• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
மனம் – 9

"முத்தம்" பற்றியே தான்
பேசிக்கொண்டே இருப்பாயா !
"முத்தம்" பற்றி தான் கவிதை
எழுதுவாயா !

"பொறுக்கி "

சிறப்புமாய்
செம்மையுமாய்
தனித்தன்மையுமாய்

எதில் இருக்கிறேனோ
அதைப்பற்றித்தானே
செவ்விதழ் கொண்டவளிடம்
பேசமுடியும் !





“டேய் என்னடா பண்ற…” என அவனைப் பிடித்து தள்ளியவள், ட்ரெசிங்க் டேபிள் மீதிருந்த சீப்பை எடுத்து அவனைப் போட்டு அடி வெளுத்தாள். “எதுக்கு எப்போ பாரு வாயைக் கடிச்சிட்டுகிட்டே இருக்க, இதைத் தவிர வேற ஒன்னும் தெரியாதா…?” எனச் சொல்லிக் கொண்டே மீண்டும் அடிக்க,



“ஏய் லூசு, அடிக்காதடி இது சீப்பு மாதிரியே இல்ல, டீச்சர் யூஸ் பண்ற பிரம்பு மாதிரி இருக்கு…” என அவளிடமிருந்து துள்ளியவன், “எனக்கு என்ன என்னவெல்லாமோ தெரியும் தான், செய்து காட்டவும் ஆசை தான் ஆனா அதுக்கு நீ ஒத்துக்க மாட்டியே… என்ன செய்ய…” என பாவம் போல் சொல்லி மேலும் அவளிடம் வம்பு வளர்க்க, கடுப்பாகிவிட்டாள் பெண்.



“அடேய் இன்னைக்கு உன் மண்டையை பொளக்காம விட மாட்டேன்…” எனச் சற்று ஆவேசமாக அவனைத் துரத்த, கோபம் வந்தால் தான் ‘வாடா போடா..’ என ஏக வசனங்கள் வெளிவரும் யுகியிடமிருந்து.



அவள் உச்சக்கட்டக் கடுப்பில் இருப்பதை உணர்ந்தவனும்‘அய்யோ ஆத்தா மலையேறிட்டா, இப்ப உடனே மலையிறக்கனுமே’ என யோசித்தவன்… “சும்மா… சும்மா… சொன்னேன் சதாக்குட்டி, எனக்குப் பசி எடுத்துச்சுடா, அதான் கொஞ்சமே கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டேன் இப்போ ஓகே. நான் கீழே வெயிட் பன்றேன். நீ சீக்கிரம் வந்துடு, அம்மா வைட் பன்றாங்க.. கோவிலுக்குப் போகலாம்…” என அவள் பிபியை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டு, அவள் மீண்டும் அடிக்கும் முன் இடத்தைக் காலி செய்திருந்தான்…



ப்ரித்வி கிளம்பவும் “ஷப்பா…” என பெரு மூச்சு விட்டவள் ‘இவனை எப்படி சமாளிக்க’ என்று புலம்பியபடியே குனிந்து தன் உடையைப் பார்க்க, அழகான சேலை அலங்கோலமாகி மேலும் அவளை அழகாக்கியிருந்தது.



ஒரு வழியாக கிளம்பி யுகி கீழே வரும் போது சண்முகம் வந்திருந்தார். அவர் முகம் யோசனையாக இருக்க, ப்ரித்வியும் அமைதியாகவே இருந்தான்… கீழே சென்றவள், “என்ன மாமா…” ஈவனிங்க் ஆகும் சொன்னீங்க. உடனே வந்துட்டீங்க… முகமும் டல்லா இருக்கு, எதுவும் பிராப்ளமா…?” என அவர் அருகில் அமர,



“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நான் பார்க்கப் போன ஆள் ஊர்ல இல்லை. அதனால உடனே வந்துட்டேன். சரி சாப்பிடுங்க. எல்லோருமே கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம். சுந்தரி சொக்கனுக்கு கூப்பிட்டு வரச் சொல்லு. அவன் மட்டும் ஏன் வராம இருக்கான்…” என மருமகளிடம் ஆரம்பித்து அவளின் மாமியாரிடம் முடிக்க,



“சரிங்க மாமா இதோ கூப்பிடுறேன்… யுகிம்மா இவங்களுக்கு சாப்பாடு பரிமாறு. நான் போன் பேசிட்டு வந்துடறேன்…” என்ற சுந்தரியும் போனோடு உள்ளே போய்விட்டார்…



அதிசயமாக ப்ரித்வி எந்த ஒரு சேட்டையும் செய்யாமல் அமைதியாக சண்முகத்திடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தான். யுகி இருவருக்கும் உணவை பரிமாற ஆண்கள் இருவரும் உலக அரசியலைப் பேசியபடியே உணவை உண்டு முடிக்க, சுந்தரி வந்தார்.



“இன்னும் அரை மணி நேரத்துல வந்துடறேன் சொன்னார் மாமா… நாம சாப்பிட்டு கிளம்ப சரியா இருக்கும்… அவர் வெளியே சாப்பிட்டாராம்…” எனச் சொல்லி, அவரும் யுகியும் சாப்பிட்டு முடிக்க, சொக்கனும் வர, அனைவரும் கோவில் கிளம்பியிருந்தனர்…



அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவரவர்க்கு தகுந்தார் போலவே நகர, சண்முகம் மட்டும் ஏதோ ஒரு யோசனையுடேயே தான் இருந்தார்… அதைப் பார்த்த யுகிக்கு மனதில் கவலை. அவரிடம் கேட்டாலும் எதுவுமில்லை என்றே பதில் வர, ப்ரித்வியிடம் புலம்பித் தள்ளிவிட்டாள்… அவனும் அவரிடம் கேட்பதாக சொல்லி, அவளை சமாதானம் செய்திருந்தான்.



திடீரென்று ஒரு நாள் சண்முகம் ப்ரித்வியின் வீட்டிற்கு வந்தார். வந்தவர் திருமணத்தை இந்த மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்… சுந்தரிக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஏன் உடனே என்பது போல் பார்க்க, “இல்ல சுந்தரிமா நம்ம ஜோசியர் போன் செஞ்சார். யுகிக்கு இந்த மாசத்துலேயே முடிச்சிடுறது நல்லதுன்னு சொன்னார்… கோவில்ல வச்சு செய்தா இன்னும் நல்லதுன்னு சொன்னார்… எனக்கும் அதுவே சரின்னு படுது, அதுதான் சொன்னேன்… உங்க வசதி எப்படின்னு பார்த்து சொல்லுங்க… இதுல மூனு முகூர்த்த நாள் குறிச்சு கொடுத்துருக்கார் பார்த்துட்டு முடிவு பண்ணுங்க… யுகிக்கிட்ட நான் பேசுறேன். ப்ரித்வி சொன்னா புரிஞ்சுப்பான்…” எனவும்,



“எனக்கு புரியுது மாமா… நான் பேசுறேன். நீங்க பிள்ளைக்கிட்ட பேசிட்டு அவளுக்கு எந்த நாள் சரிப்படும்னு கேட்டீங்கன்னா அன்னைக்கே முடிவு செய்துக்கலாம்… இவனுக்கும் அடுத்த மாசம் பிறந்தநாள் வருதே, வயசும் இருப்பத்தியெட்டு தொடங்கப் போகுதே, இரட்டைப் படையா அமைஞ்சுடுசேன்னு யோசிச்சேன்… கடவுளா பார்த்து ஜோசியரை அனுப்பி வச்சிருக்கார்… நல்லது மாமா. நான் வீட்ல பேசுறேன்...” எனும் போதே ப்ரித்வி வீட்டினுள் வர, “இதோ அவனே வந்துட்டானே…” எனவும்,



“என்னம்மா…” என்றவன் அப்போது தான் அங்கிருந்த சண்முகத்தைப் பார்த்தவன், “வாங்க சித்தப்பா, வந்து ரொம்ப நேரமாச்சா.? டென் மினிட்ஸ் ப்ரஷ் ஆகிட்டு வந்துடறேன்…” எனவும்,



“நீ போயிட்டு வா.. நான் இருக்கேன்..” என்றவரிடம் சொல்லி விட்டு, தாயிடம், “ம்மா… ஸ்ட்ராங்கா காபி வேணும் சூடாவும் இருக்கனும்…” என தன் அறைக்கு விரைந்தான்…



சொன்னதைப் போலவே பத்து நிமிடத்தில் வந்தவன், காஃபியை அருந்தியபடி “சொல்லுங்க சித்தப்பா.. உங்களுக்கும் சைமனுக்கும் எதுவும் பிரச்சினையா.. அவன் கூட உங்களைப் பார்த்தேனே.. ஆள் கொஞ்சம் சரியில்லாதவன்னு தெரியும் தான. அவன் எதுவும் பிரச்சினை பன்றானா..? என்னாச்சு சித்தப்பா..” என ப்ரித்வி பேச்சை ஆரம்பிக்க,



“அதெல்லாம் ஒன்னுமில்ல தம்பி, அவன் அந்தப் பொண்ணு விஷயத்துல இருந்தே முறைச்சிட்டுத் தான் திரியுறான். அவனெல்லாம் ஒரு ஆளா..? நான் பார்த்துக்குறேன். இப்போ சொல்ல வந்ததே வேற..” என்றவர் சுந்தரியிடம் சொன்னதை அவனிடம் சொல்ல,



“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல சித்தப்பா. யுகிக்கிட்ட பேசிடுங்க முதல்ல. அவ மேலயும் கீழேயும் குதிக்கப் போறா..” என்று சிரித்தவன், “வேறெதுவும் பிரச்சினையில்லையே சித்தப்பா..” என மீண்டும், மீண்டும் அழுத்திக் கேட்க,



“இல்லடா தம்பி.. அப்படி ஒரு பிரச்சினைன்னா உன்கிட்ட தான் முதல்ல வருவேன் சரியா.? நீ பார்த்துக்க மாட்டியா.?” என சிரித்தபடியே சொல்ல,



“கண்டிப்பா சித்தப்பா உங்களுக்காக நான் என்ன உதவி வேணும்னாலும் செய்ய கடமைப் பட்டுருக்கேன். உங்களால முடியும். அது எனக்குத் தெரியும். முடியாத பட்சத்துல என்கிட்ட தயங்காம சொல்லனும்..” என அவனும் சொல்ல,



“சரிடா போலிஸ்காரா.. வீட்டுக்குள்ளயும் போலிசாவே இருக்காத, நான் யுகிக்கிட்ட பேசிட்டு சொல்றேன்.” என்று கிளம்பி விட்டார். ஆனால் ப்ரித்விக்கு தான் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது, சண்முகத்தின் நடவடிக்கையில்.



சண்முகம் சொல்லிச் சென்றதைப் போலவே, யுகியிடம் பேசினார். சில நாட்களாக அவர் ஏதோ மன சஞ்சலத்தில் அலைகிறார், என்று அவளுக்குத் தெரியும். ஆனால் ஏன் என்று மட்டும் தெரியவில்லை. இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் என்றிருக்க, இவர் உடனே, அதுவும் ஒரே மாதத்தில் என்றால், என்ன நடக்கிறது.? எப்படியெல்லாம் கேட்டும் அவர் பதில் சொல்லவே இல்லை. சம்மதிப்பதைத் தவிர யுகிக்கும் வேறுவழி இருக்கவில்லை.



இரு வீட்டார்களும், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே சூழ, மிகவும் எளிமையாக ப்ரித்விராஜ் – சம்யுக்தா திருமணம் நடந்து முடிந்திருந்தது. திருமண சடங்குகள் வழக்கம் போல நடக்க, திடீரென்று ப்ரித்வியின் எண்ணுக்குப் போன் வர, எமர்ஜென்சி என்றுக் கிளம்பியவன் திரும்பி வர நள்ளிரவைத் தாண்டியிருந்தது. ஆளாளுக்கு அவனைப் போட்டுத் திட்ட, திட்ட வேண்டியவளோ அவனைத்தான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



அறைக்குள் வந்தவன் குளித்துவிட்டு வந்து தான் அந்த அறையையே கவனித்தான். அன்றைய அவர்களது மோகன இரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது, பூக்கள் மொத்தமும் யாரும் தீண்டாமல் வாடிப்போய் அவனைப் பார்த்து அழுவதைப் போல் தோன்றியது. “ம்ச்ச்.” என்ற சலிப்புடன் கட்டிலில் விழுந்து விட்டான்.



உள்ளே வந்த யுகி அவன் படுத்திருப்பதைப் பார்த்து, அருகில் சென்று நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள் ஜுரமோ என்று, அப்படியொன்றும் இல்லை என தெரிந்ததும், “மாமா.. மாமா.” என அழைக்க,



“யுகி ப்ளீஸ்… ஐ நீட் சம் ரெஸ்ட்..” என்னைத் தொல்லை செய்யாதே என அவன் நாசூக்காக சொல்லிவிட, பெண்ணின் முகம் சுருங்கி விட்டது. ஆனாலும் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்றுத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவள், “ஓகே.. ஓகே நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் டிஸ்டர்ப் செய்யல, பட் பால் மட்டுமாச்சும் குடிச்சிட்டு படுங்க. போதும்..” என தன்மையாக, அவன் தலையைக் கோதியபடியே சொல்ல,



மனைவியின் செயலில் அதுவரை இருந்த இறுக்கமெல்லாம் தொலைந்து போவதை அவனால உணர முடிந்தது. அது சற்றுத் தெம்பைக் கொடுக்க, எழுந்து அமர்ந்தான். யுகியும் பாலை ஊற்றிக் கொடுத்து, குடித்ததும் அதை வாங்கி ஓரமாக வைத்து விட்டு, அவன் படுக்க முன் உட்கார்ந்து, அவன் தலையைத் தன் மடியில் தாங்கியிருந்தாள்.



ப்ரித்விக்கும் அந்த இதம் தேவைப்பட்டது போல, அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல மன இறுக்கங்கள் எல்லாம் மறைய, அவளது இடையைக் கட்டி, வயிற்றில் முகம் புதைத்தான். கணவனின் செய்கையில் உடல் சிலிர்த்தாலும், செய்து கொண்டிருந்த வேலையை மட்டும் விடவில்லை.



அவன் இளகிவிட்டான் என்பதை உணர்ந்தவள், “என்னாச்சு மாமா..” எனக் கேட்க, “ம்ச்… ஒரு சூசைட் கேஸ். பொண்ணுதான்..” எனவும்,



“ஏன்.. என்னாச்சு…” என அவளும் சற்றுப் பதட்டமாகக் கேட்க,



“ம்ம்.. லவ் ஃபெயிலியர் தான் வேற என்ன..? எப்படித்தான் பெத்தவங்களை மறந்துட்டு எவனோ ஒருத்தனுக்காக இப்படி உயிரை விடுறாங்களோ..” என சலிப்பாக சொன்னவன், “அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸ் அழறதைப் பார்க்கும் போது, என்ன இலவு லவ்வோன்னு தோனுது.. இன்னும் போஸ்ட்மார்ட்டம் முடியல, டாக்டர் இல்லைன்னு நாளைக்குத்தான் ஆகும் சொல்லிட்டாங்க. மார்னிங்க் சீக்கிரம் போகனும்..” என்றவன், “சாரி டா… ரியல்லி ஐ நீட் ரெஸ்ட்..” என்க



“ம்ம்ம்.. சரி மாமா நீங்க படுங்க..” எனப் பின்னே சாய, “சாரிடா உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே..” என்றதும்,



“ச்சே ச்சே.. எனக்கு என்ன வருத்தம். அதெல்லாம் எதுவும் இல்லை. உங்க வேலையை பத்தி எனக்குத் தெரியும் தான, இந்த மாதிரி அவசர சூழ்நிலைகள வரும்ன்னும் தெரியும். அப்போ அதுக்குத் தகுந்த மாதிரி தான நான் இருக்கனும். அப்படித்தான் இருப்பேன். கவலைப்படாம நீங்க தூங்குங்க..” என்ற மனைவியை மேலும் இறுக்கியப்படியே உறங்கியதை போல் படுத்துக் கொண்டான்.



இல்லையென்றால் இன்னும் என்ன என்ன கேள்விகளைக் கேட்பாள் என்றுத் தெரியுமே, அதனால் அமைதியாகா படுத்திருந்தான். வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவனுக்குள் ஒரு எரிமலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது என்பது தான் உண்மையே..



ஆம் அவன் இன்று சந்தித்து வந்த பிரச்சினை அப்படி. அதிலும் தான் மரியாதையாக நினைத்த மனிதரின் மறுபக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கும் என்று அவன் யோசித்ததே இல்லையே. இதை எப்படி மனைவியிடம் சொல்வது. முதலில் அவள் நம்புவாளா.? ஆதாரோத்தோடு நிரூபித்தால் கூட நம்ப மாட்டாள். இதில் ஆதாரம் இல்லாமால் வாய் வார்த்தையாகச் சொன்னால் எப்படி நம்புவாள். மகள் போல வளர்த்தவளிடம் கூட உண்மையாக இல்லையே.. ஏதோ ஒரு நேரத்தில் உண்மை வெளிப்படும் போது யுகி எப்படி ரியாக்ட் செய்வாள்.



ப்ரித்வியின் யோசனைகள் அனைத்தும் மனைவியைச் சுற்றியே ஓட, நிமிர்ந்து பார்த்தவன் அமர்ந்தபடியே உறங்கியிருந்தாள். விழி எடுக்காமல் அவளையேப் பார்த்தவன், பின் தன் தலையில் அடித்துக் கொண்டு, அவளை நேராகப் படுக்க வைத்து, கன்னத்தை வருடியபடியே பேச ஆரம்பித்தான்.



“சாரிடா சதாக்குட்டி, உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். தப்புதான் எனக்கும் புரியுது.. ஆனா உன் முன்னாடி என்னால நடிக்க முடியலையே.. என்ன செய்வேன். நாளைக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சா நீ என்னை வெறுத்துடுவியோடா… பயமா இருக்கு குட்டிம்மா.. நீ என்னை விட்டு போக மாட்ட தானே, என்னைப் புரிஞ்சுக்கவ தானே. புரிஞ்சிக்கோடா..” என்று மனதுக்குள் கதறியபடியே மனைவியிடம் பேசியவன், அடுத்த நாள் விடியலை நினைத்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டான்.



தூக்கம் சுத்தமாக அவனை விட்டு போயிருந்தது. எழுந்து பால்கனியில் இருந்து இருளை வெறித்தான். அப்போது ஒரு உருவம் அவனைக் குறிப் பார்த்து துப்பாக்கியை ஏந்தியிருந்தது.





“அன்னைக்கு நடந்ததுல சார் மேல எந்தத் தப்புமே இல்ல யுகிமா.. உங்க மாமா இறந்ததுக்கும் சார் காரணம் இல்லை..” என்றவர் நான் சொல்ல வர்ரதை நீ சரியா புரிஞ்சிக்கனும், ஒரு உண்மையை சொல்லு, உங்க மாமாவைப் பத்தி யாரும் தப்பா சொன்னா நீ உடனே ஒத்துக்குவியா..” எனக் கேட்க,



“இல்லை.. நான் நம்பமாட்டேன், ஒத்துக்கவும் மாட்டேன், எங்க மாமா தப்பு செய்ய மாட்டார்..” என ஆவேசமாகச் சொல்ல,



“அப்புறம் எப்படிம்மா ப்ரித்வி சார் உன்கிட்ட உண்மையை சொல்லுவார். நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்குமா..? நீ ஒரு பக்கமே பார்த்துட்டு இருக்க. அந்த இன்னொரு பக்கத்தையும் தெரிஞ்சிக்கிட்டாதான் உன்னால எந்த முடிவுக்கும் வர முடியும். சாரைப் பத்தியும் அவர் மேலத் தப்பு இல்லைன்றதைப் பத்தியும் நீ தெர்ஞ்சிக்க முடியும்..” என ஜகன் நிறுத்த, அதிர்ச்சியாகப் பார்த்திருந்தாள் யுகி.



அப்படியென்றால்.. அப்படியென்றால் மாமா தப்பு செய்தவரா..? என்ன தப்பு செய்தார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன தப்பு செய்தார். கேள்விகள் மூளையை படையெடுக்க, அதற்கான விடை தெரிந்து கொள்ள வேண்டி எதிரே இருந்த ஜகனை குழப்பமாகப் பார்த்தாள்.
 
Top