• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 12)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
அத்தியாயம் 12


கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா ,அப்பாவின் துக்க செய்தியைக் கேட்டு வீட்டிற்கு வந்து அமர்ந்தாள்… .அம்பிகாஅர்ச்சனாவைக் கூப்பிட, ஏதோ யோசனையில் இருக்க, ஆனால் அவளது கண்ணில் ஒரு துளி கூட கண்ணீர் வரவில்லை என்பதை கவனித்தாள்….

தன் அப்பாவின் மேல் வெறுப்பை மட்டும் வைத்திருந்தவளுக்கு துக்க செய்தியைக் கேட்டதும் மனதில் அழுது கொண்டு சோகத்தை மட்டுமே முகத்தில் காட்டுகிறாள்… .


அருகில் சென்று என்னம்மா!.. அர்ச்சனா… உங்க அப்பா இத்தனை நாள்களாக உன் அண்ணனுடன் தான் இருந்திருக்கிறார் என்று நினைத்து கவலை கொள்கிறாயோ!..


இல்லைங்க!.. அத்தை எங்க அண்ணன் இத்தனை மாதங்களாக எனக்காக வேலையும் பார்த்து ,எங்க அப்பாவுக்காக நொண்டியாக நடித்து யாரென்று தெரியாத அவருக்கு நல்லதொரு சேவை செய்திருக்கிறான் அதை நினைத்து பெருமைக் கொள்கிறேன்..


அதற்குள்ளும் அவங்க அண்ணன் பவித்திரன் வாசலில் வந்து நிற்க, அவங்க அப்பாவை கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தார்கள்… வெளியே கொண்டு வந்ததும் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாக குவிந்து இருக்க கண்ணீரோடு அவருக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்…பவித்திரனும் அவங்க அப்பாவுக்கு இறுதியாக செய்ய வேண்டிய காரியத்தை நிறைவாக செய்து முடித்தார்கள்…


பவித்திரனும் இறுதியாக அவரது முகத்தைப் பாரத்து விட்டு, மனசுக்குள்ளேயே, அப்பா ..நீங்க எங்கள வெறுத்து ஒதுக்கிட்டு போனாலும் உங்கள் மேல் எனக்கு ஒரு துளி கோபமும் கூட இல்லை…


எங்கிருந்தாலும் நீங்க நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன்… ஆனால் என் அருகிலேயே இத்தனை மாதங்களாக இருந்துருக்கீங்க,. உங்களின் ஆத்மா சாந்தியடையனும் அப்பா என கதறி கதறி அழுது கொண்டே இருக்க அப்பாவை அடக்கம் செய்தார்கள்…


அர்ச்சனாவுக்கு என்னதான் அப்பாவின் மேல் கடுமையான கோபம் இருந்தாலும் இறந்த நிலையில் கண்டதைப் பார்த்ததும் தன்னை அறியாமலேயே கண்ணீர்வந்தது… வீட்டிலிருந்து கொண்டு செல்லும் போது அவளால் அழுகையை அடக்கி வைக்க முடியாததால் கண்ணீர் விட்டு அழுததை நினைத்து பாரக்க அர்ச்சனாவுக்கு மறுபடியும் அழுகை வந்தது…


பவித்திரனும் காரியத்தை முடித்த பிறகு அர்சசனாவின் அருகில் வந்து உட்கார்ந்தான்...எல்லோரும் ஒவ்வொரு பக்கமும் சோகத்தில் இருந்தார்கள்…


டேய்.. மச்சான்.. இப்படி சாப்பிடாமல் இருக்காதே… , நீ சாப்பிட்டால் தான் தங்கச்சியும் சாப்பிடும்,என்று சொல்லிக் கொண்டே இருக்க கண்டுகொள்ளாமல் அதே சிந்தனையில் இருந்தனர்..


பிறகு விஷ்ணுசாமி மாமா வந்ததும் சாப்பிடும் படி சொன்னார்..

இங்க பாருடா!.. பவித்திரன் இனிமேல் முடிந்ததை நினைத்து வருத்தம் கொள்ளாதே!.. அர்ச்சனா நல்லா படித்து முடித்ததும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய கடமை உனக்கிருக்கிறது… அதை கொஞ்சம் மனசில் வைத்துக்கொள் என அறிவுரை கூறினார்… அதற்கேற்ப அம்பிகா அத்தையும் சாப்பாடு பரிமாறினர்…இருவரும் மெளனமாக சாப்பிட்டு எழுந்தார்கள்…


அனுகரன் வீட்டு வேலை நடக்கும் இடத்தில் பார்வையிட்டார்… இன்ஜினியரிங் சந்தோஷ் அனைத்து வேலையாட்களையும் ஓங்கி சத்தமிட, பேசிக்கிட்டு இருக்காமல் வேலைப் பாருங்க என குரல் கொடுத்துக்கிட்டே இருந்தார்… வீடு கட்டும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது…


அனுகரன் இன்ஜினியரிங் சந்தோஷிடம் வீட்டுக்குக் கிளம்புறேன் என்று கூறினார்.. இருங்க..சார்.. டீ.. . வாங்க போயிருக்காங்க குடிச்சுட்டு கிளம்புங்க என்றார்..


இல்லப்பா!..இப்போது டீ குடிக்க மாட்டேன்.. மதியம் ஒன்னு ஆகுது.. சாப்பிட்டதும் சிப்ட் வேலைக்குக் கிளம்பனும் நீங்க தான் நல்லா கவனிக்கிறிங்களே!..அதுவே போதும் நாளைக்கு சந்திப்போம் என்று சொல்லி விடைபெற்றார்…


கடையில் காலையிலிருந்தே வேலைப் பணி அதிகமாக இருந்ததால் சாந்தினிகா உட்கார கூட முடியாமல் சோர்வாக இருந்தாள்.. அவளது பக்கத்திலேயே இருந்த சிவானி இவளை மிகவும் வேலை வாங்கினாள்..


சிவானி சொன்ன ஒவ்வொரு வேலைகளையும் செஞ்சு முடித்த பிறகு,நாற்காலியில் போய் அமர்ந்தாள்… காபி கொண்டு வந்த அவளுடைய தோழி ரேஷ்மா… கடையில் சேர்ந்தவுடன் பேசி பழகிய நல்ல பொண்ணு தான் ரேஷ்மா.. வந்த நாளில் சாந்தினிகாவுக்கு வேலையை எப்படி செய்யனும், கஷ்டமரிடம் எப்படி பேசனும் என்பதை விவரமாக சொல்லிக் கொடுத்தவள்…


இந்தாடி!.. காபி.. குடிச்சுட்டு வேலையைப் பாரு… இன்னிக்கு இவ்வளவு வேலை இருக்குதுடி.. அதுலேயும் பாதி தான் முடிச்சுருக்கேன்…


சரிம்மா !..முதலில் காபியைக் குடிச்சுட்டு அடுத்த வேலையைத் தொடங்கும்மா!... கொடுத்து விட்டு கிளம்ப,.. மீண்டும் அவளை அழைத்தாள் சாந்தினிகா..


சொல்லுடி.. எதுக்கு என்னை கூப்பிட்ட…


நீ மட்டும் இல்லைனா என்னால் இந்த வேலைகளைக் கற்றிருக்க முடியாது.. அதுக்கு உனக்கு மிகப்பெரிய நன்றி…என்று சொன்னதும்.. பேசாமல் திரும்பி போனாள்…


ஏய் !..நில்லு.. டி..

.ரேஷ்மாவை அழைத்த சாந்தினிகா…


ம்ம்..சொல்லுடி.. திரும்பிக் கொண்டே…


நான் சொன்னதுக்கு ஒன்னுமே பதில் சொல்லாமல் போற !..


உன்கிட்ட நேற்றே என்ன சொன்னேன்.. நன்றியெல்லாம் சொல்லாதே எனப் பல முறை சொல்லிட்டேன்.. திரும்ப திரும்ப அதையே சொல்ற… என்றாள் கோபமாக !...


ஸாரி.. டி.. இனிமேல் சொல்லவே மாட்டேன்.. நீ போய் உம் வேலையைப் பாரு என்று சொன்ன சாந்தினிகா… காபியைக் குடிச்சுட்டு தனது பணியை தொடர்ந்தாள்…


மதியம் அனுகரன் கங்காதேவியை அழைத்து வேலைக்குக் கிளம்புறேன்,நீ சாப்பிட்டு முடித்ததும் ஞாபகமாக மாத்திரை போட்டுக்கோ என்றார்..


சாந்தினிகா மதியம் சாப்பாடு தோழி ரேஷ்மாவுடன் சேர்ந்து சாப்பிட.. உன்னிடம் ஒன்னு சொல்றேன் அதை யாரிடமும் ......சொல்லவே கூடாது..


ம்ம்ம்.. சரிடி.. என்ன விஷயம்னு சொல்லு..வாயில் சாதத்தை வைத்துக் கொண்டே ஆர்வமாக கேட்க…


இன்னிக்கு உம் பக்கத்தில் இருந்தாளே!..பேரலகி ...சிவானி அவளை பற்றி பேச ஆரம்பிக்க!..


உடனே சாந்தினிகா. அவளுக்கென்ன நல்லாதான இருக்குறா!..


மறுகேள்வி சாந்தினிகா கேட்டு, சாப்பிடும் போது அவளை பத்தி பேசாதே, எனக்கு கோபமாக வருது…


ஏன்டி!..என்னாச்சு!..சிவானி உன்னை.எதுவும் திட்டுனாளா!..


அவ எப்ப பார்த்தாலும் என்னை வேலை வாங்கிட்டே இருக்குறா!..இன்னொரு பக்கம் கோபப்பட்டு வெடுக்கென்னு பேசுறா!..அதான் கஷ்டமாக இருக்குது… என்று சாந்தினிகா கூற…


அதற்கு ரேஷ்மா.. உன்னிடம் மட்டும் இல்ல, எல்லாரிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறாள்…நானும் வந்த புதுசுல இப்படி தான் செஞ்சா!.. அப்புறம் போக போக அவளே என்னிடம் வேலை வாங்க மாட்டாள்..அவ யாரிடமும் நெருங்கி பேசி பழக மாட்டாள்… ஆனால் வேலை நல்லா பார்ப்பாள்… அவளுக்கென்று நம்ம கடையில் நல்லதொரு பேரு உண்டு…


நம்ம முதலாளி எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் அவளிடம் தான் கேட்பார்..சிவானி இந்த கடையில் பத்து வருடங்களாக வேலை பார்க்கிறாள்.. அதனால் அவ என்ன வேலை செய்ய சொன்னாலும் முகம் சுழிக்காமல் செய்து தான் ஆகனும் ரேஷ்மா. என்றாள்


அப்படியா!..என்றாள் சாந்தினிகா…


அவளிடம் ஒரேயொரு முறை

பேசினேன்.

. அவள் என்னிடம் முகம் கொடுத்து கூட பேசல… டி.. என்று ரேஷ்மா சொல்ல,


சாந்தினிகா சாப்பிட்டு முடித்து கையைக் கழுவினாள்.. அதற்குள்ளும் கஷ்டமர் வர ஆரம்பிச்சுட்டாங்க!.. எழுந்திரு ரேஷ்மா!.. நம்ம இரண்டு பேரும் இவ்வளவு நேரம் சாப்பிடுறது தெரிஞ்சா!.. ..யாராவது திட்டப் போறாங்க எனச் சொல்லி வாயை மூடல…


அதற்குள்ளும் சிவானி வந்துவிட்டாள்…


சாந்தினிகா!..நீ சொன்னது நடக்கப்போகுது.. அங்க பாரு சிவானி வந்துட்டா, என்று பயத்தோடு கூறினாள் ரேஷ்மா…



மாலையில பங்கஷன் நடந்துக் கொண்டிருக்க, கல்யாணியும் பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க… கீதாவுக்குத் தாய்மாமன் சீர் வந்ததும் சித்தி நிரஞ்சனா முகத்தில் சந்தோஷம் பெருகியது…


பங்கஷனுக்கு வரும் விருந்தாளிகளை வாசலில் நின்று வரவேற்க, உள்ளே கீதாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா விமர்சியாகவும் சிறப்பாகவும் நிறைவடைந்தது…


கீதாவை அலங்கரித்து போட்டோ விதவிதமாக எடுக்க ஆரம்பித்தார்கள்.. பிறகு குடும்பத்தோடு இணைந்து நிறைய போட்டோக்கள் எடுத்தார்… கீதாவும் அவங்க அப்பா, அம்மவோடு போட்டோ எடுத்தாள்…


மாடியில் நிரஞ்சனாவின் கணவர் சாப்பிட வாங்க என அழைத்து அன்போடு எல்லாரையும் உபசரித்தார்கள்…


கல்யாணி நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, ஊருக்குப் போகனும் என்ற நினைப்பில் இருந்தாள்… தங்கைக்குச் செய்ய வேண்டியதை செஞ்சு முடித்து விட்டாச்சு… இப்பவே கிளம்பனும் வந்த வேலை முடிஞ்சது என்று சித்தியை தேடினாள்…


சித்தி போய் பார்த்து நான் கிளம்புறேன்…நேரமாயிடுச்சு..எனச் சொன்னதும்.. ஏன்டி.. இரவாயிடுச்சு,நீ இப்போது போக வேண்டாம்.. காலையில் சீக்கிரமாக பஸ் ஏற்றி விடுகிறேன்… போ.. கீதாவோட இரு.. என்று கூறினாள்…


அவங்க சித்தி பேசியதுக்கு மறுத்துப் பேசாமல் சென்றாள்… கல்யாணியும் கீதாவோடு சேர்ந்து போட்டோ எடுத்தாள்… பிறகு தன் கணவனின் ஞாபகம் வந்ததும் தனிமையில் போய் அமர்ந்தாள்…பழைய நினைவுகள் கண்முன்னே வந்து போனது…


எனக்கும் கார்த்திகேயனுக்கும் கல்யாணம் அவ்வளவா விமர்சியாக இல்ல, போட்டோ அந்த மாதிரி எதுவும் எடுக்கல.. ஏதோ.. வீட்டுல வச்சு தாலியை கட்டி முடிச்சுட்டாங்க!.. நானும் அவங்களும் சேர்ந்து போட்டோ எடுத்ததே இல்ல,.. கல்யாண போட்டோவும் வீட்டுலேயே இல்லை… இன்னும் எப்படியாவது ஒரு வாரத்தில் நானும் எம் மாமாவும் சேர்ந்ந மாதிரி ஒரு போட்டோவை ரெடி பண்ணச் சொல்லனும் என்று யோசித்து கொண்டிருக்க அவளது போன் ரிங் அடித்துக் கொண்டே இருக்க, கீதா எடுத்து வந்து கொடுத்தாள்..


கல்யாணி பட்டனை அழுத்தி பேச ஆரம்பித்தாள்.. சொல்லுங்க!.. மாமா.. வெளியே உட்கார்ந்து இருந்தேன்..போன் உள்ளே இருந்ததால் சத்தம் கேட்கல..


சரிம்மா!.. பங்கஷன் நல்லபடியாக முடிஞ்சதா!..எனக் கேட்ட கார்த்திகேயன்…


ம்ம்ம்.. ரொம்ப நல்லா முடிஞ்சது.. சித்தியோட அண்ணன், தங்கச்சி எல்லாத்தையும் பார்த்தேன்.. அவங்களும் என்னிடம் நலம் விசாரித்தார்கள்.. இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் தெருவே பேசுகின்ற அளவுக்கு தாய்மாமன்கள் அப்படி செஞ்சு தள்ளிட்டாங்க!.. எஙக சித்தி முகத்தை பார்த்தால் அப்படி ஒரு மகிழ்ச்சி.. வீட்டுல எல்லாரும் சந்தோஷமாக இருக்காங்க என்று படபடவென பேசினாள் கல்யாணி..


எதிர்புறம் அழைப்பில் கார்த்திகேயன் பேசாமல் இருக்க, ஹலோ.. ஹலோ.. என்னாச்சுங்க.. லைனில் இருக்கீங்களா எனக் கேட்க…


ம்ம்முமு.. லைனில் தான் இருக்கேன் என்றான்.. மெல்லிய குரலில்…


ஏங்க என்னாச்சு ஒரு மாதிரியாக பேசுறீங்க!.. ஏதாவது உடம்பு சரியில்லையா!.. பதற்றத்துடன் கேட்டாள்..


ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. எனக்கு ஒரு தங்கை இருக்கா!.அவளின் ஞாபகம் வந்தது..அதான்…


ஓ.. கோ.. உங்களுக்கு தங்கச்சி இருக்காளா!..சொல்லவே இல்ல, உங்க குடும்பத்தைப் பத்தி என்னிடம் பேசினால் தானே தெரியும் என்றாள் கல்யாணி…


சரிம்மா!.. கண்டிப்பாக சொல்றேன்.. நீ ஊருக்கு வந்ததும் எல்லாம் கதையும் சொல்றேன்.. டி… செல்லம்..


அடடடா!.. எனக்கு புல்லரிக்குது.. மாமா.. நீங்க என்னை செல்லம் என சொன்னதும்… என்னால முடியல… ஆனந்தத்தில் கூறினாள் கல்யாணி…


கல்யாணி.. எனக்கு தூக்கமா வருது.. நாளைக்கு எப்போது கிளம்புறேனு சொல்லு… பஸ் ஸ்டாண்டில் வெயிட் என்றான் கார்த்திகேயன்…


இல்லைங்க!..நானே கடைக்கு வந்துடுறேன் ..என்று கூறியதும்..


வேண்டாம்.. வேண்டாம்.. என பதற்றமடைந்தான் காரத்திகேயன்..


எதுக்காக டென்ஷன் ஆகுறீங்க, ஏதோ என்கிட்ட மறைக்கிற மாதிரி தோணுதே என்றாள் சந்தேகமாக!..


அதெல்லாம் உன்கிட்ட எதையும் மறைக்கல…நாளைக்குப் பார்ப்போம்… எனச் சொல்லிட்டு போனை வைத்தான்…


இவுக பேசுறத பார்த்தால் என்னிடம் ஒரு விஷயத்தை மறைக்கிற மாதிரி தெரியுது.. நாளைக்கு நம்ம அங்க தான் போறோம் ..இப்பவே அத நினைச்சு குழப்பக்கூடாது என்று நினைத்து தனக்குள்ளே பேசிக்கிட்டு இருக்க,


கல்யாணி தன்னால் பேசிகின்றதை பார்த்ததும், கீதா...அக்கா.. அக்கா.. எனக் கூப்பிட்டாள்..



சொல்லுடி.. என்னாச்சு… .


எவ்வளவு நேரம் தான் உங்கள கூப்பிடுறது… வேற ஏதோ யோசனையில் இருக்கீங்க!..


ஓ.. அப்படியா.. ஸாரி… மா.. என்னன்னு சொல்லு…


அக்கா.. உங்கள அம்மா கூப்பிட்டாங்க!.. என்று சொன்னதும் கல்யாணிஅவங்க சித்தியின் அறையை நோக்கி சென்றாள்…


..மீண்டும் சாந்தினிகா வருவாள்…
 
Top