• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - அம்மாவின் ஆசி - வீரலட்சுமி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அம்மாவின் ஆசி

ஊர்மிளாவும் சஞ்சய் இருவரும் ஐந்து வருடமாக காதலித்து பெற்றவர்களின் சம்மதமில்லாமல் திருமணம் முடித்தார்கள். பெண்வீட்டாருக்கும் தெரிந்து அதை எதிர்த்து அவர்கள் இருவரையும் வீட்டில் சேர்க்க அனுமதிக்கவில்லை.

சஞ்சய்க்கும் ஆதரவாகவும், அரவணைப்பாகவும் இருப்பது அவங்க அம்மா சிவகாமி மட்டுமே, இருவரும் மாலை கழுத்துமாக கண் முன்னே நின்றதைப் பார்த்து திகைத்து நின்றவள். தன்னுடைய புதல்வனிற்காகவும் ,அவன் எப்போதும் நம்முடன் இருக்க வேணுமென்று ஒரே காரணத்தினாலும், வீட்டுக்குள் வர அனுமதியளித்தாள்.

ஊர்மிளாவிடம் ஏற்கனவே சஞ்சய், அம்மாவைப் பத்தி கூறியதுண்டு. அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு சிவகாமி எழுவதற்கு முன்பே ,சமையல் வேலைகளைச் செய்து முடித்தாள்.

நாளடைவில் ஊர்மிளாவின் பாசமும் அவளை தன் மருமகளாக மனம் ஏற்க ஆரம்பித்தது.

ஊர்மிளாவிற்கு தந்தை மட்டுமே தாய் கிடையாது.தந்தையின் பாசமும் மற்றும் அவளுக்கு கிடைத்தது. தாயின் அன்பும் பாசமும் இல்லாது ஏங்கி போனவள்.
.ஒரே ஒரு தங்கை அபிநயா .அவளும் அப்பாவுக்குத் தெரியாமல் எப்போதாவது அக்காவை சந்திக்க வருவாள்.

நடையில் அமர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அரட்டை போடுவதே சிவகாமியின் வேலை. அந்தி மாலை பொழுதில் வானத்தில் கருமை நிறங்களாக சூழ்ந்திருக்க, ஆறு மணி ஆனது போல் இருக்க, மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து வரும் படி தன் மருமகளான ஊர்மிளாவிற்கு உத்தரவிட்டார்.

அவங்க அத்தையின் பேச்சுக்கு மறு சொல் பேச்சு மழை வருவதற்கு முன்பே துணிகளை எடுத்து கீழே வந்திடுவாள்.

மழையில் நனைவது என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் இங்கே சிவகாமிக்கு மழையில் நனைவதும் பிடிக்காது. மற்றவர்கள் நனைந்தாலும் பிடிக்காது.

ஊர்மிளாவிற்கு சிறு வயதில் இருந்தே மழையில் நனைவது மிகவும் பிடித்தமான ஒன்று. மழை வந்தால் போதும் அது நிற்கும் வரை வீட்டிற்குள்ளே வர மாட்டாள். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு அவளுடைய குணாதிசயங்களை மாற்றிக்கொண்டாள்.

சிவகாமியின் குணத்தை நன்கு அறிந்தவள் ஊர்மிளா, அத்தைக்கு பிடிக்காத விஷயத்தை எப்போதும் செய்யவே கூடாது என்பதற்காக தனக்குள் பிடித்த ஆசையை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

ஊர்மிளாவின் நற்குணங்களைக் கண்காணித்தாள் சிவகாமி. அன்பாக பழகுவது,எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்திப்பது, அனைத்துமே சிவகாமிக்குப் பிடிக்கும்.நமக்குக் கிடைச்ச மருமகள் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க அக்கம்பக்கத்தினரிடம் பெருமையாக பேசுவாள்.

கல்லூரி செல்வதற்கு முன்பே அக்காவைச் சந்திக்க வந்தாள் அபிநயா,உடனே சிவகாமி சமையல் அறையில் டீ போடும் கவனத்தில் இருந்தாள்.

மழையின் சாரல் விழ ஆரம்பிக்க, ஊர்மிளாவை பார்த்த அபிநயா, என்னக்கா,நீ இப்படி நின்னுக்கிட்டு இருக்குற, உன்னுடைய சந்தோஷமே இதோ மழை தான்.

அபிநயா, "இந்த மழை உன் மேல் விழும் போதெல்லாம் நீ என்ன சொல்லுவ உனக்கு நினைவு இருக்கிறதா?,நம்ம அம்மாவே உன்னை ஆசிர்வதிக்கின்ற மாதிரி இருக்குதுனு சொல்வீயே மறந்தாச்சா என வினவினாள். , அதற்கு ஊர்மிளாவோ ஜன்னல் வழியாக மழையினை ரசித்தபடி மெளனமாகவே இருந்தாள்.

சிவகாமியோ டீ யை எடுத்து அறையின் பக்கத்தில் நெருங்கியபோது,

ஊர்மிளா, "என்னுடைய சந்தோஷமே இந்த மழை தான். முதலில் கல்யாணத்திற்கு முன்பெல்லாம் அம்மாவின் ஆசிர்வாதத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன்.ஆனால் இப்போது எனக்கு அந்த மாதிரி எதிர்பார்ப்பே இல்லை .

அபிநயா, "இல்லக்கா, நீ. பொய் சொல்ற, உனக்கு மழை ரொம்ப பிடிக்கும். அப்படி இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த சந்தோஷத்தை ஒளித்து வைக்கிறாய்.எனக்கு உன்னை பத்தி நல்லாவே தெரியும்.

ஊர்மிளா, "ஆமா, இதெல்லாம் என்னுடைய அத்தைக்காக தான். ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்துட்டாலே , நம்ம குடும்பம்
எனக்கு அம்மாவை எந்த அளவுக்கு பிடிக்கும்மோ ,அதே போல தான் எங்க அத்தையை எனக்கு பிடிக்கும்.

அவங்களுக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யவே மாட்டேன். அவங்களுக்கு மழையும் பிடிக்காது. மழையில் நனைவதும் பிடிக்காது.

அபிநயா, "இது தான் காரணமா, இதுக்கு மேலயும் உன்னிடம் பேசினாலும் இதே தான் சொல்லுவ எனக்கு லேட் ஆயிடுச்சு..கிளம்புறேன்.

மழை மறுபடியும் வெளுத்து வாங்க தொடர்ந்தது. சிவகாமி ஊர்மிளாவை அழைத்து மழையில் நனையுமாறு கூற,

ஊர்மிளா, "அத்தை, உங்களுக்கு மழையில் நனைவது பிடிக்காதே?,

சிவகாமி, "முதலில் பிடிக்காது, இப்போது பிடிக்கும். எனக்கு பிடிக்காது என்பதற்காக உன் ஆசையே அதுவும் உங்க அம்மாவோட ஆசிர்வாதமே வேண்டாம் ,அத்தை மட்டுமே போதும் என்று நினைத்தாயே, எனக்கு இது போதும். இப்ப நீ போய் மழையில் நனைந்து உனது ஆசையை தீர்த்துக்கோ எனக் கட்டளையிட்டார்.

" ஊர்மிளாவிற்கு அவங்க அம்மாவின் ஆசிர்வாதம் மீண்டும் கிடைத்தது.'

...முற்றும்..




















 
Top