• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர்வன 4

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 4

"ப்பா! இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமே! அதுவரை நான் உங்களோடவே இருக்கேனே.. ப்ளீஸ் பா" மலர் தந்தையிடம் கேட்க, அவருக்குமே தன் மகள் வளர்ந்துவிட்டதை ஏற்று கொள்ள முடியவில்லை.

"நல்லா இருக்கு.. இப்படி ஆளாளுக்கு செல்லம் குடுத்து தான் இவ இப்படி இருக்கா.." என்ற அஜிதா,

"என்ன மலர் உனக்கு பிரச்சனை?" என்று கேட்க,

"நான் வேளைக்கு போகணும் அண்ணி.. எனக்குன்னு எவ்ளோ ஆசை இருக்கும்.. சும்மா காலேஜ் முடிச்சதும் கல்யாணம்னு சொன்னா? எனக்குன்னு ஆசை இருக்காதா" என்றாள் பாவமாய்.

"மகி! பாப்பாக்கு புடிக்கலைனா..." என்று கண்ணன் இழுக்க,

"நீங்க கொஞ்சம் சும்மா இருங்க" என்ற சித்ரா,

"உன் அப்பாக்கு இந்த சம்மந்தம் கிடைச்சதுல ரொம்ப சந்தோசம் மலர். பெரிய இடம்னாலும் எல்லாரும் குணமா இருக்காங்க.. இப்படி தேவை இல்லாத காரணம் எல்லாம் சொல்லி அப்பாவை கஷ்டப்படுத்தாத டா.." என்று கூற,

"உனக்கு அங்க எந்த கஷ்டமும் இருக்காது மலர்.. நான் வேணா உன் வேலைக்கு செழியன்கிட்ட பேசுறேன்.. வேண்டாம்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க" என்று கூற,

"ஆமா நானும் உன் அண்ணன்கிட்ட வேளைக்கு போகணும்னு சொன்னேன்.. உன் அண்ணன் என் அம்மா அப்பாக்கு நீ வடிச்சு கொட்டு போதும்னு உட்கார வச்சுட்டார்.. உனக்கு வர போறவர் அந்த மாதிரி எல்லாம் இருக்க மாதிரி தெரியல" என்று அஜி வார,

"நீ அவனை கொடுமை பண்றது போதாது? என் மகன் உன்னை கொடுமபடுத்துறானாக்கும்.." என சித்ரா கேட்க பேச்சு அப்படியே திசை மாறி இருந்தது.

இப்படி மலர் அனைத்தையும் நினைத்து செழியனை மட்டும் நினைக்க மறந்து என சென்னை வந்து சேர்ந்திருந்தாள் உறவுகளுடன்.

"வெல்கம் மலரம்மா!" கவின் மலரை வரவேற்க, முகத்தை தூக்கிக் கொண்டாள் அவள்.

"மலர்! என்ன ஹாபிட் இது?" மகேந்திரன் அதட்ட,

"அட விடுங்கண்ணா.. ஜெர்னி எப்படி இருந்துச்சு?" என்று ரச்சுவைக் கொஞ்சினான்.

"மலர் இது பிரேம்! எங்க பிரண்ட்.. அமெரிக்கால இருந்து வந்திருக்கான்" என்று கூற,

"ஹாய் ண்ணா!" என ப்ரேமை பார்த்து சிரித்தவள், கவின்புறம் திரும்பவில்லை.

"மலர்! இங்க என்னைப் பாரு" என கவின் முன் வந்து நிற்க,

"என்கிட்ட யாரும் பேச வேண்டாம்.. சொல்லி வைங்க ண்ணா" என்றாள் பிரேமிடம்.

"அவன் அண்ணன்னா நான் யாரு?" கவின் கேட்க,

"எனிமி! பிக் எனிமி.." என்றாள்.

"டேய்! மலர்! மலரம்மா!" என எப்படி அழைத்தும் கண்டு கொள்ளாமல் செல்ல,

"சரி விடு டா.. அப்புறமா பார்த்துக்கலாம்" என்றான் பிரேம்.

ஹோட்டலில் இருந்து சிறிது நேர ஓய்விற்கு பின் மண்டபத்திற்க்கு அழைத்து சென்றுவிட்டான் கவின்.

கவின் ஹரியுடன் சேர்ந்து வேலைகளை எல்லாம் முடித்திருக்க, மண்டபத்தை பார்த்துக் கொள்வது பிரேம்.

வாசலில் மணமக்கள் பெயரை வாசமிகு மலரில் பொருத்தியது முதல் மேடை அலங்காரம் வரை என முழுதாய் அங்கே பிரேம் கண்கவர வைத்திருந்தான்.

இது அவனுக்கு பிடித்தமான வேலை. ஒரு மணி நேரத்தில் சுற்றி இருக்கும் இடத்தை அழகாய் மாற்ற அவனைவிட யாராலும் முடியாது.

உறவினர்கள் நேராய் மாலை நேரத்திற்கு மண்டபம் வந்து சேர ஆரம்பமானது செழியன் மலர்விழியின் வரவேற்பு.

"பிரேம்! எப்ப டா வந்த? நா கவனிக்கவே இல்லையே? எப்படி இருக்க?" என்றார் கவினின் தந்தை விஸ்வநாதன்.

"ஏர்லி மார்னிங் வந்துட்டேன் அங்கிள்.. மார்னிங் டிசைன்ஸ் எல்லாம் முடிச்சிட்டு கவின் கூட ரூம் போய்ட்டேன்.. இப்ப தான் மண்டபத்துக்கு வர்றேன்" என்றவன்,

"எங்க அம்மா, ரித்தி எல்லாம்?" என்று கேட்க,

"மலர் ரூம்ல இருக்காங்க பா.. கவின் எங்க?" என்றார் அவர்.

"ஐயர் பூ கேட்டாங்க.. வீட்டுல இருக்குன்னு எடுத்துட்டு வர போயிருக்கான்" என்ற பிரேம்,

"அம்மா வந்துட்டு இருக்காங்க அங்கிள்.. அதான் பார்த்துட்டு இருக்கேன்" என்று சொல்லவும் சரி என்று உள்ளே சென்றுவிட்டார்.

செழியன் வேறு மாறி மாறி அழைத்துக் கொண்டே இருந்தான்.

"என்ன டா வேணும் உனக்கு? ஏசிய போட்டு கால் மேல கால் போட்டு ஹாயா மாப்பிள்ளை கொஞ்ச நேரம் உட்காரேன் டா.. அதான் நாங்க பாத்துக்குறோம் இல்ல?" எடுத்ததும் பிரேம் கத்திவிட,

"ஏன் டா கத்துற? அம்மா வந்தாச்சான்னு கேட்க தான் பண்ணினேன்?" என்றான் செழியன்.

"அம்மா வந்தா உன்னை பார்க்க வராம இருப்பாங்களா? நேரா அங்க தான் கூட்டிட்டு வருவேன்.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா இரு" என்றவன்,

'சொன்னா கேட்க மாட்டான்.. போய் போனைப் வாங்கிடணும் அவன்கிட்ட' என்று நினைத்துக் கொள்ளவும்,

"பிரேம்!" என முன்வந்து நின்றார் புஷ்பா.

"ம்மா! உங்களுக்காக தான் வெயிட் பண்றேன்.. எப்படி இருக்கீங்க மா?" என்று கேட்க, ஒரு வருடத்தில் தன் மகன் அதிகமாய் வளர்ந்துவிட்டதாய் தோன்றியது புஷ்பாவிற்கு.

கணவன் இறந்த பின் மகளும் மகனும் மட்டுமே துணை என வாழ்ந்து வருபவர். மகள் சசி கல்லூரி பேராசிரியை. அதற்கான பயிற்சி பெற்று அடுத்த தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறாள்.

"நீ எப்ப டா வந்த? எப்ப பார்ப்போம்னு ஆசையா இருந்துச்சு" என்று அவன் கண்ணம் வழித்தவர்,

"இதுக்காகவே செழியனுக்கு பெரிய பரிசு கொடுக்கணும்" என்று கூற,

"அக்கா எப்படி இருக்காங்க மா? செழியன் கல்யாணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க" என கூறியபடி செழியனின் அறைக்கு அழைத்து சென்றான்.

அப்போது தான் பாலகிருஷ்ணனிடம் காது தேயும் அளவிற்கு திட்டு வாங்கி முடித்திருந்தான் செழியன்.

பிரேம் அன்னையிடம் நின்று பேசி நலம் விசாரித்துவிட்டு மீண்டும் மகனை ஒருமுறை முறைத்துவிட்டு அவர் வெளியேறிவிட,

"என்ன டா பண்ணின? அப்பா இவ்வளவு கோபமா போறாங்க?" என்று புஷ்பா கேட்க,

"அக்காக்கு தெரியும் மா.. அக்கானால தான் எல்லாமே!" என்று பிரேம் சிரிக்க,

"சும்மா இரு டா" என்று அடக்கிய செழியன், சமாளித்து பேசி அனுப்பிவைத்தான்.

இன்னும் சில நிமிடங்களில் ரிசெப்ஸன். பாலகிருஷ்ணன் கண்களில் படாமலேயே செழியன் சுற்றி வந்திருக்க, நேராய் அறைக்கே வந்துவிட்டார் அவனை கேட்க.

"மலர்கிட்ட பேசினியா இல்லையா?" என்றதற்கு அவன் அமைதியாய் இருக்க,

"நீ அந்த பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ண போற.. அப்படி தான? இதுல உனக்கு நான் வேற துணை! நல்ல பேரு வாங்கி தர்ற டா.. உன் ஆசைக்காக உனக்கு பக்கமா இருந்தேன்.. நாளைக்கு எதாவது பிரச்சனைனு அந்த பொண்ணு கண்ணுல தண்ணி வரட்டும்.. அப்புறம் இருக்கு உனக்கு" என திட்டிவிட்டே சென்றார்.

"நான் இன்னைக்கே மலர்கிட்ட பேசிடுறேன் டா" செழியன் பிரேமிடம் சொல்லிக் கொண்டு இருக்க, கவினும் வந்து சேர்ந்திருந்தான் "மாப்பிள்ளையை கூப்பிடுறாங்க" என.

"நல்லா டிசைட் பண்ணிட்டு பேசு.. உளறி வைக்காத" பிரேம் கூற, கவின் என்னவென்று கேட்க அவனிடமும் கூறினான்.

"சுத்தம்! வேற நேரமே கிடைக்கல இல்ல உனக்கு? இவ்வளவு நாளா கோமால இருந்தியா?" என்று அவனும் வசை மாறி போழிய,

"இப்பவும் இதுல என்ன இருக்குன்னு தான் எனக்கு தோணுது டா.. இது அர்ரெஞ்டு மேரேஜாவே இருந்துட்டு போகட்டுமே மலர்க்கு" என்று செழியன் கூற,

"என்னை பேச வைக்காத.. உன்னை கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க.. மத்ததை நைட் பேசிக்கலாம் வா" என அழைத்து சென்றனர் கவினும் பிரேமும்.

"அந்த போனைக் குடு.. இல்லைனா ஏதாச்சும் பேசிட்டே இருப்ப" என்றபிரேம் மொபைலைப் பறிக்க,

"கம்பெனி கால் வரும் டா" என்றதை,

"இன்னைக்கு அது என் கம்பெனி.. போ டா" என மொபைலைப் பறித்து மாலையை கைகளில் வைத்துக் கொண்டு அறையைவிட்டு வந்து மேடை நோக்கி கூட்டி சென்றான்.

எதிர்திசையில் மலரும் மேடையேறிக் கொண்டிருந்தாள். முகம் முழுதும் சிந்தனை. கொஞ்சமும் மகிழ்ச்சியோ பூரிப்போ இல்லை அந்த முகத்தினில்.

"என்ன டா இப்படி இருக்கா?" போடப்பட்டிருந்த முகப்பூச்சினை தாண்டி அவள் சிந்தனை அவன் கண்களில் படவும் திடுக்கிட்ட செழியன், வாய்வார்த்தையும் வந்துவிட,

"நானும் காலையிலே இதான் டா நினச்சேன்.. சரியா தூங்கவும் இல்லை போல.. உன் ஒருதனால தான்" என்று கவின் கூற குற்ற உணர்வு நொடியில் ஒட்டிக் கொண்டது.

"டேய்! பயமுறுத்தாத! மலர்க்கு எப்படி செழியனை தெரியும்? அவளோட தாட்ஸ் தான் ப்ரோப்லேமே! விடு மேரேஜ் ஆனதும் செழியன் பார்த்துப்பான்.. இல்ல டா" என்று பிரேம் கூற, ஆம் என்று தலையசைத்தவன், ஒரு முறையாவது அவளிடம் பேசி இருக்கலாமோ என காலம் கடந்து யோசித்தான்.

மாலை மாற்றும் பொழுது மலர் செழியனை நிமிர்ந்து பார்த்தவள் மாலையிட்டு மீண்டும் குனிந்து கொள்ள, அந்த பார்வையில் எதுவுமே இல்லை.

இப்போது நன்றாய் புரிந்தது செழியனிற்கு தன் தவறு. ஆனாலும் காலம் கடந்திருந்தது.

அஜிதா, ரித்திகா, புகழினி என மலரை சுற்றி நிற்க, செழியன்புறம் பிரேம், கவின், மகேந்திரன் என இருந்தனர்.

மணமக்கள் அமைதியாய் நிற்க, சுற்றி இருந்தவர்களின் பேச்சு, சிரிப்பு, கிண்டல், கதை என திருமண வாசம் நிறைந்து மனம் வீசியது அந்த மண்டபம்.

"மலர்!" மெதுவாய் செழியன் அழைக்க, மலர் அதனை கவனிக்கவில்லை.

சுற்றிலும் சத்தங்கள், மேடைக்கு வந்து வாழ்த்து கூறுபவர்கள் என மலர் முழுதாய் கவனத்தை திசை திருப்பி இருந்தாள்.

"மலர்!" என சிறிது சத்தமாய் அழைத்து இம்முறை விரல்களையும் மெலிதாய் சுரண்டி இருந்தான் செழியன்.

அதில் திரும்பி அவன் முகம் பார்த்தவள் என்ன என்பதை போல சைகையில் கேட்க, என்ன சொல்வதென விழித்தவன்,

"என்னாச்சு? ஏன் டல்லா இருக்குற?" என்று கேட்டபடி, சுதாரித்து முன்னே திரும்பி இருந்தான்.

அவன் கேட்டதில் இரு நொடி அதிகமாய் அவனைப் பார்த்தவள்,

"நீங்க தான் மாப்பிள்ளை இல்ல?" என கண்களை விரித்துக் கேட்க, இங்கே கண்கள் நிலைக்குத்தி நின்றுவிட்டது செழியனிற்கு.

தொடரும்..
 
  • Like
Reactions: Vrevathi