• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாற்றாந்தாய் காதல்.

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
ஒரு காதல்....
ஒரேயொரு காதல்தான்...
எதார்த்தமாய் வந்ததும் இல்லை...
எதிர்ப்பார்ப்புடன் வந்ததும் இல்லை...
அது இயல்பாய் நடந்தது...
அதனால்தான்
என்னவோ அப்படிப்பட்ட
காதலை இயல்பாய் யாரும்
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
போலும்...!!

டால்ஸ்டாயின் கதைகளில்
இருக்கும்,
மனிதத்தன்மையும்...
மாசற்ற அன்பும் தான் அக்காதலில்
பிரதிபலிக்கும்...!!

தஸ்தவேஸ்கியின்
எழுத்துக்களைப்போல....
மனித மனங்களின் ஆழங்களில்
அக்காதல் ஆளுகை செய்யும்...!!

அப்படிப்பட்ட ஒரு காதலை
ஒரு குவளை தேநீரை
மிடறினால் வரும்
சுவையில் சொல்லிவிட
முடியாது..!
இருந்தாலும் அந்த
காதலுக்கு மழைநேர
மாலைவேளை தேநீரின்
சாயலுண்டு...!!

அந்தக்காதலை ,
தடைசெய்வதும்
புறக்கணிப்பதும்,
புதிதில்லை....
அவைகளுக்கு...!

நீளும் வேர்களை
கொண்ட அந்த காதலின்
பகுதிகள் மீண்டும்
மீண்டும் முளைவிட்டு
வெளிவரும்...!!

மண்ணீரலற்ற மனிதனைப்
போல ....
அக்காதல் ஒவ்வொரு
முறையும் தன்னை வெளிப்படுத்தும்..!!

கடைசி நிமிடங்களில்
ரத்து செய்யப்படும் ஒரு
மரண தண்டனையைப் போலவே
இக்காதல் நாளும் கொண்டாடப்படும்...!!

ஒருமுறையேனும் செகாவ் - வின்
நவீனத்துவ
எழுத்துக்கள் இக்காதல் வாசம்
செய்ய அனுமதித்திருக்கலாம்....
என்ற ஆதங்கம் தான்
இக்கவி வடிக்க
ககாரணமாகிப்போனது...!!
-எல்லா புகழும் இறைவனுக்கே!
-©Saranyawrites