• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
883
மனம் – 8

என் மனக்கடலில் காதல் புயலாய்
மையம் கொண்டிருந்தாள் சில நாட்கள்...
அவள் கரையை கடந்தாள்..


தனிமையில் பல நாட்கள்
ஆளில்லாத படகு போல

ஆழியில் தவித்திருந்தேன் நான்...



நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு மாதத்தில் யுகி தன்னுடைய பிஜி படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்து விட்டாள். ப்ரித்வியும் அதே ஊருக்கு வந்து விட்டதால் வீட்டிலிருந்து கல்லூரி செல்வது சரியாக இருக்காது, ப்ரித்வி சும்மா இருக்க மாட்டான். ‘காலேஜ்ல ட்ராப் பன்றேன், வெளியே போலாம்’ என்று தினமும் வந்து நிற்பான். போனால் மாமாவிற்குப் பிடிக்காது. போகாவிட்டால் ப்ரித்வி வருத்தப் படுவான் என்பதால் காலேஜ் ஹாஸ்டலுக்கே சென்று விட்டாள் யுகி.



ஒரு மணி நேரப் பயணம் தான் அவளது கல்லூரி. சண்முகமும் அதையே யோசித்தாரோ என்னமோ..? யுகியின் இந்த செயலுக்கு சரியென்று விட்டார். தன் மருமகளின் இந்த யோசனையில் சண்முகத்திற்குத் தான் பெருமை பிடிபடவில்லை.



இன்றைய சூழ்நிலையில் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில், அது தானாகக் கிடைத்தும் வேண்டாம் என்று ஒதுக்கி, தனக்கும் தன் வளர்ப்புக்கும் பெருமை சேர்த்து விட்டாள் என்று சொந்தம் பந்தம் என தெரிந்தவர்கள் எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.



அவர்களும், “பரவாயில்ல சண்முகம் கல்யாணம் பண்ணாம, உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்காம, உன் தங்கச்சிப் பொண்ணுக்காக நீ செஞ்ச தியாகம் வீண் போகல. உன் வளர்ப்பு சோட போகல. அருமையா வளர்த்து, படிக்க வச்சு, இன்னைக்கு ஊரே மெச்சுற அளவுக்கு மாப்பிள்ளையும் பார்த்து பேசி முடிச்சிட்ட..” எனத் தெரிந்தவர் சொல்ல, சண்முகத்திற்கும் அதைக் கேட்டு அத்தனை மகிழ்ச்சி.



இப்போது இருக்கும் சூழ்நிலைகளில் ஒரு தாயின் துணையில்லாமல், அரவனைப்பில்லாமல் பெண் குழந்தைகளை தனியாக வளர்ப்பது என்பது எத்தனை கஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க, பெற்றவர்கள் இருவரும் இல்லாமல் ஒரு பெண் குழந்தையை வளர்த்து சமூகத்தில் பெரியாளாக்குவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதை சாதாரணமாக செய்திருந்தார் சண்முகம்.



யுகியும் அவரின் தியாகத்தையும் அன்பையும் உணர்ந்ததாலோ என்னவோ அவருக்கு ஒரு சிறு கெட்டப் பெயர் வரும் காரியத்தைக் கூட அவள் செய்ததில்லை. ப்ரித்வியினுடனான அவளின் காதல் மட்டும் அதற்கு விதி விலக்கு. அதிலும் சுந்தரியின் பங்கு பெருமளவு. அவர் மனதில் அப்படியொரு ஆசை இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தக் காதல் சாத்தியமே இல்லை. திருமணம் முடியும் வரை எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது. தங்களின் காதல் தன் மாமாவிற்குத் தெரிந்திடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.



மனிதர்கள் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். இங்கேயும் அப்படித்தான் நடந்தது.!



கல்லூரி நாட்கள் அவளுக்கு அழகாக நகர்ந்தது. ப்ரித்வியிடம் முன்னமே எச்சரித்திருக்க அவனும் தன் வாலைச் சுருட்டி வைத்திருந்தான். அனைவரும் சண்முகத்திடம் இதை மறைக்க, ஆனால் சைமன் எனும் சாத்தானால் அவை அனைத்தும் வெளிவந்திருந்தது.



சண்முகத்தின் தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக, போலிசுக்குத் தகவல் வர, அடித்துப் பிடித்து சென்றான் ப்ரித்வி. சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரனையை ஆரம்பித்திருந்தான். சண்முகம் அன்று ஊரிலேயே இல்லையென்று அவனுக்குத் தெரியும் அதனால் அவரை சந்தேகத்தின் பேரில் கூட விசாரிக்கவில்லை ப்ரித்வி.



அதே ஊரில் கூலி வேலைக்கு செல்லும் ஒரு கூலித் தொழிலாளியின் பெண் என்றும் கல்லூரி படித்துக் கொண்டிருந்ததாகவும் மட்டுமே தகவல் கிடைத்தது. அந்தப் பெண்ணுக்கும் வேறெந்தக் கெட்டப் பழக்கங்களோ, சகவாசங்களோ இல்லை என்பதும் விசாரனையில் தெரிய வந்தது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்திருப்பதாக வர, ப்ரித்விக்கு அந்தப் பெண் எதற்காக தற்கொலை செய்தாள் என்பதைக் கண்டுபிடிக்கா முடியாமல் மண்டைக் காய்ந்தது.



தகவல் தெரிந்து அன்றே சண்முகமும் வந்திருந்தார். அவரிடம் பெயருக்கு மட்டும் விசார்த்தவன், என்ன செய்யலாம் என யோசிக்க, அப்போது சண்முகம் தான் சைமனோடு அந்தப் பெண்ணை இரண்டு இடங்களில் பார்த்ததாக சொல்லிவிட்டார். இப்போது ப்ரித்வியின் கவனம் மொத்தமும் சைமனிடம் திரும்பியது.



சைமனை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க, மேலிடத்தில் அனுமதி வாங்கியிருந்தான். அதிசயமாக சைமனும் அதற்கு ஒத்துழைக்க முன் வந்தான். அந்தப் பெண்ணைப் பெற்றவர்களோ தன் மகள் அப்படியல்ல.. என வாதாட, சைமனும் அதைத்தான் எதிர்பார்த்தானோ.? ப்ரித்வியை நக்கலாக ஒரு பார்வை பார்த்தான். சைமனின் பார்வையில் இருந்த குரோதத்தை அப்போது ப்ரித்வி அறியவில்லை. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்று புரியவில்லை. அனைத்தும் அவனுக்குப் புரியும் போது காலம் கடந்து போயிருந்தது.



அன்று யுகி வார விடுமுறையில் வந்திருக்க, அவளைப் பார்க்க சுந்தரி வந்திருந்தார். “யுகிம்மா.. என்ன தலையை இப்படி வச்சிருக்க, இரு எண்ணெய் காச்சி தேச்சி விடுறேன். குளிச்சிட்டு சாப்பிடு. அங்க சாப்பாடு உனக்கு ஒத்துக்குதா இல்லையா.. பாரு இளைச்சிப் போயிட்ட..” என்றபடியே நல்லெண்ணெயைக் காய்ச்ச,



அவர் தோளில் சாய்ந்தபடியே “நான் வரும் போதெல்லாம் ஒரே டைலாக் தான் சொல்றீங்க. கொஞ்சமாச்சும் டைலாக் மாத்துங்க அத்தை. எனக்கும் போரடிக்குது..” எனச் செல்லம் கொஞ்ச,



அவர்களையேப் பார்த்தபடி வந்த சண்முகம் சிரித்தபடியே “சுந்தரிமா நான் வெளிய போறேன். பொழுதாகிரும் வர்ரதுக்கு. நான் வர வரைக்கும் நீ இருக்கியா..” எனக் கேட்க,



“சரிங்க மாமா.. நீங்க கிளம்புங்க இன்னைக்கு யுகி நட்சத்திரம்ன்னு கோவில்ல பூஜைக்கு சொல்லிருக்கேன். சாயங்காலம் நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்துடுறோம். நீங்க பார்த்து போயிட்டு வாங்க..” என சுந்தரியும் சொல்ல,



“சரிம்மா..” என்றவர் யுகியிடம் “யுகி சுந்தரி இருக்கும் போதே உன் நகையெல்லாம் எடுத்து எதெது மாத்தனும்னு பார்த்து வை. நான் ஆச்சரிக்கிட்ட கொடுத்துடுறேன். அத்தைக் கூட வம்பு வளர்க்காம இரு..” என்று அவள் சரியென்றதும் கிளம்பி விட்டார்.



அவர் கிளம்பியதைப் பார்த்ததும் உடனே போனை எடுத்துக் கொண்டு சோபாவின் கீழே உட்கார்ந்து ப்ரித்விக்கு அழைத்தாள். “ஹாய் புருடா டார்லிங்க் எங்க இருக்க.. எப்படி இருக்க..” எங்க் கிண்டலில் இறங்கினாள்.



அந்தப் பக்கமோ அவன் ஏதோ ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்திருப்பான் போலும், கட் செய்ய போய் அட்டெனாகி விட, அதோடு ஸ்பீக்கரிலும் விழுந்து விட, யுகி பேசியது அங்குள்ள எல்லோருக்கும் கேட்டு விட்டது.



ப்ரித்வியின் மேலதிகாரிகள் எல்லாம் அவனை முறைக்க, அவனோ ‘அய்யோ மானத்தை வாங்கிட்டாளே எரும மாடு, இவளை எனப் பல்லைக் கடித்தவன் இவனுங்க வேற ஒரு தினுசா பார்க்குறானுங்க..’ என கடுப்பானவன், போனை ஆஃப் செய்து வைத்துவிட்ட் “சாரி சர்..” என்றான் ஒரு அசடு வழிதலோடு.



“பாருங்க அத்தை.. போன் செஞ்சா கட் பண்ணி விடறாங்க. நான் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர சொல்லலாம்ன்னு கால் பண்ணேன்..” என்றதும், எண்ணெயோடு வந்த சுந்தரி அவள் தலையில் கொட்டி,



“அடிப்பாவி.. ஏதோ முக்கியமான மீட்டிங்குன்னு மூனு நாளா வீடே தங்கல, பாவம் அவனுக்கு வேலை அதிகம் யுகிம்மா.. ஆனாலும் உனக்கு இருக்கே கொழுப்பு, ஊருக்கே போலிஸ் என் பையன் உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வருவானா..? ரொம்பத்தான் என் பையனை வேலை வாங்குற.. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்..” என சுந்தரியும் விளையாட்டாகச் சொல்ல,



“அத்தை ஊருக்கே ராஜானாலும், வீட்டுல பொண்டாட்டிக்கு புருஷன் தான். அம்மாவுக்கு மகன் தான். அதை இல்லன்னு சொல்ல முடியுமா..?” என பதிலுக்கு விளையாட



“ஆமா.. ஆமா அதை இல்லைன்னு சொல்ல முடியுமா..? அதுவும் நீ எவ்வளவு விவரம்ன்னு எனக்கு தெரியுதே.. முதல்ல பொண்டாட்டி, அப்புறம் அம்மாவா.. நீ பொழச்சிப்படி மருமகளே.. பொழச்சிப்ப..” என இருவரும், கிண்டல் செய்து ஊர்க்கதைகள் பேசி என அவர்களின் நேரம் நகர்ந்தது.



ஒரு முறைப்போடு மீட்டிங்கை முடித்து அனுப்ப, வெளியே வந்தவன் உடனே அவளுக்கு அழைக்க, அப்போது தான் குளிக்க சென்றிருந்தாள். போனை அட்டெண்ட் செய்யவில்லை என்றதும் நேராக அவளின் வீட்டிற்கே வந்தவன், ஹாலில் இருந்த தாயிடம் ‘எங்கே’ என ஜாடையில் கேட்க,



அவரும் மேலே என சைகையில் காட்ட, “ம்மா.. இப்போ வர்ரேன்.. பயங்கர பசி எனக்கு.. எப்படியும் வெரைட்டியா நிறைய செஞ்சிருப்பீங்க, அதுல எனக்கும் கொஞ்சம் எடுத்து வைங்க, உங்க மருமகளைக் கொஞ்சம் மிரட்டி கூப்பிட்டு வர்ரேன்..” என்க,



“டேய் புள்ளைய ரொம்ப மிரட்டாத சொல்லிட்டேன்..” அவர் பதில் சொல்லும் முன்பே படிகளில் தாவியிருந்தான். சுந்தரியும் மகனின் செயலில் சிரித்தபடியே கிச்சனுக்குள் நுழைந்தார்.



மேலே வந்தவன், அவள் அறையைத் தட்டிவிட்டு நிற்க, “அத்தை உள்ளே வாங்க.. டோர் லாக் பண்ணல..” என உள்ளிருந்து யுகியின் குரல் கேட்டதும், பட்டென்று திறந்து உள்ளே வந்தவன், வந்த வேகத்தில் அவளையும் அணைத்திருந்தான்.



“ஹேய்ய்ய்..” என்ற அலறலுடன் அடுத்து அவள் கத்தும் முன் வாயையும் அடைத்திருந்தான். வழக்கம் போல தன் வாய் கொண்டே அவள் வாயை மூடியிருந்தான்..



கோவிலுக்குப் போக வேண்டும் என்று சுந்தரி சொல்லியிருந்ததால், தலைக்கு குளித்து, புடவையை வேறு கட்டியிருக்க, திடீரென அவன் அனைத்ததில் கலைந்து போய் பல்லைக் காட்டியது.



ப்ரித்வி இப்படி வந்து நிற்பான் என்றும், அவனிடமிருந்து இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத யுகி, முதலில் அதிர்ந்து பின் திமிறி, அவனிடமிருந்து பிரிய எடுத்த எந்த முயற்சியும் வேலைக்காகமல் போக, எத்தனை நேரம் தான் அவனோடு பிடிக்காததைப் போலவே போராடுவது. ‘ம்ச்..’ என்ற சலிப்போடு அவன் மேலையே சாய்ந்து விட்டாள் யுகி.



பெண்ணின் திமிறல் அடங்கி, அவளும் ஒத்துழைக்க ஆரம்பிக்க, மென் நகையோடு மேலும் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டான். ஆழ்ந்து, அனுபவித்து அனுபவிக்க வைத்து என ஆழமான நீளாமான இதழ் முத்தம் இருவருக்கும்.



இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா.



இன்று ஜகனிடம் “நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. அப்போ ப்ரித்வி இதுக்கு காரணம் இல்லையா.” பரபரப்பானது யுகியின் குரல்…



“ம்ம்… இல்லை.. இல்லவே இல்லை.. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல, யார் என்ன சொல்லியிருந்தாலும், யார் நம்பாம போயிருந்தாலும் நீங்க சாரை நம்பியிருக்கனும் தானே.. ஏன் அவரை நம்பாம போயிட்டீங்க. என்னை விட உங்களுக்குத் தானே அவரை நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது உங்க மேல உயிரே வச்சிருக்குறவர் எப்படி அந்த தப்பை செஞ்சிருப்பார்..” சாட்டையாய் கேள்விகளை சுழட்டினார் ஜகன்.



ஜகன் பேசியதைக் கேட்ட யுகி முதலில் ஒன்றுமே பேசவில்லை. சில நிமிட அமைதிக்குப் பிறகு “நீங்க சொன்னது உண்மைதான். என்னோட உலகமே அவர் தான்னு நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன். அது உண்மையும் கூட, ஆனா நான் தான் உலகம்னு என் மாமா அவர் வாழ்க்கையை வாழ்ந்தார். அதே வாழ்க்கை என்னால் முடிஞ்சதுன்னு நினைக்கும் போது நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்னு என் மேலயே வெறுப்பு, கோபம், ஆத்திரம் எல்லாம் வருது. ஒரு சில சமங்கள்ல தற்கொலை செஞ்சிக்கலாமான்னு கூட யோசிச்சிருக்கேன்..” என்றாள் கரகரத்தக் குரலில்,



“யுகிம்மா.. நீ நினைக்கிற மாதிரி இல்லடா.. நீ உன் பக்கத்தை மட்டுமே யோசிக்கிற, சார் பக்கமும் யோசியேன்.. என்ன நடந்ததுன்னு அவர் கூட சண்டை போடு, சட்டையை பிடிச்சு கேளு… அதை விட்டுட்டு, இப்படி தனியா வந்து இருக்குறது எல்லாம் நல்லா இருக்கா சொல்லு..” என்றான் ஜகன் படபடப்பாக,



“ம்ம்ச்ச்.. எத்தனை தடவை” என்ற சலிப்போடு முகத்தைத் திருப்பி வெளியே வெறித்தவள், பின் ஜகனைப் பார்த்து, “இதெல்லாம் நான் செய்யாம இருந்திருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..? எத்தனை தடவைக் கேட்டேன் தெரியுமா.. கெஞ்சி, அழுது, சண்டைப் போட்டு, எதுவும் சொல்லாம, தப்பு என் பேர்ல தான் சொன்னார்.. அதைக் கேட்டு நான் என்ன செஞ்சிருக்கனும் சொல்லுங்க.. அத்தை மாமா எல்லாரும் கேட்குறாங்க. என்கிட்ட சொல்ல முடியலன்னாலும் அவங்ககிட்டயாச்சும் சொல்லிருக்கலாம் தானே.. இப்படி யாருமே இல்லாம என்னை அநாதையா ஆக்கிட்டாரே..” என சொல்லும் போதே அழுகைப் பீறிட, தலையைக் குனிந்து, துப்பட்டாவை எடுத்து வாயை மூடிக் கொண்டாள் சத்தம் வெளியேக் கேட்டு விடாதபடிக்கு.



“அய்யோ.. என்னம்மா அனாதை அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுற.. என்ன இருந்தாலும் சார் உன்னோட கணவர். அவர் இருக்கும் போது நீ அப்படியெல்லாம் பேசாதம்மா.. இது மட்டும் அவருக்கு கேட்டா ரொம்ப வருத்தப்படுவார்” என ஜகனும் வருத்தப்பட,



“கணவர்ன்னா.. யாருண்ணா.. மனைவிக்கிட்ட எந்த ஒழிவும் மறைவும் இல்லாம இருக்கனும். எந்த விசயத்தையும் மறைக்க கூடாது. ஆனா அவர் எல்லாத்தையும் மறைச்சார். எல்லாத்தையும்..” என விரக்தியாக சிரித்தாள் திருமதி சம்யுக்தா ப்ரித்விராஜ்.



உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு ...

அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது ...
 
Top