• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 5)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
அத்தியாயம் 5


பாய் முகமது கடையிலிருந்து சாந்தினிகாவிற்காக காத்துக் கொண்டிருந்தார்… அவளும் வந்ததும் பாய்..பா.. என அழைத்தாள்…


பாய் ..பா.. மன்னிச்சுடுங்க,.. கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு…


பரவாயில்ல…சாந்தினிகா…


ஷேட்… வணக்கம்…


சொல்லுங்க… பாய் முகமது… எனக் கேட்க,...


இவ தான் நமக்குத் தெரிந்த பொண்ணு…


ரேட் எவ்வளவு சொல்றீங்க…


இதான் கிரைய பத்திரம்… .


ம்ம்ம்… .பார்த்தால் ரொம்ப பழைய கிரைய பத்திரம் மாதிரி இருக்குதே..


ஆமாம்.. ஷேட்.. கொஞ்சம் பார்த்து கொடுங்க.. நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான்… மிகவும் நல்ல பொண்ணு உங்களிடம் பணத்தை கரைக்ட்டா மாதத்தவணை முறையில் கொடுத்து விடுவாள்… உங்களுக்கு ஒரு வருடத்திற்கு கட்டனும் என்றால் கட்டி விடுவாள்…


சரி… முகமது… உங்களுக்காக இந்த பொண்ண பார்த்தாலும் நல்லவளாக தான் தெரியுது ..என்னால் ஒரு இரண்டு இலட்சம் தான் தர முடியும்…


அதுக்கு மேல முடியாது… முகமது…


"என்னம்மா.. சாந்தினிகா… .இரண்டு இலட்சம் ஓ. கே… தானே… '


சரிங்க ...பாய்… பா…


நாளைக்கு வந்து வாங்கிறீங்களா,... முகமது.. …


சரிங்க ஷேட்… இப்போது நான் கையெழுத்து போடனும்மா!... கேட்ட சாந்தினிகா…


உடனே… பாய் முகமது… கையெழுத்து நானே போடுறேன்… நாளைக்கு நீ அழைய வேண்டாம்… உங்க வீட்டுக்கு வந்து நானே கொடுக்கிறேன்…


இருவரும் நடந்து கொண்டிருக்கும் போது…


பாய் முகமது சாந்தினிகாவிடம் ஏம்மா… இரண்டு இலட்சம் போதும்மா!..


பாய்… பா… காணாது… எங்க அம்மா வச்சிருந்த பத்திரத்தை வச்சு தான் பணத்தை வாங்குறேன்… வேற யாரிடம் வாங்குவது என்ற யோசனையில் தான் உள்ளேன்…


கவலைப்படாதே.. என்னால் இயன்ற அளவுக்கு உனக்கே பணத்தை கொடுக்கிறேன்… நீ எப்போது கொடுத்தாலும் பரவாயில்லை என்றார்…


பாய்.. பா… என் மேல அப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்கீங்க,.. அது எப்படி… .


நீ எம் பொண்ணு மாதிரி… மா…


என் மனைவி உடம்பு சரியில்லாத போது எவ்வளவு உதவி செய்திருப்பாய்..உனக்கு நான் இவ்வளவு செய்தாலும் போதாது…


பாய்… பா… அது உங்களிடம் வேலை பார்த்தேன்… நீங்க எனக்கு பணம் கொடுத்தீங்க…


நான் வேலை பார்த்ததால என்னோட கடமை… பாய்… பா…


இருக்கட்டும்...மா… நீ உங்க அம்மாவுக்காக எந்த ஒரு கஷ்டமான பணியைக் கூட செய்வாய்… .


போதும்… சாந்தினிகா.. வேற பேசு…


அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்குது…


"முதலில் இருந்ததை விட இப்போது நல்ல இம்புருமெண்ட் இருக்குது.. பா… '


எல்லாமே… உன்னால் தான்… நீ வைத்த நம்பிக்கை தான் …கண்டிப்பாக நீ வீடு கட்டுவதுக்குள்ள உங்க அம்மா சுய நினைவுக்கு வந்து விடுவார்கள்…


நீங்க சொன்னபடி நடந்தால் அத விட மிகப்பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை என்று ஆனந்தத்தில் பேசிக் கொண்டிருந்தாள்…


"சரிங்க.. பாய்… பா… .நேரம் ஆயிடுச்சு ...நாளைக்கு வந்துடுங்க பாய்.. பா… '


சாந்தினிகா.. வேகமாக நடந்து செல்கையில் மறுபடியும் பவித்திரனை பார்த்தாள்…


பவித்திரனும் சாந்தினிகாவைப் பார்த்து ஏங்க அப்படி பாக்குறீங்க…


ஏங்க நேற்று தான் என்னிடம் வந்து எல்லாம் கதையும் சொன்னீங்க… இன்னிக்கு ஏன் இந்த தப்பை திரும்ப திரும்ப செய்றீங்க,..


சாந்தினிகா,.. என் மேல நம்பிக்கை வைச்சு நீங்க எனக்கு ஒரு வேலை வாங்கி தருகிறேன் எனச் சொல்லிட்டு என்னோட கதையை பாதியைக் கேட்காமல் போய் விட்டீர்கள்… அப்புறம் எப்படி உங்கள நம்புறது என படபடவென பேசினான்…


"பவித்திரனிடம்… ஐய்யோ… கத்தாதீங்க!.. கத்தாதீங்க என சாந்தினிகாவின் கரங்களால் வாயை மூடினாள்…

பவித்திரன் சிலிர்த்து போய் சாந்தினிகா சொல்ல போது அவளது இதழ்களை ரசித்தபடியே ..அங்கும் மிங்குமாக கண்கள் தடுமாற விழிகளை நோக்கியபடி சாந்தினிகாவின் முழு அழகும் அப்போது தான் அவனுக்கே புரிந்தது… .


ஆஹா… என்னமோ… அழகு… இவளை அருகில் நின்னு ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் நினைக்க படார் என்று கரங்களை எடுத்தாள்…


மன்னிச்சுடுங்க!..நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போது அப்பா போன் பண்ணிட்டாங்க,.. அதான் சென்று விட்டேன்… இப்போது சொல்லுங்க..

உங்க தங்கையை விட்டு நீங்க வெளிநாடு சென்றீர்களா,..


இல்லைங்க.. என்னோட தங்கை இப்போது கல்லூரியில் படிச்சுட்டு இருக்கா,...


நீங்க எதுக்காக வெளிநாடு செல்லவில்லை….


அதுல தாங்க மிகப்பெரிய சம்பவமே இருக்குது…


கொஞ்சம் அந்த சீட்டுல அமர்ந்து கொள்கிறேன்… எனக்கு கால் வலிக்குதுங்க… .


ஏங்க உங்களுக்கு கால் வலிச்சா எம் மடியில் வேணா உட்காருங்க…


என்னது… என்ன சொன்னீங்க,..


"இல்லைங்க சும்மா கிண்டலாக சொன்னேன்… '


மும்மு… கிண்டலாக பேசுறதுக்கு உங்க வீட்டு அத்தை பொண்ணா.. எனக்கு இந்த மாதிரி பேச்சையெல்லாம் பிடிக்காது.. இனிமேல் இப்படி பேசாதீங்க… சத்தம் போட்டாள்…


சரிங்க!.. கோபப்படாதீங்க…


என் கதைக்கு வருகிறேன்… .கேளுங்க… .


"அஜய் கிருஷ் அதாவது என்னோட மாப்பிள்ளை என்னை இங்க கூட்டிட்டு வந்து நல்ல வேலைக்கு சேர்த்து விட்டான்… அதுவும் அவன் பார்க்கிற இடத்திலேயே பார்த்துக்கிட்டு இருந்தோம்… .'


"நானும் அவனும் ஒன்னா தான் வேலைக்குப் போய்ட்டு இருந்தோம்… அப்போது ஒரு நாள் ஆபிஸில் அவனுக்கு பிரமோஷன் கிடைச்சது அந்த சந்தோஷத்தில் அவனுக்கு விருப்பமான பைக் வாங்கி ஆனந்தமாக இருந்தான்…' .


அவங்க வீட்டிற்கும் நானும் தான் பணத்தை அனுப்பி வைத்தேன்.. ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக தான் கழித்துக் கொண்டிருந்தோம்… .


அஜய் கிருஷ் எப்போதும் வேலையில் ஆக்ட்டிவ்வாக தான் இருப்பான்.. ஆனால் ஒரு வாரமாக முகத்தில் எந்தவொரு கலையும் இல்லாமல் சோகத்தில் ஆழ்ந்திருந்தான்…


அஜய் கிருஷ் எப்போதும் போல வேலையை முடித்து வந்து கவலையோடு தான் இருந்தான்…


"என்னடா!.. உன்னை ஒரு வாரமாக பார்த்துட்டு இருக்கேன்.. முகத்தில் புன்சிரிப்பே இல்லாமல் இப்படி வருத்தத்தில் இருப்பதற்கு காரணம் என்ன!.. சொல்லுடா மாப்பிள்ளை.. வலுக்கட்டாயமாக கேட்ட பிறகு தான் உண்மையைச் சொன்னான் ..


வேலையில் சேருவதற்கு முன்பே பிருந்தாவை நேசித்தேன்.. அவ தான் நீ நல்ல வேலையில் சேர்ந்து பிறகு கையில் வருகிற பணத்தை பேங்கில் போட்டு வைத்து அதில் உன்னோட சொந்த காசில் பைக் வாங்கிட்டு வா.. பார்க்கில் காத்திருக்கிறேன் என இறுதியாக சொல்லிட்டுப் போனவள் திரும்ப வரவே இல்ல..


அவ வரலனா என்னடா,.. நீ எப்போதும் போல இருக்க வேண்டியது தானே.. என்னால் அவளை பார்க்காமல் ,பேசாமல் நிம்மதியாக இருக்க முடியாது என்றான்… .


சரிடா.. நீ சொன்னா கேட்க மாட்டாய்… வா… அப்பாவுக்கு போன் பண்ணி பேசுவோம் நடந்ததைக் கூறுவோம் என்றான்…


அதற்கு அஜய் கிருஷ்.. இப்போது நீ சொல்ல வேண்டாம் சமயம் வரும் போது நானே கூறுகிறேன்.. எங்க அப்பாவிடம் உலறி வச்சுடாதே…


பவித்திரன் எப்போதும் போல அவனது பைக்கில் இருவரும் ஆபிஸிக்குச் சென்றிருந்த போது பிருந்தா கோவிலுக்குள் செல்வதைப் பார்த்தான்…


பவித்திரன் மச்சான் நிறுத்துங்க.. நிறுத்துங்க..


எதுக்குடா!.. மாப்பிள்ளை… .


பிருந்தா கோவிலுக்குள் செல்வதை பார்த்தேன்… அவளை பார்த்துட்டு வருகிறேன்..


மாப்பிள்ளை கண்டிப்பாக இருக்காது.. நீ அவளின் நினைப்பில் இருப்பதால் பிருந்தாவின் ஞாபகமாக உள்ளாய்..


மச்சான்,.. அவளே தான் என சொல்லி கோவிலுக்குள் நுழைந்தான்…


அவள் கண்களை மூடி இருக்க,.. பிருந்தாவை பார்த்தவுடன் புன்னகைத்த அஜய்கிருஷ் கழுத்தில் கிடந்த தாலியைக் கண்டு அதிர்ச்சியுற்றான்…


சாமி கும்பிட்டு நெற்றியில் குங்குமம் வைத்தவள் எதிரே நின்ற அஜய் கிருஷ் பார்த்து நெகிழ்ந்து போக முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பி போனாள்… .


கோவிலைச் சுற்ற சென்ற பிருந்தாவை பின்னாலேயே போய் நில்லு.. பிருந்தா.. என்னிடம் எதுக்காக பேசாமல் செல்கிறாய்…


அஜய் இங்கிருந்து போ… என் பின்னால் வராதே.. என தயங்கி தயங்கி பேசினாள்…


அவளது கைகளை இழுத்து பிடித்தான்… எதற்காக என்னை ஏமாத்தினாய் ஒரு பதில் சொல்லிட்டு போ என்றான்.. கையை விடு சொல்றேன்… .


உன்னை கடைசியாக சந்தித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி சென்றேன்.. அங்கே யாரோ சொந்தக்காரங்க திருமணத்திற்குக் குடும்பத்தோடு போய்ட்டு வரலாம்னு சொன்னாங்க!..


நானும் அவங்க பேச்சைக் கேட்டு சென்றேன்… நம்ம இருவரும் காதலிக்கிற விஷயம் தெரிச்சிருக்கு ..நம்ம சந்தித்து பேசியதை பார்த்த மாமா அப்பாவிடம் சொல்லியிருக்கிறார் .அதான் எனக்கே தெரியாம என் மாமா பையனுக்கு பேசி முடிச்சுட்டாங்க, ...இதை அறியாத நான் அவங்களோட கல்யாணத்திற்கு எல்லோரும் காரில் சென்றோம் ...


உனக்கு போய் போன் செய்து சொல்லலாம் என நினைத்தேன்..அங்கு சென்றதும் உன் நம்பருக்கு போன் செய்தேன்..ஆனால் ரீச் ஆகல, அப்புறம் போனுக்கு ஜார்ஜ் போட்டு வைச்சுட்டு தூங்கப் போய்ட்டேன்..என்னோட போனை எடுத்து யாரோ சுவிட்ச் ஆப் செய்து வைச்சுட்டாங்க,..


கல்யாண மண்டபத்திற்குச் சென்றதும் மணமேடையில் அமரச் சொன்னதும் அதிர்ந்து போனேன்..

..பிறகு தான் அறிந்தேன் ...நானும் எவ்வளவு சொல்லி பார்த்தேன்… அழுது கண்ணீர் விட்டு முயற்சி செய்தேன்… ஆனால் எங்க அம்மா என்னை எப்படியோ பேசி சம்மதிக்க வைச்சுட்டாங்க,.. அதிலிருந்து தான் உனக்கு போன் செய்யவில்லை.. என்னை மன்னிச்சுரு… .நீ என்னை மறந்துட்டு வேறோரு கல்யாணம் பண்ணிக்கோ என்றாள் பிருந்தா… வெளியே என்னோட மாமா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெளியே காத்திருக்கிறார்… தயவு செய்து என்னை விடு என்றாள்… .


அஜய் கிருஷ் வருத்தத்தில் கோவிலை விட்டு வெளியே வர, அதை கண்ட பவித்திரன்,.. என்னாச்சு எதிர்க்கே பேருந்து வருவதைக் கவனிக்காமல் வருகின்றான்…


பவித்திரன் பார்த்து, வாடா லாரி வருது மாப்பிள்ளை என்கிறான்.. கவனிக்காத அவன் வேகமாக வந்த லாரி அவனை மோத வர அஜய் கிருஷ்ஷை தள்ளி விட்ட பிருந்தா லாரியில் மோதி அந்த சமயத்தில் உயிரை விடுகிறாள்..


யாரென்று நோக்கிய அஜய் கிருஷ் அதிர்ச்சியில் மயக்கமடைந்தான்… அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு சேர்க்கிறார்கள்…


பிருந்தாவை தூக்கிவந்த கணவனிடம் உன் மனைவி இறந்து போய் விட்டார்கள் என்கின்றார் டாக்டர்…


"பிருந்தாவின் குடும்பத்தினர் வந்து பார்க்கின்றார்கள்.. அவங்க அப்பா, அம்மாவிடம் பிருந்தா நம்ம எல்லாரையும் விட்டு சென்று விட்டாள் என்கின்றனர்..அவள் இந்த திருமணத்திற்கு சம்மதமே இல்லை என்றாள்.. நம்ம தான் அவள வலுக்கட்டாயமாக முடிச்சு வைத்தோம்… சந்தோஷமாக வாழ்வாள் என எதிர் பார்த்தோம்… ஆனால் நம்மள தவிக்க விட்டு ஒரேடியாக போய் விட்டாளே!..கதறி அழுதார்கள்… '


அஜய் கிருஷ் அந்த ஆக்ஸிடண்டில் அவனுக்கு தலையில் பலத்த அடியால் அவன் சுய நினைவை இழந்து கோமாவிற்கு போய் விட்டான்… அவனை கொஞ்ச நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்து பார்த்தோம் எந்தவோரு முன்னேற்றமும் இல்லை ..அதனால் கிராமத்திற்குக் கூட்டிட்டு சென்றோம்…


"அஜய் கோமாவில் போனாலும் அவனது குடும்பத்தை நல்லபடியாக பொறுப்பாக பார்த்துக்கனும் நினைச்சு மறுபடியும் சென்னைக்கு வேலைக்கு வந்தேன். எப்போதுமே பார்த்த ஆபிஸில எனக்கு வேலை இல்லைனு சொல்லிட்டாங்க,. நானும் ஏறி நின்று இறங்காத ஆபிஸ் இல்ல, என்ன பண்றதுன்னு புரியல மனம் குழம்பி போய் கையில் காசு கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து இருந்தேன்.


அப்போது சம்பத் நண்பரை சந்தித்தேன்…அவனிடம் என்னுடைய சூழ்நிலையைப் பத்தி சொன்னேன்… நீ என் கூட இரு உனக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என சொல்லி அழைத்துச் சென்றான் …


கொஞ்ச நாட்கள் ஹோட்டல் கடைகளில் வேலை பார்த்துட்டு இருந்தோம்.. அப்போது தான் வயதான பெரியவர் நொண்டி நொண்டி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்… அவரை பார்த்த போது பரிதாபமாக இருந்தது…


அவரால் பிச்சை அதிகம் எடுக்க இயலாத நிலையில் உள்ளதைப் பார்த்து மனம் பதறி போனது… இந்த வயதான காலத்திலும் தானே உழைத்து சாப்பிடும் வைராக்கியத்தோடு இருக்கிறாரே என்று திகழ்ந்து போனேன்… .


வயதானவரை பார்த்து பேசினேன்..உங்களுக்குப் பதிலாக நானே பிச்சை எடுக்கிறேன்… அதற்கு நீங்க சம்மதிப்பீர்களா!..வயதான காலத்தில் உங்களால் நொண்டி நொண்டி எடுக்க முடிய வில்லை என்பதை நான் அறிந்தேன்…


என்னோட வேலைகளை முடித்து விட்டு உங்களுக்கு வந்து உதவி செய்கிறேன்… அந்த வயதானவரும் என்னால் உமக்கு வேற பிரச்சினை வந்துவிடக் கூடாது வேண்டாம் என்றார்…இல்லை, பெரியவரே உங்களுக்கு உதவி செய்வது எனது பாக்கியம் என்றான் பவித்திரன்… வயதானவரைப் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது ..

.. அதனால் எனக்கு கிடைக்க கூடிய நேரத்தில் அவருக்கு சிறு உதவிகளைச் செய்து வந்தேன்… நான் செய்த உதவி மற்றவர்களின் பார்வைக்கு தப்பாக புரிந்தது…


மற்றவர்களின் பேச்சைக் காதில் கொள்ள வில்லை .என்னால் முடிந்த வரை அந்த பெரியவருக்குப் பிச்சை எடுத்துக் கொடுப்போம் என்ற உறுதியோடு இருந்தேன்… இதை பல பேர் போலீஸிடம் கூறியுள்ளார்கள்… நிறைய பேர் என்னை பார்த்து போலீஸில் மாட்டிவிடனும் என நினைப்பார்கள்…


அப்படியே தப்பித்து போய் விடுவேன்… என்னுடைய நண்பன் இதெல்லாம் வேண்டாம் விடுடா!..நீ இரக்கப்பட்டு செஞ்ச உதவி ,இப்போ பாத்தியா எதுல வந்து நிக்குது…


நீ ஏமாத்தி பணத்தை வாங்குறேனு நியூஸ் பேப்பரில் போட்டாங்க,.. அத பத்தி கவலை இல்லை… அந்த வயசான தாத்தா இப்போது எப்படி இருக்காரு.. பாரு.. டா.. என்றான் சம்பத்… வயதானவருக்கு வெளியுலகத்தில் என்ன நடக்குது கூட தெரியாமல் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்… நீ ஏன்டா.. இப்படி இருக்க சொல்லி வருத்தப்பட்டான்… தன்னோட கவலை மறந்து அவரின் சந்தோஷத்தை மட்டும் ரசித்தான்…நீ மற்றவர்களுக்காக செய்யுறேன் என்று சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு இருக்க… போடா… போ… நீ திருந்த மாட்ட என சொல்லி திட்டினான் சம்பத்…


பவித்திரன் சொல்வதை கேட்ட சாந்தினிகா, அவளேயே அறியாமல் பவித்திரனை உன்னதமான அன்பை கண்டு வியந்து போய் நின்றாள்…


ஏங்க!.. சாந்தினிகா…


"அசையாமல் நிற்க அவளது தோள்பட்டையை தொட நினைத்த மறுகணம் டப்பென பார்த்தாள்… '


பவித்திரன் கையை கீழே போட்டான்…


பரவாயில்லை.. உங்கள வேற என்னமோ நினைச்சேன்… ஆனால் நீங்க வேற லெவல் என சொல்லிட்டு நேரத்தைப் பார்த்து ..


அடடடா,நேரமாயிடுச்சு...போய் சமைக்கனும் ..சரிங்க கிளம்புறேன்..


என்ன.. இவள்.. வருகிறாள் ..போகிறாள்.. ஆனால் அவளது குடும்பத்தைப் பத்தி என்னிடம் சொல்ல மாட்டிக்காளே மனதில் ஓடியது…


சாந்தினிகா பவித்திரனை திரும்பி பார்த்து, புன்னகையுடன் டாட்டா கைகளை அசைத்து காட்டி சென்றாள்…


ஆஹா.. எம் மேல சாந்தினிகாவுக்கு அது வந்துடுச்சோ,.. உற்சாகத்தில் கால்களை தூக்கி குதிக்கனும்னு நினைக்கின்றான். முடியலயே!..


இங்க முடிஞ்சது நம்ம அங்க போய் பிச்சை கேட்கப் போகும் என அடுத்ததாக தொடர்ந்தான் ..


சாந்தினிகாவும் வீட்டுக்குள் நுழைகிறாள் அவங்க அப்பா அனுகரன் சமையல் செய்து கொண்டிருக்கிறார்…









..




'
 
Top