• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863
மனம் - 20


மறக்க இயலவில்லை...

அதை,

மறைக்கவும் முயலவில்லை...

உன் விழி மயக்கத்தை

மறுக்க வழியின்றி...

வலியுடன்...

என்றும் நான்...!



அன்று வீட்டில் இருந்து ஸ்டேஷனுக்கு கிளம்பிய ப்ரித்வியிடம், சைமன் மறைந்திருக்கும் இடம் பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே சீக்ரட்டாக சில ஆஃபிசர்ஸை ஒரு டீமாக்கி அவர்களை வழி நடத்திக் கிளம்பி விட்டான். பரங்கிமலையின் அடிவாரத்தின் இருக்கும் ஒரு ஸ்டீல் கொடவுனில் தான் சைமன் பதுங்கியிருப்பதாகத் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது



சைமனின் கூட்டத்தைச் சுற்றி வளைத்துப் பிடித்திருந்தனர் ப்ரித்வியின் குழுவினர். இரு குழுவினருக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டு, இருதரப்பிலும் பலத்த காயங்களுடன் பலர் வீழ்ந்துவிட, ப்ரித்வியின் குறி சைமன் என்றே இருக்க, அவனை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தான் ப்ரித்வி. நாலாபக்கமும் பார்வையை சுழலவிட்டு முன்னேறிய ப்ரித்வியின் காலில் எங்கிருந்தோ ஒரு குண்டு வந்து பாய, நிலைகுலைந்து விழுந்து விட்டான் ப்ரித்வி.



அந்தச் சூழலைத் தனதாக்கிய சைமன், அங்கிருந்த அவனது கூட்டாளிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட்டு, ப்ரித்வியின் முன் வந்து நின்றான்.



“ஏன்டா நாயே, நீயெல்லாம் ஸ்கெட்ச் போட்டு பிடிக்குற அளவுக்காடா என்னோட கெத்து இருக்கு, ப்ளடி சீட், உனக்கு இன்னும் உலகமேத் தெரியல ராசா.. உன் வாழ்க்கையில யார் ரொம்ப முக்கியம்னு நினைச்சியோ, யாருக்காக, யார் பேர் வெளியேத் தெரியக் கூடாதுன்னு நினைச்சி பாதுகாப்பா வச்சியோ அது அத்தைனையும் வீணாப் போச்சி. உன் பொண்டாட்டி… காதலிச்சு கல்யாணம் பண்ணின உன் ஆசை பொண்டாட்டி நீயும் வேண்டாம், உன் கூட வாழ்ர வாழ்க்கையும் வேண்டாம்னு உன்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டா.. ஹா ஹா போக வச்சுட்டேன்..” எனச் சொல்லி கொண்டே காலால் ப்ரித்வியின் முகத்தில் ஒரு உதை உதைக்க,



குண்டடி ஏற்பட்ட வலியை விட, சைமன் கூறிய செய்தியின் வலிதான் வீரியமாக ஏறியது ப்ரித்விக்கு. யுகி மேல் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. சைமன் சொன்னதற்காக மட்டும் போயிருக்க மாட்டாள். வேறெதும் காரணம் இருக்கும். அதை அவளிடம் கேட்க வேண்டும். முதலில் அவள் எங்கே யாரிடம் சென்றிருக்கிறாளோ’ என பல யோசனைகளில் இருந்தவன், சைமனின் கால் மீண்டும் அவன் முகத்தின் முன்னே வர, சைமன் சுதாரிக்கும் முன்னே பட்டென்று காலைப் பிடித்து அவனைக் கீழேத் தள்ளி, அவன்மேல் ஏறி அமர்ந்து தன் கையில் இருந்த பிஸ்டலைத் திருப்பி பிடித்து சாராமாரியாகக் குத்தினான்.



சைமனின் முகம் எங்கும் ரத்தக் காயங்கள். ப்ரித்வியோடு வந்தவர்களில் பாதிப் பேர் சுயநினைவில் இல்லை. எப்படி இவர்களை கைது செய்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே சைமனின் பிஸ்டல் ப்ரித்வியின் நெத்தியைக் குறிப் பார்த்துச் சுட்டது.



அவன் சுட்டதில் ப்ரித்வி சற்றே விலக, அது அவனின் நெத்தித் தோலை மட்டும் ஆழமாக உரசி விட்டுச் சென்றுவிட, ரத்தம் அதிகமாக வெளியேறியது. அப்போது தான் யுகியை பின் தொடர்ந்தவன் சைமனுக்கு அழைத்து யுகியைப் பற்றி சொல்லி வைத்தான்.



“ஹா.. ஹா.. இப்போ என் ஆளு என்ன சொன்னான் தெரியுமா மிஸ்டர் ப்ரித்வி. உன் காதல் மனைவி உன்னை விட்டு, இந்த ஊரே விட்டே போயிட்டா.. எனக்கு இது மட்டும் போதாதுடா. உன்னைத் தூக்கி வச்சுக் கொண்டாடுற டிபார்ட்மென்ட் தரையில் தூக்கி எறியனும் அதை என் கண்ணாலப் பார்க்கனும்..” என்று சொல்லி முடிக்கும் முன்னே, ப்ரித்வியின் பிஸ்டல் சைமனை துளையிட்டிருந்தது. துரதிருஷ்டவசமாக அது சைமனின் இடது கையாகிப் போக, அதிலிருந்து எழுவதற்குள், ப்ரித்வி மீண்டும் ஒரு முறை அவனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்திருந்தான்.





அந்த இடத்தில் இருந்து வெளியேறிய சம்யுக்தா காஞ்சிபுரம் பேருந்தில் ஏறினாள். காஞ்சிபுரத்துக்கு போவதற்கு முன்னே ஒரு இடத்தில் இறங்கி, அங்கிருந்து கோயம்புத்தூர் பேருந்தில் ஏறிக்கொண்டாள். தன்னுடைய அப்பா வழி தூரத்து சொந்தம் அங்கு இருப்பதாக ஞாபகம் வரவும் தான் இந்த ஏற்பாடு. பத்து மணி நேர பேருந்துப் பயணம். எப்படி வந்து சேர்ந்தாள் என்பதே தெரியவில்லை.



தேவகி, சண்முகத்திற்கு மிகவும் நம்பிக்கையான உறவு. தூரத்துச் சொந்தமும், மகள் முறையும் கூட. யுகியின் திருமணத்தின் போது கூட இருந்து அத்தனை வேலைகளையும் செய்தவர். சண்முகம் இறந்த போது கூட தங்களோடு வந்து சில நாட்கள் இருக்கட்டும் எனக் கேட்டிருந்தார். ஆனால் சுந்தரி தான் பிரச்சினை எல்லாம் முடியட்டும் பிறகு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.



விடிந்து விடியாத அதிகாலைப் பொழுதில் அந்த வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. கதவைத் திறந்த தேவகி யுகியின் நிலையைப் பார்த்து அதிர்ந்து தான் போனார். “என்ன.. என்ன..” என்ற அவரது நூறு கேள்விகளில் ஒன்றிற்கு கூட பதிலில்லை யுகியிடம். எப்போதும் அமைதி, யாரிடமும் பேசுவதில்லை. பசிக்கென உணவு. இப்படித்தான் அவளது இரண்டு வாரங்கள் ஓடியது.



ப்ரித்வி என்ன செய்கிறான்.? தன்னைத் தேடினானா.? அத்தையும் மாமாவும் என்ன செய்வார்கள்.? இப்படி ஏகப்பட்ட யோசனைகள். ஆனால் அனைத்தும் அந்த ஒற்றை அறைக்குள் மட்டும் தான். அதைத் தாண்டி வெளிவருவது இல்லை. அப்படியான நாட்களில் திடிரென ஒரு நாள் தேவகியின் கணவன் தான் அவளது படிப்பைத் தொடருமாறுக் கட்டாயப்படுத்தி கல்லூரியில் சேர்த்து விட்டார்.



யுகிக்கும் இந்தப் பிரச்சினையில் இருந்து ஒரு தீர்வு கிடைத்தால் போதுமே. அதனால் மறுப்பேதுவும் சொல்லாமல் கல்லூரியில் சேர ஒத்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன்பே அவளுக்கே ஆசிரியராக அதே கல்லூரியில், அதே வகுப்பில் நின்றிருந்தான் அவளது கணவன்..





சைமனின் கூட்டத்தைப் பிடிப்பதற்காக, வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தாலும் மனைவியின் மேல் ஒரு கண் எப்போதும் வைத்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சைமனின் கேசில் சண்முகம் உள்ளே வந்ததுமே யுகிக்கு பாதுகாப்பு அவசியம் என அவளுக்குத் தெரியாமலே, பாதுகாப்பு ஏற்பாடுகளை சில நாட்களுக்கு முன்னதாகவே, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், திருமணத்திற்கு முன்பாகவே செய்து வைத்திருந்தான்.



அதனால் தான் அவளைப் பற்றியக் கவலைகள் இன்றித் தன் வேலையில் மூழ்கியிருந்தான். ஆனால் அதையெல்லாம் தாண்டி அவளுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கையை, ஆறுதலைக் கொடுக்க மறந்துவிட்டான். அதுதான் பிரச்சினையின் ஆரம்பப்புள்ளி. அதற்கான தண்டனையாகத்தான் இப்போது இந்த பிரிவு அமைந்துவிட்டது.



அவள் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து, தேவகியிடம் சென்றது வரை அனைத்தையும் ப்ரித்வி அறிவான். ப்ரித்வி தன்னுடைய ஏற்பாட்டின் படி தான் அவளைக் கல்லூரியில் சேர வைத்தான். தன் கண் முன்னே இருந்து தான் அவளது மனதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.



அதோடு சைமனும் இப்போது தலைமறைவாக இருக்கிறான். எப்போது வேண்டுமானலும் வெளியில் வரலாம். அப்படி வரும் போது என்ன செய்வான் என்று எதுவும் கணிக்க முடியாது. அப்படியிருக்க யுகி தன்னருகில் இருப்பதே சரியென்று வந்துவிட்டான்.



இப்போது அவன் எதிர்பார்த்ததைப் போலவே வெளியில் வந்து விட்டான், யுகியைக் கடத்தியும் விட்டான். இத்தோடு அவனை முடித்துவிட வேண்டும். மீண்டும் இப்படி ஒரு ஜென்மம் இந்த உலகில் அவன் வாழக் கூடாது, என்று எண்ணியபடியே ஜகனை ஏற்றிக் கொண்டு ப்ரித்வியின் கார் பெங்களூர் ஹைவேயில் பறந்தது.





“டேய் தடிமாடுங்களா.. போலிஸ்காரன் பொண்டாட்டியை இப்படி குளிர்ல கட்டி வச்சிருக்கீங்க, அவ புருஷனுக்குத் தெரிஞ்சா அதுக்கும் நம்ம கூட சண்டை போடுவாண்டா..” என உடனிருந்த அடியாட்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு, அவளிடமும் “என்னம்மா சம்யுக்தா நான் சொல்றது சரிதானா.”



“சம்யுக்தா சரியான பேருதான் இல்லையா.? உன்னோட ப்ரித்விராஜன் வந்து உன்னைத் தூக்கிட்டுப் போகப் போறான். ஐ மீன் காப்பாத்திக் கூப்பிட்டு போகப் போறான். அப்படியா என்னை மீறி உன்னைத் தூக்கிட்டு அவன் உயிரோட போகப் போறான்..? ம்ம்ம்..” என்றுவிட்டு வில்லன் போல சிரித்தான் சைமன் சைத்தான்.





கடத்தும் போது மட்டும் சற்று நேரம் திணறியவள், பிறகு எப்படியும் ப்ரித்வி வந்துவிடுவான் என்பதால் அமைதியாகி விட்டாள். அப்போது இருந்து இந்த நொடி வரைக்குமே அமைதி தான். ப்ரித்வியைப் பத்தி பேசவும் பொங்கிவிட்டாள்.



அவரைப் பத்தி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு முட்டாள். அவர் என்ன உன்ன மாதிரி நாட்டுக்கு துரோகம் பண்ணினாரோ மனிதர்கள் தெய்வமா வணங்குற பெண்களையும், அவங்க கருப்பைகளையும் திருடி விக்கிற தேசத்துரோகி தானடா நீ.. த்தூ.. நீயெல்லாம் ஒரு ஜென்மம். நீ பேசுறதை நான் கேட்கனும்.” என கடுகடுவென பொரிந்தவளைப் புழுவைப் போல பார்த்தான் சைமன்.



“அடடே உனக்கு என்னோட மேட்டர் எல்லாமே தெரியும் போலவே. போலிஸ்காரன் பொண்டாட்டியாச்சே, தெளிவாத்தான் இருப்ப. நான் தான் அதை மறந்துட்டேன். சரி விடு எனக்கு இப்போ எமெர்ஜென்சியா ஒரு யூற்றஸ் தேவப்படுது. இப்போ இருக்குற சூழல்ல வெளியே அரேஞ்ச் பன்றது ரொம்பவே கஷ்டம்.”



“எங்களுக்கு உன்னை விட்டா வேற ஆள் இல்லை. சோ உன்னோட யூட்ர்ஸை எடுத்து ஃபாரினுக்கு பார்சல் பண்ண போறோம். மச் பெட்டர் ரைட்.” என்றவன் அவளை உயிரோடு விழுங்கும் திமிங்கலம் போலவேக் காட்சியளித்தான்.



“டேய் தடிமாடுங்களா க்விக்கா தியேட்டர் அரேஞ்ச் பண்ணுங்கடா.. நம்ம ஹீரோ வர்ரதுக்குள்ள, ஹீரோயினுக்கு நாலு கோடு போடுவோம்.” என கையில் இருந்த சர்ஜிகல் ப்ளேடைப் பார்த்து, நக்கலாகச் சொல்லி, அந்த கொடவுனே எதிரொலிக்கும் படி வில்லன் சிரிப்பு சிரித்தான் சைமன்.





அந்தச் சிரிப்பில் யுகியின் மேனியெங்கும் நடுங்கியது. அவன் ஆரடருக்கு இணங்க படபட்வென ஒரு மினி ஆஃபரேஷன் தியேட்டரே ரெடியாகிக் கொண்டிருந்தது. இரு ஆண் குண்டர்கள் அவளைப் பிடித்துக் கொள்ள ஒருவன் மயக்க மருந்தை யுகியின் வலது மணிக்கட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினான். மொத்த மருந்தையும் செலுத்திவிட்டு அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் யுகியைத் தள்ளி விட்டான்.



எல்லா ஆபரேசனும் டாக்டர் தான் பண்ணுவாங்க. ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கு உனக்கு நான் பன்றேன். ஏன் தெரியுமா.? ஒரே ஒரு ஊசியைப் போட்டு என்னோட உண்மை எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டான். என் இமேஜ் மொத்தமும் காலி செஞ்சிட்டான் உன் புருஷன். அவனால நான் இழந்தது என்ன என்ன தெரியும…? பேர், புகழ், கோடி கோடியா பணம் எல்லாத்தையும் இழந்துட்டு ஒரு தெரு நாய் மாதிரி தெருவுல நிக்க வச்சுட்டான்.”



“என்னோட அடையாளத்தோட வெளியேத் தலைகாட்ட முடியல, இதெல்லாம் யாரால.? அவனால தான். அவனால மட்டும் தான். அப்போ அவனை சும்மா விட்டுடுவேனா.? என் முகத்துல இருக்குற இந்தத் தழும்பு யார் போட்டது தெரியுமா.? உன் போலிஸ்காரப் புருஷன். அவன் முகத்த உடைக்காம விட்டா நான் என்ன ஆம்பள. அது பழிக்குபழி ஆகுமா..? என வீர வசனங்களைப் பேசிக் கொண்டே அவளுக்கு அருகில் வந்தவன், அங்கிருந்த சர்ஜிகல் னைஃபை எடுக்க அதில் யுகி மொத்தமும் கலங்கிப் போய்விட்டாள்.



‘ப்ரித்வி சீக்கிரம் வாங்க, சீக்கிரம் வாங்க ப்ரித்வி’ என ஜெபம் போலச் சொல்லிக் கொண்டே பார்வையை சுழல விட்டவளின் கண்களுக்கு, கைக்கடக்கமான சிறு கத்தி ஒன்று தென்பட,



























ஒரு கண்ணில் நீர் கசிய

உதட்டு வழி உசிர் கசிய

ஒன்னால

சில முறை இறக்கவும்

சில முறை பிறக்கவும் ஆனதே
 
Top