதுமாக இருந்தாள் அவள். வீடு வந்தும் இறங்காமல் அமர்ந்திருப்பவளை ரிவர் வியூ மிரரில் பார்த்தான் கபி. அவளோ சிரித்தபடி தலைசரிந்து அமர்ந்திருந்தாள்.

மீண்டும் தன் கையை முதுக்கு பின்னால் கொண்டு சென்று அவள் கையைப் பிடித்து இழுத்திட, ஒருபக்கமாக கால்களையிட்டு அமர்ந்திருந்தவள், அவன் இழுத்த இழுப்பில் சற்றுத் தடுமாறிட கையை அழுந்தப் பிடித்து நிலைப்படுத்தி தன் அருகே நிறுத்தினான். கண்கள் இரண்டும் மோதிக்கொண்டன. முதன்முதலாக அலுவலக வாசலில் வைத்து அவளை எப்படி கண்ணெடுக்காமல் பார்த்தானோ அதே பார்வை. அப்போது இல்லாத மெல்லிய சிரிப்பு அவன் இதழ்களில் இப்போது படர்ந்திருந்தது.

தாரா சிறுவயதில் இருந்தே பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று படித்து வளர்ந்தவள். கல்லூரிக்காலம் வரை அவள் சகஜமாகப் பேசும் ஆண்கள் இருவர் மட்டுமே. ஒன்று அவள் தந்தை மற்றொன்று தம்பி. இப்போது வேலைக்குச் சென்றப் பின் தான் ஓரளவு வெளியாட்களிடமும் பேச ஆரம்பித்தாள். அலுவலகத்திலும் தேவையான நேரங்களில் வேலை விஷயங்கள் மட்டுமே சக ஆண் ஊழியர்களிடம் பேசுவாள். ஆண்கள் பற்றிய கிண்டலும், கேலிப்பேச்சும் மிர்லாவுடனேயே நிறுத்திக்கொள்ளக் கூடிய பயந்த சுபாவம் கொண்ட பெண்ணவள் அவள்.

இப்போது கபியின் இந்த நெருக்கமும், அவனது பார்வையும் கால்களை நடுங்கச் செய்திட, நெஞ்சம் படபடக்க, விலகிச் செல்ல கட்டளையிட வேண்டிய மூளையோ, இன்னும் நெருங்கி நில் என்று உத்தரவிட்டதில் திடுக்கிட்டாள். தன் எண்ணவோட்டத்திற்கு தடை விதித்து, அவனிடம் இருந்து தன் கைகளை உருகிக்கொள்ள முயற்சிக்க, அதுவோ வருவேணா என்றது.

"கபி விடுங்க ப்ளீஸ்... யாராவது வந்தா என்ன நெனப்பாங்க?" என்று கெஞ்சிட,

அவள் கெஞ்சலை ரசித்தவன், "நேத்து மட்டும் யோகன் இருக்குறதைக் கூட கண்டுக்காம வச்ச கண்ணு வாங்காம பாத்தே!!!"

"அது... அது அப்பறமா பேசலாமே!!! இப்போ வீட்டுக்குள்ள போகலாம்?" என்று கெஞ்சலும் கேள்வியுமாய் வினவினாள்.

"சரி போ..." என்று அவள் கையை விடுவித்தான். அவன் அழுத்திய இடம் வலியெடுக்க, மற்றொரு கரம் கொண்டு தேய்த்தபடி மாடியேறிச் சென்றாள்.

அவள் பின்னாலேயே கபியும் வீட்டிற்குள் நுழைய இந்தரும், மிருவும் குளித்துக் தயாராகி இருந்தனர்.

"வாடா கபி உனக்காகத் தான் காத்திருக்கோம்" என்றபடி ருக்கு சாமி அலமாரியில் விளக்கிற்கு எண்ணெய் இட்டு மிருவை விளக்கு ஏற்றக் கூறிட, இந்தரை மிருவின் நெற்றியில் குங்குமமிடச் சொன்னார் ருக்கு...

அதன்பின் அனைவரும் புறப்பட, வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று இந்தர் கூறிட, அது தவிர மிக்ஸி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள், பலசரக்கு சாமான்கள் என அனைத்தும் வாங்கிட பணம் செலுத்தும் இடத்தில் இந்தர், கபி, யோகன் மூவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது யார் பணம் செலுத்துவது என்று.

இறுதியில் இந்தர் பணம் செலுத்தட்டும் என்று மிரு கூறிவிட, கபி ஒரு புறம் மிர்லாவிடம் கோபம் கொள்ள, யோகன் இந்தரிடம் தன் கோபத்தைக் காண்பித்தான்.

அதன்பின் மதிய உணவை முடித்துக் கொண்டு உடைகள் பக்கம் செல்ல, அங்கே ஆரம்பத்திலேயே கபி ஒதுங்கிக்கொள்ள மிர்லா கபியைப் பிடித்து இழுத்துச் சென்று,

"நீ செலக்ட் பண்றதை நீயே வாங்கிக் கொடு. நான் கண்டிப்பா வாங்கிக்கிறேன்" என்றிட சந்தோஷமாக மிருவிற்கு உடை தேர்வு செய்தான்.

மிர்லாவுடன் இணைந்து ஆடை தேர்வில் இறங்கியிருந்த தாராவின் அருகே வந்த கபி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், "உனக்கும் சேர்த்து எடு... நான் வாங்கித் தரேன்..." என்றிட

"எனக்கு எதுக்கு நீங்க எடுத்துத் தரனும்?"

"இதை நேத்து நைட் கேட்ட மாடுலேஷன்ல கேளு பார்க்கலாம்!!!" என்றிட ஒரு நிமிடம் யோசித்தவளுக்கு தான் கூறிய வார்த்தைகளும் அதற்கு யோகன் காதலர்கள் என்று கூறியதும் அதில் இருவரும் வெட்கம் கொண்டதும் நினைவில் வர, இப்போதும் முகம் சிவந்து நின்றாள்.

தாரா தனக்கு ஒன்றும் தேர்ந்தெடுக்காத போதும் கபி அவளுக்காக பிஸ்தா பச்சையில் கருநீல கொடிபின்னலிட்ட காஞ்சிப்பட்டைத் தேர்ந்தெடுத்திருந்தான்.

இந்த முறை ஆளாளுக்குத் தனித்தனியாக தங்கள் பங்கிற்கு உடை எடுத்திருக்க, மூவரையும் தடுத்திடவில்லை மிர்லா. ருக்குவும் தன் பங்கிற்கு மிர்லாவிற்கும், இந்தருக்கும் உடைத் தேர்வு செய்திருக்க, அதற்கும் கபி தான் பணம் செலுத்தினான். கபி தாராவிற்கு எடுத்த உடையை மறைத்து வைக்கவும் இல்லை. அதற்காக வெட்டாவெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளவும் இல்லை.

மாலை அனைவருமாக இணைந்து இந்தரின் அடுக்குமாடி குடியிருப்பிற்குச் செல்ல, அங்கே கதவு திறந்த நிலையில் அவர்களுக்கு முன்னதாகவே ஆட்கள் இருக்க, வாசலிலேயே ஸ்தம்பித்து நின்றாள் மிர்லா.



-தொடரும்​
 
Top