• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 10)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
அத்தியாயம் 10


சாந்தினிகா பாய்.. சொன்ன டெக்ஸ்டைல்ஸ்க்குள் நுழைந்தாள்… பாய்.. பா.. கடைக்கு வருவார் எனக் கொஞ்சம் கூட அவள் எதிர்பார்க்கவே இல்ல,.. பாய் முகமது கடை முதலாளி ஜெயச்சந்திரனிடம் பேசிக்கொண்டிருந்தார்…


சாந்தினிகாவை அழைத்த பாய்.. பா.இவளைப் பத்தி தான் கூறினேன்.. நன்றாக வேலைப் பார்ப்பாள்.. அவளை நம்பி எந்த ஒரு வேலையையும் தயங்காமல் தரலாம் என சொன்னார்…


அந்த கடையில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து,நம்ம கடைக்குப் புதுசாக வந்திருக்கும் சாந்தினிகாவுக்கு கடையில் ரூல்ஸ்களைப் பற்றி விவரமாக சொல்லிட்டு,. இவளை முதலில் சுடிதார் செக்ஸனில் விட்டு அந்த செக்ஸனில் புதுசாக வந்த பொண்ணு என சொல்லிட்டு வா..என்றார்…



சாந்தினிகாவும், பாய்.. பா விடம் சொல்லிட்டு மாடிக்குச் சென்றாள்… அந்த செக்ஸனில் சென்றதும் அங்கே உள்ளவர்கள் சாந்தினிகாவிடம் நன்றாக பேசினார்கள்…


வேலைகளையும் ஒவ்வொன்றாகவும் நிதானமாக சொல்லிக் கொடுத்தார்கள்…அன்றைய நாளில் அவளுக்கு ஒரு மிகப்பெரிய வேலை கிடைத்தது போல ஆனந்தம் அவளுக்குள் இருந்தது…


பேருந்தோ சேலத்தை நெருங்கிக் கொண்டிருக்க, அவளது கைப்பேசி ஒலிக்க அதை அழுத்தி, சொல்லுங்க சித்தி… இதோ சேலத்துக்கிட்ட வந்துட்டேன்…


ம்ம்ம்.. நீ இறங்கியதும் நளன் ஸ்சுவிட்ஸ் பேக்கரி ஷாப் இருக்கும்… அங்க நில்லு..சித்தப்பா டவுணுக்குத் தான் பூ வாங்க வந்திருக்காங்க!.. அதனால் நீ அவங்க கூட பைக்கில் வந்திடலாம். மினி பஸ் எப்போது வரும்னு உறுதியாக சொல்ல முடியாது…


சரி.. சித்தி..சேலத்தை அடைய இன்னும் கால் மணி நேரம் ஆகும்… நானே சித்தப்பாவுக்குப் போன் செய்து கொள்கிறேன்.. சித்தப்பா அதே நம்பரை தான் வச்சிருக்காங்க…


"ஆமாம்.. கல்யாணி. சரிங்க சித்தி வச்சிடுறேன்… '


பவித்திரன் காலையில் சற்று தாமதமாக எழுந்த அவன் மணியைப் பார்க்க,.. ஆ… மணி.. பத்தரை ஆயிற்று.. இவ்வளவு நேரம் என்னை எழுப்பி விடாமல் என்ன செஞ்சிட்டு இருக்கிறான் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தவுடன் காலையிலேயே சம்பத் சம்பத் என அழைத்தான்..


அவனும்,இளையராஜா பாட்டு ஜாலியாக பாடிக்கொண்டே வர…


டேய்… நில்லுடா…


என்னடா..இப்போது தான் விடிஞ்சதா கிண்டலாக கேட்க.. கோபத்தில் கையை ஓங்க வந்த பவித்திரனை…


மச்சான்.. இதெல்லாம் தப்பு… தீர விசாரிக்காமல் உன் நண்பனை அடிக்கலாமா… .


காலையிலேயே உன்னை எழுப்ப வந்தேன்.. ஆனால் நீ அசந்து அப்படி ஒரு கொறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த.. உன்னை தொந்தரவு செய்தால் நீ அடிப்பாய் என நினைத்து உன்னை எழுப்பாமல் சென்று விட்டேன்…


டேய்… என்னடா.நீ நேற்று முடிக்காத வேலையை இன்றைக்குள் முடித்து விட வேண்டும் நினைத்தேன்.. ச்சே.. இப்படி பண்ணீட்டியே… .


பவித்திரன் வேகமாக போனை பார்க்க அதில் சார்ஜ் இல்லாமல் இருந்தது…போனுக்குச் சார்ஜ் போட்டு விட்டு குளிக்கச் சென்றான்..


மச்சான் குளித்து விட்டு வருவதற்குள் டிபன் வாங்கிட்டு வந்திடலாம் என கிளம்பி சென்றான்…


பவித்திரன் விரைவாக குளிச்சு முடித்து விட்டு டிரஸ் சேஞ் செய்து விட்டு வெளியே வாசலுக்கு வந்தவனை பார்த்த சம்பத் மச்சான் வெயிட் வந்து ரெண்டு இட்லி சாப்பிட்டு போ…


இல்ல..டா.. வேண்டாம்… மாப்பிள்ளை… நீயே சாப்பிடு எனக்கு நேரமாயிற்று… அவசரமாக போய் ஆகனும் எனக் கூறிட்டு புறப்பட்டான்...பவித்திரன்…


கங்கா தேவி தன் கணவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள்… அதற்கு அனுகரன் என்னம்மா.. இவ்வளவு சீக்கிரமாக எடுத்து வைச்சுட்ட…


ஏங்க நீங்க தானே இந்த மதிய வேளையில் பேக்டிரிக்குக் கிளம்புவீங்க… அதுக்குள்ள மறந்தாச்சா..


ஆமாம்… கங்கா தேவி.. என்னமோ தெரியல.. எம் மனசுக்கு அம்புட்டு ஒரு சந்தோஷம்..நம்ம பொண்ணு எப்படியோ இன்னிக்கு நாள் செய்து முடிச்சுட்டாள்… எனக்கு மனசு நிரஞ்சது போல இருக்கு.. பசியில்லாமல் இருக்குது… .


"ஏங்க அதுக்காக சாப்பிடாமல் வேலைக்குப் போறீங்களா!.. கொஞ்சமாவது சாப்பிட்டால் தான் வேலை பார்க்க முடியும் தட்டில் எடுத்து பரிமாற, வேற வழியில்லாமல் அனுகரன் சாப்பிட ஆரம்பித்தார்…


நீ.. சாப்பிட்டியா!..


"இல்லைங்க..இனிமேல் தான்… எனச் சொல்ல கங்காதேவிக்கும் தட்டு எடுத்து வைத்து சாப்பிட சொன்னார் அனுகரன்… இருவரும் மாறி மாறி பரிமாறிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.. '


பவித்திரன் விரைவாக தாத்தா இருக்கும் அறைக்குள் நுழைய,படுத்த நிலையில் இருந்ததும் தூங்குகிறார் என நினைத்து அவனது பணியை ஆரம்பிக்கச் செல்கிறான்…


சேலத்தை அடைந்த கல்யாணி.. தன்னுடைய சித்தப்பாவிற்கு போன் செய்து நளன் ஸ்விட்ஸ் பேக்கரியின் அருகில் நிற்கிறேன் எனச் சொன்னதும், மறு நிமிஷம் கண் இமைக்கா நொடியில் பைக்கில் வந்தார்…


கல்யாணி தன்னோட சித்தியின் வீட்டிற்குச் சென்றாள்.. அங்கே சென்றதும் அவளை புன்னகையோடு வரவேற்ற அவுக சித்தி நிரஞ்சனா..


அமரும் படி சொல்ல கீதாவை எங்க எனக் கேட்ட கல்யாணி..அவள் இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.கீதாவைச் சுற்றி சின்ன பிள்ளைகள் அமர்ந்திருந்த தருணம்… அக்கா,..வாங்க.. உங்களை சந்தித்து எத்தனை நாள்கள் ஆயிடுச்சே எனப் பாசத்தோடு பேசிய தங்கை கீதாவின் கன்னத்தை கிள்ள ,அவளை நினைச்சு பெருமிதமாக புன்னகையிட,. இருவரும் சேர்ந்து பல்லாங்குழி விளையாட ஒரே ஜாலியாக இருந்தது ..


கல்யாணி தன் தங்கையோடு விளையாடியதை பார்த்து பழைய நினைவுகள் மனதில் படர ஆரம்பித்ததே!..


கல்யாணி.. கல்யாணி.. மறுபக்கம் சித்தி

அழைக்க…


ம்ம்ம்.. சொல்லுங்க சித்தி…


உன் கணவர் ஏன் வரல… எனக் கேட்கிறாள் நிரஞ்சனா…


சித்தி இப்ப தான் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க!.. அதான் லீவ் போட முடியல ,


கட்டாயம் இன்னொரு முறை கூட்டிட்டு வருவேன் எனக் கூற, உன் மாப்பிள்ளை பேரு என்ன?..


அவுக பெயரு கார்த்திகேயன் சித்தி..


நல்ல பையனா,.. மறு தடவை கேட்ட நிரஞ்சனா,..


ம்ம்ம்… அவங்ககிட்ட எந்தவொரு கெட்ட பழக்கமும் கிடையாது… வேலை இல்லையென்றாலும் இருக்கிறத வச்சு சமாளித்து விடுகிறார்கள் சித்தி என தன் கணவரை பற்றி அடுக்கி கொண்டே போனாள்…


போதும்.. போதும். என்னால தாங்க முடியல ..டி…


உன் கணவனைப் பத்தி கேட்காமலே இருந்திருக்கலாம் என்று புன்னகையோடு பேசிக் கொண்டிருக்கையில் வீட்டிற்கு விருந்தாளிகள் வர ஆரம்பித்தார்கள்.. கல்யாணி தன் கணவனுக்கு போன் செய்து இங்க வந்துட்டோம் என்ற தகவலைச் சொல்லிடுவோம் …


கார்த்திகேயன் போன் ஒலிக்க, அவன் வேலை செய்து கொண்டிருந்த அந்த சமயத்தில் செல்ப்பில் வச்சிருந்தான்..தன்னுடைய கைப்பேசியை எடுக்க முயன்ற போது கை நழுவி தண்ணீரில் விழுந்து விட்டது…


அதை எடுத்த மறுமுறை போனில் Display தெரியல…வேகமாக போனில் சிம்மை கழற்றிவிட,.. கல்யாணிக்கு தன் கணவன் போனை எடுக்கலயே என மறுபடியும் முயற்சித்த போது சுவிட்ச் ஆப்னு வந்தது…


கார்த்திகேயன் ஏதாவது ஒரு முக்கியமான வேலையில் இருப்பார்.. அவங்க வேலையை முடித்த பிறகு போன் பண்ணுவாங்க என்று நினைத்து கீதாவை பார்க்க போனாள்…


கீதாவைச் சுற்றி அவங்களோட சொந்த பந்தங்கள் குவிந்து இருக்க, கல்யாணி அப்படியே சித்தி இருக்கும்அறைக்குள் நுழைகிறாள்…



சித்தி, கல்யாணியிடம் அவங்க அத்தைகளெல்லாம் ஷாப்பிங் போறாங்க, நீயும் வேணா போய்ட்டு வா என சொல்ல ,


அவுங்க யாருமே எனக்கு பழக்கமில்லாத முகம்,.. அவர்களோடு என்னால் எப்படி முகம் கொடுத்து பேச முடியும் .ஒரு மாதிரியாக இருக்குது சித்தி… நான் வீட்டுலேயே இருக்கிறேன்..


அவங்க எல்லாரும் உனக்கு சொந்தம் தானே.. எதற்காக தயங்குற… என அவங்க சித்தப்பா சொல்லவும்.நானும் அவங்களோடு கிளம்புறேன் என்றாள்…


இந்தாம்மா!. வாங்கிக்கொள்… ..என்னது சித்தி…


நீயும் ஏதாவது புதுசா சேலை எடுத்துக்கோ,..ரூபாயை நீட்டிய நிரஞ்சனா…


அங்கிருந்து ஒரு சேலை கொண்டு தான் வந்திருக்கிறேன்.. வேண்டாம்.. சித்தி என்றவள் …


நீ கொண்டு வந்த சேலையை உடுத்திக்கோ,. கடைக்குப் போகிறாயே!.. ஏதாவது உமக்கு பிடிச்ச கலரில் எடுத்துக்கோம்மா… என கல்யாணியின் கையில் ரூபாயைக் கொடுக்க,.. அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்…


எல்லாரும் சேர்ந்து ஆட்டோவினில் செல்லும் போது,கல்யாணியும் ஏறுகின்றாள்..ஆட்டோவில் அமர்ந்த பிறகு ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கொள்ள, அவங்க அத்தைகளெல்லாம் கல்யாணியிடம் அன்பாக பேசினார்கள்…


கல்யாணிக்கும் அவர்களோடு போகும் போது கலகலப்பாகவும் ,ஒரே ஜாலியாகவும் இருக்க டெக்ஸ்டைல்ஸ்ஸை நெருங்கியதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடையை பத்தி சொல்லவும்..


அனைவரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தோடு ஒரு டெக்ஸ்டைல்ஸ்க்குள் நுழைய அங்க புன்னகையோடு வாசலில் நின்ற பொம்மை வரவேற்க அதை பார்த்துக்கொண்டே உள் நுழைகிறார்கள்…


அந்த கடையில் தான் சாந்தினிகா வேலை பார்க்கின்றாள்… அவள் இருக்கும் கிராமத்திற்கும் வேலைப் பார்க்கும் கடைக்கும் ,சற்று தொலைவு…


கல்யாணியும் ,சாந்தினிகாவும் ஒருவரையொருவர் பார்க்கின்றார்கள்…சுடிதார் செக்ஸனில் தான் அவள் இருக்கிறாள்…


அவங்க அத்தைகளெல்லாம் கீதாவிற்குப் புடவையைப் பார்த்து, எடுத்துக் கொண்டிருந்தார்கள்… கல்யாணி நம்ம முதலில் கீதாவுக்கு சுடிதார் எடுத்துட்டு வந்துடுவோம்… சுடிதார் செக்ஸனுக்குச் சென்று பார்த்த கல்யாணியிடம்… .


சொல்லுங்க, அக்கா உங்களுக்கு எந்த மாதிரி டிசைனில் வேணும் சொல்லுங்க அக்கா.. ..மெட்டிரியலா!.. இல்ல, ரெடிமேடா.. முதலில் சைஸ் சொல்லுங்க… அக்கா… என்றாள் சாந்தினிகா…


கல்யாணி அவள் சைஸ் தெரியலயே. பிறகு சற்று யோசித்து அவ ஒன்பது படிக்கிறாள்.. அதுக்கேற்றாற் போல் சுடிதாரை காட்டு என்றாள கல்யாணி….


சாந்தினிகாவும் சுடிதாரை பார்த்து ஐந்து நிமிடத்தில் செலக்ட் பண்றா!..சாந்தினிகா ஆச்சரியத்தோடு.. நீங்க தான் வந்ததுமே செலக்ட் பண்ணீட்டிங்களே குட் அக்கா என்றாள்…


ஏம்மா சீக்கிரமே சுடிதார் எடுத்துட்டேன்.உனக்கும் வேலை சீக்கிரமே முடிஞ்சதே என்ற சந்தோஷமா, …


அக்கா,.. அப்படியெல்லாம் இல்ல,நீங்க சீக்கிரமாக செலக்ட் பண்ணாலும் ரொம்ப சூப்பராக பண்ணிருக்கீங்க.. அத தான் அப்படி சொன்னேன்.. வேற மெட்டிரியல் இருக்குது ..நீங்க பார்க்கப் போறீங்களா!.. என்றாள் சாந்தினிகா…


போதும்.. மா… சேலை மட்டும் தான் எடுக்கனும். ஒரு 500ரூபாயக்குள்ள..கொஞ்சம் காட்டேம்மா!..


கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அக்கா, இன்னிக்கு புது டிசைனில் அதுவும் நல்லா குவாலிட்டியாக இருக்குது… ரேட் கம்மியாக தான் இருக்குது என ஸ்டோர் ரூமுக்குள் சென்று எடுத்து வந்தாள்…


கல்யாணிக்கு அந்த டிசைன் மிகவும் பிடிச்சிருந்தது…அதுவும் 350ரூ தான் அழகாகவும்,துணி நல்லா தான் நைசாக இருக்க,. அந்த சேலையை எடுத்துக் கொண்டாள்…


கீதாவிற்கு சேலையை எடுத்த பிறகு கல்யாணியிடம் காட்ட, அவளும் நல்லா இருக்குது எனச் சொன்னதும், கல்யாணி எடுத்த துணிகளை பார்த்தார்கள்.. அதுவும் அவங்க அத்தைக்குப் பிடித்திருந்தது….


அந்த சேலையைப் பார்த்து எல்லாரும் ஒவ்வொரு கலரிலும் மேட்ச்சாக எடுத்துக்கொண்டார்கள்…


கல்யாணியின் மொபைலுக்கு போன் ஒலிக்க, அதை அழுத்தி சொல்லுங்க சித்தி.. எல்லாமே எடுத்தாச்சு.. இதோ கிளம்பிட்டோம் என்றாள் .சரிம்மா… சேலை மட்டும் எடுத்துக்கோங்க மற்ற பொருள்களை நாளை காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்றாள் நிரஞ்சனா…


கல்யாணி சித்தி சொன்ன விஷயத்தை அத்தையிடம் சொல்லி கடையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார்கள்…ஆட்டோவும் மெதுவாகவும் செல்ல,.. அத்தைகளெல்லாம் சேலையை எல்லாம் என்னிடம் கொடுங்கள் ..அனைத்தையும் எங்க வீட்டில் இருக்கட்டும் ..இப்போதே அவுங்க வீட்டிற்குக் கொண்டு போக வேண்டாம்..


பங்கஷன் அப்போ அவுக தாய் மாமா கொண்டு வருகிற சீர் தானே முதலில் கட்டுவார்கள் அது தானே பழக்கம் எனக் கூறினாள் அத்தை…


உடனே கல்யாணி அதுக்காக நம்ம வாங்கியதை கீதாவிடம் காட்டுவதற்கு என்ன?.. அதெல்லாம் காட்டெல்லாம் அவளும் எப்படி இருக்குது எனப் பார்த்துக்கொள்வாளே என்றாள் கல்யாணி… .


கல்யாணி கூறுவதும் சரிதான்.. நம்ம அவளுக்கு அத்தை முறை தானே… தாய்மாமா கொண்டு வருவதை தான் முதலில் கட்டி அழகு பார்ப்பார்கள்..நம்ம மதினி வீட்டிற்குக் கொண்டு போய் மருமகளிடம் காட்டுவோம்…


பவித்திரன் அவனது வேலையை பஸ் ஸ்டாப்பில் நொண்டி போல நடித்து காசு வாங்கிக் கொண்டிருக்க,..அதைப் பார்த்த அதிர்ச்சியில் நிற்கிறார் அவருடைய மாமா விஷ்ணு சாமி…


பவித்திரன் மாமா பார்த்ததை கவனிக்காமல் அவனது பணியை பார்த்துக் கொண்டிருக்க, பவித்திரனுக்கு எதிரே வந்து நின்ற விஷ்ணுசாமி ,அவன் கையில் காசைக் கொடுக்க நிமிர்ந்து பார்த்த நொடியில் அப்படியே நின்றான்…


மாமா எதுவும் பேசாமல் செல்ல, மாமாவை எப்படி சமாளிக்கப் போறேனே எனத் தெரியலையே என்ற குழப்பத்தில் இருந்தான்… .பவித்திரன் தங்கியிருந்த அறைக்குச் சென்ற விஷ்ணுசாமி.. .வாங்க மாமா,.. உள்ளே அமரும் படி சம்பத் கூற ,எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்…காபி குடிக்கிறீங்களா மாமா..


இல்லப்பா ஒன்னும் வேண்டாம் என்றார் விஷ்ணுசாமி…சம்பத் பவித்திரனுக்குப் போன் செய்து உங்க மாமா வந்துருக்காங்க!..சீக்கிரம் வாடா, என்றான்…


பவித்திரன் அவனுடைய அறைக்குள் நுழைய தன் மாமாவை எப்படி சமாளிக்க என்ற யோசனையில் அப்படியே நிற்கின்றான்… மாமா… எதுவும் பேசாமல் இருக்காதீங்க.. ஏதாவது சொல்லுங்க மாமா… அஜய் கிருஷ் எப்படி இருக்கிறான்… அத்தை கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது என்றார்கள்…


தம்பி பேச்சை மாற்றாதே!.. நீ எதுக்காக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தனும்.. , எனக்கும் நீயும்,அஜய்கிருஷ் ஒரே பிள்ளைகள் தான்… உங்க இரண்டு பேரையும் ஒன்றாக நினைக்கிறேன்… ஆனால் நீ என்னை அப்பா ஸ்தானத்தில் வச்சு பார்க்கலயே என்று வருத்தமாக கூறினார் விஷ்ணுசாமி…


மாமா.. அப்படியெல்லாம் இல்ல,.. நீங்க நினைக்கிற மாதிரி நொண்டி எடுத்து வேலைப் பார்க்கல, இந்த பணியை எனக்காக செய்யல கால் இழந்த தாத்தாவுக்கு செய்யும் சேவை.. அந்த சேவையை அவருக்காக மட்டுமே, மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இத செய்யல என்றான்… அந்த பெரியவருக்காக எடுத்த பணத்தை அவரிடமே கொடுத்து விடுவேன்…


இப்போது வேற வேலையில் சேர்ந்துள்ளேன் மாமா.. நேரம் கிடைக்கும் போது மட்டும் தான் சேவை செய்கின்றேன்..


நீ பொய் சொல்லாதே!..பவித்திரன்.. என்னை சமாதானப்படுத்துவதற்காக ஏதாவது காரணத்தைச் சொல்லி நீ செய்த தவறை மறைக்காதே என்றார்…


மாமா,என்னுடன் வாங்க என அவரை அழைக்க, அதற்கு விஷ்ணுசாமி எங்கேயும் வரல.. என்றார் கோபத்துடன்… .


மாமா… அவனுடன் நீங்கள் சென்றால் மட்டுமே பவித்திரன் கூறுவது உண்மை என்று நம்புவீங்க!... நீயும் அவனோடு தானே இருக்கிறாய்.. அதனால் அவனுக்கு தோதுவாக தான் பேசுவாய்…


மாமா.. அதெல்லாம் இல்லை என்று சொல்ல வந்தான் சம்பத்… வேண்டாம் யாரும் பேசாதீர்கள் என்னுடன் அவங்க வாயை மூடசொன்னார்.. உன்னை பார்க்கவே பிடிக்கல என்றார்…

இனிமேல் இங்கே இருக்கமாட்டேன்.. நீ அனுப்பிய பணத்தை உன் அக்கெவுண்டில் போட்டு விடுகிறேன் இத்தனை நாள்களாக நொண்டி எடுத்து தான் எங்களுக்கு பணத்தை போட்டிருக்கிறாய்,கோபத்தோடு சென்ற அவரது கால்களைப்பிடித்துக் கதறி அழுதான் பவித்திரன் ..


எனக்கு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்க.. சொன்ன அத்தனையும் உண்மை என நிருபிக்கிறேன் என்று மாமவின் கால்களைப் பிடித்து மன்றாட,.. விஷ்ணுசாமி மனசு இறங்கி ஒத்துக் கொள்கிறார்…


அவரை அழைத்து பெரியவர் இருக்கும் அறைக்குள் கூட்டிச் செல்ல,உள்ளே நுழைந்த விஷ்ணுசாமி ரூமைச் சுற்றி சுற்றி பார்க்கிறார்.. . ஓட்டையும், சுவற்றில் அழுக்குப்படிந்த ,கிறுக்கிய கோணல்கள், கைத்தடம் மற்றும் வீடே சிறியதாக இடைஞ்சலாக இருந்த அறையினுள் படுத்திருந்தார்…


அவரை எழுப்பிய பவித்திரன், தாத்தா எழுந்திருக்கவே இல்ல.. அவனும் மூச்சு இருக்கா என்று பார்க்க,.. அவரது உயிர் பிரிந்தது..


தாத்தா உயிர் பிரிந்ததை கண்டு மன வேதனையில் கண்ணீர் வடிக்க, பெரியவரின் கைக்கு அடியினில் காகிதத்தாள் இருந்தது. அதைக் கவனித்த விஷ்ணுசாமி பிரித்து படிக்கிறார்…


காகிதத்தில் எழுதியதைப் படித்து முடித்த மறுகணம், விஷ்ணுசாமியின் கண்களில் இருந்து கண்ணீர் மல்க மல்க வர ஆரம்பித்தது ..


மீண்டும் வருவாள் சாந்தினிகா…

.








.













..
 
Top