• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர்வன 7

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 7

திருமணம் முடிந்து செழியனின் வீடு வந்து சேர்ந்த போது மதியமாகி இருந்தது.

மலரின் குடும்பத்தினர் அனைவரும் அங்கே தான் இருந்தனர். அதுவும் மலரின் அழுகையை கொண்டு.

"ஒரு நாள் தங்கிட்டு கிளம்புனா தானே அவளுக்கும் நல்லா இருக்கும்? அடுத்த நாள் மறுவீடு வந்துட போறாங்க.." என்று லட்சுமியும் பாலகிருஷ்ணனும் கூறவே அஜிதா மகேந்திரன் மட்டும் தங்குவதாக இருந்தது இப்பொழுது அனைவரும் தங்கும்படி ஆனது.

கவின், கவினின் அன்னை, தந்தை, தங்கை மற்றும் பிரேம், பிரேம் அன்னை என அனைவரும் அடையாரில் கவின் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

புகழுடன் மலரை அனுப்பி வைத்து விளக்கேற்ற வைத்தத்தோடு அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்க, புகழினிப், அஜிதா, மலரோடு மலர் மடியினில் அமர்ந்திருந்தாள் ரச்சனா.

"நீ எங்க கூட வீட்டுக்கு வர மாட்டியா அத்த?" ரச்சனா மலரிடம் கேட்க, அடங்கி இருந்த கண்ணீர் மீண்டும் கரைபுரண்டது.

"யார் சொன்னாங்க ரச்சு? அத்தையும் உங்க வீட்டுக்கு தான் வருவாங்க.. கூடவே நானும்.. என்னையும் சேர்த்துப்பிங்க தானே?" குழந்தையிடம் அங்கு வந்த செழியன் கேட்க,

"நீங்க ஏன் வரணும்? அம்மா கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்களே.. நீங்க வேண்டாம்.. அத்தை மட்டும் வரட்டும்" உடனே ரச்சனா இப்படி சொல்ல,

"அவ அப்படியே அவங்க அப்பா மாதிரி.. கொஞ்சம் தத்தி!" என்றதும்,

"அஜி!" என்று காரமான சித்ராவின் குரல் பறந்து வந்தது.

"இவங்க வீட்ல உண்மையை சொல்ல விடமாட்டாங்க" என செழியனிடம் ரகசியம் போல கூறிய அஜி,

"ரச்சு! இவங்க தான் இனி மாமா.. அத்தையை கல்யாணம் பண்ணிட்டாங்க இல்ல? இனி அத்தை கூட தான் இவங்களும் இருப்பாங்க.. வேண்டாம்னு எல்லாம் சொல்ல கூடாது ஓகே" என்று மகளிடம் கூற, ரச்சு அமைதியாய் இருந்தாள்.

"ரச்சுக்கு என்ன வாங்கி கொடுத்தா என்கிட்ட பிரண்ட் ஆவிங்களாம்?" என்று செழியன் கேட்ட நொடி உடனே யோசிக்க ஆரம்பித்த ரச்சனா,

"அத்தை மாதிரி என்ன கேட்டாலும் வாங்கி தருவிங்களா?" என டீல் பேச ஆரம்பிக்க,

"வாங்கி தந்துட்டா போச்சு" என்று அவன் கூறியதும்,

"அப்ப ஓகே.. உங்களை மலர் மாமான்னு கூப்பிடுறேன்" என பிரண்ட் ரிக்வஸ்டை அக்ஸப்ட் செய்திருந்தாள்.

"குட் கேர்ள்!" என அவளை தூக்கிக் கொண்டு அவன் நகர்ந்துவிட,

"நீங்க எப்ப உங்க அண்ணிகிட்ட பிரண்ட் ஆகுறது?" என கிண்டலாய் வேடிக்கை பார்த்த புகழினியிடம் அஜிதா கேட்க,

"நாங்க எப்பவோ பிரண்ட்ஸ் ஆயாச்சே! இல்ல அண்ண" என மலருடன் கைகோர்த்து கொள்ளவும் லட்சுமி அவளை அழைக்க, சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள் அவள்.

"என்ன மலர் இன்னும் டல்லா இருக்குற?" அஜிதா கேட்க,

"எனக்கு இன்னும் இங்க கம்ஃபோர்ட்டாவே இல்ல அண்ணி" என்றாள் குழந்தையாய்.

செழியன் உறவினர்கள் என வேறு சில உறவினர்களும் பெரியவர்களும் அங்கே தான் இருந்தனர்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நாளைக்கே நாங்க எல்லாரும் கிளம்பிடுவோம்.. அப்புறம் இந்த வீட்டுல நீ, உன் அத்தை மாமா, உன் வீட்டுக்காரர், நாத்தனார்னு மெம்ஜி மட்டும் தான் இருப்பிங்க.. ஈசியா பழகிடும்.." என்று கூறவும் தலையசைக்க,

"நீ இப்படி இருந்ததே இல்லையே மலர்.. எனக்கே கஷ்டமா இருக்கு.. உனக்கு பிடிக்காம நாங்க தள்ளி விட்ட மாதிரி" அஜிதா கவலையாய் கூற,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி.. பழகிடும்.. உங்களுக்கும் நீங்க முதல்ல நம்ம வீட்டுக்கு வரும் போது இப்படி தானே இருந்திருக்கும்?" என்று கேட்க,

"ஹ்ம்! புரிஞ்சா சரி" என கன்னம் தட்டிக் கூறினாள்.

"மலர் நீ கொஞ்ச நேரம் புகழ் ரூம்ல ரெஸ்ட் எடு டா.. அஜி நீயும் கூட போ மா" என லட்சுமி அனுப்பி வைத்தார்.

அஜிதா உடன் இருக்க, மலர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள் பின் உறங்கி இருந்தாள்.

அதுவரையுமே செழியன் மலர் இடையே அன்று பேச்சு வார்த்தைகள் அதிகமாய் இல்லை. அதுவும் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர் மலர் செழியன் புறம் திரும்பவே இல்லை.

மாலை வரை நன்றாய் தூங்கி எழுந்த மலர் முகம் கழுவி வரவும் அவளுக்கு காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள் அஜிதா.

"இனிமே எப்ப நான் இப்படி உங்க கையால காபி குடிக்குறது?" மலர் புன்னகையாய் கூறினாலும் அவள் எண்ணம் முழுதும் தன் வீட்டை சுற்றியே இருப்பதை உணர்ந்து கொண்டாள் அஜிதா.

"இதுக்கெல்லாமா பீலிங்கு? உன் அண்ணன் பரவாயில்ல போலயே.." என்று கிண்டல் பேசியதோடு முடித்துக் கொண்டாள் அஜிதா.

எதுவும் சொல்லி எல்லாம் புரியாது.. தானே இனி அவள் புரிந்து தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது என நினைத்தும் கொண்டாள்.

"மலர்! நைட்டு சடங்கு இருக்கு" அஜிதா சொல்லிவிட்டு மலர் முகம் பார்க்க,

"ம்ம்!" என்ற மலர் காபி கப்பை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.

"எதுவும் சொல்ல போறது இல்ல.." என்ற அஜிதா "பார்த்துக்கோ" என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியேறிவிட மலர் எண்ணம் இப்பொழுது செழியனிடம்.

நேரம் கடந்துவிட அஜிதாவுடன் செழியன் உறவினர் வீட்டுப் பெண் இருவர் சேர்ந்து மலரை அலங்கரித்து மாடியில் இருந்த செழியனின் அறை வாயிலில் விட்டு சென்றனர்.

அஜிதா செல்லும்போது ஒரு தலையசைப்புடன் புன்னகையுமாய் விடைபெற, யோசித்தபடியும் வாசலை பார்த்தபடியுமாய் அங்கேயே நின்றாள் மலர்.

"உள்ளே வா மலர்.. எவ்வளவு நேரம் வாசல்லேயே நின்னுட்டு இருக்க போற?" அறைக்குள் இருந்து செழியன் கூற, அதன்பின் தான் சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு அந்த அறைக்குள் நுழைந்திருந்தாள் மலர்.

"நீ உள்ளே வந்திருந்தா கூட பரவாயில்ல.. அங்கேயே நின்னதை தான் கீழ இருந்து பெரியவங்க எல்லாம் பார்த்துட்டு இருந்திருப்பாங்க" சிரித்தபடியே செழியன் கூறி கதவை சாத்தி வந்தான். பின்பு தான் அதை நினைத்தவள் தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

"பரவாயில்ல விடு.." என்றவன் நீரை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அவள் கேள்வியாய் பார்க்க, "ஐ திங்க் யூ நீட் இட்" என்றது புரியாமல் அவள் விழிக்க,

"ஏன் இப்படி வியர்க்குது?" என்றதில் தான் வேக வேகமாய் துடைத்தாள்.

"சில் மலர்! ஏன் இவ்வளவு டென்ஷன்? நானும் நேத்து ஈவினிங் வரை ஓவர் எக்ஸைட்மென்ட்டா தான் இருந்தேன். ஆனா ரிசெப்ஷன்ல கேட்ட பாரு ஒரு கேள்வி.. மாப்பிள்ளை நீயானு" என்றவன் கண்களை விரித்து தலையை உலுக்கிக் கொள்ள,

"இல்ல இல்ல.. நீங்க தப்பா மீன் பண்ணிட்டீங்க" என்றாள் வேகமாய்.

மெலிதாய் இதழ் வளைத்து சிரித்தவன், "நீ என்ன மீனிங்ல சொல்லி இருந்தாலும் நீ சொன்ன பின்னாடி என்னவோ பறந்துட்டு இருந்த நான் கீழ விழுந்த பீல்.. நிஜம் தான்.. நான் என்னை உன்கிட்ட இன்ட்ரோடியுஸ் பண்ணி இருந்திருக்கணும்.. அடலீஸ்ட் ஒரு போனாச்சும் பேசி இருக்கனும்" அவன் கூற,

"அப்ப நீங்க போன் பண்ணலையா?" என்றாள். இல்லை என்று தலையசைத்தவன்,

"ஏன்? உன் போன் எங்க?" என்று கேட்க, அவள் விழித்தாள்.

"சோ நான் கால் பண்ணி இருந்தாலும் நீ பேசியிருக்கமாட்ட ரைட்?" என்றவன்,

"ஓகே! நாம ஃபர்ஸ்ட் பேசிக்கலாம்.. புரிஞ்சிக்கலாம்.. தென் நம்ம லைஃப்பை ஸ்டார்ட் பண்ணலாம்.. ஹ்ம்.. ஓகே?" என்று கேட்க,

"நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன் இல்ல?" என்றாள்.

"இல்ல.. நீ பண்ணல.. ஆனா நான் ஹர்ட் ஆனது நிஜம்.. பட் அது என்னோட மிஸ்டேக்.. நான் தான் சில விஷயங்களை சொல்லி இருக்கனும்.. இப்ப சொல்ற நிலைமைல நான் இல்ல.. இங்கே தானே இருக்க போறோம்.. பேசலாம்.. அப்புறமா" என்று கூறி பெருமூச்செறிந்தவன்,

"இந்த டிசைன் எப்படி இருக்கு?" என்றான் அங்கே கட்டிலை சுற்றியும் கட்டிலிலும் இருந்த அலங்காரங்களைக் காட்டி, திரும்பிப் பார்த்தவள் என்ன சொல்வதென தெரியாமல் விழிக்க,

"மண்டபத்துல ஸ்டேஜ் டிசைன் பார்த்தியா?" என்று கேட்க, அதை எல்லாம் எங்கே கவனித்தாள் அவள்.

"எல்லாமே ஃப்ளவர்ஸ் தான்.. ரியல் ஃப்ளவர்ஸ் மட்டும் வச்சு செஞ்சது.. செய்ய சொன்னது" என்று ஆழ்ந்த குரலில் அவன் கூற,

"ஓஹ்!" என்றவளுக்கு மலர்களால் மட்டுமாய் அவன் செய்ய வைத்திருந்தான் அதுவும் அவளால், அவளுக்காய் என்பது புரிந்திருக்க வாய்ப்பில்லை.

"ஓகே மலர்! டேக் அ ஸ்லீப்.."

"நீங்க?"

"ஹ்ம்ம்.. நானுமே!" என்றவன், 'வேறென்ன பண்ண?' என்றது கேட்டிருக்கும்.

"ஐம் சாரி!" அவள் விடாமல் கூற,

"அட விடு மா.. இது முழுக்க முழுக்க என்னோட டெஸிஸன்.. சில விஷயங்களுக்கு நானும் சாரி சொல்லனும்.. அப்ப டேல்லி பண்ணிக்கோ.. குட் நைட்" என்று படுத்துவிட,

"குட் நைட்" என்றவளுக்கு இவ்வளவு நேரம் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்பது மாறி இப்பொழுது என்ன செய்வது என்ற சிந்தனை.

கூடவே செழியன் என்ற ஒருவனைப் பற்றிய கணிப்பினை கொண்டு வர நினைக்க, அவனை எந்த கணிப்பில் கொண்டு வரவென்றும் தெரியவில்லை.

அருகே பெண் அவள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்க, கண் மூடி தூங்கும் பாவனையில் இருந்தவனுக்கு தூக்கம் சுத்தமாய் எட்டவில்லை.

கை தொடும் தூரத்தில் பெண் அவள் மனைவியாய் தான் நேசித்த மங்கை இருக்க, அவளின் கண்களில் கொஞ்சமேனும் காதலை தேடி, இல்லாமல் போக, அது கிடைத்துவிடும்.. கிடைக்கட்டும் என்ற எண்ணம்.

கூடவே தன் காதலை கூற வேண்டாமா? அவளுக்கு தெரிய வேண்டுமே! அவளும் உணர வேண்டும்.

தூக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்தவள் செயலில் கண் விழித்தவன்,

"என்ன பண்ற நீ?" என கேட்க, சட்டென எழுந்து அமர்ந்தவள்,

"ம்ம்ஹ்ம்ம்!" என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ஊசி துளைக்கும் பார்வையில் சுத்தமாய் உறக்கம் கெட்டிருக்க, நெளியவும் முடியாமல் அசையாமல் அதே இடத்தில் இருந்தாள்.

'ஏற்கனவே தூக்கம் போச்சு.. நீ வேற!' மனம் நினைத்துக் கொள்ள, அவள்புறம் பார்த்தே படுத்திருந்தான். கண்களையும் மூடாமல்.

தொடரும்
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
மலருக்கு மலராலயே
மண மேடை அலங்காரம்.....
மலருக்கு தெரியாமல் விழிக்க
மனதால் வாடும் செழியன்.....
( மலரெல்லாம் வாடுது மலரே)💐💐💐💐💐💐
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
மலருக்கு மலராலயே
மண மேடை அலங்காரம்.....
மலருக்கு தெரியாமல் விழிக்க
மனதால் வாடும் செழியன்.....
( மலரெல்லாம் வாடுது மலரே)💐💐💐💐💐💐
கவித.. கவித..