• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 27

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ரத்தினமும், விசாலியும் ஃபங்ஷனுக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர், என்று தெரிந்ததும் விக்ரமும் புறப்பட்டான்.

மகிழுந்தை சத்தம் இன்றி ஓட்டி வந்து போர்ட்டிக்கோவில் நிறுத்திவிட்டு, தன் இல்லம் நுழைந்தான். அதாவது இப்போது ரத்தினம் மற்றும் விசாலி மட்டும் வசிக்கும் இல்லம்.

வீட்டிற்குள் நுழையும் முன்பே கைபேசி வாயிலாக மலருக்கு அழைத்தான். அழைப்பை ஏற்றவள் சுரத்தையே இல்லாமல் "ஹலோ" என்றாள்.

அவளை 'தான் இல்லம் வந்தடைய பின்னிரவு ஆகக் கூடும், அதனால் நீ வீட்டுக்கு போ' என்று கூறி ஏமாற்ற நினைத்திருந்தவன் அவளது பொழிவிழந்த குரலைக் கேட்டப்பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

மாறாக 'என்னாச்சு இவளுக்கு? இப்போ இவ திட்டனும்! இல்லே சண்டை போடனும்! ரெண்டும் இல்லாம இது என்ன புது ரியாக்ஷன்! ஒருவேளை அம்மா ஏதேனும் பேசி கஷ்டபடுத்தி இருப்பார்களோ!!!' என்று யோசனையில் முழ்கினான்.

"மாமா இருக்கிங்களா?" என்று மலர் மீண்டும் அழைக்க,

"ஏய்! என்னாச்சு மா? ஏன் டல்லா பேசுறே?"

"நான் செம்பியனை வர சொல்லி ஊருக்கு போகட்டுமா?... உங்களை இனிமே கஷ்டபடுத்தமாட்டேன்..."

அதற்குள் விக்ரம் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி தன் அறை வாசலை அடைந்தான்.

"நீ என்னை கஷ்டபடுத்துறதா யாருடி சொன்னா?" என்று உருமினான்.

"யாரும் சொல்லலே.... ஆனா இனிமே உங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்... 'நீங்க சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்...' அப்படி யோசிக்க ட்ரை பண்றேன்.

இன்னைக்கு உங்களை டென்ஷன் ஆக்கனும், என்னை நெனச்சு பைத்தியம் பிடிக்க வைக்கனும் தான் இதெல்லாம் செய்தேன்.

ஆனா அது கடைசில என்னையே யோசிக்க வைக்கும்னு நெனைக்கலே... சோ..." என்று அவள் கூறி முடிப்பதற்குள், கதவைத் திறந்து கொண்டு நிலையில் சாய்ந்து நின்று,

"சோ உன்னை தனியா யோசிக்க விடக்கூடாது. அப்படித்தானே!!!" என்று கூறினான்.

நட்டநடு மெத்தையில் சம்மனம் இட்டு அமர்ந்திருந்தவள் கையில் இருந்த பேசியை நழுவவிட்டு வாய் பிளந்து அவனைப் பார்த்தபடி சிலையாகினாள்.

விக்ரமும் தன் கைபேசியில் இணைப்பைத் துண்டித்துவிட்டு அறைக்குள் நுழையும் போதே காலால் கதவை உதைத்து அடைத்துவிட்டு அவளை நெருங்கினான்.

"நீ... நீங்க... எப்படி இங்கே? வரமாட்டிங்கனு நெனச்சேன்!!!" என்றாள்.

"இது என்ன மார்ஸ்-ஆ வர முடியாத தூரத்துல இருக்குறதுக்கு... இப்போ அங்கே கூட ஹியூமன்ஸ் வாழ வழியிருக்கானு ரிசர்ச் நடந்துட்டு இருக்கு... தெரியுல!!!" என்றான்.

புருவங்களை இணைத்து உதடு சுழித்து "எப்படி கண்டுபிடிச்சிங்க!!!" என்று அதிசயமாக வினவிவிட்டு, அடுத்த கேள்வியிலேயே அதற்கான காரணத்தையும் கூறினாள்.

"எப்படியும் நீங்க கண்டுபிடிச்சிக்க மாட்டிங்க... மாமா தான் வாய் தவறி ஒரு ஃப்லோல உளறியிருப்பாங்க... சரிதானே?" என்றிட, அவளது காது அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது.

"உன்னை...." என்று அவள் காதைத் திருகியபடியே, "உனக்கு வாய் கொழுப்பு அதிகமாகிடுச்சு... குறைச்சே ஆகனும் போலயே!!!" என்று அவளது கீழுதடைப் பிடித்து இழுத்தான்.

சட்டென சிவந்த அவள் கன்னங்களைக் கண்டு அவன் தடுமாற, அவனது தடுமாற்றங்களை உணர்ந்த போதும் "அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க" என்று வீராப்பாய் கூறினாள்.

என்ன நம்பிக்கையில் கூறினாளோ அவள் மட்டுமே அறிவாள். உண்மையாகவே அவன் எதுவும் செய்யமாட்டான் என்று எண்ணினாளோ அல்லது அப்படி சொல்லி அவனை சீண்டிளோ அது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

ஆனால் விக்ரமோ நொடியும் தாமதிக்காமல் தன் விரல்களுக்கு நடுவே அகப்பட்டு இருந்து அவள் இதழ்களை நறுக்கென கடித்து வைத்தான்.

"ஆவ்வ்.... வலிக்குது... விடுங்க" என்று கத்தி அவனைத் தள்ளிவிட்டு அவனது கடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். இருந்தும் அவளது முகம் மேலும் மேலும் சிவந்து தான் போனது. கண்களோ நிமிர்ந்து அவன் முகம் காணும் துணிவின்றி குடையென கவிழ்ந்தது...

விக்ரமோ இது எதனையும் கவனியாதது போல் கடித்து வைத்தது போதாதென்று அவளது இதழ்களில் பட்... பட் என்று நான்கு அடி செல்லமாக வைத்தான்.

"மாம்மா..."

"என்னை என்ன உன்னை மாதிரி மக்குனு நெனச்சியா?" என்று அவள் தோளில் கைபோட்டபடி அவள் அருகிலேயே அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

மலர் விக்ரமை நம்பாத பார்வை பார்க்க, அதே நேரம் மணி ஐந்து என்று குக்கூ வந்து கூவிச் சென்றது. அதனை கை காண்பித்து,

"அந்த குக்கூ தான் சொல்லுச்சு, 'உன் பொண்டாட்டி உன் ரூம்ல தான் டா இருக்கா... சீக்கிரம் அவளை வந்து பார்னு...' அதை வெச்சு தான் கண்டுபிடிச்சேன்" என்றான் கெத்தாக...

"இது தான் சீக்கிரம் வர்றதா!!! என்று அவனுக்கு கேட்கும் படியாகவே முணுமுணுத்துவிட்டு, "இந்த வீட்லேயும் மனுஷங்களைத் தவிர மத்ததுங்க கிட்ட தான் பேசுவிங்க போல?" என்று சத்தமாக வினவினாள். அவள் சாதாரணமாக வினவுவது போல் கேட்டிருந்தாலும் கண்களில் ஏதோ ஒரு தேடல் இருந்தது.

அந்த தேடலை தொடர விடக் கூடாது என்பதற்காகவே பேச்சை மாற்றினான்.

"ஆமா!!... இது என்ன? உனக்கு புது வியாதியா இருக்கு?!!.... கல்யாணம் ஆன பொண்ணுங்க நார்மலா புருஷன் கூட சண்டை போட்டா கோபிச்சிட்டு அம்மா வீட்டுக்கு தான் போவாங்க... நீ என்ன மாமியார் வீட்டுக்கு வந்திருக்கே!!??? 'என் மாமியார் எனக்கு அம்மா மாதிரினு பொய் மட்டும் சொல்லதே... தொறத்தி தொறத்தி அடிப்பேன்!!!" என்று சிரியாமல் அவளை நக்கலடித்தான்.

அவளது முகம் சற்று வாடியது. அவன் மேல் சாய்ந்து கொண்டு... "மாமா, அம்மா பாசம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது.... ஆனாலும் நானும் ரெம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு தான். உங்க அம்மா எனக்கும் அம்மாவா இருக்காங்களானு எனக்கு தெரியாது... ஆனா என் மேலேயும் பாசமாத் தான் இருக்காங்க..."

"அப்படி என்ன பாயசத்தைக் கொட்டினாங்க?"

அவனை முறைத்தாலும் பதில் கூறினாள். "மார்னிங் சொல்லம கொள்ளாம வந்து நின்னபோது என்ன ஏதுனு பதறினதாகட்டும்! அதுக்கு பிறகும் நான் நார்மலா தான் இருக்கேனா! இல்லே அழறேனானு அப்பப்போ வந்து பாத்துக்கிறதும்! ரூம்குள்ளேயே இருக்காதேனு சொல்லி மைண்டு சேஞ்சுக்காக வாக்கிங் கூட்டிட்டு போனதும்! எனக்கு ஸ்பெஷலா சமைக்கிறேனு பறந்து பறந்து வேலை பாக்குறதும்! சமைச்சதை ரூமுக்கே கொண்டு வந்து சுட சுட கொடுக்குறதும்!!!" என்று அவள் அடுக்கிக் கொண்டே போக,

"போதும் டி.... எக்ஸ்ப்ரெஸ் ட்ரெய்ன் மாதிரி லென்த்தா போயிட்டே இருக்கு..." என்று முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு சிடுசிடுத்தான். அவனது முகத்தில் பொறாமையுடன் கலந்து கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

அவனது கோபம் புரிந்திட, அவனது கன்னத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, "இதெல்லாமே நீங்க எனக்கு செஞ்சிருக்கிங்க தான்... ஆனா என்ன இருந்தாலும் ஒரு மாமியார் மருமகளுக்கு செய்யிறது தனி தானே!!! சோ எனக்கு அது ஸ்பெஷல் தான்!!!" என்று அவனது கோபத்தைத் தனிக்கவென்று எடுத்துக் கூறினாள்...

அவளது ஸ்பெஷல் என்ற வார்த்தையில் மேலும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு அவள் கையை தட்டிவிட்டு எழுந்தான்.

எழுந்தவனின் கையைப் பிடித்து மலரும் மெத்தையில் முட்டிக்கால் இட்டு நடந்து சென்று அவனை நெருங்கி நின்று, "யாருச்சும் இதுக்கெல்லாம் கோபப் படுவாங்களா மாம்ஸ்!!?" என்றாள்.

"நான் அப்படித் தான் கோபப்படுவேன்... போடி" என்று மீண்டும் நகர முயன்றவனை கழுத்தைக் கட்டிக்கொண்டு தன்னோடு சேர்த்து நிறுத்தினாள்.

இதழ் மூடி புன்னகைத்தபடி "நீங்க கோபப்பட்டாலும் அவங்க எனக்கு ஸ்பெஷல் தான்." என்று இழுத்து வைத்து வம்பு வளர்த்தாள்.

"சரிதான் போடி... உன் மாமியாரையே இப்படி கட்டிட்டு நில்லு... என்னை விடு" என்று கூறி அவள் கையை எடுத்துவிட்டுவிட்டு வாசல் நோக்கி சென்றான்.

அப்போதும் அவனை விடுவதாக இல்லை அவள். "ஏன்?னு கேட்கமாட்டிங்களா?" என்றிட, நின்ற இடத்தில் இருந்தபடி அவளை திரும்பிப் பார்த்தான். அந்த பார்வையே 'ஏன்?' என்ற கேள்வியை அவனையும் அறியாமல் தாங்கி நின்றிருந்தது.

படுக்கையைவிட்டு இறங்கி அவன் அருகே வந்தவள், மீண்டும் முன்பைப் போலவே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு "இப்படி ஒரு தங்கபுள்ளைய எனக்கு புருஷனா கொடுத்திருக்காங்களே!" என்றாள்.

அவள் கூறியவிதம் அவனுக்கு சிரிப்பை ஏற்படுத்திட, கடையிதழ் புன்னகை ஒன்றை சிந்திவிட்டு, "உன் மாமியாரைப் பத்தி முழுசும் தெரிஞ்சா இப்படி சொல்லமாட்டே..." என்றான்.

"சரி சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்..." என்று அவன் கழுத்தில் இருந்த கைகளை எடுத்துக்கொண்டு கைகட்டி நின்றாள்.

அவனது முகம் மாறியது. கண்ணிமைக்காமல் அவன் முகத்தையே பார்த்திருந்தவள்,

"அவங்க செய்த ஒரு தப்பை மட்டும் வெச்சு உங்க அம்மா கெட்ட குணம் படைச்சவங்கனு உங்களால இமேஜின் பண்ண முடியலேல!!!

அதே மாதிரி அந்த ஒரு விஷயத்தை மட்டும் என்கிட்ட சொல்லி நான் அவங்களை தப்பா நெனைக்கிறதையும் உங்களால ஏத்துக்க முடியலே தானே!!!

பின்னே ஏன் அந்த ஒரு தப்பை மட்டும் நெனச்சு நெனச்சு உங்க மனசுக்கும் சேத்து தண்டனை கொடுத்துக்கிறிங்க?

அவங்க என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னிச்சிடுங்கனு சொல்லலே... மறந்திடுங்கனு சொல்றேன்..."

சலிப்பாக இதழ் விரித்து புன்னகைத்தவன், "அவங்க செய்த தப்பே உன்னை எனக்கு கல்யாணம் செய்து வைக்கனும்னு நெனச்சது தான். அதை மன்னிக்கவோ! மறக்கவோ! எது செய்யிறதா இருந்தாலும் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாம இருக்கனும்.... அதுக்கு உனக்கு சம்மதமா? என் மனசுல இருந்து உன்னையும், உன் மனசுல இருந்து என்னையும் உன்னால பிரிச்சு எடுக்க முடியுமா?" என்று தீவிரமாக வினவிட பெண்ணவள் வாயடைத்துப் போனாள்.

மீண்டும் விக்ரமை நெருங்கி அவன் சட்டை பட்டனை திருகியபடி, "அது அப்போ மாமா.... இப்போ அவங்க அதுக்காக வருத்தப்படுறாங்க மாமா.... என்னை பாக்கும் போது அவங்க கண்ணுல அப்படி ஒரு ஏக்கம் தெரியுது தெரியுமா?!!!....

தப்பு செய்தவங்களே அதை உணர்ந்து மன்னிப்பு கேட்குறதுக்கு கூட தகுதியில்லாத ஒரு காரியம் செய்ததா நெனச்சு தலை குனிஞ்சி ஒதுங்கி போகும் போது, நாமலும் அந்த தப்பை மறக்குறது தானே மனிதத் தன்மை....

எவளோ ஒரு அக்ஸரா செய்த தப்பை மன்னிச்சு அவளுக்கு ஹெல்ப்லாம் பண்ணினிங்க தானே!!! என் அத்தைய ஏத்துக்கமாட்டிங்களா!!!" என்று விடாமல் பேசியே அவனை கரைக்க முற்பட்டாள்.

ஆனால் அந்த கோபக்காரனோ மேலும் உடலை முறுக்கி விரைத்து தன் பின்னால் கைகளை கட்டிக்கொண்டு "சோ உனக்கு என் அம்மா உன்னை பத்தி என்ன பேசினாங்கனு தெரிஞ்சிருக்கு!!! அதை யார்கிட்டே கேட்டு தெரிஞ்சிகிட்டே!!!" என்று கத்தியை(கோபத்தை) அவள் புறம் திருப்பினான்.

கண்களை விரித்து முழியை இடவலமாக உருட்டி, தான் மாட்டிக்கொண்டதை உறுதிப்படுத்தினாள். அதில் மேலும் அவன் அவளை முறைக்க,

"நானா போயி யார்கிட்டேயும் கேட்கலே! அவங்களா தான்... 'இனிமே அவன் கூட சண்டை போட்டா இங்கே வராதே... நீ நெனைக்கிற மாதிரி நான் நல்லவளும் இல்லே... என் பையனும் நீ இங்கே வர்றதை விரும்பமாட்டான்...' இன்னும் ஏதேதோ சொன்னாங்க... இதுக்கு மேல நான் எப்படி ஏன் இப்படி பேசுறிங்கனு கேட்காம இருக்க முடியும்!!!" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

அதன் பின்னும் அவன் விரைப்பாகவே நிற்க, "இன்னைக்கு என்ன ஒரேதா கோபமாவே இருக்கிங்க!... கொஞ்சம் கூட இறங்கிப் போகாம!... இப்படி இருந்தா நல்லாவே இல்லே... ஐ ஹேட் யூ"

அடுத்த நொடி அவளது தாடையை இறுக்கிப் பிடித்திருந்தான் விக்ரம்... "இன்னொரு முறை ஹேட் யூனு சொல்லிப்பாரு... அடுத்து பேசுறதுக்கு வாய் இருக்காது... மொத்தமா கடிச்சி தின்றுவேன் பாத்துக்கோ.." கோபமாகத் தான் உரைத்தான்.

"காட்டு மிராண்டி..." என்று காதலாய் அவள் மொழிய,

'இப்படியே நின்றிருந்தால் மேலும் மேலும் தன்னை கிறங்கடித்து அவளுக்குள் முழுமையாக தன்னை மூழ்கடித்துக் கொள்வாள்' என்று எண்ணி, அவளை இடையோடு வளைத்து தூக்கிச் சென்று மெத்தையில் கிடத்திவிட்டு,

"கொஞ்சம் வேலை இருக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாம இங்கேயே சமத்தா இரு..." என்று கூறி ரத்தினத்தின் அலுவலக அறைக்குச் சென்றுவிட்டான்.

முழுமையாக மூன்று மணி நேரம் கடந்திருக்க மலர் அந்த அறைக்குள் நுழைந்தாள். அதி முக்கியமாக கணினி திரையில் பார்வை பதித்திருந்தவனின் அருகே சென்றவள்,

"சாப்பிடலாம் வாங்க..." என்றாள்.

அப்போது தான் நினைவு வந்தவனாக, "ஓ காட்... அப்பா ஃபூட் ஆர்டர் பண்ணிக்க சொன்னாரு... மறந்தே போயிட்டேன்..." என்று பதறிட,

"நான் சப்பாத்தி செய்துட்டேன்... சாப்பாடு ரெடி..."

மெச்சுதலாக அவளைப் பார்த்து, "உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லேயே..."

"அடுப்படில அஞ்சறை பெட்டியை உருட்டினா என்னென்ன எங்கெங்கே இருக்குனு தெரியப்போகுது... இதுல என்ன கஷ்டம்!!!" என்று அவளும் இதெல்லாம் ஜுஜூபி மேட்டர் என்ற ரீதியில் கூறினாள்.

"சரி போ... ஃபைவ் மினிட்ஸ்ல வந்திடுறேன்..." என்றிட அவள் அங்கேயே நின்றிருந்தாள். அவனோ மீண்டும் கணினியில் மூழ்கினான்.

"நான் கேட்ட ரெண்டு கேள்விக்குமே இன்னும் பதிலே சொல்லலேயே!" என்றாள்.

கணினி திரையில் இருந்து பார்வையை எடுத்து அவளை நிமிரிந்து பார்த்தான்...

"என்ன கேள்வி? என்ன பதில் சொல்லனும்?"

"அத்தைகிட்ட பேசுவிங்களா?"

இப்போது அவளை இன்னும் கூர்மையாக பார்த்து,

"அம்மா மேல ஆரம்பத்துல கோபம் இருந்தது உண்மை தான். அது எப்போ வருத்தமா மாறுச்சுனு எனக்கே தெரியலே... என் அம்மாவா இப்படினு தான் இப்பேலாம் தோனும்... இன்னைக்கு நீ சொன்னப் பின்னாடி தான் தெரிஞ்சது நான் பேசாசது அவங்களை எவ்ளோ ஏங்க வெச்சிருக்குனு... உனக்காக அவங்ககிட்ட பேசுறேன்னு பொய்யெல்லாம் சொல்லமாட்டேன்... தோனுச்சுனா பேசுவேன்..." என்று கூறி முடித்து 'போதுமா?' போல் தலையசைத்துக் கேட்டான்.

அதற்கு மேலும் கீழுமாக தலையசைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தாள்.

"அடுத்து?" என்று அவன் எடுத்துக்கொடுக்க,

"நான்..... நான்.... ஊருக்கு... போறதா....?" என்று தயங்கி தயங்கி கேட்டு முடிப்பதற்குள் அவளது கையை முரட்டுத் தனமாக பிடித்து இழுத்து தன் மடியில் இறுக்கமாக அழுத்தி அமர வைத்தான்.

அவனது செயலில் முழுக்க முழுக்க முரட்டுத்தனம் மட்டுமே இருந்தது. பெண்ணவளின் கைகளும் சரி..... இப்போது அவன் பிடித்திருக்கும் இடையும் சரி வலியில் துடித்தது. வலி தாங்காமல் முகம் சுழித்து கண்கள் கூட பனித்தது பனியவளுக்கு...

"இப்போ என்னடி உனக்கு ப்ரச்சனை? ஓஓஓ... மேடம் ரிவெஞ்ச் எடுத்திருந்திங்கல்ல!!! ஒத்துக்கிறேன் டி... உன்னை பாக்காம, நீ என் பக்கத்துல இல்லாம என்னல ஒருநாள் கூட இருக்க முடியாது... நீ எங்கேயும் போக வேண்டாம்... இன்னொரு முறை ஊருக்கு போறேன், ஊட்டிக்குப் போறேன்னு சொல்லுப்பாரு.... காலை ஒடச்சு வீல் சேர்ல உக்கார வெக்கிறேன்..." என்று மேலும் கொஞ்சம் அழுத்திப் பிடித்தபடி சிடுசிடுத்தான்.

கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கன்னம் இறங்கிட, அதனைக் கண்டவன் பிடியைத் தளர்த்தி கண்ணிமைகளில் முத்தமிட்டான். அவளது கண்ணீர் தடத்தினை பின்தொடர்ந்த அவனது இதழ்கள் இறுதியில் அவள் இதழில் வந்து சங்கமித்திட, முத்தமிடத் தொடங்கியவன் தான் விக்கித்துப் போனான். மீண்டு எழ முடியாத ஆழ்கடலில் சிக்கியது போல் தத்தளித்தான்.

எப்போதும் போல் மலர் முதலில் அவனது அனல் கக்கும் பேச்சில் தகித்துவிட்டு, இப்போது பனிமழையாய் கொட்டும் அவன் அன்பில், காதலில் கரைந்து கொண்டிருந்தாள். அதற்குள் விக்ரமோ அவளது இதழ்கடலில் தொலைந்த தன்னை மீட்டெடுத்து சட்டென அவளை எழுப்பி நிறுத்தி,

"போடி வெளியே" என உருமினான்.

ஏன் இந்த கோபம்? யாரின் மேல் மூண்ட கோபம் என்று எதுவும் தெரியாமல் இந்த வீம்புக்காரனைப் பற்றி புரிந்து கொள்ளவும் முடியாமல் பெண்ணவள் தான் கலங்கி நின்றாள். 'ச்சீ போ' என்பது போல் உதாசீனம் செய்தவனின் முன்னால் நிற்க விரும்பாமல் அடுத்த நொடியே அந்த அறையை விட்டு வெளியேறியும் சென்றுவிட்டாள்.

-தொடரும்.​
 
Top