• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 2)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
அத்தியாயம் 2


சமையல் வேலைகளை முடித்ததும் தன்னுடைய அம்மா கங்கா தேவியை எழுப்பச் சென்றாள்…. அப்போது குளிர் ஜீரம் வந்ததால் நடுக்கத்தில் படுத்திருந்த அம்மாவை கண்டு பயத்தில் அப்பாவை அழைத்தாள்…


"என்னம்மா !..எதற்காக கத்துற,...


"...அப்பா அம்மாவுக்கு குளிர் ஜீரம் வந்துடுச்சு… எழுந்திருக்கவே மாட்டிக்காங்க,.. எனக்கு பயமாக உள்ளது… .'


பயப்படாதே,... சாந்தினிகா… உங்க அம்மாவுக்கு ஒன்றுமில்லை… இவளுக்கு இந்த ஜீரம் அடிக்கடி வருவதுண்டு… .


என்னப்பா!.. சொல்றீங்க… இப்படி அம்மா நடுங்கி கொண்டிருக்கிறார்கள்..


"நீங்க அடிக்கடி வரும் என கூறுகிறீர்கள்!... '


ஆமாம்,!... சாந்தினிகா… நீ பதற்றப்படாமல் அடுப்பில் கொஞ்சம் வெந்நீர் சுட வைத்து கொண்டு வா,...


சாந்தினிகாவும் அப்பா சொன்னதை கேட்டு அதுபடியே கொண்டு வந்தாள்… .அனுகரன்… அந்த தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து வெதுவெதுப்பாக இருந்த துணியை கங்காதேவியின் நெற்றியினில் வைத்தெடுத்தார்… .


ஐய்யோ!...' அப்பா சின்ன குழந்தைகளுக்கு செய்கிற மாதிரி செய்யுறீங்க"


இதெல்லாம் சரிப்பட்டு வராது ...வாங்கப்பா உடனே ஹாஸ்பிட்டல் போகலாம்… என்றாள் சாந்தினிகா… .

அனுகரனும்… பதற்றப்படாமல் உட்காரும்மா… .


சாந்தினிகாவும் அப்பா… இவ்வளவு தூரம் சொல்றாங்க!... பார்ப்போம் என பொறுமையாக காத்திருக்க,.


குளிர் ஜீரத்தால் நடுங்கிய கங்காதேவி நெற்றியில் வைத்தெடுத்த சற்று நேரத்தில் குறைந்தது போல தெரிந்தது… .


சாந்தினிகாவும் கவலையில்லாமல் ஆச்சரியத்தில் கவனித்துக் கொண்டிருந்தாள்… .


அனுகரனும் வெந்நீரின் சூடு குறைகிற வரைக்கும் நெற்றியினிலும் கால்களிலும் வைத்தெடுத்து முடித்தார்… .


சாந்தினிகாவும்… அப்பா எப்படி… குறைஞ்சது… ..


ஏம்மா,... உங்க அம்மாவுக்கு எப்போதும் காலையில் எழுந்தவுடன் குளித்து விடுவாள்… ஆனால் எப்போதும் சாயங்காலம் குளிக்கவே மாட்டாள்… .


அப்படியே முகத்தைக் கழுவினாலும் 4 மணிக்கே கழுவி விடுவாள்… இவளுக்கு சாயங்காலம் முகத்தை,கை,கால்களை கழுவினால் குளிர் காய்ச்சல் வந்து விடும்… இவளுக்கு சிறு வயதில் இருந்தே இப்படி உண்டு என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறாள்…


உங்கம்மாவை சாயங்காலம் தண்ணீரில் முகம் அலம்புனாயா !...

ஆமாம்… .அப்பா… .அம்மாவுக்கு கை கால்களை கழுவி விட்டேன்…


சரிம்மா!... சாந்தினிகா… இனிமேல் சாயங்காலம் மட்டும் அம்மாவுக்கு முகத்தை கழுவி விட வேணாம்… .குளிக்க வைத்தாலும் காலையிலேயே முடித்து விடு என்றார் அனுகரன்…


இன்னும் உங்க அம்மா நல்லா தூங்கிருவா,.. இரவில் அவளுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்… .


சரிங்கப்பா,... நீங்க சாப்பிடுறீங்களா,.


ம்ம்ம்… ..வையும்மா!... அப்பாவுக்கு தலைவலியாக இருக்கிறது… .சாப்பிட்டு மாத்திரை போடனும்… .


சாந்தினிகா,... அப்பாவுக்கு சாப்பாட்டை எடுத்து கொண்டிருந்த போது பஸ் ஸ்டாண்டில் ஒரு ஊனமுற்ற இளைஞனை பத்தி அவங்க அப்பாவிடம் சொன்னாள்…


சாந்தினிகா, அந்த இளைஞன் உன்னிடம் பணம் எதுவும் கேட்டானா!...


இல்லப்பா!...அவங்க பார்க்கும் போது பாவம் போல இருந்தது… அதான் ஒரு வேலை வாங்கி தருகிறேன் எனச் சொல்லிட்டேன்… .


அனுகரனும் சிரித்துக் கொண்டே, அதுக்கு அந்த இளைஞன் என்ன சொன்னான்…


அப்பா, அவங்க சரிம்மா,.. தாயே… என்றார்… .நீங்க வேலை வாங்கி கொடுத்தால் எனக்கு அத விட சந்தோஷம் எதுவுமே இருக்காது அப்படினு சொன்னார்… .பா…


சாந்தினிகா, அந்த இளைஞன் ஊனமுற்றவன் அல்ல… உன்னை நல்லா ஏமாத்தி இருக்கான்… .


அப்பா, உண்மையாகவா!. அவன் ஒரு ஏமாத்துக்காரனா,. .


உன்னை மட்டுமல்ல நிறைய பேர்கிட்ட அவன் இப்படி தான் பேசி பணத்தை எல்லாரிடமும் வாங்கிருக்கான்… அவன் இன்னும் போலீஸ் கையில சிக்கவே மாட்டிக்கான்… .


ச்சே… .ச்சே… அவன் இப்படிப்பட்டவனா!... இதுல நான் சொன்ன அறிவுரை கேட்டு நல்லவன் போல நடிச்சான்… .


அவன் பெயரு என்னன்னு தெரியுமா!...


ஊருக்கே… அவன் பேரு தெரியும்… .நியூஸ் பேப்பரில் கூட அவன் பெயரு வந்துருக்குனு சொன்னாங்க,... அவனோட பெயரு வாயில வரமாட்டிக்கு..ஞாபகம் வரும் போது சொல்றேன்… .


பரவாயில்ல…. நியூஸ் பேப்பரில் தான் இருக்குதுனு சொன்னீங்களே!... பார்த்துக் கொள்கிறேன்… .


சாந்தினிகா,... அப்பா சாப்பிட்ட தட்டை வேகமாக எடுத்து வைத்து நியூஸ் பேப்பரை தேடினாள்… .எங்கேயும் தேடி கிடைக்கல… .


காலையில் படிச்சுட்டு இங்க தானே வைச்சோம்… .யாரும் நம்மிடம் வந்து வாங்கிட்டு போனாங்களா,... யோசித்து பார்த்தாள்… .


மணி எத்தனை ஆகுது… எட்டு தான் ஆகுது… அதனால நம்ம மிர்துளா அக்காவிடம் போய் பேப்பரை வாங்கிட்டு வந்துடுவோம்… வேகமாக சென்றாள்… .


அக்கா!... அக்கா,... மிர்துளா,... அக்கா.. என கத்தி கத்தி கூப்பிட்டாள்… யாரும் கதவை திறக்க வில்லை… பின்பு தான் நல்லா பார்த்து, வெளியே தான் கதவு சாத்தியிருக்குது… .


அக்கா எங்கயோ போய்ருக்காங்க!... போல


சரி… நம்ம காலையில் வந்து கேட்போம்…


அவனுடைய பெயரு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவனை போலீஸில் பிடிச்சுக்கொடுக்கனும்.. அப்போது தான் அவன் திருந்துவான் ...சாந்தினிகா.. மனுசுக்குள்ளேயே அவனைத் திட்டினாள்…


எத்தனை பேரை இப்படி பேசி பணத்தை வாங்கியிருப்பான்… .


அப்பப்பா!.. நினைச்சு பார்க்கவே,... பணத்தை இழந்தவங்க நிலைமை கஷ்டமாக இருக்கிறதே,... வேதனை அடைந்தாள்…


நம்ம இத பத்தியே நினைச்சிட்டு இருக்கோமே!... அம்மாவை போய் பார்ப்போம்..


கங்காதேவி நல்லா அசந்து தூங்கி கொண்டிருந்தாள்… காய்ச்சல் அடிக்கிறதா?.. எனப் பார்க்க,..


அனுகரன் கொசுவத்தி வைத்தார்… நீ.. சாப்பிட்டியா,..


"இல்லப்பா ..இனிமேல்.. தான்… .

சாந்தினிகா,..சாப்பிட்டு எப்போதும் போல நாளைக்கு விடியும் பொழுது இனிதாக விடியனும் என்று மனதார கடவுளை வேண்டினாள்… .


பவித்திரன் பாடிக்கொண்டே அவனது ரூமுக்குள் நுழைந்தவன்,..


"துட்டு… .துட்டு… .பள பளக்குது புது நோட்டு!...

என்னை இழுக்குது!...வலை போட்டு!.. ஆசையிலே…. ஓகோ…


டேய்,.. சம்பத் எந்திரிடா… .


என்னடா,...தூங்கிட்டு இருந்த என்னை இப்படி தொந்தரவு பண்ற,...


இன்னிக்கு எவ்வளவு சம்பாதிச்சிக்கிறேன்… பாருடா,...


இது பெரிய விஷயமா!... போடா,.. அடுத்தவங்கள ஏமாத்தி பிழைக்கிறது பொழப்பா,.. போடா .என்றான் சம்பத்… .


சம்பத்… நீயும் ஏன்டா இப்படி பேசுற இதெல்லாம் எதுக்கா,.. என்னுடைய தங்கைக்காக அவளும் நல்லா படிக்கணும் என்பதற்காக…


"நீ மத்தவங்கள ஏமாத்தி பண்ற பிழைப்பு உன்னோட தங்கைக்குத் தெரிந்தது.. அவ்வளவு தான்… அந்த புள்ள உயிரையே விட்டுடிடும்… .'


இல்லடா.. அதுக்குள்ளேயும் எப்படியாவது நல்ல வேலைக்குச் சென்றிடுவேன்… அந்த நம்பிக்கை வந்துடுச்சு… .என்றான் மெல்லமாக…


படுக்கையிலிருந்து வேகமாக எழுந்த சம்பத்,.. இந்த ஏமாத்துக்காரன் என்ற பட்டம் வாங்கிய பிறகு உமக்கு எவர் வேலை கொடுப்பாரு?..


யோசிக்காமல் எதையும் பேசாதே,.. எதுக்கெடுத்தாலும் தங்கைக்காக பண்றேன் எனச் சென்டிமென்டாக பேசி பேசி உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு இருக்கிற…


இப்போது நீ இந்த முகத்தை வச்சிட்டு வெளியே போனால் போலீஸ் பிடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது… .


அதுமட்டுமல்ல நியூஸ் பேப்பரில் உம் போட்டோவைப் போட்டு இவனை நேரில் ,பார்த்தாலோ,.. உடனே போலீஸ் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் என்று போட்டிருக்கிறது….


சம்பத் படபடவென பேச, எதுவும் பேசாது ஊமையாகி போனான் பவித்திரன்…


பவித்திரனை கவனித்த சம்பத்… சரிடா… மச்சான்...இந்த பேச்சை பேசி இன்னும் ஒன்னும் ஆகப் போறதில்லை… வா… சாப்பிடலாம் அழைத்தான் சம்பத்…


பவித்திரனும் மனசுக்குள் இருக்கும் வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாப்பிட சென்றான்… .


மறுநாள் பொழுதில்,..


சாந்தினிகா எழுந்து வாசலில் சாணியைக் கரைச்சு தெளித்து கோலமிட்டாள்… பிறகு அவங்க அம்மாவை பார்க்க போகின்றாள்…


கங்கா தேவி எழுந்து பல் விலக்கி கொண்டிருந்தாள்… அம்மா,.. நீங்க இங்க எப்படி வந்தீங்க,


ம்ம்ம்.. நடந்து தான் வந்தேன்…


நீங்க தான் நடந்து வந்தீங்க,.. தனியாக அதுவும் என்னோட துணை இல்லாமல்,...


அடிப்போடி… நீ தானா,.. சொன்ன… எப்பவும் என்னால் பார்க்க முடியாது நான் ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருந்தாள்… நீங்களா எழுந்து பாத்ரூமுக்குப் போகனும் என சொல்லியிருந்தாய்… அதான் நானே வந்து எனக்கு எப்போதும் போல பல் விலக்க பேஸ்ட் வைப்ப அத போல நானே வைச்சு தேய்க்கிறேன்… .


சரிம்மா!.. நான் உங்களுக்கு வெந்நீர் வைத்து தருகிறேன்… .


வெந்நீரா!.. வேண்டாம்… வேண்டாம்… இந்த தண்ணீரில வாயைக் கொப்பளித்துக் கொள்கிறேன் என்றாள் செல்லமாக கங்காதேவி…


"அவங்க அம்மாவிற்கு வாயைக் கொப்பளித்து விட்டு கூட்டிட்டு வந்து நாற்காலியில் அமர வைத்தாள்…


அம்மா,.. கங்கா தேவி… நான் சொல்றத கேட்பீங்களா,...



ம்ம்ம்… ..எப்போதும் நான் வீட்டுல இருந்தாலும் இல்லையென்றாலும் என்னிடம் சொல்லாமல் எங்குமே செல்லக்கூடாது...சரியா…


சரிடி… எனச் சொன்னவுடன்…


அவங்க அம்மாவிற்கு காபி போட்டுக் கொண்டு வந்தாள்… அனுகரனும் சீக்கிரமாக எழுந்து ,மகள் சாந்தினிகாவை அழைத்து அப்பா போய் தண்ணீர பிடிச்சு வைக்கிறேன்… அப்புறமாக வா… என்றார்…


ஆமாம். ..பா… .நானே மறந்துட்டேன்… நீங்க தண்ணீர் பிடிச்சு வைச்சுட்டு மிர்துளா அக்காவிடம் சொல்லி விடுங்கள்… நீங்களா!..குடத்தை தூக்கி வைச்சுட்டு வீட்டுக்கு வந்துடாதீங்க!..


சாந்தினிகாவும் கதவை சாத்தி வைத்து விட்டு தான் சென்றாள்…

அனுகரன் தண்ணீர் பிடிச்சு முடிச்சதும் இருவரும் அசதியாக உட்கார்ந்தார்கள்…


ஏற்கனவே காபி போட்டிருந்தது ஆறாமல் தான் இருந்தது… அவங்க அப்பாவிடம் இன்னிக்கு அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்…


அட… எனக்கும் மறந்து போச்சே!... சரி நீங்க கிளம்பி இருங்க நம்ம டாக்டரிடம் போய் பார்த்துட்டு அப்படியே வேலைக்குச் செல்கிறேன்…


அப்பா, இன்னிக்கு நீங்க லீவு வேணா போட்டுக்கோங்க!... ஹாஸ்பிட்டலில் கொஞ்சம் தாமதம் ஆச்சுனா!.. முதலாளி திட்டுவாங்க,


அதெல்லாம் திட்டமாட்டாங்க, இன்னிக்கு முதலாளி லீவு… அதனால் பயமில்லை… அப்பா போய் குளிச்சுட்டு வருகிறேன்… சீக்கிரம் சமையல் செய்து முடிச்சிடு..


அனைத்தையும் முடித்து விட்டு ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பினார்கள்… அப்போது மிர்துளா, சாந்தினிகா நேற்று நீ வந்து கதவைத் தட்டிக்கிட்டே இருந்த என்னால வெளிய வர முடியலம்மா, வயிறு வலி…


பரவாயில்ல அக்கா… அம்மாவ கூப்பிட்டு ஹாஸ்பிட்டலுக்குச் சென்று வருகிறேன்.. சரிம்மா,..நீ மட்டும் தான் போறீயா,... இல்லக்கா!.. அப்பாவும் கூட வருவாங்க,...


ஹாஸ்பிட்டலுக்கு நடந்தே சென்றார்கள்…தக்க சமயத்தில் டாக்டர் அமர்நாத் வந்தார்… சாந்தினிகாவும் அவங்க அம்மாவை அழைச்சிட்டு அறைக்குள் சென்றார்கள்…


அமர்நாத் என்பவர் உங்க அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கு,,, ஏதாவது பார்த்து அழுகிறாங்களா, அவங்களே தனக்கான வேலையைச் செய்யனும்னு நினைக்கிறாங்களா,...


எஸ்.. டாக்டர்,..நீங்க சொன்னது சரி தான்… அம்மாவே டி. வியில் பார்த்துட்டு உணர்ச்சி வசப்படுறாங்க!..தாமே எந்த வேலையயைச் செய்யனும் என்கிறத அம்மா செஞ்சு முடிச்சிராங்க,...


எழுதி கொடுத்த மாத்திரை நேரத்துக்கு கொடுத்துட்டு இருங்க,.. உங்க அம்மா சீக்கிரமாக ரெக்கவர் ஆயிடுவாங்க,..


கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படும்… பயப்படாமல் இருங்க,.. நான் சரி செய்து கொடுத்திடுவேன் என்றார் ஆறுதலாக..


சாந்தினிகாவும் டாக்டரிடம்அம்மாவுக்கு எதுவும் ஊசி போடனும்மா,... இல்லம்மா… இன்னிக்கு தேவையில்ல… ஒரு வாரம் கழித்து வாருங்கள்..


சாந்தினிகா மெடிக்கல் ஸாப்பில் நின்று மருந்தை வாங்கிக் கொண்டிருந்தாள்.. அப்போது அந்த இளைஞன் நொண்டிக்கிட்டே வருகிறான்…. சாந்தினிகா அவனை மீண்டும் சந்திப்பாளா….

இனி தொடரும்..











.'
 
Top