• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 8

"ஏன் டி இப்படி மூக்கை சீந்தி மானத்தை வாங்குற? நாளைக்கு நீங்களும் அங்கே தானே வர போறீங்க?" அஜிதா மலரை அதட்டிக் கொண்டிருந்தாள்.

திருமணம் முடிந்த அடுத்த நாள் மாலை மலரின் குடும்பம் ஊருக்கு கிளம்ப தயாராய் இருக்க, ஏங்கி ஏங்கி அழுபவளுக்கு சமாதானம் கூற முடியாமல் ஓரமாய் நின்று பார்த்திருந்தான் செழியன்.

"டேய்! இன்னைக்கு நைட் மட்டும் தான்.. நாளைக்கு வந்துடலாம் டா" மகேந்திரன் தங்கையை தேற்ற,

சித்ரா எதுவும் பேசவில்லை. அவர் பேசினால் இன்னும் அழுகை அவளுக்கு கூடும் என்பதோடு அவருமே சேர்ந்து அழக் கூடும் என்பதால் தைரியம் காட்டி நிற்க, அப்படி கூட நிற்க முடியாமல் வெளியே சென்றுவிட்டார் கண்ணன்.

"லட்சுமி ம்மா.. சென்னைல வாட்டர் ப்ரோப்லேம் வந்துச்சுன்னா இந்த டேப்பை யூஸ் பண்ணிக்கோங்க. நல்லா கொட்டும்" அஜிதா கிண்டல் செய்ய,

"போங்க அண்ணி!" என்றாள் அழுகையோடு மலர்.

"அண்ணி! நானும் உங்களோட நாளைக்கு மதுரைக்கு வருவேன்.. எனக்கு சுத்தி காட்டுவீங்களா?" புகழினியும் கேட்க,

"அழாதே மலர்.. நாங்கல்லாம் இருக்கோம்ல? சொல்லு லட்சுமி!" என்று பாலகிருஷ்ணன் கூறவும்,

"பொண்ணுங்கள பொறந்த வீட்டுல இருந்து புகுந்த வீட்டுக்குள்ள அனுப்புறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும்.. நீங்க சொன்னதும் எல்லாம் சுவிட்ச் போட்ட மாதிரி அழுகை நிக்காது.. மலருக்கு இங்க எல்லாரும் பழகின பின்னாடி தான் சரியாகும்.. அதுவரை வீட்டு நினைப்பு இருக்க தான் செய்யும்.. ஆனாலும் எங்களுக்கும் கஷ்டமா இருக்குல்ல.. அழாதடா மா" என்று லட்சுமி விளக்கமாய் கூற, அழுகை கொஞ்சம் அவளிடம் குறைந்திருந்தது.

இன்னொரு அன்னையாய் லட்சுமி அவள் கண்களுக்கு தெரிந்தார்.

"பார்த்துட்டு நிக்குற.. போய் அவகிட்ட பேசு டா.. இதுக்கா கல்யாணம் பண்ணி வச்சேன்" செழியன் காதுகளில் கவின் வந்து கோபமாய் கூற,

"எல்லாரும் பேசிட்டு இருக்காங்களே.. அதான் அப்புறமா சமாதானப்படுத்தலாம் நினைச்சேன் டா" என்றான் செழியன்.

"நீ அவளை எப்படி பாத்துக்குறன்னு அவ பேமிலிக்கு தெரிய வேண்டாமா? அவ அழும் போது இப்படி தான் தனியா வந்து நிப்பியா?" என்று கேட்கவுமே அவள் அருகில் உடனே வந்து விட்டான் செழியன்.

"இதை கூட சொல்லணும் உனக்கு" கவின் முணுமுணுத்தான்.

"எல்லாரையும் பார்க்கணும்னு தோணுச்சுன்னா நான் கூட்டிட்டு போக போறேன்.. இதுக்கு ஏன் அழுகை?" என்றபடி வந்தவன்,

"சில் மலர்" என்று கூறி சுற்றி வளைத்து அவள் கைகளை அழுத்தமாய் பிடிக்க, அது தேவையாய் இருந்ததோ மலருக்கு?.

"வேற என்ன வேணும் உனக்கு? உன் அம்மாவை விட லட்சுமிம்மா உன்னை நல்லா பார்த்துப்பாங்க.. சரியா? அழக் கூடாது" என்று கூறிவிட்டு விடைபெற்றனர் மலர் குடும்பத்தினர்.

"நீ கொஞ்ச நேரம் வேணா ரூம்ல ரெஸ்ட் எடேன் மலர்.." லட்சுமி கூறவும் அது தேவையாய் இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள் மலர்.

"அவகிட்ட தனியா பெர்பாமன்ஸ் பண்ணலாம் நினச்சேன்.. நீ இருக்கியே.. உன்னையெல்லாம்..." என கவினை செழியன் திட்ட,

" நான் ப்யூர் அக்மார்க் சிங்கிள் டா.. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" பாவமாய் கவின் கூற,

"அடுத்து உனக்கு தான் டா கல்யாணம் பண்ணி வைக்கனும்.. மனுஷன் அவஸ்தை புரியாம.." என்றவன்,

"ஆமா பிரேம் எங்க என்று கேட்க,

"அதான் நேத்து பிரிச்சு விட்டோமே! அவளை தேடி தான் போயிருப்பான்" என்றான்.

"நாளைக்கு தானே புஷ்பா ஆண்ட்டி கிளம்புறாங்க?" என பிரேம் அன்னையை செழியன் கேட்க,

"இல்ல டா நைட்டு கிளம்பனும் சொல்லிட்டு இருந்தாங்க.. அம்மா இருந்திருந்தா கூட இருந்திருப்பாங்களோ என்னவோ.. அம்மா மலர் பேமிலியோட கிளம்பவும் அவங்களும் நைட்டு கிளம்புறேன்னு சொல்லிட்டாங்க.. வழியனுப்ப வர்றேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கான்" என்று கூற,

"சரி பார்க்கலாம்.. நேத்து மேனஜரை பார்த்தியா?" என்று கேட்க,

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் டா.. இந்த நிரஞ்சன் வேற கால் பண்ணினா எடுக்க மாட்றான்.. பிரேம் ஊருக்கு போறதுக்குள்ள அவனுக்கு ஒரு முடிவு கட்டணும்.. நீ மலர் கூட இரு.. அவளை தனியா இருக்கவிடாத.. என்னவாச்சும் நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்க போறா.." என்று கூற,

"ஹ்ம்! அதான் நாளைக்கு மதுரை போறோமே.. அங்க போனா சரி ஆகிடுவா.. நானும் மதுரை போய் தான் எல்லாம் சொல்லணும்னு நினைச்சிட்டு இருக்கேன்" என்று கூற,

"அதை முதல்ல பண்ணு டா.. கொஞ்சமாச்சும் நார்மல் ஆகிடுவா" என்றான் கவின்.

"கொஞ்சம் இல்ல.. ஃபுல்லா நார்மல் ஆகணும்.. என்னோட மலராகனும்.. அதுக்கு டைம் எடுத்துக்கட்டும்.." என்று சிரித்தவனை பார்வையாலேயே கிண்டல் செய்தான் கவின்.

செழியன் மொபைல் ஒலி எழுப்ப, அத்துபவன் அறையில் இருந்து சத்தம் வரவும் கவினிடம் சொல்லிக் கொண்டு மேலே ஏறினான்.

அந்த சத்தத்தில் தான் குடும்பத்தின் நினைவில் இருந்து வெளியே வந்த மலரும் செழியன் மொபைல் அலறுவதை பார்த்து என்ன செய்யவென யோசித்தபடி அதனருகே செல்ல, 'சசி' என்ற பெயரைக் காட்டியது அது.

"யார் மலர்?" என்று வந்த செழியன், மொபைல் திரையைப் பார்த்ததும் முதலில் சிரித்து பின் முறைத்தபடி அட்டன் செய்து காதில் வைத்தான்.

"வாழ்த்துக்கள் டா செழியா" சத்தமாய் சந்தோசமாய் சசி தன் வாழ்த்தினை தெரிவிக்க,

"யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?" என்றான் செழியன்.

மொபைலை அவன் கையில் எடுத்ததும் அவன் முகத்தில் தோன்றிய புன்னகையையும் பின் அவன் முறைத்தபடி காதில் வைத்ததையும் பார்திருந்த மலர் யார் என்று அவனே கேட்கவும் அவனை கவனித்தபடியே தான் இருந்தாள்.

சசியின் குரல் மலரின் காதுகளிலும் கேட்க தான் செய்தது.

"அதானே! கல்யாணம் ஆகிடுச்சுல்ல.. இனி சார் அப்படி தான் கேட்பிங்க" சசி கேட்க, செழியன் குறும்புன்னகையுடன் மலரைப் பார்த்து கண் சிமிட்டினான் அதில்.

அவளுக்கும் அந்த பக்கம் கூறியது கேட்டதே! அதை அவனும் அறிவான். அதில் அவளும் மலங்க மலங்க விழித்தபடி நிற்க,

"டூ மினிட்ஸ் மலர்!" என்று அவளிடம் கூறியவன்,

"மேடம் ஓவரா பேசாதீங்க.. உங்க மேல செம்ம கோபத்துல இருக்கேன்" என்றபடி பால்கனி சென்றுவிட,

'யார் அந்த சசி?' என்று நினைத்தபடி அறைக்குள் அமர்ந்திருந்தாள் மலர்.

ஐந்து நிமிடம் முடிந்து அவன் திரும்பி வரும் பொழுது அவன் முகத்தில் இன்னும் கூடுதலாய் ஒரு ஒளியுடன் புன்னகை.

"ஹ்ம்! அப்புறம்! அழுதெல்லாம் முடிச்சாச்சா?" செழியன் கேட்டதும் மீண்டும் வீட்டிற்கு சென்றது நினைவு.

"இப்படி டல்லானா மலரை இன்னைக்கே கூட்டிட்டு போய்டுவேன்.. வேணும்னா நாம பிளைட்ல போலாமா? அவங்களுக்கு முன்ன நாம போய்டலாம்.. நினச்சு பாரேன்.. நம்ம பார்த்ததும் அத்தை, மாமா, மச்சான் எல்லாம் எப்படி முழிப்பாங்க?" என்று சொல்லி சிரிக்க, அவளுக்கும் அதில் சிரிப்பு வந்தது.

ஆனாலும் எவ்வளவு எளிதாய் கூறுகிறான் அவள் உறவுகளை அவன் உறவுகளாய்!. அதில் அவளையும் கேளாமல் அவள் கண்கள் அவனிடம் இருக்க, என்ன என்ற அவன் புருவத்தின் உயரத்தில் சட்டென திரும்பிக் கொண்டாள்.

அதை கவனித்தும் கவனியாதவன் போல "குட் கேர்ள்! இப்படி சிரிச்சிட்டே இருப்பிங்களாம்.. நாளைக்கு கிளம்புறோமாம். ம்ம் ஓகே?" என்று கேட்க, சரி என்று தலையாசைத்தாள்.

"இன்னும் கொஞ்சம் சிரிச்சா நல்லாருக்குமே.. ஒரு குட் நியூஸ் சொன்னா மலர் மலருமானு பார்க்கலாமா?" அவன் கேட்க,

'என்ன?' என்ற பார்வை தான் அவளிடம்.

"மதுரைல தான் என்னோட மலர் கூட ஒரு வாரம் இருக்கலாம்னு இருக்கேன்" சொல்லிவிட்டு அவள் முகத்தினில் மட்டுமே அவன் கவனம் இருக்க,

கண்களை தாமரை இதழ்களாய் விரித்திருந்தாள் மலர். அதில் அவன் புன்னகையும் பெரிதாக,

"உன் ரிலீட்டிவ்ஸ் எல்லாம் கேட்குறாங்களாம்.. சோ சின்னதா கெட் டு கெதர் வச்சிக்கலாமானு மாமா கேட்டாங்க.. ஓகே சொல்லிட்டேன்.. மலருக்கு ஓகே தானே?" கண் சிமிட்டி கேட்பவனை பார்த்து பிடித்தம் ஒன்று வந்து சேர்ந்திருந்தது அவன் மலருக்கு.

"மாமா அப்புறமா உனக்கு கால் பண்ணி பேசுவாங்க கேளு.. அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. அதையும் அங்க வச்சே சொல்றேன்.. ம்ம்.. அதுவரை சஸ்பென்ஸ், சர்ப்ரைஸ்.. எப்படி வேணா சொல்லலாம்.." அவன் கூற பதிலே கூறாமல் நின்றாள் அவள்.

"சரியான பேர் தான் வச்சிருக்காங்க.. விழி மட்டும் தான் பேசுது.." என்றவன் அடுத்த வார்த்தைகளை கூறாமல் அவள் இதழ்களைப் பார்க்க, குனிந்து கொண்டாள் அவள்.

"உன் ட்ரெஸ் எல்லாம் கப்போர்ட்ல எடுத்து வச்சுடலாம் மலர்.. மொத்தமா செய்ய வேண்டாம்.. அப்பப்போ போரிங் டைம்ல செஞ்சா போதும்.. ஹெல்ப் வேணும்னா சொல்லு நானும் பண்றேன்.. நான் வீட்ல இல்லைனா புகழ்கிட்ட கேளு.." அவன் கூற, அதற்கும் தலையசைத்தாள்.

"நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் மலர்?" சாதாரணமாய் அவன் பேசிக் கொண்டே இருக்க, இவள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அவனிடம் பேச.

"இல்ல.. காலேஜ் கம்ப்ளீட் பண்ணிட்ட.. நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு இருக்க.. ஐ மீன் ஒர்க் ஆர் போஸ்ட் கிராடுவேட்" என்று கேட்க, ஆச்சர்யமா அதிர்ச்சியா என பிரித்தறிய முடியாத பார்வை அவளிடம்.

"ஹே என்னாச்சு?" செழியன் கேட்க,

"இப்ப என்னவோ சொன்னிங்களே? என்ன சொன்னிங்க?" கண்கள் படபடவென அடித்துக் கொள்ள வேகமாய் கேட்டாள்.

"நான் என்ன கேட்டேன்.. படிக்கணுமா இல்ல ஜாப் போனுமானு கேட்டேன்" என்றான் அவளின் இவ்வளவு அதிர்ச்சி ஏன் என புரியாமல்.

"நிஜமாவா?" என்றாள் இன்னும் நம்ப முடியாத தன்மையுடன்.

"என்ன நிஜமாவா?" என்றவனுக்கு கவின் கூறியது நினைவு வர,

"ஹேய் என்ன நீ? என்னை ரொம்ப கொடூரனா நினச்சு வச்சிருப்ப போல.." என்றான் உடனே செல்லமாய் முறைத்து.

"இல்ல இல்ல.. அப்படி எல்லாம் இல்ல"

"அப்புறம் எப்படி?" ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்க,

"சாரி! நான் நிஜமா நீங்க இவ்வளவு ஈசியா இதை உடனே.. இப்பவே.. ஐ மீன் ரொம்ப காம்ப்ளிகேட்னு நான் நினைச்சதை..." கூற வந்ததை சொல்ல முடியாத தடுமாற்றம் இருந்த போதும் அவள் பேசியதே அவனுக்கு அவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்தது.

"அத்தை மாமா எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?" கண்களில் பளிச்சென்ற ஒரு மின்னல் எழ அவள் கேட்ட விதம் அவனுள் ஊடுருவியது.

"என்ன சொல்லணும்?" என்று புன்னகைத்து கேட்க திருதிருவென விழித்தாள்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
மனம் திறந்து பேசும்
மன்னவனை கண்டதும்
மனம் இறங்கி
மலர் மனம்
மலர ஆரம்பிச்சிடுச்சு ...... 🤩🤩
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
மனம் திறந்து பேசும்
மன்னவனை கண்டதும்
மனம் இறங்கி
மலர் மனம்
மலர ஆரம்பிச்சிடுச்சு ...... 🤩🤩
மலர்ந்துடும் 🤣🤣🤣
 
Top