• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 15)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
புதுமனை புகுவிழா


அத்தியாயம் 15


கங்காதேவியும், சாந்தினிகாவும் சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் பத்திரிக்கை வச்சுட்டு, அப்படியே அம்மாவை வீட்டுல இறக்கி விட்டுட்டு கடைக்குச் வந்து அவளது பணியைத் தொடர்ந்தாள்…

அப்போது சிவானி… அருகில் வந்து நின்றாள்.. கவனித்த சாந்தினிகா எதுவும் வேணும்மா, என்று கேட்க,


இல்லை.. சும்மா தான் ..நீ டிசைன் பண்றத பார்க்கனும்னு தோணுச்சு.. அதான் …


ஓ.. சரி. சிவானி..


முதலாளி வந்து அமர்ந்தார்.. ச்சே என்ன வெயிலு.. இந்த வெயிலில் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வர வேண்டியது இருக்கு… என்று பேசிக் கொண்டு இருக்க..


அவரைச் சந்திக்க, ஹலோ .சார்.. கார்த்திகேயன்... நான் பக்கத்து ஊரில் நுங்கம்பாக்கம் ஏரியாவில் இருக்கிற சங்கீதா டெக்ஸ்டைலில் பணிபுரிகிறேன்…இங்க புதியதாக வந்திருக்கும் சேலைக்கு டிசைன் கொடுக்கிறதாக கேள்விப்பட்டோம்… அத பத்தி எங்க மேடம் விசாரித்து வரச் சொன்னார்கள்…


உடனே.. ஜெயச்சந்திரன் அப்படியா! வந்து சேரில் உட்காருங்க, சேலையைக் காட்டச் சொல்கிறேன்.. ரேஷ்மா, சிவானி.. டிசைன் பண்ண சேலையை எடுத்துக் கொண்டு வந்து காட்டுங்க!..


அதையெல்லாம் பார்த்த கார்த்திகேயன் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பினான்..சேலையை பார்த்தவுடன் அவங்க மேடம் போன் செய்தார்கள்…


கார்த்திகேயன் நீங்க, கடை முதலாளியிடம் போனைக் கொடுங்க!..கார்த்திகேயன் எங்க மேடம் உங்களிடம் பேசனும்மா என்று சொல்லி கொடுக்க,அவரும் பேசினார்கள்… .


பேசி முடித்ததும், ஹலோ!.. கார்த்திகேயன்.. அவரிடம் பேசிட்டேன்.. நாளைக்கு போன் பண்ணுவாங்களாம்.. அதனால் என் மொபைல் நம்பரைக் கொடுத்துட்டு அவங்களிடம் சேலை டிசைன் கொடுத்து விட சொல்லியிருக்கிறேன்.. அதையும் வாங்கிட்டு வா என்றார்கள்…


கார்த்திகேயனும், சேலை வாங்குவதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த வேலையில், கல்யாணி போன் செய்தாள்..கார்த்திகேயன் வெளியே போய் பேசிட்டு இருந்தான்...


அப்போது ஜெயச்சந்திரன், ரேஷ்மாவை அழைத்து, சாந்தினிகாவை இன்னொரு சேலை ரெட் கலரில், ஆரி ஒர்க் வைச்சு டிசைன் செய்திருந்தாள் ,அவள் வந்துட்டாளா!..



ஆமாம்.. ஐயா… மாடியில் தான் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்…அவளை அந்த சேலையை எடுத்துட்டு கீழே வரச் சொல்லும்மா!..


ரேஷ்மாவும் சாந்தினிகாவும் கீழே வந்தார்கள்…அவளும் சேலையை முதலாளியிடம் கொடுத்த போது …


ம்ம்ம்..வெரி.. குட்..சாந்தினிகா.. இப்படி தான் வேலையில் கரெக்ட்டாக இருக்கனும்… உன்னை நினைச்சா பெருமையாக இருக்கிறது என்று பாராட்டு மழை பொழிந்தார்…


ஐயா, நான் அப்படி என்ன செஞ்சேன்.. இந்த அளவுக்கு என்னை பாராட்டாதீர்கள் என்றாள் கிண்டலாக…


நீ என்னிடம் ஒரு மணி நேரம் லீவு கேட்டுட்டு வேகமாக சென்றாய்..அந்த ஒரு மணி நேரத்தை கரெக்ட்டாக செலவழித்து விட்டு கடைக்கு வந்து விட்டாய்.. அத தான் நினைச்சேன்.. நீ உங்க வீட்டு பால் காய்ச்சிக்கு எங்களை அழைப்பாயா!..


கண்டிப்பாக ஐயா! .உங்களிடம் சொல்லாமல் இருப்பேனா!.. என்று பேசிட்டுஇருந்தவள் நேரத்தைப் பார்த்து விட்டு, ஐயா என்னோட வேலையைப் பார்க்க போகிறேன் என விறுவிறுவென ஓடினாள்..


சாந்தினிகா மாடிக்குச் சென்றதும், கடைக்குள் நுழைந்தான்….ஸாரிங்க.. சார்.. போன் வந்தது அதான்.. பரவாயில்லப்பா,.. இந்தா..பா..ஓர்க்..சேலை இதை கொண்டு போய்ட்டு எத்தனை சேலைக்கு ஒர்க பண்ணனும் என்ற தகவலை சொல்லச் சொல்லு என்றார் ஜெயச்சந்திரன்… ஓ.. கே.. சார்.. என் சொல்லி விடைபெற்றான்…


மாலையில் ராகவியைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போனதும் கோபப்பட்டு பேசினான் கார்த்திகேயன்…


ஏங்க வந்ததுமே இப்படி டென்ஷன் ஆகுறீங்க!.. அப்படி உங்களுக்கு என்ன பிரச்சினை, என்று தெரியாதது போல் கேட்டாள்…


ஏன்டி.. உன்கிட்ட எத்தனை முறை தான் சொல்வது.. ஏதாவது ஒரு வேலையில் இருக்கும் போது போன் பண்ணாதே!..இன்னிக்கு புது கடைக்குப் போயிருந்தேன்.. அந்த சமயத்தில் நீ போன் பண்ணி என்னை தொந்தரவு செய்து விட்டாய்,..


ஸாரிங்க!..அவங்க டீச்சர் எனக்கு போன் பண்ணி எங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறதால், கொஞ்சம் விரைவாக வந்து உங்க பொண்ண கூட்டிட்டு போங்க, இன்று ஒரு நாள் மட்டும் தான் என்று சொன்னார்கள்… . அதான் உங்களுக்கு போன் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது…


சரி.. சரி.. உன்னை மன்னித்து விடுகிறேன்..போய்.. . டீயைப் போட்டு எடுத்துட்டு வா, என்றதும் ,கார்த்திகேயனை முறைத்து பார்த்து கண்ணத்தை கிள்ளி விட்டு இந்த அதிகாரத்துக்குக் ஒன்னும் குறைச்சல் இல்ல என்று ஓடினாள்…


ஏன்டி. கல்யாணி.. இப்படி..கிள்ளிட்ட..

வலிக்குது… டி…


என்னப்பா,..என்னாச்சு.. ராகவி..கேட்க..


அதற்கு கார்த்திகேயன், உங்க அம்மா என்னை கிள்ளிட்டு போகிறாள்.. அவளை போய் கிள்ளிட்டு வா என விளையாட்டாக சொல்ல,


ராகவியும், அவங்க அம்மாவைத் தேடி போக, கிச்சனில் இருந்த சத்தம் வந்ததும், அம்மா கொஞ்சம் என்னை தூக்கி இடுப்பில் வை என்றதும்..


தன் மகளின் பேச்சைக் கேட்டு இடுப்பில் வைத்த கல்யாணியின் கண்ணத்தை கிள்ளிவிட்டு சரட்டென்று கீழே இறங்கி அவங்க அப்பாவிடம் போய் சொல்ல,


கல்யாணியோ கையில் கரண்டியோட பின்னால் வர, கரண்டி ஓங்கி அடிக்க வரும் போது ராகவியைத் தூக்கிட்டு அடிவிழாமல் இருப்பதற்கு தப்பித்து நழுவி நழுவி சென்றார்கள் ..நேரம் போவது தெரியாமலேயே ஹாலில் விளையாடினார்கள்… அதற்குள்ளும் அடுப்பிலிருந்து பால் பொங்கிய சத்தம் கேட்டதும் வேகமாக சென்றாள்… பிறகு கணவனுக்கு போட்டு வந்து கொடுத்தாள்..கார்த்திகேயனும் குடிச்சு முடிச்சுட்டு கிளம்பினான்..



பவித்திரன் தன் தங்கை அர்ச்சனாவிற்கு ஊரும் பேசும் அளவிற்கு திருமணத்தை முடித்தான்… தங்கை அர்ச்சனா தன் கண்ணும் முன்னால் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக படித்த மாப்பிள்ளையே அதே ஊரிலேயே வேலைப் பார்க்கும் டாக்டர் சேகர் என்பவருக்கு ,கட்டிக் கொடுத்து விட்ட சந்தோஷம் அவனுக்கு பெரும் திருப்தியை அளித்தது.. ஆனால் அவனது இதயத்தில் ஏதோ ஒரு உணர்வு, அவனுக்குள்ளேயே சாந்தினிகாவைப் பார்க்கனும் என்ற நினைவோடு அவன் இருக்க,. .


அவளுக்கு கல்யாணம் முடிஞ்சதா, இல்லையா என்றே தெரியாமல்… எப்படி அவளை சந்திப்பேன்.. அவ எங்க இருக்கிறாளோ,இப்ப என்னதான் செய்து கொண்டிருப்பாளோ என்று அவளை பார்க்க மனம் துடித்தது..


அப்போது அவனுடைய நண்பன் ,சம்பத் பல நாட்கள் கழித்து போன் செய்தான்.. பவித்திரனும் இவனது அழைப்பை ஏற்று பேசத் ஆரம்பிக்க…


என்னடா!.. எப்படி இருக்க, மறுபக்க எதிரொலிப்பில் சம்பத், கேட்க.. அதற்கு பவித்திரனும் ஏதோ.. இருக்கிறேன்…என்று வருத்தமாக கூற… ஸாரிடா.. மச்சான்.. என்னால் உன் தங்கை கல்யாணத்துக்கு வர முடியாமல் போனது.. என்று வருத்தத்துடன் சொன்னான் சம்பத்…


பரவாயில்ல.. டா.. என பேச ...


ஏன்டா!.. மச்சான்.. ஒரு மாதிரியாக இருக்குற… சொல்லுடா.. உனக்கு என்ன பிரச்சினை.. உன் குரலிலேயே ஏதோ ஒரு தடுமாற்றம் தெரியுது…


பவித்திரன் சம்பத்திடம் மனசுக்குள்ளேயே புதைத்து வைச்சிருந்த ரகசியத்தை கூறினான்… எனக்கு சாந்தினிகாவின் நினைவு அப்படியே தான் இருக்கிறது.. அவளை எப்போது மறந்ததே இல்ல.. அவள் இல்லாத வாழ்வு எனக்கு பிடிக்க வில்லை.. அவளின் குணம் எங்க அம்மாவை பரிவாக பேசினாள்..


சாந்தினாகாவின் முகம் என் கண்முன்னே வந்து போகிறது..


மறு பக்கம் கேட்டுக்கொண்டிருந்த சம்பத், அவளை இன்னும்மா நீ மறக்கல… சாந்தினிகாவை நினைச்சு தான் கல்யாணமே வேண்டாம் என்று சொன்னாயோ!..


பைத்தியக்காரா!. அவளுக்கு கல்யாணம் முடிந்திருந்தால் என்னடா!... செய்வ என கேட்டான் சம்பத்…


இல்லடா!.. அவளுடைய ஆசையே வீடு கட்டி போகனும் என அடிக்கடி சொல்லியிருக்கிறாள். கண்டிப்பாக சொல்றேன் அவளுக்கு கல்யாணமே முடிஞ்சிருக்காது என்றான்..


ஆரம்பத்திலேயே கூறியிருந்தால் அவளை பத்தி விசாரித்து இருப்பேன்.. இப்ப அவள எங்கே போய் தேடுவது என்று சொன்னான்..


டேய்!.. அவ எப்போதும் அந்த பஸ் ஸ்டாப்பை தாண்டி தான் வீட்டுக்குப் போவாள்…அங்க போய் பார்த்தால் தெரியும்…என்றான் பவித்திரன்..


நான் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறேன்.. இரண்டு நாட்கள் கழித்து தான் ஊருக்குப் போவேன்… அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு என்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் சம்பத்…


பவித்திரன் சற்று யோசிக்க, வேகமாக கிளம்பிக் கொண்டிருக்கையில் அவங்க அத்தை அம்பிகா வர,


சொல்லுங்க, அத்தை..


என்னடா!. பவித்திரன்.. எங்கயோ கிளம்புகிற மாதிரி தெரியுது…


நானே வீட்டுக்கு வரனும்னு நினைச்சேன்.. நீங்களே வந்துட்டீங்க… எனக்கு சென்னையில் ஒரு வேலை பார்த்துட்டு இருந்தேன்ல அங்க இருந்து இப்போது தான் போன் பண்ணாங்க!..சின்ன வேலை தான் முடித்ததும் கிளம்பி விடுவேன்.. அதான் உங்களிடம் சாவியைக் கொடுக்கலாம் என்றிருந்தேன்…


சரிடா.. பார்த்துப்போய்ட்டு வா… அத்தை வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.. மாமாவிடம் சொல்லி விடுங்கள்.. சென்னைக்குப் போனதும் கால் பண்றேன் என்று சொல்லிட்டு பைக்கை எடுத்தான்…


சாந்தினிகா தனது பணியை முடிக்க முடியாமல் சோர்வாக இருந்தாள்.. கடையும் பூட்ட வேண்டிய நேரமும் வந்துடுச்சு..பாதி சேலையை வீட்டிலேயே போய் முடிப்போம் என்று எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கிளம்பினாள்..



உடனே முதலாளி.. வீட்டுல கொண்டு போய் முடிக்கப் போறியாம்மா! ..


ஆமாம்.. ஐயா என்று சொல்லிட்டு அவளது ஸ்கூட்டியை எடுத்து வீட்டுக்குப் புறப்பட்டாள்..

அனுகரனும் டி வி பார்த்துக் கொண்டிருக்க.. கங்கா தேவி பூ கட்டிக் கொண்டிருந்தாள்… சாந்தினிகா சோர்வாக உட்கார,


என்னடி.. என்னாச்சு,.. வேலை அதிகமாக இருந்துச்சா!..


..ம்ம்ம்..இன்னிக்கு மட்டும் இல்ல, தினமும் என்று வருத்தமாக சொன்னாள்…


என்னடி!.. சொல்ற.. கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லு ..என்றாள் கங்கா தேவி.. அம்மா இன்னிக்கு மிகப்பெரிய கடையிலிருந்து ஆர்டர் வந்துருக்குது.. இந்த ஆர்டர் எனக்கு மட்டுமே வந்ததுனு முதலாளி ஐயு சொன்னாங்க!.. . சேலை டிசைன், ஒர்க்.. எம்பிராய்டரி.. எல்லாமே ஒரு வாரத்துல 1000சேலைகளைஒர்க் பண்ணி அனுப்பச் சொல்லியிருக்காங்க!..


அதனால் தான் இப்படி சோர்வாக இருக்கிறேன்…அவங்க அம்மாவிடம் எனக்கு சாப்பாடு வைச்சு ஊட்டி விடுங்கள்..சாப்பிட்டுக்கிட்டே இன்றைக்கு உள்ள பணியை முடிச்சிடுவேன் என்று கூறினாள்…


கங்கதேவியும் தட்டில் வைத்து வந்து சாந்தினிகாவிற்கு ஊட்டி விட்டாள்… அந்த சமயத்தில் பவித்திரனின் மேல் வைத்திருந்த காதலை அம்மாவிடம் எப்படி சொல்வது, சொல்லவா, வேண்டாம்மா!.. என்று சிந்தனையில் இருக்க,சோற்றை ஆ.. வாயில் வாங்கி கொண்டு சேலையில் ஓர்க் செய்ய ஆரம்பித்தாள்...


ஆனால் பவித்திரனை பற்றி அம்மாவிடம் சொன்னால் என்ன நினைப்பார்களோ என்று தெரியவில்லை..அவனுடைய நினைப்பு என் மனசில் இருக்கிறது.. பவித்திரனுக்கு என் ஞாபகம் இருக்கும்மா!..இல்லை வேற கல்யாணம் முடிஞ்சுருக்கும்மா, என்ற குழப்பத்தில் இருந்தாள்…


அவங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி சைகையால் பேசிக்கிட்டு இருந்தார்கள்.நீசொல்லு.. முதலில்.. என்று அப்பா, அம்மாவிடம் கூற… அதற்கு அம்மா.. சொல்லமாட்டேன்.. நீங்க சொல்லுங்க என்று…


சொல்லுங்க, என்ன விஷயம்… என்னிடம் சொல்லதானே வந்தீங்க… சொல்லுங்க.. சொல்லுங்க…


உன்னை பொண்ணு கேட்டு நம்ம வீட்டுக்கு வந்தாங்க!.. அதுவும் பெரிய இடத்தைச் சேர்ந்தவங்க,அவங்களோட குடும்பம் ரொம்ப கெளரவமான குடும்பம்.. உன்னை கடையில் வைத்து பார்த்துருக்காங்க, உன்னைப் பத்தி விசாரித்து, நம்ம வீட்டுக்கே பெண் கேட்டு வந்துட்டாங்க...உன்னை அந்த மாதிரி குடும்பத்தில் தான் கட்டிக் கொடுக்கனும் ..என்று கங்கா தேவி சொன்னதும் சாந்தினிகா அதிர்ச்சி ஆகிறாள்… .


மீண்டும் வருவாள் சாந்தினிகா ….


வார்த்தைகளின் எண்ணிக்கை:..1075
 
Top