• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 30

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"நீ எங்கேயும் போக வேண்டாம்... நானே உன் ரூம்ல படுத்துக்கிறேன்... போடி" என்று அவன் மேல் அவனுக்கே நம்பிக்கையற்றுப் போக எழுந்து மலரின் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான் விக்ரம்.

மறுநாளில் இருந்து விக்ரம், தான் கூறியது போல் மலரையும் கட்டாயப்படுத்தி ஸ்டூடியோ அழைத்துச் சென்றான்.

அங்கே அவள் எந்த வேலையும் செய்வதில்லை என்பது வேறு கதை. ஆனால் உதியுடன் இணைந்து அவள் அடிக்கும் லூட்டிக்கு தான் அளவில்லாமல் போனது. பல நேரங்களில் மலர் செய்யும் சேட்டைகளுக்கு உதி திட்டுவாங்குவதும் உண்டு.

கேமரா மேன்னின் க்ரேனில் ஏறி அமர்ந்து ஒருமுறை சுற்றச் சொல்லி கேட்பதும், கேம் ஷோவில் அவர்கள் பயன்படுத்தும் அட்டை மற்றும் தெர்மக்கோல் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவர்களைப் போலவே போஸ் கொடுப்பதும், என அதகளம் பண்ணாத நாட்களே இல்லை எனலாம்...

விக்ரமிற்கு தான் நேரத்திற்கு ஷூட்டிங் முடியாமல் மறுநாள், அதற்கும் மறுநாள் என்று இழுத்துக்கொண்டே சென்றதோடு, அதற்கான நாள் கூலியும் கொடுக்க வேண்டியதாகியது. நான்கு நாட்களுக்கே விழிகள் பிதுங்கிப் போனான்.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று மூன்றாம் நாள் மாலை ஆகியும் படப்பிடிப்பு முடியாமல் நடந்து கொண்டிருந்தது. காரணம் ஷாட்ஷாத் மலர் தான். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சாக்லேட் ஷவர் விழுவதைப் பார்த்து தனக்கும் அதே போல் வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கொட்ட சொல்லி கேட்டவளை, அங்கே வந்த விக்ரம் பார்த்துவிட்டு கையோடு தரதரவென அழைத்துச் சென்றான்.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அமைதியாகிவிட, விக்ரமின் முகத்தில் தெரிந்த கோபம் யாரையும் கிட்டே நெருங்கவிடவில்லை. இருந்தும் உதி முன்னே வந்தான்...

"விபா... விடுடா, இனிமே ஷூட்டிங்கை டிஸ்டர்ப் பண்ணாம நான் பாத்துக்கிறேன்"

"அதைத் தான் மூனு நாளா நானும் பார்த்துட்டு தானே இருக்கேன்... ஷூட்டிங் நடந்துட்டு இருக்குற லட்சணத்தை... ஒன்றரை நாள்ல முடிக்க வேண்டிய ஷூட்டிங்கை மூனு நாளைக்கு இழுத்துட்டு இருக்கிங்க... எல்லாம் இவளாலத் தான்... வர்ற கோபத்துக்கு இவளை நாலு அறை விடலாமானு இருக்கு... இவ இனிமே இங்கே இருந்தா சரிபடாது..." என்று உதிக்கு மட்டும் கேட்கும்படியாக சீரானான்.

"ச்சே... என்னடா பேச்சு இது... அடிக்கிறேன், அது இதுனு!!! ஷூட்டிங் ஒழுங்கா நடக்கலே தான்... அதுக்காக இப்படி எல்லார் முன்னாடியும் நடந்துப்பேயா?... விடு அவளை... பாப்பா நீ வாம்மா..." மலரை அழைத்தான் உதி.

மலரோ விக்ரமைப் பார்க்க, அவனோ 'போயிடுவேயா நீ!' என்பது போல் மிரட்டும் பார்வை பார்த்தான். அவனது பார்வைக்காக இல்லாவிட்டாலும், அவனது குணம் அறிந்து,

"உதி ண்ணா, நீங்க ஷூட்டிங்கை கன்டினியூ பண்ணுங்க... ப்ளீஸ்" என்று கூறிவிட்டு தானாகவே சென்று விக்ரமின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அதில் விக்ரமிற்கு கோபம் குறைந்த போதும், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு தனதறைக்கு அவளை அழைத்துச் சென்றான். ஓரமாக இடப்பட்டிருந்த இருவர் அமரும் நீள்சாய்விருக்கையில் அவளை அமர்த்திவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

ரத்தினம் விஷயம் அறிந்து விக்ரமிற்கு அழைத்திட, அழைப்பை துண்டித்தான். அதிலேயே ரத்தினமும் தெரிந்து கொண்டார், இனி யார் சொன்னாலும் இவன் கேட்கப் போவதில்லை என்று...

நிமிடங்கள் கடந்திட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள கூட இல்லை. சற்று நேரம் கழித்து தன் இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகே வந்து அமர்ந்தான். அவளோ எதுவுமே நடக்காதது போல் "என்ன மாமா?" என்றாள்.

அருகில் இருந்தவன் யார்!!!? விசித்திர குணம் படைத்த விக்ரம் பார்த்திபன் ஆயிற்றே!!! அமைதியாக பேசிவிடுவானா என்ன?

"உன்னை எல்லார் முன்னாடியும், ஆடு, மாடை இழுத்துட்டு வர்ற மாதிரி இழுத்துட்டு வந்தேனே... அதுக்கு என்கூட சண்டை போடுறதுக்கு என்னடி!!! மனுஷி தானே டி நீ?" என்று கோபமாகக் கத்தினான்.

திருதிருவென முழித்தபடி, "இதென்ன மாமா வம்பா இருக்கு!!!... சண்டை போட்டு கோபிச்சுட்டு போனா சண்டக்காரினு திட்றிங்க.... சரி அமைதியா அடங்கி போயிடுவோம்னு ஒன்னும் சொல்லாம இருந்தா, அதுக்கும் ஏன் சண்ட போடலேனு கேட்டு என் கூட சண்ட போடுறிங்க..." என்று எகத்தாளமாக வினவினாள்.

"நான் அப்படி தான்... என்னை பத்தி தான் உனக்கு தெரியும்ல... தெரிஞ்சே ஏன் என்கூட வந்தே!!, கைய புடிச்சு இழுத்தா கூடவே வந்திடுவேயா! கொஞ்சமாச்சும் எனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சிருக்கு... இப்படி இருந்தா சந்தோஷமா இருக்கேன்னு வாயத் தொறந்து சொல்றதுக்கென்ன!!!" என்று கோபம் இல்லாவிட்டாலும் கத்தினான்.

"நான் இப்போ சந்தோஷமா இல்லேனு யாரு சொன்னா... அங்கே இருந்ததை விட இங்கே தான் ரெம்ப சந்தோஷமா இருக்கேன்..." என்று கூறியபடி தன் திறன்பேசியை அவனிடம் காண்பித்தாள்.

அவளை முறைத்தபடியே வாங்கிப் பார்த்தான். இவ்வளவு நேரம் அவனைத் தான் பல கோணங்களில் படம் எடுத்து வைத்திருந்தாள். திறன்பேசியின் புகைப்படச் செயலியின் கண்கொண்டு அவனைத் தான் ரசித்திருக்கிறாள், அந்த கள்வனின் கள்ளி....

நிச்சயம் அதற்கு அவன் தன்னை பாராட்டப் போவதில்லை என்று அறிந்தவள் முன்ஜாக்கிரதையாக எழுந்து அவனைவிட்டு பத்தடி தள்ளி நின்றாள்.

விக்ரமோ புன்னகையில் விரியத் துடித்த தன் இதழ்களை கடினப்பட்டு அடக்கி அழுத்தம் கொடுத்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களையே இமைக்காமல் பார்த்தவளின் காதலில் அனைத்தையும் மறந்தவன், தன் கையை உயர்த்தி 'வா' என்று சமிக்ஞை செய்தான்.

"ம்கூம்" என்று இடவலமாக தலையசைத்தாள்.

அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கியபடி, புருவம் இரண்டையும் உயர்த்தி "உன்னை ஆபிஸ்க்கு எதுக்கு வர சொன்னேன்?" என்றான்.

பெண்ணவள் பதில் சொல்லுமல் நின்றிருக்க, "இப்போ வாயைத் திறந்து பேசப் போறேயா இல்லேயா?" என்றான் அதிகாரக் குரலில்....

பட்டென "24 ஹவர்ஸ் என்னை உங்க கண்ணுக்குள்ளேயே வச்சு பாத்துக்கிறதுக்கு..." என்றாள்.

அவளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவன் கால்கள் தானாக நின்றது. கண்களோ தன்னை சரியாக கணித்து வைத்திருக்கிறாளே என்று ஆச்சரியத்தில் விரிந்தது.

அவனது மாற்றங்களைக் கண்டவள், "உங்க மைண்டுக்குள்ள புகுந்து உங்களை ரெம்ப டிஸ்டர்ப் பண்றேனோ!!!" என்று வினவியவளின் சிரம் தாழ்ந்திருந்த போதும் கடைகண் பார்வை அவனைத் தான் அம்பாய்த் துழைத்துக் கொண்டிருந்தது.

அவனும் திக்குமுக்காடித் திணறியபடி, புருவங்களோடு கண்களையும் விரித்து "ரெம்ம்ம்பவே..." என்று காதலாய் மொழிந்தான். இப்போது கண்களால் 'அருகில் வா' என்று அழைத்தவனை இரண்டே எட்டில் தாவி அணைத்துக் கொண்டாள்.

கொடியிடையவளின் இடையை அளந்திடும் நோக்கமோ என்னவோ தன் இரு கைகளுக்குள் அவளது இடையை அடக்கி, இறுக்கி தன்னோடு சேர்த்து அணைத்தான்.

மகிணனின் மனம் உணர்ந்து, தன்னவனின் தாபம் தீர்க்கும் பொருட்டு இருக்கும் இடம் மறந்து சீமாட்டியும் அவனுக்கு இசையத் தொடங்கினாள்.

எப்போதும் தன் எல்லை அறிந்து நெருங்குபவனின் கைகள் இப்போது அத்துமிறிட, பெண்ணவள் அதில் லயிக்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் தவித்துப் போனாள்.

அவனை நகர்த்திடவும், தன் பின்முதுகில் சுதந்திரமாக ஊர்வலம் செய்யும் அவன் கைகளை நிறுத்திடவும் அவள் மேற்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் துரும்பினும் துச்சமாகியது.

ஒருகட்டத்திற்கு மேல் மன்னவனின் மோகமுள்ளில் பெண்ணவளும் சிக்கிக்கொள்ள, இப்போது அவனது இதழ்கள் கூட வரம்பு மீறி அவளது மேனியில் மையல் கொள்ளத் தொடங்கியது. கழுத்தோடு பின்னியிருந்த அவளது துப்பட்டா இடையூறாகத் திகழ்ந்திட, பறித்து வீசினான்.

மேலும் மேலும் கீழ்நோக்கி முன்னேறிய நேரம், அவனது மேசையின் மேலிருந்த திறன்பேசி அதிர்ந்திட, அதில் முதலில் மீண்டது மலர் தான். ஒரு முடிவோடு தன்பலம் கொண்டு தள்ளிவிட்டு தன் உடையை மேலே போட்டுக் கொண்டவளை பார்த்தபடியே நின்றிருந்தான்.

அவனது பார்வையில் என்ன இருந்தது என்று அவளால் கண்டறிந்திடவும் முடியவில்லை. ஏமாற்றமா? வழக்கம் போல் அவன் மேல் கோபமா? அல்லது தள்ளிவிட்டதற்கு தன் மேல் கோபமா? வருத்தமா? இதில் எது என்று பிரித்து அறிந்திட முடியாமல் அனைத்திற்கும் சேர்த்தே ஒட்டுமொத்தமாய்

"சாரி மாமா...." என்று வருத்தம் குரலில் மட்டும் அல்லாமல் முகம் முழுதும் நிறைந்திருக்க, அதனைக் காணப் பொறுக்காதவன், மீண்டும் அவளை பாந்தமாய் அணைத்து,

"நீ எதுக்கு டி சாரி சொல்றே... நான் தான் சாரி சொல்லனும்..." என்றபடி அவள் கழுத்தில் இருந்த தங்கத் தாலியில் விரல் வருடியபடி,

"இது உன் கழுத்துல இருக்குன்றதுக்காக நீ எல்லாத்தையும் சகிச்சிக்கனும்னு இல்லே... உனக்கு பிடிக்கலேனா உடனே சொல்லிடு புரியுதா!!!" என்றான்.

அப்போது தான் பெண்ணவளுக்கும் அவன் என்ன நினைத்து வருந்தி இருக்கிறான் என்று புரிந்தது. தனக்கு இந்த நெருக்கம் பிடிக்கவில்லை என்று நினைத்துவிட்டார் போல! அது அப்படி அல்ல என்று சொல்ல நினைப்பதற்குள் அவன் திறன்பேசி அழைப்பில் மூழ்கினான்.

அதன் பிறகும் அவனிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியாமல் போக மீண்டும் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் அருகில் வந்தவன்,

"உன் ஃபோன் கொடு!" என்று அவளதை வாங்கி உதிக்கு அழைத்தான்.

"சொல்லு டா பாப்பா! என்னாச்சு?"

"ஷூட்டிங் முடிஞ்சதா?" என்று விக்ரமின் குரல் கேட்க...

"நான் தான் உன்கிட்ட பேச பிடிக்காம தானே உன் ஃபோன் காலை அட்டென் பண்ணலே... எதுக்கு மலரு ஃபோன்ல இருந்து பேசுறே!!! பாப்பா எங்கே?"

"அவளை அங்கே கூட்டிட்டு வர்றதுக்கு தான் கேட்குறேன்..."

"இன்னு டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்..."

"சரி ஓகே... நானும் அவளும் வர்றோம்" என்று அழைப்பை துண்டித்துவிட்டு விக்ரம் அவளை அழைத்துக் கொண்டு படப்பிடப்பு இடத்திற்குச் சென்றான்.

ஷூட்டிங் முடிந்த பின் மலரின் ஆசைகளை கேட்டு கேட்டு விக்ரமே அனைத்தையும் செய்து கொடுத்தான். அவளது மகிழ்ச்சியை புகைபடக்கலைஞர் தன் கருவியில் பதிவு செய்தார். இடையிடையே இருவரது காதல் சம்பாசனைகளும் அதில் பதிவாகியது...

அந்த சாக்லேட் ஷவர் பக்கெட்டில் வெள்ளை ரோஜா இதழ்களை நிரப்ப சொல்லி அவள் மேல் கொட்டிடச் செய்தான் விக்ரம். மலரும் மகிழ்ச்சி பெருக்கில் விக்ரமையும் கையோடு இழுத்துச் சென்று அதில் நிறுத்தி துள்ளி குதித்தாள். இறுதியில் அவனை அணைத்துக் கொள்ள விக்ரம் சுற்றம் மறந்து, அவளை இடையோடு வளைத்துத் தூக்கி சுற்றினான்.

உற்சாக மிகுதியில் மீண்டும் அவனை அணைத்து காதல் பார்வை வீசினாள் பெண்ணவள்...

"பனி அப்படி பாக்காதே டி..... நீ அப்படி பாத்தாலே எனக்குள்ள எல்லாம் தப்பு தப்பா நடக்குது... நானும் தப்பு தப்பா நடந்துக்கிறேன் டி..." என்று இன்னமும் அவளை தூக்கிப் பிடித்தபடியே மெல்லிய குரலில் கூறினான்.

வெண்பனி போல் கொட்டிய மலர்மழையும் நின்றிருந்தது. மற்றவர்களிடம் தன் மனைவியைப் பற்றி விமர்சிப்பதையே விரும்பாத விக்ரமைப் பற்றி அறிந்திருந்த உதி, நண்பன் தன் மனைவியை தூக்கிய மறுநிமிடமே அனைவரையும் அங்கிருந்து அனுப்பியிருந்தான்.

"எதை மாமா தப்புனு சொல்றிங்க? எனக்கு நீங்க செய்யிற எல்லாமே காதலாத் தான் தெரியுது. நானும் உங்களை ஒதுக்கி வைக்க நெனச்சு தள்ளிவிடலே... நீங்க ஏதோ ஒரு காரணத்துக்காக என் மேல காதல் இருந்தும், ஆசை இருந்தும் என்னைவிட்டு ஒதுங்கி இருக்கிங்க... அப்படி இருக்கும் போது, என்னால நீங்க நெனச்ச காரியம் தோல்வில முடியக் கூடாதுனு தான் உங்களை தள்ளிவிட்டேன்..." என்று விளக்கம் கொடுத்தாள்.

"பனி..... ஐ நீட் யூ...... அஸ் மை வொய்ஃப்"

"நானும் தரமாட்டேன்னு சொல்லலேயே..."

"வீட்டுக்கு போலாமா?"

அவனது கேள்விலும், பார்வையிலும் வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, அவன் கையில், காற்றில் மிதந்தபடியே "ம்ம்ம்" என்றாள்.

தங்கள் காதல் உலகத்தில் இருந்து நடப்பிற்கு வந்தபின் தான் தங்களைச் சுற்றி யாரும் இல்லை என்பதை உணர்ந்தனர்.

"யாரையும் காணோம்?" என்று கேட்ட மலருக்கு,

"உதி எல்லாரையும் அனுப்பி வெச்சிருப்பான்..." என்றான்.

சின்ன சிரிப்போடு அவன் கை கோர்த்து மகிழுந்தை நோக்கிச் சென்றாள்.

மகிழுந்தைச் செலுத்தியபடி கையில் திறன்பேசியை உருட்டிக்கொண்டே வந்தவனிடம் இருந்து அதனைப் பறித்தவள், "ட்ரைவ் பண்ணும் போது எதுக்கு ஃபோன் பாக்குறிங்க!!" என்று கண்டிப்போடு வினவினாள்.

"ஒரு முக்கியமான விஷயம் எல்லார்கிட்டேயும் சொல்லனும்... கொடும்மா" என்றான்.

இருக்கைப் பட்டையை தளர்த்தியவளை முறைத்தான் விக்ரம்... அவன் முறைப்பில் சிரித்தபடி மீண்டும் அணிந்துபடியே,

"இந்த பார்த்தீ தான் எனக்கு பிடிச்சிருக்கு... அரோகண்ட் பார்த்தீ தான் எனக்கு வேணும்.... சும்மா என்னம்மா, வாம்மா, போம்மானு சொன்னிங்க.... கடிச்சு வெச்சிடுவேன்..."

"சொல்லுவே டி... இதுவும் சொல்லுவே... இதுக்கு மேலேயும் சொல்லுவே.... நாளைக்கே மாத்தி மட்டும் பேசிப்பாரு.... அப்போ இருக்கு உனக்கும் பேசின இந்த வாய்க்கும்..." என்று மிரட்டலாகத் தான் கூறினான்.

அப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கைப் பட்டை அணிந்த படியே முடிந்த அளவு அவனை நெருங்கி அமர்ந்து அவன் கைக்குள் தன் கையை கோர்த்தபடி,

"எப்போ வீடு வரும்... ரெம்ப நேரம் ட்ரைவ் பண்ற மாதிரி இருக்கே!!" என்றாள்.

"நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ... அப்பறம் நீ கேட்டாலும் ரெஸ்ட் எடுக்க விடமாட்டேன்..." என்றான் ஒரு மாதிரி குரலில்...

தலைகுனிந்தபடி "தேவையில்லே..." என்றாள். ஆனாலும் பயணம் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்க தன்னையும் மறந்து உறங்கிப் போனாள் பெண்ணவள்.

அவள் உறங்கிவிட்டதை ஊர்ஜிதம் செய்துவிட்டு, அவள் மடியில் இருந்த திறன்பேசியை எடுத்து செம்பியனுக்கு அழைத்தான்.

மறுமுனையில் ஒரு பெண் எடுத்து பேசினாள். "ஹலோ"

குழப்பத்துடன் "செம்பியன் இல்லேயா?" என்றான்.

"அவன் எனக்கு ஐஸ்கிரீம் வாங்க போயிருக்கான்... அவன் வர்ற வரைக்கும் நாம கொஞ்ச நேரம் பேசலாமா?" என்றாள்.

"ம்ம்ம்... உன் பேர் என்ன?"

"வரு... வருணிகா... நான் உங்க பேர் கேட்கமாட்டேனே... ஏன்னு கேக்குறிங்களா!!! எனக்கு தான் உங்க பேர் தெரியுமே.... விக்ரம் பார்த்திபன் சரிதானே அண்ணா..."

"ம்ம்ம்...ரெம்பவே சரி... நீ செம்பியன் ஃப்ரெண்டா?"

"இல்லேயே"

"எனிமி-னு சொல்லி கலாய்க்காதே..." என்றான்

"நான் ப்ரெண்டுக்கும் மேலேனு சொல்ல வந்தேன்..."

"ஓஓஓ... அப்போ நானும் உன்னை பத்தி தெரிஞ்சுக்கனுமே?"

"ஆங்... இதைத் தான் எதிர்பார்த்தேன்.... அவனே சொல்லிருக்கலாம்... ஆனா பாருங்க நானே என்னை பத்தி சொல்லிக்க வேண்டியதா இருக்கு..." என்று நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே "ஏய்... விடுடா..." என்று அவள் மறுபக்கம் சண்டையிடுவது போல் இருந்தது. அதனைத் தொடர்ந்து செம்பியன் குரலும் கேட்டது

"மச்சான்..." என்று பம்மினான்.

"அந்த பொண்ணையும் கூட்டிட்டு உங்க ஊருக்கு வந்து சேரு... டுமாரோ மார்னிங் நீயும் அந்த பொண்ணும் உங்க வீட்ல இருக்கனும்." அதற்கு மேல் விக்ரம் பேசிடவில்லை... அழைப்பையும் துண்டித்திருந்தான்.

-தொடரும்.​
 
Top