• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 9)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
அத்தியாயம் 9


நம்ம பொண்ணு நல்லா நடிச்சு ஏமாத்திட்டா! என புலம்பிக் கொண்ட நிலையில் கங்காதேவி…


அப்படியா.. உன்னை என்ன சொல்லி ஏமாத்துனா தெரியாதது போல கேட்ட அனுகரன்..


என்னை குளிக்க அனுப்பி வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்து அனைத்து வேலையையும் முடிச்சுட்டாள்…


அட… ச்சீ… இதானா,.. வேற ஏதோ பெரிய விஷயம் இருக்கோனு நினைத்தேன் ..


என்னங்க.. நீங்க இது பெரிய விஷயம் இல்லையா..என்ற மென்மையான கோபத்துடன்..


அடியே… சாந்தினிகா எப்பவும் காலையில் அவளது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாள்.. அவகிட்ட நீ எந்த வேலையும் செய்யாதே எனச் சொன்னால் கேட்பாளா,.. சொல்லும்மா.. கங்கா தேவி ..


பாத்ரூமில் குளித்து முடித்து வெளியில் வந்து தலையை துவட்டிக் கொண்டிருக்க,. அம்மா என்ன பண்றாங்க என பார்க்கச் சென்ற சாந்திக்கு,..அவங்க அம்மா அனுகரனிடம் மனதில் உள்ள வருத்தத்தைச் சொல்கிறாள்..


சாந்தினிகாவும் மறைந்திருந்து அம்மா என்னதான் சொல்றாங்கன்னு பார்ப்போம் என மறைமுகமாக உற்று நோக்கினாள்…


ஏங்க.. சாந்தினிகா கஷ்டப்படுறது பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது… அவளுக்கு நானே பணிவிடைகளைச் செய்யனும் என்ற ஆர்வமாகவும் ஆசையாகவும் இருக்கிறது..



சாந்தினிகா சின்ன குழந்தையாக இருக்கும்போது நான் சுயநினைவை இழந்து ஒரு ஜடம் போல தான் வாழ்ந்திருக்கேன்…எந்தவொரு தாயும் தன் குழந்தையை வேலைப் பார்க்கவே விடமாட்டாள்… ஆனால் சாந்தினிகா என்னையும் நல்லா கவனிச்சுட்டு இந்த குடும்பத்தையும் நல்லபடியாக வழிநடத்தியிருக்கா,இது போதும் அவளுக்கு கல்யாணம் முடிகிற வரைக்கும் எல்லாம் வேலையும் நானே கவனிச்சிக்கிறேன்…


அதனால் நான் விடிகிறதற்கு முன்பாகவே எழுந்து அனைத்து பாத்திரங்களையும் கழுவி முடிச்சேன்… கோலம் போடும் போதே சாந்தினிகா வந்தாள்… அவள போய் தூங்கச் சொன்னேன்.. அவ தூங்காமல் எப்போதும் போல நானே செய்யுறேன் என்றாள்…


ஏன்டியம்மா!..கங்காதேவி.. அதான் காலையில் உள்ள வேலைகள் முடிந்து விட்டதே ..அப்புறம் அத நினைச்சு கவலைப்பட்டு இருக்க போய், மற்ற வேலைகளைச் செய்யும்மா என கட்டளையிட்டார் அனுகரன்..


ம்ம்ம்.. அப்படி சொல்லுங்கப்பா,.. அம்மா இப்ப தான் குணமாகி வந்துருக்காங்க அவங்கள அதிகமாக வேலை பார்க்கவிட கூடாதுனு நினைத்தது தப்பா எனக் கேட்டாள்…


தப்பில்லை… மா…எனச் சொன்னார்.. அனுகரன்…


அப்ப நான் செஞ்சதா தப்பு இன்னொரு பக்கம் கங்கா தேவி இருவரும் மாறி மாறி பேச,..


அனுகரன் டென்ஷன் வந்து ஐய்யோ… இரண்டு பேரும் கொஞ்சம் சண்டை போடாமல் இருக்கீங்களா!..தலைவலிக்குது என்றார்..


ஏங்க நாங்க இருவரும் எப்போது சண்டையிட்டோம்.. பேசிக்கிட்டு தானே இருக்கிறோம்… என்றாள் கங்காதேவி..


ஆமாம்.. பா. பேசிட்டே தான் இருக்கிறோம்…


அடிப்பாவிங்களா!.. தாயும் மகளும் என்ன நடிப்பு நடிக்கிறீங்க,.. ஆச்சரியத்தில் கூறிய அனுகரன்…


இருவரும் புன்னகையோடு பார்த்து கையைப் பிடித்து இணைந்தார்கள்… நாங்க இரண்டு பேரும் குளிச்சாச்சு,.. நீங்க ஏன் இன்னும் குளிக்காமல் இருக்கீங்க.. போங்க.. போங்க.. காத்து வரட்டும் எனச் சொல்லிட்டு தோள் மேல கை போட்டு சென்றார்கள்…


அட.. ச்சே.. இவ்வளவு நேரம் என்னை குளிக்க விடாமல் மாறி மாறி கம்பிளேண்ட் பண்ணிட்டு ஜோடி போட்டு போகிறத பாரு…


இவங்களால் என் நேரம் போச்சு என எரிச்சலுடன் குளிக்கச் சென்றார்…


அனுகரன் குளித்து வந்து காலை உணவை முடித்து விட்டு நாற்காலியில் அமர்ந்தார்.. அதற்குள்ளும் சாந்தினிகாவின் போன் ஒலிக்க,.. அதை அழுத்திய சாந்தினிகா..


சொல்லுங்க அண்ணா, நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம் ..அனைத்து பொருள்களையும் வாங்கியாச்சு,..னா.. வேற எதுவும் வாங்கவேண்டியது இருக்கா!.. எனக் கேட்டாள்.. அதற்கு அந்த இன்ஜினியரிங் மறு இணைப்பில் இருந்து வேற எதுவும் தேவையில்லை.. நீங்க கொஞ்சம் சீக்கிரமாக வந்தால் போதும் என்றார்..


இப்போதே வருகிறோம்.. நாங்க கிளம்பிட்டோம் எனச் சொல்லி போனை வைக்க..


அம்மா, நம்ம இடத்துக்கு ஐயர்,..வந்துட்டாங்களாம்.. நம்ம எல்லாரும் சீக்கிரம் ஆட்டோவை வரச் சொல்லி கிளம்புவோம் என்றாள்…


அனுகரன் பாய் முகமது வீட்டுல கிளம்பிட்டாங்களாம்னு கேட்டியா!..


மும்மு.. அவங்க போய்ட்டு இருக்காங்கப்பா…


. நம்ம இப்போது போனால் நாள் பூஜை செய்ய கரெக்ட்டாக இருக்கும் எனக் கூற ஆட்டோ வாசலில் வந்து நின்றது விரைவாக ஏறினார்கள்… ..


ஆட்டோவில் போகும் போது சாந்தினிகா பையினில் அனைத்தையும் எடுத்து வைத்தாச்சா என்று பார்த்தாள்… அவங்க அம்மாவிடம் தாம்பூலம் தட்டு எடுத்து வைச்சுட்டீங்களா.. மா எனக் கேட்டாள். ..


ஆமாம்…சாந்தினிகா,. பின்னால் உள்ள கட்ட பையில் உள்ளது.. நீ டென்ஷன் ஆக வேண்டாம்…அனைத்தையும் வாங்கி உள்ளேயும் அம்மா ஞாபகமாக எடுத்து வைத்துட்டேன் என்றாள்…


இன்ஜினியரிங் சந்தோஷ் ,வேலையாட்கள் மூவரையும் அழைத்து வந்து ,இடத்தை லேசாக சுத்தம் செய்து ஆசாரி மூலம் அளவு எடுத்து விட்டு,.. கூலியாள்களை மண்ணை கூட்டி ஒன்றாக ஒத்தி வைக்க சொல்ல,.. மறுபுறம் ஐயர்.. … தண்ணீர் கொண்டு வாங்க என்றார்… அவர்களும் அருகில் உள்ள அடிபம்பில் இருந்து தண்ணீர் எடுத்து குடத்தில் வைத்தனர்…


ஐயரும் நேரம் ஆகுது ..இன்னும் வீட்டாளுங்க வரலயா… என்று அவசரப்படுத்த.. அதற்குள்ளும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்…



பாய் முகமதுவும் ,அவங்க மனைவியும் வந்து கூடினார்கள்.. வாங்கி வந்த பொருள்களை ஒவ்வொன்றாகவும் அனுகரன் எடுத்து தாம்பூலத் தட்டில் எடுத்து வைத்தனர்…


ஐயர் அதற்கான பூஜையை ஆரம்பித்து வைத்தார்…அவரு சொன்ன ஒவ்வொரு செயலையும் ,மந்திரத்தையும் சொல்லச் சொல்லி அனுகரனும், கங்காதேவி முன் நின்று நடத்தினார்கள்… இடத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு மூலையிலும் மஞ்சள் கரைந்த தீர்த்தத்தை ஊற்றி வரச் சொன்னார்…


அனுகரனும் ஐயர் சொன்னபடி ஒவ்வொன்றையும் சரியான முறையில் செய்து பூஜையை நல்ல முறையோடு ஐந்து தேங்காயை உடைத்து, மஞ்சளிலும் பிடிச்சு வைத்திருந்து பிள்ளையாருக்கு பத்தி, கற்பூரம் காட்டி பூஜையை நிறைவுசெய்தனர்…


ஐயருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையையும் கையில் கெடுக்க வந்த அனுகரனை, இன்ஜினியரிங் சந்தோஷ்… சார்,.ஐயருக்குக் கொடுக்கும் போது சாதாரணமாக கொடுக்கக் கூடாது… அதுக்கென்று ஒரு வாஸ்துவம் இருக்கிறது…


நீங்க மனதார கடவுளை வேண்டிக் கொண்டு ஒரு தாம்பூலத் தட்டில் ஜவாழைப்பழமும்,அரைமுடி தேங்காயையும்,வைத்து அத்தோடு வெற்றிலை, பாக்கு,உங்களால் முயன்றயளவு காணிக்கை வைத்து கொடுக்க வேண்டும் என கூறினார்…


அதே போல கொடுத்தார்கள்… .அவரும் வாங்கிட்டு இன்ஜியரிங் சந்தோஷிடம் சொல்லிட்டு சென்றார்…


பாய் முகமது ,இன்ஜினியரிங் சந்தோஷிடம் எத்தனை நாள்களில் வேலையை முடித்து கொடுப்பீர்கள் என விவரமாக கேட்டுக் கொண்டிருக்க,..


கங்கா தேவி அரைமூடி தேங்காய் ஒலவொன்றாக எடுத்து கூலியாட்களுக்குக் கொடுத்து கொண்டிருந்தாள்… .


இன்ஜினியரிங் சந்தோஷ்க்கு மட்டும் தனியாக ஒரு பையினில் போட்டு கொடுக்க, அவர் பரவாயில்ல.. இருக்கட்டும் என்று கூறினார்.. மீதமிருந்தால் உங்க சொந்தக்காரங்களுக்குக் கொடுத்து விடுங்க என்றார்…


இன்ஜினியரிங் கிளம்பிய போது சாந்தினிகா… சார்.. எப்போது வேலையைத் தொடங்குவீர்கள்..


நாங்க நாளைக்கே துவக்கி விடுவோம்

.ஆள்களை ஏற்பாடு செய்து விட்டேன்.. இன்று மாலையில் கல் ,மணல் ,சிமெண்ட் அனைத்தையும்.இறக்கி விடுவார்கள்..


நீங்க கொடுத்த மாதிரியே வீடு pகட்டலாம் என பேசிவிட்டு கிளம்பினார்… நிஷாவும், கங்காதேவியிடம் சொல்லிட்டு எங்களுக்கு இன்னொரு பங்கஷன் இருக்கிறது..நாங்க போய்ட்டு வருகிறோம்.. சாந்தினிகா கடையில் வேலைக்கு போகும் போது பார்த்து கவனமாக போ, என்றாள்…


பாய். பா வும்.. சாந்தினிகாவிடம் எப்போது வேலைக்குச் சேர போகிறாய்.


பாய்.. பா.. இன்னிக்கு சாயங்காலம் சேர்ந்து கொள்ளப் போறேன்.. வீட்டுக்குப் போய்ட்டு நேரம் இருந்துச்சுனா மதியம் வேலைக்குப் போயிடுவேன்…


நீ வீட்டுல இருந்து கடைக்குக் கிளம்பும் போது போன் பண்ணும்மா.. . சரியா..


ம்ம்ம்.. சரி… .பாய்.. பா…


நீ கடைக்கு வருகிற விஷயத்தை ஓணரிடம் கூறிடுவேன் என சொல்லிட்டு அவங்களும் பைக்கில் கிளம்பிச் சென்றார்கள்…


அதற்குள்ளும் ஆட்டோவும் வந்து விட்டது..சாந்தினிகாவின் குடும்பத்தினர் ஏறிச் சென்றார்கள்… .


கார்த்திகேயன் வேகமாக கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்…கல்யாணி காலையில் சீக்கிரமாக சமையலை முடித்து விட்டு கார்த்திகேயனை சாப்பிட்டுப் போங்க என்றாள்…


கார்த்திகேயனுக்கு ஆச்சரியமாக இருந்தது…அவளை எதிரே பார்த்து நீ எப்போதும் காலை டிபன் செய்யமாட்டியே!.. இப்போது அதிசயமாக இருக்கு…


அது வேலைக்குப் போகாமல் வீட்டினில் இருந்ததால் தான் கோபத்துல செய்யாமல் இருந்தேன்.. இப்ப தான் ஒழுங்காக வேலைக்குச் செல்ல ஆரம்பிச்சிட்டீங்களே!.. வாங்க அன்பே.. உங்களுக்கு எடுத்து வைத்துட்டேன்… உட்காருங்க!..


ஏய்.. ஏய்.. விட்டா ஊட்டி விட்டுடுவ போல.என்றான் கார்த்திகேயன்…


ஓ. உங்களுக்கு ஊட்டி விடனும்மா.. என்றாள்.. கல்யாணி…


சும்மா சொன்னேன்.. டி..


முதல சாப்பிடுங்க என பரிமாறினாள்.. இட்லி வைத்து உளுந்தவடையை எடுத்து வைக்க கார்த்திகேயனுக்கு அவங்க அம்மா செய்த உளுந்தவடை ஞாபகம் வந்தது…


என்னங்க!.. உளுந்தவடையை அப்படி பார்த்துட்டு இருக்கீங்க,.. இன்னிக்கு உளுந்தவடை செஞ்சு ஒரு அம்மா கொண்டு வந்தாங்க!.. அவங்கள பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது.. அதான் பத்து ரூபாய்க்கு மூன்னு வடை கொடுத்தாங்க.. வாங்கிட்டேன் என்றாள்…


கல்யாணி சொல்லிக் கொண்டே இருக்க அதை கவனிக்காத கார்த்திகேயன் உளுந்தவடையை பார்த்துக் கொண்டே சிந்தனையில் இருந்தான்…


மாமா… இங்க பாருங்க என கார்த்திகேயனைத் தொட்டதும்.. அவன் அப்படியே உளுந்தவடையை கீழே வைத்தான்…


இட்லியை மட்டும் வை எனச் சொன்னான்… ஏங்க ஆசையாக வாங்குனேன் ..எதுக்காக பார்த்துட்டு அப்படியே வச்சுட்டீங்க… .


ஒன்னுமில்ல… எங்க அம்மா எனக்காக இத செஞ்சு கொடுத்தாங்க,.. அதுவும் எனக்கு ஊட்டி விட்ட ஞாபகம் வந்திடுச்சு.. நீயே சாப்பிடும்மா.. எனக்கு போதும் எனக் கைகளை கழுவி விட்டு எழுந்தான்…


உங்க சித்தி வீட்டு பங்கஷனுக்குப் போகனும்னு சொன்னியே போலயா…எனக் கேட்க,..


அதுக்கு கல்யாணி.. உங்கள தனியாக விட்டுட்டு எப்படி நான் போகுறது.. அங்க போனாலும் எனக்கு உங்களுடைய நினைவாகவே இருக்கும் என்றாள்…


ஏன்டி…நீ இப்படி.. இருக்கிறாய்...ஒரு பங்கஷனுக்கு எவ்வளவு மரியாதையோட போன் பண்ணிருக்காங்க!.. நான் கலந்து கொள்ள முடியல நீயாவது போய் பங்கஷனில் கலந்துக்கலாம்ல எனசா சொல்லவும்..


சரிங்க, இன்னிக்கு மதியமே கிளம்புறேன்.. போதுமா.. எனக்கு மனசு இல்லாமல் தான் இருந்துச்சு… நீங்க ஒரு தீர்வு சொல்லிட்டீங்களே… கிளம்பிட்டு போன் பண்றேன் என்றாள் கல்யாணி…


கடையில் வேலைப் பார்த்துட்டு இருப்பேன்.. நீ இங்கிருந்து புறப்படும் போது சொல்லு பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்றேன் எனக் கூறியபின் வேலைக்குக் கிளம்பினான்…


கல்யாணியும் மற்ற வேலைகளை முடிக்க தயரானாள்… அதற்குள்ளும் அவங்க சித்தி நிரஞ்சனா போன் செய்தார்கள்..


சொல்லுங்க சித்தி… பங்ஷன் வேலையெல்லாம் எப்புடி போகுது…


ம்ம்ம்… சூப்பராக போய்ட்டு இருக்கிறது… நீ எப்போது கிளம்புகிறாய்…


இதோ வேலையை முடிச்சுட்டு கிளம்பவேண்டியது தான் என்று கூறினாள் கல்யாணி…


வரும் போது கவனமாக வாங்க, மாப்பிள்ளையும் உன் கூட வர்றாங்கள,..


இல்ல, சித்தி அவங்க நேற்று தான் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க!.. லீவு கொடுக்கமாட்டார்கள் அதான் என்னை மட்டும் போக சொன்னாங்க,..


அட என்னம்மா நீ.. மாப்பிள்ளையைக் கூட கூட்டிட்டு வருவேனு எதிர்பார்த்தோம் என்றாள் நிரஞ்சனா

..

சித்தி.. இன்னொரு தடவை கட்டாயம் உங்க வீட்டுக்குக் கூப்பிட்டு வருகிறேன் என சமாதானப்படுத்தினாள்…


சரி..மகளே.. சட்டுனு வேலையை முடித்து விட்டு நேரத்தோட கிளம்பி வா என்றாள் கல்யாணியின் சித்தி…


கார்த்திகேயன் நேற்றைய விட இன்று பணிச் சுமை அதிகமாகஇருக்கிறதே, என மன வருத்தத்தில் பணியைப் பார்த்துக் கொண்டிருந்தான்…


கல்யாணி அந்த சமயத்தில் போன் ஒலிக்க, பட்டனை அழுத்தி,கிளம்பிட்டியா,.. சரி வரேன்… நீ மெதுவாக கவனமாக வா எனச் சொல்லி வைத்தான்..


கல்யாணியும் கிளம்பிச் செல்ல பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்..


பஸ் ஸ்டாப்பில் போய் பார்க்க,.. சேலம் பஸ் வெயிட்டிங்கில் இருந்தது… இதோ நிக்குது… ஏன்டி… எங்கிட்ட சென்னை என்று சொன்னா,


ஓ.. அதுவா முதலில் அங்க தான் இருந்தாங்க,.. அப்புறம் அவங்க மாமியார் வீட்டுக்கே திரும்ப வந்துட்டாங்க என கூறினாள்… சேலம் பக்கத்துல ஒரு ஊர் அது என்னமோ சொன்னாங்க, அங்க போய் கூட கேட்டுட்டு பஸ் ஏறிடுவேன் என்றாள்…



ஊருக்குப் போய் ரீச் ஆனதும் போன் பண்ணு… என சொல்ல பஸ் கரெக்ட்டாக எடுக்க அமர்ந்த டிரைவர் ஸ்டாட் செய்ய,.. அவளும் நீங்களும் உடம்ப பார்த்துக்கோங்க,.. நேரத்து நேரம் சாப்பிடுங்க என்றாள் பஸ் கிளம்பியது… .


சாந்தினிகா வீட்டிற்குப் போய் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில், அவங்க அம்மா சாப்பிட்டுப் போம்மா… என சொல்ல..


அதற்கு சாந்தினிகா,..நேரமாயிடுச்சு,.. பசியும் இல்லம்மா..


கடைக்கு வேலைக்குப் போற, அங்க ரெஸ்ட் எடுக்காமல் அதுவும் ஜவுளிக்கடை.. நின்னுக்கிட்டே தான் வேலை பார்க்கனும் என்று சொல்லிக் கொண்டே தட்டிலில் சாதம் வைத்து வந்தாள்…


இந்தாடி… ஆ… காட்டு என சொல்லி ஊட்டி விட அப்படியே தலையை வாரிக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்… வீட்டிலிருந்து புறப்படும் போது பாய்.. பா.. விடம் போன் செய்து தகவலைச் சொல்லிட்டுச் புறப்படுகிறாள்…

இனியும் தொடரும்..
 
Top