• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
சரத் கோவமாக சாராவை பிடித்து தள்ள கீழே விழுந்தவளின் கை அடிபட அம்மாஆஆ.... என வலியில் முகத்தை சுருக்கி முனங்கியவள் தட்டித் தடுமாறி எழுந்து தன் முன்னே முறைத்துக் கொண்டு இருப்பவனிடம் பயந்தபடியே....

"மன்னிச்சுருங்க அண்ணா அந்த நாய் என்னை முறைச்சிக்கிட்டு வந்திச்சு.... அதான் ஓடி வந்து உங்க மேல கவனிக்காம மோதிட்டேன் சாரிண்ணா சாரி..." என்றவளின் கையை பிடித்து மடக்கி சுவற்றோடு சாய்த்தவன்....

"யாருக்கு யாருடி அண்ணன் இனிமே அண்ணன் நொண்ணன்னு சொன்னே வாயே ஒடச்சிடுவேன் இனிமே என்கிட்ட ஜாக்கிரதையா இரு இல்லை நடக்குறத்துக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்...." என்றவன் பற்களை கடித்துக் கொண்டு பேசியவன் அவள் கையை உதறி விட்டு "போய் தொலே...." என அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி சென்று விட போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.

"இவரு எதுக்கு நம்மகிட்ட எரிஞ்சு விழுறாரு நான் என்ன தப்பு பண்ணினேன்‌... என்றவள் புரியாத புதிராக சரத்யை பற்றி யோசித்துக்கொண்டே தனது கன்றியிருந்த கையை தேய்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்....





இரவு நேரம் அந்த வயலூர் நிலாவின் மகிமையில் ஜொலித்துக் கொண்டிருக்க இரவு தென்றலோடு அதனை ரசித்தப்படியே மொட்டை மாடியில் கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள் சாரா....

அவளை தேடி வந்த சந்தோஷ் அவளருகே வந்து நின்றவன் அவள் முகத்தை நிதானமாக ஒரு நிமிடம் பார்த்தவன் "என்னாச்சு முயலு இங்க வந்து நின்னுக்கிட்டிருக்கே...."

அக் கேள்வியில் மெல்ல புன்னகைத்து அவனை பார்த்தவள் "ஒன்னுமில்லடா இத்தனை வருஷமா இந்த சொர்கத்தை மிஸ் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்ணிட்டிருக்கேன்..." என்றவள் கூறவும்.

"ஹேய் முயல் இப்போ உன்னை பத்தி தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசைப்படுறேன் மறைக்காம சொல்லுடி‌‌..." என்றவனிடம் புன்னகை மாறாமல் "என்ன பத்தி சொல்ல அது ஒன்னும் அவளோ சுவாரஸ்யமா இல்லடா....."என்றவளை போலியாக முறைத்தவன் "நீ மொத சொல்லு அது சுவாரஸ்யமா இல்லையான்னு நான் சொல்றேன்..." என்றவனும் கையை மார்புக்கு குறுக்க கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தபடி கேட்க‌....


"சரி சொல்றேன் சொல்லி தானே ஆகனும்... என்றவள் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியபடி எனக்கு எட்டு வயசு ஆகும் போது அம்மாவும் அப்பாவும் ஆக்சிடன்லே இறந்திட்டாங்கே அந்த ஒரு வருஷம் சொந்த பந்தம்ன்னு யாரும் இல்லாம தனிமரமா நின்னப்போ தான் துணையா நீ வந்தடா தொலைஞ்சு போன என்னோட சந்தோசத்தை எனக்கு கொடுத்த ஆனா அடுத்த வருஷமே அந்த கடவுள் உன்கிட்ட இருந்தும் என்னை பிரிச்சிட்டாரு அப்போ தான் அந்த விஷயம் நடந்துச்சு என்னையே ஒரு ரெண்டுப் பேர் வந்து யாருக்கும் தெரியாம எங்க வீட்டிலே இருந்து கூட்டிட்டு போனாங்கே அது வேற எங்கயும் இல்லை அவுஸ்ரேலியாக்கு தான் எனக்கு நடக்கிற எதுவுமே புரியலே அங்க ஒரு வீட்டுலே எனக்கு துணையா ஒரு பொம்பளை இருந்தா ஓர் கட்ட வயசு வரைக்கும் எனக்கு சமைச்சு போட்டு என்னோட அன்றாட வேலையை மட்டும் பார்த்திக்கிட்டு இருந்தா எனக்கோ புரியாத பாஷை வேற நாடுன்னு கண்ணை கட்டி காட்டுலே விட்ட மாதிரியிருந்திச்சுடா அங்கயே ஸ்கூலும் போனேன் நான் பெரியவள் ஆனதும் என்கூட இருந்த அந்த பொம்பளையும் விட்டிட்டு போய்ட்டா அன்னையிலே இருந்து தனியாளா நான் ஒருத்தியா வீடு மாதிரியிருந்த ஜெயிலுக்க வாழ்ந்திட்டிருந்தேன் அப்போ நான் ஒரு லட்சியத்தோட பயணிக்கனும்ன்னு முடிவெடுத்து டாக்டருக்கு படிச்சேன் நான் நினைச்ச மாதிரி அதுலே சாதிச்சிட்டேன் இப்போ இந்த சாரா ஒரு டாக்டர் என்றவளுக்கு அதை சொல்லும் போது அவ்வளவு இதம் மனதிற்குள்....


சரி இது தான் நம்ம வாழ்க்கைன்னு போய்கிட்டிருந்தப்போ தான் எனக்கு லெட்டர் வந்திச்சு என்னன்னு பார்த்தப்போ அதுலே "நீ ஒளிஞ்சியிருந்தது போதும் இனிமே நீ வெளியே வர வேண்டிய நேரம் வந்திடுச்சு கிளம்பி உன்னோட ஊருக்கு வா உனக்கான நேரம் இது...."ன்னு எழுதி ஒரு லெட்டரும் அதுலே பாஸ்போர்ட் ப்ளைட்டிக்கெட் எல்லாம் இருந்திச்சு அது மூலமா தான் என்னாலே இங்க வர முடிஞ்சதுடா அதுவரைக்கு இந்த பாஸ்போர்ட் ப்ளைட் டிக்கெட் இது எல்லாம் என்ன எப்பிடியிருக்கும்ன்னு கூட எனக்கு தெரியாத நிலமையிலே தான் இருந்தேன் ஊர்ன்னு சொல்லியிருந்திச்சு ஆனா என்னோட ஊர் எதுன்னு? கூட எனக்கு தெரியலை இது தான் நேரம்ன்னு நான் எப்பிடியாவது உன்னை பாத்திடனும்ன்னு
உன் ஊரை கண்டுப்பிடிச்சு இங்கே வந்திட்டேன்.‌‌...." என்றவள் கூறி முடிக்க இதை எல்லாம் கேட்ட சந்தோஷ் ஆழ்ந்த யோசனையில் இருந்தான் "என்னடா? யோசிச்சிட்டிருக்க...."

"இல்லைடி உன்னை எதுக்கு இங்கே இருந்து அங்கே கூட்டிட்டு போய் கவனிச்சு நீ வளர்ந்து ஒரு நிலமைக்கு வந்ததும் திரும்ப வர சொல்லிருக்காங்கே ஏதோ மர்மம் இருக்கிற மாதிரி தோனுதே...."



"ஆமா உனக்கு உன் வீடு எல்லாம் ஞாபகம் இருக்கா?..." என்று கேட்க இல்லை என தலையாட்டினாள் "ஒரு வேளை என்னோட சின்ன வயசு ஞாபங்களை தூண்டுற மாதிரி எதையும் பார்த்தா நான் கண்டுப்பிடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்டா....."

"எனக்கு புரியிது உன்னோட அந்த வயசுலே நடப்பதை புரிஞ்சுக்க முடியாதுன்னு ஆனா எனக்கு இது ஏதோ சரியா படலைன்னு நினைக்கிறேன் முயலு... நீ கவனமாயிரு என்ன நடந்தாலும் உன் கூட நான் இருப்பேன் ஓகேயா...." என்றிட "அதை நீ சொல்லனுமாடா..." என்றவள் புன்னகைக்கவும்....



"சரி சரி வா ரொம்ப நேரம் பனியிலே நிக்காத உள்ளே போலாம்..." எனக்கூட்டி செல்ல இவளும் அவனுடனே நடந்த படி "ஆமா உனக்கு ஆர்மி லீவ்வா என்ன?.." என்றவளிடம் "ஹ்ம்ம் 2 மாசம்..." என்றவர்கள் பேசியபடி கீழே வர சரத்தும் படியேறி வந்தான் தன்னறைக்கு செல்ல இவர்களை கண்டதும் வடிந்த கோவம் தலை தூக்க.....


"டேய் சந்தோஷ் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா எப்பபாரு ஒட்டிக்கிட்டு தான் திறியனுமா? விலகி நில்லுடா யாராவது பார்த்தா என்னடா? நினைப்பாங்க பார்த்து நடந்துக்க...." என்றதில் என்ன புரிந்ததோ சரிண்ணா... என்று தலையாட்டியவன் "முயலு நீ உன்னோட ரூமுக்கு போ‌...." என அனுப்பி விட்டு அவனும் சென்று அறைக்குள் புகுந்து கொண்டான் "இதுங்கலே வளர விடக்கூடாது எப்பிடியாவது பிரிச்சிடனும் இல்லைன்னா என் தம்பி நிலமை பழையபடி ஆகிடும்.." என நினைத்தவன் அறைக்குள் சென்று விட்டான்....


கதிரவனின் தங்க பொற்கரத்தை இவ்வுலகத்திற்கு பரப்பிக் கொண்டு வந்து நிற்க அவ்வூர் மக்களும் தூங்கியது போதும் என எழுந்து சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.


லேசாக கண் திறந்தவள் மணியை பார்க்க அது 6.00 என காட்டியது திரும்பவும் தூங்கலாம் என புரண்டு படுத்தவளிற்கு தூக்கம் வராமல் இருக்க கொண்டையை தூக்கி முடிந்தவள் கொட்டாவி விட்ட படி வெளியே வர அங்கு வாசலில் வசந்தி கோலம் போட்டுக் கொண்டிருந்தார் "இவங்க என்ன சின்ன பிள்ளை மாதிரி தரையிலே உட்கார்ந்து கீறிட்டிருக்காங்க..." என்றவள் அவரிடம் செல்ல அவரோ பல வண்ணத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.


"அத்தை என்ன பண்ணிட்டிருக்க சின்ன பிள்ளை மாதிரி தரையிலே சித்திரம் வரைஞ்சுட்டு..." என கேட்க வசந்தியோ அவளை வித்தியாசமாக பார்க்க அப்போது ஜாகிங் செல்ல கிளம்பி வந்த சந்தோஷின் காதிலும் இது தெளிவாக விழுந்தது "குட் மார்னிங் முயலு...." என புன்னகைக்க "மானிங் கிங்..." என்றவளிடம் புன்னகையுடன் "இது கோலம் இதை வாசல் முன்னாடி போடுறது நம்மளோட பழக்க வழக்கத்துலே ஒன்னு அதான் அம்மா பண்ணிட்டிருக்காங்க..." என்றவன் சொல்ல "ஓஹோ இன்ரெஸ்டிங்.... ஆமா வேற என்ன எல்லாம் பண்ணுவாங்க..." என்றவனிடம் கேட்க "அவங்க கூட இருந்து பார்த்து தெரிஞ்சுக்கோ உன் புருஷன் வீட்டுக்கு போனா இது எல்லாம் பண்ணனும் இல்லைன்னா உன்னே உன் மாமியாரு அடிச்சு வெளியே தொரத்திடுவாங்க..." என சிரிக்க "டேய்... சரிதான் போடா ஏதோ இது எல்லாம் தெரியாதுன்னு கேட்டா என்ன பேச்சு பேசுற நீ..." என முகத்தை திருப்பி கொள்ள "நான் உண்மையை தானே சொன்னேன் சரிடி இதை பழகிக்க அப்பறம் போய் ப்ரஷ் பண்ணி மூஞ்சை கழுவு கப்பு அடிக்குது..." என மூக்கில் கையை வைத்து மூடி அவளை விளையாட்டாக வம்பிழுத்து கொண்டு இருக்க....



"அடிங்கு நானும் பார்த்திட்டே இருக்கேன் காலையிலே என் வாயை கிளப்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? பேசாம போடா இங்கயிருந்து எங்களுக்கு எல்லாம் தெரியும்..‌." என வீட்டுக்குள் செல்ல அவள் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு வசந்தியிடம் திரும்பிய சந்தோஷ்.....

"அம்மா அவ நம்ம கலாச்சார பொண்ணாயிருந்தாலும் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தெரியாம வளர்ந்தவே அதாலே எல்லாம் சொல்லி கொடுங்கம்மா அவளும் பழகிப்பா..." என்றவன் அமைதியான குரலில் கூற...


"என்னடா சொல்ற அவங்க அம்மா அப்பா கூடவா இது எல்லாம் சொல்லிக் கொடுக்கலே?..." என்றவரிடம் "அப்பிடி யாராவது இருந்திருந்தா அவள் நம்மகிட்ட இருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதும்மா..." என்றவன் அங்கிருந்து எழ வசந்தியும் அவன் வார்த்தையில் உள்ள விஷயத்தை புரிந்துக் கொண்டவர் அமைதியாகி விட "அம்மா மறுபடியும் சொல்றேன் அவ பிறந்த குழந்தை மாதிரி எல்லாத்தையும் வியப்பா தான் பார்ப்பா ஏன்னா இந்த சூழல் புதுசு.... நான் இல்லாத நேரம் நீங்க தான் அவளை பார்த்துக்கனும் புரியிதா? அப்பறம் அவளும் இனிமே நம்ம வீட்டிலே ஒருத்தி அவ இனிமே எங்கயும் போக மாட்டா போகவும் விட மாட்டேன்..." என்றவனின் குரலில் அத்தனை உறுதி ஷார்ட்ஸ் கையில்லாத பனியன் காலில் சூவுடன் ஜாகிங் போக தொடங்க வசந்தியும் புன்னகை முகமாக உள்ளே சென்றவர்‌....

"சாரா கண்ணு இங்கவாமா..." என அழைக்க அவளும் டவல் ப்ரெஸ் மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு
என்ன அத்தை.... என கேட்டபடி துள்ளிக் குதித்து வந்தவளை அழைத்துக் கொண்டு பின்னால் இருந்த பாத்ருமிற்கு அழைத்து சென்று தண்ணீ இரைத்து கொடுக்க அதை எல்லாம் புதிதாக பார்த்தபடி இருந்தவள்....


"அத்தை இங்கே சவர் இல்லையா? நான் எப்பிடி குளிக்கிறது..." என்றவளிடம் ஒரு வாளியை நீட்டி "இங்க இருக்கிற டேங்க்லே அள்ளி குளிக்கனும்..." என்றவர் சொல்லிக் கொடுக்க அதை கத்துக் கொண்டவள் அதுபடியே குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வர அவளின் ஒழுங்காக துவட்டப்படாத முடியை வசந்தி துவட்டி விட அந்த பாசத்தில் புதுவிதமான உணர்வில் சாராவின் கண்களும் கலங்கியது....


"முடியை நல்லா தொவட்டனும் கண்ணு இல்லைன்னா சளிப்பிடிச்சிடும்..." என்றவர் துவட்டி விட்டு சாமியறைக்கு கூட்டிச் சென்று சாமி கும்பிட வைத்து விபூதியை நெற்றியில் பூசி விட்டவர் வெளியே ஏதோ சத்தம் கேட்க "கண்ணு உனக்கும் சரத்துக்கும் டீ போட்டு அங்க சமையக்கட்டுக்க வெச்சிருக்கேன் அவனுக்கு கொண்டு போய் கொடுத்திட்டு நீயும் குடி நான் சத்த நேரத்துலே வந்திடுறேன்‌...." என்றவர் வெளியே சென்றுவிட இவளுக்கு அய்யோ... அவரா..! என்றிருந்தது வேற வழி கொண்டுப் போய் தானே ஆகனும்... என்றவள் அவனுக்கு டீயை எடுத்துக் கொண்டு அவனறைக்கு செல்ல அவளுக்கு பீபி எகிறியது...


"அய்யோ நேத்து தெரியாம அவர் மேலே வந்து மோதினத்துக்கு அந்த கிழி கிழிச்சாரு இப்போ நாம வேற டீ எடுத்திட்டுப்போறாம் என்ன பண்ண போறாரோ..." என பயத்துடன் அவன் அறையை நெருங்கி கதவை தட்ட அதை திறந்தவன் என்ன? என புருவம் உயர்த்திக் கேட்க டீயை நீட்டினாள் "அத்தை உங்களுக்கு கொடுக்க சொன்னாங்கே..." என்றவள் நீட்ட அதை வாங்கிக்கொள்ள எடுத்த கையில் இருந்ததை கண்டு முகம் வெளிறியது அந்த காலை குளிரிலும் முத்து முத்தாக வியர்வை பூர்த்திருந்தது பளிங்கு முகத்தில் நாக்கு வரண்டு போக அவ்விடத்திலே சிலையாக நின்றாள்.


தொடரும்.
 
Top