• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 10

"ஸ்ரீயும் நம்ம கூட படிச்ச பொண்ணு தானே?.. ஏன்டா காலேஜ் எங்களோட தான படிச்ச? பிரேம் எப்படிப்பட்டவன்னு உனக்கு தெரியாதா? நீயெல்லாம் என்ன மனுஷன் டா?" நேருக்கு நேராய் கவின் கேட்டதில் நிரஞ்சனும் கோபமாய்,

"லுக்! ஸ்டடிஸ் வேற பிசினஸ் வேற! அவனை எங்கரேஜ் பண்றதே தப்பு.. இதுல என்னை மனுஷனான்னு கேட்குற?" என்றான் நிரஞ்சனும்.

"ஓஹ் பிசினஸ்ல அவ்வளவு அக்கறை உனக்கு இல்ல? அதனால தான் மாசத்துக்கு ஒரு முறை வந்து எட்டிப் பார்த்து யாரை தப்பு சொல்லலாம்.. யார்கிட்ட வெஞ்சஸ் தீர்த்துக்கலாம்னு பாக்குற?" என்று கவினும் அடுத்தடுத்த பேச்சுக்களில் அனைத்தையும் கூற,

"ரொம்ப பேசாத! நீங்க ரெண்டு பேர் இருக்கீங்களேன்னு தான் நான் இந்த பக்கம் வரல.. எனக்கு எங்கப்பா பிசினஸே ஏகப்பட்டது இருக்கு.. அதை பார்த்துக்கவே நேரம் பத்தல"

"அப்படி பிஸியா இருக்கவன் வாண்டடா வந்து ஏன் டா இந்த சின்ன ரெஸ்டாரண்ட்ல பார்ட்னர் ஆகணும்? கொஞ்ச நாளா சந்தேகம் தான் இருந்துச்சு.. இப்ப கன்ஃபார்மா சொல்றேன்.. உனக்கு செழியன் மேல பொறாம.." என்று கவின் கோபமாய் கூற,

"வாட் ரப்பிஷ்? அவனெல்லாம் என் ஸ்டேடஸ்க்கு ஈக்குவலா? அவன் ஒரு.." என்று பேசிக் கொண்டிருந்தவன் பார்வையின் ஏளனம் கவினுக்கு இன்னும் எரிச்சலைக் கொண்டு வர, அவன் பேசும் முன் அங்கே வந்திருந்தான் பிரேம்.

"ஷட்டப் நிரஞ்சன்! திஸ் இஸ் யுவர் லிமிட்.. உனக்கு இங்கே எங்களோட டீம் மைண்டைன் பண்ண புடிக்கலைனா தாராளமா விலகிக்கலாம்.. நீயோ நானோ இல்லாம கவின், செழியன் ரெண்டு பேர்னால மட்டும் தான் இன்னொரு பிராஞ்ச் ஓபன் பண்ணி இந்த ரெஸ்டாராண்ட் நல்ல பேர் வாங்கினதை மறந்துட்டு ரொம்ப தப்பா பேசிட்ட.. இதுக்கு மேல அவனை இன்னும் ஒரு வார்த்தை பேசினா ஐ காண்ட் டு கண்ட்ரோல் மைசெல்ப்.." என்றவனும் கவினுக்கு இணையான கோபத்தில் நிற்க, வெளியில் சிலரின் பார்வையும் உள்ளே தான் இருந்தது.

கவின் கதவை மூடாமல் வந்ததன் விளைவு பிரேம் ஸ்ரீயை வாசலில் விட்டுவிட்டு நிரஞ்சன் இருக்கிறானா என பார்க்க வந்திருக்க, அங்கே அவர்கள் வார்த்தை தடிப்பதை பார்த்தவன் ஸ்ரீக்கு அழைத்து ஆட்டோவில் செல்லும்படி கூறி உள்ளே வருவதற்குள் அதிகமாய் பேசிவிட்டான் நிரஞ்சன்.

"அவன் உங்களை யூஸ் பண்ணிக்குறான்.. அது கூட உங்களுக்கு தெரியல இல்ல?" நிரஞ்சன் பேச்சில்,

"பிரேம்! இவன் இப்ப கிளம்பலைனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று கூறவும் பிரேம் மொபைல் ஒலி எழுப்ப, அழைத்தது செழியன்.

திரும்பி பிரேம் பார்த்த பொழுது மேனஜரும் கைகளை பிசைந்தபடி இங்கே தான் பார்த்து நின்றார். ஏற்கனவே செழியனுக்கு தகவல் சென்றிருக்கும் என அறிந்தவன்,

"உன் பாயிண்ட் படி இது ஒர்கிங் டைம் தான்.. இங்க இன்னும் சீன் கிரியேட் பண்ண வேண்டாம்.. அப்புறமா பேசிக்கலாம்.." பிரேம் கூற,

"நீங்க எல்லாம் பட்டா தான் டா திருந்துவிங்க" என்று கூறி சட்டென அங்கிருந்து வெளியேறி இருந்தான் நிரஞ்சன்..

பிரேம் மொபைலை அட்டன் செய்து காதில் வைக்க,

"என்ன டா பிரச்சனை? அவனுக்கு என்ன தான் வேணுமாம்?" என்றான் செழியன்.

"நத்திங் இன் சீரியஸ் டா.. நம்ம மேல என்ன காண்டுன்னு தெரியல அவனுக்கு" பிரேம் கூற,

"இல்ல என் மேல.. என்னவோ அவனுக்கு என்னை புடிக்கல.. கவின் கூட சொனன்னான்.. என்ன கூட இருந்து வேவு பாக்குறானா? ஏன் டா இவ்வளவு சீப்பா இறங்கிட்டான்.. நான் வர்றேன்.. இன்னைக்கு என்னனு பாத்துடலாம்" செழியன் கூற,

"இங்க வந்தா நீ டேபிள், சேர்கிட்ட தான் பேசணும்.. அவன் போய்ட்டான்.. அநேகமா லெட்டர் வரும் நினைக்குறேன் பார்ட்னர்ஷிப் கான்செல் பன்றேன்னு" பிரேம் கூற,

"ரொம்ப நல்லது.. கவின் தான் முழு பொறுப்பும் பாத்துக்குறான்.. போய் அவனையே சீண்டிட்டு இருக்கான்.. சரி இன்ட்ரெஸ்ட்டா இருக்கானேன்னு தான் நம்ம கூட சேர்த்ததே" செழியன் கூற,

"ப்ச்! இப்ப இது எதுக்கு உனக்கு? இந்த மேனஜர்க்கு அறிவே இல்ல.. எதை எப்ப சொல்லணும்னு தெரியுதா?" என்றவன்,

"நாங்க பாக்குறோம்.. நீ வந்து ஒன்னும் பண்றதுக்கு இல்ல" என்று கட் செய்துவிட்டு பார்க்க, இன்னும் கோபம் அடங்காமல் நின்றிருந்தான் கவின்.

"விடு டா.. அவனே டீலிங்கை கேன்சல் பண்ணிட்டு ஓடுவான்.. அப்புறம் தான் நான் யூஎஸ் போவேன்.. பாரு" என்று கவினையும் சமாளித்து வைத்தான் பிரேம்.

"ம்மா நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வர்றேன்" மொபைலிக் யாரிடமோ பேசிவிட்டு வந்த செழியன் லட்சுமியிடம் கூற,

"ரெண்டாவது நாளே நீ வெளில போக கூடாது டா.. நாளைக்கு போய்க்கலாம்" என்றார் லட்சுமி.

"முக்கியமான வேலை மா.. ஹரியையும் கூட்டிட்டு போறேன்" என்றவன்,

"உன்னோட மொபைல் உன் பாக்ல இருக்குதாம் மலர்.. உங்க அண்ணி கால் பண்ணாங்க.." செழியன் மலரிடம் கூற, அவள் அதை தேடியிருக்கவே இல்லை.

"இதுல பேசறியா?" என தன் மொபைலை அவன் நீட்ட, பிறகு பேசிக் கொள்வதாய் கூறிவிட்டாள்.

"சரி நான் ஒரு ஹால்ப் அன் ஹவர்ல வந்துடறேன்" என மலரிடமும் கூறிவிட்டு ஹரியுடன் சென்று கொண்டிருந்த வழியில் தான் ஷாப்பில் பிரச்சனை என மேனஜர் இவனுக்கு அழைத்து கூறி இருந்தார்.

பிரேம் வர வேண்டாம் என கூறி வைத்துவிடவே தான் நினைத்த இடத்திற்கு ஹரியுடன் சென்று இறங்கினான்.

"வாங்க செழியன் சார்!" என வரவேற்றார் அந்த நகைக்கடை உரிமையாளர்.

"ஹலோ சார்!" என்றவன்,

"செயின் ரெடி ஆகிடுச்சா சார்?" என்று கேட்க,

"ரெண்டு செயின்ல ஒன்னு ரெடியா இருக்கு சார்.." என்றவர்,

"ஒரு ரெண்டு நாள் டைம் குடுத்தீங்கன்னா கரெக்ட்டா அந்த செயினையும் குடுத்துடுவோம்" என்றார்.

"ப்ச்! நான் ஆர்டர் கொடுத்து பத்து நாள் ஆச்சு.. இந்த டேட்ல வேணும்னு சொல்லியிருந்தேன் தானே? நாளைக்கு நான் மதுரை போனும் சார்" என்றவனுக்கு மனநிலையே மாறியது.

"நீங்க கேட்ட மாடல் கொஞ்சம் பெக்கூலியர்.. அதான் கொஞ்சம் லேட்.. கண்டிப்பா நாளைக்கு வாங்கிக்கலாம் சார்" என்று அமைதிப்படுத்த தான் நினைத்தார் அந்த கடை உரிமையாளர்.

"ஓஹ்! கமான் சார்! நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? நான் நாளைக்கு ஊர்ல இருக்க மாட்டேன்.." என்றவனுக்கு அதற்கு மேல் என்ன கூற என்று தெரியவில்லை.

"என்ன ண்ணா எதாவது இம்போர்ட்டண்ட் செயின் ஆஹ்?" ஹரி கேட்க,

"ஹ்ம் டா! மலர்க்காக.." என்றவன், சமாதானம் ஆகாமல் தலையசைத்தான்.

"சரி நான் வேணா ரெடி ஆனதும் வாங்கிட்டு வர்றேன்.. எப்படியும் கெட் டு கெதர்க்கு எல்லாரும் வர்றதா தானே பிளான்?" என்று ஹரி கூற, மனதே இன்றி சம்மதம் கூறி கடைக்காரரிடம் அந்த ஒரு செயினையும் பில்லையும் வாங்கிக் கொண்டான்.

NS என்ற எழுத்துக்களைக் கொண்டிருந்த அந்த சங்கிலியின் டாலரில் ஒரு பகுதியில் பெண் உருவமும் ஆண் உருவமும் மெழுகின் அடியில் தெரிந்தது.

அதனை பார்த்தபடி அமர்ந்திருந்தான் செழியன். இன்னொன்றும் அதே போல தான் என்றாலும் எழுத்துக்கள் மாறுபடும்.

மதுரையில் அவள் வீட்டில் வைத்து அவளிடம் கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தான். நினைத்தது போல நேரத்திற்கு தன் கைகளுக்கு அது கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம் மெலோங்க அமைதியாய் வீடு வந்து சேர்ந்தான்.

மலர் தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க அது உயிரற்று கிடந்தது.

சார்ஜரில் அதை மாட்டியவள் அடுத்து செழியன் கூறியது பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

பின் மொபைலை எடுத்து பார்த்த பொழுது நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. கூடவே வீட்டில் இருந்தும் அழைப்பு வந்திருக்க முதலில் அஜிதாவிற்கு அழைத்து பேசினாள்.

பின் தன் நெருங்கிய தோழியின் பல அழைப்புகளைப் பார்த்தவள் அந்த தோழிக்கு அழைத்தாள்.

"சொல்லு பிரியா! எப்படி இருக்க?" என்று மலர் கேட்க,

"அட கல்யாணம்னதும் மறந்துட்டன்னு நினச்சேன்.. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே போன் பண்ணிட்ட பரவாயில்லயே! எங்க நியாபகமும் இருக்கு போல" என கிண்டலில் இறங்க,

"ப்ச்! ஏன் டி.. " என்றவளுக்கு,

"ரொம்பத்தான் பண்ற டி.. உங்க அப்பாவும் அண்ணாவும் வந்து இன்விடேஷன் குடுத்தாங்க.. வான்னு நீ ஒரு வார்த்தை கூப்பிட்டியா?" என தோழியிடம் கோபம் கொள்ள, நடந்ததைக் கூறினாள் மலர்.

"என்னவோ வீட்டுல சொல்றாங்கனு தான் டி ஓகே சொன்னேன்.. பட் நைஸ் மேன்.." என்றவள் அடுத்து அவன் பேசியதையும் கூற,

"பாரேன்! நீ கலக்கு.. அது மட்டும் இல்ல.. இது ஒரு வகையில நல்லதும் தான் மலர்.. காலேஜ் முடிச்சமா கல்யாணம் பண்ணி செட்டில் ஆணோமான்னு இல்லாம ஏன் டி இப்படி இருக்க.. நானா இருந்தா ஆள விடுங்க டா சாமின்னு கும்பிடு போட்டு ஹனிமூன் போயிருப்பேன்" என்று கூறவும் மலர் சிரிக்க,

"சரி சரி உன் ஆளு எப்படி? போட்டோஸ் அனுப்பு" என தோழிகள் கதைக்க, வெகு நேரம் பேசி முடித்த மலருக்கு மனது கொஞ்சம் சமன்பட்டிருந்தது தோழியுடன் செலவு செய்த நேரத்தின் பலனாய்.

மலர் தனது மொபைலை எடுத்து செய்திகளைப் பார்க்க, பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்திருந்தது.

அவற்றிற்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பக்கம் சென்றவளுக்கு, முதலில் மகேந்திரன் தன் தங்கை மணநாளுக்கு வைத்திருந்த வாழ்த்தில் அவளும் அவளவனும் இருக்கும் புகைப்படம்.

நேற்றைய தினம் செழியன் அருகில் இவள் மேடையில் நின்ற போது எடுத்திருந்த புகைப்படம்.

செழியனின் முகத்தினைப் பெரிதுபடுத்தி பார்த்தவள் பின் புன்னகைத்து அதை அப்படியே தோழிக்கு அனுப்பி வைத்தாள்.

நியாபகம் வந்தவளாக அன்று செழியன் கூறிய எண்ணை மொபைலில் சேமித்து அவன் பெயரை வாட்சப் செயலில் தேட, அவனும் நேற்றைய தினம் இருவருமாய் இருக்கும் புகைப்படத்தை முகப்புப் பக்கத்தில் தெரியுமாறு வைத்திருந்தான்.

அதனை சில நொடிகள் பார்த்து அதோடு விரலினால் வருடிப் பார்த்தவள் உள்ளே சென்றுப் பார்க்கையில் அவன் பெயரோடு தன் பெயரையும் அவன் அதில் மாற்றி எழுதி இருந்தான்.

திருமணத்தில் அவனின் ஈடுபாடு எதையும் கவனிக்காமல் இருந்தவளுக்கு இப்பொழுது அவன் புறமாய் என சிறு சிறு விஷயங்கள் என்றாலும் அவனின் திருமணம் மற்றும் தன் மீதான பிடித்தத்தை அவை கூறிக் கொண்டிருக்க சிறு சிலிப்பு ஒன்று வந்து சேர்ந்த நொடி ஒரு குறுஞ்செய்தியும் வந்து சேர்ந்திருந்தது.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
பிடிச்சவளுக்கு
பிடிச்சவிதமாய்
பரிசு கொடுக்க விடறாங்களா????
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
பிடிச்சவளுக்கு
பிடிச்சவிதமாய்
பரிசு கொடுக்க விடறாங்களா????
அதான
 
Top